மாவீரர் நினைவு
மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள்
மாவீரர் நினைவு பகுதியில் மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழ் மக்களினதும் மண்ணினதும் விடிவுக்காக தம்மின்னுயிரை ஆகுதியாக்கிய மாவீரர்களின் நினைவு நாட்கள், வரலாறுகள் சம்பந்தமான பதிவுகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
மாவீரர் நினைவு நாட்களை நாட்காட்டிப் பகுதியிலும் பதிந்து கொள்ள முடியும்.
944 topics in this forum
-
லெப். கேணல் தர்சன் நவம்பர் 4, 2020/தேசக்காற்று/வீரத் தளபதிகள்/0 கருத்து களத்திலெங்கும் ஒலித்த குரல்: கேணல் கிட்டு பீரங்கிப் படையணி பளை – நாகர்கோவில் ஒருங்கிணைப்புத் தளபதி லெப். கேணல் தர்சன் இடைவிடாத எதிரியின் எறிகணை வீச்சுக்கும், காதைப் பிளக்கும் போர் விமானங்களின் குண்டு வீச்சுக்கும் வடமுனைப் போர் அரங்கு முகம் கொடுத்த வண்ணமிருந்தது. அது நீண்ட பல நாட்களாக சிறிலங்கா படையின் பிடியிலிருந்த பளைப் பிரதேசம். ஓயாத அலைகள் – 03 என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க போர் நடவடிக்கை மூலம் ஆனையிறவுத்தளத்தை உடைத்தெறிந்த போது அதனை நாம் வெற்றிகரமாக மீட்டுக்கொண்டோம். ஓயாத அலைகள் தனது தேவை கருதி ஓய்வுக்குத் திரும்பிய காலம், சிறிலங்காப் படைகள்…
-
- 1 reply
- 622 views
-
-
லெப். கேணல் ராகவன் நவம்பர் 2, 2020/தேசக்காற்று/சரித்திர நாயகர்கள், வீரத் தளபதிகள்/0 கருத்து விடுதலையின் பாதையில் அழியாத தடம்: ‘சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி தளபதி’ லெப். கேணல் ராகவன். 1999 நவம்பர் இரண்டாம் நாள். உலகின் செய்திக் கதவுகளெல்லாம் பொங்கிப் பிரவாகித்த “ஓயாத அலை” களின் வீச்சுக்கு வழிவிட்டன. உலக இராணுவச் சரித்திரத்தில் நிலைபெற்ற ஓயாத அலைகள் மூன்றின் முதலாம் நாள் தமிழீழத்தின் சிறந்த போர்த் தளபதிகளில் ஒருவரான லெப்.கேணல் ராகவனையும் தன்னுடன் அணைத்துக் கொண்டது. வெற்றிமுரசு கொட்டிச் சிங்களம் செய்த பெரும் போர் நடவடிக்கைகளின் போதெல்லாம் எதிர்த்து நின்று போரிட்ட புலிகளின் போர்த் தளபதி அவன். உலக வரலாற்று ஏடுகளிற் பெரும் சரித்திரப் ப…
-
- 3 replies
- 1.5k views
-
-
லெப். கேணல் ஞானி அக்டோபர் 31, 2020/தேசக்காற்று/வெஞ்சமரின் நாயகிகள்/0 கருத்து வெல்வோமெனச் சென்று வென்றவள்: கப்டன் அன்பரசி படையணி துணைத் தளபதி லெப். கேணல் ஞானி சகல ஆயத்தங்களோடும் தயாராவிட்ட ஒரு போர்ப்பயணத்திற்கு இறுதிக்கணங்கள் அவை, கூட்டங்கூட்டமாக கூடிநின்று ஆடியும், பாடியும், பேசிக்களித்துக் கொண்டும் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திக்கொண்டிருந்தார்கள் போராளிகள். ஒரு திசையிலிருந்து பல குரல்கள் ராகத்தோடு எழுகின்றன. “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் என்றே நீ கூறு வேங்கைகள் ஆனவர் நாங்கள் எந்த வேளையும் சாகலாம் போங்கள்” என்று ஒலித்த அந்தக் குரல்களையும் மீறி, “வேங்கைகள் ஆனவர் நாங்கள் எந்த வேளையும் வெல்லுவோம் போங்கள்” எ…
-
- 1 reply
- 1.1k views
-
-
மேஜர் கனீபா அக்டோபர் 31, 2020/தேசக்காற்று/வெஞ்சமரின் நாயகிகள்/0 கருத்து சாதனைகளின் ஊற்றுக்கண் மேஜர் கனீபா சாதிக்கவேண்டும் என்பதன்றி வேறு சிந்தனைகள் அவளிடம் இருக்கவில்லை. ஓயாத அலைகள் 02இன் போது தனக்குரிய பகுதியை நிச்சயமாகப் பிடிப்பேன். சண்டையில் இரண்டு அதிகாரிகளைப் பிடித்து போனமுறை (1998.02.01இல்) உள்ளே வந்து வீரச்சாவடைந்தவர்களை என்ன செய்தீர்கள் என்று கேட்பேன் என்று தான் சண்டை தொடங்கும் வரை சொல்லிக் கொண்டிருந்தாள். சண்டையின் போதான அவளின் அணியின் நகர்வு இலகுவாக இருக்கவில்லை ஒரு கட்டடக் காடாக இருந்த பெருந்தளத்தை நெருங்குவதற்காய் ஆங்காங்கே சில மரங்கள் கொண்ட நீண்ட வயல் வெளியை எதிரியின் கண்காணிப்பு நிலைகள், அவதானிப்புக் கோபுரங்கள் என்பவை…
-
- 1 reply
- 411 views
-
-
கடற்புலி லெப். கேணல் வரதா அக்டோபர் 30, 2020/தேசக்காற்று/அலைகடல் நாயகர்கள், வெஞ்சமரின் நாயகிகள்/0 கருத்து கடற்புலி லெப். கேணல் வரதா / ஆதி தமிழீழத்தின் முக்கிய துறைமுகப் பட்டணங்களில் ஒன்றான வல்வெட்டித்துறை தனியானதொரு பண்பாட்டின் உறைவிடம்.வல்லவர்களின் துறை வல்வெட்டித்துறை என்பது சாலவும் பொருந்தும்.திரைகடல் ஓடியும் திரவியம் தேடுவதில் வல்லவர்கள் மட்டுமல்ல,வரலாற்றில் பல தசாப்தங்களுக்கு முன்னரே கப்பல் கட்டும் தொழில் நுட்பத்தில் தலை சிறந்தோரையும் கொண்டது தான் வல்வைபூமி.எவருக்குமே கிடைத்தற்கரிய கலியுகக் கடவுளான எமது ஒப்பற்ற பெருந் தலைவன் தமிழீழத் தேசியத் தலைவர் பிறந்த ஊராகவும் இது திகழ்வதால் தமிழீழச் சரித்திரத்தில் இவ்வூர் அழியாப் புகழைப் பெறுகின்ற…
-
- 1 reply
- 801 views
-
-
கடற்கரும்புலி லெப். கேணல் அமுதசுரபி எம் மனங்களோடு கலந்து போன கடற்புலி மகளிர் துணைத்தளபதி, கடற்கரும்புலி லெப். கேணல் அமுதசுரபி. தாயகத்தைக் காப்பதற்காய் கனத்த மடிகளாய் கரையைத் தேட முயலும் படகுகள் இயந்திரப் பிழைகளால் வேகம் குறைய, தொடரணியாய் எம் கடற்பரப்பில் நகரும் எதிரிகளோடு மாட்டுப்பட வேண்டிவரும் பொழுதுகளில், அல்பாவின் குரல் உயர் அலை வரிசைச் சாதனத்தில் ஒலிக்க நம்புவோம் நாங்கள் எங்கள் கரை தூரத்தில் இல்லை என்று. “இந்த வாறன். இந்தா வாறன்” உயர் அலை வரிசைத்தாளத்தில் எங்களுக்கு நம்பிக்கையூட்டி, “விடாமல் அடியுங்கோ” என்று கட்டடையிட்டு எங்களின் படகுகளுக்கு தனது படகைக் கொண்டு வந்து காப்பிட்டு, பகைக் கலத்தோடு சண்டை பிடித்து எங்களுக்கு இழப்புகளின்றி கரையேற்றிய அந்த ச…
-
- 1 reply
- 619 views
-
-
தாயக விடுதலையென்ற உயரிய இலட்சியத்திற்காக அயராது உழைத்த இலட்சிய வீரர்கள் தலைமைச் செயலகம், தமிழீழ விடுதலைப்புலிகள், தமிழீழம். 04.11.1996 பாரிஸ் நகரில் உள்ள விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அனைத்துலகத் தலைமைச் செயலகத்தில் முக்கிய பணியாளர்களாகப் பணிபுரிந்த திரு.கந்தையா பேரின்பநாதன் (நாதன்) திரு. கஜேந்திரன் (கஜன்) ஆகிய எமது உறுப்பினர்கள் இருவர் பகைவனின் சூழ்ச்சியால் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வை அறிந்து நான் ஆழ்ந்த கவலையும் வேதனையும் அடைகின்றேன். திரு. நாதன் எமது விடுதலை இயக்கத்தின் ஒரு மூத்த உறுப்பினர் நேர்மையும் கண்ணியமும் மிக்கவர். விடுதலை இலட்சியத்தில் அசையாத உறுதி கொண்டவர். நீண்ட காலமாக சர்வதேச நிதி திரட்டும் பெரும் பொறுப்பைச் சுமந்து உலக…
-
- 1 reply
- 893 views
-
-
லெப். கேணல் நாதன் லெப். கேணல் நாதன் தூணாக விளங்கிய ஒரு மாவீரன். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சர்வதேச செயல்பாடுகளுக்கு தூணாக நின்ற ஒரு போராளி. புலம் பெயர் தமிழர் வாழும் பரப்பெங்கும் இயக்கத்தின் செயல்பாடுகளை பரப்பலாக்கி விடுதலைப் போரின் அடிப்படைத் தேவைகளுக்கு தோள் கொடுத்த மாவீரன். 12 ஆண்டுகள் இயக்கத்தின் கால்களாக நின்று ஓடி ஓடி உழைத்த மாவீரன் நாதன். யாழ்ப்பாணம் அரியாலையில் ஒரு நடுத்தர வர்க்க குடும்பத்தில் பிறந்தவன். தாயின் அரவணைப்பில் வாழ்ந்த நாதன் சிங்கள அரச பயங்கரவாத புயல் எம் தேசத்தை சூறையாடிய போது தாயாலும் சகோரராலும் பிரான்சுக்கு அனுப்பப்பட்டவன். அரச பயங்கரவாத புயல் தமிழர் மண்ணில் விதைத்து விட்ட விடுதலை தாகம் நமது நாதன் உயிரிருப்…
-
- 0 replies
- 519 views
-
-
கப்டன் கஜன் கப்டன் கஜன் ஒரு எழுதுலகப் போராளி. ஒரு முற்போக்கு கவிஞன். 1988ஆம் ஆண்டு இந்திய இராணுவம் அமைதி பணி புரிந்த காலகட்டம். சிங்கள பேரினவாத அரசு குதூகலித்து நிற்க அகில பாரதம் எம்மீது போர் தொடுத்த காலம் அவை அப்போது எமது மக்களின் இந்திய எதிர்பார்ப்புகள் மெல்ல மெல்ல நொருங்கி தமிழர்கள் தம் சொந்த கால்களில் நின்றே விடுதலையை வென்றெடுக்க வேண்டுமென்ற புவிசார் அரசியல் கோட்பாடுகள் புலப்படத் தொடங்கிய நேரம் அவ்வேளையில் எமது விடுதலை இயக்கத்தின் பிரெஞ்சுப் பணியகம் விடுதலை மாலை என்னும் உணர்வுமிக்க கலைநிகழ்வை மக்கள் மத்தியில் அரங்கேற்றியது. அந்த விடுதலை விழாவில் மக்களின் சமகால கேள்விகளையும் சந்தேகங்களையும் உள்வாங்கி இலக்கியம் என்பது நிகழ்வுகளின் பிரதிபலிப்பு …
-
- 0 replies
- 586 views
-
-
லெப். கேணல் சேகர் சாவுக்குள் உழைத்த வீரம் ‘சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி தளபதி’ லெப். கேணல் சேகர் 1998 சுதந்திர நாளுக்குக் கிளிநொச்சியிலிருந்து கண்டி வீதியால் தலதாமாளிகைக்குப் பேரூந்து வருமென சிங்களத்து ஜெனரல் விடுத்த சவாலுக்குச் சாட்டையடியாகக் கிளிநொச்சித்தளம் மீதான பாய்ச்சலுக்குத் தலைவர் கட்டளையிட்டார். அவரின் கட்டளைக்கிணங்க மையத்தளத்தினுள் முன்னேறிய எமது போராளிகளை வீழ்த்தி எமது முன்னேற்றத்தைத் தடுத்துக் கொண்டிருந்தான் எதிரி. எதிரிக்காக எடுத்த சாட்டையின் அடி எங்கள் முதுகுகளிலேயே விழுந்து விடுமா? எதிரி கொடியேற்றும் நாளில் எங்கள் தேசியக்கொடி அரைக்கம்பத்திற் பறக்குமா? அர்த்தமற்ற உயிரிழப்புக்களுடன் நாம் தளம் திரும்ப நேருமா? தலைவன் இட்ட ஆணையை வீணேபோக…
-
-
- 1 reply
- 1.2k views
-
-
கடற்கரும்புலி கப்டன் இளங்குயிலன் விடாமுயற்சி, ஓர்மம், பிடிவாதம், குறும்புத்தனம் என கலந்துகட்டிய ஓர் அருமையான தோழன் இளங்குயிலன். எமது வாகனம் புதுக்குடியிருப்பு நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. விசுவமடு றெட்பானாவைத் தாண்டும்போதுதான் அவனைப் பார்த்தேன். எதிர்முனையிலிருந்து சைக்கிளில் வந்துகொண்டிருந்தான். வாகனம் ஓரளவு மெதுவாகச் சென்றதால் வடிவாக அவனைப் பார்க்கக் கூடியதாகவிருந்தது. என்றாலும் நம்பமுடியவில்லை. பக்கத்திலிருந்த செல்வனைக் கேட்டேன். செல்வன் அவனைக் கவனிக்கவில்லை. அவன் சைக்கிளோட்டிச் செல்வதைச் சொன்னபோது செல்வனும் நம்பவில்லை. ஏனென்றால் அவன் தனது இரண்டு கால்களையுமே சில மாதங்களின் முன்னர் இழந்திருந்தான். இளங்குயிலனின் இயற்பெயர் பற்றிக் எட்மன்…
-
- 0 replies
- 531 views
-
-
கடற்கரும்புலி கப்டன் கண்ணாளன் கடமை… 2004ம் ஆண்டு 26 ஆம் நாள். ஆழிப்பேரலை அனர்த்தம் நம் மண்ணிலும் பல உயிர்களைக் காவு கொண்டதோடு, பெரும் அழிவுகளையும் ஏற்படுத்தியிருந்தது. இந்த அழிவுக்குள் மட்டக்களப்பு கதிரவெளியைச் சொந்த இடமாகக் கொண்டிருந்த கடற் கரும்புலி கண்ணாளனின் குடும்பமும் சிக்கிவிட்டது. நிலைமையை அறிந்து அவனை அவனது ஊரிற்கு விடுமுறையில் அனுப்பியாயிற்று. அங்கு அவனுக்காக பணிகள் நிறையவே இருந்தது. குடும்பத்தை நிமிர்த்தி, எஞ்சியவர்களுக்கான இருப்பிடம், உணவு, உடை, என அத்தியாவசியமான தேவைகளைக் கவனிப்பதில் இருந்து எல்லமே அவன்தான். வீட்டின் இல்லாமை போhக்க அவன் உழைக்க வேண்டியதாயிற்று… ஆனால், முதன்மையான தாக்குதல் ஒன்றிக்காக பயிற்சித் திட்ட…
-
- 2 replies
- 522 views
-
-
கடற்கரும்புலி கப்டன் சிவகாமி நெஞ்சை விட்டகலாத நினைவுகளில் என்றும் கடற்கரும்புலி கப்டன் சிவகாமி. அவள் ஒரு ஓட்ட வீராங்கனை. அவள் பங்குபற்றுகின்ற ஓட்டப்போட்டிகள் அனைத்திலுமே பரிசு வாங்காமல் வந்ததில்லை. எந்த நேரமும் கால்கள் நிலத்தில் படாதவாறு துறுதுறுத்தபடி பறந்து திரிவாள். சிவகாமி என்ற போராளி ‘மின்னல்’ என்ற சிறிலங்கா இராணுவ நடவடிக்கையில் மணலாற்றில் வீரச்சாவடைந்ததை நினைவு கூர்ந்து, செல்வி என்ற இவளுடைய இயற்பெயர் ‘சிவகாமி’ ஆனது. இவளும் மேஜர் மதுசாவும் நெருங்கிய தோழிகள். இயக்கத்துக்கு வந்தபின் சிவகாமி தன் போராட்ட வாழ்க்கையில் மதுசாவுடனேயே இருந்தாள். அந்த உறவு; மதுசா திருமலைக் கடலுக்குக் கரும்புலியாகச் சென்ற சமயம் தனக்கும், மதுசாவுக்கு…
-
- 2 replies
- 697 views
-
-
லெப். கேணல் சாந்தகுமாரி எமது விடுதலைப் போராட்டத்தில் மாபெரும் பணியாற்றிய லெப். கேணல் சாந்தகுமாரி. எல்லோருடனும் சிரித்துக் கதைக்கின்ற சாந்தகுமாரி இன்று எங்களோடு இல்லை. ஆனால் எதிரியைச் சிதறடிக்கின்ற சாந்தகுமாரிகள் எங்களோடேயே களமுனையில் நிற்கிறார்கள். சாந்தகுமாரியின் பெயரில் தயாரிக்கப்பட்ட கண்ணி வெடிகள் எதிரிகளின் கால்களோடு கதைபேசிக் கொண்டிருக்கின்றன. புயலுக்கு முந்திய அமைதியோடு புலிகள் இருந்த காலப்பகுதியது. எதிரியானவன் எமது மண்ணை வல்வளைக்கும் நோக்குடன் ஜெயசிக்குறு, ரணகோச, வோட்டஜெற் என பெயரிட்டபடி படை நடவடிக்கைகளை மாறி மாறி மேற்கொண்டு எமது வளங்களை அழிவுக்குள்ளாக்கியதுடன், எம்மக்களையும் பெரிதும் துன்பப்படுத்திக் கொண்டிருந்தான். எவரும் எதிர்பாராத பெரு…
-
- 3 replies
- 1.1k views
-
-
மேஜர் கலாநிதி ஆழியவளையிலிருந்து எழுந்த அலைமகள் கடற்புலி மேஜர் கலாநிதி; ஒரு போராளியின் புனிதப் பயணம். இமயம் முதல் குமரி வரையும், கங்கை தொடக்கம் கடாரம் வரையும் எட்டுத் திக்குகளிலும் வெற்றிக்கொடியைப் பரப்பி விட்டவன் தமிழன். ஆட்சியுரிமையோடு ஆசியாவில் வாழ்ந்து இந்துமாகடலின் ஆளுகையை தனது முழுக்கட்டுப்பாட்டில் வைத்து அதற்கு சொந்தம் கொண்டாடியவன் எமது முப்பாட்டன் சோழன். இதனால் உலகில் முதல் கப்பல் படையை நிறுவி கடலில் படை நடத்தியவனும் தமிழன் என்பது உண்மை வரலாறாகும். இவ்வாறு பெருமைகொண்ட தமிழினம் சொந்த நாடின்றி, சொந்த கடல்வளமின்றி, இருப்புக்கு இடமின்றி, நாதியற்று, நாடு நாடாக அலையும் நிலையில், தன்மானமிழந்து பணலாபம் கொண்டு வக்கற்ற வாழ்வில், திக்கற்ற இலக்கில் இன…
-
- 2 replies
- 542 views
-
-
தேசியத் தலைவரின் உயிர் நாடியாக வாழ்ந்து மடிந்த பன்னிரு வேங்கைகள். 1987 செப்ரெம்பர் 26ம் நாள் தமிழீழம் எங்கும் ஒரு துயரம் தோய்ந்த சோகநாளாகவே அமைந்தது. திலீபனின் இழப்பு அனைத்து தமிழர் மனங்களையும் வாட்டிவதைத்தது. சிறீலங்கா – இந்தியா ஒப்பந்தம் மூலம் தமிழீழத்தை ஆக்கிரமித்த இந்திய அரசின் வஞ்சகச்சதியால் மக்களுக்காக வாழ்ந்த அந்த ஒளிவிளக்கு ஓய்ந்தது. இத்தோடு முடிந்துவிட்டது என்று மக்களின் மனத்தில் எண்ணங்கள் ஓட, தமிழீழக் கடற்பரப்பிலே பயணித்துக் கொண்டிருந்த லெப். கேணல் குமரப்பா, லெப். கேணல் புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகளைக் கைதுசெய்து அவர்களின் சாவுகளுக்கு சிறீலங்கா – இந்திய அரசுகள் காரணமாகின. அது அனைத்து மக்களையும் இன்னுமோர் சோகத்தில் ஆழ்த்தியது. 1987ம் ஆண்டு யூலை 29…
-
-
- 3 replies
- 1.2k views
-
-
தமிழீழ வரலாற்றில் அழியா பெயர் லெப்.கேணல் புலேந்திரன்... லெப்.கேணல் புலேந்திரன்(திருமலை மாவட்ட தளபதியும் மத்தியகுழு உறுப்பினரும்) குணநாயகம் தருமராசா பாலையூற்று, திருகோணமலை. வீரப்பிறப்பு:07.06.1961 வீரச்சாவு:05.10.1987 நிகழ்வு:யாழ்ப்பாணம் பலாலி படை முகாமில் இந்திய – சிறிலங்கா கூட்டுச்சதியை அம்பலப்படுத்துவதற்காக சயனைட் உட்கொண்டு வீரச்சாவு அன்பின் புலேந்திரன், தமிழ் மக்களின் பாதுகாப்புக்குத் தானே உத்தரவாதம் என்று எமது ஆயுதங்களைப் பெற்ற இந்தியா, நீ திருமலைக்குப் போவதற்குப் பாதுகாப்புக் கேட்டபோது இந்திய இராணுவத்திலுள்ள மேஜர் கருப்பசாமி உனக்குச் சொன்னார், “இன்றும் இல்லை, இனி எப்போதும் இல்லை” என்று. விடுதலைக்காகப் போரிடும் ஓரினம் தன்னைத் தான…
-
-
- 2 replies
- 1.1k views
-
-
குடாநாட்டைப் பாதுகாத்த புலோப்பளைச் சமர் குடாநாட்டைப் பாதுகாத்த புலோப்பளைச் சமர் 29.09.1993 அன்று நான்குமணி நேரத்தில் நடத்து முடிந்த மாபெரும் சமரைக்கொண்ட மறக்கமுடியாத நாள். மரபுவழிச் சண்டை முறையில், எமது போராட்ட வரலாற்றில், முக்கிய இடம் பெற்றுவிட்ட ஒரு சாதனை நாள். வெட்டவெளியூடாக நன்கு திட்டமிட்டு நகர்ந்த எதிரியின் கவச வாகனப்படையை, புலிகளின் கவச வாகனப்படையை, புலிகளின் மனிதக்கவசம் உடைத்தெறிந்து காவியம் படைத்த நாள். யாழ். குடாநாட்டுக்கு ஏற்படவிருந்த பேரழிவைத் தற்காலிகமாகத் தடுத்த இந்த இந்த வரலாற்றுச் சமரில், 125 படையினர் கொள்ளப்பட்டுள்ளனர்; 284 பேர் படுகாயமடைந்துள்ளனர் என, சிங்கள அரசே அறிவித்துள்ளது. அத்துடன் சிங்களப்படை இந்தச் சமரில் ரி-55…
-
- 1 reply
- 636 views
-
-
சமர்க் களங்களில் ‘கமரா’க்கள் சமர்க் களங்களில் ‘கமரா’க்கள். புலிகளின் வீரசாதனைகளை; சொல்லப்போகும் ‘போர் ஆவணங்கள்’ ‘ஓப்பறேசன் யாழ்தேவி’ குடாநாட்டின் குரல் வரளையை நெரிக்க சிங்களப் படை முனைப்போடு எத்தனித்த பெருமெடுப்பிலான படையெடுப்பு அது. ஆனையிறவிலிருந்து நகர்ந்தவர்களை, புலோப்பளையில் வைத்து எதிர்கொண்டு புலிகள் நடாத்திய வீரச்சமர் பிரசித்தி பெற்றது. அந்த வரலாற்றுச் சமரைத் தத்ரூபமாகப் படம்பிடித்த இரண்டு புலிவீரர்களை, அண்மையில் தலைவர் அவர்கள் பரிசளித்துப் பாராட்டினார். புலிப்படை வீரர்களின் ஆக்ரோசத் தாக்குதலில் சுருண்டு விழுகின்ற எதிரியின் படையாட்கள். தப்பினோம் பிழைத்தோமென சகாக்களையும் தளபாடங்களையும் கைவிட்டோடுகின்ற சிங்கள வீரர்கள். தகர்த்தழிக்கப்படுகின…
-
- 1 reply
- 616 views
-
-
லெப். கேணல் நரேஸ் தென்றலாக வீசிய புயல்: கிளிநொச்சிக் கோட்ட சிறப்புத் தளபதி லெப். கேணல் நரேஸ் / நாயகன். பூநகரிச் சமர்தான் புலிகள் இயக்கத்தின் பலத்தையும், அதன் போரிடும் சக்தியையும் எடுத்தியம்பியது. ஆனாலும், ‘புலிகளுக்கே உரித்தான சண்டை’ என்று, புலிகளின் போர்த் திறனைப் பறைசாற்றிய சண்டையென்று புலோப்பளைச் சமரைத்தான் சொல்ல வேண்டும். பட்டப்பகற் பொழுதில், கவசங்களற்ற வெட்டவெளிப் பிரதேசத்தில், மணலோடு மணலாகி மறைந்திருந்த புலிகள், கவசங்களுடனும் கனரக ஆயுதங்களுடனும் நகர்ந்த எதிரிகளுக்கு முன்னால், ஆக்ரோசமாக எழுந்த போது, உலகையே வியப்பிலாழ்த்திய அந்தச் சண்டை வெடித்தது. டாங்கிகளும், பீரங்கிகளும், நவீன போர்க்கலங்களும் மனஉறுதிக்கு முன்னால் மண்டியிட்ட…
-
- 1 reply
- 530 views
-
-
உருக்கினுள் உறைந்த பனிமலை உருக்கினுள் உறைந்த பனிமலை: கேணல் சங்கர் அவரோடு வித்தியாசமான மனிதர். எப்போதுமே சீரான நேர்த்தியான தோற்றத்துடனே தோன்றுவார். சீராக வகிடெடுத்து அழுந்த வாரப்பட்ட தலையும், பரந்த தெளிவாக காணப்படும் முகத்தில் நகைப்பும், வியப்பும், கூர்மையும் காண்பிக்கும் கண்களுக்கு இறுக கால்பதித்து நிலமதிர நடக்கும் கனத்த உருவமும் அசாதாரண மனிதரிவர் என்கிற பதிவை எவரிடத்திலும் ஏற்படுத்தும். எப்பொழுது சந்திக்க நேர்ந்தாலும் தோளை குலுக்கிக் குலுக்கி தலைசரித்து இலேசான செருமலுடன் கண்களை நேராக பார்த்து பயனுள்ள உரையாடலொன்றிற்கு அவர் ஆயத்தமாகும் தோற்றம் என்றும் எம் மனதில் நிலழாடும். எந்தவொரு விடயமானாலும் தனது உறுதியான றிலைப்பாடுடனும், மெலும் விபரங்…
-
- 0 replies
- 797 views
-
-
கிளிநொச்சி படைத்தளம் தாக்கியழிக்கப்பட்ட ஓயாத அலைகள் – 2 நடவடிக்கையில் காவியமான 293 மாவீரர்களின் 22ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.27.09.1998 அன்று கிளிநொச்சி படைத்தளம் மீது “ஓயாத அலைகள் 2” படை நடவடிக்கை விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்டது. இந்நடவடிக்கையின்போது 2000 வரையான படையினர் கொல்லப்பட்டதுடன் பெருமளவானோர் படுகாயமடைந்தனர். பெருமளவான போர் ஆயுதங்கள், வெடிபொருட்கள், படை ஊர்திகள் என்பன விடுதலைப் புலிகளால் மீட்கப்பட்டன.கிளிநொச்சிப் பகுதி சிறிலங்கா படைகளின் வல்வளைப்பிலிருந்து விடுவிக்கப்பட்ட “ஓயாத அலைகள் – 2” நடவடிக்கையின் வெற்றிக்காக 400 வரையான போராளிகள் தமது இன்னுயிர்களை ஈகம் செய்தனர்.இவ்வெற்றிச் சமரில் முக்கிய பங்கேற்று ஊடறுப்பு அணி ஒன்றின் தலைவியாகச் சென்று வீரச்சாவை…
-
- 0 replies
- 511 views
-
-
-
- 0 replies
- 837 views
-
-
லெப். கேணல் சுபன் மன்னார் மாவட்ட சிறப்புத் தளபதி லெப். கேணல் சுபன் 1989 இன் இறுதிக் காலம், இந்தியப் படைகள் ஆக்கிரமித்த நின்ற இருண்ட நாட்கள். முள்ளிக்குளத்தில் முகாம் இட்டிருந்த ‘புளொட்’ கும்பல் மீது 20.05.1989 அன்று நடாத்தப்பட்ட வெற்றிகரமான தாக்கதலின்போது, அப்போதைய மன்னார் மாவட்டத் தளபதியாக இருந்த பானு அண்ணன் படுகாயமடைந்து சிகிச்சைக்காகச் சென்றதை அடுத்து, சுபன் அண்ணன் மன்னார் மாவட்டத் தளபதியாகப் பணியாற்ற நியமிக்கப்பட்டார். தளபதியாகப் பொறுப்பெடுத்து வந்த உடனேயே – இந்தியப் படைக்கு நல்லதொரு அடி கொடுக்க வேண்டும் என்று எண்ணங்கொண்ட சுபன் அண்ணன் அதற்காக மன்னார்த் தீவில் மருத்துவமனைக்கு அருகிலிருந்த இந்தியப் படைமுகாமைத் தேர்ந்தெடுத்தார். இத்தாக…
-
- 3 replies
- 2.1k views
-
-
கடற்கரும்புலி கப்டன் புலிமகள் பூக்களுள் எழுந்த புயல் கடற்கரும்புலி கப்டன் புலிமகள். அது 1998 நடுப்பகுதி. கிளிநொச்சியின் நகரப்பகுதி இராணுவத்திடமிருந்தது. டிப்போச் சந்தியடி எங்களிடமிருந்தது. தற்போது கிளிநொச்சி மாவட்ட தமிழீழ காவற்பணிமனை அமைந்திருக்கும் இடத்திற்கு அருகேயுள்ள தேவாலயம், கருணா நிலையம் எல்லாம் எமதும் சிறீலங்காப் படையினரதும் காவல் நிலைகளுக்கிடையிலான சூனியப் பகுதிக்குள் அமைந்திருந்தன. நேர்வீதி. எமது நடமாட்டத்தைப் படையினரும் அவர்களை நாமும் இலகுவாக அவதானித்து, பதுங்கிச் சூடுகளை தாராளமாக மேற்கொள்ள வசதியான நேர்வீதி. இரு பகுதியுமே தம்மைப் பாதுகாத்துக்கொள்ள மறைப்புப் படங்குகளை வீதிக்குக்குறுக்கே கட்டித் தொங்கவிடுவோம். ஒருவரின் படங்…
-
- 1 reply
- 791 views
-