Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கதைக் களம்

கள உறுப்பினர்களின் சிறுகதை | மொழியாக்க கதை| தொடர்கதை | பயண அனுபவங்கள் | நாடகம்

பதிவாளர் கவனத்திற்கு!

கதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, பயண அனுபவங்கள், நாடகம் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுயமான சிறுகதைகள்,  மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், பயண அனுபங்கள், நாடகங்கள்  மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.

  1. "மர்மம் விலகியது" இலங்கைக் கம்யூனிஸ்ட் (சீன சார்பு) கட்சியில் இருந்து பிரிந்து சென்ற ரோகண வீஜயவீர, மக்கள் விடுதலை முன்னணி [சிங்களத்தில் Janatha Vimukthi Peramuna] என்ற ஒரு கட்சியை நிறுவினார். இவற்றால் கவரப்பட்ட படித்த கிராமப்புற இளைஞர்கள், மாணவர்கள், தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்கள், முக்கியமாக சிங்கள மக்கள் பெருமளவாக ஜே.வி.பி.யில் இணைந்தனர். அவர்கள் 1971ம் ஆண்டும் மீண்டும் 1987-1989 ம் ஆண்டும் ஆயுதப் புரட்சி அரசுக்கு [பெரும்பாலும் சிங்களவர்களை கொண்ட] எதிராக செய்தனர். அப்படியான ஒரு காலகட்டத்தில், நான் பேராதனை வளாகத்தில் இரண்டாம் ஆண்டு மாணவனாக இருந்தேன். என்னுடன் பல்கலைக்கழக நூலகத்தின் உதவி நூலகர், ஆறுமுகம், மிகவும் நண்பராக இரு…

  2. இந்தக் கதை எனது ‘நெஞ்சில் நின்றவை’ பதிவுகளில் வெளிவந்ததுதான். கோபிசங்கர் எழுதியிருக்கும் ‘தண்டனையே குற்றம்’ https://yarl.com/forum3/topic/301723-தண்டனையே-குற்றம்-t-gobyshanger/ இந்த நினைவை எனக்கு மீண்டும் நினைவூட்டியிருக்கிறது 1968, ஒன்பதாவது வகுப்பு. இரசாயனவியல் ஆசிரியரான பொன்னம்பலம் மாஸ்ரர்தான் எங்களது வகுப்பாசிரியராகவும் இருந்தார். அதுவும் ஒரு சில மாதங்களே. திடீரென அவருக்கு இடமாற்றம் வந்ததால் நல்லதொரு ஆசிரியரை இழக்கும் நிலை எங்களுக்கு. அவருக்கு பிரியாவிடை வைப்பதற்கு மேல் வகுப்பு மாணவர்கள் முடிவு செய்து 9, 10, 11, 12 விஞ்ஞான வகுப்பு மாணவர்களிடம் தலைக்கு இரண்டு ரூபா (அப்போதெல்லாம் இரண்டு ரூபா என்பது பெரிய காசு) வாங்கிக் கொண்டார்கள். இந்த பிரியாவிடை விடயத்திற்கு பொறுப்…

      • Haha
      • Thanks
      • Like
    • 6 replies
    • 404 views
  3. "திருந்தாத மனிதர்கள்" அது ஒரு காடை ஒட்டிய குக்கிராமம். அந்தக் குக்கிராமத்தில், வயல் வெளிகளுக்கு இடையில் அங்கு ஒன்று இங்கு ஒன்றாக நாற்பதோ, ஐம்பதோ வீடுகள் தான் இருந்தன. அந்த சிறு கிராமத்தில் ஒரே ஒரு சிறு கடையும், ஒரு சிறுவர் பாடசாலையும் ஒரு சிறு ஆலயமும் இருந்தன. உயர் வகுப்புக்கு கொஞ்சம் தள்ளித் தான் போகவேண்டும். அந்த ஆலயத்திற்கு பக்கத்திலும், வயலுக்கு, குளத்தில் இருந்து போகும் வாய்க்காலை ஒட்டியும், அந்த கிராமத்தில் கொஞ்சம் வசதியான ஒரு கல் வீடு இருந்தது. அங்கு மூன்று மகனுடனும், மூன்று மகளுடனும், ஒரு தலைமை குமாஸ்தா வாழ்ந்து வந்தார். அவருக்கு, அந்த கிராமத்தில் கொஞ்சம் செல்வாக்கு, ஓரளவு படித்தவரும், ஓரளவு செல்வந்தவரும் ஆவார். அவரின் குடும்பத்தில் முதல…

