புதிய பதிவுகள்2

323 சர்ச்சைக்குரிய கொள்கலன்களில் ஆயுதங்கள் இருந்தன – அர்ச்சுனா இராமநாதன்

2 months 3 weeks ago
14 Nov, 2025 | 03:51 PM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) எவ்வித பரிசோனயின்றி விடுவிக்கப்பட சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்களுக்குள்ளும் ஆயுதங்களே இருந்தன என்பதை மீண்டும் நான் பொறுப்புடன் கூறுகின்றேன் .அது தொடர்பான முக்கிய ஆவணங்கள் எனக்கு கிடைத்துள்ளன.குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கோ அல்லது இன்டபோலுக்கு இந்த விடயத்தைக் கொண்டு சென்று விசாரியுங்கள் நான் பதிலளிக்கின்றேன் என யாழ் மாவட்ட சுயேச்சைக் குழு பாராளுமன்ற உறுப்பினரான அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (14) நடைபெற்ற அமர்வின் போது ஒழுங்குப்பிரச்சினை ஒன்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்கள் தொடர்பில் கூறும் போது எனது பெயர் அடிக்கடி பயன்படுத்தப்படுகின்றது. அவை எனது வீட்டில் இருப்பது போன்றுதான் ''அர்ச்சுனாவின் கொள்கலன்கள்'' என்று குறிப்பிடுகிறார்கள்.இதனால் இது தொடர்பில் எனக்கு இங்கே சில விடயங்களை கூற வேண்டியுள்ளது. உண்மையில் இந்த கொள்கலன்கள் பிமல் ரத்நாயக்க துறைமுக அமைச்சராக இருக்கும் போது விடுவிக்கப்பட்ட கொள்கலன்களே. நான் இந்த சபையில் கூறிய விடயங்கள் தொடர்பில் சி.ஐ.டி.க்கு அழைக்கப்பட்டு நான் விசாரணைக்கு ட்படுத்தப்பட்டேன். இதேவேளை நான் ஒருமாத காலமாக ஐரோப்பிய பயணமொன்று சென்றிருந்தேன். அப்போது 323 கொள்கலன்களில் ஆயுதங்கள் இருந்ததாக எனக்கு முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளன. இப்போதும் நான் பொறுப்புடன் கூறுகின்றேன். விடுவிக்கப்ட்ட அந்த சர்ச்சைக்குரிய கொள்கலன்களுக்குள் ஆயுதங்களே இருந்தன. வேண்டுமென்றால் என்னை குற்றப்புலனாய்வு பிரிவுக்கு மட்டுமல்ல இன்டபோலுக்கு கொண்டுசென்றாவது கேளுங்கள். நான் பதிலளிக்கின்றேன். அது தொடர்பில் குழுவொன்றை அமையுங்கள். பயமின்றி கூறுகின்றேன். அதில் ஆயுதங்களே இருந்தன என்றார். https://www.virakesari.lk/article/230342

நவம்பர் 2025 - இன்றைய வானிலை

2 months 3 weeks ago
இன்றைய வானிலை 15 Nov, 2025 | 06:32 AM இலங்கைக்கு கிழக்காக வளிமண்டலத்தின் தாழ் மட்டத்தில் தளம்பல் நிலை தொடர்ந்தும் நிலைகொண்டுள்ளது. இதன் காரணமாக வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் 100 mm வரையிலான பலத்த மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பிராந்தியங்களின் பல இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். ஊவா மாகாணத்திலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும். மத்திய, சப்ரகமுவ, மேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் 75 mm இலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும். வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் வானம் முகில் செறிந்து காணப்படும். மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் தென் மாகாணங்களின் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனி மூட்டம் காணப்படும். பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொது மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 - 30 km வேகத்தில் வடகிழக்குத் திசையில் இருந்து காற்று வீசும். திருகோணமலை தொடக்கம் காங்கேசன்துறை, மன்னார் ஊடாக புத்தளம் வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 40 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும். நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்கள் இடைக்கிடையே ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும். காலி தொடக்கம் மாத்தறை, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் கடல் அலையானது சுமார் 2.0 - 2.5 m உயரத்திற்கு மேலெளக்கூடும். இது தரைப் பிரதேசத்திற்கு தாக்கத்தை ஏற்படுத்தாது. இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும். https://www.virakesari.lk/article/230394

“சவ்வு மிட்டாய்காரர் (90 கிட்ஸ்)” சிறுகதை – கு.மணி

2 months 3 weeks ago
சவ்வு மிட்டாய் தும்பு மிட்டாய் அப்பளம் என்று சிறுவயதில் வாங்கி சாப்பிட்டோம். இதிலே தும்பு மிட்டாய் இப்போதும் எனக்கு விருப்பம். சவ்வு மிட்டாய் வெறும் கையால் இழுத்து அழைகிறபடியால் இப்போ கஸ்டம்.

“சவ்வு மிட்டாய்காரர் (90 கிட்ஸ்)” சிறுகதை – கு.மணி

2 months 3 weeks ago
நன்றாக இருக்கிறது ...இந்த விற்பனை கதாநாயகர்கள் ....நம்மூரில் வேறு தோற்றமும் ..அன்பு மொழியும் ...அவர்கள் நினைவை ...மீட்க வைத்ததிற்கு நன்றி

அமெரிக்க ஜனாதிபதியை சந்திக்கவுள்ளார் சிரிய ஜனாதிபதி

2 months 3 weeks ago
ஆதாரம் கேட்டிருக்கிறியள் மானஸ்தன்…தந்து போட்டுத்தான் மறுவேலை பார்ப்பார்.😂. 1987 நேரம் மூக்கு வழிச்சுகொண்டு இருந்த சிறுவனான என்னை UTHR இல் இருந்தவர் என ஒரு புஸ்வாணத்தை இப்படித்தான் முன்பு ஒருதரம் போட்டவர், ஆதாரம் கேட்டதும் இதே போலத்தான் ஒரு மழுப்பல் மழுப்பி விட்டு மாசக்கணக்கில் ஆள் எஸ்.

'சிங்காரச்சுவரில் காதலை நாம் எழுதுவோம்!'

2 months 3 weeks ago
'சிங்காரச்சுவரில் காதலை நாம் எழுதுவோம்!' சிங்கப் பாறையின் நிழலில் நிற்கிறேன் சித்த மெல்லாம் எனக்கு உன்பெயரே! கண்ணாடிச் சுவர்களைத் தொடும் போது கண்ணே உன்ஞாபகம் என்னை வாட்டுதே! குன்றில் வரைந்த தங்கநிற மங்கையே குட்டி அரவணைப்பு தாராயோ நிழலில்! தீட்டிய சிற்பத்தில் உன்னைக் கண்டேன் தீராத மோகத்தில் அவளைத் தொட்டேன்! சிகிரியாவின் தென்றல் காதலைச் சுமக்கிறது சிறகடித்து வந்து இதயத்தை அணைக்கிறது! சிங்கப்பாறை பற்றி தொல்லியலாளர் எழுதட்டும் சிங்காரச்சுவரில் காதலை நாம் எழுதுவோம்! ["[1] சிங்கப் பாறை" - சிகிரியா குன்று [2] சிகிரியா சுவரோவியங்கள் — மஞ்சள், செம்மஞ்சள் நிறங்களில் தீட்டப்பட்ட வானுலகப் பெண்கள் / தங்கநிற மங்கை [3] ‘மிரர் வால் / mirror wall’ - கண்ணாடி சுவர் அல்லது சிங்காரச் சுவர். அதில் காணப்படும் கல்வெட்டுகள் தோராயமாக கி.பி 8 முதல் 10 ஆம் நூற்றாண்டு வரையிலானவை ஆகும். [4] உதாரணத்துக்கு ஒன்று: “தங்க நிற மங்கையரை கண்டவன், தன் இதயத்தில் ஒளிர்கிறான் — வானில் சூரியன் ஒளிர்வது போல்.”] [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] துளி/DROP: 1899 ['சிங்காரச்சுவரில் காதலை நாம் எழுதுவோம்!'] https://www.facebook.com/groups/978753388866632/posts/32373298478985380/?

அமெரிக்க ஜனாதிபதியை சந்திக்கவுள்ளார் சிரிய ஜனாதிபதி

2 months 3 weeks ago
இஸ்திரேல் ஈரான் சண்டை நேரம் ஒரு திரியில் ஈரான் பல பயங்கரவாத அமைகளுக்கு உதவுகிறது ...... இஸ்ரேல் அப்படி ஏதாவது ஒரு பயங்கரவாத அமைப்புக்கு உதவுகிறதா? என்று கேட்டு எழுதி இருந்தீர்கள். அது ஒரு விரண்டாவதா திரியாக சென்றுகொண்டு இருந்தது அதனால் அதில் எதையும் எழுதி பிரயோசனம் இல்லை என்று விட்டு கடந்து சென்றேன். அதுக்காக இனி நேரம் செலவிட்டு தேடி எடுத்து போட்டும் என்ன ஆக போகிறது? நான் எழுதியதை பொய் குற்றசாடடக கருதி மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். இருவருக்கும் நேரம் மிகுதி. உங்கள் பல கருத்துக்களை வாசித்து சில தகவல்களை அறிந்து இருக்கிறேன். முட்டு கொடுப்பது என்றுவந்தால் இவர் கூட இப்படி எழுதுகிறார் என்று வாசிக்கும்போது நினைத்தேன்

அமெரிக்க ஜனாதிபதியை சந்திக்கவுள்ளார் சிரிய ஜனாதிபதி

2 months 3 weeks ago
என்ன மருதங்கேணியாரே, நான் தான் கிடைத்தேனா..................... அப்படி நான் எழுதியதை எடுத்துப் போடுவது தானே.................. நாங்களும் கொஞ்சம் சிரிப்போம் அல்லவா........... நான் விளையாடுவது அதிகம் தான்........... ஆனாலும் பின்னம் தலையில் அடிபட்டு நடுவில கொஞ்ச பக்கம் இன்னும் காணாமல் போகல்ல..................🤣.

அமெரிக்க ஜனாதிபதியை சந்திக்கவுள்ளார் சிரிய ஜனாதிபதி

2 months 3 weeks ago
முன்பு ஒரு திரியில் ( ஈரானில் குண்டுவீச்சு என்று நினைக்கிறன்) ரசோதரன் ஈரான் பல பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு வைத்திருக்கிறது அப்படி மேற்கு நாடுகள் ஏதாவது ஒரு பயங்கரவாத அமைப்புடன் தொடர்புகள் வைத்திருக்கிறார்களா? என்று மேற்கிற்கு முண்டு கொடுத்து இருந்தார் நான் வாசித்து சிரித்துவிட்டு போனேன். மேற்கு இல்லையென்றால் உலகில் பயங்கரவாதமே இல்லை அல்கைதா முதல் கொண்டு ஐஸ்ஸ் வரை உருவாக்கி வளர்த்து எடுத்து முஸ்லீம் நாடுகளில் போரை உண்டுபண்ணி முஸ்லிம்களை கொலை செய்வதே இவர்கள் வேலை. சிரிய போர் தொடங்கியபோது அப்போதைய செனட்டர் மக் கெய்யின் ( Mc Cain) தலைமையில் இவர்களை துருக்கியில் சந்தித்து அந்த புகைப்படங்கள் வெளியாகி இருந்த்தது அதில் இவரும் இருக்கிறார். ஐஸ்ஸ் வைத்திருந்த அனைத்து டொயட்டா தந்த்ரா ( Toyota Tundra + Tacoma ) பிக்கப் வாகனங்களும் அமெரிக்காவில் இருந்து போனவை சிரியாவில் மூன்று குழுக்களாக போரிடடார்கள் மூன்றுக்குமே சப்பாத்து முதல்கொண்டு முழு ஆயுதமும் கொடுத்தது இஸ்ரேலும் அமெரிக்காவும். நித்தன்யாஹுவிற்கும் ஜூதர்களுக்கும் எப்படி எந்த தொடர்பும் இல்லையோ அதுபோல இவர்க்ளுக்கும் இஸ்லாமியர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை இவர்கள் அனைவரும் சிறுவயதிலேயே மொசாட்டினால் பயிறுவித்து அனுப்ப படடவர்கள். தற்போதைய ஆப்கானிஸ்தான் தலிபான் தலைவர் 2017 இல் டிரம்ப் பின்னால் சிறையில் இருந்து விடுவிக்க பட்டு ஆப்கானிஸ்தான் சென்றவர். இது ஒரு டெக்சாஸ் ( Texas) மாநில ப்ளும்பேர் ( Plumper) ஒரு கார் முகவரிடம் விற்ற பிக்கப் இவை அனைத்தும் அமெரிக்க சான் அந்தோனியோ ( San Antonio) எனும் இடத்தில அசெம்பிளி செய்யபடவை (எல்லாவற்றுக்கும் VN number CarFax history உண்டு )

நெடுந்தீவில் ஆபிரிக்க நத்தைகளின் ஊடுருவல் அதிகரிப்பு

2 months 3 weeks ago
பிரான்ஸுக்கு ஏற்றுமதி செய்தால் ஈரோவிலும் சம்பாதிக்கலாம்! நான் பாரிஸுக்குப் போனால் பிரெஞ்சு ரெஸ்ரோரண்டில் நத்தை சாப்பிடுவதுண்டு! அப்புறம் லாசப்பல் போனால் எவர்சில்வர் கப்பில் தேத்தண்ணியும், ஒரு வடையும் சாப்பிடுவதும் உண்டு🤪

அமெரிக்க ஜனாதிபதியை சந்திக்கவுள்ளார் சிரிய ஜனாதிபதி

2 months 3 weeks ago
அவர்கள் எப்போதும் அப்படித்தான். ஏனையோர் ஒத்து ஓடுகிறார்களா, பாத்து ஓடுகிறார்களா, குறுக்கால ஓடுகிறார்களா என்பதை பொறுத்து அவர்களின் தலைவிதி தீர்மானிக்கப்படும்.

“சவ்வு மிட்டாய்காரர் (90 கிட்ஸ்)” சிறுகதை – கு.மணி

2 months 3 weeks ago
ஆஹா நல்ல கதை . ........ இவர்போல மேலும் சிலர் தும்பு மிட்டாஸ் விற்பவர் ஐஸ்கிரீம் விற்பவர் தள்ளு வண்டியில் முறுக்கு , கடலை மற்றும் வண்ண வண்ணமான நொறுக்குத் தீனிகள் விற்பவர்கள் என்று . .......! 😂 சே . ...யாயினி இன்னும் குழந்தைதான் . .......!

2026 ஆம் நிதியாண்டுக்கான இலங்கையின் 80 ஆவது வரவு - செலவுத் திட்டம்!

2 months 3 weeks ago
2026 வரவு – செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு - 118 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம் Published By: Vishnu 14 Nov, 2025 | 07:15 PM தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சமர்ப்பித்த 2026 ஆம் ஆண்டுக்கான வரவு–செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 14ஆம் திகதி வெள்ளிக்கிழமை (14 ) பாராளுமன்றத்தில் 118 மேலதிக வாக்குகள் வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்டது. வாக்கெடுப்பில் 160 உறுப்பினர்கள் ஆதரவாகவும், 42 பேர் எதிராகவும் வாக்களித்தனர். மேலும் 8 பேர் வாக்களிப்பில் கலந்து கொள்ளாமல் விலகி நின்றனர். ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியின் பங்காளிக் கட்சியான தமிழ் முற்போக்கு கூட்டணியின் மனோ கணேசன், திகாம்பரம், இராதாகிருஸ்ணன் ஆகியோர் வரவு–செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். அதேபோன்று, ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமானும் ஆதரவு வாக்கை பதிவுசெய்தார். இந்நிலையில், இலங்கை தமிழரசு கட்சியினர் இன்றைய இரண்டாம் வாசிப்பு வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நிதியமைச்சர் பதவியிலும் உள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்கள் கடந்த 7 ஆம் திகதி முன்வைத்த வரவு–செலவுத் திட்டம் குறித்து தொடர்ச்சியான விவாதங்கள் நடைபெற்றதைத் தொடர்ந்து, இன்று சற்று முன் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இந்த நடைமுறையுடன் தேசிய மக்கள் அரசாங்கத்தின் இரண்டாவது வரவு–செலவுத் திட்டமும் வெற்றிகரமாக நிறைவேறியுள்ளது. https://www.virakesari.lk/article/230386

மிக்-31 விமானத்தைத் திருடுவதற்கான உக்ரைன்-பிரிட்டிஷ் சதித்திட்டத்தை முறியடித்ததாக ரஷ்யா கூறியதாக அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

2 months 3 weeks ago
ருசியா (படை, பல) வேலையாளரை தம்பக்கம் இழுக்கும் (ருசியா சொல்லும் குற்றச்சாட்டில்) சாத்தியக்கூறுகள் இருக்கிறது. ஏனெனில், உறவுகள் பெரிய பிரச்சனை இல்லாத போது, ருசியா இராணுவ உளவாளியை (Sergei Skripal), பிரித்தானியா இருபக்க உளவாளியாக மாற்றி ... பின்பு பிரித்தானியாவில் நிரந்தரமாக அடைக்கலம் கொடுத்தது. (கீழே உள்ள 2006 இறந்தவர் ருஷ்ய பிரஷை, ஆனால் London இல்)(கீழே உள்ள 2006 இறந்தவர் ருஷ்ய பிரஷை, ஆனால் London இல்) அதில் இருந்தே பிரச்சனை பெருத்தது பிரித்தானிய - ருசியா இடையில். ருசியா fsb, 2018 இல் அந்த உளவாளியை பிரித்தானியாவில் அவரின் ஊரில் (Salisbury. அவர் நடை பயின்ற பூங்காவில் அவர் (வழமையாக) அமரும் ஆசனத்திலும், அவரின் வீடு கதவு பிடியிலும், பரிசத்தால் உடல் உள் ஏறும் நஞ்சை (Novichock) பிரட்டி கொல்ல முயன்றது. அனால், வேறு ஆசனங்களிலும் பிரட்டப்பட்டு இருக்க வேண்டும். இதில் பொதுமக்களும் அந்த நஞ்சொடு உடல் பரிசம் ஏற்பட்டு பாதிக்கப்பட்டனர். (அனால், இதில் அவரில் தான் பிழை, அனால் ருசியா உள்ளே இருந்து அப்படி மாற்றப்பட்டது, உள்ளே இருந்தே பிரித்தானியா செய்து இருக்க வேண்டும் என்பது ரஸ்சியாவின் முடிவு, (அனால், எந்த அரசும் அந்த முடிக்கே வந்து இருக்கும்,)) இப்படி, 2006 இல் Alexander Litvinenko, ருசியா fsb முன்னாள் உளவாளி, London இல், (அணுக்கதிர் வீச்சூ செறிவான Polonium-210 ஆல்) நஞ்கூட்டப்பட்ட தேநீரை அருந்தி இறந்தார், பிரித்தானியா ரஷ்யாவை குற்றம் சாட்டியது. (வேறு எதாவது வெளிவராமல் இருக்கலாம்)

யாழில் விளையாட்டு வினையானது; குடும்பஸ்தர் உயிரிழப்பு!

2 months 3 weeks ago
Published By: Vishnu 14 Nov, 2025 | 08:00 PM தற்கொலை செய்யப்பதாவதாக மனைவியை மிரட்டியவர், கழுத்தில் போடப்பட்ட சுருக்கு இறுகி மூச்சுத் திணறல் ஏற்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் வெள்ளிக்கிழமை (14) அதிகாலை உயிரிழந்துள்ளார். உரும்பிராய் தெற்கு, உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த ஜெ.சுரேந்தன் (வயது 33) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், இவர் கடந்த எட்டாம் திகதி இரவு மது போதையில் வீட்டுக்கு வந்து மனைவி பிள்ளைகளுடன் முரண்பட்ட நிலையில் அவர்கள் வீட்டை விட்டு வெளியேறினர். பின்னர் கதிரையில் அமர்ந்திருந்து கழுத்தில் சுருக்கிட்டவாறு தான் தற்கொலை செய்யப்பதற்காக மனைவியுடன் தொலைபேசியில் உரையாடினார். கைபேசியில் உரையாடியவாறே மதுபோதையில் உறங்கியுள்ளார். பின்னர் அவரது சகோதரன் அங்கு சென்று பார்த்தவேளை அவர் கழுத்தில் சுருக்கிட்ட நிலையில் குறட்டை விட்டு உறங்கிக் கொண்டிருந்தார். பின்னர் சகோதரன் அவரது கழுத்தில் இருந்த காயிற்றினை கழற்றிவிட்டு கீழே உறங்க வைத்தார். இந்நிலையில் சிறிது நேரத்தில் அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனால் அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை (14) அதிகாலை உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார். https://www.virakesari.lk/article/230388

பிபிசி பணிப்பாளர் நாயகம், செய்தி பொறுப்பாசிரியர் இருவரும் இராஜினாமா!

2 months 3 weeks ago
ஆவணப்பட எடிட் தொடர்பாக டிரம்பிடம் மன்னிப்பு கேட்ட பிபிசி - இழப்பீடு வழங்க மறுப்பு பட மூலாதாரம், Reuters / AFP via Getty Images கட்டுரை தகவல் நூர் நாஞ்சி பிபிசி 4 மணி நேரங்களுக்கு முன்னர் பிபிசி பனோரமா ஆவணப் படத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஜனவரி 6, 2021அன்று வழங்கிய உரையின் வெவ்வேறு பகுதிகளை இணைத்து எடிட் செய்ததற்காக அவரிடம் பிபிசி மன்னிப்பு கேட்டுள்ளது. ஆனால் இழப்பீட்டுக்கான அவரது கோரிக்கைகளை நிராகரித்துள்ளது. இந்த எடிட் "அதிபர் டிரம்ப் வன்முறை நடவடிக்கைக்கு நேரடி அழைப்பு விடுத்துள்ளார் என்ற தவறான எண்ணத்தை" கொடுத்துள்ளதாகவும், இந்த 2024 நிகழ்ச்சி மீண்டும் திரையிடப்படாது எனவும் பிபிசி கூறியுள்ளது. அந்த நிகழ்ச்சியில் காட்டப்பட்டதைத் திரும்பப் பெற்று, மன்னிப்பு கேட்டு, இழப்பீடு வழங்காவிட்டால், பிபிசி மீது ஒரு பில்லியன் டாலர் இழப்பீடு கேட்டு வழக்கு தொடரப் போவதாக டிரம்பின் வழக்கறிஞர்கள் அச்சுறுத்தியுள்ளனர். இந்த விவகாரத்தின் விளைவாக ஞாயிற்றுக்கிழமை பிபிசி இயக்குநர் ஜெனரல் டிம் டேவி, செய்திகள் பிரிவின் தலைமை நிர்வாக அதிகாரி டெபோரா டர்னஸ் ஆகியோர் ராஜினாமா செய்திருந்தனர். பிபிசி நியூஸ் கருத்துக்காக வெள்ளை மாளிகையை அணுகியுள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு நியூஸ்நைட்டில் ஒளிபரப்பப்பட்ட, இதே போல திருத்தப்பட்ட மற்றொரு காணொளியை டெய்லி டெலிகிராஃப் வெளியிட்டது. அது வெளியான சில மணிநேரம் கழித்து பிபிசியின் மன்னிப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிபிசி தனது இணையதளத்தின் திருத்தங்கள் மற்றும் தெளிவுபடுத்தல்கள் பிரிவில் இதுகுறித்து அறிக்கை வெளியிட்டது. அதில், டிரம்பின் உரை எடிட் செய்யப்பட்ட விதம் குறித்த விமர்சனங்களைத் தொடர்ந்து பனோரமா நிகழ்ச்சி மதிப்பாய்வு செய்யப்பட்டதாக பிபிசி கூறியது. அந்த அறிக்கையில், "நாங்கள் எடிட் செய்த விதம், உரையின் வெவ்வேறு பகுதிகளைக் காட்டுகிறோம் என்ற தெளிவில்லாமல், உரையின் ஒரு தொடர்ச்சியான பகுதியைக் காட்டுவது போன்ற தோற்றத்தை உருவாக்கியுள்ளது என்பதை ஏற்றுக்கொள்கிறோம், மேலும் இது அதிபர் டிரம்ப் வன்முறை நடவடிக்கைக்கு நேரடி அழைப்பு விடுத்தார் என்ற தவறான தோற்றத்தையும் ஏற்படுத்தியது," என்று பிபிசி கூறியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை பெறப்பட்ட கடிதத்திற்குப் பதிலளிக்கும் விதமாக பிபிசியின் வழக்கறிஞர்கள் அதிபர் டிரம்பின் சட்டக் குழுவுக்கு கடிதம் எழுதியுள்ளதாக பிபிசி செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார். அறிக்கையில், "பிபிசி தலைவர் சமீர் ஷா வெள்ளை மாளிகைக்கு ஒரு தனிப்பட்ட கடிதத்தை அனுப்பியுள்ளார். அதில் அதிபரின் 2021 ஜனவரி 6ஆம் தேதி உரையை எடிட் செய்ததற்காக அவரும் நிறுவனமும் வருந்துவதாகத் தெளிவுபடுத்தியுள்ளார்" என பிபிசி தெரிவித்துள்ளது. டிரம்பின் 2021ஆம் ஆண்டு உரையில், "நாம் கேபிடல் நோக்கி நடக்கப் போகிறோம்; நமது செனட்டர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பெண்களை உற்சாகப்படுத்தப் போகிறோம்" என்றார். கூடுதலாக, "காணொளி எடிட் செய்யப்பட்ட போக்கிற்கு பிபிசி தீவிரமாக வருந்துகின்ற அதேவேளையில், இழப்பீடு கோருவதற்கு இதில் எந்தவொரு முகாந்திரமும் இல்லை என்பதால் அதை நாங்கள் கடுமையாக மறுக்கிறோம்" என்றும் கூறப்பட்டுள்ளது. அதே உரையில், 50 நிமிடங்களுக்குப் பிறகு, " நாம் போராடுவோம். நாம் கடுமையாகப் போராடுவோம்" எனக் கூறியிருந்தார். ஆனால், பனோரமா ஆவணப் படத்தில் அவர் கூறியதாகக் காட்டப்பட்ட உரையில், "நாம் கேபிடல் நோக்கி நடக்கப் போகிறோம்... நான் உங்களுடன் இருப்பேன். நாம் போராடுவோம். நாம் கடுமையாகப் போராடுவோம்" என்று இருக்கிறது. ஃபாக்ஸ் நியூஸிடம் பேசிய டிரம்ப், தனது உரை "படுகொலை செய்யப்பட்டது" என்றும், அது காட்டப்பட்ட விதம் பார்வையாளர்களை "ஏமாற்றியது" என்றும் கூறினார். கடந்த ஞாயிற்றுக்கிழமை டிரம்பின் வழக்கறிஞர்களிடம் இருந்து பிபிசி கடிதத்தைப் பெற்றது. ஆவணப் படத்தை "முழுமையாகவும் நியாயமாகவும் திரும்பப் பெறவும்" அந்தக் கடிதத்தில் கோரப்பட்டதோடு, மன்னிப்பையும் கோரியது. மேலும், பிபிசி "அதிபர் டிரம்புக்கு ஏற்பட்ட தீங்குகளுக்குப் பொருத்தமான இழப்பீட்டை" வழங்க வேண்டுமென்றும் கூறியது. பிபிசியின் பதில் என்ன? டிரம்பின் சட்டக் குழுவுக்கு எழுதிய கடிதத்தில் ஐந்து முக்கிய வாதங்களை பிபிசி முன்வைக்கிறது. முதலாவதாக, பிபிசிக்கு அதன் அமெரிக்க சேனல்களில் பனோரமா எபிசோடை விநியோகிக்க உரிமை இல்லை என்றும் தான் அதை விநியோகிக்கவில்லை என்றும் கூறியுள்ளது. ஆவணப்படம் பிபிசி ஐபிளேயரில் கிடைத்தபோது, அது பிரிட்டனில் உள்ள பார்வையாளர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது. இரண்டாவதாக, "ஆவணப்படம் டிரம்புக்கு தீங்கு விளைவிக்கவில்லை. ஏனெனில் அவர் இது நடந்த பிறகு விரைவில் மீண்டும் (அதிபராக) தேர்வு செய்யப்பட்டார்" என்று பிபிசி கூறியுள்ளது. மூன்றாவதாக, "வீடியோ கிளிப்பு தவறாக வழிநடத்துவதற்காக வடிவமைக்கப்படவில்லை, ஆனால் ஒரு நீண்ட பேச்சைக் குறைக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த எடிட் தீய எண்ணத்துடன் செய்யப்படவில்லை" என்றும் தெளிவுபடுத்தியுள்ளது. நான்காவதாக, "இந்த வீடியோ கிளிப்பு ஒருபோதும் தனிமைப்படுத்திப் பார்ப்பதற்கான ஒன்றாகக் கருதப்படவில்லை என்றும், மாறாக இது ஒரு மணிநேர நிகழ்ச்சியின் 12 விநாடிகளே. இதுபோக அந்த நிகழ்ச்சி டிரம்புக்கு ஆதரவாகவும் நிறைய குரல்களைக் கொண்டிருந்தது" எனத் தெரிவித்துள்ளது. இறுதியாக, அமெரிக்காவில், பொதுப் பிரச்னைகள் அல்லது அரசியல் தொடர்பான கருத்துகளை வெளிப்படுத்தும்போது சட்டத்தின் கீழ் மிகுந்த பாதுகாப்பு கிடைக்கிறது எனக் கூறப்பட்டுள்ளது. "பிபிசிக்குள் இருக்கும் ஒருவர், பிபிசியிடம் சரியான விளக்கமும் வலுவான வாதங்களும் இருப்பதாக அங்கிருக்கும் பலர் உறுதியாக நம்புவதாகக் கூறினார்." - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cql9xql6147o

சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான யோங்கிங் கோயிலில் தீ!

2 months 3 weeks ago
14 Nov, 2025 | 06:01 PM சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் அமைந்துள்ள 1,500 ஆண்டுகள் பழமையான யோங்கிங் கோயிலில் (Yongqing temple) தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இக்கோயிலுக்குள் அமைந்துள்ள மூன்று மாடி மண்டபத்தில் புதன்கிழமை (12) காலை 11.24 மணியளவில் தீ பரவத் தொடங்கியதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஆலயத்தில் நபரொருவர் மெழுகுவர்த்தி தூபத்தை முறையற்ற வகையில் பயன்படுத்தியதாலேயே அங்கு தீ பரவியிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. கோயில் மண்டபத்தில் பரவிய தீ, மண்டபத்தின் மரக் கூரைகள் வரை பற்றியெரிந்ததால் பாரிய கறுப்பு நிற புகை கிளப்பியது. இந்நிலையில், அப்பகுதியிலிருந்த மக்கள் பாதுகாப்பு தேடி கோயில் வளாகத்தை விட்டு வெளியேறியுள்ளனர். அதனைத் தொடர்ந்து. தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயன்றதாக தெரிவிக்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/230378
Checked
Wed, 02/11/2026 - 05:36
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed