Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. “என் குழந்தைக்குக் கல்யாணம்!” ‘`என் மகள் அரித்ரா திருமண வயதை அடைந்துவிட்டாள். ‘என் அம்மா, அப்பா என் திருமணத்துக்கு வருவதற்கான சூழ்நிலை அமைந்தால் மட்டுமே நான் திருமணம் செய்துகொள்வேன்’ என்று பிடிவாதமாக இருக்கிறாள். நாங்களும் எங்களுக்கு பரோல் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம். அரசும் நீதிமன்றமும் எங்களுக்கு உதவிசெய்ய வேண்டுகிறோம். என் மகள் திருமணத்தை நல்லபடியாக நடத்த வேண்டும், உறவினர்கள் அனைவரையும் ஒருசேரப் பார்க்க வேண்டும்’’ - நளினியின் வார்த்தைகளில் தவிப்பு மிகுந்திருக்கிறது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனைக் கைதியான நளினி, 26 வருடங்களாகச் சிறையிலிருக்கிறார். 21 வயதில் சிறைக்குச் சென்றவருக்கு இப்போது 47 வயதாகிறது. தன் மகளின் திருமண…

  2. தேர்தல் செலவு விவகாரம் தினகரன் பதவிக்கு சிக்கல் ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதியில், ஓட்டுக்கு, 10 ஆயிரம் ரூபாய் தருவதாகக் கூறி, 20 ரூபாய், 'டோக்கன்' வழங்கியதாக, நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதால், தினகரன் எம்.எல்.ஏ., பதவிக்கு சிக்கல் ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், சுயேச்சையாக போட்டியிட்ட தினகரன், தேர்தல் பிரசாரத்தின் போது,பணத்தை வாரி இறைத்தார். தகுதி நீக்கம் அவர் பிரசாரத்திற்கு, எவ்வளவு பேர் வந்தனர்; அவர்களுக்கு எவ்வளவு பணம் வழங்கப்பட்டது என்ற விபரங்களை, தேர்தல் பார்வையாளர்கள், ஆதாரத்துடன் சேகரித்துள்ளனர். அவற்…

  3. மிஸ்டர் கழுகு: 2018- இனி அரசியல் இருவர் கையில்! பிரமாண்டமான கழுகு ப்ளோ-அப் அச்சிட்ட காலண்டருடன் உள்ளே நுழைந்தார் கழுகார். கைகுலுக்கி, ‘‘உமக்கும் ஜூ.வி வாசகர்களுக்கும் அட்வான்ஸ் புத்தாண்டு வாழ்த்துகள்’’ என்றார். அவர் முன்கூட்டியே சொல்லியிருந்த தலைப்பை வைத்து டிசைன் செய்திருந்த ஜூ.வி அட்டையைக் காண்பித்தோம். ‘‘ஸ்டாலினுக்கும் டி.டி.வி.தினகரனுக்கும் முக்கியமான ஆண்டாக புத்தாண்டு இருக்கப்போகிறது. ஜெயலலிதா மறைவு, கருணாநிதி உடல்நலமின்றி வீட்டுக்குள் இருப்பது போன்ற காரணங்களால், தமிழக அரசியல் 2017-ல் வித்தியாசமாக இருந்தது. இதுவரை அரசியல் பேசாத பலரும் அரசியல் பேசினார்கள். திடீர் தலைவர்கள் உருவானார்கள். ஆனால், 2018-ல் பழையபடி இருதுருவ அரசியலுக்குத் தமி…

  4. சசிகலா உறவினர்களுக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறை சோதனை சசிகலா உறவினர்களுக்கு சொந்தமான இடங்களில் 2வது முறையாக வருமானவரித்துறை புதன்கிழமை சோதனை நடத்தியது. படப்பையில் உள்ள மிடாஸ் மற்றும் அதன் அருகில் உள்ள ஸ்ரீசாய் எண்டர்பிரைசஸ், கோவை மயிலேரிபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரி உள்ளிட்ட 6 இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடத்தியது. முன்னதாக, சசிகலாவின் உறவினர்கள், ஆதரவாளர்கள் வீடுகளில் வருமான வரித் துறையினர் நவம்பர் 9,10 ஆகிய தேதிகளில் சோதனை நடத்தினர். ஒரே நேரத்தில் தமிழகம், புதுச்சேரி, கர்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் 2…

  5. ‘உங்களைக் காலி செய்துவிடுவார் மோடி’ என்றார் குருமூர்த்தி! - வெளிச்சத்துக்கு வருகிறதா வில்லங்க வீடியோ? ‘திறனற்றவர்கள்' என ஆடிட்டர் குருமூர்த்தி கூறிய வார்த்தைகளை வைத்துக் கொதித்துக்கொண்டிருக்கிறார்கள் தமிழக அமைச்சர்கள். 'அவர் படித்த முட்டாள்' என அமைச்சர் ஜெயக்குமார் கூற, 'திறனற்றவர்கள் என நான் கூறிய வார்த்தை வேறு அர்த்தத்தைக் கொடுத்துவிட்டது' என விளக்கம் கொடுத்திருக்கிறார் குருமூர்த்தி. 'ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு வலுவாகக் கால் ஊன்ற நினைத்த பா.ஜ.கவுக்கு தினகரனின் வெற்றி கூடுதல் கோபத்தை வரவழைத்திருக்கிறது. அதைத்தான் வேறு வடிவில் வெளிப்படுத்துகிறார் குருமூர்த்தி' என்கின்றனர் அரசியல் வட்டாரத்தில். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் துணை…

  6. #LiveUpdates 2ஜி தீர்ப்பு - கனிமொழி, ராசா நீதிமன்றம் வந்தடைந்தனர் #2GScamVerdict Credits : ANI 2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் டெல்லி சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, தி.மு.க மாநிலங்களவை எம்.பி., கனிமொழி உள்ளிட்டோர் டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் வந்தடைந்தனர். சுப்பிரமணியன் சுவாமியும் நீதிமன்றம் வந்தடைந்தார். பாட்டியாலா நீதிமன்ற வளாகம் பரபரப்பாகக் காணப்படுகிறது. நீதிமன்ற வளாகத்தில் தி.மு.க தொண்டர்களும் குவிந்துள்ளனர். காலை 10.30 மணியளவில் தீர்ப்பு அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூ…

  7. அடுத்த மாதம் சட்டசபை ஆளும் கட்சிக்கு சவால் தமிழக சட்டசபை கூட்டம், ஜனவரி இரண்டாவது வாரத்தில் நடைபெற உள்ளது. புத்தாண்டில் நடைபெறும், சட்டசபை கூட்டம், ஆளும் கட்சிக்கு பெரும் சவாலாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக சட்டசபை கூட்டம், கடைசியாக, ஜூனில் துவங்கி, ஜூலையில் நிறைவு பெற்றது. அப்போது, மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. ஆறு மாதங்களுக்கு ஒரு முறை, சட்டசபை கூட்டப்பட வேண்டும். எனவே, ஜனவரி, 8ல், சட்டசபை துவங்க உள்ளதாக கூறப்படுகிறது. புத்தாண்டின் முதல் கூட்டம் என்பதால், அன்று, சட்டசபையில் கவர்னர், பன்வாரிலால் புரோஹித் உரையாற்றுவார். முதல் முறை அதன்பின், கவர்னர…

  8. `யார் இந்தக் குருமூர்த்தி?' - கொதித்தெழுந்த ஜெயக்குமார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை ட்விட்டரில் கடுமையாக விமர்சித்தார் ஆடிட்டர் குருமூர்த்தி. இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், குருமூர்த்தியைக் கடுமையாகத் தாக்கிப் பேசியுள்ளார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியான அ.தி.மு.க சுயேச்சை வேட்பாளரான தினகரனிடம் தோல்வியடைந்தது. இதையடுத்து கூடிய அ.தி.மு.க-வின் மூத்த நிர்வாகிகள் கட்சித் தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினர். அப்போது தினகரனின் வெற்றிக்குத் துணையாக இருந்த நாஞ்சில் சம்பத், சி.ஆர்.சரஸ்வதி உள்ளிட்ட 5 பேர் கட்சியிலிருந்து நீக…