  4. "வேலைக்காரியின் திறமை" வேலைக்காரி என்ற சொல்லுக்கு நாம் பணிப்பெண், ஏவற்பெண் அல்லது தொழுத்தை இப்படி பலவிதமாக கூறினாலும் சிலவேளை அவள் ஒரு அடிமை போல நடத்தப்படுவதும் உண்டு. இது மலருக்கு நன்றாகத் தெரியும். அவள் சாதாரண வகுப்பில் இறுதி ஆண்டு படிக்கும் பொழுது, தாயையும் தந்தையையும் ஒரு விபத்தில் இழந்துவிட்டாள். அவளுக்கு இரண்டு தம்பியும் இரண்டு தங்கையும் உண்டு. ஒரு சிறு குடிசையில், அப்பா, அம்மாவின் கூலி உழைப்பில் ஒருவாறு சமாளித்து குடும்பம் இன்றுவரை போய்க்கொண்டு இருந்தது. இந்த திடீர் சம்பவம், அவளுக்கு முழுப்பொறுப்பையும் சுமத்திவிட்டது. அவளுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. கூலி வேலைக்கு போகும் பக்குவம் அனுபவம் அவளுக்கு இன்னும் இல்லை என்றாலும், சமையல், த…

  5. "காதல் வேண்டாம் போ" மாலை நேரம் மகாவலி ஆறு, பேராதனை வளாகத்தினூடாக, இன்று ஏனோ மெதுவாக ஓடுகிறது. தனது மனதை யாரிடமோ பறி கொடுத்தது போல தட்டுத் தடுமாறி ஓடிக்கொண்டு இருக்கிறது. சூரியன் தனது கதிர்களை மடக்கிக் கொண்டு ஆற்றில் குளிக்க போய் கொண்டு இருக்கிறான். பறவைகள் மரக் கிளைகளை நோக்கி ஆரவாரமாக பறந்து கொண்டு இருக்கிறது. வண்டுகள் மலர்களை சுற்றி ரிங்காரம் இடுகின்றன. காதலர்களை வரவேற்பது போல சந்திரன் பிரகாசமாக ஒளி பரப்பிய படி மேகத்தினுடாக எட்டிப் பார்க்கின்றான். ஒவ்வொரு நாளும் இந்த நேரம் தனது காதலனுடன் ஆற்றங்கரையில் உலா வரும் மூன்றாம் ஆண்டு கலைப் பீட மாணவி தமிழ்செல்வியை இன்று அங்கு காணவில்லை? அவள் கற்பாறைகளுக்கிடையில், தன்னை மேல் அங்கியால் இ…

  6. "மழைக்காலம்" ஒரு காலத்தில், பசுமையான மலைகளுக்கு மத்தியில் அமைந்துள்ள ஒரு அழகிய சிறிய நகரத்தில், ஒரு இளம் பெண் வசித்து வந்தாள். அவள் எப்பொழுதும் இயற்கையின் அழகில் தன்னை இழந்து, அதில் இன்பம் காண்பவள். அதிலும் அவளுக்கு பிடித்தமான காலம் மழைக்காலம். ஆவணி புரட்டாசி மாதம் என்றால் அவளின் மகிழ்வை சொல்லவே முடியாது. மழைத்துளிகள் மலையில் நடனமாடி ஓடும் விதம், தன் பாதையில் உள்ள அனைத்தையும் புரட்டிக்கொண்டு நெளிந்து வளைந்து துள்ளி செடிகள் மரங்களுக்கிடையே, பெரிய பாம்புபோல ஊர்ந்து போவது, அவள் இதயத்தை நிரப்பி ஒரு மகிழ்ச்சி உணர்வை, ஒரு மயக்கத்தை தானாகவே ஏற்படுத்தும். அதை பார்த்து ரசிக்கத்தான் அவள் கார்காலத்தை விரும்பினாள். ஏன் பெயர்கூட ஈரநிலா, ஆமாம் மழையில் நனைந்த …

  7. "வரலாறு தன்னைத் தானே திருப்பிச் சொல்லும்" இலங்கையின் வடமேல் மாகாணக் கரையோரத்தில் சிறந்து விளங்கும் நகரம் சிலாபம் என்று சொல்லலாம். அங்கிருந்து 16 மைல் தூரத்தில், இந்துமகா சமுத்திரத்தின் கரையோரத்தில் அமைந்து இருக்கும் எழில் மிகும் கிராமம் தான் உடப்பு. இங்கு தற்சமயம் அண்ணளவாக 10 ஆயிரம் தமிழ் பேசும் மக்கள் வாழ்கின்றனர். இக்கிராமம் நெய்தல் நிலத்தைச் சார்ந்ததால், இங்கு மீன் பிடித் தொழிலே முதன்மையாக இருந்தாலும், நெசவுத் தொழிற்சாலை, கயிற்றுத் தொழிற்சாலை, பனை ஓலை குடிசைத் தொழிற்சாலைகள் போன்றவையும் உள்ளன. இந்த அலைகடல் ஓரத்தில் தமிழ் மணம் பரப்பும் உடப்பு அல்லது உடப்பூர் கிராமத்தை, கட்டாயம் புத்தளம் மாவட்டத்தின் குட்டித் தமிழகம் என்று சொல்லலாம். இங்கு இன்று வாழும் பெரும…

  8. கதை - 187 / 'இலங்கை கடற்கரை “நெடுஞ்சாலை” யில் தாத்தா, கந்தையா தில்லையுடன் பேரப்பிள்ளைகள்' / பகுதி: 01 பகுதி: 01 - ஒட்டாவாவில் இருந்து யாழ்ப்பாணம் வரை முதன் முதலில் “கடற்கரை அலைந்து திரிந்தோர்” (Beachcombers) ஆப்பிரிக்காவில் தோன்றிய மனிதர்களே ஆகும். கடற்கரைகளைக் கடந்து, கடலின் வளங்களை உணவாகக் கொண்டு அவர்கள் மெதுவாக ஆப்பிரிக்காவிலிருந்து ஆசியா, ஆஸ்திரேலியா மற்றும் பின்னர் உலகின் பல பகுதிகளுக்குப் பரவினர் என்பது வரலாறு ஆகும். இதனால், மனித வரலாற்றின் முதல் “நெடுஞ்சாலை”யாக கடற்கரை அமைந்து இருந்தது. அதனாலோ என்னவோ, தாத்தாவும் தன் வெளிநாட்டில் பிறந்து வளரும் பேரப்பிள்ளைகளுக்கு அந்த பெருமை பெற்ற “நெடுஞ்சாலை” வழியாக இலங்கை சுற்றிலாவை ஆகஸ்ட் 2025 இல் ஆரம்பிக்க முடிவு செய்தார். ஆக…

  9. " பொய் சாட்சி க்கு முன் அவள் எங்கே ? " [சிறுகதை] ஒர் அரசாங்கம் அல்லது பிறர் ஒருவரைச் சிறைப் படுத்துதல், தடுத்து வைத்தல், ஆட்கடத்தல அல்லது வேறு விதத்தில் ஒருவரின் சுதந்திரத்தைப் பறித்தல் ஆகிய செயற்பாடுகள் வலுக்கட்டாயமாகக் காணாமற்போகச் செய்தல் எனப்படுகிறது. காணாமல்போகச் செய்த பின், அதை ஏற்றுக்கொள்ள மறுத்தல் அல்லது காணாமல போனோர் பற்றிய விபரத்தை மறைத்தல். இது (வலுக்கட்டாயமாக) காணாமல் போகச் செய்தலாகும். பல நாடுகளின் குற்றவியல தொகுப்பில் இதனைச் சேர்த்துக்கொள்ளவில்லை. ஆனால் அந்த நாடுகளில் இதனை சட்டத்திற்கு மாறாக தடுத்துவைத்தல் அல்லது சட்ட வரம்புகளுக்கு அப்பாற்பட்ட கைதும் தடுத்துவைப்பும என்று வழக்குத்தொடர முடியும் . அந்த ரீதியில் தான் இலங்கையில் 19/05/200…

  10. "உதவும் கரங்கள்..!" நாம் ஒரு இருட்டில் தொலைந்து போனால், யாராவது ஒருவர் கொஞ்சம் வெளிச்சம் தந்து பாதுகாப்பான வழியை காட்டினால் நல்லது. ஆமாம் ஒரு சிறிய ஒளி, எங்கள் வீட்டிலும் நாம் வாழும் உலகிலும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும். ஆனால், முதலில் நாம் அதற்கு உடந்தையாக இருக்கவேண்டும். அன்பான சொற்களால், இதயத்தை மகிழ்வாக தொடுவதால், காது கொடுத்து கேட்பதால், அல்லது இதயபூர்வமாக உதவும் கரங்களால் இதை செய்யமுடியும். அதையும் பணத்தை விட, விளம்பரம் செய்வதை விட, முழுக்க முழுக்க அன்பினால் செய்யவேண்டும். அங்கு ஆடம்பரமான மேன்மை அல்லது பாசாங்குத்தனம் இருக்கக் கூடாது. மற்றவர்கள் வேண்டும் என்றால், உங்களை பெருமையாக கூறட்டும். எதோ தன் சுய பெருமைக்கு, பெரிதாக செய…

  11. நிரூபணவாதி --------------------- இங்கே யார் அவர் என்று என்னுடைய பெயரைச் சொல்லி கேட்டான் அவன். அப்பொழுது நேரம் இரவு எட்டு மணி ஆகியிருந்தது. விளையாட்டு ஏழு மணிக்கு ஆரம்பிக்கும் என்று ஒரு வழமையாக சொல்லியிருக்கின்றோம். நான் ஆறு ஐம்பது அளவில் அங்கே மைதானத்தில் நிற்பேன். ஏழு மணிக்கு ஓரிருவரும், ஏழரை மணி அளவில் சிலரும் என்று வந்து சேர்வார்கள், அப்படியே விளையாட்டை ஆரம்பித்துவிடுவோம். எட்டு மணி அளவில் அன்று வர இருந்தவர்கள் எல்லோரும் வந்து சேர்ந்துவிடுவார்கள். 'நான் தான் அது............ நீங்கள்..............' 'என் பெயர் சிட்டா............ உங்களுடன் சேர்ந்து நானும் ஆட வந்திருக்கின்றேன்...............' என்று சொன்னவன் தன்னை யார் இங்கே அனுப்பியது என்றும் சொன்னான். 'நல்லது சிட்டா.....…

