துளித் துளியாய்
தாயக மக்களுக்கு, அவர்களின் மறுவாழ்வுக்கு உதவுதல்/உதவி கோரல்கள்
துளித் துளியாய் பகுதியில் தாயக மக்களுக்கு, அவர்களின் மறுவாழ்வுக்கு உதவுதல்/உதவி கோரல்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தாயக மக்களின் மறுவாழ்வுக்கு உதவும் தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல் வேண்டும்.
தொண்டு, பரோபகாரம் என்பவை பற்றிய பொதுவான செய்திகள், கட்டுரைகள் தவிர்க்கப்படல் வேண்டும். அவை சமூகச் சாளரம் பகுதியில் இணைக்கப்படலாம்.
350 topics in this forum
-
ஊனமுற்ற சிறுவன் அனுராஜ் அவர்களுக்கு சக்கரநாற்காலி ஊனமுற்று நடக்க முடியாத நிலமையில் வாடும் சிறுவன் அனுராஜ் அவர்களுக்கான சக்கரநாற்காலியினை பெற்றோர் எமது நிறுவனத்திடம் கோரியிருந்தனர். இவ்வுதவியை யேர்மனியிலிருந்து யோனாஸ் அவர்கள் முன்வந்து வழங்கியுள்ளார். சக்கரநாற்காலி வேண்டுதல் கடிதம்:- படங்கள் :- சக்கரநாற்காலி பெற்றுக் கொண்டமைக்கான நன்றிக் கடிதம் :- http://nesakkaram.org/ta/%E0%AE%8A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D/
-
- 4 replies
- 784 views
-
-
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட முன்னாள் போராளிக்குக் கிடைத்த உதவி. மட்டக்களப்பு மயிலம்பாவெளி , தன்னாமுனையைச் சேர்ந்த சுந்தரதாஸ்அவர்கள் மூளைப்புற்றுநோய் கண்டறியப்படாமல் நீண்ட நாட்கள் நோயோடு போராடினார். 3பிள்ளைகள் குடும்பத்தோடு வாழ்ந்து சுந்தரதாஸ் அவர்கள் தனது குடும்ப வாழ்வாதாரத்திற்கான வசதிகள் ஏதுமற்ற நிலமையில் எம்மிடம் உதவி கோரியிருந்தார். இவருக்கான முதல்கட்ட உதவியினை கருணையுள்ளம் கொண்ட எழிலி பொன்னுத்துரை அவர்கள் முன்வந்து வழங்கியிருந்தார். http://nesakkaram.org/ta/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/
-
- 0 replies
- 701 views
-
-
மருத்துவம் இயந்திரவியல் கற்கும் பல்கலைக்கழக ஏழை மாணவர்களுக்கு உதவுங்கள். நேசக்கரம் பிறைட்பியூச்சர் அமைப்பின் கல்வி ஊக்குவிப்புக் குழுவினரால் தெரிவு செய்யப்பட்ட பல்கலைக்கழகம் செல்ல காத்திருக்கும் மருத்துவ , இயந்திரபீட மாணவர்கள் 50பேருக்கான கல்வியுதவியை வழங்க புலம்பெயர் உறவுகளை வேண்டுகிறோம். சிறந்த பெறுபேறுகளைப் பெற்றும் தொடர்ந்து மருத்துவ , இயந்திரபீடக்கல்வியை தொடர வசதியற்ற மாணவர்களை நேசக்கரம் இவ்வாண்டிலிருந்து குறித்த துறைகளில் கற்று முடிக்க வேண்டிய ஆதரவினை வழங்க வேண்டிய பொறுப்பை ஏற்றுள்ளது. எமது அமைப்பின் மூலம் பல்கலைக்கழக கல்விக்கான உதவியை பெறும் மாணவர்கள் நாம் தெரிவு செய்து கூறும் ஊர்களில் வாழும் வறிய மாணவர்களுக்கான இலவச கற்பித்தல் வகுப்புக்களை இலவசமாக வழங்…
-
- 1 reply
- 660 views
-
-
நேசக்கரம்’தேன்சிட்டு உளவள அமைப்பு’உதயம் நேசக்கரம் பிறைட்பியூச்சர் அமைப்பின் உப அமைப்பான ‘தேன்சிட்டு’ உளவள அமைப்பின் அங்குரார்ப்பண நிகழ்வும் உளவள பயிற்சிநிலையம் ஆரம்பமும் 01.08.2013 அன்று சம்பிரதாய பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. ஆலயடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட அலிகம்பை , கலியாமாடு கிராமங்களைச் சேர்ந்த சுமார் 75 சிறார்களுக்கான உளவள பயிற்சிநிலையம் ‘தேன்சிட்டு’ அமைப்பினால் ஆரம்பிக்கப்பட்டு வைக்கப்பட்டுதுள்ளது. பயிற்சிநெறியில் கலந்து கொண்ட அனைத்துச் சிறுவர்களுக்கும் உணவு , சித்திரம் வரைதல் கொப்பிகள், வர்ணப்பென்சில்களும் வழங்கப்பட்டது. ‘தேன்சிட்டு உளவள அமைப்பு’ அங்குரார்ப்பண நிகழ்வில் எமது அமைப்பின் அங்கத்தவர்களான அம்பாறை மாவட்டம் மயூரன் , சங்கீதன் …
-
- 5 replies
- 825 views
-
-
புல்லுமலை மாணவர்களுக்கு உதவியும் நூலகத்திற்கான நூல்கள் வழங்கலும் 01.08.2013 அன்று மட்டக்களப்பு மாவட்டம் பெரியபுல்லுமலை கிராமத்தின் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் நூலகத்திற்கு தேவையான நூல்களும் அனைத்து மாணவர்களுக்கும் புகுத்தகப்பைகளும் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.இந் நிகழ்வினை பிறைட்பியுச்சர் நேசக்கரத்தின் உப அமைப்பான அரவணைப்பு அமைப்பின் உறுப்பினர்கள் நிகழ்வை ஒருங்கிணைத்து நடாத்தியிருந்தனர். பாடசாலை அதிபர் திரு.சோமசுந்தரம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதேச செயளாளர் திரு.ரு.உதயஸ்ரீதர் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் மட்டக்களப்பு மேற்கு வலய கல்விப்பணிப்பாளர் திரு.ரவிச்சந்திரன், கிராமசேவகர் திரு.சோமபால மற்றும் மட்டக்களப்பு மேற்கு வலய அதிபர்களுடன் நேச…
-
- 1 reply
- 597 views
-
-
மட்டக்களப்பு மலையர்கட்டு கிராம மாணவர்களுக்கு அவசர கல்வியுதவி தேவை போரினால் பாதிக்கப்பட்டு மீள்குடியேறிய மட்டக்களப்பு எல்லைக்கிராமங்களில் ஒன்றான மலையர்கட்டு கிராமத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் 43 பேருக்கான அடிப்படை கற்கை உபகரணங்களும் பாதணிகளும் வழங்க வேண்டியுள்ளது. இப்பாடசாலைக்கு நேரில் சென்று மாணவர்களின் நிலமைகளைப் பார்வையிட்ட எமது அமைப்பின் பணியாளர்களின் அவதானிப்பில் இக்கிராமம்; போரால் பாதிப்புற்ற கிராமங்களில் அதிக பாதிப்புக்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. சுகாதாரம், கல்வி, பொருளாதாரம் யாவற்றிலும் தேவைகளை அதிகம் எதிர்பார்த்து இருக்கும் இக்கிராமத்தில் வறிய நிலமையில் உள்ள மாணவர்கள் கல்வி கற்க முடியாத நிலமையில் வாழ்கின்றனர். தொடர் இடப்பெயர்வு யுத்தம் அனைத்தாலும் பாதிப…
-
- 0 replies
- 417 views
-
-
மீள்குடியேறிய 16 மாணவர்களுக்கும் 160€ உதவினால் போதும். போரினால் பாதிக்கப்பட்டு மீள்குடியேறிய மட்டக்களப்பு எல்லைக்கிராமங்களில் ஒன்றான மண்டுர் 16ம் வட்டாரத்திலுள்ள அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களுக்கான அடிப்படை கல்வி உபகரணங்கள் கோரப்பட்டுள்ளது. இப்பிரதேசமானது கிழக்கில் போரால் பாதிக்கப்பட்ட பிரதான இடங்களில் ஒன்றாகும். கல்வித் தரத்திலும் பொருளாதார முன்னேற்றத்திலும் பின்தங்கிய நிலமையில் இருந்து வரும் இப்பிரதேசத்தில் அடிப்படை வசதிகள் இல்லாமையால் பள்ளி செல்லும் மாணவர்களின் தொகை மிகவும் குறைவாகவே உள்ளது. கற்கை உபகரணங்கள் , பாதணிகள் , உடைகள் இல்லாத நிலமையில் உள்ள 16மாணவர்களுக்கும் புலம் பெயர் உறவுகளிடம் உதவியைக் கோருகிறோம். ஒரு மாணவருக்கு 10€தே…
-
- 0 replies
- 529 views
-
-
சீமெந்துக்கல் விற்பனை ஆரம்பம். July 30, 2013 தொழில்கள் Edit This எமது Hand made creators (pvt)Ltd தொழில் நிறுவனத்தின் முதல் முயற்சியாக சீமெந்துக்கல் உற்பத்திக்கான முதலீட்டாளர்களை இணைத்து உருவாக்கிய தொழில் நிறவனமானது 23.07.2013 அன்று மட்டக்களப்பு புல்லுமலைப் பிரதேசத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. எமது முதல் முயற்சியில் 377405,00ரூபா முதலிடப்பட்டு 12 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. முதல் கட்டம் 15வீடுகளுக்கான ஒப்பந்தம் கிடைத்துள்ளது.இனிவரும் நாட்களில் இரவு வேலையும் ஆரம்பமாகவுள்ளது. மேலும் ஒரு தொகுதியினருக்கான வேலை வாய்ப்பு வழங்கக் கூடிய சாத்தியம் இருக்கிறது. இம்முயற்சிக்கு தங்கள் ஆதரவை வழங்கி முதலிட்டோர் விபரம் :- 1) கஜீபன் (கனடா) 38.130,…
-
- 0 replies
- 616 views
-
-
2013 புலமைப்பரிசில் 5ம் வகுப்புத் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் மட்டக்களப்பு மேற்கு வலயம் ஏறாவூர் மேற்கு கோட்டப்பிரதேசத்தில் நடைபெறும் 2013 புலமைப்பரிசில் 5ம் வகுப்புத் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நேசம் இலவச வழிகாட்டி பயிற்சி முன்னோடிப் பரீட்சைகளில் மேற்படி கோட்டப் பிரதேசத்தில் சிறந்த மதிப்பெண்களைப் பெற்ற 48மாணவர்களுக்குமான சிறப்பு தயார்படுத்தல் பயிற்சி வகுப்பினை ஆவணி 24ம் திகதி வரையும் நடாத்த திட்டமிட்டு மாணவர்களுக்கான தொடர் பயிற்சிநெறி நடைபெற்று வருகிறது. இம்மாணவர்கள் அனைவரும் திங்கள் தொடக்கம் சனிக்கிழமை வரையிலும் தங்கி நின்று கல்வியைப் பெறுகின்றனர். இவர்களுக்கான உணவு இதர அடிப்படை உதவிகளை சோபா நிறுவனம் வழங்கிவருகிறது. நேசம் …
-
- 0 replies
- 659 views
-
-
தன்னுடைய அகரம் பவுண்டேஷன் மூலம், குமரியில் வசித்து வரும் அகதியான மாணவி தினுசியா இன்ஜினியரிங் படிக்க உதவியுள்ளார் நடிகர் சூர்யா. குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் உள்ள ஈழத்து அகதிகள் முகாமில் வசிக்கும் செல்வி தினுசியா பன்னிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்து அண்ணா பல்கலைக் கழக கலந்தாய்வில் கலந்து கொண்டார். அதில், தினுசியாவிற்கு நாகர்கோவில் பொன் ஜெஸ்லி கல்லூரியில் சேர இடம் கிடைத்தது. அக்கல்லூரியில் தமிழ் உணர்வாளர்கள் ரூபாய் 25,000 பணம் கட்டி தினுசியாவை சேர்த்தனர். ஆனால் அதற்கு மறுநாளே நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளையில் இருந்து தினுசியாவிற்கு அழைப்பு வந்தது. சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலையில் பொறியியல் படிக்க இடம் ஏற்பாடு செய்திருப்பதாகவும் நான்கு ஆண்டுகள் படிப்பிற்…
-
- 9 replies
- 869 views
-
-
நேசக்கரம் மாணவர் ஊக்குவிப்பு ஒன்றியம் உருவாக்கம். தமிழ்மாணவர்களின் மருத்துவம், இயந்திரவியல் பீடங்களுக்கான பல்கலைக்கழக நுளைவை அதிகரிக்கும் நோக்கிலும் படித்த இளைஞர்களின் வழிகாட்டலில் சிறந்த கல்விச் சமூகத்தை உருவாக்கும் நோக்கிலும் நேசக்கரம் பிறைட் பியூச்சர் அமைப்பினால் ‘மாணவர் ஊக்குவிப்பு ஒன்றியம்’ ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இவ் ஒன்றியத்தில் பல்கலைக்கழக அனுமதி பெற்றவர்களே அங்கம் வகிப்பர். குறிப்பாக மருத்துவம் , எந்திரவியல் பீடங்களுக்கு அனுமதி பெற்றவர்களே இவ்வைமப்பின் உறுப்பினர்களாகும் தகுதியைப் பெறுவார்கள். நோக்கம் :- பல மாணவர்கள் சிறந்த மதிப்பெண்களைப் பெற்று மருத்துவ எந்திரவியல் பீடத்திற்கு அனுமதி கிடைத்தும் பணவசதியின்மையாலும் குடும்ப வறுமையின் நிமித்தமும் குறைந…
-
- 4 replies
- 669 views
-
-
எனது நண்பர் ஒருவரின் தங்கை புலிகளுடன் இருந்தவர். வயது 31. போரின் போது சிறு காயங்களுக்கு ;உள்ளானார். இவர் புனர்வாழ்வின் பின் இப்பொழுது ;யாழ்ப்பாணத்தில் தனது தாயூடன் வசிக்கின்றார். இவர் தனது எதிர்காலம் தொடர்பாக மிகவூம் கவலையில் உள்ளார். இவருக்கு ;திருமணம் ஒன்றை செய்துவைப்பதற்கு நண்பர் மிகவூம் முயற்சி செய்கின்றார். பலர் இவரது: தங்கையை வந்து பார்க்கின்றனர். ஆனால் முன்பு புலிகள் இயக்த்தில் இருந்தமையினாலும் அரசாங்க உத்தியோகம் இல்லாமையாலும் எந்தவிதமான திருமணப் பொருத்தங்களும் சரிவரவில்லை. இவரது அண்ணன் வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பா அல்லாத நாடு ஒ;னறில் புலம் பெயர்ந்து இருப்பதால் அவருக்கு அருகிலிருந்த உதவ முடியாத நிலை. . இவருக்கு ஒரு திருமணத்தை செய்து வைப்பதற்கு பொருத்தமா…
-
- 18 replies
- 2.7k views
-
-
நேசக்கரம் எழுவான் அமைப்பு வாழ்வாதார கடனுதவி வழங்கல். மன்னார் மாவட்டத்தில் எம்மால் உருவாக்கப்பட்ட நேசக்கரத்தின் உப அமைப்பான எழுவான் அமைப்பின் ஆய்வறிக்கைக்குழுவினால் தெரிவு செய்யப்பட்ட 11குடும்பங்களுக்கான விவசாயக்கடனுதவியானது இம்மாதம் வழங்கப்பட்டுள்ளது. 1) ஜெயராசன் மாலினி 2) சிவானந்தராசா கென்சிகா 3) வடிவேல் அருள்வாசகம் 4) சூசைப்பிள்ளை எட்மன் 5) பிரான்சிஸ் 6) செபஸ்ரியன் 7) அந்தோனிப்பிள்ளை 8) சந்திரகுமார் 9)வீரசிங்கம் …
-
- 2 replies
- 642 views
-
-
மீன்பிடித் தொழில் செய்யும் மீனவர் ஒருவருக்கு 15ஆயிரம் ரூபா உதவுங்கள். மட்டக்களப்பு நகரத்திலிருந்து கிட்டத்தட்ட 46கிலோமீற்றர் தொலைவில் உள்ள கிராமமே கோப்பாவெளி எனப்படும் நீர்வளத்தைக் கொண்ட கிராமம் ஆகும். மொத்தம் 114 குடும்பங்களைக் கொண்ட இக்கிராமத்தில் 105 குடும்பங்கள் பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் 25 விதவைகளும் அவர்களது பிள்ளைகளும் உட்பட 52 குடும்பங்கள் மீன்பிடித் தொழிலையும் மீதி குடும்பங்கள் விறகு வெட்டுதல் , மாடுமேய்த்தல் என சில தொழில்களைச் செய்து வருகின்றனர். போரால் பாதிப்புற்ற கிராமங்களில் இக்கிராமமும் மிகவும் பாதிப்படைந்த ஒரு கிராமம். இந்த மக்களிடம் பணம் வசதிகள் எதுவுமில்லை. ஆயினும் அன்றாட வாழ்வை கொண்டு செல்ல தங்களது உடல் உழைப்பை மட்டுமே மூலதன…
-
- 24 replies
- 2.7k views
-
-
நேசக்கரம் உப அமைப்புக்களின் விபரங்கள். போரால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் நலன்கருதி பிரதேச வாரியாக உப அமைப்புக்களை உருவாக்கி வருகிறோம். உப அமைப்புக்கள் உருவாக்கத்தின் நோக்கம் :- 1) உதவிகள் ஒருங்கிணைப்பு தொடர்பால் இல்லாதிருப்பதால் ஒருவரே பல வழிகளிலும் உதவியைப் பெறுவார். இதனால் உண்மையான பாதிப்போடு உதவி தேவைப்படுவோருக்கு உதவிகள் செல்லாதிருக்கிறது. இந்த நிலமையை மாற்றி எல்லோருக்கும் உதவிகள் பகிரப்பட உப அமைப்புக்கள் ஊடாக ஒருங்கிணைவை உண்டாக்கும் நோக்கில் உப அமைப்புக்கள் தோற்றுவிக்கப்படுகிறது. 2) ஓவ்வொரு பிரதேசத்தினதும் சரியான நிலமைகளை கண்டறிந்து சரியான தரவுகளை உப அமைப்பின் நிர்வாகத்தினரின் தொடர் கவனிப்பு மூலம் அறிக்கைகளை எமக்குத் தந்துதவுவார்கள். தரவுகள் அ…
-
- 7 replies
- 1.1k views
-
-
சீமெந்துக்கற்கள் வியாபாரம் நீங்களும் இணையலாம் போரால் பாதிப்புற்ற கிழக்குமாகாணத்தின் பல கிராமங்களுக்கு வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டு வருகிறது. வீடுகளைக் கட்டுவதற்கான சீமெந்துக்கற்கள் , மரங்கள் இதர பொருட்கள் யாவும் முஸ்லீம் மற்றும் பெரும்பான்மையினத்தினரின் உற்பத்திகளிலிருந்தே எம்மவர்கள் அதிக விலைகொடுத்து வாங்கும் நிலமையிருக்கிறது. இவ்விடங்களை நோக்கி அவர்களது தொழில்சாலைகளும் வந்து கொண்டிருக்கிறது. நாமே வீடு கட்டுவதற்குத் தேவையான கற்கள் மரங்கள் போன்றவற்றை எம்மவர்களுக்கு விநியோகிக்க முடியும். அதற்கான முதலீடு எம்மிடம் இருப்பின் எம்மவர்களுக்கு நாங்களே குறைந்த விலையில் வழங்கலாம். இவற்றைக் கருத்தில் கொண்டு சீமெந்துக்கற்தொழிச்சாலை ஒன்றைக் கிழக்கு மாகாணத்தில் நிறுவ உத்தேசித்…
-
- 8 replies
- 2.3k views
-
-
நாவலர் ஆங்கிலபாடசாலை பாலர்களுக்கு சீருடை வழங்கல் மட்டக்களப்பு மாநகர எல்லைக்குள் சுமார் 900 குடும்பங்களை கொண்ட நாவற்குடா கிழக்கு எனும் பின்தங்கிய கிராமம் உள்ளது. இங்கு சிறார்களின் கல்வி மேம்பாட்டுக்காக இவ்வூர் கிராம அபிவிருத்திச் சங்கம் நாவலர் ஆங்கில பாலர் பாடசாலை ஒன்றினை 2013 தை மாதம் முதல் நடத்தி வருகின்றது. இங்கு ஆரம்பக்கல்வியைப் பெற்றுவரும் 16 பாலர்களுக்கு சீருடையினை நேசக்கரம் வழங்கியுள்ளது. இன்று ஆங்கிலப்பாடசாலைகள் பணக்காரர்களுக்கு மட்டுமேயான ஒன்றாகவுள்ளது. இந்நிலையில் ஏழைமாணவர்களும் ஆங்கிலக்கல்வியைப் பெற வைக்கும் நோக்கில் ஆசிரியர்களுக்கான சிறிய கொடுப்பனவின் ஒருபகுதி உதவியை மட்டும் பெற்று இப்பாடசாலையை நடத்தப்படுகிறது. பாலர்களின் தேவைகளான புத்தகங்கள் சீருடை போன…
-
- 0 replies
- 491 views
-
-
புல்லுமலைக் கிராமத்தின் குழந்தைகளையும் ஆதரிப்போம். மட்டக்களப்பு நகரத்தின் மேற்கே 30 கிலோ மீற்றருக்கு அப்பால் செங்கலடி பதுளை பிரதான வீதியில் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஒரு எல்லைக் கிராமமாக ‘பெரிய புல்லுமலை’ எனும் அழகிய கிராமம் அமைந்துள்ளது. சுமார் 800வரையிலான தமிழ்குடும்பங்கள் குடியிருந்த இக்கிராமம் விவசாயத்தையே தன் ஆதாரமாகக் கொண்டிருந்தது. காலத்துக்குக் காலம் யுத்தத்தின் பாதிப்பு இக்கிராமத்தையும் அதிகளவில் காவு கொண்டது. யுத்தத்தினால் ஊர்களை விட்டு மக்கள் வெளியேறிவிட ஒரு கட்டத்தில் புல்லுமலை மனிதர்கள் இல்லாத ஊராக இருந்ததும் ஒருகாலம். இதர இடங்களில் குடியேறி அங்கங்கே பல குடும்பங்கள் நிரந்தரமாக தங்கிவிட்ட போதும் 148 குடும்பங்கள் தங்கள் சொந்த ஊரான புல்லுமலைக்குத் திர…
-
- 3 replies
- 850 views
-
-
ஏழைக்கிராமமொன்றின் வளர்ச்சியை நோக்கிய பாதையில் நேசக்கரம். ஒரு நாட்டின் உயர்ச்சி கிராமங்களிலேயே தங்கியுள்ளது. ஆனால் தமிழர் பிரதேசங்களைத் தின்றுமுடித்த போரின் வடுக்களாக மிஞ்சியிருப்பது வறுமையும் துயரமும் வாழ்வாதார முன்னேற்றத்தில் மிகவும் பின் தங்கிய நிலமையே காண்கிறது. இந்த வகையில் பெயர் அறியப்படாத பெயர் தெரியாத தமிழர் கிராமங்கள் எத்தனையோக கிழக்கு மாகாணத்தில் இருக்கிறது. அத்தகைய கிராமங்களில் ஒன்று மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கரடியனாறு கிராம உத்தியோகத்தர் பிரிவு கரடியன்குளம் குசேலன்மலை எனப்படும் கிராமமும் ஒன்றாகும். இங்கு 27குடும்பங்கள் மட்டுமே வாழ்கின்றனர். போராட்டத்திற்காக உயிர்கள் முதல் உடமைகள் வரை இழந்த காயங்களையும் தன்னகத்தே தாங்க…
-
- 4 replies
- 984 views
-
-
மட்டக்களப்பில் தையல் நிலையம் ஆரம்பம். எம்மால் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனத்தின் தொழில் முயற்சியின் முதலாவது முதலீட்டாளராக நேசக்கரம் அமைப்பின் நீண்ட கால ஆதரவாளரான யேர்மனியில் வசித்து வரும் திரு.சபேசன் அவர்கள் இணைந்துள்ளார். ஏற்கனவே போரில் பெற்றோரை இழந்த இரண்டு பெண் பிள்ளைகளுக்கு சபேசன் மாதாந்தம் உதவிக் கொண்டிருப்பதோடு அவசர உதவிகள் தொழில் முயற்சிகளுக்கும் உதவியுள்ளார். அத்தோடு தனது உறவினர்கள் நண்பர்களையும் நேசக்கரத்துடன் இணைத்து உதவிகளை வழங்கிக் கொண்டிருக்கிறார். அடுத்த கட்டமாக தையல் நிறுவனமொன்றை ஆரம்பிப்பதற்கான முதல் கட்ட உதவியையும் வழங்கியதோடு தையல் நிறுவனத்தை தொடர்ந்த வளர்ச்சியில் கொண்டு சென்று போரால் பாதிப்புற்றவர்களுக்கான ஆதரவை வழங்கும் நோக்கில் எம்முடன் இணைந்துள…
-
- 5 replies
- 992 views
-
-
தொழில் நிறுவனம் மூலம் நீங்களும் உதவலாம் போரால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதார மேம்பாட்டினை உயர்த்தும் முகமாக இவ்வருடம் 3ம் மாதம் இலங்கையின் நிறுவனங்களுக்கான சட்ட வரைபுக்கு அமைய HAND MADE CREATORS (PVT) Ltd என்ற பெயரில் நிறுவனமொன்றை ஆரம்பித்துள்ளோம். இந்த நிறுவனத்தின் நோக்கம் :- 1) போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கானதும் வறுமையால் வாடும் தமிழர்களுக்குமான வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்தல். 2) சிறு சிறு முதலீடுகள் மூலம் தொழில் முயற்சிகளை முன்னெடுத்தல். 3) சிறு சிறு வியாபாரங்களை ஆரம்பித்தல். 4) கிடைக்கும் வருமானத்தின் மூலம் ஏழை மாணவர்களுக்கான கல்விக்கு உதவுதல். எமது நிறுவனத்தின் பதிவுச் சான்றிதழ் :- இத்திட்டத்தில் இணைந்து கொள்ள விரும்புவோர் எ…
-
- 7 replies
- 1k views
-
-
நேசக்கரம் ஆதரவில் நடைபெற்ற கண்காட்சி நிகழ்வு. மட்டக்களப்பு பட்டிருப்பு மகாவித்தியாலயம் கழுவாஞ்சிக்குடி தேசிய பாடசாலையின் 94வது பாடசாலை தினமும் கண்காட்சியும் மேமாதம் 29.05.2013 தொடக்கம் 3.05.2013 வரையான 3நாட்கள் நடைபெற்றது. கண்காட்சி நிகழ்வுக்கான வேறு உதவிகள் எதுவும் கிடைக்காத நிலமையில் இறுதித்தருணத்தில் இக்கண்காட்சியினை நடாத்தவதற்கான ஆதரவினை பட்டிருப்பு பாடசாலை அதிபர் எம்மிடம் கோரியிருந்தார். உடடியான முழுமையான ஆதரவினை எம்மால் வழங்க முடியாமையினால் 3நாட்களும் நடைபெற்ற கண்காட்சிக்கான ஆங்கில பாடத்துக்குரிய பொருட்களை வழங்கியதோடு ஆங்கில சொல்விளையாட்டு பாடத்துக்குரிய பரிசாக 2500பென்சில்களையும் , 50 மாணவர்களுக்குரிய வெற்றிக் கிண்ணங்களையும் வழங்கியிருந்தோம். எமது நேசம…
-
- 1 reply
- 854 views
-
-
மருத்துவ தொழில்நுட்பத்துறைசார் 700 மாணவர்களுக்கான முன்னோடிப்பரீட்சை கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு , அம்பாறை மாவட்டங்களில் உயர்தரம் கற்கும் மருத்துவத்துறை ,தொழில்நுட்பத்துறையைச் சேர்ந்த 700 மாணவர்களுக்கான முன்னோடிப் பரீட்சைகளை நடாத்துவதற்கான உதவியினை நேசக்கரம் பிறைட் பியூச்சர் அமைப்பு புலம்பெயர் தமிழர்களின் நிதியுதவியில் வழங்கியிருக்கிறது. மேற்படி மாவட்டங்களில் 3வலயங்களை உள்ளடக்கிய மாணவர்களில் தமிழ் மாணவர்களை உள்ளடக்கிய இரு வலயங்களைத் தெரிவு செய்து மருத்துவம் , தொழில்நுட்பம் சார்ந்த துறைகளில் கற்கும் மாணவர்களின் பல்கலைக்கழக நுளைவை அதிகரிக்கும் நோக்கில் கடந்த 20வருடங்களாக EDUCATION INCENTIVE ASSOCIATION BATTICALO அமைப்பினரால் முன்னோடிப்பரீட்சைகள் நடாத்தப்பட்டு வருகிறது.…
-
- 0 replies
- 883 views
-
-
அன்பார்ந்த நண்பர்களுக்கும் நவ்வாவ்இன் நலன் விரும்பிகளுக்கும், போரால் சீரழிந்த கிழக்குப் பிரதேசத்தில் சுய முயற்சிக் கமத்தொழில் பணிகளுக்கு நிதி வழங்கல் கிழக்கிலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை இயல்பு வாழ்வுக்கு திரும்பவைப்பதில் நவ்வாவ் கடந்த ஒன்றரை வருட காலமாக முன்னெடுத்துவரும் செயல்பாடுகளைத் தாங்கள் நன்கறிவீர்கள் என்பதில் எமக்குச் சந்தேகம் இல்லை. கடந்த மார்ச் 2013 ல் அமெரிக்க வரியாணை செயலகம் எம்மை மார்ச் 2012 இலிருந்து பதிவு செய்யபட்ட அறக்கட்டளை நிலையமாக அதிவிரைவாக ஏற்றுக்கொண்டது, நாம் தனிய நின்று பொறுப்பெடுத்து நிதிவழங்கி பின்வரும் வரும் பணிகளை அவதானமாக திட்டமிட்டும், நுண்மையாக நிறைவேற்றி வைத்ததிலிருந்தும் ஊற்றெடுத்ததாகும் என்பதை நாம் பெருமையுடன் காட்டி…
-
- 3 replies
- 703 views
-
-
நேசக்கரம் பற்றிய கேள்விகள் பதில்கள். நேசக்கரம் அமைப்பும் அதன் வளர்ச்சியிலும் தங்கள் ஆதரவை நல்கும் அனைத்து கருணையாளர்களும் இப்பகுதியில் தங்கள் சந்தேகங்கள் கேள்விகளை கேட்க முடியும். உங்கள் கேள்விகளுக்கு பதில்களை வழங்க காத்திருக்கிறோம். உங்கள் கேள்விகள் மென்மேலும் நேசக்கரத்தின் வளர்ச்சியில் பாரிய மாற்றத்தையும் பயனையும் தரும். நேசக்கரம் பண உதவிகள் பற்றிய சகல தரவுகளும் மற்றும் உதவுவோரின் உதவிகளை பெறும் பயனாளிகளின் கடிதங்கள் மாதாந்த கணக்கறிக்கைகள் யாவும் எமது இணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. தனிப்பட்ட விபரங்கள் வெளியிடப்படுவதில்லை பொதுவெளியில். உதவுகிறவருக்கு மட்டும் பயனாளியின் படம் கடிதங்கள் தொடர்பு வசதிகள் வழங்கப்படும். யாழ்இணையம் கருத்துக்களத்தில் கருத்துக்க…
-
- 85 replies
- 7.5k views
-