Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுற்றமும் சூழலும்

சுற்றமும் சூழலும் சூழலியல் | காலநிலை அறிவியல்

பதிவாளர் கவனத்திற்கு!

சுற்றமும் சூழலும் பகுதியில்  சூழலியல், வெப்ப தட்பக் காலநிலை ஆய்வுகள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. ஐரோப்பாவை திணற வைக்கும் வெப்ப அலை - அதிகரிக்கும் உயிரிழப்பு. கடந்த சனிக்கிழமை ஸ்பெயினின் எல் கிரனாட் நகரத்தில் ஜூன் மாதத்தில் இதுவரை இல்லாத அதிக வெப்பநிலையாக 46 செல்சியஸ் பதிவானது. ஐரோப்பா முழுவதும் வீசும் வெப்ப அலைகளால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் தெற்கு ஸ்பெயினும் ஒன்று. கடும் வெப்பத்தை எதிர்கொள்ளும் சில நாடுகள் 40 செல்சியஸுக்கும் அதிகமான வெப்பத்தை எதிர்கொண்டு வருகின்றன. போர்ச்சுகல், குரோஷியா மற்றும் இத்தாலியின் சில பகுதிகளில் அதிக வெப்பம் காரணமாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சமீபத்திய தகவலின்படி, இத்தாலியில் வெப்ப அலை காரணமாக இருவர் உயிரிழந்துள்ளனர். இத்தாலியில் நாடு முழுவதும் அவசர சிகிச்சைப் பிரிவுகளில் ஹூட் ஸ்ட்ரோக்கால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை …

  2. ஜப்பான் தீவில் ஒரு வாரத்தில் சுமார் 1,600 நிலநடுக்கங்கள். ஜப்பானின் ககோஷிமா மாகாணத்தின் தொலைதூரப் பகுதியான அகுசேகி தீவில் கடந்த இரண்டரை வாரங்களில் சுமார் 1,600 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால், ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளை காலி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. தொடர்ச்சியான நில அதிர்வு செயல்பாடு சிறிய தீவு சமூகத்தினரிடையே கடுமையான துயரத்தையும் பரவலான தூக்கமின்மையையும் ஏற்படுத்தியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை (06) இரவு 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்ட போதிலும், திங்கட்கிழமை நிலவரப்படி அகுசேகி தீவில் பெரிய சேதம் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை என்பதை உள்ளூர் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இருப்பினும், ஜூன் 21 ஆம் திகத…

  3. ரஷ்யாவில் 7.7 ரிச்டர் நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை. ரஷ்யாவின் கம்சட்கா கரையோரப் பகுதியில் இன்று (13) 7.7 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து அப் பகுதிக்கு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. 7.7 ரிச்டர் அளவில், 39.5 கிலோமீட்டர் ஆழத்தில் இந் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் கம்சட்காவின் சில பகுதிகளில் சுமார் 4 மீட்டர் உயரத்துக்கு அலைகள் எழுந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் செவெரோ, குரில்ஸ்க் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் வசிப்பவர்கள் உடனடியாக அவ்விடங்களிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். https://athavannews.com/2025/1447050

  4. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சங்கர், ஜிம்பாப்வேயிலிருந்து இராஜதந்திரப் பரிசாக 1998-ல் இந்தியாவிற்கு வந்த இரண்டு ஆப்பிரிக்க யானைகளில் ஒன்று. கட்டுரை தகவல் அபிஷேக் டே பிபிசி நியூஸ், டெல்லி 21 செப்டெம்பர் 2025 இந்தியாவில் உள்ள விலங்கு நல ஆர்வலர்கள், நீண்ட நாட்களாக மறுவாழ்வு அளிக்க முயன்ற ஒரு அதிகம் நேசிக்கப்பட்ட யானையின் மரணத்திற்காகத் துக்கம் அனுஷ்டித்துக்கொண்டிருக்கின்றனர். டெல்லியின் மிருகக்காட்சிசாலையில் இருந்த ஒரே ஆப்பிரிக்க யானையான சங்கர், தனது வாழ்க்கையின் பெரும்பகுதியைத் தனிமையில் கழித்தது. புதன்கிழமை அன்று உணவு உண்ண மறுத்து, மாலைக்குள் அது சரிந்து விழுந்தது. கால்நடை மருத்துவர்கள் முயற்சி செய்தாலும் 29 வயதான அந்த ஆண் யானை, 40 நிமிடங்களுக்குள் இறந்துவிட்டத…

  5. திட்வா, சென்யார்: வங்கக்கடலில் ஒரே காலகட்டத்தில் இரு புயல்கள் உருவானது எதைக் காட்டுகிறது? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,வங்கக்கடலில் புயல் நிலை கொண்டிருப்பதை காட்டும் படம் (கோப்புப் படம்) கட்டுரை தகவல் க. சுபகுணம் பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் திட்வா புயல், இலங்கையில் சமீபத்திய ஆண்டுகளில் பேரழிவை ஏற்படுத்திய மோசமான வானிலை நிகழ்வுகளில் ஒன்று. கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டிலும் திட்வா புயல் எதிரொலியாக பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கிட்டத்தட்ட இதே காலகட்டத்தில், வங்கக்கடலில் உருவான சென்யார் புயல் கிழக்கு நோக்கி நகர்ந்து இந்தோனீசியாவில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. வங்கக் …

  6. பிரான்ஸில் பற்றி எரியும் காட்டுத் தீ! 10,000 ஹெக்டேயர் வனப்பகுதி தீக்கிரை. பிரான்ஸின் அவூட் (Aude) மாவட்டத்தில் நேற்று மாலை ஏற்பட்ட பாரிய காட்டுத்தீயினால் ஏழு தீயணைப்புப்படை வீரர்கள் உட்பட 9 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த பகுதியில் உள்ள 10,000 ஹெக்டேயர் வனப்பகுதி இதுவரை தீயில் கருகி, சாம்பல் மேடாக காட்சியளிப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் இக் காட்டுத் தீயினால் ஆயிரக்கணக்கானோர் தங்களது வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் எனவும், 3 வீடுகள் முற்றாக தீக்கிரையாகியுள்ளதாகவும், கிட்டத்தட்ட 6,000 வீடுகளுக்கு மின்சாரம் தடைப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் பரவி வரும் தீயைக் கட்டுப் படுத்…

  7. பட மூலாதாரம், Courtesy of Tel Aviv University படக்குறிப்பு, இஸ்ரேலின் கார்மல் மலையில் குழந்தை 'ஸ்குல் I' (Skhūl I) கண்டுபிடிக்கப்பட்ட குகை கட்டுரை தகவல் இசபெல் காரோ பிபிசி முண்டோ 22 நவம்பர் 2025, 01:46 GMT புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் நமது இனத்தின் பரிணாம வளர்ச்சியையும், நவீன மனிதர்களின் சடங்கு சம்பிரதாயங்களையும் புரிந்துகொள்வதற்கு உதவும் புரட்சிகரமான கண்டுபிடிப்பு இது. 140,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த குழந்தையின் மண்டை ஓடு, வடமேற்கு இஸ்ரேலில் உள்ள கார்மல் மலையின் குகைகள் ஒன்றில் கண்டறியப்பட்டது. மிகப் பழமையான கல்லறையாக அறியப்படும் இந்தக் குகையில் இருந்து கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்கு முன்பு தோண்டியெடுக்கப்பட்ட மனித எச்சங்களின் ஓர் பகுதியாக இந்த மண்ட…

  8. Published By: Digital Desk 3 05 Sep, 2025 | 12:00 PM கடந்த ஆண்டு வளி மாசுபாட்டுக்கு காலநிலை மாற்றத்தால் அடிக்கடி ஏற்படும் காட்டுத்தீ சம்பவங்கள் காரணமாக அமைந்துள்ளதாக உலக வானிலை அமைப்பு (WMO) வெள்ளிக்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. சுற்றுப்புற வளி மாசுபாடு ஆண்டுக்கு 4.5 மில்லியன் அகால மரணங்களை ஏற்படுத்துவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. கடும் காட்டுத் தீ ஏற்படும் அமேசன் காடுகள், கனடா, சைபீரியா மற்றும் மத்திய ஆபிரிக்கா போன்ற இடங்கள் வளி மாசுபாடு ஏற்படும் இடங்களாக 2024 ஆம் ஆண்டிற்கான உலக வானிலை அமைப்பு அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. புதைபடிவ எரிபொருள் உமிழ்வுகளால் ஏற்படும் புவி வெப்பமடைதல் வானிலை முறைகளை மாற்றுவதால், காட்டுத்தீ உலகம் முழுவதும் அடிக்கடி மற்று…

  9. மெக்சிகோவில் ரேமண்ட் புயல் – 30 பேர் உரிழப்பு! வட அமெரிக்காவில் அமைந்துள்ள மெக்சிகோ நாட்டின் அருகேவுள்ள பசுபிக் கடலில் உருவாகிய ரேமண்ட் புயல் காரணமாக மெக்சிகோவில் கனமழையில் சிக்கி இதுவரையில் 30 பேர் உயிரிழந்துள்ளதுடன் 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். மெக்சிகோவிலுள்ள 32 மாகாணங்களிலும் கனமழை பெய்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கனமழை காரணமாக பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மெக்சிகோ நாட்டின் வெரகுரூஸ், குவாரடிரோ, ஹிடல்கோ, சன் லுயிஸ் பொடொசி ஆகிய நகரங்கள் அதிக பாதிப்பினை எதிர்கொண்டுள்ளன. கனமழை, வெள்ளம், மண்சரிவு காரணமாக மெக்சிகோவில் 30 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதுடன் 5,4…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.