      • Like
      • Thanks
      • Haha
    • 7 replies
    • 377 views
  12. "காதல் கடிதம்" காதலின் சின்னம் காதல் கடிதம் என்பார்கள். அங்கு தான் ஒருவர் மற்றவர் மேல் உள்ள மோகம் அல்லது அழகு வர்ணனையை தங்கு தடை இன்றி, வெட்கம் இன்றி, வெளிப்படையாக கூறமுடியும். யாருக்கு தெரியும் என் காதல் தவறான புரிதலுடனும், பிழையான இடத்தில் சேர்ந்த காதல் கடிதத்துடனும் மலர்ந்தது என்று! “என் அன்பிற்கினியவளே, அழகின் தேவதையே என் மனதில் நான் உன்னோடு எப்பொழுதும் உரையாடுகிறேன். அதை நீ எப்ப அறிவையோ நான் அறியேன்? எனக்கு முன்னால் உன்னைப் பார்க்கிறேன், நான் தலை முதல் கால் வரை உன்னை அன்போடு மெல்ல வருடுகிறேன், உனக்கு முன்னால் முழந்தாளிட்டு உன்னை ரசிக்கிறேன், ‘அன்பே! உண்மையாக உன்னைக் காதலிக்கிறேன்! உன்னுடைய இனிமை நிறைந்த தனி…

  13. "திருந்தாத உள்ளம்" "திருந்தாத முழுமூடர் இந்த நாட்டில் தீமைபல புரிகின்றார், எனவே அன்பே உருவான பெண்டிரெல்லாம்அடிமை யாகி உறைக் கிணறு செய்கின்றார் கண்ணீராலே!" எங்கேயோ நான் கேட்ட வார்த்தை இது. என் முன்னைய உயர் வகுப்பு ஆசிரியையை தற்செயலாக நான் லண்டனில் கண்ட பொழுது என் மனதில் அது மீண்டும் எதிரொலித்தது. அவர் பெயர் நகுலா, படித்தவர், பட்டம் பெற்றவர், தமிழ் ஆசிரியை. சைவ சமயத்தில் முழு ஈடுபாடுடன், ஆலய வழிபாடு முதல் விரதங்கள் வரை, ஒவ்வொன்றுக்கும் விளக்கங்கள் கொடுத்து, அவ்வற்றை அந்ததந்த முறைகளின் படி ஒழுகுவதில் அவருக்கு அவளே நிகர். நான் ச…

  14. "விடியலுக்கு காத்திருக்கிறேன்" இலங்கைக்கு 1948 ஆண்டு பெப்ரவரி மாதம், நாலாம் திகதி சுதந்திரம் கிடைத்ததாக நான் வரலாற்றில் படித்துள்ளேன். அன்று இலங்கை வாழ் தமிழர்கள் தமக்கு விடியல் கிடைக்கும் என்று அதை மகிழ்வாக, பெரும்பான்மையான சிங்களமக்களுடன் சேர்ந்து வரவேற்றனர். ஆனால், எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவால், 1956 ஆம் ஆண்டு கொண்டு வந்த சிங்களம் மட்டும் என்ற சட்டம் [ Sinhala Only Act] அவர்களின் விடியலை, இனக்கலவரத்துடன் சுக்கு நூறாக்கியது. அதை தொடர்ந்து தரப்படுத்தல் வந்து, மேலும் பல இனக்கலவரங்கள், யாழ் நூலக எரிப்பு என தமிழர்கள் எதிர்பார்த்த விடியல் இன்றுவரை ஏற்படவில்லை! சொல்லளவில் பிரித்தானியா அரசிடம் இருந்து சுதந்திரம் பெற்று, ஆ…

  15. "ஏமாற்றும் காதல்" ஒரு காலத்தில் இலங்கையின் ஒரு அழகிய கடற்கரை நகரத்தில் ராஜ் என்ற இளைஞன் வாழ்ந்து வந்தான். அவன் ஒரு அன்பான மற்றும் பாரம்பரிய குடும்பத்தின் ஒரே குழந்தை. ராஜ் தனது வசீகரம், புத்திசாலித்தனம் கடலின் மீது ஆழ்ந்த அன்பு, தாராள மனப்பான்மை மற்றும் அன்பான புன்னகைக்காக அவனது கிராமம் முழுவதும் அறியப்பட்டான். ராஜ் உள்ளூர் புத்தகக் கடையில் சுமாரான வேலையில் இருந்தான், அங்கு அவன் தனது நாட்களை புத்தகங்களில் மூழ்கி, வாடிக்கையாளர்களுக்கு சரியான வாசிப்பைக் கண்டறிய உதவினான். சமீபத்தில் அவனது கிராமத்திற்குச் சென்ற அழகிய பெண்ணான மாயாவை சந்தித்த ராஜின் வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது. மாயாவை சுற்றி ஒரு மர்மம் இருப்பது அவனுக்…

  16. "வழிப்போக்கன்" “பூர்வீக நிலம், பூர்வீக கலாச்சாரம், பூர்வீக கிராமம் அல்லது நகரத்தின் மீது அன்பை வளர்ப்பது மிக முக்கியமான பணியாகும், அதை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் இந்த அன்பை எப்படி வளர்ப்பது? அது சிறியதாகத் தொடங்குகிறது - தன் குடும்பத்தின் மீதும், தன் வீடு மீதும், தன் பள்ளி மீதும் அன்புடன். படிப்படியாக விரிவடைந்து, பூர்வீக நிலத்தின் மீதான இந்த அன்பு உங்கள் நாட்டிற்கான அன்பாக மாறும் - அதன் வரலாறு, அதன் கடந்த காலம் மற்றும் நிகழ்காலத்திற்காக ” / “Inculcating love for one's native land, native culture, native village or town is a very important task and there is no need to prove it. But how to cultivate this love? She starts small - with lo…

  17. "கந்தையா கனகம்மா" [உண்மைக் கதை] அத்தியடி, யாழ்ப்பாணத்தில் கந்தையா & கனகம்மா குடும்பம் ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்து வந்தாலும், 1971 ஆம் ஆண்டுகளுக்குப் பின் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தாலும், சிறுபான்மையினருக்கு எதிராக எடுக்கப்பட்ட முறையற்ற நடவடிக்கைகளாலும், அதைத்தொடர்ந்து 1983 தமிழருக்கு எதிரான ஜூலை கலவரத்தாலும் அவர்களின் ஒவ்வொரு உறுப்பினரும் பாதுகாப்புக்காகவும், அமைதியான சூழலுக்காகவும், பிள்ளைகளின் எதிர்காலத்துக்காகவும் மெல்ல மெல்ல இலங்கை நாட்டை விட்டு வெளிக்கிடத் தொடங்கினர். அப்படியான ஒரு கால கட்டத்தில் தான், குடும்பத் தலைவன் கந்தையாவும் திடீரென ஒரு நாள், 18/02/2000 இல் மாரடைப்பால் காலமாகிவிட்டார். இனக்கலவரம் பெரும் போராக வெடித்த காலம் அது…

    • 2 replies
    • 357 views
  18. "வறுமையின் சிறகினை அறுத்தெறி" அண்மையில் குண்டு தாக்குதலால் கால் இழந்த தந்தையையும், அயல் வீடுகளுக்கு சென்று துப்பரவு பணிகளில் ஈடுபடும் தாயையும், ஆறு பிள்ளைகளில் மூத்தவனாகவும் இன்று நான் இருக்கிறேன். எனக்கு வயது பதின்நான்கு எம் குடிசை "இல்எலி மடிந்த தொல்சுவர் வரைப்பின்" போல், உணவின்றி வருந்தி, மாறி மாறித் தோண்டி எலிகள் மடிந்த சுவருடையதாக இருக்கிறது. தாயோ "பாஅல் இன்மையின் பல்பாடு சுவைத்து முலைக்கோள் மறந்த புதல்வனொடு" என்பது போல பால் காணாது, பால் குடிப்பதையே நிறுத்திவிட்ட பிள்ளையுடன், என் கடைசி தம்பியுடன் வாடி நிற்கிறாள். …

  19. "யாழ் மீனவனின் துயரம்" "தரைமேல் பிறக்க வைத்தான்- எங்களைத் தண்ணீரில் பிழைக்க வைத்தான். கரைமேல் இருக்க வைத்தான்- பெண்களைக் கண்ணீரில் குளிக்க வைத்தான்." கி.மு. 2-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இலங்கையில் கண்டு எடுக்கப்பட்ட கல்வெட்டு ஒன்றில் முன்புறத்தில் இரு மீன் கோட்டுருவமும் பின்புறத்தில் "பரத திஸ" என்றும் காணப்படுகிறது. இதில் வரும் மீன் சின்னங்கள் மீன்பிடி தொழிலோடு பரததிஸ என்பவனுக்குள்ள தொடர்பைக் காட்டுகின்றது. இதில் முன்னொட்டுச் சொல்லாக வரும் பரத என்பது பரதவ சமூகத்தைக் குறிக்கலாம் என்று கருதப்படுகிறது. இவ்வாறு புராணங்களிலும் பண்டைய இலக்கியத்திலும் புகழ் பெற்ற பரதவ சமூகம், மருதம் வளம் பெற்று அதிகாரத்துடன் ஆட்சி செய்யும் இ…

  20. "காணாமல் போன கணவனை இன்னும் தேடுகிறாள்" இலங்கையின் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் 2009ஆம் ஆண்டு மே மாதம் நிறைவடைந்த நேரத்தில், பலர் பாதுகாப்பு பிரிவினரிடம் சரணடைந்தனர். இவ்வாறு சரணடைந்த ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளதாக வடக்கு கிழக்கு வாழ் தமிழர்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர். அது மட்டும் அல்ல, இலங்கையில் ஆட்கடத்தல்களும் காணாமல் போதலும் 1980 ஆம் ஆண்டிலிருந்தே ஏராளமான மக்கள் வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டிருந்தாலும், 1983 முதல் 2009-ம் ஆண்டு வரை நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தின் போதே மிகக் கூடுதலான மக்கள் காணாமல் ஆக்கப்பட்டனர். ஆனால் அது யுத்தம் மௌனித்த பின்பும் இன்னும் தொடருவது தான் ஆச்சரியமான விடயம். மேலும் உலக அளவில் இலங்கையில்தான் அதிகமா…

  21. "விழிமூடித் துயில்கின்ற வேங்கைகள்" இன்று கார்த்திகைத் திங்கள் இரண்டாம் கிழமை, முல்லைச்செல்வி தனது ஊன்றுகோலை எடுத்துக்கொண்டு, தனது வீட்டில் இருந்து வெளியே எட்டிப்பார்த்தாள். வானம் இருண்டுபோய் இருந்தது. குளிர் காற்றுப் பலமாக வீசிக்கொண்டிருந்தது. அவள் வாய் "தீபங்கள் அணையாலாம் தீ அழிவதில்லை தேசத்தை காத்த உயிர் ஓய்ந்து அழிவதில்லை" என்று முணுமுணுத்தபடி, காலத்தால் அழியாத மாவீரர் கல்லறை நோக்கிச் சென்றாள். அவள் பேருந்துவால் இறங்கி, நடக்கத் தொடங்கிய போது, அவளுடைய ஊன்றுகோல் சீரற்ற மண் பாதையில் உறுதியாக அழுத்தியது. ஒரு காலத்தில் மாவீரர் விழிமூடித் துயில் கொண்ட அமைதியான அந்த இடம், இப்போது, உடைத்து எறியப்பட்டு ஒரு மூலையில் குவிக்கப்பட்டிருந்தது. அன்று பல உயிர்களைப் பறித்த …

  22. "மே மாதத்தின் மத்தியில், அந்த சில நிமிடங்கள்" தேம்சு ஆற்றின் ஓரத்தில் ஒரு கல்லில் நான் இருந்தவண்ணம், இலண்டனில் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையின் வடக்கு முனையில் அமைந்திருக்கும் பிக் பென் (Big Ben) மணிக்கூட்டு கோபுரத்தின் நேரத்தை பார்த்தேன். அது மூன்று மணிக்கு இன்னும் அரை மணித்தியாலயம் என்று காட்டியது. சுமார் 100,000 ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்திய லண்டனில் பாலஸ்தீனத்திற்கு தங்கள் ஆதரவைக் காட்டவும் காசா மீது இஸ்ரேலின் குண்டுவீச்சை நிறுத்தக் கோரவும் "இப்போதே போர்நிறுத்தம்" மற்றும் "காசா மீது குண்டு வீச்சை நிறுத்து" என்று எழுதப்பட்ட பலகைகளை எதிர்ப்பாளர்கள் கையில் ஏந்தியவண்ணம், பாராளுமன்ற சதுக்கத்துக்கு திரண்டு வந்துகொண்டு இருந்தனர். எனக்கு அங்கு நடப்பதில் …

  23. "சோம்பல் தவிர்" "முயற்சியை தடுக்க கூடியவன் ஒருவனே! அவனே, சோம்பல்!!" ஒரு முறை ஆசிரியர் ஒருவர், சோம்பல் மாணவர்களை கொண்ட வகுப்பறைக்கு அவர்களை உற்சாகப் படுத்தும் நோக்கமுடன் போனார். எனவே அவர் அங்கு போனதும் மாணவர்களைப் பார்த்து ' நான் இந்த வகுப்பறையில் இருக்கும் அதி கூடிய சோம்பல் மாணவருக்கு ஒரு வெகுமதி கொடுக்கப் போகிறேன், யார் சிறந்த சோம்பல் மாணவர்களோ கை உயர்த்துங…

  24. "எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்!" யாழ்ப்பாணத்தின் மையப்பகுதியில், பசுமையான வயல்களுக்கும், மின்னும் நெல் வயல்களுக்கும் மத்தியில், தயாளன் என்ற எளிய விவசாயி வாழ்ந்து வந்தான். அவன் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல், கடுமையாக உழைத்தான். அவனது கையும் காலும் மண்ணின் வாசனையுடன் பழகியது மட்டுமே அல்ல, அவனது ஆன்மா கூட இயற்கையின் தாளங்களுடன் எதிரொலித்தது. தயாளன் என்றும் பழங்கால பழமொழியில் நம்பிக்கையுடையவன். அதிலும் "வினை விதைத்தவன், வினை அறுப்பான்; தினை விதைத்தவன், தினை அறுப்பான்" அவனுக்கு மிகவும் பிடித்த ஒன்று. மற்றது 'கைபடாத குழந்தையும், கால்படாத பூமியும் வளார்ச்சி பெறாது” கைபடாத குழந்தை என்பது, தாயின் அன்பு, உறவுகளின் பாசம். இவை இல்லா…

  25. "அவளும் அப்படியா?" ஒரு காலத்தில் தமிழ் சமூகத்துடன் செழித்தோங்கிய நகரமான திருகோணமலையின் வளைந்த தெருக்களில் நீண்ட நிழல்களை வீசியபடி சூரியன் வானத்தில் தாழ்ந்தது. இங்கு அமைந்துள்ள தொன்மையான சிவன் கோயிலான திருக்கோணேஸ்வரம் கி.பி ஏழாம் நூற்றாண்டில் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரின் பாடல் பெற்ற தளமும் ஆகும். மேலும் ஐந்தாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட மகாவம்சத்தில் / முப்பத்து ஏழாவது அத்தியாயம் / மகாசேன மன்னன் என்ற பகுதியில் [40,41], மன்னர் மணிஹிரா-விகாரையும் கட்டினார், மேலும் மூன்று விகாரையும் நிறுவினார். பிராமண கடவுள்கள் அமைந்த ஆலயங்களை அழித்தார் என்றும் அவை: கோகன்ன ஆலயம், எரகாவில்லை என்ற இடத்தில் இன்னும் ஒரு ஆலயம், மூன்றாவதாக, பிராமணர்களின் கிராமமான கலந்தனில் இருந்த ஆலயம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.