  9. ஜெயலலிதா பாதி... கருணாநிதி பாதி..! - இது தினகரன் ஸ்டைல்? டிடிவி தினகரன் | கோப்புப் படம். மழை விட்டும் தூவானம் விடவில்லை என்பது சத்திய வார்த்தை. மழைக்கு மட்டுமில்லை. இடி, மின்னல், புயல் என சகலத்துக்கும் பொருந்தும். இவற்றுக்கு மட்டுமா? தேர்தல் தொடங்கி, பிரச்சாரம் நடந்து, வெற்றியும் அறிவிக்கப்பட்டுவிட்ட ஆர்.கே.நகர் அதகளம்... அரசியல் அரங்கில்... புதிய அத்தியாயங்களை எழுதும் போல் தெரிகிறது. இதோ... ரிசல்ட் வந்த மறுநாளே... அதிமுகவினர் வெற்றிவேல், தங்கதமிழ்செல்வனின் கட்சிப் பதவிகளைப் பறித்துவிட்டதாக அறிவித்துவிட்டனர். ’என்னப்பா இது... இரட்டை இலை நமக்குக் கிடைச்சும் எதுவுமே நடக்கலையே... கனியலை…

  10. ஆர்.கே.நகர் யாருக்கு? திமுக வேட்பாளர் மருதுகணேஷ், சுயேச்சை வேட்பாளர் டிடிவி தினகரன், அதிமுக வேட்பாளர் மதுசூதனன் (இடமிருந்து வலமாக) சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (டிச.24) காலை சரியாக 8 மணியளவில் தொடங்கியது. 14 மேஜைகளில் மொத்தம் 19 சுற்றுகளாக இந்த வாக்கு எண்ணிக்கை நடத்தப்படுகிறது. 8.10 AM: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஒரே ஒரு தபால் வாக்கு பதிவானது. அந்த தபால் வாக்கு திமுகவுக்கு பதிவாகியுள்ளது. எதிர்பார்ப்பை ஏற்படுத்திய தேர்தல்.. தமிழக அரசியலில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஆர்.கே.நகர் தொகுதி இடைத்த…

  11. அதிமுகவிலிருந்து கலைராஜன், நாஞ்சில் சம்பத், புகழேந்தி, சி.ஆர்.சரஸ்வதி நீக்கம் கலைராஜன், நாஞ்சில் சம்பத், புகழேந்தி, சி.ஆர்.சரஸ்வதி உள்ளிட்டோர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். அதிமுக அவசர ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு அறிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது. ஆர்.கே.நகர் தேர்தல் தோல்விக்கு பின்னர் அதிமுகவின் அவசர ஆலோசனைக்குழு கூட்டம் சென்னை ராயபேட்டை கட்சி அலுவலகத்தில் கூட்டப்பட்டது. இதில் அதிமுக முக்கிய நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் கலந்துக்கொண்டனர். கூட்டத்தின் முடிவில் கட்சியிலிருந்து சிலரையும், மாவட்டச்செயலாளர் பொறுப்பிலிருந்து சிலரையும் விடுவித்துள்ளனர். அதிமுக தல…

  12. முதல்வர் மாற்றமா? அ.தி.மு.க.,வில் பரபரப்பு தினகரன் வெற்றி பெற்றதால், முதல்வர் மாற்றம் வரலாம் என்ற பேச்சு, அ.தி.மு.க.,வில் எழுந்துள்ளது. சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், சுயேச்சை வேட்பாளர், தினகரன், அபார வெற்றி பெற்றுள்ளார். 'மூன்று மாதங்களில், ஆட்சி கவிழும்' என, வெற்றிக்கு பின், அவர் தெரிவித்துள்ளார். அவரது ஆதரவு, முன்னாள், எம்.எல்.ஏ., தங்கதமிழ்செல்வன், 'எங்கள் பக்கம், 60 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர்' என்றும் கூறியுள்ளார்.இது, அ.தி.மு.க.,வில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து, அ.தி.மு.க., வினர் கூறியதாவது: தினகரன் தரப்பினர் கூறுவது போல், அ.தி.மு.க., - எம்.எல்…

