புதிய பதிவுகள்2

டிரம்ப் மீண்டும் ஜனாதிபதியானால் அமெரிக்காவுக்கு நல்லதல்ல: கமலா ஹாரிஸ்

2 months 1 week ago
இரண்டு வயோதிபர்களும்.வீட்டில் ஓய்வில் இருப்பது நல்லது மட்டுமல்ல இளைஞர்களுக்கு சந்தர்ப்பங்களை வழங்குங்கள் ஜேர்மனியை பார்த்து கற்று கொள்ளுங்கள் இங்கே வயோதிபர்கள். தங்களாகவே ஓய்வு எடுத்து கொள்வார்கள் மக்கள் வயோதிபர்களுக்கு வாக்கு அளிக்கமாட்டார்கள்

தமிழ்த் தேசியமும் தமிழரசுக் கட்சியின் தலைமையும்

2 months 1 week ago
வேறு ஒருவர் என்பதையே நான் தெரிவு செய்தேன். கடந்த பொதுத் தேர்தலில் சுமத்திரனும் சிறிதரனும் கூட்டுச் சேர்ந்து ஆடிய ஆட்டம் கொஞச நஞ்சமிலை;லை. சிதிதரனின் ஆதரவாளர்களின் வாக்கினாலேய சுமத்திரன் வென்றதும் மாவை தோற்றதும் நடந்தது. இரண்டு பேரும் சேர்ந்து கட்சித் தலைமைக்கு ஆப்படித்தார்கள். தேசியப்பட்டியல் விடயத்தில் கூட 2 பேரும் கட்சித்தலைவர் மாலவக்குத் தெரியாமல் சம்பந்தரைச் சந்தித்து ஒருதலைப்பட்சமாக தெரிவு செய்தார்கள். அம்பாறைக்கு பிரதிநிதித்துவம் தேவை என்பது நியாயமானதுதான். அதைக் கட்சியைக் கூட்டி ஏகமனதாக அறிவித்திருக்க வேண்டும். பின்னர் சுமத்திரன் சிறதரனைக் கழட்டி விட்டு சாணக்கியனோடு ஒட்டத் தொடங்கினார். இதுவே இவர்களுக்கான போட்டியை உருவாக்கியது.தமிழ்த்தேசியக்கூட்டமைப்பை சிதைத்தலில் சுமத்திரனுக்கு பெரும்பங்கு உண்டு..இப்பொழுது சுமத்திரன் சிறிதரன் என்ற நிலை மட்டுமே இருப்பதால் இந்தநிலையில் சிறிதரன் தலைவராக வருவதையே விரும்புகிறேன். சிறிதரன் தமிழத்தேசிய அரசியலை விட்டு நகர முடியாது. ஆனால் சுமத்திரனுக்கு தமித்தேசியம் கருவேப்பிலை மட்டுமே. அவருடைய சகா சாணக்கியன் முன்னாள் மகிநதவின் கட்சியில் தேர்தலில் நின்றவர். அவர்கள் இருவருக்கும் தமிழ்த்தேசியம் என்றால் என்னவென்றே தெரியாது.

முடிவு பிழை என்றால் கனடிய தூதுவரை ஏன் திருப்பி அழைக்கவில்லை,சுரேன்.சுரேந்திரன்.

2 months 1 week ago
ஏனெனில் அவர்களுடன் 15 வருடங்கள் அவர்களுடன் நின்றவன். அது மட்டும் அல்ல உங்கள் கருத்துப்படி அதில் இறங்கி நின்றவன். எனது வாழ்வின் பெரும் பகுதியை பெரும் செல்வத்தை கொடுத்தவன். நானே அவர்களின் எந்த குறையும் கண்டதில்லை. பார்த்ததில்லை. குறிக்கோள் ஒன்றிற்காகவை நின்றார்கள். அது மட்டுமே அவர்களுக்கு மக்களால் போராளிகளால் மாவீர்களால் கரும் புலிகளால் விடப்பட்டிருந்த ஒரேயொரு வழி.

முடிவு பிழை என்றால் கனடிய தூதுவரை ஏன் திருப்பி அழைக்கவில்லை,சுரேன்.சுரேந்திரன்.

2 months 1 week ago
நான் மட்டுமே உரிமையாளர் என்று எங்கும் சொல்லவில்லை. ஆனால் தூற்றுதல்களுக்கு முன்னர் ஓரளவேனும் பங்கு இருக்கணும். அதற்கு தமது பங்கை சொல்லணும். இல்லை பொத்திக்கொண்டு இருக்கணும். இங்கே வந்து தமிழனா பிறந்தேன் கேள்வி கேட்பேன் என்பதெல்லாம் வெறும் வசனமே. மிகப்பெரிய தியாகம் மற்றும் தம்மையே ஈகை செய்தவர் மீது சேறு பூசுவதை நிறுத்துங்கள். தயவு செய்து. இல்லை என்றால் என்னிடம் இருந்து நற்சொற்கள் வராது வரக் கூடாது.

முடிவு பிழை என்றால் கனடிய தூதுவரை ஏன் திருப்பி அழைக்கவில்லை,சுரேன்.சுரேந்திரன்.

2 months 1 week ago
புலிகளில் பிழை கண்டுபிடிக்கும் நோக்கம் எவருக்கும் இல்லை. ஆனால் ஆய்வு செய்யும்போது புலிகளைத் தவிர்க்க முடியாது. இது உங்களுக்குப் புரியுமென நினைக்கிறேன். அதுதவிர, போராட்டத்திற்கும், புலிகளுக்கும் நீங்கள் மட்டுமே உரிமையாளர் எனும் உங்கள் சிந்தனைப் போக்கு நிச்சயம் ஏற்றுக்கொள்ளப்பட முடியாது. உங்கள் கோபத்தில் நியாயம் இல்லை.

டாடோ என்கின்ற டாலிபோ

2 months 1 week ago
ஒரே மூச்சில் வாசித்து முடித்து விட்டேன். மிகவும் சுவாரசியமான எழுத்து நடை. ஒரு குட்டி குறுந்திரைப்படமே எடுக்கலாம். கடைசிப் படத்தில் துப்பாக்கியை உறையில் தொங்கப் போட்டபடி கையில் சிகரெட்டுடன் சிந்தனையில் இருப்பவர் யார்? டாடோ வும் முகமதுவும் இப்படி ஒய்யாரமாக இருக்க கூடிய சூழ் நிலையில் இல்லையே...?

முடிவு பிழை என்றால் கனடிய தூதுவரை ஏன் திருப்பி அழைக்கவில்லை,சுரேன்.சுரேந்திரன்.

2 months 1 week ago
ரதி கடைசி நேரத்தில் கடைசி ராஜதந்திரமாக ஐக்கிய நாடுகள் சபையுடன் தொடர்பு கொண்டு வெள்ளைக் கொடியுடன் சரணடைந்தவர்களை கொல்லாது விட்டிருந்தால் உங்கள் கேள்விக்கு விடையாக இருந்திருக்கும். இதை அறிந்திருந்த இந்தியாவே அதை முறியடித்து அத்தனை பேரையும் கொன்றார்கள்.

முடிவு பிழை என்றால் கனடிய தூதுவரை ஏன் திருப்பி அழைக்கவில்லை,சுரேன்.சுரேந்திரன்.

2 months 1 week ago
உங்கள் எண்ணம் தவறு. எத்தனையோ நாடுகள் தமிழீழத்தை அங்கீகரிக்க காத்திருந்தன. நான் நினைக்கிறேன் பயங்கரவாதிகளாக முத்திரை குத்தப்பட்டவர்களை அல்லது இன்னமும் புலிகளின் பயணம் இருக்கு என்றபடியாலோ என்னவோ யாருமே வெளிப்படையாக ஆதரிக்கவில்லை.

டாடோ என்கின்ற டாலிபோ

2 months 1 week ago
ஆட்கடத்தல் மற்றும் சித்திரவதைகள் போன்ற குற்றச்சாட்டின் கீழ் மூன்று கட்டமாக ஹைல்புறோன் நகரில் வழக்கு நடத்தப்பட்டது. எனது மகன் தொலைபேசியில் அழைத்துக் கேட்டான், நாளைக்கு (09.01.2024) டாடோவின் வழக்கின் முடிவு அறிவிப்பார்கள். வரப் போறீங்களோ?” “ஓம், வாறன்” “ விவசாயிகள் போராட்டம் நாளைக்குத் தொடங்கினம். ரக்ரர்களைக் கொண்டுவந்து றோட்டுகளை ப்ளக் செய்யலாம். வெள்ளெனவாப் போறது நல்லது. ஏழு மணிக்கு நான் உங்களை பிக் அப் பண்ணுறன்” நீதிமன்றத்தின் உள்ளே போகும் முன் கைத்தொலைபேசி உட்பட அனைத்தையும் ஒரு பெட்டிக்குள் போட்டு ‘லொக்கரில்’ என்னைக் கொண்டே பூட்ட வைத்து திறப்பை எடுத்துக் கொள்ளும்படி சொன்னார்கள். கூடவே உடல் எல்லாம் தடவிப் பார்த்து விட்டு, “ நீங்கள் பார்க்க வந்த ஆட்கடத்தல் வழக்கு 106வது மண்டபத்தில், ஒன்பது மணிக்குத் தொடங்குகிறது” என்று தகவலைத் தந்தார்கள். கைவிலங்கு போட்டபடியே முகமதுவையும் லூக்காவையும் பொலிஸார் அழைத்து வந்தார்கள். முதல் வரிசையில் முகமதுவும் அவனது சட்டத்தரணியும் அமர்ந்திருந்தார்கள். இரண்டாவதில் லூக்காவும் அவனது சட்டத்தரணியும் மூன்றாவதில் எல்விஸும் அவனது சட்டத்தரணியும் அமர்ந்திருந்தார்கள். “போதைப் பொருட்களை முகமது பாவிப்பதால் அவனுக்கு, தான் என்ன செய்கிறேன் என்று சில சமயங்களில் தெரிவதில்லை. சம்பவத்தன்றும் ஸ்வேபிஸ்ஹாலில் இருந்து பேர்லினுக்குப் பயணிக்கும் போதும் அவன் போதைப் பொருள் எடுத்திருந்தான்” என்பதை முகமதுவின் சட்டத்தரணி தனது தொகுப்புரையில் வலியுறுத்தி இருந்தார். “லூக்கா சம்பவம் நடந்த அன்று போதைப் பொருள் உட்கொண்டிருந்தான்” என லூக்காவின் சட்டத்தரணி சொன்னார். எல்விஸ் முகமதுவின் நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு தொழிலாளி . முதலாளி சொன்ன வேலையைத்தான் அவர் செய்தார். மற்றும்படி குற்றச் செயல்களில் அவர் ஈடுபடவில்லை” என எல்விஸின் சட்டத்தரணி குறிப்பிட்டார். “நடந்த சம்பவங்களுக்காக நான் வெட்கப்படுகிறேன்,வருத்தம் தெரிவிக்கிறேன். மன்னிப்பும் கேட்கிறேன். அழகானதும் ஒழுங்கானதுமான வாழ்க்கை எனக்கு இருந்தது. போதைப் பழக்கத்தால் எல்லாவற்றையும் நான் வீணடித்து விட்டேன். எனக்கு எனது பழைய வாழ்க்கை வேண்டும். நல்லபடியாக நான் வாழ வேண்டும். லூக்கா காரை ஓட்டி வந்ததைத் தவிர அவன் எந்தக் குற்றமும் செய்யவில்லை. தயவு செய்து அவனுக்கு தண்டனை தந்து விடாதீர்கள்” என முகமது குறிப்பிட்டான். “போதைப் பொருள் பாவித்ததால் தடுமாறி விட்டேன். மன்னித்து விடுங்கள்” என லூக்கா சொன்னான். “குற்றத்தை ஒப்புக் கொள்கிறேன்” என எல்விஸ் சொன்னான். அரச சட்டத்தரணியான லுஸ்ரிக் தன்னுடைய முடிவுரையில், “டாலிபோ மிகவும் பாதிக்கப் பட்டிருக்கிறார். உடல் வலிகளால் சிரமப்படுகிறார். அதிகளவு வலி நிவாரண மாத்திரைகள் உட்கொள்வதால் மட்டுமே அவரால் எழுந்து நடமாட முடிகிறது. வீட்டை விட்டு வெளியே வரப் பயப்படுகிறார். இப்பொழுது மனநல வைத்தியரிடம் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கிறார். டாலிபோவுடன் வாழ்வது ஆபத்தானது என அவரது மனைவி அவரைப் பிரிந்து தனது இரண்டு மகள்களையும் அழைத்துக் கொண்டு குரோஸியாவுக்குப் போய்விட்டார். தனிமையில் ஒருவரது உதவியும் இல்லாமல் வாழ்வது அவருக்குச் சிரமமானது. சினிமாவில் வருவது போல்தான் நிஜத்தில் டாலிபோ மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. முகமது போதைக்கு அடிமையானவர் என்பது இந்த வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக அவர் கண்ட வழி. இது லூக்காவிற்கும் பொருந்தும். சிறப்பு அதிரடிப் படையினர் சம்பவ இடத்தில் பார்த்ததை அறிக்கையில் விபரித்திருக்கிறார்கள். ஆகவே முதலாவது,இரண்டாவது, மூன்றாவது குற்றவாளிகளுக்கு முறையே ஏழு,ஐந்து,இரண்டு வருடங்கள் சிறைத் தண்டனை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என முடித்தார். நீதிபதி தோமாஸ் பேர்க்னர் தனது தீர்ப்பை வாசிக்க ஆரம்பித்தார். “டாலிபோவை ஸ்வேபிஸ்ஹாலில் இருந்து பேர்லினுக்கு கடத்தியது, அவரைச் சித்திரவதை செய்தது, மரண பயத்தை ஏற்படுத்தியது என்பவை நிரூபிக்கப் பட்டிருக்கின்றன. ஆகவே முகமதுவுக்கு ஏழு ஆண்டுகளும் ஆறு மாதங்களும் சிறைத்தண்டனை விதிக்கப்படுகிறது…” நீதிபதி தீர்ப்பை வாசிக்கும் போது முகமது மேசையில் தன் கைகளால் ஓங்கி அடிக்க ஆரம்பித்தான். வாசிப்பை நீதிபதி இடைநிறுத்த, அவனின் சட்டத்தரணி முகமதுவை சமாதானம் செய்தார். அதன்பின்னர் நீதிபதி தனது வாசிப்பைத் தொடர்ந்தார் “முகமது போதைப் பொருள் பாவித்ததாகக் கருத முடியாது. இந்த வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக அவர் அப்படிக் குறிப்பிட்டிருக்கலாம் என வைத்திய அறிக்கை சொல்கிறது. இதில் முகமது போதைப்பொருள் பாவிப்பவரா இல்லையா என்பது தெளிவாகச் சொல்லப்படவில்லை. ஆகவே அதைக் கருத்தில் கொண்டு மூன்று ஆண்டு கால சிறைத்தண்டனைக்குப் பின் போதைப்பொருளில் இருந்து விடுபட மருத்துவ உதவி பெறுவதற்கு முகமதுவுக்கு இரண்டு ஆண்டுகள் வாய்ப்பளிக்கப்படுகிறது” ஒருநாள் மட்டும் போதைப் பொருள் பாவித்தேன் என்ற லூக்காவின் கூற்றை இங்கே ஏற்றுக் கொள்ள முடியாது. கடத்தல், சித்திரவதைகள் போன்ற குற்றச்சாட்டில் அவருக்கு ஐந்து வருடங்களும் ஆறு மாதமும் சிறைத்தண்டனை வழங்கப்படுகிறது. முகமது சொன்னார் என்பதற்காக அவற்றைச் செய்திருந்தாலும் எதற்காகச் செய்கிறேன் என்று எல்விஸுக்குத் தெரிந்திருக்கிறது. ஆகவே எல்விஸுக்கு இரண்டு வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கிறேன். ஆனாலும் அவரது குடும்ப சூழ்நிலையைக் கருதி இரண்டு வருட சிறைத்தண்டனையை மூன்று வருடங்கள் நன்னடத்தையாக மாற்றி இந்த நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. இந்த மூன்று வருடங்களில் ஏதேனும் குற்றச் செயலில் ஈடுபட்டால், எல்விஸ் இரண்டு வருட சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும்” வழக்கு முடிந்து விட்டது. ஆனால், டாடோ உண்மையில் தனது நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்தானா? அல்லது பணத்தை பதுக்கி வைத்து விட்டு திவால் என அறிவித்தானா? டாடோவிடம் பணம் இல்லை, நிறுவனம் திவால் என்றால் இருபத்தைந்தாயிரம் யூரோக்களை வங்கியில் எடுப்பதற்கு அவனது மனைவி ஏன் போனாள்? உண்மையிலேயே டாடோவின் மனைவி அவனைப் பிரிந்து போய் விட்டாளா? அல்லது எல்லாம் ஆறிய பின்னர் குறோஸியாவில் சொகுசாக குடும்பமாக வாழப் போகிறார்களா? இது அவர்களுக்கு மட்டுமே தெரியும். இங்கே முகமதுவின் நிலை அபாயகரமானது. தண்டனை முடிந்து வந்தாலும் அவன் வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுத்தே ஆக வேண்டும். அவனது தாயும் சகோதரியும் பேர்லினில் வாழ்வதால் எங்கேயும் அவனால் மறைந்து வாழ முடியாது. மாபியாக்கள் சும்மா விட்டு விடுவார்களா என்ன? Photos Thumilan Selvakumaran

முடிவு பிழை என்றால் கனடிய தூதுவரை ஏன் திருப்பி அழைக்கவில்லை,சுரேன்.சுரேந்திரன்.

2 months 1 week ago
வெளிநாடுகளில் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன் அப்படியானாவர்கள். இலங்கையில் இருந்து அரசியல் செய்ய இலங்கை அரசு அனுமதிக்குமா ?? பாதுகாப்பு வழங்கும?? இல்லையே ! எனக்கு தெரிந்த பத்து பேர் வரை 2009. ஆறாம் மாதத்தின் பின் ஆயுதம் ஏந்தியவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுளளார்கள் அனைவரும் புலி ஆதரவாளர்கள்

முடிவு பிழை என்றால் கனடிய தூதுவரை ஏன் திருப்பி அழைக்கவில்லை,சுரேன்.சுரேந்திரன்.

2 months 1 week ago
அப்படியானால் மக்களில் பிழை சரி சொல்லுங்கள் புலிகளில் உரோமம் புடுங்குறீர்கள். புடுங்கினால் ????

டாடோ என்கின்ற டாலிபோ

2 months 1 week ago
ஒரு கரித்துண்டு கிடைத்தது. சுவரும் வசப்பட்டது. கிறுக்க ஆரம்பித்தேன். அவ்வளவுதான் சுவியும்,கவியும் வயதுக்கு வந்தவர்கள். ஒரு பிடி நரைத்தவரும் இருக்கிறார். அவரை விட்டு விட்டீர்களே Justin பியர்

முடிவு பிழை என்றால் கனடிய தூதுவரை ஏன் திருப்பி அழைக்கவில்லை,சுரேன்.சுரேந்திரன்.

2 months 1 week ago
அனைத்து கட்சிகளும் சேர்ந்த (புலிகளின் எதிரிகளையும் கூட சேர்த்து) கூட்டமைப்பின் உருவாக்கம்.

டாடோ என்கின்ற டாலிபோ

2 months 1 week ago
உங்களை மாதிரியே கவியரும் தொடர் கதை மூலம் ஒரு கொக்கியைப் போட்டு எல்லாரையும் இங்கேயே சுத்தி வர வைச்சிருக்கிறார்😂. சுவியர், கவியர் - யாழுக்குக் கிடைத்த இரு அரிய பொக்கிஷங்கள்!

முடிவு பிழை என்றால் கனடிய தூதுவரை ஏன் திருப்பி அழைக்கவில்லை,சுரேன்.சுரேந்திரன்.

2 months 1 week ago
அவசியமற்ற விடயங்களுக்குள் விவாதம் திசை திருப்பப்படும் அபாயம் இருக்கிறது. விசுகரது எழுத்தில் போராட்டம் மக்களுக்கானது என்பது மறைந்து, போராட்டம் போராடியவர்களுக்கானது அத்துடன் அது தொடர்பாக வேறு எவரும் கதைக்க முடியாது எனும் ஒற்றைச் சிந்தனை தொக்கு நிற்கிறது. அதனால்தான் கொஞ்சம் கடினமாக கருத்துரைக்கப்பட்டது. 😏

முடிவு பிழை என்றால் கனடிய தூதுவரை ஏன் திருப்பி அழைக்கவில்லை,சுரேன்.சுரேந்திரன்.

2 months 1 week ago
என்னிடம் பிழை இல்லை நாங்கள் மனிதர்கள் எங்களது போராட்டம் பற்றி பேசிக்கொண்டு இருக்கிறோம் நீங்கள் தான் பறவைகள் மிருகம்களை புகுத்தியது புகுத்தாமால் வாதங்களை முன் வைக்கவும்.

சர்க்கரைநோயின் எதிரியாகும் கோவைக்காய்!

2 months 1 week ago
Cognac போன்ற மதுபானங்களில் சீனி மிக மிகக் குறைவாக உள்ளது. ஆனால் ஏராளமான கலோரிகள் உண்டு. இந்தக் கலோரிகளை பிரெஞ்சில் வெறுமையான கலோரிகள் என்று சொல்வார்கள். இவற்றை உடலில் சேமிக்கவோ கட்டுப்படுத்தவோ முடியாது. உடலால் உடனடியாகப் பாவிக்கப்பட வேண்டியவை. தேவைக்கதிகமான கலோரிகள் உடலில் ஏறியதும், ஜஸ்ரின் குறிப்பிட்டதுபோல் உடலுக்குச் சக்தியை வழங்க வேண்டிய இரத்தத்தில் உள்ள சீனி சும்மா சுற்றித் திரிந்து எரிக்கப்படாமல் சீனி அளவைக் கூட்டும். 5 சென்ரிலீற்றர் Cognac இல் 100 கிலோ கலோரிகள் உள்ளன. இது 5 கட்டிச் சீனிக்குச் (25 கிராம்) சமன்.
Checked
Thu, 03/28/2024 - 13:25
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed