பொங்கு தமிழ்
தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு
பொங்கு தமிழ் பகுதியில் தமிழ், தமிழர், தேசியம், வரலாறு, பண்பாடு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தேசியம், வரலாறு சம்பந்தமான அவசியமானதும், நம்பகத்தன்மை உள்ளதுமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
1539 topics in this forum
-
ஐம்பது வருடங்களுக்கு முன்னதாக ஆயிரக்கணக்கான இந்திய வம்சாவளி மக்கள் பர்மிய இராணுவத்தினால் அங்கிருந்து நாடு கடத்தப்பட்டனர். தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட அவர்களில் பலர் சென்னையில் வந்து இறங்கினாலும், சில மாதங்களின் பின்னர் மீண்டும் பர்மா செல்வதற்காக இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்துக்கு சென்றனர். ஆனால், அவர்களை பர்மிய இராணுவம் எல்லையில் தடுக்கவே, தற்காலிகமாக அங்கு எல்லையில் உள்ள இந்தியப் பகுதியான மோரேயில் அவர்கள் தங்கினர். ஐந்து தசாப்தங்கள் அங்கேயே வாழ நேர்ந்த அவர்களின் நிலை குறித்து மோரே சென்றுவந்த அன்பரசன் தரும் காணொளி. http://www.bbc.com/tamil/global/2015/09/150908_moreh
-
- 0 replies
- 551 views
-
-
பெரும்பகை தாங்கும் வேல்! 18.08.2015 பெரும் பகை தாங்கும் வேலினானும் அரும் பகை தாங்கும் ஆற்றலானும் – (தொல்காப்பியம்-1021:7-8) தமிழர்களின் முன்னோர் பயன்படுத்திய போர்க் கருவிகளுள் முதன்மையானதாக வேல் போற்றப்படுகிறது. வேல் என்றாலும் எஃகம் என்றாலும் ஒரே பொருள் தோற்றும் இலக்கியப் பதிவுகள், வேலின் வடிவத்தையும், பயன்பாட்டையும், பயன்படுத்திய வீரர்களையும் பற்றி வியந்து வியந்து விளக்கியிருக்கின்றன. அத்தகைய வேலின் வடிவத்தைத் தமிழ் இனத்தாரின் மூளைப்பதிவில் இருந்து அகற்றியது யார்? எப்படி இது நடந்தது என்பது ஆய்வுக்குரியது. வேல், தமிழர்களின் தொல்குடி அடையாளம். அதனை மீட்பது தமிழர்களின் கடமை. கருங்கடை, மரக்காழ், பலகை, திண்பிணி, சுரை, வடிமணி, இலை, கத…
-
- 1 reply
- 987 views
-
-
இசை – கவின் கலைப் பல்கலைக் கழகம் வெளியில் வரும் பூனைக்குட்டிகள் யானும் ஓர் ஆடுகள மகளே ! என்கைக் கோடீரீலங்கு வளை நெகிழ்ந்த பீடுகெழு குரிசிலும் ஓர் ஆடுகள மகனே! - குறுந்தொகை-31 இந்தப் பாடலில் குறிப்பிடப்படும் ஆடுகள மகனும் ஆடுகள் மகளும் பார்ப்பனர் இல்லை. பரத நாட்டியம் எங்கிருந்து வந்தது? அதில் பார்ப்பனர் எண்ணிக்கை எப்படி மிகுந்தது? மரல் பழுத்தன்ன மருகு நீர் மொக்குள் நண்பகல் அந்தி நடை இடை விலங்கலின் பெடை மயில் உருவில் பெருந்தகு பாடினி களிறு வழங்கு அதரக் கானத்து அல்கி இலை இல்மரா அத்த எவ்வம் தாங்கி ---------------------------------------------------------------- முரசு முழங்கு தானை மூவரும் கூடி அரசவை இருந்…
-
- 0 replies
- 2.4k views
-
-
2500 வருடங்கள் தொடர்ந்து இயங்கி வரும் தமிழ் நகரம் எது தெரியுமா ? உலகில் தோன்றிய பழமையான நாகரீகங்களில் தமிழர் நாகரீகமும் ஒன்றாகும். கிட்டத்தட்ட கி.மு 4000 முதல் கி.மு 2000 ஆண்டுகளில் உலகெங்கிலும் பல வேறுபட்ட நாகரீகங்கள் தளைத்திருக்கின்றன. மத்திய அமெரிக்காவில் மாயன் நாகரீகம், தென் கிழக்கு ஆப்ரிக்காவில் எகிப்திய நாகரீகம், வட இந்தியா மற்றும் பாகிஸ்தானை உள்ளடக்கிய பகுதிகளில் சிந்து சமவெளி நாகரீகம், கிரேக்க மற்றும் ரோம் நாகரீகங்கள் என காலச்சக்கரத்தின் ஓட்டத்தில் பல நாகரீகங்கள் தோன்றி அழிந்திருக்கின்றன. ஆனால் மேற்சொன்ன நாகரீகங்கள் தோன்றிய அதே காலக்கட்டத்தில் தான் தமிழகத்தில் வைகை நதி நாகரீகம் தோன்றியிருக்கிறது. பிரம்மிப்பை ஏற்படுத்துகிறதல்லவா இந்த செய்தி. சமீபத்தில் மதுரையில் …
-
- 1 reply
- 618 views
-
-
தாவில் கொள்கைத் தம்தொழில் தமிழர் மரபில் ஓகம் நாள்: 23.07.2015 ‘அனைத்துலக யோகாதினம்’ என்ற பெயரில் ஒரு நிகழ்வு கடந்த 21.06.2015 அன்று மேட்டுக்குடித் திட்டமாக நிறைவேற்றப்பட்டது. ஊரறிய, உலகறிய மேடை போட்டு ஊடக வெளிச்சத்தில் உடற்பயிற்சி செய்து காட்டிய ஆளுமைகள் பெருமைப் பட்டுக் கொண்டனர் ‘இது’ உலகிற்கு இந்தியாவின் கொடை என்று ! மகிழ்ச்சி ! உலகிற்கு இந்தியாவின் கொடையாகிப் போன பல அடையாளங்கள் இந்தியாவிற்குத் தமிழர்களின் கொடை என்ற உண்மையை மட்டும் பலரும் பேச மாட்டார்கள். அது அவர்களது கரவான உள்ளம். இதில் தமிழர்களுக்குத் தனித்த பார்வை இருக்கிறது. இதுவரை இல்லையென்றால் இனிமேல் தேவைப்படுகிறது. முதலில், தமிழர்கள் இதனை ‘யோகா’ என்று சொல்வது தவறு. சுருட்டுப் பிடிக்கிறவன் வாய…
-
- 1 reply
- 3k views
-
-
மரபு வழித் தமிழ்த் தேசிய தக்கார் அவையம் – 10-ம் பதிவு நாள்: 07.07.2015 பெருந்தச்சு நிழல் நாட்காட்டியின்படி இவ்வாண்டின் 7-வது முழு நிலவு 02.07.2015 அன்று கடந்தது. 02.07.2015 அன்று இரவு 07.00 மணிக்குத் தோன்றி நள்ளிரவில் ½ மணி நேரம் பிந்தியதுடன் விடிந்த பின்னும் ½ மணி நேரம் போகாதிருந்தது. ஆயினும் சரிவிலிருந்து மீண்ட இரண்டாவது முழு நிலவாகக் கணக்கிடுவது பொருத்தமாகலாம். ஒருவேளை 8-வது முழுநிலவின் 30-ம் நாள் மேலும் பிந்தினால் 7-வது முழு நிலவையும் சேர்த்துத் தோல்வியுற்ற நிலவாகக் கணக்கிட்டுக் கொள்ளலாம். கடந்த ஆண்டில் 7 முழு நிலவுகள் முறையே ஒவ்வொரு நாள் பிந்திய நிலையில் இந்த ஆண்டும் அதே நிலை நீடிப்பதாகக் கணக்கிட்டுக் கொள்ளலாம். வளர்பிறையின் போக்கு: வழக்கம் போலவே இம்முறை வளர்…
-
- 0 replies
- 831 views
-
-
தமிழன் தொன்மை 100,000 ஆண்டுகள் - சாத்தூர் சேகரன் ! பல சுனாமிகள் தோன்றி குமரிக் கண்டத்தைச் சிறிது சிறிதாகச் சிதைத்து வந்தன. ஒவ்வொரு 10,000 ஆண்டுகளிலும் ஒரு பெரிய சுனாமி தோன்றியதாக ஆய்வறிஞர்கள் கூறி வருகின்றனர். இதனால் சில இலட்சம் மக்கள் மடிந்தனர். ஆனால், மிகச் சிறிதளவு நிலப்பகுதியே அழிந்தது.ஆனால் கடற்கோள் என்பது கி.மு.10,000 அளவில் தோன்றி கி.மு. 8,000 அளவு நீண்ட காலம் நடந்தது. இதனை மேலை நாட்டு ஆய்வாளர்கள் பெரும்பனிக்காலம் ( THE GREAT ICE-AGE ) என்கின்றனர்.இதன் காரணமாகவே குமரிக் கண்டம் முற்றிலுமாகவே அழிந்தது. முதல் பெருஞ்சுனாமி கி.மு. 60,000 ஆண்டுகளை ஒட்டி நிகழ்ந்ததாக ஆய்வறிஞர்கள் கூறினார்கள். இதற்கு அஞ்சியே குமரிக் கண்டத் தமிழர்கள் கட்டுமரங்களில் ஏறி ஆஸ்திரேலியா, ஆப்பிரிக…
-
- 0 replies
- 7.5k views
-
-
மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம் ஒன்பதாம் பதிவு நாள்: 24.06.2015 பெருந்தச்சு நிழல் நாள்காட்டியின்படி இவ்வாண்டின் 6-வது முழு நிலவு கடந்த 02.06.2015 அன்று கடந்தது. சரிவிலிருந்து மீண்டு வரலாம் அல்லது வராமலும் போகலாம் என்ற நிலையில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அந்த நிலவு தன்னை நேர்த்தி செய்து கொண்டு 30 நாள் முறையைக் காப்பாற்றி வெற்றி கண்டுள்ளது. அது எப்படி மீண்டது என்பது வழக்கம் போல ஆய்வுக்கு உரியதாகவே உள்ளது. அது சரியாகக் கண்டுபிடிக்கப்பட்டால் பின்பற்றலாம். இத்துடன் இந்த அரையாண்டுக்கான 6 முழு நிலவுகளும் வந்து விட்ட நிலையில் 6 மறை நிலவுகளையும் 3 பிறை நாட்களையும் சேர்த்துப் பட்டியலிட்டுக் கொள்வது தேவையாகிறது. ஒன்று முதல் ஒன்பது வரையிலான பதிவுகளையும…
-
- 0 replies
- 930 views
-
-
மாநாகன் இனமணி 120 https://app.box.com/s/rwnjfkj50s4aiujinqne292emenhg5xy உயிர்கள் எல்லாம் உணர்வு பாழாகி பொருள் வழங்கு செவித் துளை தூர்ந்து அறிவு அழிந்து வறம் தலை உலகத்து அறம்பாடு சிறக்க (கிறங்க) சுடர் வழக்கு அற்றுத் தடுமாறு காலை ஓர் இள வள ஞாயிறு தோன்றிய தென்ன நீயோ தோன்றினை! நின் அடி பணிந்தேன்..... .......அறத்தின் வித்து ஆங்கு ஆகிய உன்னை ஓர் திறப்படற்கு ஏதுவா சேயிழை செய்தேன்! (மணிமேகலை - மந்திரம் கொடுத்த காதை-7-9) பொருள்:- தமிழர்கள் அறிவு இழந்தால் உலக உயிர்கள் எல்லாம் உணர்வு இழக்கும். தமிழர்களின் அறிவு புதுப்பிக்கப்பட்டால் உலகம் பயன் பெறும். தமிழைத் தூய்மைப்படுத்துவதன் மூலமாகவும், அதன் தூய்மையைக் காப்பாற்றுவதன் மூலமாகவும் கழி பேராண்மைக் கடன் இறுக்கும் பெரு…
-
- 1 reply
- 1.2k views
-
-
மாநாகன் இனமணி 119 https://app.box.com/s/wzrz6ggk1bdsndyt48x1354jo4i6lhch உடைப் பெரும் செல்வரும் சான்றோரும் கெட்டு புடைப் பெண்டிர் மக்களும் கீழும் பெருகி கடைக்கால் தலைக் கண்ணது ஆகி குடைக்கால் போல் கீழ் மேலாய் நிற்கும் உலகு (நாலடியார் 37-38) உலகிற்கு ஆணியாகப் பலர் தொழ பல வயின் நின்ற குன்றின் கோடு (நற்றணை 139: 1-2) பொருள்:- கொடைப் பண்புள்ள செல்வந்தர்களும், அறிவுரை கூறும் அறிஞர்களும் மறைந்து போவர். வேற்றினைப் பெண்டிர் (புடைநெறி-விலகிய நெறி-சிலம்பு-காடுகாண்-169) மக்களும் கீழமைக் குணம் கொண்டோரும் பெருகுவர். கடைக்கால் மேலாகவும் தலையானது கீழாகவும் தொங்குமாறு போல உலகம் ஆட்டை தளர்ந்து நிற்கும். அது கேடு காலம்! மீண்டும் அறம் தலையெடுத்துத்தான் அந்தப் பிழையைச்…
-
- 0 replies
- 814 views
-
-
மாநாகன் இனமணி 118 https://app.box.com/s/ilyrir3m4zmtfu4xf6349x1hpmldvq6a அம்கண் மால் விசும்பு புதைய வளி போழ்ந்து ஓண் கதிர் ஞாயிற்று ஊறு அளவாத் திரிதரும் செங்கால் அன்னத்துச் சேவல் அன்ன குரூஉ மயிர்ப் புரவி உராலின் பரி நிமிர்ந்து கால் எனக் கடுக்கும் கவின்பெறு தேரும் கொண்ட கோலன் கொள்கை நவிற்றலின் அடிபடு மண்டிலத்து ஆதி போகிய கொடிபடு சுவல விடு மயிர்ப் புரவியும் (மதுரைக்காஞ்சி 384-391) ...வருக! இந்நிழல் என ஞாயிறு புகன்ற தீது தீர் சிறப்பின் அமிழ்து திகழ் கருவிய கண மழை தலை இக் கடுங்கால் கொட்கும்..... (பதிற்றுப்பத்து 17: 9-12) பொருள்:- அறத்தொடு ஆட்சி செய்யும் அரசனின் ஆட்டைத் திருத்த முயற்சியினால் மட்டுமே குதிரைகளால் நிழலைப் பின் பற்றி உலகைச் சுற்றி வர முடியும். த…
-
- 0 replies
- 709 views
-
-
மாநாகன் இனமணி 117 மாநாகன் இனமணி 117-ம் பதிவு உரைத்தார்க்கு உரியேன் உரைத்தீர் ஆயின் திருத் தக்கீர்க்குத் திறந்தேன் கதவெனும் கதவம் திறந்தவள் காட்டிய நன்னெறி (சிலம்பு-காடுகாண்.116-8) பிலம் புக வேண்டும் வெற்றி ஈங்கு இல்லை கப்பத்து இந்திரன் காட்டிய நூலின் மெய்ப்பாட்டு இயற்கையின் விளங்கக் காணாய்.... ....வாய்மையின் வாழாது மன்னுயிர் ஓம்புநர்க்கு யாவதும் உண்டோ எய்தா அரும்பொருள்? காமுறு தெய்வம் கண்டு அடி பணிய நீ போ! யாங்களும் நீள் நெறிப் படர்குதும் என்று அம்மறையோற்கு இசைமொழி யுணர்த்திக் குன்றாக் கொள்கைக் கோவலன் தன்னுடன்.... (சிலம்பு-காடு காண் காதை 153-163) பொருள்: ஆண்டு வரைவு பற்றி அறிய முற்படும் அனைவரையும் திருத்தக்கீர் என்று சிலம்பு அழைக்கிறது. கவுந்தியடிகள்…
-
- 1 reply
- 671 views
-
-
மாநாகன் இனமணி 116 https://app.box.com/s/v321x6hosn4ddkv4d5tmvqzg35lu7heh மள்ளர் மள்ள! மறவர் மறவ! செல்வர் செல்வ! செரு மேம்படுந! வெண்திரைப்பரப்பின் கடுஞ்சூர் கொன்ற பைம் பூண் சே எய் பயந்த மா மோட்டுத் துணங்கை அம் செல்விக்கு அணங்கு நொடித்தாங்கு தண்டா ஈகை நின் பெரும் பெயர் ஏத்தி வந்தேன் பெரும! வாழிய நெடிது என நின் நிலை தெரியா அளவை அந்நிலை நாவல் அம் தண்பொழில் வீவு இன்று விளங்க நில்லா உலகத்து நிலைமை தூக்கி அந்நிலை அணுகல் வேண்டி (பெரும்பாணாற்றுப்படை 456-457) பொருள்:- பைம் பூண் சேய் முருகனோடு ஒப்பிடப்படுகிறான் தொண்டைமான் இளந்திரையன். மாமுகட்டில் போர்முகம் கொண்டு பாயும் நிலையில் பாவை ஒன்று முருகனின் உருவாக்கம் என்றும், அதுவே தாக்கணங்கு என்றும், அது தமி…
-
- 0 replies
- 645 views
-
-
மாநாகன் இனமணி 115 https://app.box.com/s/9dy8k1997wtrao9mununtj8u1rhj91ly மீன் வயின் நிற்ப வானம் வாய்ப்ப அச்சுற்று ஏமம் ஆகி இருள் தீர்ந்து இன்பம் பெருக.... .....வாள் வலியுறுத்துச் செம்மை பூண்டு அறன் வாழ்த்த நற்கு ஆண்ட விறல் மாந்தரன் விறல் மருக!..... பல் மீன் நாப்பண் திங்கள் போலப் பூத்த சுற்றமொடு பொலிந்து தோன்றலை உருகெழு மரபின் அயிரை பரவியும் கடல் இகுப்ப வேல் இட்டும்.... பெரும் பெயர் பலர்கை இரீஇய கொற்றத் திருவின் உரவோர் உம்பல் (பதிற்றுப்பத்து 90:1-2, 11-13, 17-20, 23-24) பொருள்: வெண்மீன் வெள்ளி ஆடியல் கோட்பாட்டின்படி உரிய நேர்கோட்டில் நிற்க, மழை வாய்த்துத் துன்பம் நீங்கியது! ஆண்டுவரைவு முயற்சியில் பெற்ற வெற்றியினால் அறம் வாழ்த்தியது! சுற்றம் ச…
-
- 0 replies
- 534 views
-
-
மாநாகன் இனமணி 114 https://app.box.com/s/ijuy42mfyxhbjgj774v1vjn8bdcycmje மதி உறழ் மரபின் முதியரைத் தழீஇக் கண்ணகன் வைப்பின் மண் வகுத்து ஈத்துக் கருங் களிற்று யானைப் புணர் நிரை நீட்டி இரு கடல் நீரும் ஒரு பகல் ஆடி அயிரை பரைஇ ஆற்றல் சார் முன்பொடு ஒடுங்கா நல் இசை உயர்ந்த கேள்வி..... (பதிற்றுப்பத்து பதிகம் 29:4-9) மணி நிற மையிருள் அகல நிலா விரிபு கோடு கூடு மதியம் இயல் உற்றாங்குத் துளங்கு குடி விழுத்திணை திருத்தி முரசு கொண்டு ஆண் கடன் நிறுத்த நின் பூண் கிளர் வியன்மார்பு கருவி வானம் தண்தளி தலை இய (பதிற்றுப் பத்து 31:11-15) பொருள்: நிலவின் கணக்கறிந்து நோன்பு தொகுக்கும் வல்லுநர்களைப் போற்றி, மழைக்குறியறிந்து யானைகளைப் பெருக்கி, கிழக்கு மேற்குக் கட…
-
- 0 replies
- 617 views
-
-
மாநாகன் இனமணி 113 https://app.box.com/s/ua43vxkmdbjnpp9c745y7kf8tgrrq0mr வையகம் மலர்ந்த தொழில் முறை ஒழியாது கடவுள் பெயாரிய கானமொடு கல் உயர்ந்து தெண் கடல் வளை இய மலர் தலை உலகத்து.............. துளங்கு இரும் குட்டம் தொலைய வேல் இட்டு அணங்குடைக் கடம்பின் முழு முதல் தடிந்து.................... வேந்தரும் வேளிரும் பின் வந்து பணியக் கொற்றம் எய்திய பெரியோர் மருக! (பதிற்றுப்பத்து 88: 1-14) மழை பிணித்தாண்ட மன்னவன் வாழ்கெனத் தீது சீர் சிறப்பின் தென்னனை வாழ்த்தி ............... (சிலம்பு - காடு காண் 29-30) பொருள்:- உலக உருண்டையை நிமிர்த்தும் தொழில் நுட்ப அறிவை இழந்து விடாமல் பொதிகை மலையையும் அதனைச் சுற்றியுள்ள ஆழ்கடல் பரப்பையும் காவல் செய்து, தலைகீழாய…
-
- 0 replies
- 499 views
-
-
மாநாகன் இனமணி 111 https://app.box.com/s/7gtj7mj8qzwpxe6q6vu87ab6wl5w1dm4 செஞ் ஞாயிற்று நிலவு வேண்டினும் வெண் திங்களுள் வெயில் வேண்டினும் வேண்டியது விளைக்கும் ஆற்றலை ஆகலின் நின் நிழல் பிறந்து நின் நிழல் வளர்ந்த எம் அளவு எவனோ மற்றே! (புறநானூறு 38: 7-11) ....வல்லோர் ஆய்ந்த தொல் கவின் தொலைய இன்னை ஆகுதல் தகுமோ? ஓங்கு திரை முந்நீர் மீமிசைப் பலர் தொழத் தோன்றி ஏமுர விளங்கிய சுடரினும் வாய்மை சான்றா நின் சொல் நயந்தார்க்கே! (நற்றிணை 283: 4-8) பொருள்:- கதிரவனையும் நிலவையும் கட்டுப்படுத்தும் ஆற்றல் பொருந்திய அரசனின் குடிகளும் அறத்தின் ஆற்றல் பெற்றவர்களே! என்று வியக்கிறார் ஆவூர் மூலங்கிழார். தமிழர்களின் முன்னோர்களில், வகைப்படுத்திக் கொண்ட அறிவுத…
-
- 0 replies
- 472 views
-
-
மாநாகன் இனமணி 111 https://app.box.com/s/qvljl3iudjx46axwsxf5vc59d2ncsuse விழுக் கடிப்பு அறைந்த முழுக் குரல் முரசம் ஒழுக்குடை மரபின் ஒரு மொழித்தாக அரவு எறி உருமின் உரறுபு சிலைப்ப ஒரு தாம் ஆகிய பெருமை யோரும் தம் பகழ் நிறீஇச் சென்று மாய்ந்தனரே! அதனால் அறிவோன் மகனே! மறவோர் செம்மால்! ....உரைப்பக் கேண்மதி நின் ஊற்றம் பிறர் அறியாது...... ......மடங்கல் உண்மை! மாயமோ அன்றே! (புறநானூறு-366) பொருள்:- சிதைவுற்ற பாடல். இந்த பாடல் முழுமையாகக் கிடைத்திருந்தால் தமிழில் புத்தாண்டு தொடர்பான ஆராய்ச்சி தேவைப்பட்டிருக்காது ! என்று சிதைக்கப்பட்டிருக்கிறது? யாரால் சிதைக்கப்பட்டது என்பது ஆய்வுக்குரியது. ஆயினும் புத்தாண்டினை மீட்டுருவாக்கம் செய்வதில் மூல இனம் என்றுமே ம…
-
- 0 replies
- 876 views
-
-
மாநாகன் இனமணி 110 https://app.box.com/s/empseea5l5ri3aomfkyzh3k94ut3r4ul கோடு உறழ்ந்து எடுத்த கொடுங் கண் இஞ்சி நாடு கண்டன்ன கணை துஞ்சு விலங்கல் துஞ்சு மரக் குழா அம் துவன்றிப் புனிற்று மகள் பூணா ஐயவி தூக்கிய மதில (பதிற்றுப் பத்து 16: 1-4) அமர்க்கு எதிர்ந்த புகல் மறவரொடு துஞ்சு மரம் துவன்றிய மலர் அகன் பறந்தலை ஓங்கு நிலை வாயில் தூங்குபு தகைத்த வில்லிசை மாட்டிய விழுச்சீர் (பதிற்றுப் பத்து 22: 20-23) உருள் பூங் கடம்பின் பெரு வாயில் நன்னனை நிலைச் செருவினால் தலை அறுத்து அவன் பொன் படு வாகை முழு முதல் தடிந்து (பதிற்றுப் பத்து 40: 7-9) பொருள்:- முழுநிலவுகளை ஒழுங்குபடுத்தி ஆண்டு நாட்களை வரைவு செய்து பொருத்தி முறையாகத் தைப் புத்தாண்டினை அறிவிப்புச்…
-
- 0 replies
- 455 views
-
-
மாநாகன் இனமணி 109 https://app.box.com/s/ysfl387cwau64y0wgxbe86wu6rwv0546 அங்கண் வானத்து அரவுப் பகை அஞ்சித் திங்களும் ஈண்டுத் திரிதலும் உண்டு கொல்! நீர் வாய்த் திங்கள் நீள் நிலத்து அமுதின் சீர் வாய்த் துவலைத் திரு நீர் மாந்தி மீன் ஏற்றுக் கொடியோன் மெய் பெற வளர்த்த வான வல்லி வருதலும் உண்டுகொல்! (சிலம்பு - இந்திர விழவு 206-11) பொருள்:- அரவு தீண்டாத வெற்றி நிலவோடு தைமகள் மாற்று உருவெடுத்து வருவதாக வியக்கப்படுகிறாள். பகலில் விழித்திருந்து பாடாற்றி இரவில் முற்றாக உறங்கும் வழக்கம் உடைய செடி, கொடி, மரங்களுள் முழுநிலவு நாளில் இரவில் விழிக்கும் வகைகளைப் பழந்தமிழர்கள் நன்கு அறிந்திருந்தனர். உற்றறிவுப் புலம் உடைய அவற்றுள், கூர்ந்த மதி படைத்த கொடி ஒன்று பாண்ட…
-
- 0 replies
- 540 views
-
-
மாநாகன் இனமணி 108 https://app.box.com/s/1eng4c9pqf7z2ytlnbepzn8w8iy2ka6f இலங்கு மணி மிடைந்த பொலங் கலத் திகிரித் கடல் அரசு வரைப்பின் இப் பொழில் முழு தாண்ட நின் முன் திணை முதல்வர் போல் நின்று நீ ................ (பதிற்றுப் பத்து 14: 18-20) விழவு அறுபு அறியா முழவு இமிழ் மூதூர்க் கொடு நிழல் பட்ட பொன் உடை நியமத்துச் சீர்பெறு கலிமகிழ் இயம்பு முரசின் வயவர் வேந்தே (பதிற்றுப் பத்து 15: 18-21) பொருள்: தங்கச் சக்கரத்தில் வயிரமணிகளைப் பதித்துக் கொண்டு தனது கடற் படையால் உலகைச் சூழ்ந்துள்ள நீர்ப்பரப்பு முழுவதையும் அலசி வளி மண்டலம் வழக்கற்ற இடங்களில் இருந்து கதிரொளியைத் திருப்பி அனுப்பிய தென்பாண்டிய மன்னர்களைப் போல, இமய வரம்பன் நெடுஞ்சேரலாதன் தனது தலை…
-
- 0 replies
- 499 views
-
-
கோயில்களில் அன்னதானம், மதமாற்றத் தடை சட்டம், பாபர் மசூதி இடிப்பு ஆதரவு என்று பா.ஜ.கவின் இளைய பங்காளியாக ஜெயலலிதா செய்த நடவடிக்கைகள் பல. இதன்படி கோயில்களில் கிடா வெட்டுவதற்கு தடையை அமல்படுத்த 2003-ம் ஆண்டுஆணை பிறப்பித்தது, அதிமுக அரசு. நாட்டார் வழிபாட்டை பார்ப்பனமயமாக்கும் இந்த முயற்சியை எதிர்த்த்து திருச்சியில் மக்கள் கலை இலக்கியக் கழகம் நடத்திய கிடா வெட்டும் போராட்டம் பற்றிய செய்தி இது. இந்த சட்டம் வந்தவுடன் தமிழகத்தின் கோவில் கொடை நிகழ்வுகளில் வீரப்பரம்பரை என்று சவுண்டு விட்ட எந்த முறுக்கு மீசை சாதியும் வாய் திறக்கவில்லை. ஒரு கோழிக்குஞ்சை கூட கொல்லவில்லை என்பது முக்கியம். – வினவு கிடா வெட்டுவதற்கெல்லாம் ஒரு போராட்டமா என்று கேட்கலாம். சாமி கும்பிடுவதற்கும், செருப்…
-
- 1 reply
- 691 views
-
-
மதுரை மோகன் ராஜ் யார் தமிழர்கள் ? என்ற குழப்பத்திற்க்கு தெளிவான தீர்வு சொல்கிறார் இயற்கை போராளி அண்ணன் S.p. Udayakumar பச்சைத் தமிழ் தேசியம் - @சுப. உதயகுமாரன் ஒரு பெரியார்-அண்ணா கால தி.(மு).க.காரரின் மகனாகப் பிறந்த காரணத்தால் நான் பல நன்மைகளைப் பெற்றேன் என்று உறுதியாக நினைக்கிறேன். பகுத்தறிவு, சுயமரியாதை, பெண் விடுதலை, மூட நம்பிக்கைக் களைதல் என பல நல்ல சிந்தனைகளை, செயல்பாடுகளைப் பெற அது எனக்கு அச்சாரமாய் அமைந்தது. இவை எல்லாவற்றையும் விட பிரமணீய ஆதிக்கம் எனும் சமூக, கலாச்சார, பொருளாதார, அரசியல் ஆக்டபசை இனம் கண்டிட, எதிர்த்திட, எடுத்தெறிந்திடவும் பெரிதும் உதவியது. இந்த விழிப்புணர்வு அன்றைக்கு கிடைக்காமல் போயிருந்தால், இன்றைக்கு பிராமணர் உயர்ந்தவர், அவர் வணங்கும் தெ…
-
- 1 reply
- 6.1k views
-
-
ஒரு தேசத்தையே பொய் சொல்லி நம்ப வைத்த பார்ப்பனியக் குட்டை உடைத்திருக்கிறார். துணைத் தளபதி மார்கோஸ் with Srini Pvs and 15 others குலக் கல்வித் திட்டம்.... இன்றைய ஆயுத எழுத்து விவாதத்தில் இது குறித்து விவாதிக்கப் பட்டது. கே. டி. ராகவன் தனது அதி புத்திசாலிதனமான வாதத்தில் பானை செய்பவன் மகன் பானை செய்தால் என்ன தவறு என்றும் எல்லா தொழில்களும் தெய்வமே என்றும் குழந்தைத் தொழிலாளர்கள் வீட்டில் செய்யும் தொழிலுக்கு சம்பளம் பெறாததால் அது தொழில் என்றே சொல்லக் கூடாது என்றும் சொல்லிக் கொண்டிருந்தார். சரி அவர் அப்படித் தான் சொல்லுவார். இந்தப் பதிவு அதற்க்கல்ல. அவர் கடைசியாக மெக்கால்லே கல்வித் திட்டம் ஒரு அடிமைகளை உருவாக்கும் ஆங்கில அரசின் திட்டம் என்றும் குருவிடம் சென்று எல்லா …
-
- 0 replies
- 800 views
-
-
மாநாகன் இனமணி 107 https://app.box.com/s/j0vouzk5fuvfe3jkpdabt2upq9fd877h வானுற நிவந்த மேனிலை மருங்கின் வேனிற் பள்ளித் தென் வளி தரூஉம் நேர் வாய்க் கட்டளை திரியாது திண்ணிலைப் போர்வாய்க் கதவம் தாளொடு துறப்ப (நெடுநல்வாடை 60-63) ...தண்ட மாப்பொறி மடக்கண் மயில் இயல் மறலியாங்கு நெடுஞ்சுவர் நல் இல் புலம்பக் கடை கழிந்து மென் தோள் மகளிர் மன்றம் பேணார் புண்ணுவந்து (புறம் 373) பொருள்:- மன்னன் அரசு வீற்றிருக்கும் பெருங்கோயிலை நோக்கி வரும் தென்றல் காற்றை மிக உயரத்தில் வேனில் பள்ளி வழியே உள்வாங்கி நேர்கீழாய் இறக்கி வடதிசை நோக்கிப் பல சுற்றுக் கட்டுக்களையும் கட்டளை முற்றங்களையும் கடந்து வெளியே செலுத்தும் வகையில் தொடர் வாயில் கதவுகள் முகப்பு வரை திறந்து விடப்பட…
-
- 0 replies
- 1k views
-