  13. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்! - களமிறங்கும் உள்ளூர்க்காரர் மருது கணேஷ் சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதிக்கு வரும் டிசம்பர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தொகுதி என்பதால் இந்த இடைத்தேர்தல் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. முன்னர் ஏப்ரல் 12-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதனிடையே, வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்யப்பட்டதாக வந்த புகாரைத் தொடர்ந்து, இடைத்தேர்தலை ரத்துசெய்வதாகக் கடந்த ஏப்ரல் 10-ம் தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஏழு மாதங்கள் முடிந்த நிலையில், டிசம்பர் 21-ம் தேதி ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இரட்டை இலைய…

  14. ஜெ., மரணம்: சசிகலாவுக்கு விசாரணை கமிஷன் 'சம்மன்' 'ஜெ., மரணம் தொடர்பான ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களை, 15 நாட்களுக்குள், விசாரணை கமிஷனில் ஒப்படைக்க வேண்டும்' என, சசிகலாவுக்கு, 'சம்மன்' அனுப்பப்பட்டு உள்ளது. ஜெ., மரணத்தில், பல்வேறு சந்தேகங்கள் உள்ளன. சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில், அவர் இருந்த போது, யாரும் பார்க்க அனுமதிக்கப்படவில்லை. அமைச்சர்களும், ஜெ.,வை சந்திக்கவில்லை. ஜெ., சிகிச்சையை கண்காணிக்க நியமிக்கப்பட்ட, அரசு மருத்துவர்களும், ஜெ.,வை பார்க்கவில்லை. இதனால், ஜெ.,க்கு அளிக்கப்பட்ட சிகிச்சை அனைத்தும், சசிகலா கண்காணிப்பில் தான் நடந்துள்ளன. அதை உறுதிப்படுத்தும் வகையில், சிகிச்சையில் இருந…

  15. மிஸ்டர் கழுகு: தி.மு.க-வுக்கு சைனி பெயர்ச்சி கையில் ‘முரசொலி’யுடன் கழுகார் நம்முன் ஆஜரானார். 2ஜி வழக்கின் தீர்ப்பை வைத்து 22-ம் தேதி, வெளியான ‘முரசொலி’யில், ‘வாய்மை வென்றது! பொய்மை புதைக்குழிக்குச் சென்றது’ என்று தலைப்புச்செய்தி வெளியிடப்பட்டது. ‘அன்றே சொன்னார்’ என்று கருணாநிதியின் கையெழுத்தில் ஒரு குறிப்பும் இருந்தது. ‘அநீதி வீழும், அறம் வெல்லும்’ என்று எழுதி மு.க. என்று கருணாநிதி அதில் கையெழுத்துப் போட்டுள்ளார். ‘2ஜி வழக்கு ஆரம்பித்தபோதே தலைவர் கலைஞர் அவர்கள் சொன்ன கருத்து’ என்று அதில் எழுதப்பட்டிருந்தது.அவை அனைத்தையும் நம்மிடம் காட்டிய கழுகார், அது பற்றிய மேலும் பல செய்திகளை நம்மிடம் கொட்டினார். ‘‘தி.மு.க-வைப் பொறுத்தவரை இந்த சனிப்பெயர்…

  16. ரஜனிகாந் + அரசியல் ஆலோசகர்? தமிழருவி மணியன் + ரசிகர் சந்திப்பு + நிபந்தனைகள் = அரசியல் பிரவேச அறிவிப்பு – என்ன நடக்குது? டிசம்பர் 31ம் திகதி நடிகர் ரஜினிகாந்த் அரசியல் அறிவிப்பை வெளியிடவுள்ளதாக காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் டிசம்பர் 26 முதல் 31 வரை சென்னையில் தனது ரசிகர்களை சந்திக்கவுள்ளார். இந்த சந்திப்பை ஒட்டி தமது நண்பரும் அரசியல் ஆலோசகருமான தமிழருவி மணியனுடன் ரஜினி இன்று தனது போயஸ் கார்டன் இல்லத்தில் ஆலோசனை நடத்தியுள்ளார். குறித்த ஆலோசனையின் பின்னர் தந்தி தொலைக்காட்சிக்கு வழங்கிய தகவலிலேயே தமிழருவி மணியன் ரஜினி டிசம்பர் 31ல் அரசியல் அறிவிப்பை வெளியிடுவார் என்று கூறியுள்…

  17. ஜெ. உடலை எடுத்து டிஎன்ஏ டெஸ்ட் செய்தால் என்ன.. ஹைகோர்ட் அதிரடி கேள்வி சென்னை: ஜெயலலிதா வாரிசு என கூறும் வழக்கில் அம்ருதாவிடம் ஏன் டிஎன்ஏ சோதனை செய்யக்கூடாது? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. ஜெயலலிதாவுக்கு பிறந்த குழந்தை தான்தான் எனக்கூறி பெங்களூரை சேர்ந்த மஞ்சுளா என்கிற அம்ருதா அண்மையில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ஜெயலலிதாவின் உடலை தோன்டியெடுத்து பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார். ஆனால் அவரது மனுவை நிராகரித்த சுப்ரீம்கோர்ட் மாநில உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு அம்ருதாவுக்கு அறிவுறுத்தியது. இதைத்தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அம்ருதா மேல்முறையீடு செய்துள்ளார். டிஎன்ஏ சோதன…

  18. ' ஆர்.கே.நகரில் வென்றாலும் சந்திக்க வர வேண்டாம்!' - தினகரனுக்குத் தடை போட்ட சசிகலா #VikatanExclusive Chennai: தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் வெளியிட்ட 20 விநாடி காட்சிகளை முன்வைத்துக் கொந்தளித்துக் கொண்டிருக்கிறார்கள் மன்னார்குடி வாரிசுகள். ' சத்தியத்தை மீறி வீடியோவை வெளியிட்டுவிட்டதால் தினகரன்மீது கடும் கோபத்தில் இருக்கிறார் சசிகலா. சிறையில் சசிகலாவை சந்திக்க விரும்பிய தினகரனுக்கும் விவேக் ஜெயராமனுக்கும் அனுமதி கிடைக்கவில்லை' என்கிறார் கார்டன் நிர்வாகி ஒருவர். அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோக்களில் ஒன்றை நேற்று முன்தினம் வெளியிட்டார் வெற்றிவேல். இந்த வீடியோவில், ஜெயலலிதா பழச்சாறு அருந்திக்கொண்டு தொ…

  19. ஜெயலலிதா சிகிச்சைபெறும் வீடியோ! - தினகரன் தரப்பு வெளியிட்டது ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோவை டி.டி.வி.தினகரன்தரப்பு வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெற்றிவேல் வெளியிட்டுள்ள வீடியோவில், ஜெயலலிதா பழச்சாறு அருந்திக்கொண்டே டி.வி பார்க்கிறார். தற்போது இந்த வீடியோவை தனியார் தொலைக்காட்சிகள் வெளியிட்டுவருகின்றன. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியது. ஜெயலலிதா மரணம்குறித்து விசாரிக்க ஓய்வுப்பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு, விசாரணையும் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. மற்றொருபுறம் ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே.நகரில் நாளை இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இந்தச் சூழலில் டி…

  20. மறைந்த கவிஞர் இன்குலாப்புக்கு சாகித்ய அகாடமி விருது; யூமா வாசுகிக்கு மொழிபெயர்ப்புக்கான விருது மறைந்த கவிஞர் இன்குலாப் எழுதிய 'காந்தள் நாட்கள்' கவிதைத் தொகுப்புக்காக 2017ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சாகித்ய அகாடெமி எனும் மத்திய அரசின் இலக்கிய அமைப்பு வருடந்தோறும் இலக்கியத்தில் சாதனை புரிந்தவர்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது. 2017ஆம் ஆண்டுக்கான தமிழ்ப் படைப்பாளிகளுக்கான சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கவிஞர் இன்குலாப் மறைந்து ஓராண்டு ஆனநிலையில் 'காந்தள் நாட்கள்' கவிதை நூலுக்…

  21. தமிழக அரசியல் அம்மாவை எப்படியெல்லாம் புகழ்கிறார்கள் ? மனப்பாடம் செய்யமுடியாமல் படித்து காட்டுகிறார் திருமாவேலன் . கருணாநிதி சட்டசபைக்கு வந்துவிட்டால் நிர்மலா பெரியசாமி சொன்னது போல நடந்தாலும் நடக்கும் . ஆனால் இந்த சட்டசபையில் ஏதோ ஒன்னு மிஸ் ஆகுதே ? தெரிந்துக்கொள்ள ..

  22. மிஸ்டர் கழுகு: ரயில் பயணங்களில்... தடக் தடக் போலீஸ்! ‘‘கோவையில் அதிகாரிகளைக் கூப்பிட்டு ஆய்வுக்கூட்டம் நடத்தியதற்கே தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித்மீது எல்லோரும் பாய்ந்தார்கள். இதோ... கன்னியாகுமரி, கடலூர், சேலம் எனத் தன் பயணத்தை கவர்னர் தொடர்கிறாரே... யாரால் என்ன செய்ய முடியும்?” என்ற கேள்வியைப் போட்டவாறு நம்முன் ஆஜரானார் கழுகார். ‘‘எதிர்க்கட்சிகள் கொந்தளிக்க ஆரம்பித்துள்ளனவே... தி.மு.க கறுப்புக்கொடி காட்டிப் போராட்டம் நடத்துகிறதே?” என்றோம். ‘‘தமிழகத் திட்டங்களை ஆய்வுசெய்ய கவர்னர் போகலாமா, கூடாதா என்பதெல்லாம் இருக்கட்டும். கவர்னரின் பயணத்தால் ஏற்படும் அரசியல் காரணங்கள் அல்லாத இதரக் குழப்பங்களைச் சொல்கிறேன். கேளும்!” ‘‘சொல்லு…

  23. புதுடில்லி:காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது, '2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த ஊழல் தொடர்பான வழக்கின் தீர்ப்பு தேதியை, டில்லி, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்ற நீதிபதி, ஓ.பி.சைனி இன்று வெளியிடுகிறார். கடந்த, 10 ஆண்டுகளாக பரபரப்பு ஏற்படுத்திய வழக்கில் தீர்ப்பு தேதி வெளியாவதால், அரசியல் திருப்பம் நிகழும் என, தி.மு.க.,வினர் கலக்கம் அடைந்துள்ளனர்.மத்தியில் காங்., தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது, 2007 முதல், 2009 வரை மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சராக, தி.மு.க.,வைச் சேர்ந்த, ராஜா இருந்தார். அப்போது, செல்போன் சேவைகளுக்கான, '2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்வதில் மோசடி நடந்த…

  24. நாடே எதிர்பார்க்கும் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை முறைகேடு வழக்கில் நாளை தீர்ப்பு.டெல்லி: நாடே மிகவும் எதிர்பார்க்கும் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை முறைகேடு வழக்கில் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓபி ஷைனி நாளை தீர்ப்பளிக்க உள்ளார். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக திமுகவின் ஆ. ராசா பதவி வகித்த காலத்தில் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டதில் முறைகேடு நடைபெற்றது என்பது சிபிஐ தொடர்ந்த வழக்குகள். இந்த வழக்கில் ஆ.ராசா, திமுக தலைவர் கருணாநிதி மகள் கனிமொழி உள்ளிட்டோர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்குகளின் விசாரணை கடந்த 6 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இவ்வழக…

  25. இராமேஸ்வரத்தில் கரையொதுங்கிய படகால் பரபரப்பு இராமேஸ்வரம் அருகே சேராங்கோட்டை கடற்கரைப் பகுதியில் இலங்கை பைபர் படகு ஆளில்லாத நிலையில் கரை ஒதுங்கியமை குறித்து பாதுகாப்பு வட்டாரங்கள் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இராமேஸ்வரம் அருகே சேராங்கோட்டை கடற்கரைப் பகுதியில் இன்று அதிகாலை இலங்கை பைபர் படகு ஆளில்லாத நிலையில் கரை ஒதுங்கியதாக அப்பகுதி மீனவர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியிருந்தனர். இதனையடுத்து மாவட்ட பொலிஸார், மெரைன் பொலிஸார் மற்றும் உளவுத்துறை என பாதுகாப்பு வட்டாரங்கள் சம்பவ இடத்திற்கு சென்று கரை ஒதுங்கிய படகை மீட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட பைபர் படகு தலைமன்னாரை சேர்ந்தது எனத் தெரியவந்துள்ள நிலையில், மர்மமான முறையில…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.