2 months 3 weeks ago
போதைப்பொருள் மீட்புப் பொலிஸாரை வாளினால் மிரட்டியவர் மீது 25 வழக்குகள் நிலுவையில் - பொலிஸார் Published By: Vishnu 14 Nov, 2025 | 03:19 AM போதைப்பொருளை மீட்க சென்ற பொலிசாரை வாளினை காட்டி மிரட்டிய நபருக்கு எதிராக 25க்கும் மேற்பட்ட வழக்குகள் நீதிமன்றில் நிலுவையில் உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சாவகச்சேரி பகுதியில் புதன்கிழமை (12) இளைஞன் ஒருவரை பொலிஸார் கைது செய்து சோதனையிட்ட போது , இளைஞனிடம் இருந்து ஹெரோயின் போதைப்பொருளை பொலிஸார் மீட்டிருந்தனர். குறித்த இளைஞனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் , நாவற்குழி பகுதியை சேர்ந்த மற்றுமொரு இளைஞனிடமும் போதைப்பொருள் இருப்பதாக பொலிஸாருக்கு இளைஞன் கூறியுள்ளார். அதனை அடுத்து குறித்த இளைஞனை கைது செய்யும் நோக்குடன் , நாவற்குழியில் உள்ள இளைஞனின் வீட்டிற்கு பொலிஸார் சென்ற வேளை, வாளினை காட்டி பொலிசாரை அச்சுறுத்தி விட்டு தப்பி செல்ல முற்பட்ட வேளை இளைஞனை பொலிஸார் மடக்கி பிடித்து , கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இளைஞனிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் அடிப்படையில் அவரிடமிருந்து ஹெரோயின் போதைப்பொருளை பொலிஸார் மீட்டனர். மேலதிக விசாரணைகளில் , யாழ்ப்பாணத்தில் உள்ள நீதவான் நீதிமன்றங்களில் குறித்த இளைஞனுக்கு எதிராக 25க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதையும் பொலிஸார் கண்டறிந்துள்ளனர். கைது செய்யப்பட்டவரை பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர். Virakesari.lkபோதைப்பொருள் மீட்புப் பொலிஸாரை வாளினால் மிரட்டியவர் மீது...போதைப்பொருள் மீட்புப் பொலிஸாரை வாளினால் மிரட்டியவர் மீது 25 வழக்குகள் நிலுவையில் - பொலிஸார்
2 months 3 weeks ago
தன்னைவிட கூடுதலாக வைத்திருக்கிறாரோ என்ற ஏக்கமாக இருக்கலாம்.
2 months 3 weeks ago
சாதாரண குடும்ப உணவுக் கட்டணம் ஒரு இலட்சம் ரூபாவை தாண்டியிருக்கலாம் – டீ.வி. சானக Published By: Vishnu 14 Nov, 2025 | 03:12 AM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) நான்கு பேர் கொண்ட சாதாரண குடும்பமொன்றுக்கு உணவுக்காக மாத்திரம் மாதந்தம் 65,500 ரூபா செலவாகும் என்று மூன்று வருடங்களுக்கு முன்னரே மதிப்பிடப்பட்டிருந்தது. இப்போது அந்த தொகை ஒரு இலட்சம் ரூபாவை தாண்டியிருக்கலாம் என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் டீ.வி.சானக தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (13) இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கு ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட வரவு செலவு திட்ட உரை மீதான ஐந்தாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், இந்த வரவு செலவுத் திட்டத்தில் எவ்வித வரியும் இல்லை என்று அரசாங்கத்தினால் கூறப்பட்டது. ஆனால் வாசிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் 150 பில்லியன் ரூபா வட் வரி எதிர்பார்க்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 18 வீதத்தில் இருந்து 20 வீதமாக வட் வரி அதிகரிப்பது மட்டுன்றி வரி செலுத்துவோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படும் போது அரசாங்கத்திற்கு கிடைக்கும் வரி இலாபமும் அதிகரிக்கும். மறைமுக வரிகளை குறைப்பதாக கூறிக்கொண்டு வரி அறவிடுவதையே செய்கின்றனர். அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் கூறப்பட்டது. இதன்படி 56,145 ரூபாவே சாதாரண ஊழியர் ஒருவருக்கு கிடைக்கும். ஆனால் சனத்தொகை மதிப்பீட்டு திணைக்களத்தில் வீட்டு மற்றும் வருமான செலவு கணக்கெடுப்பு மூன்று வருடங்களாக செய்யப்படவில்லை. இதனை செய்ய வேண்டும் என்று பாராளுமன்ற ஆய்வுக்குழு கூறியுள்ள போதும் அது இதுவரையில் நடக்கவில்லை. என்றாலும் இறுதியாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் படி நபரொருவருக்கு தனது உடலுக்கு தேவையான களரியை பெற்றுக்கொள்வதற்கான உணவுக்காக 16,413 ரூபா மாதத்திற்கு செலவிட வேண்டும். அப்படியாயின் நான்கு பேர் கொண்ட குடும்பத்திற்கு 65,500 ரூபா மாதத்திற்கு உணவுக்காக மட்டும் செலவிட வேண்டும். இது இப்போது ஒரு இலட்சம் ரூபாவையும் கடந்திருக்கும். அதனால் சம்பந்தப்பட்ட நிறுவனம் இது தொடர்பில் சரியான கணக்கெடுப்பை நடத்த வேண்டும் எனவே எதிர்வரும் 21ஆம் திகதிக்கு முன்னர் விவசாயிகளின் பிரச்சினைகளையாவது தீர்க்குமாறு நாங்கள் அரசாங்கத்தை கேட்கின்றோம். இல்லையென்றால் அவர்கள் அன்றைய தினத்தில் நுகேகொட நகருக்கு வருவார்கள் என்றார். Virakesari.lkசாதாரண குடும்ப உணவுக் கட்டணம் ஒரு இலட்சம் ரூபாவை தாண்டியி...Sri Lanka Podujana Peramuna MP T.V. Sanaka stated that while a family of four’s monthly food expenses were estimated at Rs. 65,500 three years ago, the current cost may now exceed one lakh rupees.
2 months 3 weeks ago
சபரிமலை யாத்திரையை புனித யாத்திரையாக அறிவித்து தேசிய நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவோம் – சுனில் செனவி Published By: Vishnu 14 Nov, 2025 | 03:06 AM ( எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) இந்தியாவில் கேரள மாநிலத்தில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மேற்கொள்ளும் யாத்திரையை புனித யாத்திரையாக பிரகடனம் செய்துள்ளோம். கடந்த காலங்களில் எத்தனை அரசாங்கங்கள் இருந்தன. எவரும் இதனை கருத்திற் கொள்ளவில்லை. மத விவகாரங்களில் பாரபட்சம் காட்டப்படுவதாக குறிப்பிடுவது முற்றிலும் தவறானது. தேசிய நல்லிணக்கத்தை உறுதிப்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்படுகிறோம் என புத்தசாசனம் மற்றும் மத விவகாரங்கள் அமைச்சர் சுனில் செனவி தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (13) நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான ஐந்தாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, உரிமைகளை வென்றெடுக்க போராட்டம் செய்ய வேண்டிய அவசியமில்லை. மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு வரவு - செலவுத் திட்டத்தின் ஊடாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சகல பிரச்சினைகளுக்கும் நாங்கள் தீர்வளித்துள்ளோம் என்று குறிப்பிடவில்லை. கட்டம் கட்டமாகவே அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வளிப்போம். அனைத்தையும் எதிர்க்கும் மனநிலையில் உள்ள எதிர்க்கட்சியினர் வரவு - செலவுத் திட்டத்தையும் எதிர்ப்பது ஒன்றும் ஆச்சரியத்துக்குரியதல்ல, இந்து மத விவகாரத்துக்கு நிதி ஒதுக்கியுள்ளமை குறைவாக உள்ளது என்று எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் குறிப்பிடுகிறார்கள்.இது முற்றிலும் தவறானது. தேசிய தைப்பொங்கல் உற்சவத்தை யாழ்ப்பாணத்தில் கொண்டாடினோம். இந்தியாவில் கேரள மாநிலத்தில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மேற்கொள்ளும் யாத்திரையை புனித யாத்திரையாக பிரகடனம் செய்துள்ளோம். கடந்த காலங்களில் எத்தனை அரசாங்கங்கள் இருந்தன.எவரும் இதனை கருத்திற் கொள்ளவில்லை. கோயில் உட்பட மத தலங்கள் புனரமைப்புக்கு பல மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இலங்கையர் தினத்துக்கு 300 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. ஆகவே மதங்களுக்கு வேறுப்படுத்தப்பட்ட வகையில் சலுகைகள் வழங்கப்படுகின்றன என்று குறிப்பிடுவது முற்றிலும் தவறானது. தேசிய நல்லிணக்கத்தை உறுதிப்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்படுகிறோம் என்றார். Virakesari.lkசபரிமலை யாத்திரையை புனித யாத்திரையாக அறிவித்து தேசிய நல்ல...Minister of Buddhist Affairs and Religious Affairs, Sunil Senavi, stated that the pilgrimage to Sabarimala Ayyappan Temple in Kerala, India, has been declared a holy pilgrimage. He emphasized that the
2 months 3 weeks ago
சிறுவர்களாக இருந்த காலங்களில் ஊரில் குளிக்கக் கூடிய குளங்கள் இருந்ததால் நண்பர்களோடு போய் குளிப்போம். இந்தக் குளங்களில் நான்கு பக்கமும் கிணறு மாதிரி கொங்கிறீற்ரால் கட்டப்பட்ட துருசு என்று சொல்லப்படும் இடம் உள்ளது. எவருக்குமே நீச்சல் தெரியாது. ஆனாலும் ஒல்லித் தேங்காயின் உதவியுடன் எல்லோரும் இறங்கி நீந்துவோம். தற்செயலாக ஒல்லித் தேங்காய் அறுந்தால் தாழ வேண்டியது தான். ஒருபக்கத்து சுவர்மட்டும் பதிவாக இருக்கும். மற்றைய மூன்று பக்கங்களும் உயரமாகவே இருக்கும். அந்த நேரங்களில் கற்றுக் கொண்ட நீச்சலே இப்போதும் கை கொடுக்கிறது. இதே குளங்களில் எமது வயதானவர்கள் இறந்தும் இருக்கிறார்கள்.
2 months 3 weeks ago
பேராசிரியர் அமிர்தலிங்கத்துக்கு வாழ்த்துக்கள்.
2 months 3 weeks ago
என்ன இது இவரும் தப்பாக இலங்கை அரசும் ஆப்கானிஸ்தான் தலிபான்கள் இந்திய முஸ்லிம் கட்சி போன்று தற்கொலை குண்டுவெடிப்பை கண்டிக்கின்றார். இது பாகிஸ்தானை ஒரு பயங்கரவாத நாடாக உலகத்திற்கு காட்டுவதற்காக இந்தியா தனக்கு தானே வைத்த குண்டு எல்லோ
2 months 3 weeks ago
நீங்கள் இந்த கோணத்தில் யோசிக்கின்றீர்கள். கிணறுகளை பார்த்தனான் கயிறு கட்டி இறங்கி குளக்கும் ஆசை ஒன்றும் வர வில்லை பயம் தான் வந்தது .
2 months 3 weeks ago
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 44A [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 44 A / பின் இணைப்பு - தீபவம்சம் / 'மகிந்த மற்றும் சங்கமித்த இருவரும் அசோகரின் பிள்ளைகளா?' அத்தியாயம் 7 அசோகனின் சமய நம்பிக்கை பற்றியது. பிக்குகளுக்கு பலவற்றைச் செய்ததாலும், எண்பத்து நான்காயிரம் மடங்களைக் கட்டியதாலும், தான் புத்த சமயத்தின் நம்பிக்கைக்கு உரியவராக இருக்கத் தகுதியானவர் என்று அசோகர் நினைத்தார். இருப்பினும், மொகாலிபுத்த [Moggaliputta], அசோகன் தனது மகனையோ மகளையோ புத்த மத விசுவாசத்திற்கு [தெய்வ நம்பிக்கைக்கு] அர்ப்பணித்து, அவர்களுக்கு பப்பாஜ்ஜி நியமனம் [ Pabbajji ordination / ஒரு புதிய துறவி அல்லது கன்னியாஸ்திரியாக ஒரு நபரின் வாழ்க்கையின் தொடக்கத்தைக் குறிக்கும் ஒரு புத்த சமய விழா.] செய்ய வேண்டும் என்று கூறினார். 7-17 பார்க்கவும். அசோகனின் மகன் மகிந்தவும் மகள் சங்கமித்தாவும் பாப்பாஜி நியமனம் பெற உடனடியாக ஒப்புக்கொண்டனர். தந்தை தன் ஆசையை அடைய அவர்கள் இருவரும் பாப்பாஜி நியமனத்தைப் பெற்ற போது மகிந்தவின் வயது ஆக 20 மற்றும் சங்கமித்தாவுக்கு 18 வயது. ஒரு தகப்பனும், அசோகனைப் போன்ற கருணையுள்ள ஒருவரும், இருபது மற்றும் பதினெட்டு வயதுடைய தனது இரு வாலிப பிள்ளைகளை பிக்கு மற்றும் பிக்குணியாக [பெண் துறவி] ஆக்கி, அதனால் தான் தெய்வ நம்பிக்கைக்கு உரியவராக மாறலாம் என்று விரும்புவாரா? அல்லது அதனால் திருப்தி அடைவாரா? பெரும்பாலும் இருக்காது! அது மட்டும் அல்ல, மகாவம்சத்தின்படி சங்கமித்தா திருமணம் செய்து, அந்த நேரத்தில், அவளுக்கு ஒரு இளம் மகனும் இருந்தான். அப்படி உண்மையில் நடந்து இருந்தால், இது கட்டாயம் அசோகனின் கொடூரமான செயல் அல்லவா? மேலும், மொகாலிபுத்தவின் முடிவு என்னவென்றால், பாப்பாஜி நியமனம் பெறுவதற்கு ஒரு மகன் அல்லது ஒரு மகள் இருக்க வேண்டும், அவ்வளவு தான், இருவரும் அல்ல. எனவே இது ஒன்றே இந்த தீபவம்சம் கதையின் உண்மையைப் புரியவைக்கும்? அதாவது, மகிந்த மற்றும் சங்கமித்தா இருவரின் இருப்பை இது கேள்விக்குறி ஆக்கிறது. இந்த இருவருமே இலங்கை புத்த துறவி ஆசிரியர்களின் போலியான படைப்பாக இருக்க வேண்டும்? அசோகரின் கல்வெட்டுகளில் ஒன்று அசோகரின் மகன்கள் மற்றும் பேரன்களைப் பற்றி பேசுகிறது, ஆனால் மகிந்த மற்றும் சங்கமித்தாவைப் பற்றி அல்ல என்பது குறிப்பிடத் தக்கது. வேறு சில இந்திய ஆதாரங்களின்படி, அசோகருக்கு சாருமதி அல்லது சாருமித்ரா என்ற பெயரில் ஒரு மகள் இருந்தாள், பின்னர் அவர் தனது கணவருடன் நேபாளத்தில் குடியேறினார், இருவரும் துறவிகள் ஆனார்கள் என்கிறது. இலங்கை துறவிகள் சிறிய மாற்றங்களுடன் இலங்கையை புத்த மதத்திற்கு மாற்ற, மேலே கூறிய இரண்டையும் நகலெடுத்திருக்க வேண்டும். மூன்றாவது பௌத்த மாநாடு அசோகரின் ஆதரவில் ஒன்பது மாதங்கள் நீடித்தது. வரலாற்று முக்கியத்துவம் இல்லாத பல மத விவரங்கள் இங்கு உள்ளன. பலர் தங்களின் சுயலாபத்திற்காகவும், நம்பிக்கைக்கு சேதம் விளைவிப்பதற்காகவும் தந்திரமாக, புத்த விசுவாசத்தில் சேர்ந்தனர். பின்னர் மொகாலிபுத்த மூன்றாவது புத்தமத சபையை நடத்தி, சமயப் பிளவுகளை அகற்றினார். அத்துடன், போலித் துறவிகளை மன்னர் அசோகன் சமய நடவடிக்கைகளில் இருந்து அகற்றினார். இந்திய ஆதாரங்களில், மூன்றாவது பௌத்த சபை பற்றி எந்தத் தகவலும் இல்லை. அதாவது எங்கு மூன்றாவது பௌத்த சபை நடந்ததோ, அங்கிருந்து எந்தச் சான்றுகளும் இல்லை. எனவே மூன்றாம் பௌத்த சபையின் உண்மைத்தன்மை பல அறிஞர்களால் சந்தேகிக்கப்படுகிறது. மீண்டும் இந்த அத்தியாயம் இலங்கையில் நடந்த மனித வரலாற்று நிகழ்வுகளைப் பற்றியது அல்ல. Part: 44 / Appendix – Dipavamsa / 'Are both Mahinda and Sanghamitta, children of Asoka?' Chapter 7 is about Asoka’s intention to become the relation of the Faith. He thought that he was fit to be the relation of the faith as he did a lot to the Bikkhus, and also constructed eighty four thousand monasteries. Moggaliputta, however, told that he should give his son or daughter to the Faith and cause them to receive Pabbajji ordination [a Buddhist ceremony that marks the beginning of a person's life as a novice monk or nun.] to become the relation of the Faith, 7-17. Asoka’s son Mahinda and the daughter Sanghamitta readily agreed to receive Pabbajji ordination. Mahinda was 20 years of age and Sanghamitta was 18 years of age when they both received Pabbajji ordination so that their father could attain his desire. Would a father and a benevolent one like Asoka, make his young children of twenty and eighteen years to become a Bikkhu and a Bikkhunni so that he could satisfy his desire to be a relation of the Faith? Most probably would not! Sanghamitta had a young son, as per the Mahavamsa, by that time. It is a cruel act on the part of Asoka. Furthermore, the Moggaliputta’s decision was that either a son or a daughter to be made to receive the Pabbajji ordination, and not both. This is also of the reasons to doubt the bona fide of both Mahinda and Sanghamitta; both must be the bogus creation of the monkish authors of Lanka. One of the Asoka’s inscriptions speaks of sons and grandsons of Asoka, but not about Mahinda and Sanghamitta. Asoka had, as per Indian sources, a daughter by the name Charumati or Charumitra, and later she settled in Nepal with her husband, and both became monks. Lanka monks must have copied these two to convert Lanka to the Faith with small modification. Third Buddhist Council took place under the aegis of Asoka which lasted for nine months. There are quite many religious details which are not of historical significance. Many furtively joined the Faith for their own gain, and doing damage to the Faith. Then Moggaliputta held the Third Buddhist Council, and demolished the schisms, and the bogus monks were disrobed by the King Asoka. There is no information about the Third Buddhist Council from the Indian sources. Therefore the veracity of the Third Buddhist Council is suspected by many scholars. This chapter is also not about human historical events that took place in Lanka. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 44 B தொடரும் / Will follow "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 44A https://www.facebook.com/groups/978753388866632/posts/32357350903913471/?
2 months 3 weeks ago
T20 முதல் தர கிரிக்கட்டில் அடங்காது 🙂
2 months 3 weeks ago
உங்களுக்கு நான் சொல்வது விளங்குதெல்லா?….அவ்வளவும் போதும். விக்ரமாதித்தன் அளவுக்கு எனக்கு பொறுமை இல்லை😂
2 months 3 weeks ago
இந்த நாலுபேரையும் பிடிச்சு உழக்கினால் உண்மை தானா வரும்!
2 months 3 weeks ago
2 months 3 weeks ago
13 Nov, 2025 | 03:50 PM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள சகல மாவீரர் துயிலும் இல்லங்களையும் அங்குள்ள மக்களிடம் கையளித்து, அந்த இடங்களை அங்கீகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு அவை மக்களிடம் கையளிக்கப்படும் பட்சத்தில் அவற்றை பராமரிக்கும் செலவை தமிழர்களாகிய நாங்கள் பார்த்துக்கொள்வோம் என்று இலங்கை தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான ஐந்தாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, இன்று கார்த்திகை வீரர்கள் ஞாபகார்த்த தினம் அனுஸ்டிக்கப்படுகின்றது. அதாவது இடதுசாரி கொள்கையுடன் போராடிய ஒரு மாவீரர் ரோகண விஜேவீரவின் நினைவுநாள் அனுஸ்டிக்கப்படுகின்றது. இந்த நாளிலேயே அவர் இலங்கை அரச படையினால் கொல்லப்பட்டார். அதில் ஜே.வி.பி வீரர்கள் பல்லாயிரம் பேர் கொல்லப்பட்டனர். அவர்களின் நினைவஞ்சலியில் எமது அஞ்சலியை செலுத்துகின்றோம். இதேவேளை இந்த கார்த்திகை மாதத்தில் வடக்கு மற்றும் கிழக்கில் மாவீரர்கள் நாள் அனுஸ்டிக்கப்படுகின்றது. வடக்கு கிழக்கில் 32க்கும் மேற்பட்ட மாவீரர் துயிலும் இல்லங்கள் உள்ளன. எமது இனத்திற்காக விடுதலைக்காக போராடிய மாவீரர்கள் பொதுமக்கள் இறந்த புனிதமான அந்த இடங்களை பாதுகாக்க வேண்டிய கடமைப்பாடு உள்ளது. இந்த அரசாங்கம் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களையும் அங்கே வாழும் தமிழ் மக்களிடம் கொடுக்க வேண்டும். அந்த இடங்களை அங்கீகரிக்க வேண்டும். அங்கே நிலைகொண்டுள்ள இராணுவ பிரச்சனத்தை அகற்ற வேண்டும். மக்கள் சுயாதீனமாக அங்கே நினைவு கூரலை நடத்துவதற்கு இடத்தை கொடுக்க வேண்டும். அந்த இடத்தை அங்கீகரித்து பொதுமக்களுக்கு அதனை கொடுக்கும் போது நீங்கள் அதற்கு நிதி ஒதுக்கத் தேவையில்லை. நாங்கள் தமிழர்கள். அதற்கான நிதியை ஒதுக்கி அந்த புனிதமான இடத்தை பாதுகாப்போம் என்பதனை தெளிவாகக் குறிப்பிட்டுக் கொள்கிறோம். இந்த அரசாங்கம் அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/230255
2 months 3 weeks ago
நெருப்பில்லாமல் புகை வராது பாருங்கோ...
2 months 3 weeks ago
வரவு - செலவு திட்டத்தில் அரச, தனியார் துறை என யாருக்கும் எந்த நன்மையும் இல்லை - ரஞ்சித் மத்தும பண்டார 13 Nov, 2025 | 06:23 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) வரவு - செலவு திட்டத்தில் அரச துறை, தனியார் துறை என யாருக்கும் எந்த நன்மையும் இல்லை. அதனால் மக்கள் அரசாங்கத்துக்கு பதிலளிக்க மாகாண சபை தேர்தலை எதிர்பார்த்து இருக்கிறார்கள். முடிந்தால் தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்துக்கு சவால் விடுகிறேன் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (13) இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கு ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட வரவு செலவு திட்ட உரை மீதான ஐந்தாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், நாட்டின் அபிவிருத்தியை தடை செய்து இந்த நாட்டில் ஊழல் மோசடிகளில் யாராவது ஈடுபட்டிருந்தால், அவர்களைவிட நாட்டின் அபிவிருத்திக்கு எதிராக . மக்கள் விடுதலை முன்னணியும் விடுதலை புலிகளும் ஈடுபட்டு வந்திருக்கின்றன. மக்கள் விடுதலை முன்னணி அமைக்கப்பட்டு 60 வருடங்களில் இந்த நாட்டை ஆட்சி செய்துவந்த அனைத்து அரசாங்கங்களுக்கும் எதிராக செயற்பட்டு வந்தது. அதேபோன்று வெளிநாட்டு ஒப்பந்தங்களுக்கு எதிராக செயற்பட்டு வந்தார்கள். ஆனால் மக்கள் விடுதலை முன்னணி இன்று எமது வெளிநாட்டுக்கொள்கை, கல்விக்கொள்கை, பொருளாதாரக் கொகையை ஏற்றுக்கொண்டிருக்கிறது. அன்று இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்காவிட்டால், நாடு அபிவிருத்தியடைந்திருக்கும். மேலும் நாடு வீழ்ச்சியடைவதற்கு இந்த அரசாங்கமும் பொறுப்புக்கூறவேண்டும். சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெறும்போது அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். ஆனால் இன்று நாணய நிதியத்தின் தாலத்துக்கும் ஆடும் நிலையில் ஜனாதிபதி அநுரகுமார இருக்கிறார். மக்களின் அத்தியாவசிய பொருட்களின் நூற்றுக்கு 18வீதம் வரி குறைப்பதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தார். குறைத்தீர்களா என கேட்கிறோம். துறைமுகத்தில் இறக்கப்படும் கட்டணத்துக்கு எரிபொருள் வழங்குவதாக அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்திருந்தார்.வழங்குகிறார்களா? எமது காலத்தில் இருந்ததைவிட எரிபொருள் விலை தற்போது அதிகமாகும். சர்வதேச நாணய நிதியத்தின் கைபொம்மையாக மாறியுள்ள இந்த அரசாங்கம் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை மறந்துள்ளது. நாங்கள் அட்சியில் இருக்கும்போது நாட்டில் வறுமை வீதம் நூற்றுக்கு 10வீதமாகவே இருந்தது. தற்போது அது நூற்றுக்கு 35வீதமாக அதிகரித்துள்ளது. அதனால் திறைசேரியில் பணம் அதிகமாக இருந்தால், மக்களுக்கு வழங்குவதாக தெரிவித்த நிவாரணங்களை வழங்குங்கள். அரச ஊழியர்களின் வாக்குகளை பெற்றுக்கொண்ட அரசாங்கம் அரச ஊழியர்களை ஏமாற்றி இருக்கின்றனர். எனவே வரவு செலவு திட்டத்தில் அரசதுறை, தனியார் துறை என யாருக்கும் எந்த நன்மையும் இல்லை. அதனால் மக்கள் அரசாங்கத்துக்கு பதிலளிக்க மாகாணசபை தேர்தலை எதிர்பார்த்து இருக்கிறார்கள். அதனால் முடிந்தால் அரசாங்கம் மாகாணசபை தேர்தலை நடத்தட்டும். பாெதுத் தேர்தலைவிட உள்ளூராட்சிமன்ற தேர்தலில் அரசாங்கத்துக்கு 23இலட்சம் வாக்குகள் குறைவடைந்துள்ளது. மாகாணசபை தேர்தலை நடத்தினால் மேலும் 25இலட்சம் வாக்குகள் இல்லாமல்போகும். அதனால் முடிந்தால் தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்துக்கு சவால் விடுகிறேன் என்றார். https://www.virakesari.lk/article/230276
2 months 3 weeks ago
Published By: Vishnu 13 Nov, 2025 | 08:29 PM யாழ்ப்பாணத்தில் தோட்ட கிணற்றில் கயிறு கட்டி குளித்துக்கொண்டிருந்த இளைஞன் கயிறு அறுந்த நிலையில் , நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். வல்வெட்டித்துறை , கொம்மாந்துறை பகுதியை சேர்ந்த நிரெக்சன் (வயது 18) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழை காரணமாக கிணறுகளில் நீர் மட்டம் அதிகரித்தும் காணப்பட்டுள்ளது. இந்நிலையில் கொமாந்துறையில் உள்ள தோட்ட கிணற்றினுள் ஆளுக்கு ஒவ்வொரு கயிறு கட்டி இறங்கி ஐந்து பேர் நீராடியுள்ளனர். சில மணி நேரத்தில் நான்கு பேர் நீராடியது போது வீடு செல்வோம் என புறப்பட்ட போது , ஒருவர் மாத்திரம் நீங்கள் செல்லுங்கள் நான் இன்னும் சற்று நேரம் நீராடி விட்டு வருவதாக கூறி தொடர்ந்து கிணற்றினுள் நீராடி இருக்கிறார் ஏனைய நால்வரும் வீடு சென்ற நிலையில் , நீண்ட நேரமாகியும் மற்றையவர் வராததால் , கிணற்றடிக்கு சென்ற போது , அவர் கட்டியிருந்த கயிறு அறுந்த நிலையில் காணப்பட்டுள்ளது. அதனை அடுத்து கிணற்றினுள் தேடிய போது , கிணற்றினுள் சடலமாக காணப்பட்டுள்ளார். பின்னர் சடலம் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டு , உடற்கூற்று பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். அதேவேளை தற்போது மழை காலம் ஆரம்பித்துள்ளதால் , நீர் நிலைகளின் நீர் மட்டம் அதிகரித்துள்ளமையால் , அவற்றில் நீராடுதலை தவிர்க்குமாறு பொலிஸார் கோரியுள்ளனர். https://www.virakesari.lk/article/230285
2 months 3 weeks ago
பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் ஆண்டனி ஸுர்கர் வட அமெரிக்க செய்தியாளர், வாஷிங்டன் 5 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்க வரலாற்றில் மிக நீண்ட அரசாங்க முடக்கம் 43 நாட்களுக்குப் பிறகு முடிவுக்கு வந்துள்ளது. அமெரிக்க அரசு ஊழியர்கள் மீண்டும் சம்பளம் பெறத் தொடங்குவார்கள். தேசிய பூங்காக்கள் மீண்டும் திறக்கப்படும். குறைக்கப்பட்ட அல்லது முழுமையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு சேவைகள் மீண்டும் தொடங்கும். அனைத்தும் அமைதியான பிறகு, நிதி மசோதாவில் அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்ட மை காய்ந்த பிறகு, இந்தச் சாதனை படைத்த அரசு முடக்கம் என்ன சாதித்தது? அதன் விலை என்ன? செனட் சபையில் ஜனநாயகக் கட்சியினர் சிறுபான்மையினராக இருந்தபோதிலும், குடியரசுக் கட்சியினர் அரசாங்கத்திற்குத் தற்காலிகமாக நிதியளிக்கும் நடவடிக்கைக்கு ஒத்துழைக்க மறுத்ததன் மூலம் முடக்கத்தைத் தூண்ட முடிந்தது. ஆண்டின் இறுதியில் காலாவதியாகவிருந்த குறைந்த வருமானம் உடைய அமெரிக்கர்களுக்கான சுகாதார காப்பீட்டு மானியங்களை நீட்டிக்க குடியரசுக் கட்சியினர் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று அவர்கள் ஒரு நிபந்தனையை விதித்தனர். அரசாங்கத்தை மீண்டும் செயல்பட வைக்க ஒரு சில ஜனநாயகக் கட்சியினர் ஞாயிற்றுக்கிழமை, கட்சி ஒழுங்கை மீறி வாக்களித்த பின்னர், மானியங்கள் குறித்து செனட்டில் வாக்கெடுப்பு பற்றிய வாக்குறுதி மட்டுமே கிடைத்தது. ஆனால் குடியரசுக் கட்சியின் ஆதரவோ அல்லது பிரதிநிதிகள் சபையில் அவசியமான வாக்கெடுப்பு குறித்தோ எந்த வாக்குறுதியும் கிடைக்கவில்லை. இதனால், கட்சியின் இடதுசாரி உறுப்பினர்கள் கோபமடைந்துள்ளனர். பட மூலாதாரம், Getty Images கோபமடைந்த ஒரு தரப்பு நிதி மசோதாவுக்கு வாக்களிக்காத ஜனநாயகக் கட்சி செனட் சபை தலைவர் சக் ஷூமர் மீது, இந்த அரசை மீண்டும் திறக்கும் திட்டத்திற்கு ரகசியமாக உடந்தையாக இருந்தார் அல்லது திறமையற்றவராக இருந்தார் என அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இடைக்காலத் தேர்தல்களில் கிடைத்த வெற்றி தங்களுக்குச் சாதகமாக இருந்தபோதிலும் தங்கள் கட்சி சரணடைந்துவிட்டதாக அவர்கள் உணர்ந்தனர். இந்த முடக்கத்தின் மூலமாகச் செய்யப்பட்ட தியாகங்கள் அனைத்தும் வீணாகிவிட்டதோ என்று அவர்கள் அஞ்சுகின்றனர். கலிபோர்னியாவின் ஆளுநர் கவின் நியூசோம் போன்ற பிரதான ஜனநாயகக் கட்சியினர்கூட முடக்க ஒப்பந்தத்தை "பரிதாபகரமானது" மற்றும் "சரணாகதி" என்று அழைத்தனர். நியூசோம் 2028இல் அதிபராக வேண்டுமென்ற லட்சியங்களைக் கொண்டவர் என்பதால் கட்சியினரின் மனநிலையை அறிய அவர் ஒரு நல்ல அளவுகோலாக இருக்கலாம். அவர் ஜோ பைடனின் விசுவாசமான ஆதரவாளராக இருந்தார். மேலும் டிரம்புக்கு எதிராக பைடனின் விவாத செயல்திறன் மிக மோசமாக இருந்தபோதும் அப்போதைய அதிபருக்கு ஆதரவாகக் குரல் கொடுக்க முன்வந்தார். அவர் கோபமாக இருந்தால், அது ஜனநாயகக் கட்சித் தலைவர்களுக்கு நல்ல அறிகுறி அல்ல. பட மூலாதாரம், Getty Images டிரம்ப் மனநிலை என்ன? டிரம்பை பொறுத்தவரை, செனட் முட்டுக்கட்டை ஞாயிற்றுக்கிழமை உடைந்ததில் இருந்து, அவரது மனநிலை எச்சரிக்கை நிறைந்த நம்பிக்கையில் இருந்து கொண்டாட்டத்தை நோக்கித் திரும்பியுள்ளது. செவ்வாய்க் கிழமையன்று, அவர் நாடாளுமன்றத்தின் குடியரசுக் கட்சியினருக்கு வாழ்த்து தெரிவித்தார் மற்றும் அரசாங்கத்தை மீண்டும் இயக்க வாக்களித்ததை "மிகப்பெரிய வெற்றி" என்று அழைத்தார். "நாங்கள் எங்கள் நாட்டைத் திறந்து வைக்கிறோம். அது ஒருபோதும் மூடப்பட்டிருக்கவே கூடாது," என்று வீரர் தின நினைவேந்தலில் கூறினார். டிரம்ப், ஷூமர் மீதான ஜனநாயகக் கட்சியின் கோபத்தை உணர்ந்து, திங்கள் கிழமை இரவு ஃபாக்ஸ் நியூஸ் நேர்காணலின்போது அதைப் பயன்படுத்திக் கொண்டார். "குடியரசுக் கட்சியை உடைக்க முடியும் என்று அவர் நினைத்தார். ஆனால் குடியரசுக் கட்சியினர் அவரை உடைத்தனர்," என்று ஜனநாயகக் கட்சியின் செனட் தலைவரைப் பற்றி டிரம்ப் கூறினார். டிரம்ப் சில நேரங்களில் பின்வாங்குவது போலத் தோன்றிய போதும், அரசாங்கத்தை மீண்டும் இயக்க இருந்த முட்டுக்கட்டையை அகற்ற மறுத்ததற்காக, அவர் கடந்த வாரம் செனட் குடியரசுக் கட்சியினரைக் கண்டித்தார். அவர் இறுதியில், குறிப்பிடத்தக்க சலுகைகள் எதையும் வழங்காமல் அரசு முடக்கத்தில் இருந்து வெளியே வந்தார். கடந்த 40 நாட்களில் கருத்துக் கணிப்புகளில் அவரது எண்கள் குறைந்து இருந்தாலும், குடியரசுக் கட்சியினர் இடைக்காலத் தேர்தல்களை எதிர்கொள்ள இன்னும் ஒரு வருடம் இருக்கிறது. அடுத்து என்ன? முடக்கம் முடிவடைந்தவுடன், நாடாளுமன்றம் அதன் வழக்கமான நிகழ்ச்சி நிரலுக்குத் திரும்பும். பிரதிநிதிகள் சபை ஒரு மாதத்திற்கும் மேலாகப் பயனுள்ள செயல்பாடில்லாமல் இருந்தாலும், அடுத்த ஆண்டு தேர்தல் சுழற்சி தொடங்குவதற்கு முன்பு சில முக்கிய சட்டங்களை நிறைவேற்ற முடியும் என்று குடியரசுக் கட்சியினர் இன்னும் நம்புகிறார்கள். முடக்கத்தை முடிவுக்குக் கொண்டு வரும் ஒப்பந்தத்தில் சில அரசுத் துறைகளுக்கு செப்டம்பர் வரை நிதியளிக்கப்பட்டாலும், மற்றொரு முடக்கத்தைத் தவிர்க்க ஜனவரி மாத இறுதிக்குள் மீதமுள்ள அரசாங்கத்திற்கான செலவினங்களுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்க வேண்டும். தங்கள் காயங்களை ஆற்றி வரும் ஜனநாயகக் கட்சியினர், மீண்டும் மோதுவதற்கான ஒரு வாய்ப்புக்காக ஏங்கலாம். இதற்கிடையில், அவர்கள் எழுப்பிய சுகாதார மானியங்கள் பிரச்னை, இந்த வருட இறுதியில் தங்கள் காப்பீட்டுச் செலவுகள் இரு மடங்கு அல்லது மும்மடங்காக அதிகரிப்பதைக் காணப் போகும் கோடிக்கணக்கான அமெரிக்கர்களுக்கு ஒரு கவலையாக மாறக்கூடும். அத்தகைய வாக்காளர் வலியை புறக்கணித்தால் குடியரசுக் கட்சியினர் தங்கள் சொந்த அரசியல் ஆபத்தை எதிர்கொள்வார்கள். மேலும் அது மட்டுமே டிரம்ப் மற்றும் குடியரசுக் கட்சியினர் எதிர்நோக்கியிருக்கும் ஒரே ஆபத்து அல்ல. பிரதிநிதிகள் சபையில் அரசுக்கு நிதியளிக்கும் வாக்கெடுப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டிய நாளில், சமீபத்தில் மரணமடைந்த தண்டனை பெற்ற பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீன் பற்றிய சமீபத்திய செய்திகளைப் பற்றிப் பேசுவதிலேயே அதிக நேரம் சென்றது. புதன்கிழமை பிற்பகுதியில், நாடாளுமன்ற உறுப்பினர் அடெலிடா கிரிஜால்வா பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். மேலும் எப்ஸ்டீன் வழக்கு தொடர்பான அனைத்துக் கோப்புகளையும் வெளியிட நீதித் துறைக்கு உத்தரவிட சபையில் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று கோரும் மனுவில் 218வது நபராக, இறுதி நபராக கையெழுத்திட்டார். தனது அரசுக்கு நிதி பெறுவதில் பெற்ற வெற்றி மறைக்கப்படுவதாகத் தனது ட்ரூத் சோஷியல் இணையதளத்தில் டிரம்ப் புகார் கூற இதுவே போதுமானதாக இருந்தது. "முடக்கத்திலும், வேறு பல விஷயங்களிலும் அவர்கள் எவ்வளவு மோசமாகச் செயல்பட்டார்கள் என்பதிலிருந்து திசைதிருப்ப எதையும் செய்யத் துணியும் ஜனநாயகக் கட்சியினர், ஜெஃப்ரி எப்ஸ்டீன் புரளியை மீண்டும் கொண்டு வர முயல்கின்றனர்," என்று அவர் எழுதினார். சிறப்பாகத் திட்டமிடப்பட்ட திட்டங்கள் மற்றும் அரசியல் உத்திகள் ஒரு நொடியில் தடம் புரளக்கூடும் என்பதற்கான மிகத் தெளிவான நினைவூட்டலாக இது உள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/crl275jjyx1o
2 months 3 weeks ago
எங்களில் பலருக்குள்ளும் இதே கேள்வி இருந்து கொண்டேயிருக்கின்றது, கிருபன். பாசம், மனிதாபிமானம், குற்ற உணர்வு, விளம்பரம் என்று, நீங்கள் சொல்லியிருப்பது போலவே, பல வகையான உந்துதல்கள் இருக்கின்றன. நாங்கள் செய்யும் சில செயல்கள் கூட இதில் எந்த வகை என்று தெரியாமல் குழம்பிப் போய் நிற்பதும் உண்டு என்றே நினைக்கின்றேன். விளம்பர வகை என்று வரும் போது ஒப்பீட்டளவில் கொஞ்சம் இலகுவாக அவற்றை உணர முடிகின்றது, உதாரணம்: சுதா நாராயணமூர்த்தியின் சேவைகள் பற்றி வரும் துணுக்குகள் போன்றவை. மற்றைய வகைகளை பிரித்தறிவது சிரமம் போல. நீண்ட பல வருட செயற்பாடுகளின் பின் இதுவரை இவற்றால் விளைந்த பயன்கள் என்ன என்ற கேள்வி சில சமயங்களில் பலருக்கும் ஒரு அயர்ச்சியை கொடுக்கக்கூடும். ஆனால் ஜெயமோகன் அவர்கள் சொல்லியிருப்பது போல சில விடயங்களில் ஒரு சமூகமாக நாங்கள் பயன்களை கணக்குப் போட்டுப் பார்க்கவும் கூடாது என்றே தோன்றுகின்றது.
2 months 3 weeks ago
“விஜய் கட்சியை சேர்ந்தவர்களை தற்குறிகள் என திமுகவினர் விமர்சிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும். அந்த இளைஞர்கள் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் இருந்து வந்திருக்கிறார்கள். அவர்களிடம் நாம்தான் போய் பேச வேண்டும். அவர்களிடம் பேசாமல் விட்டது நம் தவறு. தற்போது திமுகவில் 200 இளம் பேச்சாளர்கள் பயிற்சி பெற்றுள்ளார்கள். அவர்கள் இந்த இளைஞர்களிடம் பேச வேண்டும். நாம் அவர்களுடன் உரையாட வேண்டும். விமர்சனம் செய்யக் கூடாது. அவர்களை அரசியல்படுத்த வேண்டியது நமது கடமை” - இது ’திமுக 75 - அறிவுத் திருவிழா’ என்ற பெயரில் நடைபெற்ற மாநாட்டில் ஆயிரம் விளக்கு திமுக எம்எல்ஏ எழிலன் நாகநாதன் பேசியது. இணையத்தில் அவரது பேச்சு வைரலாகிக் கொண்டிருக்கிறது. ‘சிலர் இது திமுக அதிருப்தி பேச்சு என்று கதை கட்டிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், அலசி ஆராய்ந்தால் எழிலனின் சிந்தனை ஆழ்ந்த அர்த்தம் பொதிந்தது. திமுகவுக்கு சுயபரிசோதனை பேச்சு என்பதை மறுக்க முடியாது என்பதுபோலவே தவெகவை, விஜய்யை தோலுரிக்கும் பேச்சும் கூட’ என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். அரசியல்படுத்துவது எனப்படுவது யாதெனில்? - திராவிடக் கட்சிகளின் தொடக்கக் காலங்களில் இளைஞர், இளம்பெண்கள் பாசறைகள் வளர்த்தெடுத்தவர்கள் தான் இன்று அக்கட்சிகளில் கோலோச்சியுள்ள முகங்கள் எனலாம். இடதுசாரி கட்சிகளும் இதில் சளைத்தது இல்லை. விசிகவும் கூட இளைஞர்களை அரசியல்படுத்துவதில் தீவிரமாகவே செயல்பட்டு வருகிறது. ஆனால், புதிதாய் முளைத்த தவெக இந்த மாதிரியான எந்த முன்னெடுப்புகளையும் எடுக்காமலேயே ‘தொண்டர்’ படையை வைத்திருப்பதாக மார்தட்டிக் கொண்டிருக்கிறது. இந்தக் கூட்டம் பற்றிதான் அரசியல் நிபுணர்கள் தங்களின் பரந்துபட்ட பார்வையை முன்வைத்தனர். அவர்கள் கருத்துகளின் தொகுப்பு வருமாறு: ADVERTISEMENT “குழந்தைகள் வளரும்போதே அவர்களுக்கு அரசியலை அறிமுகப்படுத்த வேண்டியது அவசியம். நம்மில் எத்தனை வீடுகளில் குழந்தைகளுடன் செய்தி வாசிக்கிறோம். அரசியல் பேசுகிறோம் என்று எண்ணிப் பார்க்க பத்து விரல்கள் கூட தேவையில்லை. அந்தளவுக்கு வீடுகளில் அரசியல் தீண்டத்தகாத பொருளாக இருக்கும்போது தாங்கள் திரையில், பேஸ்புக்கில், இன்ஸ்டாவில் கொண்டாடி ரசிக்கும் ஒருவர் நான் அரசியல் செய்யப்போகிறேன், முதல்வராகப் போகிறேன் என்று வந்து நின்றால், மிக எளிதாக அவர் பக்கம் இளம் தலைமுறையினர் சாய்ந்துவிடுவர். அதுதான் விஜய் கட்சியில் நடந்து கொண்டிருக்கிறது. தனது சினிமா ஹீரோ படம் ஃப்ளாப் ஆனாலும் முட்டுக் கொடுப்பதுபோலத் தான் கரூர் நெரிசலில் குழந்தைகளைப் பறிகொடுத்தவர்கள் கூட விஜய்க்கு முட்டு கொடுக்கிறார்கள். வீடு என்பது வெறும் கூடாரம் அல்ல. அது அரசியல் தன் பிரக்ஞையோடு குழந்தைகளை வளர்த்தெடுபது. அதேவேளையில் முக்கியமாக மனதில் கொள்ள வேண்டியது அரசியல் திணிப்பாக இருக்கக் கூடாது.” இது தந்திரமா? - “விஜய் கட்சித் தொண்டர்கள் அரசியல்மயமாக்கப்படாததால் தான் அவர்கள் விஜய் பிரச்சார வாகனத்தை உயிரைப் பணயம் வைத்து தொடர்ந்தார்கள். அதனால்தான் செய்தியாளரை சீண்டி விளையாடுகிறார்கள். அதனால்தான் அரசியல் பிரசாரத்துக்கு குடும்ப விழா போல் குழந்தைகளைக் கூட்டி வந்து பறிகொடுத்தார்கள். ஆனால், அந்த சமூகப் பிழையை மறைத்து அவர்களை ‘தற்குறிகள்’ எனப் பொதுமைப்படுத்துவது, இழிவுபடுத்துவது ஓர் அரசியல் தந்திரம். அதுவும் நிச்சயமாக எழிலன் குறிப்பிட்டதுபோல் ஒரு குறிப்பிட்டக் கட்சியின் சதியாகவும் இருக்கலாம் என்பதில் உடன்படுகிறேன்” என்று கூறுகிறார் கள அரசியல் நிபுணர் ஒருவர். இது குறித்து அவர் மேலும் விவரிக்கையில், “விஜய் ரசிகர்களை / தவெக தொண்டர்களை நாம் தமிழர் கட்சியில் கூடிக் கலையும் தொண்டர்களோடு ஒப்பிடலாம். சீமானின் திரைபிம்ப அடையாளம், தமிழ்த் தேசிய் உத்வேகப் பேச்சால் அவர் கட்சியில் இணைந்த பலர் ஒரு சில ஆண்டுகளில் அதிலிருந்து விலகி பிற கட்சிகளிலோ இணைவதைப் பார்த்திருக்கிறேன். என்னைப் பொறுத்தவரை ஒரு மெட்ரோ நகருக்கு வரும் ஃப்ளோட்டிங் பாப்புலேஷன் போல் அவர் கட்சியில் ஒரு கூட்டம் உள்ளே வருவதும், வெளியே செல்வதுமாக இருக்கும். அதுபோல் தான் இளைஞர் பட்டாளம் ஒன்று இப்போது தவெகவில் ஐக்கியமாகியுள்ளது. கொள்கை பிடிப்போ, லட்சியமோ கோட்பாடோ இல்லை. ஈர்ப்பரசியலில் சிக்கியவர்களே இவர்கள். அரசியல் பழகாமல் ஆர்ப்பரிக்கும் கூட்டம், அது சார்ந்த கட்சிக்கு மட்டுமல்ல, மாநில அரசியலுக்கே ஆபத்து. உணர்ச்சிவசப்பட்டு கோஷம் போடுபவர்கள் இன்னும் வாக்கு அதிகாரம் பெறாத இளம் தளிர்களையும் தங்கள் பாதையில் இழுக்கும் ஆபத்து அதிகம். இது புற்றுநோய் போன்றது. ஆரம்பக்கட்டத்தில் கண்டறிந்துவிட்ட நிலையில் அதற்கான சிகிச்சையை சரியாகச் செய்ய வேண்டும். அதுதான் அரசியல்மயமாக்குவது. விஜய் கட்சியினரை தற்குறிகள் என்பது எலீட் அரசியல்வாதிகளின் ‘ஆர்கஸ்ட்ரேட்டட் பாலிடிக்ஸ்’. அவர்களை அரசியல்படுத்த வேண்டும் என்ற எழிலனின் யோசனையும் அரசியல்தான். ஆனால், அதன்மூலம் விட்டேத்தியாக திரியும் இளைஞர்களை அரசியல்மயமாக்கலாம். அதன்மூலம் அவர்களுக்கு திமுகவுக்கு மடைமாற்றலாம். அல்லது குறைந்தபட்சம் விழிப்புணர்வு உடையவர்களாவது மாற்றலாம்” என்றார். எப்படி உருவானது இந்த வெற்றிடம்? - “விட்டில் பூச்சிகள் விளக்கை நோக்கிப் பாய்வது போல் பெருமளவிலான இளைஞர் கூட்டம், ஏன் ஜென்ஸீ தலைமுறை என்று வைத்துக் கொள்வோம் எப்படி தவெக, தவெக என்று மார்தட்டுகிறது என்று பார்த்தால் ஓர் அரசியல் வெற்றிடம் உருவாகியுள்ளதை மறுக்க முடியாது” என்கிறார் இன்னொரு அரசியல் விமர்சகர். அவர் கூறியதாவது: "திமுகவில் கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், இன்பநிதி என்று வாரிசு அரசியல் பட்டவர்த்தமாகிக் கொண்டிருக்கிறது. அதிமுகவில் இபிஎஸ் vs ஓபிஎஸ், இபிஎஸ் vs ஓபிஎஸ், டிடிவி, சசிகலா, செங்கோட்டையன் என்று உள்கட்சி அரசியல் நீண்டு கொண்டிருக்கிறது. விஜயகாந்த் உருவாக்கிய தேமுதிக அவர் உடல்நலம் தேய ஆரம்பத்திலிருந்தே தேய ஆரம்பித்துவிடது. விசிக, இடது சாரிகள், காங்கிரஸ் தனியாக வருவதில்லை கூட்டணி அரசியல்தான் சரி என்று சேஃப் ஜோன் பாலிடிக்ஸ் செய்து கொண்டிருக்கிறது. மலர்ந்தே தீரும் என்று தாமரைக் கட்சி தடம் பதிக்க முயன்று கொண்டிருக்கிறது. இப்படியான சூழலில் தான் விஜய் என்ட்ரி கொடுக்கிறார். நான் கோடிகளில் வாங்கும் சம்பளத்தை உதறுகிறேன்; கரியர் உச்சத்தை கைவிடுகிறேன்; அரசியல் வாரிசும் அல்ல கட்சியை அடகுவைக்கும் செயலையும் செய்ய மாட்டேன் என்று ரவுண்டு கட்டி கம்பு சுத்துகிறார். மேம்போக்காக அவர் சொல்வதெல்லாம் ஓரளவுக்கு உண்மைதான் என்றாலும் கூட, அதற்காக மட்டுமே அரசியல் கத்துக்குட்டி கையில் ஆட்சியை எப்படிக் கொடுக்க முடியும். இது ஆண்ட, ஆளும் கட்சியினர் சுயபரிசோதனை செய்ய வேண்டிய காலம். விஜய் தாராளமாக அரசியல் கட்சி நடத்தட்டும், ஆட்சிக்கு ஆசைப்படட்டும். ஆனால் அவரும், அவர் கட்சி விசிறிகளும் அரசியல்மயமாக்கப்படாத நிலையில் அவருக்கு ஓட்டுப்போடுவது எந்த மாதிரியான எதிர்காலத்தை உருவாக்கும் என்பது கணிக்க முடியாதது” என்று காட்டமாக விமர்சித்தார். ‘ஏன் என்ற கேள்வி கேட்காமல்...’ - தமிழகத்தில் எடுப்பார் கைப்பிள்ளையாக நிறைய இளைஞர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அரசியல் மாற்றாக கருதிக் கொள்ளும் கட்சியாக தவெக நிற்கிறது. அதுதான் முடிவு என்று அவர்கள் தீர்மானிக்கும் முன்; அதையும் தாண்டி நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. ஆழ்ந்து யோசித்து தேர்ந்தெடுங்கள் என்று அவர்களை அரசியல்மயமாக்க வேண்டும். “ஒரு தொண்டனுக்கு தேவைப்படும்போது அவனுடம் நிற்பவன்தான் தலைவன். திரையில் வீர ஆவேச வசனங்களும், ஃப்ரெண்ட்லி ஜெஸ்ச்சரும் காட்டுவதால் நிஜத்திலும் விஜய் அப்படியானவராகவே இருப்பார் என்று கூறிவிடமுடியாதல்லவா? இயல்பில் அவர் சற்றே தனிமை விரும்பி என்று அவரை அறிந்தவர்கள் கூறுகின்றனர். இருக்கட்டும், ஆனால் பொது வாழ்வுக்கு வருவதென்று முடிவெடுத்து, முதல் தேர்தலிலேயே முதல்வராகத்தான் ஆவேன் என்று பேசினால், ஊடகங்களை சந்திக்க, அவர்கள் கேள்விகளுக்கு பதில் சொல்ல துணிச்சல் இருக்க வேண்டாமா? அப்படியான சிறு அறிகுறி கூட விஜய்யிடம் இல்லையே. அவரை எப்படி நான் அரசியல் மாற்றாகப் பார்க்க முடியும்” என்று கேள்வி எழுப்பச் செய்ய வேண்டும். குடும்ப அரசியலையும் கேள்வி கேட்கச் செய்ய வேண்டும்; கோஷ்டிப் பூசலையும், அடகுவைக்கும் அரசியலையும் விமர்சிக்கக் கற்றுத்தர வேண்டும். இளைஞர்கள் அரசியலில் மூழ்கித் தெளிவார்கள். அது நிச்சயம் சாக்கடை அல்ல என்பதை அவர்களே உணர்வார்கள். ஏன் என்ற கேள்வி கேட்காவிட்டால் வாழ்க்கை மட்டுமல்ல அரசியல் வாழ்க்கையும் இருக்காது என்பதே நிதர்சனம். ‘தற்குறிகள் என விமர்சிக்காதீர்!’ - எழிலனின் கவனம் ஈர்த்த பேச்சும், பின்புல அரசியலும் | DMK MLA' viral speech about TVK cadres and an insight into Vijay's politics - hindutamil.in
Checked
Wed, 02/11/2026 - 05:36
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed