Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. யேர்மன் கார் பாங்கிங் மெசினில் இருந்து யூரோ நாணயங்கங்களை திருடி கோடிஸ்வரரான அரசு ஊழியர். பாங்கிங் மெசினில் இருந்து பணத்தை எடுப்பது தான் அவர் வேலை. அதை பயன்படுத்தி...🤣 இந்தியா இலங்கையில் தேர்தலில் நின்று போட்டியிட வேண்டியவர்.

  2. நேரலை ஆபாச வீடியோக்களை சீன நிறுவனத்திற்கு விற்பனை செய்த நால்வர் கைது! நேரலை ஆபாச வீடியோக்களை சீன நிறுவனமொன்றுக்கு விற்பனை செய்த குற்றச்சாட்டில் தம்பதியினர் உட்பட நால்வரை பிலியந்தலை, படகெத்தர பிரதேசத்தில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸாருக்குக் கிடைத்த ரகசியத் தகவலையடுத்தே இக்கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கைது செய்யப்பட்ட 22, 23, 26 மற்றும் 27 வயதுடைய சந்தேகநபர்கள் கெஸ்பேவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொலிஸாரின் விசாரணையில் ” குறித்த சீன நிறுவனத்திற்கு தரம் மற்றும் செயல்திறனைப் பொறுத்து ஒரு வீட…

  3. பிரித்தானிய தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, கெய்ர் ஸ்டார்மர் பிரிட்டனின் புதிய பிரதமராக எண் 10 டவுனிங் தெருவுக்கு குடிபெயர்கிறார் . இங்கு பல ஆண்டுகளாக, பிரதம மந்திரிகள் வந்து போயிருக்கிறார்கள், ஆனால் டவுனிங் தெருவில் எப்போதும் குடியிருப்பாளராக இருக்கிறார் லெரி. அதாவது லெரி என்ற செல்லப் பூனை. ஐந்து பிரிட்டிஷ் பிரதமர்களுடன் வாழ லெரிக்கு அதிர்ஷ்டம் கிடைத்தது. லெரி சந்திக்கும் ஆறாவது பிரதமர் ஸ்டார்மர் ஆவார். கடந்த 14 ஆண்டுகால அரசியல் எழுச்சியின் போது உறுதியாக இருந்த ஒரே ஒருவராக லெரியை பிரிட்டிஷ் ஊடகங்கள் சித்தரித்துள்ளன. லெரி ஜனவரி 13, 2007 இல் பிறந்தது. லெரிக்கு 17 வயது இருக்கும் என்று கூறப்படுகிறது. லெரி தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த பிரதம மந்திரியுடன் பழகப் போவது…

  4. ஜார்க்கண்ட் மாநிலத்தில் புதிய மதுபானக் கொள்கை அமுல் ! இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தில் எதிர்வரும் செப்டம்பர் 1 ஆம் திகதி முதல் புதிய மதுபானக் கொள்கை அமுலாக உள்ளது. இதுநாள்வரை கடைகள் ஒதுக்கீட்டை அரசு செய்து வந்த நிலையில், அதனை ஒன்லைன் குலுக்கல் முறையில் ஏலம் விட அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிமுறைகள் அமுலாக உள்ள நிலையில், மதுபான கையிருப்பு குறித்து ஹலால்துறை அதிகாரி ராம்லீலா ரவாணி தலைமையில் அனைத்து மாவட்டங்களிலும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். அதன்படி, தான்பாத் மாவட்டத்தில் மதுபான கடைகளில் அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 802 மதுபான போத்தல்களின் விற்பனை கணக்கில் வராதது அதிகாரிகளின் கவனத்திற்கு வந்தது. இது குறித்து அந்தக் கடை ஊழியர்க…

  5. இரா.சாணக்கியன், நிதி அமைச்சர்?? – மட்டு நகரில் பதாகை ! கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் நிதி அமைச்சராக பதவியேற்கவுள்ளதாக தெரிவித்து மட்டக்களப்பு நகரில் பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் இலங்கை தமிழரசுக் கட்சியின் வாலிப முன்னணி என்ற பெயரில் குறித்த பதாகை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அதில் புதிய நிதியமைச்சராக பதவியேற்கவுள்ள இராசமாணிக்கம் சாணக்கியனுக்கு வாழ்த்துகள் என குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த பதாகை தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவிவருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1275728

  6. பட மூலாதாரம்,ALOK KUMAR படக்குறிப்பு, பீகாரில், கோவிந்த் குமார் என்ற ஒரு வயது குழந்தை கடித்த பாம்பு இறந்துவிட்டது கட்டுரை தகவல் சீடூ திவாரி பிபிசி செய்தியாளர் 5 மணி நேரங்களுக்கு முன்னர் பீகார் மாநிலம் பெட்டியாவில் ஒரு வயது குழந்தை பாம்பைக் கடித்ததில் பாம்பு இறந்துவிட்டது. இதுதான் தற்போது மிகப்பெரிய செய்தியாக உருவெடுத்து பரபரப்பாகப் பேசப்படுகிறது. கடிபட்ட பாம்பு, அதிக நச்சுள்ள நாகப்பாம்பு என்று குழந்தையின் குடும்பத்தினர் கூறுகின்றனர். கடந்த வியாழக்கிழமை (2025, ஜூலை 24) நடைபெற்ற இந்த 'பாம்பு கடி' சம்பவத்திற்குப் பிறகு, அனைவரின் கவனத்தையும் அந்தக் குழந்தை ஈர்த்துள்ளது. பாம்பைக் கடித்த குழந்தை தற்போது ஆரோக்கியமாக உள்ளது. இந்த வித்தியாசமான சம்பவம், பீகாரின் மேற்கு சம்பாரண் மாவ…

  7. ஒரே மாதிரியான இலக்கத் தகடுகள் கொண்ட இரு கார்கள் மீட்பு! தெஹிவளை மற்றும் தலுகம பகுதியில் ஒரே மாதிரியான இலக்கத்தகடு கொண்ட இரண்டு கார்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பாணந்துறை, வலானாவில் உள்ள மத்திய ஊழல் தடுப்புத் தாக்குதல் படையின் (CACAF) பொலிஸ் புலனாய்வு அதிகாரிகளால் நேற்று (13) கார்கள் கைப்பற்றப்பட்டன. விசாரணைகளைத் தொடர்ந்து, ஒரு வாகனம் தெஹிவளை சீ வீதியில் இருந்தும் மற்றைய வாகனம் தலுகம முதியன்சே வத்தையிலிருந்தும் கைப்பற்றப்பட்டன. கைப்பற்றப்பட்ட வாகனங்கள் தெஹிவளை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், உண்மையான காரை இனங்கண்டு கொள்வதற்காக அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களத்தினால் வாகனங்களை சோதனையிடுவதற்கு நீதிமன்ற உத்தரவு பெற்றுக் …

  8. Published By: RAJEEBAN 14 FEB, 2024 | 10:14 AM கொவிட்பெருந்தொற்று காலத்தில் அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் அவசரசேவை பிரிவிற்கு அழைப்பு விடுத்த போதிலும் அவர்களின் உதவி கிடைக்காததால் இலங்கையர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன. 23 வயது இலங்கையரான சச்சிந்த பட்டகொடகே நவம்பர் 2020இல் ஐந்து நாட்களில் மூன்று தடவைகள் அடிலெய்ட் ரோயல் மருத்துவமனைக்கு அழைப்புவிடுத்ததும் தனக்கு இருமல் உள்ளதாகவும் இருமும்போது இரத்தம் வருவதாக தெரிவித்ததும் அதற்கு சில நாட்களின் பின்னர் அவர் உயிரிழந்தமையும் மரணவிசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. 2020 இல் அடிலெய்டிற்கு குடிபெயர்ந்த சச்சிந்த தனது மனைவியுடன் அங்கு வசித்து வந்துள்…

  9. ஸ்விண்டனில் முன்னாள் மனைவிக்கு எதிரான குற்றச்சாட்டில் கணவன் மீது 56 பாலியல் குற்றச்சாட்டு! தனது முன்னாள் மனைவிக்கு 13 ஆண்டுகளாக போதைப்பொருள் கொடுத்து பாலியல் வன்புணர்வு செய்தமைக்காக முன்னாள் டோரி கவுன்சிலர் ஒருவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மேலும் ஐந்து ஆண்கள் மீதும் பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. வழக்கில் தற்போது லண்டன், என்ஃபீல்டில் வசித்து வரும் 49 வயதான பிலிப் யங் என்ற பிரதான சந்தேக நபர் மீது பாலியல் வன்புணர்வு உட்பட குறைந்தது 56 குற்றச்சாடுகள் சுமத்தப்பட்டுள்ளதாக வில்ட்ஷயர் பொலிஸார் தெரிவித்தனர். யங் முன்பு 2007 முதல் 2010 வரை ஸ்விண்டன் பெருநகர உள்ளூராட்சி அமைப்பின் கன்சர்வேடிவ் கவுன்சிலராக இருந்தார். அவர் 2010 ஆம் ஆண்டுக் காலப் பகு…

  10. டுபாயில் இருந்து சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட 5 கோடி ரூபா பெறுமதியான நவீன அப்பிள் ரக கையடக்க தொலைபேசிகளுடன் இரண்டு பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் கட்டுநாயக்க விமான நிலைய குற்றப்புலனாய்வு திணைக்கள பிரிவினால் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்கள் கொழும்பைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த இருவரும் உரிய தீர்வையை செலுத்தாது 1,083 நவீன அப்பிள் ரக கையடக்க தொலைபேசிகளை நாட்டுக்கு கொண்டு வந்துள்ளனர். இதுதவிர, குறித்த இருவரும் தம்வசம் வைத்திருந்த 200 பென்ட்ரைவ்களும் மீட்கப்பட்டுள்ளன. https://thinakkural.lk/article/301907

  11. சீனாவில் 13 வயதான லீ முசி என்ற சிறுமி பரதநாட்டிய கலையில் அரங்கேற்றம் புரிந்து சாதனை படைத்துள்ளார். தென்னிந்தியாவின் பாரம்பரிய நடனக் கலையான பரதநாட்டியத்தை சீனாவில் அந்த நாட்டின் குருவிடம் பயின்று, அங்கேயே அரங்கேற்றம் செய்த முதல் நபர் என லீ முசி அறியப்படுகிறார். அண்மையில் நடந்த இந்த அரங்கேற்ற நிகழ்வில் பிரபல பரதநாட்டிய நடன கலைஞர் லீலா சாம்சன் மற்றும் இந்திய பிரதிநிதிகள் சிலர் பங்கேற்றனர். இந்த நிகழ்வை அனைவரும் பார்த்து ரசித்தனர். இந்த நிகழ்வு வரலாற்று சிறப்பு மிக்கதாக பார்க்கப்படுகிறது. சுமார் 10 ஆண்டு காலமாக பரத கலையில் பயிற்சி பெற்று வந்துள்ளார் லீ முசி. அவருக்கு சீனாவின் ஜின் ஷான் என்ற பரத கலைஞர் பயிற்சி கொடுத்துள்ளார். கடந்த 1999-ல் டெல்லியில் ஜின், அரங்கேற்றம…

  12. ரஷ்ய (Russia) நீதிமன்றம் வரலாறு காணாத அபராத தொகையை கூகுள் (Google) நிறுவனத்திற்கு எதிராக விதித்து தீர்ப்பளித்துள்ளது. கூகுளின் தாய் நிறுவனமான Alphabet மூலம் 17 ரஷ்ய ஊடக நிறுவனங்களின் உள்ளடக்கங்கள் கட்டுப்படுத்தப்படுவதாக தெரிவித்து இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் நடவடிக்கைகளைக் கருத்திற்கொண்டு ரஷ்ய ஊடக நிறுவனங்களின் உள்ளடக்கங்களைக் கட்டுப்படுத்த கூகுள் நிறுவனம் நடவடிக்கை எடுத்திருந்தது. அமெரிக்க டொலர் இதற்கிணங்க அபராதத் தொகையாக 20 டெசிலியன் அமெரிக்க டொலர் ($20,000,000,000,000,000,000,000,000,000,000,000) விதிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த அபராதத் தொகையின் மதிப்பு 110 ட்ரில்லியன் டொலருக்கும் அதிகமாகும். அத்த…

  13. அமெரிக்காவில் விமானத்தை தவற விட்ட பயணி ஒருவர் கோபத்தில் செய்த காரியத்துக்காக கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் லொஸ் வேகாசில் இருந்து நேற்று மதியம் 2 மணி அளவில் லொஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு செல்ல இருந்த விமானத்தில் பயணிக்க இருந்த பயணி, குறிப்பிட்ட நேரத்தில் விமான நிலையத்தின் புறப்பாடு பகுதிக்கு வராததால் விமானத்தை தவறவிட்டார். விமானத்தை தவறவிட்ட கோபத்தில், அந்த பயணி விமான நிலைய அலுவலகத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு விமானத்தில் ஏற்றப்பட்ட தனது லக்கேஜில் வெடிபொருட்கள் இருப்பதாக மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து விமான நிலையம் விரைந்த பொலிஸார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் புறப்பட தயாராக இருந்த விமானத்திற்குள் சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். எனினும், பயணி கூறியதை…

  14. நீங்கள் தங்கும் ஹோட்டலில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருந்தால் என்ன செய்வது? Play video, "ஹோட்டல் பாத்ரூமில் ஒளித்து வைக்கப்பட்டு இருந்த கேமரா... அடுத்து நடந்தது என்ன?", கால அளவு 1,40 01:40 காணொளிக் குறிப்பு, ஹோட்டல் பாத்ரூமில் ஒளித்து வைக்கப்பட்டு இருந்த கேமரா... அடுத்து நடந்தது என்ன? 3 மணி நேரங்களுக்கு முன்னர் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா பகுதிக்கு ஜேமி கிளாட்மேனும் அவரது 12 தோழிகளும் விடுமுறையை கழிக்க சென்று இருந்தனர். அங்கு இருந்த ஒரு வீட்டை Airbnb மூலமாக வாடகைக்கு எடுத்து விடுமுறையை கொண்டாடினர். அதில் ஒரு தோழி, தான் டிக்டாக்கில் பார்த்தது போல பாத்ரூமில் கேமரா …

  15. Published By: DIGITAL DESK 3 05 OCT, 2023 | 05:03 PM தொடர்ச்சியாக பாதுகாப்பு பணியில் இருக்கும் பல அதிகாரிகளைக் கடித்து வந்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் வளர்ப்பு நாய் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேற்றப்பட்டது. இரண்டு வயது ஜேர்மன் ஷெப்பர்ட் “கமாண்டர்” என்ற நாயை என்ன செய்வது என்பது பற்றி முடிவு எடுக்கப்பட்டு வருவதாக அமெரிக்காவின் முதல் பெண்மணி ஜில் பைடனின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். புதன்கிழமை அறிவிப்பை வெளியிட்ட அமெரிக்காவின் முதல் பெண்மணி ஜில் பைடனின் தகவல் தொடர்பு பணிப்பாளர் எலிசபெத் அலெக்சாண்டர், வெள்ளை மாளிகை பணியாளர்கள் மற்றும் அவர்களைப் பாதுகாக்கும் பாதுகாப்பு அதிகாரிகளின் பாதுகாப்பு குறித்து ஜனாதி…

  16. 06 OCT, 2023 | 12:01 PM நீர்கொழும்பு, துங்கல்பிட்டி பகுதியில் தனது வீட்டின் முன் வீதியில் நின்றுகொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் இருந்த தங்க நகையை பறித்துக்கொண்டு நபர் ஒருவர் தப்பிச் சென்றுள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அவரது மகன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றுள்ளார். குறித்த நபர் தப்பிச் செல்ல முயன்ற போது, பெண்ணின் மகன் அவரை பின்தொடர்ந்து விரட்டி சென்றுள்ளார். இதனை அவதானித்த திருடன் உடனே கத்தியை காட்டி மகனை பயமுறுத்தி மகனின் கழுத்தில் அணிந்திருந்த தங்க நகையையும் பறித்து சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது…

  17. 31 நாய்களை பாலத்தில் இருந்து கீழே வீசிய கொடூரம். தெலுங்கானாவில் 31 நாய்களை மர்ம நபர்கள் பாலத்தில் இருந்து கீழே வீசிய கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. தெலுங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் பாலத்தில் இருந்து தூக்கி எறியப்பட்டதில் 20 நாய்கள் இறந்ததாகவும், 11 நாய்கள் காயமடைந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர். எட்டுமைலாரம் கிராமம் அருகே உள்ள பாலத்தில் இருந்து நாய்கள் வீசப்பட்டதாக விலங்குகள் நல அமைப்பினர் முறைப்பாடளித்ததை தொடர்ந்தே இந்த விடயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. குறித்த விவகாரம் தொடர்பில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக இந்திரகரன் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். நாய்கள் வேறு எங்காவது கொன்று பாலத்தி…

  18. செல்ஃபி எடுக்க முயன்ற வெளிநாட்டுப் பெண் உயிரிழப்பு! ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தவாறு செல்ஃபி எடுக்க முயன்ற வெளிநாட்டுப் பெண்ணொருவர் கீழே தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். பதுளை பிங்கயட்ட, அமுனுவெல்பிட்டிய வீதிக்கு அருகில் இன்று (19) காலை இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாகவும், பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த பொடி மெனிக்கே ரயிலில் இருந்தே குறித்த வெளிநாட்டுப் பிரஜை தவறி விழுந்துள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் விபத்தில் உயிரிழந்தவர் 50 வயதான பெர்சினோமா ஓல்கா என்ற ரஷ்ய பெண் எனவும், அவர் ரஷ்யாவிலிருந்து 12 பேர் கொண்ட குழுவுடன் இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ளார் எனவும் தெரிய வந்துள்ளது. மேலும் அவர் இன்று காலை குழுவுடன் பதுளைக்கு வந்து, பதுளையில்…

  19. 100 வருடங்களுக்கு முன்பு எவரெஸ்ட் மலையில் ஏற முயன்று காணாமல் போனவரின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து நெஷனல் ஜியோக்ரபிக் இதழ் கடந்த வெள்ளிக்கிழமை செய்தி வெளியிட்டிருந்தது. காலநிலை மாற்றம் மற்றும் இமயமலையைச் சுற்றி பனி குறைவடைந்துள்ளமையால் உலகின் மிகவும் உயரமான மலையின் உயரத்தை அளவிடுதலை தனது கனவாகக் கொண்டிருந்த மலையேறுபவர்களின் இறந்த உடல்களை அதிகளவில் வெளிப்படுத்துகின்றன. 1924ஆம் ஆண்டில் பிரிட்டன் அண்ட்ரூ மற்றும் ஜோர்ஜ் மல்லோரி ஆகிய இருவரும் முதன் முதலில் கடல் மட்டத்திலிருந்து 29,029 அடி உயரத்தில் எவரெஸ்ட் மலையை அடைய முயற்சித்தனர். இம் முயற்சியின்போது இருவரும் காணாமல் போனார்கள். இவர்களில் ஒருவரான மல்லோரியின் உடல் 1999ஆம் ஆண்டு கண்டுப…

  20. எக்குவடோரில் சேவல் சண்டையில் துப்பாக்கி பிரயோகம்; 12 பேர் உயிரிழப்பு! தென் அமெரிக்க நாடான எக்குவடோரில் சேவல் சண்டை அரங்கில் துப்பாக்கிதாரிகள் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் 12 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் நான்கு பேரை கைது செய்துள்ளதாக அந் நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். எக்குவாடோரின் லா வலென்சியா கிராமப்புற பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலின் ஒரு நாளைக்கு பின்னர் கடந்த வெள்ளிக்கிழமை வடமேற்கு மனாபி மாகாணத்தில் விசேட பொலிஸ் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன்போது ஆயுதங்கள் மற்றும் துப்பாக்கி தாரிகள் பயன்படுத்திய போலி பொலிஸ், இராணுவ சீருடைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பான காட்சிகள், துப்பாக்கி ஏந்தியவர…

  21. ஆசிரியர் கையில் 15,000 ராக்கிகளைக் கட்டிய மாணவிகள்..! பீகாரைச் சேர்ந்த பிரபல ஆசிரியர் ஒருவரின் கையில் 15,000 ராக்கிகளை அவரிடம் படித்த மாணவிகள் கட்டிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கான் என அழைக்கப்படும் குறித்த ஆசிரியர் தனியார் கல்வி நிறுவனம் ஒன்றை அமைத்து குறைந்த கட்டணத்தில் அதிக மாணவர்களை படிக்க வைத்து, போட்டி தேர்வுகளாக பயிற்சி அளித்து வருகிறார். அவரிடம் படித்த பல மாணவர்கள் தற்போது அரசு அதிகாரிகளாக உள்ளனர். இந்நிலையில் வடமாநிலத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் சகோதர-சகோதரிகளுக்கு ராக்கி கயிறு கட்டி அன்பை வெளிப்படுத்தும் ரக்‌ஷா பந்தன் தினத்தன்று, ஆசிரியர் கானிடம் படித்த சுமார் 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவிகள் அவரை நேரில் சந்தித்து ராக்கி கயிறு கட்டிய…

      • Like
    • 1 reply
    • 157 views
  22. மட்டக்களப்பு நகரில் பக்கத்து வீட்டுகாரரின் நாய் கடித்ததில் காயமடைந்த பெண் ஒருவர் தனக்கு ஏற்பட்ட நட்டஈட்டை நாயின் உரிமையாளர் வழங்க வேண்டும் என பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டை அடுத்து நாயின் உரிமையாளர் அந்த பெண்ணுக்கு 40 ஆயிரம் ரூபாவை செலுத்திய விசித்திரமான சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (15) இடம்பெற்றுள்ளது. இதுபற்றி தெரியவருவதாவது, ஒய்வு நிலை கல்வி ஆசிரியர் ஆலோசகர் வீட்டில் மூன்று நாய்கள் வளர்த்து வருகின்ற நிலையில், பக்கத்து வீட்டில் வசித்துவரும் ஓய்வு பெற்ற முன்னாள் கல்வி அதிகாரியின் உறவினர்களை நாய் அடிக்கடி கடிக்க சென்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனால் பக்கத்து வீட்டாருடன் முரண்பாடு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் சம்பவதினடான நேற்று சனிக்கிழமை (14) நாயின் உரி…

  23. பலத்காரம் செய்ய முயன்ற மருத்துவரின் ஆணுறுப்பை பிளேட்டால் அறுத்த தாதி. பீகாரின் கங்காபூரில் உலா RBS ஹெல்த் கேர் என்ற தனியார் மருத்துவமனையில் கடந்த புதன்கிழமை இரவு, மருத்துவமனை நிர்வாக இயக்குனராக இருக்கும் மருத்துவர் சஞ்சய் குமார் என்பவரும் அவரது நண்பர்கள் இருவரும் சேர்ந்து குடிபோதையில் அங்கு பணியாற்றி வந்த தாதியை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பிக்க போராடிய தாதி, மருத்துவர் சஞ்சய் குமாரின் பிறப்பு உறுப்பை கையில் கிடைத்த பிளேடால் அறுத்துவிட்டுள்ளார். அதன்பின் மருத்துவமனையில் இருந்து தப்பித்த தாதி, அருகில் இருந்த இடத்தில் மறைந்துகொண்டு பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். உடனே சம்பவ இடத்துக்கு விரைத்த பொலிஸார் தாதியை மீட்டு மருத்துவர…

  24. Published By: DIGITAL DESK 3 04 JUL, 2024 | 03:03 PM இந்தியாவில் ஒருவருக்கு மூச்சுக்குழாயில் சிக்கிய நாணயக்குற்றி 8 ஆண்டுகளுக்கு பின் அகற்றப்பட்டுள்ளது. இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் சர் சுந்தர்லால் வைத்தியசாலையில் கடந்த வாரம் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் மூச்சுத்திணறல் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பரிசோதித்த வைத்தியர்கள், மூச்சுக்குழாயில் 25 சதம் நாணயக்குற்றி ஒன்று சிக்கி இருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து கடந்த 2ம் திகதி, கார்டியோ - தொராசிக் அறுவை சிகிச்சை மூலம், மூச்சுக்குழாயில் சிக்கியிருந்த நாணயத்தை வெற்றிகரமாக அகற்றியுள்ளனர். பாதிக்கப்பட்ட அந்த நபர்…

  25. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, நாக்பூரில் நடைபெற்ற திருமண மோசடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கட்டுரை தகவல் பாக்யஸ்ரீ ராவத் பிபிசிக்காக 2 ஆகஸ்ட் 2025, 06:04 GMT வட இந்தியாவில் 'கொள்ளைக்கார மணமகள்' சம்பவங்கள் நடப்பதை கேள்விப்பட்டிருப்போம். அதைப்பற்றி பல திரைப்படங்களும் எடுக்கப்பட்டுவிட்டன. அத்தகைய ஒரு நபர் தற்போது நாக்பூர் போலிஸால் கைது செய்யப்பட்டுள்ளார். இது வரை எட்டு பேரை திருமணம் செய்துள்ள அவர், அனைவரிடமும் பண மோசடியில் ஈடுபட்டுள்ளார். நாக்பூரில் மூன்று காவல் நிலையங்களிலும், சத்திரபதி சம்பாஜி நகர், மும்பை மற்றும் பவனி காவல்நிலையங்கலிலும் அவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர் திருமணம் செய்து கொண்ட எட்டு பேரும் நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.