புதிய பதிவுகள்2

முளையில் கிள்ளாததை வெட்டிவிடுதல் - லக்ஸ்மன்

3 months 1 week ago
முளையில் கிள்ளாததை வெட்டிவிடுதல் - லக்ஸ்மன் முளையிலேயே கிள்ளப்படாத விடயங்களான இனத்துவேசம், பேரினவாதம், பாரபட்சம், அடக்குமுறைகள், ஆதிக்கத்தன்மை போன்றவற்றினை நன்றாக வளர்ந்துவிட்ட பின்னர் சரிசெய்து விடலாம் என்று எண்ணங்கொள்வது சாத்தியத்துக்குட்படுத்த முடியாதது என்பதே யதார்த்தம். இந்த யதார்த்தத்தைக் கடந்து செல்ல நினைப்பது குதிரைக் கொம்பானது. இதனையே மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) தலைமையிலான தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் செய்ய நினைக்கிறது. காலம் கடந்த பின்னர் அதனையும் பூசி மெழுக நினைப்பதல்ல, முனைவது, நல்லிணக்கத்தை ஏற்படுத்த முயல்வது எந்த அடிப்படையில் நாட்டில் இலங்கையர் என்ற உணர்வை ஏற்படுத்தும் என்பதுதான் இந்த இடத்திலுள்ள கேள்வி. மக்கள் விடுதலை முன்னணியினர் இவ்வாறான கொள்கையை தேர்தல் காலத்திலோ அதற்கு முன்னரோ வெளிப்படையாக முன்வைத்திருக்கவில்லை. கொள்கையை வெளிப்படுத்தாமல், முன்வைக்காமல் தேர்தல் முடிந்து ஆட்சிக்கு வந்தபின்னர் வெளிப்படுத்துவது இவர்களுடைய இதய சுத்தியை அல்லது உள் மனச்செயற்பாட்டை சந்தேகத்துக்கே உட்படுத்துகிறது எனலாம். பாராளுமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இலங்கை தொடர்பான வெளிப்புற முயற்சிகள் தற்போதைய தேசிய செயற்பாடுகளுக்கு எதிரான நடவடிக்கையாக அமையும் என்பதுடன், சமூகங்களை தேவையில்லாமல் துருவப்படுத்தும் தலையீடு தொடர்பாக மனித உரிமைகள் பேரவையின் அறிக்கையில் உள்ள முடிவுகள் மற்றும் பரிந்துரைகளுடன் அரசாங்கம் உடன்படவில்லை என்று தெரிவித்திருக்கிறார். இது ஒரு வெறும் கருத்து என்ற கணக்கில் விட்டுவிடக்கூடிய கருத்தல்ல. அதே நேரத்தில் வெறுமனே இலங்கையில் மனித உரிமை மீறல்கள் மாத்திரமே நடைபெற்றிருக்கின்றன. அவற்றினை விசாரித்துவிட்டால் நாட்டிலுள்ள இனப்பிரச்சினைக்கான தீர்வு கிடைத்துவிடும் போன்றதான கருத்துநிலையில் பிரதமருடைய உரை அமைந்திருந்தது. திட்டமிட்டவகையிலான குடியேற்றங்கள், பௌத்த மயமாக்கல் செயற்றிட்டங்கள், கல்வியில் தரப்படுத்தல், விகிதாசார முறைப்படுத்தல் என கட்டமைக்கப்பட்ட வகையில் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகள் இலங்கையில் நடைபெற்றன. இப்போதும் இச் செயற்பாடுகள் முற்றுமுழுதாக நிறுத்தப்பட்டுவிட்டன என்று உறுதியாக கூறமுடியாத நிலைமையே தொடர்கிறது. ஆயுத யுத்தம் தொடங்கப்பட்டது முதல் வெவ்வேறு வழிமுறைகள் மூலம் இவ்வாறான செயற்றிட்டங்கள் நகர்த்தப்பட்டிருக்கின்றன. யுத்த ஓய்வுக்குப் பின்னரும் வேறு பல வடிவங்களாக நடைபெற்றன. அந்த வகையில்தான் இப்போதும் இலங்கையின் அரசாங்கத்தில் நம்பிக்கையற்ற தமிழர்கள் சர்வதேச பிரசன்னம், சர்வதேச போர்க்குற்ற விசாரணை, சர்வதேச நீதி வழங்கலைக் கோருகின்றனர். இதனை தவறென்றோ, பிழையென்றோ யாரும் கூறுவார்களானால் அவர்கள் கடந்தகால அனுபவத்தில் இதுவரை எதனையும் கற்றுக்கொள்ளவில்லை என்ற முடிவுக்கே வரமுடியும். அதனால்தான், பௌத்த மயமாக்கல் நிறுத்தப்படவேண்டும் என்ற அடிப்படையில் பௌத்த மயமாக்கல் எதிர்ப்பைத் தமிழ்த் தரப்பு கையில் வைத்திருக்கிறது. அதே போன்றுதான் இலங்கையின் பேரினவாதத் தரப்பில் நம்பிக்கையற்றுப் போனமையினாலேயே இனப்பிரச்சினைக்கான தீர்வைப் பெற்றுக் கொள்வதற்கு சர்வதேசத்தின் பிரசன்னத்தையும் சர்வதேச நடைமுறைகளைகளையும் கோருகின்றனர். இதனைக் கைவிடுமாறு கோருவது எந்தவிதத்திலும் நியாயமாகாது என்பதும் நிலைப்பாடு. அத்துடன் அதற்கான உரிமையும் யாருக்குமில்லை என்பது தமிழர்களின் நிலைப்பாடு. காலம் கடத்தல்களையே ஒவ்வோர் அரசாங்கமும் கைக்கொள்வதற்குக் காரணம் எதிர்கால சந்ததியினை இலக்காகக் கொண்டது என்பது வெளிப்படையானதாக இருக்கின்ற நிலையில், யதார்த்தத்தை மறந்து தமிழர்கள் தங்களது நிலைப்பாடுகளைக் கைவிட்டு யதார்த்த அரசியலைப் பேச வேண்டும் என்கிற நிலைப்பாட்டில் ஜே.வி.பி. இருப்பது கவலைக்குரியது. அதற்காக அவர்கள் முன்வைப்பது புதிய அரசியல் யாப்பாக இருக்கிறது. இருந்தாலும் அது தமிழ் மக்களுக்கு சமத்துவமான நடைமுறையை ஏற்படுத்துவது எந்த அடிப்படையைக் கொண்டிருக்காது என்பது வெளியே வராத ஒன்றாக இருந்து வருகிறது. புதிய அரசியல் யாப்பின் ஊடாக இனப்பிரச்சினைத் தீர்வு உள்ளிட்ட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் உரிய தீர்வை காணமுடியும் என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்ற ஜே.வி.பி.யினர் இது தொடர்பில் கலந்துரையாடல்களை முன்னெடுத்து வருவதாக தகவல்கள் கசிந்து வருகின்றன. இந்தக் கலந்துரையாடல்களின் தீர்மானமானது எந்தவகையிலும் தமிழர்கள் எதிர்பார்க்கின்ற விடயங்களைத் தொட்டுவிடவில்லை என்பதே உண்மை. கடந்த ஒரு வருட கால ஆட்சியில் இதுவரையில் எட்டிவிட்ட விடயங்கள் என்று முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகளை அகற்றியது, போதைப்பொருள் மீட்புகள், அது தொடர்பான கைதுகளை மாத்திரமே பட்டியலிட முடியும். ஆனால், நாட்டில் புரையோடிப் போயிருக்கின்ற இனப்பிரச்சினைக்கான தீர்வொன்றே நாட்டின் முன்னேற்றத்துக்குரியதாக அமையும் என்பது மறக்கப்பட்டதாக இருந்து வருகிறது. நாட்டின் எதிர்காலத்துக்காக கொண்டுவரப்பட வேண்டிய முன்னேற்றங்கள் எதிர்காலத்தில் நகர்த்தப்படவுள்ள அரசியல் வியூகங்களில் தங்கிருக்கிறது என்பதனை இதுவரையில் உணர்ந்து கொள்ளாத ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தலைமையிலான தேசிய சபை புதிய அரசியல் யாப்பு என்பதற்குள் மாத்திரம் நின்றுகொண்டிருக்கிறது. அதில், தீர்வின்றி நீண்டுகொண்டிருக்கின்ற வடக்கு கிழக்குத் தமிழர்களின் அரசியல் பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், சகல இன, மத மக்களையும் பொதுமைப்படுத்தும் வகையிலேயே நகர்வுகள் காணப்படுகின்றன. ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் உருவாக்கப்படவுள்ள புதிய அரசியல் யாப்பில், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிப்பதும் அடங்கியிருக்கிறது. இருந்தாலும் இப்போதிருக்கின்ற ஜனாதிபதி அதிகாரத்தை மாற்றுவதற்கு ஜே.வி.பி. விரும்புமா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். ஆனால், 2029 ஆம்ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக ஜனாதிபதி ஆட்சி முறை ஒழிக்கப்படுமா? என்பது புரியா புதிரே. இலங்கை சுதந்திரமடைந்தது முதலே தொடர்ந்து கொண்டிருக்கின்ற இலங்கையின் இனப்பிரச்சினையைத் தீர்த்துவிடுவதில் அக்கறையற்றிருந்த இலங்கையின் அரசாங்கங்கள் தங்களது ஆட்சிகளை நகர்த்துவதிலேயே அக்கறை கொண்டிருந்தனர். சிறுபான்மையினரான தமிழ் மக்களின் உரிமைக்கான கோரிக்கையை மலினப்படுத்தும் செயற்திட்டங்களே திட்டமிடப்பட்டவகையில் நடைமுறைப்படுத்தப்பட்டன. இதனை மறுப்பவர்களும் மறந்தவர்களும் இலங்கையர்கள் என்று மக்களை ஒருநிலைப்படுத்துவதைப்பற்றி சிந்திப்பது வேடிக்கையானது. இலங்கையில், 1833இல் கோல்புறுக் - கமரன், 1929இல் மனிங், 1924இல் மனிங் - டெவன்சியர், 1931இல் டொனமுர், 1947இல் சோல்பரி என அரசியலமைப்புகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. 1948இல் பிரித்தானியரால் சுதந்திரம் வழங்கப்பட்ட பின்னரும் டொமினியன் அந்தஸ்திலேயே நாடு இருந்துவந்தது. பின்னர் 1972இல் குடியரசாக மாறியது. 1978இல் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு அரசியல் யாப்பு உருவாக்கப்பட்டது. 22 திருத்தங்களைக் கண்ட இலங்கையின் அரசியலமைப்பு கண்டிருக்கின்ற திருத்தங்கள் யாவும் அரசாங்கங்களின் தேவைகளுக்கும், நோக்கங்களுக்குமாகவே மேற்கொள்ளப்பட்டிருந்தன. 2015ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் ஏற்படுத்தப்பட்டபோது புதிய அரசியலமைப்பை உருவாக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. வேலைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும், ஜனாதிபதியாக இருந்த மைத்திரிபால சிறிசேனவின் செயற்பாட்டினால் அது இடைநடுவில் கைவிடப்பட்டிருந்தது. அதற்கு பேரினவாதத் தரப்பினருடைய செயற்பாடே காரணமாக இருந்தது. ஆட்சியிலிருக்கின்ற தேசிய மக்கள் அரசாங்கம் அரசியலமைப்பு திருத்தங்களை மேற்கொள்வதனை விடுத்து புதிய அரசியலமைப்பையே உருவாக்கவுள்ளதாக அறிவித்திருக்கிறது. இலங்கையின் அரசியலமைப்பானது மக்களது நலனைக் கருத்தில் கொண்டா? அரசியல் நலனை நோக்காகக் கொண்டா? மேற்கொள்ளப்படப்போகிறது என்பது முக்கியமாக கவனத்திலெடுக்கப்பட வேண்டும். குடியரசு அரசியல் யாப்பானது நாட்டில் ஆட்சி நடத்துபவர்களுக்கும் நாட்டு மக்களுக்குமான வழிகாட்டியாகும். ஆனால், அந்த வழிகாட்டியை தாங்கள் நினைத்த வேளைகளிலெல்லாம் ஆட்சியாளர்கள் தமக்கேற்றால் போன்று, தமது அரசியல் தேவைகளுக்காக மாற்றியமைப்புதுதான் இலங்கையில் நடைபெற்று வந்திருக்கிறது. அரசியலமைப்பையே தமக்Nகுற்றாற்போல மாற்றியமைக்கின்ற, நடைமுறைப்படுத்துகின்ற அரசாங்கங்களையுடைய நாட்டில் புரையோடிப்போயிருக்கின்ற இனப்பிரச்சினைக்கும், யுத்தத்தில் நடைபெற்ற குற்றங்களுக்கும், நியாயமான நடைமுறைகள் கைக்கொள்ளப்படுமா என்பது சந்தேகமானதே. அந்தவகையில்தான் முளையிலேயே கிள்ளப்படாததற்காக மரத்தை வெட்டுவதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலைப்பாட்டைக் கைக் கொள்வது சிறப்பானதாக இருக்கும் என்ற முடிவு கிடைக்கும். உள்ளகப் பொறிமுறையை கொண்டுவருதல் என்கிற நிலைமை அரசியலமைப்புக்கு வெளியே பயங்கரவாதத் தடைச்சட்டம் இருப்பது போன்று இல்லாத நிலைமையை, ஏம்மாற்றங்களை தமிழர்களுக்குத் தராது என்று நம்புவோம். ஏமாற்றங்களையே கடந்து வந்திரக்கின்ற தமிழர்களிடம் கொண்ட கொள்கையை கைவிடும்படி கூறும் ஜே.வி.பி. நாட்டின் கடந்தகால அனுபவங்களுக்குள் சென்றுவருதலே கட்டாயமாகும். https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/முளையில்-கிள்ளாததை-வெட்டிவிடுதல்/91-366933

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இணைய வழிச் செயலிமூலம் இனி அபராதம் செலுத்தலாம்

3 months 1 week ago
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இணைய வழிச் செயலிமூலம் இனி அபராதம் செலுத்தலாம் யாழ்ப்பாணத்தில் இணையவழி செயலி மூலம்(GovPay) போக்குவரத்து அபராதம் செலுத்தும்முறை நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் தலைமைப் பொலிஸ் நிலையத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. பொலிஸ் நிலையங்கள் அல்லது தபால் நிலையங்களுக்குச் செல்ல வேண்டிய அவசியமின்றி, போக்குவரத்து அபராதங்களை எளிதாகவும், விரைவாகவும், பாதுகாப்பாகவும் இணைய வழியில் செலுத்த அனுமதிப்பதன் மூலம் பொதுமக்களுக்கு அதிக வசதியை வழங்குவதே இந்த முயற்சியின் நோக்கமாகும் என பொலிஸார் தெரிவித்தனர். குறித்த நிகழ்வில் வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக்தனபால, யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் மாரப்பண, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள், பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரிகள், போக்குவரத்துப் பொலிஸார் உட்படப் பலரும் கலந்துகொண்டனர். https://newuthayan.com/article/யாழ்ப்பாணம்_மாவட்டத்தில்_இணைய_வழிச்_செயலிமூலம்_இனி_அபராதம்_செலுத்தலாம்

தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு

3 months 1 week ago
ஊடகங்கள் தரவாக (ஊடகங்களின் கருத்தை அல்ல) சொன்னதை தான் கருத்தில் எடுக்கலாம் என்பதை இப்போது தான் சிலர் விழித்து அதில் தொங்க தொடங்கி இருக்கிறார்கள். இப்போதும் ஓப்வதுது ஏனெனில் சிந்திக்காமல் ஒப்புவதே வழமையான பாணி தொடர்கிறது, ஊடக கருதக்களையும் தரவாக எடுத்து. ஏனெனில், முன்பு சொல்லப்பட்ட சில அம்சங்கள் பொருந்தி வருவதால். (அதன் முதல் எல்லாமே எடுகோள். அல்லது கதை விட்டது, கற்பனை, இப்போதும், அதில் கேள்வி கேட்டால் ... எல்லாமே முடிந்த கதை) எல்லாம் குற்றம்சாட்டப்பட்டவர் மறுக்காத போது தான் உறுதியான தோற்றப்பாடு. மறுவளமாக, இங்கு வெளிப்படையாக சொல்லதா எடுகோள், அவரின் மறுப்பு (எனும் தரவு) கருத்தில் எடுக்கப்பட தேவை இல்லை என்பது. (அனால், இங்குள்ள சிலரின் கற்பனை, அவரை விட தங்களுக்கு தெரியும் என்பது) ( இது நடக்காது என்று அவருக்கு தெரியாது என்ற கதை (வழக்கு, சொத்து முடக்கம் போன்றவை) ). ஏனெனில், முக்கியமாக சொத்துக்களை விற்று ஒன்றும் தேறாது (வியாபரம் நன்றாக நடந்த காலத்திலும்), ஏனெனில் கடன் வாங்கி சிறிய காலம், அதற்குள் வியாபாரம் சிறிது ஏறி பின் குறைய தொடங்கி விட்டது. சொத்துக்களும சரிய தொடங்கி இருக்கும். இங்கே, மற்றவர்கள் சிந்திக்க மாட்டார்கள் என்று விட்டு சிலர் இப்போதும் அளப்பது. வீட்டை கூட இறுதியிலேயே போடப்பட்டது (வாடைக்கு எனும் சில செய்திகள், விற்பனைக்கு வேறு சில செய்திகள்). வீடு ஏன் விற்பனை / வாடை என்ற கேள்வியை தடுப்பதற்கும் இப்படியான இடத்தில ள்ள இப்படியான வீடுகள் (வெளிப்படுத்தாமல்) எதிர்காலத்தில் விற்கப்படுவதற்கு / வாடைக்கு நிகழ்கால ஒப்பந்த வசதிகள் இருக்கிறது. (வாங்குபவரும், விற்றுபவரும் கூட நாட்டி இருக்க தேவை இல்லை, அப்படி ஒப்பந்த அமைப்பு இருக்கிறது.) அப்படி திட்டமிட்டு இருந்தால், எல்லாற்றையும் படிப்படியாக விற்று, இங்கு கதைவிடப்பட்டது போல் களவு எடுத்து கொண்டு ஓடி இருக்க வேண்டும். விடப்பட்ட மிகப்பெரிய கதை, அதன் சாத்தியக்கூறுகளை கூட பார்க்காது. வேறு பல கதைகளும். தலைமறைவு ஊடக கருத்து - தொடர்பு கொள்ள முடியாமை அரசாங்கம் சொல்லியது - அவரின் பார்வை தெரியாது. (ஆம், இருக்கிறது, மிகுந்த அழுத்தத்தில் இருந்து மீள எவரும் தலையிடமுடியாத தனிமை தேவைப்பட்டது, தலைமறைவு நோக்கம் அல்ல - இது என் கருத்து). அதே போல, எவ்வளவு தொகை அவர்கள் போட்டு இருந்தாலும், தொடக்கத்துக்கு இந்த குற்றச்சாட்டுக்களை சொல்வது யதார்த்தத்தில் பொருந்தி வரவில்லை. ஏனெனில், இரண்டு நிறுவன அமைப்புகள் சரிபார்த்து இருக்கும் - அரசாங்கம், மற்றது வங்கிகள். முக்கியமாக, இவர்களின் பணம் / சொத்து பின்புலம், மற்றும் தனிநபர் (நடத்தை) பின்புலம் (வங்கிகளும் இதை சரிபார்க்க வேண்டும், politically exposed persons அல்லது அந்த தொடர்பு, அதன் வழி பணம் போன்றவைக்கு, பணச் சலவை தடுப்பு போன்றவற்றில், ஆனால் அது மட்டும் அல்ல). ஆகவே, இடையில் செய்ததில் (வியாபாரத்தில்) தான் இந்த குற்றசாட்டுகளா என்பதும். அனால், ஊடகம் சொன்னதிலும் தேவையானது எடுத்து கொண்டு மிகுதி விடப்படுவது. வழமையாக செய்யப்படுவது, பின்பு அதை மற்றவர்கள் மீது சுமத்துவது. இஙகுள்ள சிலர், மற்றவர்கள் சிந்திக்க கூடாது / முடியாது, அல்லது தம் ஒப்புதலை ஏற்றுக் கொள்ள வேண்டும், அல்லது ஏனையோருக்கு ஒன்றும் தெரியாது என்ற மனநிலை. இது சவாலுக்கு உட்பாட்டால் பரிகாசம், வேறு கொச்சை பெயர்களை சொல்லியும். பரிகாசம் தொடங்கம் போதே தெரியும், அவர்களின் பகுதி கதையாவது கந்தல் என்று.

வடக்குத் திணைக்களங்களில் நேரமுகாமைத்துவம் அவசியம்; ஆளுநர் வலியுறுத்து!

3 months 1 week ago
வடக்குத் திணைக்களங்களில் நேரமுகாமைத்துவம் அவசியம்; ஆளுநர் வலியுறுத்து! வடக்கு மாகாணசபைக்கு உட்பட்ட திணைக்களங்கள் அனைத்திலும், நேர முகாமைத்துவம் பின்பற்றப்படவேண்டும். திணைக்களத்தலைவர்கள் முன்னுதாரணமாகச் செயற்படவேண்டும். அத்துடன் சிறப்பாகச் செயற்படும் பணியாளர்களை ஊக்குவிக்கும்வகையில் அவர்களுக்கான கெளரவிப்புகளை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண அமைச்சுகளின் செயலாளர்கள், திணைக்களங்களின் தலைவர்களுடனான கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் கடந்தவாரம் இடம்பெற்றது .அதில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது- 5 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு திணைக்களத்தில் பணியாற்றும் பணியாளர்களை இடமாற்றம் செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கவேண்டும். தகுதியில்லாத திணைக்களத் தலைவர்கள் அல்லது பணியாளர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கான இடமாற்றங்கள் அல்லது நடவடிக்கைகள் தயவுதாட்சண்யமின்றி எடுக்கவேண்டும். தனியே யாழ்ப்பாண மாவட்டம் மாத்திரம் வடக்கு மாகாணம் அல்ல. ஆளணிகள் முழுவதையும் யாழ்ப்பாணத்தில் வைத்திருக்கமுடியாது. ஏனைய 4 மாவட்டங்களுக்கும் யாழ். மாவட்டத்திலிருந்தே ஆளணிகளைப் பங்கீடு செய்யவேண்டியுள்ளது. அந்தப் பங்கீட்டை உரியவாறு முன்னெடுக்க வேண்டும். மாவட்டங்கள், பிரதேசங்களுக்கு என்று நிதிகளைப் பங்கீடு செய்யா மல் எந்தப் பிரதேசங்களுக்குத் தேவைகள் அதிகமோ அங்கு கூடியளவு நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும். அதற்கு ஏற்றவாறே திட்டங்களும் தயாரிக்கப்படவேண்டும். கடல் கடந்த தீவுகளில் கற்பிக்கும் ஆசிரியர்கள், அதிபர்களுக்கு ஆபத்துக் கொடுப்பனவை, பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் சுற்றறிக்கையை அடிப்படையாகக்கொண்டு வழங்குவதற்கான நடவடிக்கையை எடுக்கவேண்டும் என்றார். https://newuthayan.com/article/வடக்குத்_திணைக்களங்களில்_நேரமுகாமைத்துவம்_அவசியம்;_ஆளுநர்_வலியுறுத்து!

யாழுக்கு வருகை தந்தார் கவிஞர் வைரமுத்து

3 months 1 week ago
கவிஞர் வைரமுத்துவின் கரங்களில் ஈழத்தமிழர்களின் 'துருவேறும் கைவிலங்கு' ! தென்னிலங்கையின் அடிமைச் சிறையில் 16 ஆண்டு காலங்களாக தடுத்து வைக்கப்பட்டு ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த ஈழத்தமிழ் அரசியல் கைதி 'விவேகானந்தனூர் சதீஸ்' நெருக்கடிமிகு சிறைக்குள் இருந்து எழுதிய, 'துருவேறும் கைவிலங்கு' எனும் மெய்யாலானா நூல், 'குரலற்றவர்களின் குரல்' அமைப்பின் ஒருங்கிணைப்பாளர், மு.கோமகனால் பிரபல தென்னிந்திய கலைஞரான 'கவிஞர் வைரமுத்துவிடம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. 20 முதல் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இன்னும் பல தமிழ் அரசியல் கைதிகள் சிறை வைக்கப்பட்டிருக்கின்ற நிலையில், தென்னிலங்கையின் உயர்ந்த சுற்றுமதிற் சுவர்களுக்குள் துயரனுபவித்து வருகின்ற எமது உறவுகளின் வெளித்தெரியாத பல உண்மைகளின் மெய்ச் சாட்சியமாகப் பார்க்கப்படுகின்ற 'துருவேறும் கைவிலங்கு' எனும் இந்த ஆவண நூல், அனைத்துத் தரப்புகளினதும் கூர்ந்தவதானிப்புக்கு உட்படுத்தவேண்டியது கால அவசியமாகிறது. அந்த வகையில், "நீண்ட நெடும் போருக்கு பின்னரும் கூட, எமது தமிழினம் விடுதலைக்காக ஏங்குகின்ற வலிசுமந்த வாழ்வை அனுபவித்து வருகின்றது" என்கின்ற கனதிமிகு செய்தியினை, "ஈழத் தமிழினத்தின் விடுதலைப் பயணத்தில் பக்கத்து இருக்கைப் பங்காளியாக உறவுபூண்டு வருகின்ற தென்னிந்திய தேசத்திற்கு உரத்துச் சொல்ல வேண்டும்" என்பதற்காக ஈழத்தமிழ் திரைப்படத் தொடக்க விழா நிகழ்வுக்கு வருகை தந்திருந்த கவிஞர் வைரமுத்து அவர்களை, நேரில் சந்தித்த 'குரலற்றவர்களின் குரல்' அமைப்பு, இந்த நூலினை அவரிடம் கையளித்துள்ளது. நூலை கையேற்ற கவிஞர், "இந்த நூலின் தலைப்பே கைதிகளின் அவலக் கதியை பறைசாற்றுகின்றது" என ஆதங்கமடைந்ததுடன், கைதிகளின் நிலை பற்றியும் கேட்டறிந்துள்ளார். https://newuthayan.com/article/கவிஞர்_வைரமுத்துவின்_கரங்களில்__ஈழத்தமிழர்களின்_'துருவேறும்_கைவிலங்கு'_!

ஹிஸ்புல்லாவிடம் இருந்து 2 மில்லியன் அமெரிக்க டொலர் மோசடி?

3 months 1 week ago
ஹிஸ்புல்லாவிடம் இருந்து 2 மில்லியன் அமெரிக்க டொலர் மோசடி? பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் ஹிஸ்புல்லாவிடம் 2 மில்லியன் அமெரிக்க டொலரை மோசடி செய்த குற்றச்சாட்டில் 11 கானா நாட்டவர்கள் கைதாகி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தங்கம் விற்பனை என்ற போர்வையில் பணம் மோசடி செய்ததாக கானா தேசிய பாதுகாப்பு கவுன்சிலுக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது. 2023 ஆம் ஆண்டில் பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் ஹிஸ்புல்லாவுக்கு தங்கம் வழங்குவதாகக் கூறி குறித்த சந்தேக நபர்கள் 2 மில்லியன் அமெரிக்க டொலரை பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது. குறித்த பணத்தைப் பெற்ற பின்னர், சந்தேக நபர்கள் பாராளுமன்ற உறுப்பினருடனான அனைத்து தொடர்புகளையும் துண்டித்துக் கொண்டதாக அந்நாட்டு ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. பின்னர், பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாவுக்கு 50 கிலோகிராம் தங்கத்தை விற்பனை செய்ய சந்தேகநபர்கள் இணங்கியதாகவும் அதன் சட்டப்பூர்வமான தன்மையைக் கொடுக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றும் கையெழுத்திடப்பட்டிருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில், கானா தேசிய பாதுகாப்பு கவுன்சில் கடந்த ஒக்டோபர் 16ஆம் திகதி சந்தேக நபர்களை கைது செய்தது. அவர்கள் கைது செய்யப்பட்டபோது தங்கமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் இரண்டு மஞ்சள் உலோகங்களும் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு எதிர்வரும் நவம்பர் 20ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. https://www.samakalam.com/ஹிஸ்புல்லாவிடம்-இருந்து/

விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்களைப் பெற்றவர்கள் பட்டியலில் இரண்டாமிடம் - சங்காவை முந்தினார்

3 months 1 week ago
ஜ‌பிஎல் வ‌ருகையால் இவ‌ர் ப‌ல‌ ச‌ர்வ‌தேச‌ போட்டிக‌ளை த‌விர்த்து விட்டார் , தொட‌ர்ந்து விளையாடி இருந்தால் ச‌ச்சினின் சாத‌னையை உடைத்து உல‌க‌ சாத‌னை ப‌டைத்து இருப்பார்................................

ஒரு வாக்கின் சக்தியின் கதைகள்” நடைபெறும் குறும்படப் போட்டி!

3 months 1 week ago
ஒரு வாக்கின் சக்தியின் கதைகள்” நடைபெறும் குறும்படப் போட்டி! adminOctober 28, 2025 தேர்தல் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில்.”ஒரு வாக்கின் சக்தியின் கதைகள்” நடைபெறும் குறும்படப் போட்டி – 2025 தொடர்பாக யாழ்ப்பாண மாவட்ட பாடசாலை மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு நேற்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்றது. யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மாவட்ட பிரதித் தேர்தல் ஆணையாளர் இ.சசீலன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்ச்சியில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறையினரின் பங்கேற்புடன் விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது. குறும்படத்திற்கு கதை எழுதுவது எப்படி, புகைப்பட கருவி நுட்பங்கள் மற்றும் காணொளி செம்மையாக்கம், கையடக்க தொலைபேசியை பயன்படுத்தி குறும்படத்தை எப்படி உருவாக்குவது, செயற்கை நுண்ணறிவு (AI) பயன்படுத்தி குறும்படங்களை எவ்வாறு தயாரிப்பது உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் மாணவர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டது. இதன்போது யாழ் மாவட்ட பாடசாலைகளில் ஊடக கற்கைகள், நாடகம் அரங்கியல் கற்கை மாணவர்கள், ஆசிரியர்கள் என பலரும் கலந்துகொண்டனர். ஜனநாயக விழுமியங்களை மேம்படுத்துவதையும், ஆக்கப்பூர்வமான வெளிப்பாடு மூலம் தேர்தல் செயல்பாட்டில் இளைஞர்களின் பங்கேற்பை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டு, இலங்கைத் தேர்தல் ஆணையம் “ஒரு வாக்கின் சக்தியின் பௌரா கதைகள்” எனும் குறும்படப் போட்டியை இந்த ஆண்டு ஏற்பாடு செய்துள்ளது. திறந்த பிரிவு மற்றும் பாடசாலை மாணவர்களுக்கான பிரிவு என இக்குறும்பட போட்டியானது இரண்டு பிரிவுகளாக நடைபெற உள்ளது. இதற்கான தயாரிப்புக்களை சமர்ப்பிக்க வேண்டிய இறுதி திகதி நவம்பர் 14 ஆகும். தேர்தல் ஆணைக்குழுவின் இணையத்தளம் ஊடாக மேலதிக விபரங்களை அறிய முடியும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர் https://globaltamilnews.net/2025/222037/

வடக்குக்கான புகையிரத சேவை ஒரு வார காலத்திற்கு 4 மணி நேரம் தடைப்படும்!

3 months 1 week ago
வடக்குக்கான புகையிரத சேவை ஒரு வார காலத்திற்கு 4 மணி நேரம் தடைப்படும்! adminOctober 28, 2025 வடமாகாண ரயில் போக்குவரத்து நாளை மறுதினம் வியாழக்கிழமை தொடக்கம் ஒரு வாரத்துக்கு பகுதியளவில் தடைப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வடமாகாண ரயில் தண்டவாளங்களை சீர்செய்யும் நடவடிக்கையும், வடக்கின் ரயில் மார்க்கத்தைத் தரமுயர்த்தும் செயற்பாடுகளும் ஒரு வாரத்துக்கு முன்னெடுக்கப்படவுள்ளன. இந்தக் காலப்பகுதியில் காலை 10.15 மணி தொடக்கம் பிற்பகல் 2 மணிவரை பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன . இதையடுத்தே ரயில் சேவைகள் பகுதியளவில் இடைநிறுத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. https://globaltamilnews.net/2025/222041/

தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு

3 months 1 week ago
எனக்கு இந்த திரியினை பார்த்த பின்புதான் இந்த நபர்கள், இந்த விடயம் பற்றி தெரிகிறது, இதில் எதுவும் இமோசனல் இல்லை! அதோடு எனது கருத்து உங்களது கருத்து போல சாதாரணமானதுதான், நான் இவர்களில் தவறில்லை என நிறுவ முற்படவும் இல்லை, பொதுவாக நடைமுறையில் நடைபெறும் விடயங்களை அறிந்த விடயங்களை கூறுகிறேன், இதில் இமோசனலாக ஏதேனும் இல்லை. Volunteer Liquidation செய்திருந்தால் தொழிலாளிகளுக்கு முன்னுருமை அளித்து, அவர்களது கொடுப்பனவினையே முதலில் செய்திருப்பார்கள், ஆனால் இப்போது அனைத்து நிதி நிறுவனங்கள் முதலீட்டாளர்களுக்கு கொடுத்து ஏதாவது மிச்சமிருந்தால் மட்டுமே கடைசியாக தொழிலாளர்கள் பக்கம் திரும்புவார்கள்.

காணி மோசடிகள்⚠️: மக்களே அவதானம்❗| வெளிப்படுத்தல் உறுதி சட்டரீதியானதா? 🤔🤷‍♂| Thananchayan LL.B LL.M

3 months 1 week ago
In this video I explain, Kinds of Deeds, Legality of Deed of Declaration, Procedure of Deed of Declaration, Problems in the North and East Sri Lanka, Land Scams through Deed of Declaration, Duty of Notary Public, Procedure of Deed Attestation, Registration of Land, Prevention of Fraud, Land Sale Scams, And Etc. இந்த வீடியோவில், உறுதிகளின் வகைகள் எவை? வெளிப்படுத்தல் உறுதி என்றால் என்ன ? காணிப் பதிவு, வெளிப்படுத்தல் உறுதிகள்-காணி மோசடிகள், காணி மோசடிகளை தவிர்ப்பது எவ்வாறு ? என்ற தகவல்களுடன் விளக்கம் வழங்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு கட்டமைப்பு முழுமையாக அரசியல்மயமாகியுள்ளது – சாகர காரியவசம்

3 months 1 week ago
பொலிஸ் திணைக்களம் முழுமையாக அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது - நாமல் ராஜபக்ஷ குற்றச்சாட்டு 27 Oct, 2025 | 04:28 PM (இராஜதுரை ஹஷான்) பொலிஸ்மா அதிபர் அரசியல்வாதி போன்று செயற்படுகிறார்.பொலிஸ் திணைக்களம் முழுமையாக அரசியல்மயப்படுத்தப்பட்டுள்ளது.அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாகவே பொலிஸார் செயற்படுகின்றனர் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, மக்கள் பிரதிநிதி ஒருவரை பகிரங்கமாக சுட்டுக்கொலை செய்யும் நிலையே இன்று காணப்படுகிறது. இனந்தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்படும் அனைத்து கொலைகயையும் அரசாங்கம் பாதாளக் குழுக்களின் கணக்கில் சேர்க்கிறது. எதிர்க்கட்சியின் சகல உறுப்பினர்களும் பாதாளக் குழுக்களுடன் தொடர்புக்கொண்டுள்ளார்கள் என்று மக்கள் மத்தியில் தவறான நிலைப்பாட்டையும் அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளது. நல்லாட்சி அரசாங்கத்தில் தேசிய பாதுகாப்பை பலவீனப்படுத்தி புலனாய்வுத் தகவல்களை அலட்சியப்படுத்தியவர்கள் தான் இன்று பாதுகாப்பு துறையுடன் தொடர்புடைய உயர்பதவிகளில் உள்ளார்கள். இன்றும் புலனாய்வுத் தகவல்களை இவர்கள் அலட்சியப்படுத்துகிறார்கள். 323 கொள்கலகள் எங்கு சென்றது என்பது இன்றுவரை கண்டுப்பிடிக்க முடியவில்லை.இலங்கைக்கு இரண்டு கொள்கலன்களில் ஐஸ் போதைப்பொருள் வருவதாக சர்வதேச புலனாய்வுப் பிரிவு அரசாங்கத்துக்கு தகவலளித்தும் உரிய நடவடிக்கைகள் எடுக்கவில்லை.தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய விடயங்களை அரசாங்கம் தனது அரசியல் தேவைக்காக பயன்படுத்திக் கொள்கிறது. பொலிஸ்மா அதிபர் அரசியல்வாதி போன்று செயற்படுகிறார்.பொலிஸ் திணைக்களம் முழுமையாக அரசியல்மயப்படுத்தப்பட்டுள்ளது.அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாகவே பொலிஸார் செயற்படுகின்றனர். அரசியல் நோக்கங்களுக்கு அமைய பொலிஸ் திணைக்களம் செயற்பட்டால் நாட்டின் சட்டம் மற்றும் ஒழுங்கு மீதான மக்களின் நம்பிக்கை சிதைவடையும் என்றார். https://www.virakesari.lk/article/228813

கட்டடங்களை நிர்மாணிக்கும் பிரதேச சபையின் அனுமதி அவசியம்!

3 months 1 week ago
Oct 28, 2025 - 09:03 AM - வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குள் எந்தவொரு தரப்பினரானரும், கட்டடங்களை நிர்மாணிக்கும் போது பிரதேச சபையின் சட்ட விதிமுறைகளுக்கு ஏற்ப அனுமதிபெற்று கட்டடங்களை நிர்மாணிக்க வேண்டும் என வேலணை பிரதேச சபையின் தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமார் அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அண்மைக்காலமாக பிரதேச சபையின் ஆளுகைக்குள் பல்வேறு கட்டுமாணங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது. இதில் பல முறையான அனுமதி பெற்று நிர்மாண வேலைகளை முன்னெடுக்கவில்லை என தகவல்களூடாக உறுதிசெய்ய முடிகின்றது. இவ்வாறு முறையான அனுமதி பெறாது நிர்மாணிக்கப்படும் கட்டுமாணங்கள் சட்டமுறையற்ற கட்டுமாணங்கள் என்றே கருத்தில் கொள்ளப்படும். அத்துடன் அவ்வாறு அடையாளப்படுத்தப்படும் கட்டுமாணங்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க பிரதேச சபை நிர்ப்பந்திக்கப்படும் நிலையும் உருவாகும். எனவே 1987 ஆம் ஆண்டு 15 இலக்க பிரதேச சபைகள் சட்டம் மற்றும் 1978 ஆம் ஆண்டு 41 ஆம் இலக்க நகர அபிவிருத்தி அதிகார சபையின் சட்டம் ஆகியாற்றின் அடிப்படையில், 01. பிரதேச சபையில்.கட்டட அனுமதிக்கான விண்ணப்பத்தை பெற்றுக்கொள்ளல். 02. அமைவுச் சான்றிதழ் அல்லது கால நீடிப்பு அனுமதியை பெறுதல். 03. காணி உப பிரிவிடல் மற்றும் காணி ஒருங்கிணைத்தல் அனுமதியினை பெற்றுக்கொள்ளல். 04. நிலுவையிலுள்ள அனைத்து விண்ணப்பங்களுக்குமான அனைத்து ஆவணங்களையும் சமைப்பித்தல் போன்ற நடைமுறையை பின்பற்றி கட்டடங்களுக்கான நிர்மாண அனுமதியை பெற்றுக்கொள்வது அவசியமாகும். இதே நேரம் அனுமதியின்றி அமைக்கப்படும் கட்டுமாணங்களால் அண்மைக்காலத்தில் பல்வேறு பிரச்சினைகள் தோன்றி பல முரண்பாடுகளை எது உருவாக்கி வருவதால் இந்த நடைமுறையை வேலணை பிரதேச ஆளுகைக்குள் கட்டுமாணங்களை மேற்கொள்வோர் பின்பற்றுவது அவசியமாகும் எனதுடன் அவ்வாறு பின்பற்ற தவறும்.பட்சத்தில் சட்ச நடவடிக்கை எடுக்க பிரதேச சபை நிர்ப்பந்திக்கப்படும் என தெரிவித்தார். -யாழ். நிருபர் பிரதீபன்- https://adaderanatamil.lk/news/cmha0hh4a018so29ndtd3u630

யாழுக்கு வருகை தந்தார் கவிஞர் வைரமுத்து

3 months 1 week ago
சகட்டு மேனிக்கு நமக்கு பிடிகாதவனையெல்லாம் துரோகி பட்டம் கொடுத்து போட்டு தள்ளினா நாடு கிடைக்கும் என நம்பியது அந்தக் காலம். சகட்டு மேனிக்கு பிடிக்காதவனுக்கெல்லாம் துரோகி பட்டம் கொடுத்து திட்டி தீர்த்தால் நாடு கிடைக்கும் என்று நம்புவது இந்த காலம். இது ஈழத்தமிழன் மலிபன் பவர்.💪 🍪

பாதுகாப்பு கட்டமைப்பு முழுமையாக அரசியல்மயமாகியுள்ளது – சாகர காரியவசம்

3 months 1 week ago
27 Oct, 2025 | 06:48 PM (இராஜதுரை ஹஷான்) மக்கள் விடுதலை முன்னணி கட்சி காரியாலயத்தில் நிகழ்ச்சி நிரலை பொலிஸ்மா அதிபர் செயற்படுத்துகிறார். முழு பாதுகாப்பு கட்டமைப்பும் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். கொழும்பில் திங்கட்கிழமை (27) நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் குறிப்பிடப்பட்டதாவது, பூகோள காரணிகளை அடிப்படையாகக் கொண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை அரசாங்கம் தனக்கு சார்பாக பயன்படுத்திக்கொண்டது. நாட்டுக்கு சேவையாற்றிய அரசியல் தலைவர்கள் மற்றும் அரசியல்வாதிகள் அனைவரும் திருடர்கள், மோசடியாளர்கள் என்று சித்தரிக்கப்பட்டார்கள். தேசிய மக்கள் சக்தி நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத்தேர்தலில் நாட்டு மக்களுக்கு பல வாக்குறுதிகள் வழங்கியது. பொதுத்தேர்தலில் அரசாங்கத்துக்கு பெரும்பான்மை பலத்தை வழங்கிய மக்கள் தமது தவறான அரசியல் தீர்மானத்தை உள்ளுராட்சிமன்றத்தேர்தலில் விளங்கிக்கொண்டார்கள். பொதுத்தேர்தலில் 61 சதவீத வாக்குகளைப் பெற்ற அரசாங்கம் உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் 23 இலட்ச வாக்குகளை இழந்து 43 சதவீத வாக்குகளைப் பெற்றது. போலியான வாக்குறுதிகளால் ஏமாற்றப்பட்டதை நாட்டு மக்கள் விளங்கிக்கொண்டார்கள். நாட்டுமக்களினதும், அரசியல்வாதிகளினதும் பாதுகாப்பு கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது.பாதாளக்குழுக்களின் செயற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.மக்கள் விடுதலை முன்னணி கட்சி காரியாலயத்தில் நிகழ்ச்சி நிரலை பொலிஸ்மா அதிபர் செயற்படுத்துகிறார். முழு பாதுகாப்பு கட்டமைப்பும் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய செயற்படுவதை பொலிஸ்மா அதிபர் தவிர்த்துக் கொள்ள வேண்டும். எதுவும் நிலையற்றது. ஆட்சி மாற்றம் ஏற்படலாம். சட்டவிரோதமான முறையில் செயற்பட்டால் அதற்கு சட்டத்தின் ஊடாக பதிலளிக்க நேரிடும் என்றார். https://www.virakesari.lk/article/228827

'குகேஷூக்கு ரூ.5 கோடி, கார்த்திகாவுக்கு ரூ.25 லட்சம்' - தமிழக அரசின் ஊக்கத்தொகை எவ்வாறு முடிவாகிறது?

3 months 1 week ago
பட மூலாதாரம், olympics.com கட்டுரை தகவல் சாரதா வி பிபிசி தமிழ் 28 அக்டோபர் 2025, 02:51 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஆசிய இளையோர் போட்டிகளில் கபடியில் இந்தியாவின் ஆடவர் மற்றும் மகளிர் ஆகிய இரு அணிகளும் தங்கம் வென்றுள்ளன. அந்த அணிகளில் தமிழகத்தை சேர்ந்த கார்த்திகா ரமேஷ் மற்றும் அபினேஷ் மோகன்தாஸ் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். 18 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில், பஹ்ரைனில் நடைபெற்ற இந்தப் போட்டிகளில் இரானை எதிர்த்து விளையாடி இந்திய அணிகள் வெற்றி பெற்றுள்ளன. கார்த்திகா, அபினேஷ் ஆகிய இருவருக்கும் தலா ரூ.25 லட்சம் ஊக்கத்தொகையை தமிழக அரசு அறிவித்துள்ளது. அவர்கள் விமானத்தில் சென்னை வந்தவுடன் கோலாகலமான வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர்கள் இருவரையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து ஊக்கத்தொகைக்கான காசோலைகளை வழங்கினார். இந்த செய்தி வெளியானது முதலே, அவர்களுக்கு வழங்கப்பட்ட ஊக்கத்தொகை குறித்த விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் பெற்ற வீரர் குகேஷுக்கு ரூ.5 கோடி ரூபாயை தமிழ்நாடு அரசு வழங்கியதுடன் ஒப்பிட்டு, கபடியில் சாதித்த வீரர்களுக்கு வழங்கப்பட்ட ஊக்கத்தொகை மிகவும் குறைவு என்று சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. கார்த்திகாவுக்கு உற்சாக வரவேற்பு பட மூலாதாரம், olympics.com கார்த்திகா, அபினேஷ் இருவருமே தத்தமது அணிகள் தங்கம் வெல்வதில் முக்கிய பங்கை ஆற்றியிருந்தாலும், கூடுதலான கவனம் கார்த்திகாவின் பக்கம் திரும்பியுள்ளது. கார்த்திகா சென்னை கண்ணகி நகரில் உள்ள தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு கழக குடியிருப்புகளில் வசிப்பவர். நகரின் பல்வேறு இடங்களில் குடிசை வீடுகளில் இருப்பவர்களை அப்புறப்படுத்தும் போது அரசு சார்பில் வழங்கப்படும் மாற்று குடியிருப்புகள் இவை. இந்த குடியிருப்புகளில் அடிப்படை வசதிகளே இல்லை என்று பல முறை புகார்கள் எழுந்துள்ளன. விளையாட்டு மைதானமே இல்லாத நிலையில் அங்குள்ள பூங்காவிலேயே கார்த்திகா கபடி விளையாட்டை கற்றுள்ளார். அவரின் தாய் துப்புரவு ஊழியராக இருந்து தற்போது ஆட்டோ ஓட்டி வருகிறார், அவரது தந்தை கட்டுமானத் தொழிலாளி ஆவார். வெற்றிப்பெற்று கண்ணகி நகருக்கு திரும்பிய கார்த்திகாவுக்கு அப்பகுதியினராலும், காவல்துறை சார்பாகவும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. "வேலைக்கு செல்லும் போது 'கண்ணகி நகரில்' இருந்து வருகிறேன் என்று கூறுவதே தாழ்வாக பார்க்கப்படும். இப்போது நான் 'கண்ணகி நகர் ஆளு' என்று பெருமையுடன் கூறுவேன், இப்பகுதியினரும் அதில் பெருமை கொள்ள முடியும்" என்று கார்த்திகா ஊடகங்களுக்கு பேட்டி அளித்திருந்தார். கண்ணகி நகரில் உள்விளையாட்டு அரங்கம் ஒன்று அமைக்க வேண்டும் என்று முதல்வரிடம் கோரிக்கை வைத்ததாகவும், அவர் அதை செய்து தருவதாக உறுதி அளித்ததாகவும் அவர் தெரிவித்தார். பட மூலாதாரம், olympics.com படக்குறிப்பு, கபடி வீரர் அபினேஷ் மோகன்தாஸ் தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கார்த்திகாவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இவர்களை தவிர அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் ஆகியோரும் கார்த்திகா மற்றும் அபினேஷுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர். வீடியோ அழைப்பின் (வீடியோ கால்) மூலம் கார்த்திகாவுக்கு வாழ்த்து தெரிவித்திருந்த விசிக தலைவர் திருமாவளவன், கார்த்திகா மற்றும் அபினேஷுக்கு தலா ஒரு கோடியை தமிழக அரசு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் . சட்டமன்ற உறுப்பினரும் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவருமான வேல்முருகன், சதுரங்க ஆட்டத்தில் வென்ற குகேஷுக்கு ரூ.5 கோடி, பனிச்சறுக்கு விளையாட்டில் வென்ற ஆனந்த் குமாருக்கு ரூ.1.8 கோடி கொடுத்த பெருந்தன்மையான தமிழக அரசு கபடி வீரர்கள் இருவருக்கும் தலா ஒரு கோடி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். "குகேஷுக்கு ரூ.5 கோடி, கண்ணகி நகர் கார்த்திகாவுக்கு ரூ.25 லட்சம்தானா?" என்று சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. தமிழக அரசின் செயலை ஆதரித்தும் சிலர் பதிவிட்டுள்ளனர். கார்த்திகாவைப் போலவே, தங்கம் வென்ற ஆண்கள் அணியில் இடம்பெற்ற அபினேஷ் மோகன்தாசும் எளிமையான குடும்ப பின்னணியை கொண்டவர் தான். திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர், தந்தையை இழந்தவர். தேனியில் உள்ள தமிழ்நாடு அரசு விளையாட்டு ஆணைய விடுதியில் தங்கி பயின்றவர் ஆவார். பட மூலாதாரம், TNDIPR ஊக்கத்தொகை எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது? கார்த்திகாவுக்கும் அபினேஷுக்கும் வழங்கப்பட்ட தலா ரூ.25 லட்சம் இரண்டு அலகுகளாக பிரிக்கப்பட்டிருப்பதாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய தலைமை நிர்வாக அலுவலர் /உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி கூறினார். பிபிசி தமிழிடம் அவர் பேசுகையில், "தமிழ்நாடு அரசின் உயரிய ரொக்க ஊக்கத்தொகையாக (High Cash Incentive) ரூ.15 லட்சமும், தமிழ்நாடு சாம்பியன்ஸ் பவுண்டேஷன் சார்பாக ரூ.10 லட்சமும் என ரூ.25 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. உயரிய ரொக்க ஊக்கத்தொகை அரசு வெளியிட்டுள்ள ஆணைப்படி நிர்ணயிக்கப்பட்ட தொகையாகும். அது தவிர, இருவரின் விளையாட்டை பாராட்டும் வகையில் தமிழ்நாடு அரசு தாமாக முன் வந்து கூடுதலாக ரூ.10 லட்சத்தை தமிழ்நாடு சாம்பியன்ஸ் பவுண்டேஷன் சார்பாக வழங்க முடிவு செய்துள்ளது." என்று விளக்கம் அளித்தார். எந்த விளையாட்டுக்கு எவ்வளவு ஊக்கத்தொகை? தமிழ்நாடு அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை வெளியிட்ட 2019-ம் ஆண்டு அரசாணையின் படி, நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வெல்பவருக்கு ரூ.2 கோடி, வெள்ளி வெல்பவருக்கு ரூ.1 கோடி, வெண்கலம் வெல்பவருக்கு ரூ.50 லட்சம் உயரிய ரொக்க ஊக்கத்தொகை வழங்கப்படும். அந்த அரசாணையின் படி, நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளிலும் தங்கம் வெல்பவருக்கு ரூ.50 லட்சம், வெள்ளி வெல்பவருக்கு ரூ.30 லட்சம், வெண்கலம் வெல்பவருக்கு ரூ.20 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும். நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இளைஞர் ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வெல்பவருக்கு ரூ.25 லட்சம், வெள்ளி வெல்பவருக்கு ரூ.15 லட்சம், வெண்கலம் வெல்பவருக்கு ரூ.10 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும். அதே போன்று, ஆசிய இளைஞர் போட்டிகளில் தங்கம் வெல்பவருக்கு ரூ.15 லட்சம், வெள்ளி வெல்பவருக்கு ரூ.10 லட்சம், மற்றும் வெண்கலம் வெல்பவருக்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும். நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் தங்கம் வெல்பவருக்கு ரூ.1 கோடி, வெள்ளி வெல்பவருக்கு ரூ.60 லட்சம், வெண்கலம் வெல்பவருக்கு ரூ.40 லட்சம் வழங்கப்படும். அதுவே இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் உலக சாம்பியன்ஷிப் போட்டியாக இருந்தால், அதில் தங்கம் வெல்பவருக்கு ரூ.75 லட்சம், வெள்ளி வெல்பவருக்கு ரூ.50 லட்சம், வெண்கலம் வெல்பவருக்கு ரூ.30 லட்சம் வழங்கப்படும். ஆண்டு தோறும் நடைபெறும் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்று தங்கம் வெல்பவருக்கு ரூ. 50 லட்சம், வெள்ளி வெல்பவருக்கு ரூ.30 லட்சம், வெண்கலம் வெல்பவருக்கு ரூ. 20 லட்சம் வழங்கப்படும். இவை தவிர பல்வேறு போட்டிகளுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை குறித்த விவரங்களை அரசாணை குறிப்பிடுகிறது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய தலைமை நிர்வாக அலுவலர் விளக்கம் இது வரை வீரர்களுக்கு வழங்கப்பட்ட ஊக்கத்தொகைகள் மேற்குறிப்பிட்ட அரசாணைக்கு உட்பட்டே வழங்கப்பட்டது என்று மேகநாத ரெட்டி கூறினார். 'குகேஷுக்கு ரூ.5 கோடி, கார்த்திகாவுக்கு ரூ.25 லட்சமா?' என்று குறிப்பிட்டு எழுந்துள்ள விமர்சனம் குறித்து கேட்ட போது, "இரண்டு விளையாட்டுகளை, இரண்டு போட்டிகளை ஒப்பிடுவதே தவறு. ஆசிய போட்டிகளும் உலக சாம்பியன்ஷிப் போட்டியும் வெவ்வேறானவை. ஐந்து ஆறு நாடுகள் பங்கேற்கும் போட்டியையும் 20க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்கும் போட்டியையும் ஒப்பிடக் கூடாது. கார்த்திகாவின் திறமையை, பங்களிப்பை எந்த வகையிலும் குறைத்து மதிப்பிடவில்லை. அவரது வெற்றியின் காரணமாக தமிழ்நாடு பெருமை கொள்கிறது, அதே போன்று தான் அபினேஷின் வெற்றியும். அவர் அரசு விடுதியில் பயின்றவர். அரசாணைப்படி அவர்களுக்கு ரூ.15 லட்சம் தான் ஊக்கத்தொகை. ஆனால் அவர்களின் அபாரமான விளையாட்டை அங்கீகரிக்கும் வகையிலேயே கூடுதலாக பத்து லட்சம் வழங்க முடிவு செய்யப்பட்டது. அதே போன்று தான் குகேஷுக்கும். தமிழ்நாட்டில் ஊக்கத்தொகை வழங்க மிக நேர்த்தியான நடைமுறை வகுக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பீடுகள் சரியல்ல" என்று கூறினார். பட மூலாதாரம், கவிதா செல்வராஜ் படக்குறிப்பு, இந்திய கபடி அணி பயிற்சியாளர் கவிதா செல்வராஜ் கபடி அணி பயிற்சியாளர் கூறியது என்ன? இந்திய கபடி அணியின் தற்போதைய பயிற்சியாளரும் கபடியில் சர்வதேச அளவில் நான்கு முறை தங்கப் பதக்கங்களை வென்றவருமான தமிழ்நாட்டைச் சேர்ந்த கவிதா செல்வராஜ் (40), "இப்போது ஊடக கவனம் அதிகம் இருப்பதால் இந்த வெற்றிகள் வெளியில் தெரிகின்றன. அதன் மூலம் ஒரு வெளிச்சம் கிடைப்பது மகிழ்ச்சி. கபடிக்கு, அதுவும் ஆசிய இளைஞர் போட்டிக்கு ரூ.25 லட்சம் கொடுத்திருப்பது குறைவானது அல்ல. நான் 2010-ம் ஆண்டு ஆசிய போட்டிகளில் தங்கம் வென்ற போது ரூ.20 லட்சம் மட்டுமே வழங்கப்பட்டது. 2008-ம் ஆண்டு ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் தங்கம் வென்ற போது ரூ.5 லட்சம் வழங்கப்பட்டது. 2009 தெற்கு ஆசிய போட்டிகளில் தங்கம் வென்ற போது ரூ.20 ஆயிரம் வழங்கப்பட்டது" என்கிறார். கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து இந்திய கபடி அணிக்கு பயிற்சியாளராக இருக்கும் அவர், "2005-ம் ஆண்டு விளையாட்டு கோட்டாவில் அல்லாமல் எனது சொந்த முயற்சி மற்றும் தகுதியில் காவல்துறையில் சேர்ந்தேன். காவல்துறையில் இருக்கும் போது தான் நான்கு சர்வதேச பதக்கங்களை வென்றேன். ஆனால் எனக்கு எந்த பதவி உயர்வும் வழங்கப்படவில்லை. 2013-ம் ஆண்டு அந்த வேலையை ராஜினாமா செய்து விட்டேன்" என்கிறார். மேலும் பேசிய அவர், "உடல் ரீதியாக அதிக உழைப்பு தேவைப்படும் விளையாட்டுகளை ஊக்குவிக்கவும் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம்" என்கிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c14pe5z4g1yo
Checked
Fri, 02/06/2026 - 19:58
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed