புதிய பதிவுகள்2

நாமல் ராஜபக்ஷ - எம்.ஏ.சுமந்திரன் இடையில் சந்திப்பு!

2 months 3 weeks ago
எதிர்க்கட்சிகளின் பேரணி குறித்து சுமந்திரனுடன் நாமல் சந்திப்பு Nov 15, 2025 - 04:33 PM தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகளால் ஏற்பாடு செய்யப்படும் மக்கள் பேரணி குறித்து அறிவிப்பதற்காக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரனை சந்தித்துள்ளார். இன்று (15) காலை இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளதுடன், இதன்போது கருத்துத் தெரிவித்த எம்.ஏ. சுமந்திரன், மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவது அத்தியாவசியமான விடயம் என்று கூறியுள்ளார். உள்ளூராட்சி மன்றங்களை வலுப்படுத்துவதற்காக, அரசியலமைப்புக்கு அமைய இந்தத் தேர்தல்களை நடத்துவது அத்தியாவசியம் என்றும் அவர் அங்கு வலியுறுத்தியுள்ளார். இந்தச் சந்தர்ப்பத்தில் கருத்துத் தெரிவித்த நாமல் ராஜபக்ஷ, எதிர்க்கட்சியின் பிரதான கட்சிகளில் ஒன்றான இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு இந்தப் பேரணி குறித்து அறிவிப்பது அத்தியாவசியமான விடயம் என்றும் குறிப்பிட்டுள்ளார். https://adaderanatamil.lk/news/cmi06hda901mzo29ne087a0bk

யாழில் விளையாட்டு வினையானது; குடும்பஸ்தர் உயிரிழப்பு!

2 months 3 weeks ago
மனைவியை மிரட்ட சுருக்கு மாட்டிக்கொண்டவர் மூச்சுத்திணறி உயிரிழப்பு Nov 15, 2025 - 03:17 PM தற்கொலை செய்துகொள்வதாக மனைவியை மிரட்டுவதற்காக கழுத்தில் மாட்டப்பட்டிருந்த சுருக்கு இறுக்கியதில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் இன்று (15) அதிகாலை உயிரிழந்தார். உரும்பிராய் தெற்கு, உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த 33 வயதான ஜெ. சுரேந்தன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த எட்டாம் திகதி இரவு மதுபோதையில் வீட்டுக்கு வந்த சுரேந்தன், மனைவி மற்றும் பிள்ளைகளுடன் முரண்பட்டதையடுத்து அவர்கள் வீட்டை விட்டு வெளியேறினர். பின்னர் அவர் ஒரு கதிரையில் அமர்ந்துகொண்டு, கழுத்தில் சுருக்கிட்டவாறு தான் தற்கொலை செய்யப்போவதாக மனைவியுடன் தொலைபேசியில் பேசியுள்ளார். கைபேசியில் பேசிக்கொண்டிருக்கும்போதே மதுபோதையில் அவர் உறங்கிவிட்டார். பின்னர் அவரது சகோதரன் அங்கு சென்று பார்த்தபோது, அவர் கழுத்தில் சுருக்குடன் குறட்டைவிட்டு உறங்கிக்கொண்டிருந்தார். உடனடியாக சகோதரன் அவரது கழுத்தில் இருந்த கயிற்றை அகற்றிவிட்டு, அவரைத் தரையில் படுக்க வைத்துள்ளார். இந்நிலையில் சிறிது நேரத்தில் அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார். -யாழ். நிருபர் கஜிந்தன்- https://adaderanatamil.lk/news/cmi03sbk301mwo29np80sl4we

டின் மீன்களுக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்

2 months 3 weeks ago
Nov 15, 2025 - 01:25 PM இன்று (15) முதல் அமுலுக்கு வரும் வகையில் டின் மீன் வகைகளுக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வௌியிடப்பட்டுள்ளது. இதன்படி 425 கிராம் நிறையுடைய டூனா (Tuna) டின் மீனின் அதிகபட்ச சில்லறை விலை 380 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 425 கிராம் நிறையுடைய மெக்கரல் டின் மீன் 480 ரூபாவாகவும், 425 கிராம் நிறையுடைய ஜெக் மெக்கரல் டின் மீனின் 560 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cmhzzsexu01mto29nhqcrpdc3

யாழில். வீதிக்கு கழிவு நீரை வெளியேற்றிய உணவக உரிமையாளர் உள்ளிட்ட மூவருக்கு அபராதம்

2 months 3 weeks ago
15 Nov, 2025 | 03:14 PM யாழில் உணவக கழிவு நீரினை வீதிக்கு வெளியேற்றிய உணவக உரிமையாளருக்கும், காலாவதியான பொருட்களை விற்பனைக்கு காட்சிப்படுத்திய உரிமையாளர்களிற்கும் ஒரு இலட்ச ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை நகரசபையின் எல்லைக்குட்பட்ட வியாபார நிலையங்களில் சுகாதார பரிசோதகரினால், மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது இரு வர்த்தக நிலையங்களில் காலாவதியான பொருட்களை விற்பனைக்கு காட்சிப்படுத்தியிருந்தமை, உணவகம் ஒன்றின் கழிவு நீரினை வீதிக்கு அப்புறப்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் மூவருக்கும் எதிராக பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது. குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது மூவரும் தம் மீதான குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொண்டதை அடுத்து, அவர்களை கடுமையாக எச்சரித்த நீதிமன்று, அவர்களுக்கு ஒரு இலட்ச ரூபாய் தண்டம் விதித்தது. https://www.virakesari.lk/article/230426

ஐபிஎல் டி20 கிரிக்கெட் 2026 - செய்திகள்

2 months 3 weeks ago
2026 IPL : மதீஷ பத்திரனவை விடுவித்தது CSK! Nov 15, 2025 - 05:42 PM 2026 ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் நடைபெறும் திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொரு அணியும் தங்கள் அணியில் தக்கவைத்துள்ள மற்றும் விடுவித்த வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளன. அதன்படி, அண்மைக்காலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரராக மாறியிருந்த இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பத்திரனவை, வரவிருக்கும் தொடருக்காக அணியின் நிர்வாகம் விடுவிக்க முடிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு இவரை இந்திய ரூபா 13 கோடிக்கு சென்னை அணி தக்கவைத்திருந்தது. 2023 ஆம் ஆண்டு சென்னை அணிக்காக தனது முதல் ஐபிஎல் தொடரில் பங்கேற்ற மதீஷ பத்திரன, தான் விளையாடிய முதல் தொடரிலேயே வெற்றி பெற்ற அணியில் ஒரு அங்கமானார். அந்தத் தொடரில் அவர் தனது அணிக்காக 12 போட்டிகளில் விளையாடி 19 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதுவரை அவர் 32 போட்டிகளில் 47 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மதீஷ பத்திரன மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த அப்போதைய தலைவர் மகேந்திர சிங் தோனி கூட, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தால் மதீஷ பத்திரன கவனத்துடன் பயன்படுத்தப்பட வேண்டும் என்று கூறியிருந்தார். அவ்வாறு செய்தால், அவரால் நீண்டகால தொழில்முறை பயணத்தை மேற்கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். எவ்வாறாயினும், சென்னை அணிக்கு மதீஷ பத்திரன தேவைப்பட்டால், எதிர்வரும் டிசம்பர் 16 ஆம் திகதி அபுதாபியில் நடைபெறவுள்ள வீரர்களின் ஏலத்தில் அவரை மீண்டும் ஏலம் எடுக்க வாய்ப்புள்ளது. ஏலத் திகதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஒவ்வொரு அணியும் தங்கள் அணியில் இருந்து விடுவிக்கப்படும் மற்றும் தக்கவைக்கப்படவுள்ள வீரர்களின் பட்டியலை இந்திய நேரப்படி இன்று மாலை 3.00 மணிக்கு முன் வெளியிட வேண்டியிருந்தது. அதன்படி, மதீஷ பத்திரனவைத் தவிர, நியூசிலாந்து வீரர்கள் டெவோன் கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திரா உட்பட பல வீரர்களை விடுவிக்கவும் சென்னை நிர்வாகம் முடிவு செய்துள்ளது. https://adaderanatamil.lk/news/cmi08z6ia01n1o29ng29mia8a

நாமல் ராஜபக்ஷ - எம்.ஏ.சுமந்திரன் இடையில் சந்திப்பு!

2 months 3 weeks ago
சுமந்திரனே ... 15,000 ஓட்டு வாங்கி, பாராளுமன்றம் போக முடியாமல் தோற்ற ஆள். அவரிடம் போய், ஆட்சியை கவிழ்க்க வரச் சொல்லி, ஆதரவு கேட்குது நாமல்.... சுமந்திரனுக்கு.... துணிவு இருந்தால், நாமலின் கூட்டத்திற்கு ஒருக்கால் போய் பார்க்கட்டுமன்.

குட்டிக் கதைகள்.

2 months 3 weeks ago
Farvin Ishak · Suivre rsodtnoSep1elifbumu34 29u:9rl005 7othm1,0a3tneu01v7gu85t3641 · ஒரு ஊரில் ஒரு கோடீஸ்வரன் இருந்தான். அவனுக்குக் கடுமையான தலைவலி ஏற்பட்டது. பல ஊர்களிலிருந்து மிகப் பெரிய வைத்தியர்கள் வந்து பார்த்தும், வண்டி வண்டியாக மருந்துகள் சாப்பிட்டும் அந்தத் தலைவலி குணமாகவில்லை. ஒருநாள் அந்த ஊருக்கு ஒரு சன்யாசி வந்தார். அவர் பணக்காரனை வந்து பார்த்தார். பார்த்துவிட்டு, அவருக்கு ஏற்பட்ட தலைவலிக்குக் கண்ணில் இருக்கும் ஒரு நோயே காரணம் என்று கூறினார். அந்தக் கண்ணைக் குணப்படுத்த ஒரே ஒரு வழிதான். அந்தப் பணக்காரன் பச்சை நிறத்தைத் தவிர வேறெதையும் பார்க்கக்கூடாது என்று கூறிவிட்டுப் போய்விட்டார். பணக்காரன் முதலில் தன் வீட்டில் இருக்கும் எல்லாவற்றையும் பச்சையாக மாற்றினான். தலைவலி குணமாகி விட்டது. சன்னியாசி கூறியது சரிதான். உடம்பு சரியாகவே வீட்டைவிட்டு வெளியே போகத் தொடங்கினான். வெளியே போனால், இயற்கை எல்லா வண்ணங்களையும் அள்ளித் தெளித்திருந்தது. ஆனால், அவற்றைத் தான் அவன் பார்க்கக்கூடாதே! நிறையப் பச்சைப் பெயிண்டையும் பிரஷ்ஷையும் கொடுத்து சில ஆட்களை நியமித்தான். அவன் போகும் வழியில் இருக்கும் ஆடு, மாடு, மனிதர், குடிசை, வண்டி, மேசை, நாற்காலி எல்லாவற்றுக்கும் பச்சை நிறத்தை அடிப்பது அவர்களுடைய வேலை. அவர்களும் முதலாளி சொன்னபடியே செய்து வந்தார்கள். சில மாதம் கழித்து மீண்டும் சன்னியாசி அதே ஊருக்கு வந்தார். வேலையாட்கள் அவரைத் தடுத்து நிறுத்தி, அவர் மீதும் பச்சை வண்ணம் அடிக்கப் போனார்கள். சன்னியாசிக்கு ஆச்சரியமாகிவிட்டது. காரணம் கேட்டார். அவர்கள் ‘தங்கள் முதலாளியின் கட்டளை இது’ என்று கூறினார்கள். சன்னியாசி அதற்கு, “என்னை உங்கள் முதலாளியிடம் அழைத்துப் போங்கள்” என்றார். பணக்காரனுக்குத் தன் நோயைக் குணப்படுத்திய சன்னியாசி மீண்டும் வந்ததைக் கண்டு ஒரே மகிழ்ச்சி. வணங்கி அவரை உபசரித்தான். “இந்த ஊரில் எல்லாவற்றுக்கும் ஏன் பச்சைப் பெயிண்ட் அடிக்கிறீர்கள்?” என்று சன்னியாசி கேட்டார். “ஐயா, நீங்கள் சொன்னபடிதான் நான் செய்கிறேன்” என்றான் அவன் மிகப்பணிவோடு. “நான் என்ன சொன்னேன்?” என்றார் சன்னியாசி. “பச்சைநிறத்தைத் தவிர வேறெதையும் நான் பார்க்கக்கூடாது என்று கூறினீர்களே ஐயா” என்றான். “மகனே! நீ லட்ச லட்சமாகப் பணத்தைச் செலவழித்திருக்க வேண்டாம். ஒரு நூறு ரூபாய் கொடுத்து பச்சைக் கண்ணாடி வாங்கியிருந்தால், உன்னைச் சுற்றியிருக்கும் பொருள்களெல்லாம் பிழைத்திருக்கும். உன் பணமும் வீணாகி இராது. உன்னால் இந்த உலகம் முழுமைக்கும் பச்சைப் பெயிண்ட் அடிக்கமுடியுமா?” என்று கேட்டார் சன்னியாசி. நம்மில் பலரும் இந்தக் கதையில் வரும் பணக்காரனைப் போலத்தான் இருக்கிறோம். நம்மைத் திருத்தி அமைத்துக் கொள்வதற்கு பதிலாக, உலகத்தை எப்படியாவது மாற்றியமைத்து விடுவது என்று மிகவும் முயற்சிக்கிறோம். அது சாத்தியமல்ல. மிகுந்த காலமும், உழைப்பும் விரயமான பிறகு தான் ‘திருந்த வேண்டியது நாம்தான்’ என்பது புரிகிறது. Voir la traduction இந்தக் கதைக்கு இந்தப் படம் எதுக்கென்றே தெரியவில்லை . .......ஏதோ ஈயடிச்சான் கொப்பி மாதிரிப் போட்டு வைப்போம் .........! 😂

அதிசயக்குதிரை

2 months 3 weeks ago
Riyas Qurana se sent fou à Akkaraipattu, Province de l'Est, Sri Lanka. · Suivre oesdtoSnrp4mhc1l1766 9i070869888m9aifmi8m0t92gh4g1hc1gh284i2 · விக்கிபீடியாவின் சித்தப்பா 0000000000000000000000000000 அடிப்படையில் அ.முத்துலிங்கம் ஒரு எழுத்தாளர் தானா அல்லது மனித உருவில் இருக்கும் ஒரு நடமாடும் 'விக்கிபீடியாவா' என்பதை இதுவரை இலக்கிய உலகம் உறுதி செய்யவில்லை. எனக்குத் தெரிந்து அவர் கதை எழுத அமரும்போது, ஒரு பக்கம் வேர்ட் டொக்குமெண்ட் , இன்னொரு பக்கம் 'Britannica Encyclopedia' இரண்டையும் திறந்து வைத்துக்கொண்டுதான் உட்காருவார் போல. இல்லையென்றால், ஒரு மனுஷன் காதலைக்கூட இப்படியா 'லேப் ரிப்போர்ட்' மாதிரி எழுதுவது? அவருடைய கதையில் காதலன் காதலியின் கண்களைப் பார்க்கிறான். "கண்ணே, மணியே" என்று உருக வேண்டும் என்பதுதானே உலக நியதி? ஆனால் முத்துலிங்கம் சேரின் ஹீரோ, காதலியின் கண்களைப் பார்த்துவிட்டு, "உனக்குத் தெரியுமா? 1876-ல் பசிபிக் பெருங்கடலில் வாழும் ஒரு வகை ஆக்டோபஸ் தன் இணையைத் தேடும்போது, அதன் உடலில் இருந்து 42 விதமான நிறங்கள் மாறும். உன்னைப் பார்த்ததும் என் பிட்யூட்டரி சுரப்பியில் நடப்பதும் அதுதான்" என்கிறான். அடப்பாவிகளா! இது காதலா இல்லை 'டிஸ்கவரி சேனல்' ஸ்கிரிப்டா? சரி, சோகக் காட்சியிலாவது மனுஷன் விடுவாரா? ஊஹூம். அவருடைய பாத்திரங்கள் அழுதால்கூட, "ஒரு சொட்டுக் கண்ணீரில் 0.9% உப்பு இருக்கிறது. ஆனால், அண்டார்டிகாவில் உள்ள பனிப்பாறைகளில்..." என்று அழுதுகொண்டே, நமக்கு ஒரு புவியியல் வகுப்பை எடுத்துவிட்டுத்தான் மூக்கைச் சிந்துவார்கள். வாசகர்களுக்கு ஒரு எச்சரிக்கை. நீங்கள் அ.முத்துலிங்கம் கதைகளைத் தொடர்ந்து வாசித்தால், உங்களுக்கு இலக்கிய அனுபவம் கிடைக்குமோ இல்லையோ, அடுத்த வருடம் 'கோடீஸ்வரன்' நிகழ்ச்சியில் கலந்து கொண்டால், நிச்சயம் ஜாக்பாட் அடிக்கலாம். உண்மையைச் சொல்லிவிடுகிறேன். அ.முத்துலிங்கம் அவர்களின் கதைகளைப் படிக்கும் போதெல்லாம் எனக்கு ஒரு சந்தேகம் வரும். இவர் கதை எழுதுகிறாரா, இல்லை ‘பொது அறிவு’ தேர்வுக்கான வினாத்தாளை லீக் செய்கிறாரா? அதாவது, ஒரு சாதாரணக் கதை. ஒருத்தன் யாழ்ப்பாணத்தில் சைக்கிள் ஓட்டுகிறான். நாம் என்ன நினைப்போம்? ‘சரி, வெயில் அடிக்கிறது, புழுதி பறக்கிறது’ என்று போய்க்கொண்டே இருப்போம். ஆனால் முத்துலிங்கம் சேர் விடுவாரா? "அவன் ஓட்டியது ரெலி (Raleigh) சைக்கிள். 1887-ம் ஆண்டு நாட்டிங்ஹாமில் சேர் ஃபிராங்க் என்பவரால் வடிவமைக்கப்பட்டது. அந்தச் சைக்கிளின் சங்கிலியில் (Chain) மொத்தம் 114 இணைப்புகள் இருந்தன. சரியாக 114 இணைப்புகள் இருந்தால் மட்டுமே சைக்கிள் ஈர்ப்பு விசையை எதிர்த்து 15 டிகிரி சாய்வில் ஏற முடியும் என்று ஆர்க்கிமிடிஸ் குளிக்கும்போது கண்டுபிடித்தார்." அடக் கடவுளே! (இதை நான் சொல்லவில்லை, அந்தச் சைக்கிளே அலறுகிறது). ஒரு மனுஷன் நிம்மதியாகச் சைக்கிள் கூட ஓட்ட முடியாதா பாஸ்? இவருடைய கதைகளில் வரும் காதலர்கள், பார்க்கிலோ அல்லது பீச்சிலோ சந்திப்பதில்லை. அவர்கள் நேராக ‘பிரிட்டிஷ் மியூசியத்தில்’ உள்ள பதினோராவது செக்‌ஷனில், மம்மிகளுக்கு நடுவேதான் சந்திப்பார்கள். காதலன் காதலியிடம், "உன் முகம் நிலா மாதிரி இருக்கு" என்று சொல்ல மாட்டான். அது அ.முத்துலிங்கம் யூனிவர்ஸ் இல்லையே!. அங்கே அவன் சொல்வது இதுதான். "பெண்ணே, உன் முகம் சந்திரயான்-3 அனுப்பிய லேண்டிங் புகைப்படத்தில் இருக்கும் தென் துருவத்தின் 42-வது பள்ளத்தைப் போலவே இருக்கிறது. அந்தப் பள்ளத்தில்தான் ஹீலியம்-3 வாயு உறைந்த நிலையில் கிடைக்கிறது." இதைப் கேட்டவுடன் அந்தப் பெண் வெட்கப்பட மாட்டாள். அவளும் ஒரு முத்துலிங்கம் கதாபாத்திரம் என்பதால், "ஆம் அன்பே, ஹீலியம்-3 எதிர்காலத்தின் எரிபொருள். ஆனால் ரஷ்யாவின் லூனா-25 ஏன் விழுந்தது தெரியுமா?" என்று பதில் கேள்வி கேட்பாள். இவர்கள் பேசுவதைக் கேட்டு, பக்கத்தில் இருக்கும் நமக்கே ‘மைனர் ஹார்ட் அட்டாக்’ வரும். ஆனால் கவலைப்படாதீர்கள், ஹார்ட் அட்டாக் வந்தால் என்ன செய்ய வேண்டும், பைபாஸ் சேர்ஜரியை முதன்முதலில் 1960-ல் அர்ஜென்டினாவில் யார் செய்தது என்பதையெல்லாம், அடுத்த பாராவிலேயே விளக்கமாக எழுதிவிடுவார். சுருக்கமாகச் சொன்னால், அ.முத்துலிங்கம் ஒரு எழுத்தாளர் அல்ல. அவர் மனித உருவில் சுற்றிக்கொண்டிருக்கும் ஒரு ‘நடமாடும் அல்காரிதம்’. கூகுள் சேர்வர் டவுன் ஆனால், சுந்தர் பிச்சை உடனே அ.முத்துலிங்கத்திற்குத்தான் போன் செய்வார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். (பின்குறிப்பு: இந்தக் கட்டுரையை நான் எழுதி முடிப்பதற்குள், அ.முத்துலிங்கம் அவர்கள் ஆப்பிரிக்காவில் இருக்கும் ஒரு அபூர்வமான சிலந்தி, எப்படி இணையத்தை விட வேகமாக வலை பின்னும் என்பது பற்றி ஒரு சிறுகதை எழுதி முடித்திருப்பார். பாவம் அந்தச் சிலந்தி!) Voir la traduction

பாரம்பரிய பல்லுயிர் தலமாக தேர்வு: எலத்தூர் குளம், நாகமலை குன்றில் என்ன இருக்கிறது? பிபிசி கள ஆய்வு

2 months 3 weeks ago
பல்லுயிர் சரணாலயம் நல்லது . ...... இயற்கையுடன் மனிதர் ஒன்றி வாழும் வாழ்க்கை மிக நல்லது . ......! 🙂

இந்தியா - தென் ஆபிரிக்கா டெஸ்ட் தொடர்

2 months 3 weeks ago
துடுப்பாட்டத்தில் இந்தியாவும் தடுமாறிய முதல் டெஸ்டில் பரிதாபகரமான நிலையில் தென் ஆபிரிக்கா 15 Nov, 2025 | 05:51 PM (நெவில் அன்தனி) இந்தியாவுக்கு எதிராக கொல்கத்தா ஈடன் கார்ட்ன்ஸ் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நடப்பு உலக டெஸ்ட் சம்பியன் தென் ஆபிரிக்கா பரிதாபகரமான நிலையில் இருக்கிறது. துடுப்பாட்ட வீரர்களுக்கு சிம்மசொப்பனமாக அமைந்த ஈடன் கார்ட்ன்ஸ் ஆடுகளத்தில் போட்டியின் இரண்டாம் நாளான இன்றைய ஆட்ட நேர முடிவில் தென் ஆபிரிக்கா அதன் இரண்டாவது இன்னிங்ஸில் 7 விக்கெட்களை இழந்து 93 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. இரண்டாவது இன்னிங்ஸில் மேலும் 3 விக்கெட்கள் மீதம் இருக்க இந்தியாவை விட 63 ஓட்டங்களால் மாத்திரம் தென் ஆபிரிக்கா முன்னிலையில் இருக்கிறது. இந்தியாவும் அதன் முதல் இன்னிங்ஸில் தடுமாற்றத்தை எதிர்கொண்டிருந்தது. பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்திய இந்தப் போட்டியின் முதல் இரண்டு நாட்களில் 26 விக்கெட்கள் வீழ்த்தப்பட்டன. முதல் நாளான நேற்றைய தினம் 11 விக்கெட்களும் இன்றைய தினம் 15 விக்கெட்களும் வீழ்த்தப்பட்டன. இந்திய அணித் தலைவர் ஷுப்மான் கில் கழுத்தில் ஏற்பட்ட தசைப் பிடிப்பு காரணமாக 4 ஓட்டங்களுடன் ஓய்வு பெற்றார். இந்தப் போட்டியில் கே.எல். ராகுல் பெற்ற 39 ஓட்டங்களே இதுவரை துடுப்பாட்ட வீரர் ஒருவரால் பெறப்பட்ட அதிகபட்ச ஓட்டங்களாக பதிவாகியுள்ளது. போட்டியின் இரண்டாம் நாளான இன்று சனிக்கிழமை (15) காலை தனது முதல் இன்னிங்ஸை ஒரு விக்கெட் இழப்புக்கு 37 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த இந்தியா சகல விக்கெட்களையும் இழந்து 189 ஓட்டங்களைப் பெற்றது. இது தென் ஆபிரிக்கா முதலாவது இன்னிங்ஸில் பெற்ற 159 ஓட்டங்களைவிட 30 ஓட்டங்கள் அதிகமாகும். இந்தியாவின் முதலாவது இன்னிங்ஸில் ராகுலை விட வொஷிங்டன் சுந்தர் (29), ரிஷாப் பான்ட் (27), ரவிந்த்ர ஜடேஜா (27) ஆகியோரே 20 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர். பந்துவீச்சில் சைமன் ஹாமர் 30 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் மாக்கோ ஜென்சன் 35 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். 30 ஓட்டங்கள் பின்னிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த தென் ஆபிரிக்கா பெரும் பரிதாபகரமான நிலையில் இருக்கிறது. அணித் தலைவர் டெம்பா பவுமா மாத்திரமே மிகவும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 29 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதுள்ளார். அவரை விட மாக்கோ ஜென்சன் (13), ரெயான் ரிக்கில்டன் (11), வியான் மெல்டர் (11) ஆகிய இருவரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர். முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்களை வீழ்த்திய பும்ரா, இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றவில்லை. அவர் 6 ஓவர்களை மாத்திரமே வீசினார். உபாதைக்குள்ளான ஷுப்மான் கில் களத்தடுப்பில் ஈடுபடாததால் அணிக்கு தலைமை தாங்கிய ரிஷாப் பான்ட் தனது சுழல்பந்துவீச்சாளர்களில் நம்பிக்கை வைத்து அதில் வெற்றியும் கண்டார். ரவிந்த்ர ஜடேஜா 29 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் குல்தீப் யாதவ் 12 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அக்சார் பட்டேல் 30 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். மூன்றாம் நாள் ஆட்டம் நாளை தொடரும். https://www.virakesari.lk/article/230440

நவம்பர் 2025 - இன்றைய வானிலை

2 months 3 weeks ago
கடும் மின்னல் தாக்கம் குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை! 15 Nov, 2025 | 03:01 PM தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் களுத்துறை, இரத்தினபுரி, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கையானது இன்று சனிக்கிழமை (15) இரவு 11.00 மணி முதல் அமுலில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் பலத்த காற்றும் வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மின்னல் தாக்கத்தினால் ஏற்படும் விபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. https://www.virakesari.lk/article/230422

பாரம்பரிய பல்லுயிர் தலமாக தேர்வு: எலத்தூர் குளம், நாகமலை குன்றில் என்ன இருக்கிறது? பிபிசி கள ஆய்வு

2 months 3 weeks ago
படக்குறிப்பு, எலத்தூர் குளம் கட்டுரை தகவல் சேவியர் செல்வகுமார் பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பல்லுயிர் பாதுகாப்புச் சட்டம் 2002இன் படி, ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகிலுள்ள எலத்துார் குளத்தை மூன்றாவது பாரம்பரிய பல்லுயிர் தலமாக தமிழக அரசு கடந்த செப்டம்பரில் அறிவித்தது. அதற்கு அடுத்த மாதத்திலேயே அதற்கு மிக அருகிலேயே உள்ள நாகமலை குன்றை நான்காவது பாரம்பரிய பல்லுயிர் தலமாக அறிவித்தது. எலத்துார் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 3 கி.மீ. துார இடைவெளியில் அமைந்துள்ள இவ்விரு இடங்களையும் பாரம்பரிய பல்லுயிர் தலங்களாக அறிவித்திருப்பது, அவற்றின் மீது பலருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது. அப்படி அந்த இடங்களில் என்ன இருக்கிறது? இவற்றின் சூழலியல் சிறப்புகள் என்ன? விரிவாகத் தெரிந்துகொள்ள பிபிசி தமிழ் கள ஆய்வுக்குச் சென்றது. ஊர்ப் பறவைகளை கவர்வதில் முக்கிய இடம் பிடித்த எலத்துார் குளம் எலத்துார் குளம் மொத்தம் 96 ஏக்கர் பரப்பளவில் இருக்கிறது. சுற்று வட்டாரத்திலுள்ள 21 கிராமங்கள்தான் இதற்கு நீர்ப்பிடிப்புப் பகுதிகளாக உள்ளன. குளத்தில் இருந்து வெளியேறும் நீர், ஓடை வழியாகச் சென்று அரசூர் என்ற இடத்தில் பவானி ஆற்றில் கலக்கிறது. இந்தக் குளத்திற்குள் முட்புதர் காடுகள், கரைக்காடு, வறண்ட புல்வெளி, சதுப்பு நிலம், ஆழமான நீர்ப்பகுதி, ஆழம் குறைவான பகுதி, மண் திட்டுகள், ஏரிக்கரை எனப் பலவிதமான நில அமைப்புகள் உள்ளன. இதற்குள் குடைவேலம், நாட்டுக் கருவேலம், வேம்பு, அரப்பு, மூலிகைச் செடிகள் எனப் பலவிதமான மரங்களும், தாவரங்களும் இருக்கின்றன. குளத்திலுள்ள தண்ணீர் தெளிந்த நீராகத் தெரிகிறது. 134 விதமான மண்ணின் மரங்கள் கரைப்பகுதிகளில் உள்ளன. மொத்தம் 2 ஆயிரத்துக்கும் அதிகமான மரங்கள் உள்ள இந்தக் குளத்தில்தான் பல்லாயிரக்கணக்கான பறவைகள் இருந்தன. வேறு மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பறவைகள் வலசை வருகின்றன. பட மூலாதாரம், ebird.org அமெரிக்காவின் கார்நெல் பல்கலைக் கழகத்தின் உலகளாவிய பறவைகள் கணக்கெடுப்புக்கான இ-பேர்ட் இணையதள தரவின் அடிப்படையில், 2024–2025ஆம் ஆண்டுக்கான ஊர்ப்புற பறவைகள் கணக்கெடுப்பில் (Great Backyard Bird Count) எலத்துார் குளம் தமிழகத்தில் முதலிடம் பிடித்துள்ளது. இந்தியாவில் 23வது இடத்தையும் பிடித்துள்ளது. அதேபோன்று 2024 ஜனவரி 28 அன்று, தமிழ்நாடு ஒருங்கிணைந்த நீர்வாழ் பறவைகள் கணக்கெடுப்பில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் அதிக பறவைகளைக் கொண்ட நீர்நிலையாகவும் எலத்துார் பதிவு பெற்றுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டில் சென்னை பெருவெள்ளத்தின்போது தொடங்கப்பட்ட 'சூழல் அறிவோம்' அமைப்பு, நீர்நிலைகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறது. இதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் தீபக் வெங்கடாசலம் 5 ஆண்டுகளாக எலத்துார் குளம் மற்றும் நாகமலை குன்று பற்றி ஆவணப்படுத்தியுள்ளார். ''கோவிட் காலத்தில் இந்தக் குளத்திற்கு வந்தபோது, பல்லாயிரக்கணக்கான பறவைகள் வருவதைப் பார்த்தோம். பறவை ஆராய்ச்சியாளர் ஜெகநாதன், இங்குள்ள பறவைகளை அடையாளம் கண்டு ஆவணப்படுத்த பெரிதும் உதவினார். அதன் பின்பே இந்தக் குளத்தைப் பாதுகாக்க வேண்டுமென்று தொடர்ந்து அங்கு வரும் பறவைகளை 5 ஆண்டுகளாகப் பதிவு செய்தோம்'' என்றார் தீபக் வெங்கடாசலம். படக்குறிப்பு, சூழல் அறிவோம், தலைமை ஒருங்கிணைப்பாளர் தீபக் வெங்கடாசலம் இந்தக் குழுவினர் இங்கு வரும் பறவைகளை ஆவணப்படுத்தி இ–பேர்ட் இணையதளத்தில் பதிவு செய்து வருகின்றனர். அதன் அடிப்படையில்தான் 2 ஆண்டுகளாக ஊர்ப்பறவைகள் கணக்கெடுப்பில் எலத்துார் குளம் முதலிடம் பெற்றுள்ளது. குளத்தை நவம்பர் முதல் வாரத்தில் பிபிசி நேரில் பார்வையிட்டது. அப்போது பெருமளவில் குளம் நிரம்பியிருந்தது. குளத்திற்கு நம்பியூர் பகுதியிலிருந்து சிறிய ஓடையில் தண்ணீர் வருகிறது. சமீப காலமாக அத்திக்கடவு–அவிநாசி நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டம் மூலமாகவும் இந்தக் குளத்துக்கு தண்ணீர் வருகிறது. குளத்தின் நடுவிலுள்ள மரங்களிலும், நீர்ப் பகுதிகளிலும், தரையிலுள்ள புதர்க் காடுகளிலும் பல ஆயிரம் பறவைகள் தங்கியிருந்ததைப் பார்க்க முடிந்தது. நீர்க்காகம், கொக்கு, வாத்துகள் என பலவகை பறவைகள் பகல் நேரத்திலேயே அங்கிருந்தன. மாலையில் இருள் சூழும் நேரத்தில் கூட்டம் கூட்டமாக நுாற்றுக்கணக்கான பறவைகள் அணி அணியாக வந்து குளத்தில் தங்குவதற்கு (Roosting) இறங்கியது கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது. படக்குறிப்பு, எலத்தூர் குளம் 204 பறவையினங்கள் 'சூழல் அறிவோம்' ஆவணப்படுத்தியுள்ள தரவுகளின்படி, எலத்துார் குளத்தில் 204 பறவையினங்கள், 174 பூச்சி இனங்கள், 228 தாவர வகைகள், 17 ஊர்வன, 18 எட்டுக்காலிகள், 20 மிதவை நுண்ணுயிரிகள், 8 பாலுாட்டிகள், 24 இதர பல்லுயிர்கள் உள்பட 693 வகையான உயிரினங்கள் வாழ்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் 77 வலசைப் பறவைகள் என்றும், அவற்றில் 47 தொலைதுார வலசைப் பறவைகள் என்றும் கண்டறியப்பட்டுள்ளன. மொத்தம் 125 விதமான உள்ளூர்ப் பறவைகள் உள்ளன. 64 பறவைகள் இனப்பெருக்கம் செய்கின்றன. பன்னாட்டுப் பாதுகாப்பு ஒன்றியத்தின் (IUCN) சிவப்புப் பட்டியலில் (அழியும் அபாயத்தில்) உள்ள 9 பறவைகள் இங்கு இருப்பது பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று இந்தியாவில் பாதுகாப்பு முன்னுரிமை பட்டியலில் (State of Indian Birds) உள்ள 52 விதமான பறவைகள் இங்கு வருவதும் தெரிய வந்துள்ளது. குளத்திற்கு அருகிலுள்ள செங்காளிபாளையத்தைச் சேர்ந்த பெண் விவசாயி தேவிகா, ''ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, பங்குனி மாதங்களில்தான் (நவம்பர் முதல் பிப்ரவரி வரை) இந்த குளத்திற்கு ஏகமாகப் பறவைகள் வரும். அதிலும் அந்தி நேரத்தில் பார்த்தால் கூட்டம் கூட்டமாகப் பறவைகள் வரும். அத்திக்கடவு–அவிநாசி திட்டத்திலும் தண்ணீர் வருகிறது. குளத்தில் அதிக தண்ணீர் தொடர்ந்து இருப்பதால் மீன்களும் அதிகமாக இருக்கின்றன'' என்றார். படக்குறிப்பு,தேவிகா, செங்காளிபாளையம் குளம், குன்று ஆகியவற்றின் அமைப்பு மற்றும் முக்கியத்துவத்தை சூழல் அறிவோம் குழுவினர், நம்முடன் நடை பயணம் மற்றும் மலையேற்றம் செய்து நேரில் விளக்கினர். குளத்திற்குள் கீச்சான், கரிச்சான்குருவி, குயில், புறா, சில்லை, அன்றில், தேன்சிட்டு, கொண்டலாத்தி, கதிர்குருவி உள்பட ஏராளமான உள்ளூர்ப் பறவைகள் இருப்பதை சூழலியல் ஆர்வலர் கேசவமூர்த்தி அடையாளம் காண்பித்தார். அவை இனப்பெருக்கம் செய்வதற்காக அங்குள்ள மரம், புதர், தரை எனப் பல இடங்களில் கட்டியுள்ள விதவிதமான கூடுகளையும் காண்பித்து, அந்தப் பறவைகளின் இனப்பெருக்க காலத்தையும் விவரித்தார். ரசாயனப் பொறியாளரான கேசவமூர்த்தி, 'இயற்கை நடை' என்ற சூழல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளார். பிபிசி தமிழிடம் பேசிய அவர், ''எலத்துார் குளத்தைப் பாதுகாப்பதில் இப்போது உள்ளூர் மக்களின் பங்களிப்பு பிரதானமாகிவிட்டது. அரசின் அறிவிப்புக்குப் பின், சூழலியல் ஆர்வலர்கள், பறவை ஆய்வாளர்கள், மாணவர்கள் அதிகளவில் வருகின்றனர். இங்கேயும் நாகமலை குன்றிலும் நாங்கள் இயற்கை நடைக்கு அழைத்துச் சென்று இங்குள்ள உயிர்ச் சூழல், பறவைகளின் முக்கியத்துவத்தை விளக்கிச் சொல்கிறோம்'' என்றார். படக்குறிப்பு, இயற்கை நடை ஒருங்கிணைப்பாளர் கேசவமுர்த்தி தொல்லியல் மற்றும் சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த நாகமலை குன்று இந்த குளத்திலிருந்து 3 கி.மீ. தொலைவில் நாகமலை குன்று உள்ளது. நாகமலை குன்றின் அடிவாரப் பகுதிகளையும், குன்றின் உச்சியிலுள்ள பாறைப் பகுதிகளையும் பிபிசி தமிழ் நேரில் பார்வையிட்டது. நாகமலை குன்றின் உச்சியிலும், மலையடிவாரத்திலும் முருகன் கோவில் அமைந்துள்ளது. மேலே செல்ல 700க்கும் மேற்பட்ட படிக்கட்டுகள் உள்ளன. மலையின் அடிவாரத்தில் தனிப்பாறையில் ஆஞ்சநேயரின் புடைப்புச் சிற்பம் கொண்ட தனிக்கோவில் உள்ளது. நாகமலை குன்று பகுதியில் புலிக்குத்தி நடுகல், பாறைத்தட்டுகள் போன்ற வரலாற்றுக் காலத்துக்கு முந்தைய தொல்லியல் சான்றுகள் அதிகம் இருப்பதாக வரலாற்று ஆய்வாளர் க.ராஜன் தனது 'கொங்கு களஞ்சியம்' என்ற நுாலில் குறிப்பிட்டுள்ளார். குன்றில் 5 இடங்களில் உள்ள பாறை ஓய்விடங்கள் (Caves) பண்டைக்கால வேட்டைச் சமூகத்திற்கான வாழ்விடங்களாக இருந்திருக்கலாம் என்கிறது அவரது நுால். நாகமலை குன்றின் மலையடிவாரப் பகுதியில் இருந்த மரங்களில் பகல் நேரத்திலேயே ஏராளமான பறவைகள் இருந்தன. அந்தக் குன்றின் உச்சியில் ராசாளிக் கழுகுகள் இணையாக வசிப்பதாக சூழலியல் ஆர்வலர்கள் கூறினர். அவற்றில் ஒரு ராசாளிக் கழுகு வெளியில் வலம் வந்ததையும் நேரில் பார்க்க முடிந்தது. படக்குறிப்பு, நாகமலை குன்று, முருகன் கோவில் நாகமலை குன்று உச்சியைச் சுற்றிலும் உள்ள பாறைப் பகுதிகளில் 3 இடங்களில் நீர்ச்சுனைகள் உள்ளன. அவற்றில் கந்தன் தேரை இருப்பதை நேரில் காண்பித்த சூழலியல் ஆர்வலர் கேசவமூர்த்தி, எலத்துார் குளத்திற்கும், நாகமலை குன்றுக்கும் ஓர் உணவுச் சங்கிலி இருப்பதையும் அவர் விவரித்தார். அரிய வகைப் பறவைகள் மட்டுமின்றி, அரிதான பல தாவரங்கள் இங்கு இருப்பதையும் தாவரவியல் வல்லுநர்களின் உதவியுடன் சூழல் அறிவோம் அமைப்பு ஆவணப்படுத்தியுள்ளது. எலத்துார் பேரூராட்சியின் பல்லுயிர்ப் பெருக்க பாதுகாப்புக் குழு (Biodiversity Management Committee), குளம் மற்றும் குன்று பகுதிகளைப் பாதுகாப்பதில் முக்கியப் பங்காற்றி வருகிறது. பறவைகளை நாட்டுத் துப்பாக்கி வைத்து வேட்டையாடுதல், மரம் வெட்டுதல், வலை விரித்து மீன்களைப் பெருமளவில் பிடித்தல், கால்நடை மேய்ச்சல், பேரூராட்சி குப்பைகளைக் குளத்தில் கொட்டுதல் போன்றவை சூழல் அறிவோம் மற்றும் பல்லுயிர் பாதுகாப்புக் குழுவின் முயற்சிகளால் பெருமளவில் தடுக்கப்பட்டு இருப்பதாக பல்லுயிர்ப் பெருக்க பாதுகாப்புக் குழுவின் தலைவர் நாகராஜன் தெரிவித்தார். படக்குறிப்பு, நாகமலை குன்று உள்ளூர் மக்களின் கோரிக்கைகளும், வனத்துறையின் முன்மொழிவும் குளம் மற்றும் குன்றின் சூழலியல் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக சூழல் அறிவோம் குழுவினர், சுற்றுவட்டாரத்திலுள்ள 130க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களை இங்கே அழைத்து வந்து 'இயற்கை நடை' என்ற பெயரில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளனர். ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாகவும் இதைச் செய்து வருகின்றனர். ''பல்லுயிர்ப் பெருக்கப் பாதுகாப்புச் சட்டம் (Biological Diversity Act, 2002) மக்கள் பங்களிப்பை உறுதி செய்வதால்தான், பல்லுயிர்ப் பெருக்க பாதுகாப்புத் தலம் என்ற கோரிக்கையை முன் வைத்தோம். இதில் இந்த இடங்களில் வளர்ச்சிப் பணிகளை மக்கள்தான் முடிவு செய்ய முடியும். இவை தவிர்த்து, அரசிடம் அடுத்த 5 ஆண்டுகள், 10 ஆண்டுகளுக்கு என சில கோரிக்கைகளை முன் வைத்துள்ளோம்'' என்றார் தீபக். சூழல் அறிவோம், பல்லுயிர்ப் பெருக்க பாதுகாப்புக்குழு மற்றும் உள்ளூர் சூழல் ஆர்வலர்கள் முன் வைக்கும் சில கோரிக்கைகள்: குளம் மற்றும் குன்றின் பகுதிகளில் பறவை வேட்டையை முற்றிலும் தடுக்க, 2 இடங்களிலும் வேட்டைத் தடுப்புக் காவலர்களை நியமிக்க வேண்டும். அதில் உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை தர வேண்டும். பல்லுயிர்ப் பெருக்க பாதுகாப்புத் தல எல்லையை வரையறுத்து, நிறைய அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட வேண்டும். தாவரங்கள், உயிர்களின் வாழ்விடம் பாதிக்கும் வகையில் நில அமைப்பில் எந்த மாற்றங்களையும் செய்யக்கூடாது. குளத்தில் நம்பியூர் கழிவுநீர் கலக்காமல் சுத்திகரிப்பு செய்ய சுத்திகரிப்பு நிலையம் அமைத்து, சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரையும் வேறு வழியில் வெளியே கொண்டு செல்ல வேண்டும். இந்தக் கோரிக்கைகள் குறித்து சத்தியமங்கலம் புலிகள் காப்பகக் கள இயக்குநர் ராஜ்குமாரிடம் பிபிசி தமிழ் கேட்டபோது, ''இத்தகைய தலங்களை பல்லுயிர்ப் பெருக்கப் பாதுகாப்புக் குழுதான் பராமரிக்க வேண்டும். ஆனால் பறவைகள் வாழ்விடம் என்ற வகையில் வனத்துறையும் அதைக் காக்க வேண்டிய அவசியம் உள்ளது. மாவட்ட ஆட்சியர் கந்தசாமியின் ஆலோசனைப்படி சில முன்மொழிவுகளைத் தயார் செய்து வருகிறோம்'' என்றார். "வனத்துறைக்கு வெளியே உள்ள உயிர்ச்சூழல் முக்கியத்துவம் உள்ள இடங்களைப் பாதுகாக்க மத்திய அரசின் ஒருங்கிணைந்த உயிரியல் வாழ்விடப் பாதுகாப்பு மேம்பாட்டுத் திட்டத்தில் நிதி கோரி முன்மொழிவு அனுப்பியிருந்தோம். அந்த நிதி கிடைக்கவில்லை" என்றும் அவர் தெரிவித்தார். வேட்டைத் தடுப்புக் காவலர்களை நியமிக்க அனுமதி கிடைக்கும் வரை, தற்போது வனத்துறையினர் இவ்விரு இடங்களையும் அவ்வப்போது கண்காணித்து வருவதாகவும் அவர் கூறினார். ''நாகமலை குன்றை அப்படியே பாதுகாத்தால் போதுமானது. எலத்துார் கரையில் சூழல் நடை பயிலும் வகையில் ஒரு சிறிய நடைபாதை அமைத்து, சுற்றிலும் அங்குள்ள பறவைகள், அவற்றைப் பற்றிய தகவல்களைத் தரும் பலகைகளை வைக்கத் திட்டமிட்டுள்ளோம். கரைப் பகுதிகளில் ஆலமரங்களை நட்டுப் பராமரிக்கும் திட்டமும் உள்ளது. சூழல் சுற்றுலாவை உருவாக்கினாலும் அதுவும் அங்குள்ள மக்களின் பங்களிப்போடுதான் செயல்படுத்தப்படும்.' என்றார் கள இயக்குநர் ராஜ்குமார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ckg16k3xxlro

பிகார் தேர்தல்: 190 இடங்களுக்கு மேல் தே.ஜ.கூட்டணி முன்னிலை - தேஜஸ்வி யாதவ் பின்னடைவு

2 months 3 weeks ago
6 இடங்களில் மட்டுமே வெற்றி: பிகாரில் காங்கிரஸ் படுதோல்வி ஏன்? 5 முக்கிய காரணங்கள் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கோப்புப் படம் கட்டுரை தகவல் தில்நவாஸ் பாஷா பிபிசி செய்தியாளர் 15 நவம்பர் 2025, 08:04 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் பிகார் சட்டப்பேரவையில் உள்ள 243 இடங்களில் 202 இடங்களை வென்று தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. ராஷ்டிரிய ஜனதா தளம், இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகளின் மகா கூட்டணி மிகப்பெரிய மற்றும் எதிர்பாராத தோல்வியைச் சந்தித்துள்ளது. காங்கிரஸ் கட்சியில் நிலைமை இன்னும் மோசம். அக்கட்சி போட்டியிட்ட சுமார் 60 இடங்களில் 6 இடங்களை மட்டுமே வென்றது. இந்த முறை, பிகார் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் 8.71 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது. 2020 சட்டமன்றத் தேர்தலில் அது 9.6 சதவீதமாக இருந்தது. அந்த நேரத்தில் காங்கிரஸ் 70 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தியிருந்தது. கடந்த தேர்தலில் காங்கிரஸ் 19 இடங்களை வென்றிருந்தது. கடந்த சில தசாப்தங்களாக பிகார் அரசியல் ரீதியாக காங்கிரசுக்கு மிகவும் கடினமாக உள்ளது. 2015 இல் காங்கிரஸ் 27 இடங்களை வென்றது. 2010 இல், அது நான்கு இடங்களை மட்டுமே வென்றிருந்தது. இந்த முறை காங்கிரஸ் ஆறு இடங்களை மட்டுமே வென்றுள்ளது. அதாவது ஒவ்வொரு பத்து வேட்பாளர்களில் ஒருவர் மட்டுமே வெற்றி பெற்றனர். காங்கிரஸின் இந்த மோசமான செயல்பாடு எதிர்பாராததாகவும் ஆச்சரியமாகவும் இருக்கலாம். ஆனால் தேர்தல் பிரசாரத்தின் போதே அதன் அறிகுறிகள் தென்பட்டதாக ஆய்வாளர்கள் நம்புகின்றனர். 1990 முதல் பிகாரில் காங்கிரசுக்கு முதல்வர் இல்லை, பெரும்பாலான நேரம் மாநிலத்தில் கட்சி அதிகாரத்திற்கு அப்பால்தான் காங்கிரஸ் இருந்துள்ளது. Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading அதிகம் படிக்கப்பட்டது ஒரு வீரரை கூட இழக்காமல் முகலாயர்களை வீழ்த்தி இந்தியாவை வென்ற 'ஷேர்ஷா சூரி' இந்தியா அணுசக்தி நாடாக, சுதந்திரம் அடைந்த இரண்டே வாரங்களில் நேரு எடுத்த முக்கிய முடிவு உலகில் 60 லட்சம் பேரில் ஒருவருக்கு உள்ள 'தங்க' ரத்தத்தை உருவாக்க விஞ்ஞானிகள் முயற்சி தினசரி எத்தனை தேக்கரண்டி சர்க்கரை சேர்க்கலாம் தெரியுமா? End of அதிகம் படிக்கப்பட்டது தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, காங்கிரசுடன் தொடர்புடைய பெரும்பாலான தலைவர்கள், 'இந்த முடிவுக்கு தேர்தல் ஆணையமே பொறுப்பு' என்று எதிர்வினையாற்றியுள்ளனர். தேர்தல் முடிவுகளின் போது, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா, "இந்தத் தேர்தல் பிகார் மக்களுக்கும் தேர்தல் ஆணையத்திற்கும் இடையிலான போட்டி. தேர்தல் ஆணையம் வெற்றி பெறுகிறது" என்று கூறினார். மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான திக்விஜய் சிங், "இந்த முழு விளையாட்டும் போலி வாக்காளர் பட்டியல்கள் மற்றும் போலி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பற்றியது, எனது சந்தேகம் சரி என்று நிரூபிக்கப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார். ஹரியாணா முன்னாள் முதல்வர் பூபிந்தர் ஹூடா, "மகா கூட்டணி ஒரு அரசாங்கத்தை அமைக்கும் என்று தோன்றியது. இந்த தோல்வி எதிர்பாராதது; காரணங்களை நாங்கள் மதிப்பாய்வு செய்வோம்." என்று கூறியுள்ளார். இருப்பினும், காங்கிரஸின் இந்த மோசமான செயல்பாட்டிற்கு, சமூக அடித்தளமின்மை, பலவீனமான கட்சிக் கட்டமைப்பு, கூட்டணியுடன் ஒருங்கிணைப்பு இல்லாமை மற்றும் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் கவனக்குறைவு ஆகியவையே காரணம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பலவீனமான சமூக அடித்தளம் பட மூலாதாரம், Getty Images பிகாரில் காங்கிரசுக்கு வலுவான சமூக அடித்தளம் இல்லை என்றும், கட்சியின் மோசமான முடிவுகளுக்கு இதுவே மிகப்பெரிய காரணம் என்றும் ஆய்வாளர்கள் நம்புகின்றனர். மூத்த பத்திரிகையாளரும் அரசியல் ஆய்வாளருமான சுரூர் அகமது கூறுகையில், "காங்கிரசுக்கு வலுவான சமூக அடித்தளம் இல்லை. உயர் சாதியினர் ஏற்கனவே கட்சியை விட்டு வெளியேறிவிட்டனர். அதேநேரம், பிற்படுத்தப்பட்ட சாதியினரும் கட்சியில் சேரவில்லை." "காங்கிரஸ் ஒரு சித்தாந்த அடிப்படையிலான கட்சி, ஆனால் சாதி மற்றும் சமூக இயக்கவியல் பிகார் அரசியலில் ஆதிக்கம் செலுத்துகிறது. தேர்தல் முடிவுகளை பாதிக்கும் அளவுக்கு வலுவான சமூக அடித்தளம் கட்சிக்கு இல்லை." அதே நேரத்தில், பிகாரின் முன்னணி இந்தி நாளிதழான பிரபாத் கபரின் மாநிலத் தலைவரான அஜய் குமார், பிகாரில் பலவீனமடைந்து வரும் தனது அடித்தளத்தை மீண்டும் ஒன்றிணைக்க காங்கிரஸ் எந்த தீவிர முயற்சியும் எடுக்கவில்லை என்று நம்புகிறார். "பிகாரில் காங்கிரசின் சமூக அடித்தளம் படிப்படியாக பலவீனமடைந்து வருகிறது. 2005 முதல், கட்சி அதன் பழைய அடித்தளத்துடன் மீண்டும் இணைவதற்கு உறுதியான முயற்சியை மேற்கொள்ளவில்லை. மக்களவைத் தேர்தலின் போது ராகுல் காந்தி தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட சாதியினருடன் இணைய முயன்றார், ஆனால் இந்த தேர்தலில் அந்த முயற்சி தோல்வியடைந்தது" என்று அஜய் குமார் கூறுகிறார். காங்கிரஸ் கட்சி தனது சமூக அடித்தளத்தை வலுப்படுத்த எந்த தீவிர முயற்சிகளையும் எடுக்கவில்லை என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பத்திரிகையாளர் நச்சிகேதா நாராயண் கூறுகையில், "தேர்தலுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு ராகுல் காந்தி பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் தொடர்பான தீர்மானத்தை வெளியிட்டார், ஆனால் கட்சி அதை விளம்பரப்படுத்தவில்லை. இதன் விளைவாக, பிற்படுத்தப்பட்ட சாதியினரிடையே கட்சியின் செல்வாக்கு பலவீனமாகவே இருந்தது. பாஜக மற்றும் ஜே.டி.யு.வின் வலுவான சமூக மற்றும் நிறுவன ரீதியான உத்திகள் தேர்தல்களில் சிறப்பாக பலன் தந்துள்ளன" கருத்தியல் சவால்கள் பட மூலாதாரம், Getty Images பாரதிய ஜனதா வலுவான இந்துத்துவா நிகழ்ச்சி நிரலைக் கொண்டுள்ளது. கடந்த பத்தாண்டுகளில் அக்கட்சி பல தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளது. ஹரியாணா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களுக்குப் பிறகு, இப்போது பாஜகவின் தே.ஜ. கூட்டணி பிகாரிலும் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. தேர்தல் பிரசாரத்தின் போது, பாஜக தலைவர்கள் தங்கள் சித்தாந்த அடிப்படையை வெளிப்படுத்துவதில் எந்த தயக்கமும் காட்டவில்லை. மூத்த பத்திரிகையாளர் சுரூர் அகமது கூறுகையில், "காங்கிரஸ் எதிர்கொள்ளும் ஒரு பெரிய சவால் என்னவென்றால், மக்களை அதன் சித்தாந்தத்துடன் இணைக்க முடியவில்லை. பிகார் மக்கள் காங்கிரஸின் சித்தாந்தம் மற்றும் உத்தி இரண்டையும் நிராகரித்துவிட்டனர். ஆனால் இந்த சவால் பிகாரில் மட்டும் அல்ல. இடது-மையவாத கட்சிகள் பிகாரில் மட்டுமல்ல, நாடு முழுவதும் சவால்களை எதிர்கொள்வதால், காங்கிரஸ் தனக்குள்ளேயே ஆழமாக சிந்திக்க வேண்டும். மறுபுறம், வலதுசாரிக் கட்சிகள் இன்னும் வலுவடைந்து வருகின்றன." என்றார். சமூக ஊடகங்கள் மற்றும் தகவல் யுகத்தில் மக்கள் உணர்ச்சி ரீதியாக அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் ஆய்வாளர்கள் நம்புகின்றனர். காங்கிரஸ் தேர்தலில் போட்டியிடும் பிரச்னைகள் சித்தாந்தம் சார்ந்தவை, ஆனால் உணர்ச்சி ரீதியான தொடர்பு இல்லை. "சமூக ஊடகங்கள் மக்களின் வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறிவிட்டதாலும், தகவல்களின் பெருக்கம் அதிகரித்துள்ளதாலும், மக்கள் சிந்தனையை விட உணர்ச்சிவசப்பட்டே உள்ளனர். காங்கிரஸ் மற்றும் உலகெங்கிலும் உள்ள பிற இடது-மையவாதக் கட்சிகள் இந்த சவாலை எதிர்கொள்கின்றன. வலதுசாரிக் கட்சிகளைப் போல மக்களுடன் உணர்ச்சி ரீதியாக இணையவோ அல்லது அவர்களின் உணர்ச்சிகளைப் பாதிக்கவோ அவர்களால் முடியவில்லை" என்று சுரூர் அகமது கூறுகிறார். 'வாக்கு திருட்டு பரப்புரை எடுபடவில்லை' பட மூலாதாரம், Getty Images பிகார் சட்டமன்றத் தேர்தல்களில், காங்கிரஸ் தனது அறிக்கையில் வேலையின்மை, சமூக நீதி, இடஒதுக்கீடு, இலவச மின்சாரம், மோசமான நலத்திட்டங்கள், சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தது. ஆனால் கட்சியின் தேர்தல் பிரசாரத்தில் பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் மற்றும் 'வாக்கு திருட்டு' போன்ற பிரச்னைகளே ஆதிக்கம் செலுத்தின. காங்கிரஸ் தொடர்பான ஊடக செய்திகளிலும் இது பிரதிபலித்தது. வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் மற்றும் 'வாக்கு திருட்டு' பிரச்னைகளுடன் பிகார் மக்களை காங்கிரசால் இணைக்க முடியவில்லை என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர். இது தேர்தலில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர். மூத்த பத்திரிகையாளர் நச்சிகேதா நாராயண் கூறுகையில், "வாக்கு திருட்டை ஒரு தேர்தல் பிரச்னையாக மாற்றுவதை பிகார் மக்கள் புரிந்து கொள்ளவில்லை, இது காங்கிரசுக்கு சிக்கல்களை உருவாக்கியது." பிகாரில் முதல் கட்ட வாக்குப்பதிவுக்கு ஒரு நாள் முன்பு, ஹரியாணா சட்டமன்றத் தேர்தலின் போது வாக்குகள் திருடப்பட்டதாகக் ராகுல் காந்தி கூறினார். பாரதிய ஜனதா மற்றும் தேர்தல் ஆணையம் மீது அவர் பல குற்றச்சாட்டுகளை சுமத்தினார். "பிகார் மக்களால் இந்தப் பிரச்னையைப் புரிந்து கொள்ள முடியவில்லை. மக்கள் வாக்களிக்கப் போகிறார்கள், அவர்களின் வாக்குகள் திருடப்படுவதாக ராகுல் காந்தி கூறிக் கொண்டிருந்தார்" என்று நச்சிகேதா நாராயண் கூறுகிறார். "ஒரு கட்சி தெளிவான நிகழ்ச்சி நிரலைக் கொண்டிருக்கும் போது, சுறுசுறுப்பாக இயங்கும் போது, மக்களுடன் இணைந்திருக்கும் போது சிறப்பாகச் செயல்படுகிறது. பிகார் தேர்தலிலும் காங்கிரஸ் தனது நிகழ்ச்சி நிரலை செயலாக்க தவறிவிட்டது." மறுபுறம், லாலுபிரசாத் ஆட்சி பற்றி முன்வைக்கப்படும் 'காட்டாட்சி' என்ற விமர்சனத்தை தேஜ கூட்டணி தொடக்கத்திலிருந்தே தனது பிரசாரத்தின் அடிப்படையாக வைத்திருந்தது. "தேஜ கூட்டணியின் மிகவும் வெற்றிகரமான உத்தி என்னவென்றால் தங்கள் ஆட்சியின் குறைபாடுகள் குறித்து கவனம் செலுத்தவோ அல்லது அது விவாதத்திற்கு வரவோ அனுமதிக்கவில்லை, மாறாக லாலுவின் சகாப்தத்தை தலைப்புச் செய்திகளில் வைத்திருந்தனர். விவாதமும் அதைச் சுற்றியே இருந்தது" என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர். "காங்கிரஸ் மற்றும் மகா கூட்டணி கட்சிகள் இந்த பிரசார போரில் தோற்றன" என்று சுரூர் அகமது கூறுகிறார். காட்டாட்சி என்று குறிப்பிட்டு தேஜகூ செய்த பிரசாரம் வெற்றிகரமாக அமைய, "அதனை எதிர்கொள்ள காங்கிரஸிடம் எந்தவொரு உத்தியோ அல்லது எதிர் வாதமோ இல்லை" என்று நச்சிகேதா நாராயண் கூறுகிறார். கூட்டணியில் ஒருங்கிணைப்பு இல்லாமை பட மூலாதாரம், Getty Images பிகார் தேர்தலில், ஒருபுறம் புதிய கட்சிகளைச் சேர்ப்பதன் மூலம் தேஜகூ வலுவடைந்து வந்தது, மறுபுறம், மகா கூட்டணியின் முக்கிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் இடையே ஒருங்கிணைப்பு இல்லாமையும், நம்பிக்கையின்மையும் காணப்பட்டன. மகா கூட்டணியில் எல்லாம் நன்றாக இருக்கிறது என்பதை உறுதிப்படுத்த இரு கட்சிகளின் தலைவர்களும் பாட்னாவில் ஒரு கூட்டு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கூட்டாளிகளுடன் ஒருங்கிணைப்பு இல்லாதது மகா கூட்டணியில் தெளிவாகத் தெரிந்தது என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர். "பிகாரில், காங்கிரஸ் கட்சி தனது கட்டமைப்பை வலுப்படுத்துவதிலோ அல்லது கூட்டணியுடன் ஒருங்கிணைவதிலோ கவனம் செலுத்தவில்லை. மண்டல் கமிஷனுக்குப் பிறகு, லாலுபிரசாத் யாதவுடன் நீடிப்பதா அல்லது தனியே நிற்பதா என்பதில் காங்கிரஸ் கட்சிக்குள் மோதல் ஏற்பட்டது. பிகாரில் மாநில காங்கிரசாரின் கருத்து எதுவாக இருந்தாலும், கட்சித் தலைமை ஆர்ஜேடியுடன் கூட்டணி வைப்பதை தேர்வு செய்தது. இந்தக் கூட்டணி பயன் தரவில்லை என்று தோன்றுகிறது" என்று அஜய்குமார் கூறுகிறார். காங்கிரஸ் - ஆர்ஜேடி கூட்டணி தொடர்பாக எழுந்த குழப்பமும் தேர்தல் முடிவுகளில் தாக்கத்தை செலுத்தியிருக்கலாம் என்று சுரூர் அகமது நம்புகிறார். இருப்பினும், காங்கிரஸ் மகா கூட்டணியிலிருந்து பிரிந்திருந்தால், நிலைமை இன்னும் மோசமாக இருந்திருக்கும் என்று அவர் நம்புகிறார். "ஆர்ஜேடி கூட்டணியில் இருந்து காங்கிரஸ் பிரிந்திருந்தால், அது ஒரு பெரிய தவறாக இருந்திருக்கும். ஏனெனில் அவ்வாறு செய்திருந்தால், அதன் வாக்கு சதவீதம் மிகவும் குறைந்து பிகாரில் தன் இருப்பைக் காப்பாற்றவே காங்கிரஸ் போராடியிருக்கும்" என்று சுரூர் அகமது கூறுகிறார். "காங்கிரசுக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் இடையே ஒருங்கிணைப்பு இல்லாதது ஒரு முக்கிய காரணியாக இருந்தது. சில தொகுதிகளில் நட்புரீதியான போட்டிகள் நடந்தன, இது தேர்தல் உத்திக்கு தீங்கு விளைவிக்கும்." என்று பத்திரிகையாளர் நச்சிகேதா நாராயண் கூறினார். கட்டமைப்பு பலவீனம், வேட்பாளர் தேர்வு பற்றி எழும் கேள்விகள் பிகாரில் காங்கிரஸ் கட்சியில் வலுவான களப் பணியாளர்கள் அல்லது அர்ப்பணிப்புள்ள தொண்டர்கள் இல்லை. சமீபத்திய ஆண்டுகளில் கட்சி கட்டமைப்பு ரீதியாக இன்னும் பலவீனமாகிவிட்டதாக ஆய்வாளர்கள் நம்புகின்றனர். காங்கிரசின் வேட்பாளர் தேர்வு குறித்தும் ஆய்வாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர். "காங்கிரசுக்குள் கட்சி கட்டமைப்பு வலுவாக இல்லை. நடுத்தர வர்க்கத்தினரும் சில ஊக்கமுள்ள மக்களும் காங்கிரசுடன் தொடர்புடையவர்கள், ஆனால் அது பெரிய அளவில் ஒரு வலுவான அடித்தளத்தை உருவாக்க உதவவில்லை. உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி அல்லது பிகாரில் ஆர்ஜேடி போல பிகாரில் காங்கிரசுக்கு அர்ப்பணிப்புள்ள தொண்டர்கள் இல்லை. இது பிகாரில் காங்கிரஸ் மிகவும் வலுவான நிலையில் இல்லை என்பதை தெளிவுபடுத்துகிறது" என்று சுரூர் அகமது கூறுகிறார். "ஒரு கட்சி தெளிவான நிகழ்ச்சி நிரலைக் கொண்டிருந்தால், சுறுசுறுப்பாக இருக்கும்போது, மக்களுடன் இணைந்திருக்கும் போது சிறப்பாகச் செயல்பட முடியும். இது காங்கிரஸ் கட்சியின் நீண்டகால பற்றாக்குறையாக இருந்து வருகிறது. பிராந்தியக் கட்சிகள் வலுவாக இல்லாத மாநிலங்களில் காங்கிரஸ் ஒரு வலுவான அமைப்பை உருவாக்கியுள்ளது. வலுவான பிராந்தியக் கட்சிகள் உள்ள உத்தரபிரதேசம், பிகார் மற்றும் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் அதுபோன்ற ஒன்றை உருவாக்குவதில் காங்கிரஸ் பெரும்பாலும் தோல்வியடைந்துள்ளது." என்று அஜித்குமார் தெரிவித்தார். அதே நேரத்தில், காங்கிரஸ் வேட்பாளர்களைத் தேர்வு செய்வதும் கூட கேள்விக்குரியதாக இருப்பதாக பத்திரிகையாளர் நச்சிகேதா நாராயண் நம்புகிறார். -இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cqjwk248jygo

ஜம்மு-காஷ்மீரில் காவல் நிலையத்தில் வெடிவிபத்து- 9 பேர் உயிரிழப்பு!

2 months 3 weeks ago
ஜம்மு - காஷ்மீரில் குண்டுவெடிப்பு; 7 பேர் பலி, 27 பேர் காயம் 15 Nov, 2025 | 10:26 AM இந்திய நிர்வாகத்தின் கீழ் உள்ள ஜம்மு- காஷ்மீரின் முக்கிய நகரமான ஸ்ரீநகரில் உள்ள ஒரு பொலிஸ் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட வெடிபொருட்கள் வெடித்ததில் ஏழு பேர் உயிரிழந்துள்ளதுடன் 27 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஸ்ரீநகரின் தெற்கே உள்ள நவ்காம் பகுதியில் உள்ள ஒரு பொலிஸ் நிலையத்தில் வெள்ளிக்கிழமை (14) இரவு இந்த இந்த வெடிப்பு சம்பவம் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உயிரிழந்தவர்களில் பெரும்பாலோர் வெடிப்பு நடந்த நேரத்தில் வெடிபொருட்களை ஆய்வு செய்து கொண்டிருந்த பொலிஸார் மற்றும் தடயவியல் குழு அதிகாரிகள் ஆவார். இந்த வெடிப்பு சம்பவத்தில் ஸ்ரீநகர் நிர்வாகத்தைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகளும் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காயமடைந்தவர்களில் மேலும் ஐந்து பேர் இன்னும் ஆபத்தான நிலையில் இருப்பதால், உயிரிழப்பின் எண்ணிக்கை தொடர்ந்து உயரக்கூடும் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/230399

ஐபிஎல் டி20 கிரிக்கெட் 2026 - செய்திகள்

2 months 3 weeks ago
ஜடேஜாவுக்கு பதில் சஞ்சு சாம்சன் : சிஎஸ்கே முடிவால் யாருக்கு லாபம்? பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் பிரதீப் கிருஷ்ணா பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டிருந்த சஞ்சு சாம்சன் - ரவீந்திர ஜடேஜா 'ஐபிஎல் டிரேட்' உறுதியாகியிருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய அங்கமாக விளங்கிய ஜடேஜாவையும், ஆல்ரவுண்டர் சாம் கரண் இருவரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு டிரேட் செய்யப்பட்டிருக்கிறார்கள். அதற்குப் பதிலாக ராஜஸ்தான் அணியின் கேப்டனாக இருந்த சஞ்சு சாம்சன் சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்திருக்கிறார். ஐபிஎல் தொடரைப் பொறுத்தவரை ஏலத்தைத் தவிர்த்து 'டிரேட்' மூலமாகவும் வீரர்களை வாங்க முடியும். 2009ம் ஆண்டு முதலே ஐபிஎல் டிரேட்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. பல அணிகள் இதில் தொடர்ச்சியாக ஈடுபட்டிருந்தாலும், சென்னை சூப்பர் கிங்ஸ் இதில் ஆர்வம் காட்டியதில்லை. 16 சீசன்களில் அந்த அணி ஒரேயொரு முறை ராபின் உத்தப்பாவை டிரேட் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து வாங்கியது. இப்போது அதே அணியிலிருந்து சாம்சனையும் ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். தங்கள் அணிகளின் முக்கிய அங்கமாகக் கருதப்பட்ட வீரர்கள் மாறியது ஏன்? இந்த டிரேட் யாருக்கு பெரிய அளவில் லாபகரமாக அமைந்திருக்கிறது? இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சாதகமாக அமைந்திருக்கும் விஷயங்கள் என்ன? பட மூலாதாரம், Getty Images இரு அணிகளின் முக்கிய அங்கமாக இருந்த வீரர்கள் ஜடேஜா, சாம்சன் இருவருமே தங்கள் அணிகளில் நெடுங்காலம் முக்கிய வீரர்களாக இருந்தவர்கள். 2012ம் ஆண்டு முதல் முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்த ஜடேஜா, 12 சீசன்கள் அந்த அணிக்காக ஆடியிருக்கிறார். ஐபிஎல், சாம்பியன்ஸ் லீக் என 200 போட்டிகளில் சூப்பர் கிங்ஸுக்காக ஆடியிருக்கிறார் அவர். இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ தரவுகள்படி அந்த அணிக்காக அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் அவர் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். மேலும், அந்த அணியோடு மூன்று முறை (2018, 2021, 2023) ஐபிஎல் பட்டமும் வென்றிருக்கிறார் அவர். அதேசமயம் சஞ்சு சாம்சன் 11 ஆண்டுகள் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடியிருக்கிறார். 155 போட்டிகளில் அந்த அணிக்காக விளையாடிய அவர், இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ தரவுகள்படி சுமார் 32 என்ற சராசரியில் 4219 ரன்கள் (அனைத்து போட்டிகளிலும்) எடுத்திருக்கிறார். அந்த அணிக்காக அதிக ரன்கள் எடுத்திருப்பவர் அவர்தான். மேலும், 2021ம் ஆண்டு முதல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டுவந்த சாம்சன், 2022 சீசனில் அந்த அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார். 2024ல் அவர் தலைமையில் அந்த அணி மூன்றாவது இடம் பிடித்தது. இப்படி அந்த அணிகளின் பெரிய அங்கமாக இருந்த வீரர்களை இரு அணிகளும் டிரேட் செய்ய முன்வந்தது பலருக்கும் ஆச்சர்யமளிப்பதாக உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் சொன்ன காரணம் என்ன? இந்த டிரேட் உறுதியான பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சமூக வலைதளப் பக்கத்தில், அந்த அணியின் நிர்வாக இயக்குநர் காசி விஸ்வநாதன் பேசிய வீடியோ வெளியிட்டிருந்தனர். அதில் இது மிகவும் கடினமான முடிவாக இருந்ததாகக் கூறிய அவர், தரமான இந்திய டாப் ஆர்டர் பேட்டர்களை மினி ஏலத்தில் எடுப்பது கடினம் என்பதால் இந்த முடிவை எடுத்ததாகவும் தெரிவித்தார். "ஒரு டாப் ஆர்டர் இந்திய பேட்டரின் தேவையை அணி உணர்ந்தது. ஏலத்தில் அதிக இந்திய பேட்டர்கள் இருக்கமாட்டார்கள் என்பதால் இந்த 'டிரேட் விண்டோவில்' ஒருவரை கொண்டுவருவது என்று முடிவு செய்தோம். சிஎஸ்கேவின் வெற்றிப் பயணத்தில் முக்கிய அங்கமாக இருந்த ஜடேஜாவை விடுவது எளிதான முடிவாக இருக்கவில்லை. சிஎஸ்கே நிர்வாகம் எடுத்த முடிவுகளிலேயே இதுதான் கடினமானது என்றுகூட சொல்லலாம். இந்த சமயத்தில் அணியின் எதிர்கால மாற்றத்தை (transition) கருத்தில் கொண்டு இந்த கடினமான முடிவை எடுத்திருக்கிறோம். ஜடேஜாவோடு கலந்துபேசி சுமுகமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டது" என்று அந்த வீடியோவில் பேசியிருந்தார் காசி விஸ்வநாதன். அதுமட்டுமல்லாமல், அணியின் பல வீரர்கள் தங்கள் கரியரின் கடைசி கட்டத்தில் இருப்பதால், எதிர்காலத்துக்கான ஓர் அணியைக் கட்டமைக்கும் நோக்கோடு இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். அதுபற்றிப் பேசிய அவர், "தன் 'வைட் பால்' கரியரின் கடைசி கட்டத்தில் இருப்பதால் ஜடேஜாவும் மாற்றம் தரும் வேறு வாய்ப்புகளுக்குத் தயாராகத்தான் இருந்தார். சாம் கரணும் எங்களுக்கு சீரான செயல்பாட்டைக் கொடுத்திருக்கிறார். நான் முன்பே சொன்னதுபோல் இவர்கள் இருவரையும் விடுவது மிகவும் கடினமான முடிவுகளுள் ஒன்று. அணியின் பல வீரர்கள் தங்கள் கரியரின் கடைசி கட்டத்தில் இருப்பதால், எதிர்காலத்துக்கான ஒரு அணியை அடுத்த ஒருசில ஆண்டுகளில் கட்டமைப்பது மிகவும் முக்கியம்." என்றார். இந்நிலையில், சாம்சனை எதிர்காலத்துக்கான ஒரு வீரர் என அவர் குறிப்பிட்டார். "சஞ்சு சாம்சன் சுமார் 4500 ரன்களுக்கு மேல் எடுத்திருக்கும் ஒரு அனுபவ ஐபிஎல் பேட்டர். அவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு கேப்டனாகவும் செயல்பட்டிருக்கிறார். அவருக்கு கிட்டத்தட்ட 30 வயது தான் (31 வயது) ஆகிறது. அதனால் எதிர்காலத்துக்கு இது நல்ல முடிவாக இருக்கும் என்று நாங்கள் கருதினோம்" என்று சாம்சனை டிரேட் செய்ததற்கான காரணத்தை அவர் தெரிவித்தார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, தோனி, ரெய்னா தவிர்த்து சூப்பர் கிங்ஸுக்காக 200 போட்டிகள் ஆடிய ஒரே வீரர் ஜடேஜா தான் ராஜஸ்தான் ராயல்ஸ் & ஜடேஜா சொன்னது என்ன? இந்த டிரேட் பற்றிப் பேசிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கிரிக்கெட் இயக்குநர் குமார் சங்கக்காரா, "ஜடேஜா மீண்டும் அணிக்குத் திரும்புவது சிறப்பான தருணம். அவருக்கு இந்த அணியை, ரசிகர்களை நன்கு தெரியும். கடந்த சில ஆண்டுகளில் அனைத்து ஏரியாவிலும் பங்களிக்கக்கூடிய ஒரு சிறந்த வீரராக அவர் உருவெடுத்திருக்கிறார். அவருடைய அனுபவம், அமைதியான தன்மை, போட்டித்தன்மை ஆகியவை ஒரு நல்ல எதிர்காலத்தை நாங்கள் கட்டமைக்க உதவும்" என்று கூறினார். சாம் கரண், ஜடேஜா இருவரும் தங்களுக்கு பல பரிமாணங்களில் உதவுவதாக அவர் தெரிவித்தார். "சாம் கரண் கொஞ்சம் வேறு மாதிரியான வீரர் என்றாலும், அவரும் முக்கியமான சில பரிமாணங்கள் கொண்டுவருகிறார். அவர் பயமறியாத வீரர். எளிதில் தன்னை தகவமைத்துக்கொள்பவர். நெருக்கடியான சூழ்நிலைகளை சமாளிக்கக்கூடியவர். பேட்டிங், பௌலிங் இரண்டிலும் பங்களிக்கக்கூடியவர்" என்றும் அவர் கூறினார். 2008 மற்றும் 2009 சீசன்களில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய ஜடேஜா, முதல் ஐபிஎல் சீசனில் அந்த அணியோடு சாம்பியன் பட்டமும் வென்றார். அந்த அணியோடு மீண்டும் இணைவது பற்றிப் பேசிய ஜடேஜா, "எனக்கு முதல் மேடையும், முதல் வெற்றிச் சுவையையும் கொடுத்த அணி ராஜஸ்தான் ராயல்ஸ். இங்கு மீண்டும் வருவது மகிழ்ச்சியளிக்கிறது. இது எனக்கு ஒரு அணி மட்டுமல்ல. இது என் வீடு. இங்குதான் என் முதல் ஐபிஎல் கோப்பையை வென்றேன். இப்போது இருக்கும் வீரர்களோடு இணைந்து இன்னும் நிறைய கோப்பைகள் வெல்ல ஆசைப்படுகிறேன்" என்றார். இந்த டிரேட் மூலம் யாருக்கு வெற்றி? இரண்டு அணிகளுமே பெரிய வீரர்களை டிரேட் செய்திருந்தாலும், இதனால் யாருக்கு அதிக லாபம் என்ற விவாதங்களும் எழவே செய்திருக்கின்றன. இதுபற்றிப் பேசிய தமிழ்நாடு ஆண்கள் அண்டர் 19 அணியின் தலைமைப் பயிற்சியாளரும் முன்னாள் சிஎஸ்கே வீரருமான யோ மஹேஷ், சூப்பர் கிங்ஸுக்கு சற்று கூடுதல் லாபம் என்று தெரிவித்தார். "இந்த டிரேடைப் பொறுத்தவரை இரண்டு அணிகளுக்குமே வெற்றி தான். இரு அணிகளுமே அவர்களுக்கு இருந்த வெற்றிடத்தை நிரப்பியிருக்கிறார்கள். ஏனெனில், சாம்சன் பல கட்டங்களை நிரப்புகிறார். அவர் ஒரு நீண்ட காலத்துக்கான வீரர், ஒரு நல்ல டாப் ஆர்டர் பேட்டர், சிறந்த கீப்பர், அதுமட்டுமல்லாமல் கேப்டன்ஸி அனுபவம் கொண்ட வீரரும் கூட. சூப்பர் கிங்ஸுக்கு தேவையாக இருந்த பல வெற்றிடங்களை அவர் நிரப்புகிறார்" என்று கூறினார் யோ மஹேஷ். நீண்ட நாள்களாக ஒரு தரமான கீப்பரை சூப்பர் கிங்ஸால் வாங்க முடியாமல் இருந்த நிலையில், இந்த டிரேட் அவர்களுக்கு சாதமாக அமைந்திருப்பதாகக் கூறினார் அவர். மேலும், இவ்விரு வீரர்களின் வயதைக் கணக்கில் கொள்ளும்போது, சூப்பர் கிங்ஸுக்கு இந்த ஒப்பந்தம் சற்று கூடுதல் சாதகமாக அமைந்திருப்பதாக அவர் கூறினார். சாம்சனுக்கு 31 வயதாகும் நிலையில், ரவீந்திர ஜடேஜா அடுத்த மாதம் 37 வயதில் அடியெடுத்து வைப்பார். "சாம்சன் - சூப்பர் கிங்ஸ் எதிர்காலத்துக்கான அடித்தளம்" சாம்சனை மையமாக வைத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அடுத்த 5 ஆண்டுகளுக்கான ஒரு அணியைக் கட்டமைக்க நல்ல வாய்ப்பு கிடைத்திருப்பதாகக் கூறுகிறார் யோ மகேஷ். "சாம்சன் ஒரு சிறந்த வீரர் என்பதைத் தாண்டி, அவர் ஒரு பெரிய 'பிராண்ட்'. அவருக்கு நல்ல பெயரும் மதிப்பும் இருக்கிறது. மார்க்கெட்டிங் ரீதியாகவும், வணிக ரீதியாகவும் அது சூப்பர் கிங்ஸுக்கு பெரிய சாதகம். அதுமட்டுமல்லாமல் சாம்சன் தமிழ் பேசக்கூடியவர். ரஜினிகாந்த் ரசிகர் வேறு. இதெல்லாம் நம் ரசிகர்களுக்குப் பிடித்துப்போகும். சாம்சனை நம்முள் ஒருவனாக அவர்கள் பார்க்கத் தொடங்குவார்கள். அது ருதுராஜ் கெய்க்வாடுக்கு நடக்கவில்லை" என்றார் அவர். அதுமட்டுமல்லாமல் சாம்சனை உடனடியாக கேப்டனாக்குவது நல்லது என்றும் அவர் கருதுகிறார். "18 கோடி ரூபாய் கொடுத்து ஒரு பெரிய வீரரை வாங்கிவிட்டு, சிஎஸ்கே தாமதம் செய்யக்கூடாது. அவரை உடனடியாக கேப்டனாக்கவேண்டும். ருதுராஜ் போன்று அவருக்கு அந்த ரோலில் செட் ஆக அவகாசம் எடுத்துக்கொள்ளாது. அவர் ஏற்கெனவே ஒரு அணியை பல ஆண்டுகளாக வழிநடத்தியிருக்கிறார். சொல்லப்போனால் அவர் தலைமையில் தான் ராஜஸ்தான் ராயல்ஸ் ஒரு சீரான முன்னேற்றத்தைக் கண்டிருந்தது. அதனால், அவர் எளிதாக அந்த இடத்தை நிரப்பிவிடுவார்" என்கிறார் யோ மகேஷ். சாம்சனை கேப்டனாக்கும் முடிவு ருதுராஜ் கெய்க்வாட் மீதான நெருக்கடியையும் குறைக்கும் என்கிறார் அவர். 2022, 2023 சீசன்களில் ஒரு பேட்டராக அவர் எப்படி சோபித்தாரோ, அதே மாதிரியான செயல்பாட்டை கேப்டன் பதவி இல்லாதபோது அவரால் நெருக்கடியின்றி கொடுக்கமுடியும் என்பது அவரது வாதமாக இருக்கிறது. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சூப்பர் கிங்ஸ் அணியின் கீப்பராக யார் செயல்படுவார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது கீப்பர் யார்? தோனியா, சாம்சனா? இந்திய அணியின் விக்கெட் கீப்பராக செயல்பட்டுவரும் சாம்சன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்திருப்பதன்மூலம், கீப்பராக யார் செயல்படுவார் என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. ஒருசில வல்லுநர்கள், இது தோனி 'இம்பேக்ட்' வீரராக விளையாடுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கும் என்றார்கள். அவர் முழங்கால் பிரச்னையால் தொடர்ந்து அவதிப்படுவதால் இப்படியொரு வாதத்தை சிலர் முன்வைத்தனர். அதேசமயம் தோனியின் சிறப்பே அணி ஃபீல்டிங் செய்யும்போது அவர் கொடுக்கும் பங்களிப்புதான் என்பதால், அவர் ஃபீல்டிங்கில் இருக்கவேண்டும் என்றும் சிலர் கூறுகின்றனர். இந்த விஷயம் பற்றிப் பேசிய யோ மகேஷ், "சொல்லப்போனால் தோனி அறிவிக்கப்படாத ஒரு 'இம்பேக்ட்' வீரராகத்தான் ஆடிக்கொண்டிருக்கிறார். கடைசி 10 பந்துகள் இருக்கும்போதுதான் ஆடவருகிறார். அவருடைய பெரிய பங்களிப்பு என்பது ஃபீல்டிங்கில் இருக்கும்போதுதான். அதேசமயம் வேறு கேப்டன்கள் இருக்கும்போது அவரும் மெல்ல தலையீட்டைக் குறைத்துக்கொண்டிருக்கிறார். இப்போதும் அதுதான் நடக்கும் என்று நம்புகிறேன். ஒருசில போட்டிகள் சாம்சன் செட் ஆகும் வரை அவர் கீப்பிங் செய்துவிட்டு, மெல்ல அவர் அந்த பொறுப்பில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்வார் என்று எதிர்பார்க்கலாம்" என்றார். சாம்சன் தற்போது இந்திய அணியின் விக்கெட் கீப்பராக செயல்பட்டுவருவதால் அவர் நிச்சயம் கீப்பிங் செய்யவே விரும்புவார் என்று குறிப்பிட்டார் யோ மகேஷ். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, 2023 ஐபிஎல் இறுதிப் போட்டியில் கடைசி 2 பந்துகளில் 10 ரன்கள் அடித்து சிஎஸ்கேவை வெற்றி பெற வைத்தார் ஜடேஜா ஜடேஜா: சென்னையின் இழப்பும், ராயல்ஸின் லாபமும் ரவீந்திர ஜடேஜா சென்னையில் இருந்து சென்றிருப்பது உணர்வுபூர்வமாக ரசிகர்களுக்கு மிகவும் கடினமாக இருக்கும் என்று தெரிவித்தார் யோ மகேஷ். "இத்தனை ஆண்டுகள் ரசிகர்கள் அவரை தங்களுள் ஒருவராகப் பார்த்திருக்கிறார்கள். அவரும் அதை திரும்ப வெளிப்படுத்தியிருக்கிறார். இதை ஒரு வீடு என்றே கருதியிருக்கிறார். அவரும், அஷ்வினும் ஒன்றாகப் பந்துவீசி எதிரணிகளை தடுமாற வைத்த தருணங்கள், ஜடேஜா பாய்ந்து பிடித்த கேட்ச்கள், 2023 ஐபிஎல் இறுதிப் போட்டியின் கடைசி 2 பந்துகளில் பௌண்டரிகள் அடித்து அவர் வெற்றி பெறவைத்த அந்தத் தருணம்... இப்படி பல்வேறு தருணங்கள் சென்னை ரசிகர்களுக்கு அவரை மிகவும் நெருக்கமாகக் கொண்டுவந்து வைத்துள்ளன" என்றார் அவர். கடந்த 2 சீசன்களாக ஜடேஜாவின் பந்துவீச்சில் ஏற்பட்ட சிறு சரிவு அணி நிர்வாகம் இந்த முடிவை எடுப்பதற்கு ஒரு காரணமாக இருந்திருக்கலாம் என்றும் கூட அவர் கருதுகிறார். கடந்த சீசன் 32.40 என்ற சராசரியில் 10 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்த ஜடேஜா, 2024 சீசனில் 46.13 என்ற சராசரியில் 8 விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்தியிருந்தார். அதேசமயம், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அவரால் சிறப்பாக செயல்படமுடியும் என்று சொல்லும் யோ மகேஷ், அதற்கான காரணத்தையும் கூறுகிறார். "கடந்த 2 ஆண்டுகளாக சேப்பாக்க ஆடுகளம் முன்பு போல் சுழலுக்கு ஒத்துழைக்கவில்லை. அது ஜடேஜாவின் செயல்பாட்டில் பிரதிபலித்தது. ஆனால், ராஜஸ்தான் ராயல்ஸின் ஹோம் கிரவுண்டான சவாய் மான்சிங் ஸ்டேடியம் அவருக்கு உகந்ததாக இருக்கும். அது பெரிய மைதானம். பந்து கொஞ்சம் மெதுவாகவும், கீழ் தங்கியும் செல்லும். அங்கு சராசரி ஸ்கோரே 160 - 170 போலத்தான் இருக்கும். அங்கு ஜடேஜாவால் பெரிய தாக்கம் ஏற்படுத்த முடியும்" என்று யோ மகேஷ் கூறினார். கடந்த சீசன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு சுழற்பந்துவீச்சே பிரதான பிரச்னையாக இருந்ததாகவும், அதை ஜடேஜா மூலம் அவர்கள் ஓரளவு தீர்த்திருப்பதாகவும் யோ மகேஷ் நம்புகிறார். அதுமட்டுமல்லாமல், சமீப ஆண்டுகளாக ஆல்ரவுண்டர்கள் இல்லாமல் அந்த அணி பல போட்டிகளில் 5 பிரதான பௌலர்களை மட்டுமே வைத்து களமிறங்கும் சூழ்நிலை பல போட்டிகளில் ஏற்பட்டிருக்கிறது. ஜடேஜா, சாம் கரண் ஆகியோரின் வருகை மூலம் அந்த பிரச்னைக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது என்கிறார் அவர். இதனால் தான் இந்த டிரேட் இரண்டு அணிகளுக்குமே வெற்றிகரமானது என்று குறிப்பிடுகிறார் யோ மகேஷ். எதிர்காலத்தை கணக்கில் கொள்ளும்போது சூப்பர் கிங்ஸுக்கு கூடுதல் லாபம் என்று சொல்லும் அவர், சாம்சனை ராயல்ஸ் இழந்ததை விட, ஜடேஜாவை சூப்பர் கிங்ஸ் இழந்தது உணர்வுபூர்வமாக பெரிய இழப்பு என்றும் கூறினார். -இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c8ey35nwwlpo

நவம்பர் 2025 - இன்றைய வானிலை

2 months 3 weeks ago
மட்டக்களப்பில் கனமழை காரணமாக தாழ்நிலப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை 15 Nov, 2025 | 02:46 PM மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக தாழ்நிலப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (15) தொடக்கம் தொடர்ந்து கடுமையான மழைபெய்துவருகின்றது. இதன்காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ள நிலைமை ஏற்படுவதற்கான நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. பேய்துவரும் கடும் மழை காரணமாக மட்டக்களப்பு நகரின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள தாழ் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. தொடர்ச்சியாக மழைபெய்யுமானால் சில பகுதிகளுக்கான போக்குவரத்துகளும் பாதிக்கப்படும் நிலைமைகள் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதேநேரம், கடந்த 11.11 2025 உருவான காற்றுச் சுழற்சி நகர்வதன் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கன மழைக்கான வாய்ப்புகள் உள்ளதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. அதேவேளை, இம்மழை எதிர்வரும் 20.11.2025 வரை தொடரும் வாய்ப்புள்ளது. கனமழைக்கு வாய்ப்புள்ளதனால் தாழ்நிலப் பகுதிகளில் உள்ள மக்கள் அவதானமாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/230421
Checked
Wed, 02/11/2026 - 08:36
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed