கவிதைக் களம்
கள உறுப்பினர்களின் கவிதைகள் | கவிதை மொழியாக்கங்கள்| பாடல் வரிகள்
கவிதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுய கவிதை ஆக்கங்கள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.
772 topics in this forum
-
"உடற்பயிற்சி..." / தன்முனைக் கவிதை "உடற்பயிற்சி மிகினும் குறையினும் உடம்பு பாதிக்குமே! உள்ளம் சீராகி தெளிவுபெறுவதும் உண்மை நன்மையே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 817 views
-
-
"உயர்ந்திடு உயர்த்திடு....!" "உயர்ந்திடு உயர்த்திடு பணப்பைக் காத்திடு உள்ளம் பூரிக்கும் செயலைச் செய்திடு உடமை எல்லாம் பகிர்ந்து கொடுத்திடு உதவிக்கரம் நீட்டி அன்பைக் காட்டிட்டு!" "உடன்பட்டு உண்மை அறிந்து ஒற்றுமையாகிடு உலகம் போற்றும் சமதர்மம் நாட்டிடு உரிமை கொண்ட சமூகம் அமைத்திடு உயர்ந்த கொள்கை என்றும் விதைத்திடு!" "உயிரிலும் மேலாக ஒழுக்கம் வளர்த்திடு உறவு நிலவும் நட்பைக் கொடுத்திடு உதிரம் சிந்தா அமைதி வழங்கிடு உன்னால் முடிந்ததை துணிந்து செய்திடு!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 1.6k views
-
-
"உயிரின் உயிரே!" "அன்பு கொண்டு .... அருகில் வந்தேன் ஆதரவு சொல்லி .... ஆனந்தம் தருவாயோ? இன்பம் மலர .... இருவரும் சேர்ந்தோம் ஈருடல் ஒன்றாக .... ஈரமான ரோசாவே உலகம் மறந்து .... உவகை கொண்டோமே!" "ஊமை விழியில் .... ஊர்வலம் சென்று எழுச்சி கொண்ட .... எம் காதலே ஏமாற்றாமல் இவனின் .... ஏக்கம் தணியாயோ? ஐம்புலனும் தேடும் .... ஐயமற்ற அழகியே ஒப்பில்லா என் .... உயிரின் உயிரே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 316 views
-
-
"உயிரே!" "அள்ளி அரவணைத்து அன்பு பொலிந்து அனு தினமும் அடைக்கலம் அளித்து அக்கறையாய் பேசி அமுதம் ஊட்டி அமைதி தந்து அறிவூட்டிய உயிரே !" "ஆதரவு கொடுத்து ஆர்வம் ஏற்படுத்தி ஆலோசனை தந்து ஆணவம் அகற்றி ஆரத் தழுவி ஆசை தூண்டி ஆறுதல் படுத்தி ஆணாக்கிய உயிரே !" "இடுப்பு வளைவு இன்பம் சேர்க்க இதயம் மகிழ்ந்து இதழை பதிக்க இளமை பருவம் இழுத்து அணைக்க இரக்கம் கொண்ட இனிய உயிரே!" "ஈரமான நெஞ்சம் ஈர்த்து பிணைக்க ஈவிரக்கத் துடன் ஈருடல் ஓருயிராக …
-
- 0 replies
- 344 views
-
-
"உயிர்களையும் நேசித்து நம்பியவர்களையும் நேசிப்போம்!" "உயிர்களையும் நேசித்து நம்பியவர்களையும் நேசிப்போம்! பயிர்களையும் வளர்த்து பட்டினியையும் ஒழிப்போம் துயரங்களையும் போக்கி எல்லோரையும் மகிழ்விப்போம் புயலும் மழையும் எம்மைத் தாக்கினாலும் அயலவர் அவலங்களை துடைத்து எறிவோம்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 339 views
-
-
"உலகின் மிகப் பழைய சுமேரிய காதல் பாட்டின் தமிழ் ஆக்கம்" ஈராக்கில் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டபோது 1889 ஆம் ஆண்டு உலகின் முதல் காதல் கடிதத்தை கவிதை வடிவில் கண்டு பிடித்தார்கள். பிலடெல்பியா (Philadelphia) பல்கலைக்கழக பேராசிரியரான Noah Kramer இதன் மொழி பெயர்ப்பை ஆங்கிலத்தில் தந்தார். இது காதல் கணவனுக்காக முதல் இரவில் சுமேரிய ஆப்பு வடிவத்தில் எழுதியது. இது ஷு-சின் அரசனுக்கு உரைக்கப்பட்டது. இந்த காதல் கடித கவிதை "Bridegroom, dear to my heart, Goodly is your beauty, honeysweet ,........ " அற்புதமான அர்த்தங்களை கொண்டு உள்ளது. மேலும் இதுவே உலகின் மிகப் பழைய காதல் பாட்டும் ஆகும் . இது கி மு 2030 அளவில் ஊர் என்ற நகரத்தில், 4000 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது. …
-
- 0 replies
- 214 views
-
-
"ஊர்ந்து போகிறான் கல்லறை தேடி!" "அமைதியாய் இருந்து அவன் படித்தான் அடக்கம் கொண்டு தனிமை கண்டான் அறிவு பகிர்வென துணையாய் வந்தாள் அழகாக அமர்ந்து ஆசை ஊட்டினாள் !" "ஆசிரியர் போல அவனுக்கு இருந்தாள் ஆனந்தமாய் அவனும் கனவு கண்டான் ஆகாரம் தீத்துவது போல அவளோ ஆதரவாய் அன்பாய் காதலும் கொடுத்தாள் !" "இன்பம் என்றால் என்ன என்று இலக்கியம் காட்டிய தனி வழியில் இனிதாய் இருவரும் ஒன்றி இருந்து இரகசியம் இல்லா பாடம் பகிர்ந்தனர் !" "ஈசன் இவளே இனி என்று ஈடு இல்லா இச்சை கொண்டு ஈயம் உருகியது போல அவனும் ஈருடல் ஓருடலாக எண்ணி வாழ்ந்தான் !" …
-
- 0 replies
- 485 views
-
-
"எங்கு சென்றாய்?" [கசல் கவிதை] "காதல் தந்தாய் காத்திருந்தேன் நாள் முழுவதும்! வேதனை படுத்தி சோதனை செய்யவா எங்கு சென்றாய்?" "அழகிய உடல் ஆனந்தம் தந்தது! அருகில் இல்லாமல் தூர விலகினாயே எங்கு சென்றாய்?" "கொஞ்சும் பேச்சில் நெஞ்சைப் பறித்தவளே! வஞ்சக மனத்துடன் கஞ்சத்தனம் வேண்டாம் எங்கு சென்றாய்?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
-
- 2 replies
- 362 views
-
-
"எதில் நாம் வல்லுநர் வஞ்சகி ?" / "What are we masters of, cunning woman?" "பூமியில் வந்ததில் இருந்து போகும் வரை, வஞ்சகி உனக்கு ஏனடி பாசாங்கு, ஏதுக்கடி போலி வாழ்வு? மனிதனின் உண்மை தேவையை, பாசாங்கு உணராது வஞ்சகி பொய் நம்பிக்கை விதைத்து இன்பத்தை கெடுக்கும், பெண்ணே!" "அறிவியலா? ஆன்மிகமா? எதில் மனிதன் அதிபதி, வஞ்சகி? விஞ்ஞானத்தால் விரக்தியை உண்டாக்கவா, பேரழிவை உண்டாக்கவா மனித நேயமற்ற நீர்க்குமிழி விவகாரங்களை கட்டுப்படுத்தவா, வஞ்சகி? கட்டாயம் அது நிரந்தர நித்திய ஆன்மாவை அல்ல, பெண்ணே!" "உண்மையில் மனிதன் பெரும் கடலல்ல, ஒரு துளியே, வஞ்சகி ? கற்றது கையளவு ஆனால் நீயோ உலகளவ…
-
- 0 replies
- 413 views
-
-
"எதைத் தேடி என்ன பயன் ?" "அறிவைத் தேடி பள்ளிக்கூடம் போனேன் பட்டம் வாங்க பல்கலைக்கழகம் சென்றேன் வேலை செய்ய நிறுவனம் நுழைந்தேன் எதைத் தேடி என்ன பயன் ?" "அழகை ரசிக்க ஆசை வேண்டாமா? அன்பைப் பகிர நண்பி வேண்டாமா? இன்பம் கொள்ளக் காதல் வேண்டாமா? கணவன் மனைவி உறவு வேண்டாமா?" "உறவு கொள்ள காமம் தேடினேன் உள்ளம் பறிக்க காதல் கொட்டினேன் வாழ்வு முழுமையாக மழலை வேண்டினேன் எதைத் தேடி என்ன பயன்?" "வயது போக முதியோர் இல்லம் தேடிய சொத்துக்கு பிள்ளைகள் சண்டை மகிழ்ச்சி தந்த வனப்பும் போச்சு மஞ்சத்தில் படுத்தும் நித்திரை இல்லை?" …
-
- 0 replies
- 2.2k views
-
-
"எந்தன் உயிரே" "அள்ளி அரவணைத்து அன்பு பொழிந்து ஆரத் தழுவி ஆசை தூண்டி இதயம் மகிழ்ந்து இதழைப் பதித்து ஈரமான நெஞ்சம் ஈர்த்துப் பிணைத்து எழுச்சி கொள்ளும் எந்தன் உயிரே!" "அக்கறையாய் பேசி அன்பு ஊட்டி ஆதரவு கொடுத்து ஆர்வம் ஏற்படுத்தி இடுப்பு வளைவு இன்பம் சொரிய ஈவு இரக்கத்துடன் ஈருடல் ஓருயிராக உரிமை நாட்டும் உத்தம உயிரே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 470 views
-
-
"எந்தை அவள் ..........." [ எந்தை அவள் சிரித்து, சிந்தித்து திருந்த ஒரு நையாண்டி பாடல்] காலை: "கந்தப்பு வண்டியில் பால் விற்கிறான் முந்தைய கடனை பேசி வாங்கிறான் சந்தானம் கிணற்றில் முகம் கழுவுறான் சிந்திய தண்ணீரை வாழைக்கு விடுறான் செந்தணல் சூரியன் மேலே எழுகிறான் பந்தி பந்தியாய் பறவை பறக்குது மந்த வெயில் மெல்ல சுடுகுது எந்தன் கண்ணகி போர்வை விலத்துகிறாள்!" நண்பகல் [மத்தியானம்]: "சந்தியில் சத்தமிட்டு கந்தப்பு வாறான் கந்தை துணியுடன் சுந்தரி சமைக்கிறாள் சந்தனப் பொட்டு பள பளக்குது சந்தானம் நந்திக்கு தீபம் காட்டுறான் செந்தாமரை கண்ணாடியில் அழகு தேடுறாள் வெந்திய குளம்பு அடுப்பில் கொதிக்குது சிந்திய முத்துகள் …
-
- 0 replies
- 212 views
-
-
"எனது மே தின முழக்கங்கள்!' / "MY MAY DAY SLOGANS!" "கொடூரமாக இருக்காதே திமிர் பிடிக்காதே உரிமைகளை மதி குரல்களை மதி" "இங்கு வேலையாட்கள் இல்லை இங்கு முதலாளிகள் இல்லை இங்கு குடும்பமே உண்டு இனி நட்பாகக் கவனி" "கஷ்டங்களைக் கேளு துயரங்களைக் கேளு கடவுள் சிவாவாக இரு இயேசு கிறிஸ்துவாக இரு" "ஆதாயத்தைப் பகிரு லாபத்தைப் பகிரு ஒரு தந்தையைப் போல ஒரு தாயைப் போல" "அடிமை ஆக்காதே ஏழைகளை உருவாக்காதே ரோமாக இருக்காதே நீரோவாக இருக்காதே" "எல்லோரையும் இணை தொழிலாளர்கள் பங்கேற்கட்டும் அனைவரையும் உள்ளடக்கு முடிவெடுப்பதில் கலந்தாலோசி" "ஆர்வத்தைக் கொடு நம்பகத்தன்மை வளரட்டும் …
-
- 0 replies
- 430 views
-
-
"என் அப்பாவுக்காக" ['கணபதிப்பிள்ளை கந்தையா' /11/06/1907 - 18/02/2000] "பாராட்டுகள் எதிர்பாராத, பெருமை பேசாத பாசாங்கு செய்யாத, அமைதியான அண்ணல் ! பாசம் கொண்டு, எம்மை உயிராய்நேசித்து பார்த்து வளர்த்த, பெருந்தகை இவன் !" "அன்னாரின் கனவுகளை, இன்று நிறைவேற்ற அன்னாரின் விருப்பங்களை, இன்று முழுமையாக்க அன்னாரின் கவலைகளை, இன்று நீக்கிட அயராது நாம்என்றும், உறுதியாக இருக்கிறோம் !" "எம் வாழ்வின், அனைத்து புயல்களிலும் எம்மை கைபிடித்த, துணிவுமிக்க வீரன் ! எம் மனஅழுத்தம், சச்சரவு காலங்களில் எம்மை வழிநடத்தும், உண்மையான நண்பர் !" "நல்ல கெட்ட நேரங்கள் எல்லாம் நட்புடன் ஆசீர்வதித்து தேற்றிய ஆசான் ! நடுகல்லாய் நாம் இன்று மலர்தூவி…
-
- 0 replies
- 386 views
-
-
"என் உயிரும் உனதடி...." அன்ன நடையில் இதயத்தை அதிர்வித்து அருகில் நெருங்கி காமத்தை தெளித்தவளே! அம்புலி நிலவில் மடியில் சாய்ந்து அமுத மொழியால் மயக்கம் தந்தவளே!" "கள்ளம் அற்ற காதல் பொழிபவளே கன்னக் குழியில் வீழ்த்தியது எனோ? கட்டு உடலால் என்னைக் கட்டியவளே கடைக் கண்ணால் சாடை எதற்கோ?" "தேடி உன்னைக் கண்டு பிடித்தேன் தேய்வு இல்லா அழகு கொண்டவளே! தேன் ஒழுகும் புன்னகை பூத்தவளே தேவதையே என் உயிரும் உனதடி!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 565 views
-
-
"என் உயிரோட்டமும் நீதானே" "மின்னல் இடை கண்ணைக் குத்த அன்ன நடை நெஞ்சை வருத்த கன்னி இவள் அருகில் வந்தாள் சின்ன சிரிப்பு செவ்விதழில் தவழ கன்னக் குழியில் இடறி விழுந்தேனே!" "அன்பே ஆருயிரே அழகு தேவதையே இன்பம் கொட்டும் வண்ணக் கிளியே துன்பம் எனோ எனக்குத் தருகிறாயே என் எந்திரவாழ்வை மாற்ற வந்தவளே என் உயிரோட்டமும் நீதானே இன்று!!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 1 reply
- 453 views
-
-
"என் மரணத்துக்கு நானே எழுதும் அஞ்சலி" [பாடல் - 2 / second poem of my own eulogy / உயிர் எழுத்து வரிசையில்] "அன்னையின் தாலாட்டில் அப்பாவின் பாசத்தில் அக்காவின் கண்காணிப்பில் அண்ணையின் வழிகாட்டலில் அனைவரையும் அணைத்து தம்பியின் நண்பனாக அத்தியடியில் மலர்ந்து மணம் வீசியவனே!" "ஆசை அடக்கி எளிமையாக வாழ்ந்தவனே ஆடை அணிகளை அளவோடு உடுத்து ஆரவாரம் செய்யாமல் அடக்கமாக இருந்தவனே ஆனந்த கண்ணீரை எதற்காக பறித்தாய்?" "இறைவனை அன்பில் சிரிப்பில் காண்பவனே இல்லாளை ஈன்றவளை காண போனாயோ ? இன்பம் துன்பம் சமனாக கருத்துபவனே இடுகாடு போய் உறங்குவது எனோ ?" "ஈன இரக்கமின்றி கொரோனா வாட்டி ஈரக்கண் பலரை நனைக்கும் வேளையில் ஈறிலியை நி…
-
- 0 replies
- 165 views
-
-
"என் மரணத்துக்கு நானே எழுதும் அஞ்சலி" [பாடல் - 1 / First poem of my own eulogy / உயிர் எழுத்து வரிசையில் எழுதப்பட்டது] "அன்புக்கு அடிமையாக பண்பை மதிப்பவனாக அறிவிற்கு சுமாராக குடும்பத்தின் இளையவனாக அனைவருக்கும் நண்பனாக என்றும் தனிவழியில் அத்தியடியில் பிறந்து வளர்ந்த சாமானியனே!" "ஆசாரம் மறந்து தன்போக்கில் வளர்ந்தவனே ஆத்திரம் கொண்டு நடைமுறையை அலசுபவனே ஆலாத்தி எடுத்து ஆண்டவனை வழிபடாதவனே ஆராய்ந்து அறிந்து எதையும் ஏற்பவனே!" "இராவணன் வாழ்ந்த செழிப்பு இலங்கையில் இறுமாப்புடன் தலை நிமிர்ந்து வாழ்ந்தவனே இங்கிதம் தெரிந்தாலும் இடித்துரைக்கவும் மறக்காதவனே இயமன் வலையில் ஏன் விழுந்தாய்?" "ஈடணம் விரும்பா சாதாரண மகனே …
-
- 1 reply
- 400 views
-
-
"என்னவளே! அடிஎன்னவளே! மனசுஇலபோலக் காயுதடி" "என்னவளே! அடிஎன்னவளே! மனசுஇலபோலக் காயுதடி சின்ன இடையாளே! செருக்குப் பிடித்தவளே துன்பம் வேண்டாமே! மௌனம் கலைத்தாலென்ன? இன்பமொன்றே எண்ணி உன்னிடம் வந்தேனே!" "மின்னல் வேகத்தில் கோபம் கொள்ளாதே கன்னம் சிவக்க உற்றுப் பார்க்காதே! அன்ன நடையில் மனதைப் பறிகொடுத்து கன்னி உன்னை மனதாரக் காதலித்தேனே!" வண்ணக்கிளியே அழகே! தனிமை என்னைவாட்டுதே மண்ணில் வாழும்வாழ்வும் எனக்கு வெறுக்குதே! கண்கள்கூட நீயில்லாமல் இரவில் மூடமறுக்குதே எண்ணமெல்லாம் நீயொருத்தியே! அருகில் வாராயோ?" "விண்ணில் மலரும் நிலாவும் சுடுகுதே …
-
- 1 reply
- 356 views
-
-
"எரிச்சலை ஊட்டுகிறது" "எனக்கு மேல்- ஒரு சக்தி உண்டு- அதை நம்புகிறேன் மணக்கும் வாசனையில்- ஒரு கவர்ச்சி உண்டு- அதை நம்புகிறேன் அணங்கு மேல்- ஒரு மோகம் உண்டு - அதை நம்புகிறேன் பிணக்கும் பிரச்சனைக்கும் - ஒரு தீர்வு உண்டு- அதை நம்புகிறேன்" "நந்தியை விலத்தி- ஒரு அருள் காட்டியவனை- எனக்குப் புரியவில்லை மந்தியின் துணைக்காக- ஒரு வாலியை வெட்டியவனை- எனக்குப் புரியவில்லை அந்தியில் வாடும்- ஒரு மலரை மாட்டியவளை- எனக்குப் புரியவில்லை இந்திரலோககத்தில் இருந்து- ஒரு கலகம் மூட்டியவனை- எனக்குப் புரியவில்லை" "வருணத்தை காப்பாற்ற- ஒரு பக்தனை நீ அழைக்காதது- எரிச்சலை ஊட்டுகிறது கருணைக்கு அகலிகை- ஒ…
-
- 0 replies
- 160 views
-
-
"எல்லாமாய் அவளே" "எல்லாமாய் அவளே இறைவியும் அவளே! சொல்ல முடியா அழகில் வந்து வெல்ல முடியா நெஞ்சைக் கவர்ந்து நல்லாய் வாழ தன்னைத் தந்தவளே!" "கள்ளம் இல்லா நெஞ்சம் கொண்டவளே! உள்ளம் தேடும் அன்பு தந்து அள்ள அள்ள இன்பம் சொரிந்து உள்ளது எல்லாம் எமக்கு கொடுத்தவளே!" "ஆழ் கடலில் மலர்ந்த முத்தே! வாழ்வு தர உன்னையே கொடுத்து தாழ்வு மனப்பான்மை எம்மிடம் அகற்றி சூழ்ச்சி சூது அறியா இல்லத்தரிசியே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 473 views
-
-
"எழுதுகோல் கொண்டு பா தொடுக்கிறேன்" "எழுதுகோல் கொண்டு பா தொடுக்கிறேன் எக்களிப்பு இல்லை ஏற்றத்தாழ்வு இல்லை எள்ளளவு வெறுப்பு எவரிடமும் இல்லை என்றாலும் என்னை நானே வெறுக்கிறேன் !" "நேரம் போகாத சில நாட்கள் நேசம் கிடைக்காத சில உறவுகள் நேரார் தூற்றும் சில வசைகள் நேசகன் துவைக்கும் துணி ஆனேன் !" "வெறுப்பு மனதில் குடி கொள்ள வெளிச்சம் மெல்ல விலகிப் போக வெறுமை தனிமை என்னை வாட்ட வெண்மணல் தரையில் கருவாடு ஆனேன் !" "அல்லும் பகலும் என்னை சுற்றி அக்கம் பக்கம் நடப்பதைப் பார்த்து …
-
- 0 replies
- 1.1k views
-
-
"ஒதுங்கி மூலையில் மலர்ந்த ரோசா" "ஒதுங்கி மூலையில் மலர்ந்த ரோசா ஒளியில் மிளிர்ந்து அழகைக் காட்டி ஒலி எழுப்பும் வண்டைப் பார்த்து ஒய்யாரி கேட்குது நீ யார் ?" "துள்ளி பாயும் காட்டு மான் துணையுடன் மறைவில் ஒளிந்து இருந்து துரத்தி வந்த புலியைப் பார்த்து துணிந்து கேட்குது நீ யார் ?" "வாமச் சொரூப கோழிக் குஞ்சு வாட்டம் கொண்டு நிழலில் பதுங்கி வானத்தில் வட்டமிடும் கழுகைப் பார்த்து வாக்குவாதம் செய்யுது நீ யார் ?" "மாணவி ஒருவள் கண்ணீர் வடிய மாதா வாக்கிய குருவை நொந்து மாழை மடபெண் வெட்கத்தை விட்டு மாசுபடுத்தியவனைக் கேட்குது ந…
-
- 0 replies
- 1.1k views
-
-
"ஒத்தையடிப் பாதையிலே அத்தமக போகையிலே" "ஒத்தையடிப் பாதையிலே அத்தமக போகையிலே செத்த பிணங்களும் எழும்பி பார்க்குது சொத்தை மனமும் பூரிப்பு கொள்ளுது பித்தம் ஏறி என்காலும் தொடருது!" "ஒத்தையடிப் பாதையிலே அத்தமக போகையிலே ஒளிரும் அவள் பல் அழகில் ஒடிந்து நானும் காதல் கொள்ள ஒப்புதல் கேட்டு மனம் கெஞ்சிநிற்குது!" "வித்தை பல உடலால் காட்டி கத்தை கத்தையாக காதல் எறிந்து முத்தம் பல இதழால் தந்து ஒத்தையடிப் பாதையில் அத்தமக போகிறாள்!" "ஒழிந்து ஓடி ஆடிப் பாடி ஒற்றை காலில் சலங்கை கட்டி ஒய்யாரமாய் வரம்பில் விழாமல் நடந்து ஒத்தையடிப் பா…
-
-
- 4 replies
- 594 views
-
-
"ஒரு சிறிய கற்றல் ஆபத்தானது [குறைவான அறிவு ஆபத்தானது / A little learning is a dangerous thing]" "அரை குடத்தின் நீர் அலைகள் தரை காண ததும்பி வடியும் அரைகுறைக் கல்வி கர்வம் கொண்டு கூரை ஏறாமல் வானம் ஏறும் !" "நிறை குடம் அமைதி கொண்டு முறையாக கசடு அறக் கற்று பாறை போல் தன்னைத் திடமாக்கி பறை அடிக்காமல் தெளிவாக உரைக்கும் !" "குடித்தால் பியரியன் ஊற்றை முழுக்கக்குடி பிடித்தால் புளியங் கொம்பைப் பிடி கூடி சுவைப்பதல்ல பியரியன் ஊற்று தேடி முடாக்குடியாக முழுக்கக் குடி !" "கொஞ்சம் சுவைத்தால் மூளை கிறங்கும் கஞ்சா வெறியனாகி திமிர் பிடிக்கும் …
-
- 1 reply
- 553 views
-