2 months 3 weeks ago
நன்றாக இருக்கின்றது . .........தொடரட்டும் தொழில்கள் ........! 🙂
2 months 3 weeks ago
எழுதி வைத்துவிட்டே நிகழ்வுக்கு வந்திருப்பாரோ?
2 months 3 weeks ago
அங்கு ஓரிருவர் கதைத்தால் உடனே கட்சி அரசியலாக்கி இந்த வார கட்டுரைக்கு முதலே எழுதி வைத்திருந்தாரோ? நிலாந்தன்.எடிட் பண்ணும் போது கொஞ்சம் பிழை வருகிறது..பொறுத்துக் கொள்ளுங்கள் ஈழப்பிரியன் அய்யா.மற்றும் ஏராளன். இவரை பற்றி இங்கு ஏதாவது எழுதினால் நமது முகப் புத்தக பக்கம் பெரிய பந்தி, பந்தியாக எழுதி போட்டு விட்டு இருந்து விடுவார்.(அதுவும் இன்பொக்சில்).கடந்த கால அரசியல் , நமக்கே கொஞ்சம் வெறுப்பை தருவது போல் எழுதி போட்டு விட்டுவார்..இப்போ கொஞ்சக் காலத்திற்கு முன் அப்படி ஒன்று வந்து கிடந்தது நான் அதனை நீக்கி விட்டேன்..கமலகாசன் ஒரு திரைப்படததில் பத்திரிகை நிருபராக வருவாரே.இவர்களுக்கு இருக்க கூடிய மரியாதை அவ்வளவு தான்.
2 months 3 weeks ago
பட மூலாதாரம், Reuters படக்குறிப்பு, அணுசக்தி மூலம் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலின் கோப்புப் படம் கட்டுரை தகவல் ஜேக் க்வோன் சியோல் கேவின் பட்லர் சிங்கப்பூர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்காவுடன் இணைந்து அணுசக்தி மூலம் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களை கட்டும் ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளதாகத் தென் கொரிய அரசு அறிவித்துள்ளது. இந்த "தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு" அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளதாகவும், எரிபொருள் ஆதாரங்களில் ஒத்துழைக்க ஒப்புக்கொண்டதாகவும் வெள்ளை மாளிகை வியாழக்கிழமை வெளியிட்ட தகவல் அறிக்கை தெரிவிக்கிறது. இந்த ஒப்பந்தம் தென் கொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவுகளில் ஒரு முக்கியமான படியைக் குறிக்கிறது. அணு ஆயுதம் தாங்கிய வட கொரியா மற்றும் மேற்கில் விரிவாக்கக் கொள்கையைக் கொண்ட சீனாவுடனான தென் கொரிய எல்லையில் பதற்றங்கள் அதிகரித்து வரும் ஒரு காலகட்டத்தில் இது வந்துள்ளது. இந்த ஒப்பந்தத்தைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை இங்கே. ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ளது என்ன? அமெரிக்காவிற்கும் தென் கொரியாவிற்கும் இடையிலான இந்த ஒப்பந்தம், இரு நாடுகளி சதவீதமாக குறைக்க ஒரு பரந்த வர்த்தக ஒப்பந்தத்தை எட்டியதைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த ஆண்டின் தொடக்கத்தில் தென் கொரியா மீது 25% வரியை விதித்திருந்தார். தென் கொரியா அமெரிக்காவில் 350 பில்லியன் டாலர் (265 பில்லியன் பவுண்ட்) முதலீடு செய்வதாகக் கூறிய பிறகு, தென் கொரிய அதிபர் லீ ஜே மியுங்கால் பேச்சுவார்த்தை மூலம் அதை 15% ஆக குறைக்க முடிந்தது. இதில் 200 பில்லியன் டாலர் பண முதலீடும் கட்டுமானத்தில் 150 பில்லியன் டாலர் முதலீடும் அடங்கும். வியாழக்கிழமை வெளியிடப்பட்ட வெள்ளை மாளிகை அறிக்கையில், "தென் கொரியா அணுசக்தி மூலம் இயங்கும் தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல்களைக் கட்டுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. [மற்றும்] எரிபொருள் ஆதாரங்களுக்கான வழிகள் உட்பட இந்தத் திட்டத்திற்கான தேவைகளை மேம்படுத்த நெருக்கமாகச் செயல்படும்." என்று அமெரிக்கா கூறியுள்ளது. டிரம்ப் தனது சமூக ஊடக தளமான 'ட்ரூத் சோஷியல்'-இல் வெளியிட்ட ஒரு முந்தைய பதிவில், இந்த கப்பல்கள் தென் கொரிய நிறுவனமான ஹன்வா (Hanwha), பிலடெல்பியாவில் நடத்தும் கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்படும் என்று கூறியிருந்தார். தற்போது அணுசக்தி மூலம் இயங்கும் மூலோபாய நீர்மூழ்கிக் கப்பல்களை வைத்திருக்கும் நாடுகள் ஆறு மட்டுமே. அவை அமெரிக்கா, சீனா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் இந்தியா. தென் கொரியாவிடம் ஏற்கனவே சுமார் 20 நீர்மூழ்கிக் கப்பல்கள் உள்ளன. ஆனால் அவை அனைத்தும் டீசல் மூலம் இயக்கப்படுவதால், அடிக்கடி கடலின் மேற்பரப்புக்கு வர வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள் அதிக தொலைவு மற்றும் வேகத்தில் செயல்பட முடியும். "அவர்களிடம் இப்போது இருக்கும் பழைய பாணியிலான, வேகமற்ற டீசல் மூலம் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களுக்குப் பதிலாக, அணுசக்தி மூலம் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலைக் கட்ட ஒப்புதல் அளித்துள்ளேன்," என்று டிரம்ப் 'ட்ரூத் சோஷியல்'-இல் எழுதினார். தென் கொரியா சிவிலியன் அணுசக்தித் துறையில் ஒரு முக்கியமான நாடாகத் திகழ்கிறது. இது 1970களில் அணு ஆயுதத் திட்டத்தைக் கொண்டிருந்தது, ஆனால் அமெரிக்க அழுத்தத்திற்குப் பிறகு அதைக் கைவிட்டது. தென் கொரியா இறக்குமதியை முழுமையாகச் சார்ந்திருப்பதால், அதன் யுரேனியத்தைச் செறிவூட்டும் அல்லது மறுசுழற்சி செய்யும் திறன் அமெரிக்காவால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தென் கொரியா அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை விரும்புவது ஏன்? வட கொரியா சமீபத்தில் தனது சொந்த அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் திட்டத்தைத் தொடர்வதாக அறிவித்ததற்கு பதிலடியாக, இந்த சமீபத்திய கப்பல் திட்டம் வட கொரியாவை எதிர்த்துப் போராடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. கடந்த மாதம் நடந்த ஆசிய-பசிபிக் பொருளாதாரக் கூட்டமைப்பு (APEC) உச்சி மாநாட்டில் அதிபர் லீ, தென் கொரியாவிற்கு இந்த அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள் அந்த குறிப்பிட்ட நோக்கத்திற்காகத் தேவை என்று டிரம்பிடம் கூறியிருந்தார். தென் கொரிய பாதுகாப்பு அமைச்சரான ஆன் கியு-பேக் கடந்த வாரம் அளித்த தொலைக்காட்சி நேர்காணலில், அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள் தென் கொரியாவுக்கு ஒரு "பெருமைக்குரிய சாதனை" என்றும், வட கொரியாவுக்கு எதிராக நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்துவதில் ஒரு பெரிய பாய்ச்சல் என்றும் கூறினார். அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களின் மறைந்து செயல்படும் தன்மை (stealth) வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன்னை "இரவில் விழித்திருக்க வைக்கும்" என்றும் அவர் மேலும் கூறினார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த மாதம் தென் கொரியாவில் அந்நாட்டு அதிபரை சந்தித்தார். வட கொரியாவிடம் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள் உள்ளனவா? வட கொரியாவும் ஒரு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் திட்டத்தைத் தொடர்கிறது என்றும் அது ரஷ்யாவின் உதவியுடன் இருக்கலாம் என்றும் தென் கொரிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தான் தயாரித்து வருவதாகக் கூறும் ஒரு அணுசக்தி மூலம் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல் கட்டும் தளத்தை வடகொரிய அதிபர் கிம் பார்வையிடுவதைக் காட்டும் வகையிலான படங்களை மார்ச் 2025 இல் வடகொரியா வெளியிட்டது. வடகொரியா அடுத்த சில ஆண்டுகளில் இந்த நீர்மூழ்கிக் கப்பலைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வட கொரியா தனது பரந்த அணு ஆயுதத் திட்டத்தின் ஒரு பகுதியாக, தோராயமாக 50 அணு ஆயுதங்களைக் கொண்டிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. தென் கொரியா அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களைப் பெறுவது, கிழக்கு ஆசியாவில் அதிகரித்து வரும் ஆயுதப் போட்டியில் அது தொடர்ந்து முன்னேற உதவும் என்று சேஜோங் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர் ஜோ பீ-யூன் கருத்துத் தெரிவித்தார். "வட கொரியாவின் அணு ஆயுதம் ஒரு உறுதி செய்யப்பட்ட உண்மை" என்று அவர் பிபிசியிடம் கூறினார். "[தென் கொரியா] அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களைப் பெறுவது அதிகரித்து வரும் பதற்றமான போக்கின் ஒரு படி மட்டுமே." கொரிய தீபகற்பத்தில் இது பதற்றத்தை தூண்டுமா? அணுசக்தி மூலம் இயக்கப்படும் நீர்மூழ்கிக் கப்பல்கள் தென் கொரியாவின் பாதுகாப்புக் திறன்களுக்கு எவ்வளவு பங்களிக்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. சில நிபுணர்களின் கூற்றுப்படி, அவை மிகவும் விலை உயர்ந்தவை என்றாலும், கொரிய தீபகற்பத்தில் உள்ள அதிகார சமநிலையை அவை பெரிதாக மாற்றப் போவதில்லை. அசன் கொள்கை ஆய்வுகள் நிறுவனத்தின் (Asan Institute for Policy Studies) ஆராய்ச்சியாளரான யாங் உக், அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களின் முதன்மை நோக்கம், வட கொரியாவின் அணு அச்சுறுத்தலுக்குத் தங்கள் அரசு பதிலளிக்கிறது என தென் கொரிய வாக்காளர்களுக்கு உறுதியளிப்பதே என்று பிபிசியிடம் கூறினார். "வட கொரியாவை எதிர்கொள்ளத் தென் கொரியாவால் அதன் சொந்த அணு ஆயுதங்களை உருவாக்க முடியாது," என்று யாங் கூறினார். "அவர்களால் என்ன செய்ய முடியும்? அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களைக் களமிறக்க முடியும்." இது அணு ஆயுதங்களைத் தக்க வைத்துக் கொள்வதற்கான அவர்களின் நியாயத்தை வலுப்படுத்துவதால் வட கொரியா இந்த மாற்றத்தில் மகிழ்ச்சியடையக்கூடும் என்று யாங் நம்புகிறார், அதாவது வடகொரியா தனது அணு ஆயுதங்களைக் கைவிட வேண்டும் என்று கோருவது மிகவும் கடினமாகிவிடும். இருப்பினும், இந்த புதிய நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தம் மூலம் தென் கொரியா பெறும் உத்தி ரீதியான நன்மையை ஜோ வலியுறுத்தினார், இது ஒரு "பெரிய மாற்றம்" என்று விவரித்தார், இதன் பொருள் "தென் கொரியா இப்போது ஒரு பிராந்திய சக்தி." என்றார். "ஒரு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலின் சிறந்த அம்சம் அதன் வேகம்" என்று அவர் கூறினார். "அது இப்போது வேகமாகவும் தூரமாகவும் செல்ல முடியும், மேலும் தென் கொரியா அதிக நாடுகளுடன் இணைந்து செயல்பட முடியும்." அமெரிக்காவிற்கு என்ன பலன்? அமெரிக்காவைப் பொறுத்தவரை, தென் கொரியாவின் அணுசக்தி மூலம் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல் திட்டத்திற்கான ஆதரவு வட கொரியா மற்றும் சீனா ஆகிய இரண்டின் மீதும் அழுத்தம் கொடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. "பாதுகாப்பிற்கான செலவினச் சுமையை டிரம்ப் தென் கொரியாவின் முதுகில் வைத்துள்ளார்," என்று யாங் விளக்கினார். "தென் கொரியா தனது பாதுகாப்புச் செலவினத்தை மிகவும் அதிகரிக்கும். அவர்கள் சீனா மற்றும் வட கொரியா மீது அழுத்தம் கொடுப்பதில் அமெரிக்காவின் பினாமியாக செயல்படுவார்கள்." பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, தென் கொரியாவில் பிற நாடுகளின் செல்வாக்கை எதிர்கொள்ள டொனால்ட் டிரம்ப் முயன்று வருகிறார் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். தென் கொரியாவில் உத்தி ரீதியாக செல்வாக்கு செலுத்துவதற்காக அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய இரண்டுமே நீண்ட காலமாகப் போட்டியிட்டு வருகின்றன, இதனால் தென் கொரியா ஒரு புவிசார் அரசியல் நெருக்கடியான சூழ்நிலையில் செயல்பட வேண்டியுள்ளது. சமீப காலமாக, சீனா தென் கொரியாவின் கடல் எல்லைக்கு அருகில் தனது கடற்படை நடவடிக்கைகளை அதிகரித்து வருகிறது. இது தென் சீனக் கடலில் காணப்படுவதைப் போன்ற ஒரு நடவடிக்கைதான். தென் கொரியாவின் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தம் குறித்து சீனா "மிகவும் கோபமாக" இருக்க வேண்டும் என்று யாங் கூறினார். இந்த ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தென் கொரியாவிற்கான சீனத் தூதர் டாய் பிங், "தென் கொரியா அனைத்து தரப்பினரின் கவலைகளையும் கருத்தில் கொண்டு, இந்தப் பிரச்னையை விவேகத்துடன் கையாளும்" என்று நம்புவதாகக் கூறினார். டாய் மேலும் கூறுகையில், சீனா இந்த விஷயத்தில் ராஜதந்திர வழிகளை கடைபிடித்து வருவதாகவும், "கொரிய தீபகற்பத்திலும் பிராந்தியத்திலும் உள்ள (பாதுகாப்பு) நிலைமை இன்னும் சிக்கலானதாக உள்ளது." என்றும் கூறினார். அடுத்தது என்ன? இந்த நீர்மூழ்கிக் கப்பல்கள் பிலடெல்பியாவில் கட்டப்படும் என்றும், அமெரிக்காவிற்கு வேலைகளைக் கொண்டு வரும் என்றும் அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். ஆனாலும், மிகக் குறுகிய காலக்கெடுவுக்குள் கட்டிவிடமுடியும் என்பதால் தென் கொரியாவிலேயே கட்டப்பட வேண்டும் என்று அந்நாட்டு அதிகாரிகள் வலியுறுத்தினர். கப்பல் கட்டும் தளத்தை வைத்திருக்கும் ஹன்வா இதுவரை இந்த விஷயத்தில் கருத்து தெரிவிக்கவில்லை. அறிக்கைகளின்படி, தென் கொரியப் பிரதமர் கிம் மின்-சியோக் ஒரு நாடாளுமன்ற விசாரணையின் போது, பிலடெல்பியாவில் உள்ள தென் கொரியாவிற்குச் சொந்தமான கப்பல் கட்டும் தளத்தில் அத்தகைய கப்பல்களைக் கட்டும் "திறன் இல்லை" என்று கூறியிருந்தார். ஆனால் இப்போது ஒரு ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதால், அடுத்த கட்டம் இரு நாடுகளுக்கும் இடையேயான அணுசக்தி ஒப்பந்தத்தை சரிசெய்வதுதான். இது அமெரிக்கா அணு எரிபொருளை வழங்குவதற்கும், அதன் ராணுவ பயன்பாட்டிற்கு கட்டுப்பாடுகளை விதிக்கவும் அனுமதிக்கும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c4gp1w81p8go
2 months 3 weeks ago
ஆம். படத்தின் நடுவில் இருப்பவர்தான் நிலாந்தன்.
2 months 3 weeks ago
16 Nov, 2025 | 05:11 PM வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கிடைத்து வருகின்ற கனமழை எதிர்வரும் 3 நாட்களுக்கு நீடிக்கும் வாய்ப்புள்ளது என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல் துறையின் தலைவரும், வானிலை ஆய்வாளருமான பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். நிலவும் வானிலை குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் 19ஆம் தேதி வரை தொடர்ச்சியாக மழை கிடைப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன. யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஒரு மணி வரையான காலப் பகுதியில் பல பகுதிகளுக்கும் சராசரியாக கடந்த 36 மணியளங்களில் 125 மில்லி மீட்டருக்கு மேற்பட்ட மழை வீழ்ச்சி கிடைத்துள்ளது. இந்த நிலைமை இன்னமும் மூன்று நாட்களுக்கு நீடிக்கும் என்பதனால் வெள்ள அனர்த்தத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு உள்ளது. அந்த வகையில் யாழ்ப்பாண மாவட்டத்தினுடைய தாழ்நிலப் பகுதிகள், குறிப்பாக யாழ் நகரை அண்மித்த பகுதிகளில் உள்ள மக்கள் தொடர்ச்சியாக மழை கிடைக்கும் என்பதனால் அவதானமாக இருப்பது அவசியமானதாகும். மீண்டும் எதிர்வரும் 23ஆம் திகதியிலிருந்து 28ஆம் தேதி வரையும் வங்காள விரிகுடாவில் புயல் ஒன்று உருவாகுவதற்கான வாய்ப்பு காணப்படுவதால் அக்கால பகுதிகளிலும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் மிகக் கன மழையைப் பெறும். வடகீழ்ப் பருவக்காற்று இன்னமும் உச்சம் பெறவில்லை. பருவ மழைக்கான காலம் இன்னமும் போதுமானதாக உள்ளது. எதிர்பார்க்கும் மழை கிடைக்கும் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/230505
2 months 3 weeks ago
கட்டுரையாளரும் அந்த நிகழ்வில் கலந்துகொண்டவர் அண்ணை!
2 months 3 weeks ago
ஏன் சுவி அவரது டைரியில் கிசுகிசு செய்திகள் எதுவும் இல்லையோ?
2 months 3 weeks ago
அண்ணை, நீங்கள் @நிழலி அண்ணையைச் சொல்லேல தானே?!
2 months 3 weeks ago
வணக்கம் வன்னியரே. எப்படி இருக்கிறீர்கள்? கட்சி மாறியதுடன் ஆளையே காண முடியவில்லையே?
2 months 3 weeks ago
Wow wow Super.
2 months 3 weeks ago
இன்னமும் சளைக்காமல், திரியை தொடர்வதற்கு அசாத்திய பொறுமை வேண்டும்.. சுவியின் பொறுமை கண்டு வியக்கேன்.. வாழ்த்துகள்..!
2 months 3 weeks ago
அங்கு ஓரிருவர் கதைத்தால் உடனே கட்சி அரசியலாக்கி இந்த வார கட்டுரைக்கு முதலே எழுதி வைத்திருந்தாரோ? நிலாந்தன்.
2 months 3 weeks ago
இருக்கு அண்ணை, மேற்கோளிட்ட பெட்டியை தட்டுங்கோ திறக்கும்!
2 months 3 weeks ago
கோடி ரூபாயில் யாழில் உருவாகப்பட்ட சொகுசு கப்பல்! வெள்ளோட்டம் குறிகட்டுவானில் | Luxury tourist Ship contact ship Sail lanka 0773874540 - Piradeep 0774023015 - U.Jenushan
2 months 3 weeks ago
அப்படி எதுவும் தெரியவில்லையே சரி சரி இப்போது கண்டு கொண்டேன்.
2 months 3 weeks ago
Published By: Vishnu 16 Nov, 2025 | 07:36 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) தாஜுதீன் கொலை சாட்சியங்களை மறைத்தவர் தற்போது ஜனாதிபதியின் ஆலோசகராக இருக்கிறார். அதனால் இந்த அரசாங்கம் ஒருபோதும் தாஜுதீனின் கொலையாளிகளை கைது செய்யப்போவதில்லை. முடிந்தால் கொலை செய்தவர்களை கண்டுபிடிக்குமாறு சவால்விடுகிறேன் என முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (15) இடம்பெற்ற 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அலுவலகங்கள், உயர்நீதிமன்ற நீதிபதிகள், பாராளுமன்றம், ஆணைக்குழுக்களுக்கான நிதி ஒதுக்கீட்டு குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், தாஜுதீன் கொலை செய்யப்பட்ட தினத்தில் அலரிமாளிகையில் இருந்து 60 தொலைபேசி அழைப்புகள் நாரஹேன்பிட்ட பொலிஸ் பொறுப்பதிகாரி மற்றும் பொலிஸ்மா அதிபர் அநுர சேனாநாயக்கவுக்கு சென்றுள்ளன. அந்த தொலைபேசி அழைப்புகள் அலரிமாளிகையின் எந்த பிரிவில் என்பதை தேடிக்கொள்ள முடியாமல் போனது. ஆனால் அதனை தற்போது ஜனாதிபதியின் டிஜிட்டல் ஆலாேசகராக இருப்பவரின் நிறுவனத்தினால் அதனை செய்ய முடியுமாகி இருந்தது. ஆனால் அதனை அவர் செய்யாமல் இழுத்தடித்துக்கொண்டிருந்தார்.ஏனெனில் அவர் அன்று இருந்த ஆட்சியாளர்களின் சிறந்த நண்பனாக இருந்தார். அவ்வாறுதான் தாஜுதீனின் வழக்கு விசாரணைகளை தள்ளிப்போட்டார்கள். தற்போது அவர் ஜனாதிபதியிள் ஆலாேசகராக வந்துள்ளார். அதனாலே அரசாங்கம் தாஜுதீனின் கொலையாளிகளை கைதுசெய்யப்போவதில்லை என தெரிவிக்கிறோம். முடிந்தால், தாஜுதீனை கொலை செய்தவர்களை கண்டுபிடிக்குமாறு சவால்விடுகிறேன். அவர்கள்தான் சாட்சிகளை அழித்தவர்கள். தொலைபேசி அழைப்புகளை மறைத்தார்கள். தற்போது ஜனாதிபதியின் ஆலாேசகராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியின் ஆலோசகராக இருப்பவர்கள் அனைவரும் தொண்டு அடிப்படையில் பணிபுரிகிறார்கள் என அரசாங்கம் தெரிவிக்கிறது. அது உண்மையாக இருக்கும். அவர்களுக்கு சம்பளம் எதுவும் வழங்காமல் இருக்கலாம். ஆனால் அவர்கள் அதற்கு பதிலாக வேறு தேவைகளை நிறைவேற்றிக்கொள்கிறார்கள். நல்லாட்சியியை ஏற்படுத்துவதாக மக்களுக்கு வாக்குறுதியளித்து ஆட்சிக்கு வந்த நீங்கள், தற்போது சந்தர்ப்பவாத அரசியலை செய்கிறீர்கள். வைத்தியர் அனில் ஜயசிங்கவே அன்று கோட்டாபய ராஜபகஷ்வின் முஸ்லிம்களின் சடலங்களை எரிக்கும் குழுவில் இருந்து, அதனை நியாயப்படுத்தி வந்தார். எரிப்பது சரி என தெரிவித்தவர். தற்போது அவர் சுகாதார அமைச்சின் செயலாளராக இருக்கிறார். அமைச்சர் நளிந்தவும் நானும் அதற்கு எதிராக குரல்காடுத்து வந்தோம். அப்படியிருக்கையில், அமைச்சர் நளிந்த நல்லாட்சிக்கு எதிராக செயற்பட்வர்களை வைத்துக்கொண்டு எவ்வாறு தற்போது நல்லாட்சி தொடர்பில் கதைக்கிறார்கள் என எமக்கு புரியாமல் இருக்கிறது. அதேபோன்று சுங்கத்தில் இருந்து எந்த விசாரணைளும் இல்லாமல் விடுவிக்கப்பட்ட கொள்கலன்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள தெரிவுக்குழு அமைக்க சபாநாயகர் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் இணக்கம் தெரிவித்திருந்தார். தற்போது அதுதொடர்பில் சபாநாயகர் எதுவும் கதைப்பதில்லை. தெரிவுக்குழு அமைக்க ஏன் அச்சப்படுகிறீர்கள். இந்த கொள்கல்களை விடுவிக்க உதவிசெய்த சுங்க பணிப்பாளருக்கு 60 வயது தாண்டிய பின்னரும் சேவை நீடிப்பு வழங்கி இருக்கிறார். ஆனால் பிமல் ரத்நாயக்கவை அந்த அமைச்சுப்பதவில் இருந்து நீக்கி இருக்கிறது. அப்படியிருக்கையில் எவ்வாறு நல்லாட்சி அமைக்க முடியும் என கேட்கிறேன் என்றார். https://www.virakesari.lk/article/230517
2 months 3 weeks ago
சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் எழுதிய “சட்டத்தின் ஆட்சி” என்ற நூல் சொல்லும் செய்தி! *** *** *** *மேற்கு - ஐரோப்பிய அரசியல் கோட்பாடுகளை விட, சீன அரசியல் கோட்பாடுகள் மேலெழும் சூழல்... *ஜனநாயகம் - யதார்த்த அரசியல் - என்ற ஏமாற்றை விடவும் சீன ஜனநாயகம் மேல் என்ற உணர்வு... ** *** ****** மேற்கு நாடுகள் எழுதி வைத்த ”ஜனநாயக கோட்பாடு”, ”சட்டத்தின் ஆட்சி” ”அரச இறைமைக் கோட்பாடு என்பற்கு மாறாக கம்யூனிஸ்ட் கொள்கையை பின்பற்றி வரும் சீனா, இன்று உலகத்துக்குப் பெரும் சவலாக மாறியுள்ளது. ”நான் சொல்வதை நீ செய்” என்ற அதிகாரத் தேரணையில் இயங்கும் அமெரிக்காவும் அதன் தோழமை நாடுகளுக்கும், ”ஜனநாயகம்” - ”சட்ட ஆட்சி” என்றால் என்ன என்பதை, சீனா காண்பித்துள்ளது. இப்போது அதனை நூலாக வெளியிடுவதன் ஊடாக, எதிர்காலத்தில் மேற்கு - ஐரோப்பிய நாடுகளின் அரசியல் கோட்பாடுகளுக்குப் பதிலாக சீன அரசியல் கோட்பாடுகளை மாணவர்கள் கற்கும் நிலை தோன்றும் என்பதில் ஐயமில்லை. ஏன் உலகமே அதனை ஏற்கக் கூடிய சாத்தியங்களும் வரலாம். ஏனெனில் -- டொனால்ட் ட்ரம்ப், இஸ்ரேலிய ஜனாதிபதி நெதன்யாகு ஆகியோர் உள்ளிட்ட சில உலகத் தலைவர்களின் அட்டகாசம் - மிரட்டல் போன்ற செயல்கள், சீன அரசியல் கோட்பாட்டுக்கு மாணவர்களை தள்ளக் கூடிய ஏது நிலை தெரிகிறது. நேர்மையான கம்யூனிஸ்ட் கொள்கையை சீனா பின்பற்றவில்லை என்று பலரும் குற்றச்சாட்டலாம். ஆனால் -- அக் குற்றச்சாட்டுகளைக் கடந்து, சீனா இன்று உலக வளர்ச்சியில் பல முன்னேற்றங்களையும், ஒழுங்கு முறையான அரசியல் நடைமுறைகளையும் (Orderly Political Procedures) அறிமுகப்படுத்தி - நியாயப்படுத்தி உலகத்துக்குக் கற்பிதம் செய்துள்ளது எனலாம். இது சிலருக்கு கசப்பாக இருக்கும். ஆனால் அது தான் உண்மை. சீனாவில் கட்சிக்குள் அரசு - அரசுக்குள் கட்சி என்ற தன்மை உண்டு. ஆனால், ஒரு கட்சி ஆட்சி முறைமை (System) தான் சிறந்தது போல் தெரிகிறது. ஏனெனில் --- ஜனநாயம் - மாற்றுக் கருத்து - யதார்த்த அரசியல் - அபிவிருத்தி அரசியல் என்று ஏமாற்றி, ஈழத்தமிழ் இனம் போன்ற தேசிய இனங்களை மேற்கு - ஐரோப்பிய நாடுகள் கைவிடுகின்றன. இலங்கை போன்ற இன ஒடுக்கல் அரசுகளுக்கு ஒத்தூதுகின்றன. அத்துடன் --- புவிசார் அரசியல் என்ற போர்வையில், தமது அரசியல் - பொருளாதார நலன்களுக்கு மாத்திரம் முக்கியத்துவம் கொடுக்கின்றன. இந்தியாவும் இதற்கு விதிவிலக்கல்ல. அதேநேரம் -- சீன ஒடுக்குமுறை இல்லை என்று கூறவும் முடியாது. புவிசார் அரசியல் போட்டியை, சீனா பயன்படுத்தி வருகிறது என்பதையும் மறுக்க இயலாது... ஆனால் -- மேற்கு - ஐரோப்பிய நாடுகளின் ஓரங்கட்டலை விட அல்லது “நான் சொல்வதை நீ செய்” என்ற அதிகாரத் தோரணையை விடவும், சீனாவின் ஒரு கட்சி ஆட்சி முறைமை சிறந்தது என்ற எண்ணம் உருவாகின்றது. அதேநேரம் --- கம்யூனிஸ்ட் கொள்கையுடை பலர் சந்தர்ப்பவாதிகள் என்ற கருத்து உண்டு. குறிப்பாக -- இலங்கையில் ஒழுங்கான கம்யூனிஸ்ட்கள் இல்லை. இடதுசாரிகளும் அப்படித்தான்...ஜேவிபி அதற்கு சிறந்த உதாரணம்... அதேநேரம் -- சீன கம்யூனிஸ்ட் ஒரு வகையான முதலாளித்துவ சாயல் கொண்டது என்ற கருத்தும் உண்டு. ஆனால் -- கம்யூனிஸ்ட் என்பதை தவிர்த்து, சீன ”அரசியல் கோட்பாடுகள்” என்று நோக்கினால், ”சீன ஜனநாயகம்”, ”சீன இறைமை” என்பது சிறப்பான மாற்றம் என்ற சிந்தனை எழுலாம். ஆகவே -- சீன அரசியல் முறைமை (Political System) ஆபத்தா அல்லது நன்மையா என்பதை காலம் சொல்லும்... இப்போது சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், எழுதிய “சட்டத்தின் ஆட்சி” என்ற நூல் பற்றிய செய்திக்கு வருவோம் --- சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் (Communist Party of China - CPC) மத்தியக் குழுப் பொதுச் செயலாளர், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், எழுதிய “சட்டத்தின் ஆட்சி” (Rule of Law) என்ற மேற்படி நூல் பீஜிங்க நகரில் வெளியிடப்பட்டுள்ளது. 2012 ஆண்டு டிசம்பர் மாதம் முதல் 2025 ஆம் ஆண்டு பெ்பரவரி மாதம் வரையிலான சட்டத்தின் ஆட்சியில் ஜி ஜின்பிங் எழுதிய கட்டுரைகள், உரைகள் ஆகியவற்றின் மிக முக்கியமான மற்றும் அடிப்படையான படைப்பியல் கருத்துக்கள் 69 பகுதிகளாக தொகுக்கப்பட்டுள்ளது. இந்த நூல் சீன பண்புகளுடன் கூடிய சோசலிச சட்டத்தின் அமைப்பை வளர்ப்பதற்கும், சட்டத்தின் கீழ் ஒரு சோசலிச நாடாக சீனாவை உருவாக்குவதற்கும், புதிய வகிபாகத்தில் சட்ட அடிப்படையிலான நிர்வாகத்தை தொடர்ந்து வகுப்பதற்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையவுள்ளது. இதனை 'குளோபல்ரைம்ஸ்' என்ற (globaltimes) சீன அரச ஆங்கில செய்தி ஊடகம் இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் கட்சி வரலாறு - இலக்கிய நிறுவனத்தால் இந்த நூல் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. 1953 ஆம் ஆண்டு பிறந்த ஜி ஜின்பிங், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராகவும், மத்திய இராணுவ ஆணைக்குழு தலைவராகவும், 2012 ஆம் ஆண்டு முதல் சீனாவின் மூத்த அரசியல் தலைவராகவும் விளங்கினார். 2013 ஆண்டு முதல், ஜி ஜின்பிங், சீனாவின் ஜனாதிபதி பதவியை வகிக்கிறார். ஐந்தாவது தலைமுறை சீனத் தலைமையின் உறுப்பினராக, சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட பின்னர் பிறந்த முதல் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஜி ஜின்பிங் என்பது குறிப்பிடத்தக்கது. பத்திரிகையாளர் நிக்ஸன்
2 months 3 weeks ago
யாழின் கருத்தாளர்கள் சிலரால் தெளிவாக கூறப்பட்ட விடயங்களை தடித்த, வண்ண எழுத்துகளால் குறித்துள்ளேன்.
2 months 3 weeks ago
கட்சிகளுக்கிடையிலான சண்டைக்குள் சிக்கிய திருமாவின் யாழ் வருகை: நிலாந்தன். திருமாவளவனின் யாழ் வருகை பரவலாக வாதப் பிரதிவாதங்களை கிளப்பியுள்ளது. ஆனால் அவர் யாழ்ப்பாணத்துக்கு வருகை தருவது இதுதான் முதல் தடவை அல்ல. அதுவும் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக வந்திருப்பது இதுதான் முதல் தடவை அல்ல. இந்த மேடையில் அவர் பேசுவதும் இதுதான் முதல் தடவை அல்ல. ஏற்கனவே 2018 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் இதே நிகழ்வுக்காக அவர் வந்திருந்தார்;பேசினார். அப்பொழுது வராத எதிர்ப்பு இப்பொழுது வர காரணம் என்ன ? இறுதிக்கட்டப் போரின்போது கலைஞர் கருணாநிதி தமிழகத்தின் கொந்தளிப்பை மடைமாற்றி விட்டதாக ஈழத் தமிழர்களில் பெரும்பாலானவர்கள் நம்புகிறார்கள். அதன்பின் அதாவது 2009 மே மாதத்திற்குப் பின் தமிழகத்தில் இருந்து வந்த தூதுக்குழுவில் திருமாவளவன் இடம்பெற்றது தவறு என்றும் ஈழத்தமிழர்கள் நம்புகிறார்கள்.அதனால் அவரை விமர்சிக்கிறார்கள். இந்த விமர்சனங்களின் பின்னணியில்தான் ஈழத் தமிழர்களில் ஒரு பகுதியினர் திமுகவின் மீதும் திருமாவளவனின் மீதும் தொடர்ச்சியாகக் கோபத்தோடு காணப்படுகிறார்கள்.எனினும்,கடந்த 2018ஆம் ஆண்டு அவர் வருகை தந்தபோது காட்டப்படாத அளவு எதிர்ப்பு ஏன் இந்த முறை காட்டப்படுகிறது? திருமாவை ஊருக்கு அழைத்தது தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம்.அது இப்பொழுது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியோடு உறவாக இருக்கிறது.தமிழ்த் தேசியப் பேரவை என்ற கூட்டுக்குள் பசுமை இயக்கமும் ஓர் அங்கம். எனவே திருமாவை முன்வைத்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை தாக்குவதற்கு இது ஒரு சந்தர்ப்பமாகப் பயன்படுத்தப்படுகிறது. இதற்குப் பிரதான காரணம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அரசியல் பாரம்பரியம்தான்.அக்கட்சியானது தொடக்கத்தில் இருந்தே தன்னை பெருமளவுக்கு தூய்மைவாத கட்சியாகவும் தீவிர தேசியவாத கட்சியாகவும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் நேரடி வாரிசாகவும் காட்டிக்கொண்டது. ஏனைய கட்சிகளை அவர்கள் இந்த அளவுகோல்களின் ஊடாகத்தான் அளந்தார்கள்.எனவே அக்கட்சியோடு கூட்டில் இருக்கும் ஐங்கரநேசன் திருமாவை அழைத்தபோது அக்கட்சியை அடிப்பதற்கு இதை ஒரு சந்தர்ப்பமாக கட்சியின் எதிரிகள் பயன்படுத்துகிறார்கள். 2018இல் திருமா யாழ்ப்பாணம் வந்தபோது இந்த அளவு விமர்சனங்கள் ஏழவில்லை. அப்பொழுது ஐங்கரன்நேசனை யாரும் அவமரியாதையாக விமர்சிக்கவில்ல்லை.ஆனால் இப்பொழுது திருமாவோடு சேர்த்து ஐங்கரன் நேசனும் விமர்சிக்கப்படுகிறார்;அவமதிக்கப்படுகிறார்.தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் விமர்சிக்கப்படுகிறது.அப்படிப் பார்த்தால் இந்த விமர்சனங்களின் பின்னணியில் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு இடையிலான முரண்பாடு உண்டு. இப்படிப்பட்ட ஒரு விமர்சனச் சூழலை உற்பத்தி செய்ததில் தமிழ்த் தேசியமக்கள் முன்னணிக்கும் பெரிய பங்கு உண்டு.அக்கட்சி தன்னுடைய அரசியல் எதிரிகளைத் தாறுமாறாக விமர்சிக்கும் பண்பைக் கொண்ட ஒரு கட்சி.ஏன் என்னையும்கூட அவர்கள் மிகக் கீழ்த்தரமாக விமர்சித்திருக்கிறார்கள். தமது அரசியல் எதிரிகளை துரோகிகள் ஆக்கியது அந்த கட்சிதான். தமிழ்த் தேசிய அரசியலில் தூய்மைவாத அளவுகோல்களை வைத்துக்கொண்டு தமது அரசியல் எதிரிகளை தமது தராசுகளால் நிறுத்த கட்சி அது. இப்பொழுது சமூக வலைத்தளங்களைப் பார்த்தால் ஒன்றை விளங்கிக் கொள்ளலாம். திருமாவின் யாழ் வருகையை விமர்சிக்கும் ஒரு பகுதியினர் அந்த விமர்சனங்களை யாருடைய பார்வைக்கு முன் வைக்கின்றார்கள்? ஏற்கனவே தூய்மைவாத தமிழ் தேசிய அளவுகோல்களை வைத்துக்கொண்டு மற்றவர்களை விமர்சித்த கட்சியின் ஆதரவாளர்கள் அல்லது செயற்பாட்டாளர்களை நோக்கித்தான். அதுமட்டுமல்ல,இப்பொழுது அதாவது அந்தக் கட்சியின் செயலாளர் திருமாவின் கூட்டத்தில் பிரசன்னமான பின்னரும்கூட,அக்கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் சிலர் திருமாவையும் ஐங்கரநேசனையும் விமர்சிக்கக் காணலாம்.அக்கட்சியோடு தொடர்ச்சியாக செயல்பட்டு வருகின்ற கிராமிய உழைப்பாளர் சங்கத்தைச் சேர்ந்தவரும்கூட திருமாவை, ஐங்கரநேசனை கடுமையாக விமர்சிக்கக் காணலாம். எனவே இப்பொழுது தெளிவாக ஒரு சித்திரம் கிடைக்கிறது. தமிழ்த் தேசிய கட்சிகளுக்கு இடையிலான முரண்பாடுகள் திருமாவின் யாழ் வருகை மீது பிரதிபலிப்புகளை ஏற்படுத்துகின்றன என்பதுதான் இங்குள்ள அடிப்படை உண்மை. அதேசமயம் 2009 க்குப் பின் மஹிந்த ராஜபக்சவை திருமா சந்தித்தது கைகுலுக்கியது தொடர்பில் அவர் ஏற்கனவே ஒரு தன்னிலை விளக்கம் வழங்கியிருக்கிறார். ஆனால் ஒருபகுதி ஈழத் தமிழர்கள் அந்தத் தன்னிலை விளக்கத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதும் தெரிகிறது. தமிழகத்தில் உள்ள ஈழ அபிமானிகளில், ஈழ உணர்வாளர்களில் மிக நீண்ட காலம் ஈழப்போருடன் தொடர்புற்றவர்களில் திருமாவும் ஒருவர்.மாணவராக இருந்ததில் தொடங்கி ஒரு கட்சித் தலைவராக வளர்ந்து,நாடாளுமன்ற உறுப்பினராக வந்தது வரையிலும் அவர் ஈழப் போரோடு நெருக்கமான உறவைக் கொண்டிருந்தார்.விடுதலைப் புலிகள் இயக்கம் அவரை மிகவும் மதித்து கௌரவமாக நடத்தியது.ஆனால் அந்த இயக்கம் போரில் தோற்கடிக்கப்பட்ட பின்,அதைத் தோற்கடித்த தரப்புடன் அவர் கைகுலுக்கியது தொடர்பில் அந்த இயக்கத்தின் ஆதரவாளர்கள் மத்தியிலும் பொதுவாக தமிழ் மக்கள் மத்தியிலும் விமர்சனங்கள் உண்டு. ஆனால் அதற்குப் பின்னரும் முன்னரைப் போலவே அவர் ஈழத் தமிழர்களின் அரசியல் நிலைப்பாடுகளோடு தோளோடு தோள் நிற்கிறார்.எனவே,அவர் மீது விமர்சனங்களை முன்வைக்கும்போது திருமா ஒரு நேச சக்தியா அல்லது பகை சக்தியா என்ற தெளிவு ஈழத் தமிழர்களிடம் இருக்க வேண்டும்.ஒரு நேச சக்தியை விமர்சிப்பது வேறு. பகைவரை விமர்சிப்பது வேறு. இந்த விடயத்தில் ஈழத் தமிழர்கள் தெளிவாக இருக்க வேண்டும்.திருமா தமிழகத்தில் லட்சக்கணக்கான மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்.அப்படித்தான் திராவிடக் கட்சிகளும்.இந்தக் கட்சிகளை விமர்சிக்கும்போது இந்த கட்சிகள் யாரைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனவோ அந்த எட்டுக் கோடி மக்களையும் புண்படுத்தாமல் கவனமாக விமர்சிக்க வேண்டும். நீரிணையால் பிரிக்கப்பட்ட ஒரே இனத்தவர்கள் தமிழ்நாட்டு மக்களும் ஈழத் தமிழர்களும்.புவியியல் அமைவிடம் காரணமாக சில வேறுபாடுகள் இருக்கலாம்.ஆனால் உலகில் ஈழத் தமிழர்களுக்கு இனத்தால்,மொழியால், பண்பாட்டால்,இன்னபிற விடையங்களால் கிட்ட இருக்கும் மக்கள் அவர்கள்தான். ஈழப் போராட்டத்தின் போது இருபதற்கும் குறைாதவர்கள் தமிழகத்தில் தீக்குளித்திருக்கிறார்கள். உலகில் வேறு எங்கும் நடந்திராத ஒரு விடயம் அது.தீக்குளிப்பது என்பது சாதாரணமானது அல்ல.தன்னையே அழிப்பது. அயலில் வாழும் தனது மக்கள் கூட்டத்திற்காக தம்மையே அழித்திருக்கிறார்கள்.அதுவும் தீயில் கருகி இறப்பது என்பது எவ்வளவு கொடுமையானது? சாதாரணமாக, சமைக்கும்போது அடுப்பு நெருப்புப் பட்டாலே எப்படித் துடிக்கிறோம்?.உலகில் வேறு எந்த மக்கள் கூட்டமும் அவ்வாறு கடலால் பிரிக்கப்பட்ட இன்னொரு மக்கள் கூட்டத்திற்காக அப்படிப்பட்ட தியாகத்தைச் செய்தது இல்லை.எனவே தமிழ் நாட்டு மக்களை எப்பொழுதும் ஈழத் தமிழர்கள் மதிக்க வேண்டும். கட்சிகள் தங்களுடைய கட்சி அரசியலைச் செய்யும். ஏன் ஈழத்தமிழ் கட்சிகள் செய்யாத திருகுதாளங்களா? ஆனால் தமிழக மக்களை ஈழத் தமிழர்கள் என்றென்றும் மதிக்க வேண்டும். இந்த அடிப்படையில்தான் தமிழகத்தை அணுக வேண்டும்.தமிழக மக்கள் மீதுள்ள அளவு கடந்த மதிப்பின் காரணமாக அவர்களுடைய தலைவர்களை விமர்சிக்கும் போது அடிப்படை நாகரீகத்தைப் பேணவேண்டும். அதுமட்டுமல்ல அரசு இல்லாத தமிழ் மக்களுக்கு அயலில் உள்ள அரசு.அதுவும் பேரரசு இந்தியாதான்.இந்தியாவின் கொள்கை வகுப்பாளர்களை ஆசைப்பதற்கு ஈழத் தமிழர்களுக்குள்ள ஒரே நொதியம் தமிழ் நாடுதான். மேலும்,இப்பொழுது தமிழ் மக்களின் அரசியல் பெருமளவுக்கு ஐநா மைய அரசியலாகவே காணப்படுகிறது. அண்மையில் ஐநா தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ் மக்கள் அந்த தீர்மானம் தங்களை ஏமாற்றி விட்டது என்று கடும் கோபமாக இருக்கிறார்கள். அந்தத் தீர்மானத்தை தமிழர்களுக்கு என்றுகூறி முன்நகார்த்திய நாடு எது? பிரித்தானியா. பிரித்தானியா முதலாவது கட்ட ஈழப் போரில் யாரோடு நின்றது? இலங்கை அரசாங்கத்தோடு நின்றது. தமிழ் மக்களுக்கு எதிரான போரில் இலங்கை அரசாங்கத்துக்கு எல்லா உதவிகளையும் பிரித்தானியா செய்தது. ஆயுத தளபாடங்கள், ஆலோசனைகள் மட்டுமல்ல, பிரித்தானிய கூலிப் படைகளும் களத்தில் இறக்கப்பட்டன. ஈழத் தமிழர்களை ஆட்சி செய்த மூன்று குடியேற்றவாத நாடுகளில் பிரித்தானியாவும் ஒன்று.அரசோடு இருந்த தமிழ் மக்களை அரசற்ற மக்களாக மதிப்பிறக்கியதில் பிரித்தானியாவுக்கும் பங்கு உண்டு.அதோடு முன்கூறியது போல முதலாம் கட்ட ஈழப்போரில் இனஅழிப்பைச் செய்த அரசாங்கத்தை ஆதரித்த நாடுதான் பிரித்தானியா. ஆனால் அதற்காக ஐநாவில் பிரித்தானியாவின் தலைமையில் தீர்மானம் கொண்டுவரப்படுவதை ஈழத் தமிழர்கள் எதிர்க்கிறார்களா? இல்லை. அதுதான் அரசியல்.அரசு இல்லாத தமிழ் மக்கள் அரசுகளை அரவணைத்தால்தான் இலங்கை அரசாங்கத்தின் மீது அழுத்தங்களைப் பிரயோகிக்கலாம். எல்லா இனப்பிரச்சினைகளும் சாராம்சத்தில் அனைத்துலகப் பிரச்சினைகள்தான். அவற்றுக்கு அனைத்துலகத் தீர்வுதான் உண்டு.எனவே ஈழத் தமிழர்கள் அரசுகளை அரவணைக்க வேண்டும். மேற்கு நாடுகளை,ஜநாவைக் கையாள்வதற்கு புலம்பெயர்ந்த தமிழர்கள் நொதிக்க வேண்டும்.இந்திய அரசைக் கையாள்வதற்கு,தமிழ் நாட்டு மக்கள் நொதிக்க வேண்டும்.எனவே ஈழத்தமிழர்கள் தமிழகத்தைப் பக்குவமாகக் கையாள வேண்டும். உலகிலேயே முதலாவது இன அழிப்புக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது தமிழகத்தில்தான்.உலகின் மிகப்பெரிய தமிழ்ச் சட்டமன்றம் அது. அதுபோலவே உலகில் இன அழிப்பு நினைவுச் சின்னங்களை தமிழர்கள் ஏனைய புலம்பெயர்ந்த நாடுகளில் நிறுவ முன்பு முதலாவது நினைவுச் சின்னம் உருவாக்கப்பட்டது தஞ்சாவூரில்தான்.தமிழகத்தில்தான். எனவே தமிழகத்தை ஈழத் தமிழர்கள் பக்குவமாகக் கையாள வேண்டும். அரசு இல்லாத ஒரு மக்கள் கூட்டம் எவ்வளவுக்கு எவ்வளவு நண்பர்களைச் சம்பாதிக்கின்றதோ,அவ்வளவுக்கு அவ்வளவு அனைத்துலக அரங்கில் பலமாக நிற்கும். திருமாவின் உறவு தொடர்பான விடயம் தனிய,தமிழ் உணர்வோடு சம்பந்தப்பட்டது மட்டுமல்ல. அதைவிட ஆழமான பொருளில் இந்தியாவைக் கையாளுவது தொடர்பான ஒரு வெளியுறவு விவகாரமுந்தான்.தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு இடையிலான போட்டியும் மோதல் நிலையும் வெளியுறவுக் கொள்கை சம்பந்தப்பட்ட ஒரு விடயத்தில் பிரதிபலிப்புகளை ஏற்படுத்துவது என்பது தமிழ்மக்கள் ஒரு தேசமாகத் திரள முடியாமல் தத்தளிக்கிறார்கள் என்பதைத்தான் காட்டுகிறது. https://athavannews.com/2025/1452869
Checked
Wed, 02/11/2026 - 11:39
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed