Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழும் நயமும்

இலக்கணம் | இலக்கியம் | கலைச்சொற்கள் | பழந்தமிழ்க் காப்பியங்கள்

பதிவாளர் கவனத்திற்கு!

தமிழும் நயமும் பகுதியில் இலக்கணம், இலக்கியம், கலைச்சொற்கள், பழந்தமிழ்க் காப்பியங்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழ் மொழி, செவ்வியல் இலக்கியம், இசை, பெருங்காப்பியங்கள் சம்பந்தமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. 96 வகை சிற்றிலக்கியங்கள் 1. சாதகம் 2. பிள்ளைக்கவி 3. பரணி 4. கலம்பகம் 5. அகப்பொருட்கோவை 6. ஐந்திணைச்செய்யுள் 7. வருக்கக் கோவை 8. மும்மணிக்கோவை 9. அங்கமாலை 10. அட்டமங்கலம் 11. அனுராகமாலை 12. இரட்டைமணிமாலை 13. இணைமணி மாலை 14. நவமணிமாலை 15. நான்மணிமாலை 16. நாமமாலை 17. பல்சந்தமாலை 18. பன்மணிமாலை 19. மணிமாலை 20. புகழ்ச்சி மாலை 21. பெரு மகிழ்ச்சிமாலை 22. வருக்கமாலை 23. மெய்க்கீர்த்திமாலை 24. காப்புமாலை 25. வேனின்மாலை 26. வசந்தமாலை 27. தாரகைமாலை 28. உற்பவமாலை 29. தானைமாலை …

  2. நம் வாழ்வியலில் எல்லாமே செயற்கையாகப் போய்விட்டது. உணவிலிருந்து உறவு வரை எல்லாமே செயற்கை செயற்கையாகவே வாழப் பழகிவிட்ட நமக்கு இயற்கையோடு ஒன்றி வாழ்ந்த சங்கத்தமிழர் வாழ்வியல் வியப்பளிப்பதாகவுள்ளது. கடற்கரை ஓரம்! நாவல் மரத்திலிருந்து நாவல் கனி வீழ்ந்து கிடக்கிறது, கரிய கனியாயினும் இனிய கனி ஆதலால் அதனை வண்டு மொய்த்திருக்கிறது. வண்டும் கருமை நிறம் கொண்டது ஆதலால், கனியைக் உண்ண வந்த நண்டு வண்டைப் பிடித்தது. நண்டிடமிருந்து தப்பிக்க. வண்டு ஒலி எழுப்பியது. வண்டின் ஒலி இனிய யாழோசை போல இருக்கிறது. அவ்வேளையில் இரைதேடி வந்தது நாரை. நாரைக்கு அஞ்சிய நண்டு வண்டை விட்டு நீங்கிச் சென்றது. இவ்வழகிய காட்சி அகவாழ்வியலை இயம்ப துணைநிற்கும் சங்கப்பாடலாக இதோ... “பொங…

  3. அன்புத் தம்பி கும்பகர்ணன் இராமனைப் போலவே இராவணனும் நல்ல தம்பிகளைப் பெற்றிருந்தவன். இரு தம்பியருமே அண்ணன் நலனில் அக்கறை கொண்டவர்கள். இருவருமே அவன் மீது பாசம் கொண்டவர்கள். ஆனால் அறிவுரை சொல்லி அவன் கேட்காத போது இருவரும் தேர்ந்தெடுத்த வழிகள் வேறு வேறாக இருந்தது. விபீஷணன் இராமன் பக்கம் போய் சேர்ந்தான். கும்பகர்ணனோ தன் அண்ணன் பக்கமே இருந்து போரிட்டு உயிரை விட்டான். கும்பகர்ணன் கதாபாத்திரம் இராமாயணத்தில் மிக உயர்ந்த கதாபாத்திரம். அந்தக் கதாபாத்திரம் கம்பன் கைவண்ணத்தில் மேலும் மெருகு பெறுகிறது. ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து எழுந்த கும்பகர்ணன் நடந்ததை எல்லாம் கேள்விப்பட்டு வருந்துவதில் அவன் பண்பும், யதார்த்த அறிவும் வெளிப்படுகிறது. “சீதையின் துக்கம் இன்னும் தீ…

  4. சங்கப் பாடலில் நனைந்த சிட்டுக் குருவி ‘சிட்டுக் குருவி, சிட்டுக் குருவி சேதி தெரியுமா? என்னை விட்டுப் பிரிந்து போன கணவன் வீடு திரும்பல!’ எனத் தலைவி தன் துயரத்தினைச் சிட்டுக் குருவியிடம் பகிர்ந்துகொள்ளும் செயலிலிருந்து, குடும்ப உறுப்பினர் போல சிட்டுக் குருவி நம்முடன் வாழ்வதை சினிமா பாடல்கள் மூலம் நாம் உணரலாம். மனிதனுடன் ஒன்றிய வாழ்வு வாழ்ந்த சிட்டுக் குருவியினைப் பற்றிய பதிவுகள் சங்க இலக்கியங்களிலும் அபரிமிதமாகக் காணப்படுகின்றன. சங்க கால மக்கள் இயற்கையை விரும்பி வாழ்ந்தார்கள். இலக்கியங்களிலும் இயற்கையைப் பதிவு செய்ததோடு இயற்கையைப் போற்றவும் செய்தனர். தன் துணையின்பால் அன்புகொண்ட ஆண் சிட்டுக் குருவி, தன் துணை முட்டையிடுவதற்கு மெ…

  5. தமிழ் திதிகள் 1.ஒருமை :- பிரதமை 2.இருமை : துவிதியை 3.மும்மை : திருதியை 4.நான்மை : சதுர்த்தி 5.ஐம்மை : பஞ்சமி 6.அறுமை : சஷ்டி 7.எழுமை : சப்தமி 8.எண்மை : அஷ்டமி 9.தொண்மை : நவமி 10.பதின்மை : தசமி 11.பதிற்றொருமை : ஏகாதசி 12.பதிற்றிருமை : துவாதசி 13.பதின்மும்மை : திரயோதசி 14.பதினான்மை : சதுர்த்தசி 15.மறைமதி : அமாவாசை 16.நிறைமதி : பௌர்ணமி குறிப்பு: இவையாவும் தமிழுக்கேற்றவாறு வடமொழியிலிருந்து மொழிபெயர்க்கப்படவில்லை. மாறாக நம் தமிழிலிருந்துதான் வடமொழிக்கு மொழிபெயர்த்து பயன்படுத்தியிருக்கிறார்கள். மாற்றிவிட்டு ஏதாவது ‘கப்சா கதை’ அடிப்பார்கள்.https://dhinasari.com/astrology/astrology-articles/3159-15-திதிகளின்-பெயர்கள்.html

  6. பண்பாடு என்னும் சொல்லே, 1937ஆம் ஆண்டு ரசிகமணி என்று சொல்லப்பட்ட பி.கே. சிதம்பரநாத முதலியாரால் தமிழுக்குப் புதிதாகக் கொண்டுவரப்பட்டது என்கிறார் வையாபுரிப்பிள்ளை. "கல்ச்சர்' எனப்படும் ஆங்கிலச் சொல்லுக்கு இணையானதாக அவர் மொழிபெயர்த்திருக்கிறார். அதே காலகட்டத்தில் பலர் அதைக் "கலாச்சாரம்' எனக் கொண்டார்கள். இந்தக் "கல்ச்சர்' என்னும் சொல் குறித்தும் இங்கிலாந்திலேயே 1870ஆம் ஆண்டுகளை ஒட்டிப் பெரிய சொற்போர் நடந்ததாகவும் பிள்ளை கூறுகிறார். "கல்ச்சரை' ஆங்கிலத்தில் பெருவழக்காகக் கொண்டு வந்தவர் மேத்யூ அர்னால்டு. தமிழில் பண்பாடு இல்லையா எனக் கேட்டுவிடக் கூடாது. இருந்தது. வேறு சொல்லாக இருந்தது. சால்பு, இச்சொல்லை அடிப்படையாகக் கொண்டு பிறந்த சான்றாண்மை முதலான சொற்கள் பண்பாட்டைச் சுட்டியி…

  7. ஓரு படைப்பாளன், தன் சிந்தனையில் தோன்றும் காட்சிகளைப் படிப்பவர்களின் மனக்கண் முன்பே கொண்டுவரும் உத்திதான் வருணனை முறை. கற்பனையும் வருணனையும் இல்லாத எந்தவொரு படைப்பும் சிறந்த இலக்கியமாகாது. அந்த வகையில், சங்க இலக்கியங்களில் இவ்வருணனைகள் பொக்கிஷமாகக் கொட்டிக்கிடக்கின்றன. அவை வைரமாய் நம் கண்முன்னே மின்னிக் கொண்டிருக்கின்றன. இவ்வருணனையை, ஆள் வருணனை, இயற்கை வருணனை என்றும் இடம், காலம், நிகழ்ச்சி, கலை முதலிய பெயர்களிலும் வகைப்படுத்துவர். பாலைக்கலியில் உள்ள ஒரு பாடல், தலைவன் கூற்றின் மூலம் பாலை நிலத்தின் வெம்மை அழகாக வருணனை செய்யப்பட்டுள்ளது. ""அடிதாங்கு மளவின்றி யழலன்ன வெம்மையாற் கடியவே கனங்குழா அய் காடென்றார் அக்காட்டுள் துடியடிக் கயந்தலைக் கலக்கிய சின்னீரைப் பிடியூட்ட…

  8. மண்டபம் - வழக்கொழிந்து "மன்றம்' ஆனது! மண்டுதல் - என்றால் கூடுவது, கூடுதல் என்று பொருள். அரசர், அவர் சார்ந்தோர், பொது மக்கள் ஆகியோர் கூடுவதற்கு ஏற்ற வகையில் கட்டப்பட்டது "மண்டபம்'. அது திருவோலக்க மண்டபம், மணி மண்டபம், பட்டி மண்டபம், நூற்றுக்கால் மண்டபம், ஆயிரங்கால் மண்டபம் எனப் பலவகைப்படும். இவற்றுள் தூண்களின் கீழ், பட்டிகைக்கல் (பட்டியக்கல்) வைத்துக் கட்டப்பட்ட மண்டபம் "பட்டி மண்டபம்' ஆகும். சிலப்பதிகாரம் -இந்திரவிழவூரெடுத்த காதையில், "மகதநன் னாட்டு வாளவாய் வேந்தன் பகைப்புறத்துக் கொடுத்த பட்டி மண்டபமும் (அடி:101-102) என்று, போரில் வெற்றிபெற்ற கரிகாலனுக்கு மகதநாட்டு மன்னனின் "பட்டி மண்டபத்தை' அளித்த வரலாறு குறிப்பிடப்பட்டுள்ளது. மன்றுதல் - என்றாலும் கூ…

  9. தமிழினம் பிறப்பு முதல் இறப்பு வரை இசையோடு ஒன்றிய வாழ்வைக் கொண்டிருந்த பெருமைக்குரியதாகும். பண்டைத் தமிழ் நூல்களான * அகத்தியம், * செயிற்றியம், * சயந்தம், * குணநூல் போன்ற நூல்களில் தமிழ்க் கூத்து வகைகள் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. இசையும், கூத்தும், பிரிக்க இயலாத வகையில் பின்னிப் பிணைந்தே மக்களை மகிழ்வித்து வருவதாகக் கூறலாம். இசை, ஆட்டம், தாளம் ஆகிய மூன்றும் சேர்ந்ததன் தொகுப்பே "கூத்து" எனலாம். பொதுவாக சிலப்பதிகாரத்தை அடிப்படையாகக் கொண்டு கூத்தினை, வேந்தியல் (மன்னர்களுக்காக ஆடுவது), பொதுவியல் (பொது மக்களுக்காக ஆடுவது) என இருவகைப்படுத்தலாம். சிலப்பதிகாரத்தின் அரங்கேற்றுக்காதை "அபிநயம்" பற்றி விளக்குகிறது. பெண்கள் ஐந்து வயதிலிருந்து பன்னிரெண்டு…

  10. 473 சங்கப் புலவர்களின் பெயர்கள் சங்கப் புலவர்கள் அகரவரிசை பெயர் என்பது ஒரு இனத்தின்,மொழியின்,பண்பாட்டின் அடையாளமாகும். சங்கப்புலவர்களின் பெயர்களைக் காணும் போது சங்க கால மக்களின் பண்பாடு, வாழ்க்கை முறை ஆகியனவும் அறியமுடிகிறது. இன்று நாம் இட்டுவரும் பெயர்கள் நம்மை தமிழர்களாகக் காட்டாது தமிங்கிலராகவே காட்டுகிறது.இந்நிலையில் சங்கப்புலவர்களின் பெயர்களை அறிந்து கொள்வது தேவையாகிறது.பலர் இப்பெயர்களை தம் குழந்தைகளுக்கு இடுவது சிறப்பகும். 1) அகம்பன் மாலாதனார் 2) அஞ்சியத்தை மகள் நாகையார் 3) அஞ்சில் அஞ்சியார் 4) அஞ்சில் ஆந்தையார் 5) அடைநெட…

  11. சங்க காலத்திற்குப் பின் தோன்றிய நூல்களில் மிகவும் சுவையான காவியம் சிலப்பதிகாரம். படிக்கப் படிக்கத் தெவிட்டாத நூல். இதனால் தான் 'சொற்றேரின் சாரதி'யாம் 'பாரதி' தன் கவிதையில் "நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம்" என்று புகழ்கிறார். இந்தச் சிலப்பதிகாரத்தில் ஏராளமான அரிய செய்திகள் உள்ளன. இதனைத் தமிழ் இலக்கியத்தின் 'என்சைக்ளோபீடியா' (கலைக் களஞ்சியம்) என்றால் மிகையல்ல. இதனை எழுதிய இளங்கோவடிகள் நமக்குப் பொற்கைப் பாண்டியனின் கதையை வழங்குகிறார். பாண்டிய மன்னன் ஒருவனுக்கு அறுவைச் சிகிச்சை நடந்து, செயற்கைக் கை பொருத்தப்பட்ட செய்தியை இதிலிருந்து ஊகிக்கலாம். அக்காலத் தமிழகத்தில் மருத்துவ விஞ்ஞானம் எந்த அளவுக்கு முன்னேறியிருந்தது என்பதற்கு இது ஒரு நல்ல சான்று. பொற்கைப் பாண்டியனின் (PANDYA…

  12. தொல்காப்பிய கால பெண்களின் நிலைகள் முனைவர் பூ.மு.அன்புசிவா தொல்காப்பியம் தோன்றிய காலம் பற்றி பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட காலக்கணிப்பு ஏதும் இல்லை. பல்வேறு காலக்கட்டங்களில் பல ஆய்வாளர்கள் வௌ;வேறு விதங்களில் இதன் காலத்தை கணிக்க முயன்றுள்ளார்கள். பண்டையக்காலத்தில் பாண்டிய நாட்டில் இருந்து தமிழ் வளர்த்ததாகக் கருதப்படும் மூன்று தமிழ்ச் சங்கங்களில் இடைச் சங்க காலத்தின் இறுதியில் இந்நூல் எழுதப்பட்டதாகச் சிலர் கருதுகிறார்கள். இதன் அடிப்படையிலும், இறையனார் களவியல் உரை என்னும் நூலில் காணப்படும் மேற்படி சங்கங்கள் செயற்பட்ட கால அளவுகளை அடிப்படையாகக் கொண்டும். தொல்காப்பியம் கி.மு 5000 ஆண்டளவில் ஆக்கப்பட்டது என்று இவர்கள் கணித்தார்கள். எனி…

  13. வள்ளுவன் சொன்ன சுவையான கதை ‘’ராஜாவுக்கு முடிவெட்டும் ஒரு நாவிதன் காட்டு வழியாக வந்தான். மரத்தின் மீதிருந்த பிரம்ம ராக்ஷசன் (பேய்), உனக்கு ஏழு ஜாடி தங்கம் வேண்டுமா? என்று கேட்டது. யாருக்குதான் ஆசை இருக்காது? நாவிதனும் வேண்டும் என்று சொல்லவே ஏழு ஜாடி தங்கம் கிடைத்தது. ஆனால் ஒரே ஒரு குறை! ஒரு ஜாடியில் மட்டும் தங்கம் கொஞ்சம் குறைவாக இருந்தது. அதை எப்படியாவது நிரப்பவேண்டும் என்ற ஆசை வந்தது. உழைத்து உழைத்து ஓடாகிப் போய் எத்தனை போட்டாலுல் ஜாடி நிரம்பவே இல்லை. ராஜாவுக்கு முடி வெட்டப் போகும் போதெல்லாம் மகிழ்ச்சியாக அவருடன் பேசிவிட்டு கூடுதலாகப் பணத்துடன் திரும்புவது அவனது வாடிக்கை. ஆனால் ஏழு ஜாடி தங்கம் வந்த பின் அந்த மகிழ்ச்சி எல்லாம் மாயமாய்ப் பறந்தோடி விட்டது. மு…

  14. வெங்காயமும் பெருங்காயமும் வெங்காயம் சுக்கானால் வெந்தயத்தால் ஆவதென்ன? இங்கார் சுமந்திருப்பார் இச்சரக்கை? - மங்காத சீரகத்தைத் தந்தீரேல், தேடேன் பெருங்காயம்! ஏரகத்துச் செட்டியாரே! இது சித்தர்களின் பரிபாஷையில் எழுதப்பட்டதொரு பாடல். புலவர்களில் சிலர், மறைமுகச்சித்தர்களாக விளங்கினார்கள். சித்தர்கள், ரிஷிகளில் பல மாதிரியான மனப்பான்மை,குறிக்கோள்கள்,நடைமுறை,சித்தாந்தம் முதலியவற்றைக ்கொண்டவர்களாக விளங்கினர். சிற்சில அடிப்படைகளில் அவர்களை வகைப்படுத்திப் பிரித்து விடமுடியும். சிலர், உடலைப்பக்குவப்படுத்தி மூப்பு, நரை, நோய், நொடி,இல்லாமல் நீண்டகாலம் இருக்கப் பார்ப்பார்கள். சிலரோ இறக்காமலேயே இருந்து விடவேண்டும் என்று எண்ணுவர். பலவகையான உணவு…

  15. 1. மதுரை சிவப்பெருமானின் 64 திருவிளையாடல்களை பற்றி சொல்லும் திருவிளையாடற் புராணத்தை வௌ;வேறு கால கட்டத்தில் இருவர் பாடியுள்ளனர். முதலில் பாடியவர் பெரும் பற்றப் புலியூர் நம்பி என்பவர் ஆவார். அடுத்து பரஞ்சோதியார் என்பவரும் பாடியுள்ளார். 2. 63 நாயன்மார்களில் ஒருவரான சேரமான் பெருமாள் திருவஞ்சைக்களம் என்னும் கொடுங்கோளுரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட சேரமன்னர். இவர் சிதம்பரத்தில் பொன் வண்ணத்தந்தாதி எனும் நூலை பாடி, அரங்கேற்றியுள்ளார். மேலும் திருவாரூர் மும்முணிக்கோவை, ஆதியுலா (திருக்கயிலாய ஞான உலா) ஆகிய நூல்களையும் இயற்றியுள்ளார். 3. பல்லவ மன்னன் மூன்றாம் நந்திவர்மன் (கி.பி. 847 முதல் 872 வரை) சிறப்புகளை கூறும் நூல் நந்திக்கலம்பகம். எருகை முத்திரை சின்னமாக உடைய இந்த மன்னனிடம் …

  16. மனித வாழ்வில் பிறப்பு முதல் இறப்பு வரை பல்வேறு சடங்குகள் வளமும் நலமும் வேண்டி மக்களால் மேற்கொள்ளப்படுகின்றன. இத்தகையச் சடங்குகள் வாழ்வியல் சடங்குகள் எனப்படுகின்றன. பிறப்புச் சடங்கு, பூப்புச் சடங்கு, திருமணச் சடங்கு, போன்றவை மங்கலச் சடங்குகள் என்றும் இறப்புச் சடங்கை அமங்கலச் சடங்கு என்றும் பகுத்துள்ளனர். சமுதாயத்தில் இறப்பு என்பது ஒரு துக்க நிகழ்ச்சியாகவும், இறப்பு நடந்த வீட்டார் தீட்டுப்பட்டவர்களாகவும் கருதப்படுகின்றனர். இத்தீட்டினைச் சடங்குகளால் மட்டுமே போக்க முடியும் என்ற நம்பிக்கையில் பல்வேறு செயல்பாடுகள் நிகழ்த்தப்படுகின்றன. இச்சடங்குகளில் பயன்படுத்தப்படும் பொருட்கள் புனிதத் தன்மை வாய்ந்தவையாகவும் தனித்த அர்த்தமுடையவையாகவும் கருதப்படுகின்றன. இக் கட்டுரை மள்ளர் இன மக்க…

  17. விதை என்றதும் நினைவிற்கு வருவது ஈழமண்ணில் இடுகாட்டில் எழுதபட்டிருந்த ஒரு வாசகம் தான் நினைவிற்கு வருகிறது . " உங்கள் பாதங்களை இங்கே அழுந்த பதிக்காதீர்கள் இது வீரம் விதைக்கப்பட்ட மண் " என்று எழுதபட்ட வாசகத்திற்கு கீழே எங்கள் வீரர்களை விதைத்திருந்தார்கள் . அவர்களின் அன்பை கண்டு நெஞ்சம் விம்மி வெடித்தது எங்களின் கண்ணீரால் அவர்களின் பாதங்களுக்கு காணிக்கை மலர்களை செலுத்தினோம் . நிச்சயம் நாளை அந்த விதைகளின் விருச்சங்கள் இந்த மண்ணில் நிழலாய் படரும் என்று நிறைவுடன் காத்திருக்கிறோம். விதைகள் என்ற ஒரு நிலையை அடைய ஒரு மரம் எத்தனை விபத்துகளை சந்திக்க நேர்கிறது . கடும் புயல்களில் சாய்ந்துபோகாமல் ,கொடும் மழைக்கு கவிந்துபோகாமல், வரச்சிகளை தாங்கி ,வெப்பங்களை பொறுத்துக…

  18. ‘எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்” என்று தம் நூலான ‘வெற்றிவேற்கை”யின் முதல் அடியாக அதிவீரராம பாண்டியன் என்னும் தமிழ்நாட்டு மன்னன் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு கூறிப்போந்தான். ஆனாலும் தற்காலத்திய அறிஞர்கள் சிலர் தமிழர்க்கு இற்றைக்கு 2300 ஆண்டுகளுக்கு முன்பாக எழுத்தறிவு என்பது இம்மியளவும் கிடையாது. வடநாட்டில் ஆட்சி செய்த மௌரிய அரசன் அசோகன்தான் இந்தியாவிலேயே எழுத்தை உருவாக்கினான். அதிலிருந்துதான் தமிழர்கள் தமிழ் எழுத்தை உருவாக்கிக் கொண்டார்கள் என்றும், வேறு சிலர் வடநாட்டு வணிகர்கள் தெரிந்து வைத்திருந்த எழுத்திலிருந்துதான் தமிழ் வணிகர்கள் எழுத்தை உருவாக்கிக் கொண்டனர் என்றும் கூறிவருகின்றனர். இவர்கள் கூறுவது சரியானதுதானா என்று ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். உலக நாடுகள் அ…

  19. முக்கடலும் முத்தமிடுகின்ற குமரி மாவட்டத்து நாஞ்சில் நாட்டுப் பகுதியில் ஒளவையார்க்கு திருத்தலங்கள் அமைந்துள்ளன. அத் திருத்தலங்களில் தாழக்குடியிலும் குறத்தியறையிலும் உள்ள திருத்தலங்கள் முதன்மையானவையாகும். தாழக்குடி ஒளவையார் திருக்கோவில் தாடகை மலையடிவாரத்தில், தோவாளைச் சாணல் கரையோரத்தில் நாவற்மரச் சோலையும் மாந்தோப்புகளும் நிறைந்த பகுதியில் அமைந்துள்ளது. நாவற்சோலையைப் பார்க்கும்போது "பாலமுருகன் சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?'' என்ற கேள்வியினை எழுப்பி ஒளவையாரது அறிவினையும் ஞானத்தையும் சோதித்தது நமக்கு ஞாபகம் வருகிறது. நாஞ்சில் நாட்டு மக்கள் ஆடி மாத செவ்வாய்க்கிழமையும், தை மாத செவ்வாய்க்கிழமையும் "கூழுக்குக் கவிபாடிய கூனக் கிழவி' என வாயாற வாழ்த்துப் பாடிக் கொண்…

  20. சேதுபதி மன்னரின் அவைப் புலவர்களில் ஒருவராக இருந்தவர் மதுரகவிராயர் . ராமநாதபுரத்துக்கு அருகில் வசித்து வந்தார். ஒரு நாள் அவரைப் பாம்பு கடித்துவிட்டது. அதனால் அவரது உயிர்நிலை அடங்கிப்போய்விட்டது. ஆனால் உறவினர்கள் அவர் இறந்துவிட்டார் என்று எண்ணி விட்டனர். ஆகையால் எல்லா இடங்களுக்கும் செய்தி சொல்லிவிட்டனர். சேதுபதி மன்னரும் தம்முடைய ஆஸ்தானப்புலவர் இறந்துவிட்டார் என்பதால் வரிசைகள் அனுப்பியிருந்தார். உடலை மயானத்திற்கு எடுத்துச் சென்றனர். அப்போது ராமேஸ்வரம் சென்றுகொண்டிருந்த வடநாட்டு பைராகிகள் கவிராயரின் உயிர்நிலை மட்டுமேஅடங்கியுள்ளதை அறிந்துகொண்டனர். கவிராயருக்கு காருட மந்திரப ்பிரயோகம், விஷ வைத்தியமெல்லாம் செய்து அவரை எழுப்பினர். சில பரிகாரங்களுடன் வீட்டில் சேர்த்துக்கொள்…

  21. யானைக்கு 60 பெயர்கள்! யானைக்கு மொத்தம் எத்தனை பெயர்கள் இருக்கின்றன தெரியுமா? ஒன்று, இரண்டல்ல, மொத்தம் 60 பெயர்கள் உள்ளன. இவை எல்லாமே தூய தமிழ்ப் பெயர்கள். # யானை (கரியது) # வேழம் (வெள்ளை யானை) # களிறு # களபம் # மாதங்கம் # கைம்மா (துதிக்கையுடைய விலங்கு) # உம்பர் # உம்பல் (உயர்ந்தது) # அஞ்சனாவதி # அரசுவா # அல்லியன் # அறுபடை # ஆம்பல் # ஆனை # இபம் # இரதி # குஞ்சரம் # இருள் # தும்பு # வல்விலங்கு # தூங்கல் …

  22. குட்டு + உணி =குட்டுண்பவன், அதாவது குட்டுப்படுபவன். அந்தக் காலத்தில் 'குட்டுணி' என்ற ஒரு சொல் வழங்கியது. இங்ஙனம் குட்டுப்பட்டு அவமானப்படுபவர்களை அது குறித்தது. அறிவின்றிப் பிறரால் தண்டனைக்கு ஆட்படுபவர்களைக் 'குட்டுணி' என்றார்கள். இவ்வாறே காலப்போக்கில் 'குட்டு' என்ற சொல்லுக்குத் துன்பம், இடர், அனுபவம் என்றெல்லாம் குறியீட்டுப் பொருள்கள் ஏற்படலாயின. விவரம் தெரியாமல் ஒரு தொழிலைத் தொடங்கிவிட்டுத் தவிப்பர்களைப் பார்த்துக் 'குட்டுப்பட்டால்தான் புத்தி வரும்' எனப் பேசுவார்கள். ஒன்றைத் தொடங்கித் துயரப்பட்டு அனுபவப்படுவதும் இதில் குறிக்கப்படுகிறது. மிகவும் வாழ்வில் அடிபட்டு விட்டவனை 'நல்லாக் குட்டுப்பட்டு விட்டான்' என்று கூறி இரக்கப் படுவார்கள். ஒருவனைத் துன்பப்படுத்திக் கொண்டேயி…

  23. ஆகமம் = தூய தமிழ்ச் சொல் ‘ஆகமம்’ என்ற சொல் தமிழிலும் வடமொழியிலும் உள்ள தற்சமம் என்ற வகையைச் சேர்ந்த சொல். ஆகமம் என்ற வடசொல்லிற்குப் பொருள் வேறு. ஆகமம் என்ற தமிழ்ச் சொல்லிற்குப் பொருள் வேறு. ஆகமம் என்ற வடசொல்லிற்கு வந்தது என்று பொருள் என வடமொழி வல்லுனர்கள் கூறுகின்றனர். எதிலிருந்து வந்தது? எங்கிருந்து வந்தது? எப்போது வந்தது? என்பன போன்ற கேள்விகளுக்கு அதில் விடையில்லை. எனவே, இது குன்றக் கூறலாய் வடமொழியில் அவாய் நிலையைக் கொண்டு நிற்கும் சொல். அவாய் நிலை என்பது பின்னும் பல தகவல்களை அவாவிய நிலையில் உள்ளது என்று பொருள். அடுத்து ஆகமம் என்ற தமிழ்ச் சொல்லை பின்வருமாறு பிரித்துப் பொருள் காணலாம். ஆ+கம…

  24. தமிழை அமுதமாக பல்வேறு புலவர்கள், கவிஞர்கள் கூறினாலும் ஆங்கிலம் என்பது நம்முடைய சந்திப்பு மொழி யாகிவிட்டது. இதில் நாம் குறை கூற தேவையில்லை. ஆனால் இறைக்கும் தமிழுக்கும் நெருங்கிய தொடர்புள்ளதாக அக்கால சித்தர்கள் முதல் இக்கால ஆன்மீக வாதிகள் கருதுகின்றனர். அதைப்பற்றிய ஒரு ஓப்பீடு. முத்தி தருபவன் அவனே; ஞானம் தருபவன்அவனே ;ஞானமாய் விளங்குபவனும் அவனே;பாலில் கலந்துள்ள நெய்போல் காணும் பொருளிலெல்லாம் கரந்துள்ளான்" எனத் திருமூலர் இறைவனைப் போற்றும் போது " முத்தமிழாகவும் விளங்குகிறான் " எனக் குறிக்கின்றார். எல்லாமாய் விளங்கும் இறைவன் தமிழாகவும் விளங்குகின்றான். எல்லாவற்றிலும் சுரந்துள்ளவன், தமிழுள்ளும் கரந்துள்ளான். முக்தியும், ஞானமும் விழுமியன. அவற்றோடு தமிழையும் வைத்துப் போற்றுக…

  25. ஆயிரம் இராமரும் இவனுக்கு இணையில்லை உலகில் இருவகை நபர்கள் அடுத்தவரைப் பாராட்டுவது மிகவும் அபூர்வம். ஒன்று தாய். இன்னொன்று பக்தன். தாயிற்குத் தன் பிள்ளையை விட அதிகமாக இன்னொருவரை மெச்சும் மனம் வராது. அதே போல் பக்தனும் தன் கடவுளை விட அதிகமாக இன்னொருவரைப் புகழ்வது மிக மிக அபூர்வம். ஆனால் கம்ப இராமாயணத்தில் இந்த இரண்டு வகையினரும் அதைச் செய்திருக்கிறார்கள். இராமனைக் காட்டிலும் பரதன் சிறந்தவன் என்று மெச்சி இருக்கிறார்கள். பரதனைப் போல் ஒரு உத்தமனை இலக்கியத்தில் காண்பது கூடக் கடினம். கைகேயி அவனுக்காக வரம் பெற்ற பிறகு அவன் படும் பாடு கொஞச நஞ்சமல்ல. முடிசூட்டிக் கொள்ள குலகுரு விசிட்டர் சொன்ன போது அவன் விஷம் சாப்பிடச் சொன்னது போல நடுங்கினான், பயந்தான், அயர்ந்தான், அருவி போலக் க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.