Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ஜெயலலிதா மரணம்: வரும் 25-ம் தேதி தொடங்குகிறது விசாரணை! மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக, ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம், வரும் 25-ம் தேதி விசாரணையைத் தொடங்க உள்ளது. ஜெயலலிதா, உடல்நலக் குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் , கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் 75 நாள்கள் சிகிச்சைபெற்றுவந்த அவர், டிசம்பர் 5-ம் தேதி உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்தது. அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் மர்மம் இருப்பதாகவும் அதுகுறித்து நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் எழுந்தன. ஜெயலலிதா மறைவுகுறித்து விச…

  2. தேர்தல் ஆணையம், எங்களுக்கு சாதகமான தீர்ப்பையே வழங்கியுள்ளது! - முதல்வர் பளீச் Chennai: பெரும்பான்மை உறுப்பினர்கள் எங்கள் பக்கம் இருப்பதால், 'இரட்டை இலை' சின்னம் விவகாரத்தில், தேர்தல் ஆணையம் தங்களுக்கு சாதகமான தீர்ப்பையே அளித்துள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். சென்னையில், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்ட ஆய்வுக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ’பெரும்பான்மையான நிர்வாகிகளின் ஆதரவு அடிப்படையில…

  3. நித்யானந்தா - ரஞ்சிதா வீடியோ உண்மையே: டெல்லி தடயவியல் ஆய்வு மையம் தகவல் நித்யானந்தா | கோப்புப் படம் சர்ச்சைக்குரிய சாமியார் நித்யானந்தாவும், நடிகை ரஞ்சிதாவும் படுக்கையறையில் இருப்பது போல வெளியான வீடியோ உண்மைதான் என டெல்லி தடயவியல் ஆய்வு மையம் உறுதி செய்துள்ளது. கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு தியான பீடம் ஆசிரமத்தின் சாமியார் நித்யானந்தா, நடிகை ரஞ்சிதாவுடன் படுக்கை அறையில் ஆபாசமாக இருப்பது போன்ற வீடியோ ஊடகங்களில் வெளியானது. நித்யானந்தாவின் சீடர் லெனின் கருப்பன் வெளியிட்ட இந்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து பிடதி போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இது தொடர்பான வழக்கு ராம்நகர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது ந…

  4. அரசியலுக்கு வருவதற்கான அவசரம் தற்போது இல்லை: நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி சென்னை: அரசியலில் நுழைவதற்கு தற்போது எந்த அவசரமும் இல்லை என்று சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். கடந்த மே மாதம் தனது ரசிகர்களை சந்தித்து ரஜினிகாந்த் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அப்போது ரசிகர்கள் மத்தியில் உரையாற்றும் போது, தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை. நான் அரசியலுக்கு வருவது "கடவுள் விருப்பம்" என்றால் அரசியலின் பாதையை அவர் தேர்ந்தெடுப்பார் என்றார். "ஒவ்வொரு கட்டத்திலும் வாழ்க்கையில் நாம் என்ன செய்ய வேண்டும் என்று கடவுள் முடிவு செய்கிறார். இப்போது, அவர் என்னை ஒரு நடிகர் ஆக வ…

  5. சசிகலா குடும்பத்தினர் சரண் அடைவதைத் தவிர வேறு வழியில்லை! சசிகலா குடும்பத்தினரிடம் நடத்தப்பட்ட ஐடி ரெய்டில் அடுத்த கட்ட நகர்வுகள் நடந்து கொண்டு இருக்கின்றன. வருமான வரி புலனாய்வு துறையின் வேலை ரெய்டு நடத்துவது மட்டும் அல்ல. ரெய்டுக்கு உள்ளானவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரிப்பதும் அவர்களின் முக்கியமான பணி. நம்பிக்கை என்றால் பூங்குன்றன் 'ஆபரேஷன் க்ளீன் மணி' என்ற பெயரில் தமிழகத்தில் வருமானவரித்துறை நடத்திய மெகா ரெய்டு அடுத்த கட்டத் திருப்பத்தை நோக்கி நகர்ந்திருக்கிறது. சசிகலாவால் நியமிக்கப்பட்ட ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் வீட்டில் ரெய்டு நடத்தியதையும், அவரிடம் விசாரணை நடத்தியதையும்தான் வருமான வரித்துறை புலனாய்வுப் பிரிவ…

  6. விவேக் குவித்த சொத்துகள்; மலைத்து போன வருமான வரித்துறை..! சசிகலாவின் அண்ணி இளவரசியின் மகன் விவேக் குவித்துள்ள சொத்துகள்; கறுப்புப்பணம் வெள்ளையாக்கப்பட்டது போன்றவை குறித்து சோதனையில் ஈடுபட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் திகைத்துப்போனதாகக் கூறப்படுகிறது. விவேக்கின் அலுவலகம் மற்றும் வேளச்சேரியில் உள்ள பீனிக்ஸ் வளாகத்தில் உள்ள ஜாஸ் சினிமாஸ் வளாகத்தில் அதிகாரிகள் நடத்திவரும் சோதனையின்போது, தோண்டத்தோண்ட சொத்துகள் வாங்கிக் குவித்துள்ள விவரங்கள்; பினாமிகளின் பட்டியல் கிடைத்துள்ளன. அதை வைத்துக்கொண்டு விவேக்கிடம் கடந்த இரண்டு நாள்களாக துருவித்துருவி வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். சசிகலாவின் அண்ணன் ஜெயராமன் - இளவரசி தம்…

  7. மிஸ்டர் கழுகு: சசிகலாவைச் சிக்க வைக்கும் ஜெ. பென் டிரைவ்! கழுகார் உள்ளே நுழைந்ததும், ‘‘போயஸ் கார்டன் வீட்டில் வருமானவரித் துறை நடத்திய ரெய்டின் அடுத்தகட்டம் என்ன?’’ என்ற கேள்வியை அவர் முன் வைத்து, அவரது செய்திக் குவியலை உதிர்க்கச் சொன்னோம். ‘‘போயஸ் கார்டன் வீட்டுக்குள் ரெய்டு போவார்கள் என்று சசிகலா குடும்பத்தினர் மட்டுமல்ல, எடப்பாடி தரப்பும் எதிர்பார்க்கவில்லை. இரண்டு தரப்புக்குமே அதிர்ச்சியான விஷயம்தான் அது. அன்று இரவு ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனை, ‘உங்கள் இடத்துக்குப் போகலாம், வாருங்கள்’ என்று பொத்தாம்பொதுவாகச் சொல்லி அழைத்திருக்கிறார்கள் வருமானவரித் துறை அதிகாரிகள். அவரும் கிளம்பிச் சென்றுள்ளார். ஒரு டெம்போ டிராவலர், ஐந்து க…

  8. தமிழ்நாட்டில், கூடுதலாக 70 மணல் குவாரிகளை தொடங்க தமிழக அரசு முடிவு. தமிழகத்தில் கூடுதலாக 70 மணல் குவாரிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. மணல் தட்டுப்பாட்டை போக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக பெரிய அளவில் மணல் தட்டுப்பாடு நிலவி வருகிறது. வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மணல்களின் அளவும் குறைந்து இருக்கிறது.இதனால் இங்கு நிலவும் மணல் தட்டுப்பாடு குறித்து ஆலோசணை செய்வதற்காக தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர். 8 மாவட்டத்தை சேர்ந்த ஆட்சியர்கள், 5 மாவ…

  9. 'சசி கும்பலின் தில்லாலங்கடி வேலைகளை, 'ஸ்லீப்பர் செல்'கள், 'போட்டு'க் கொடுத்ததால் தான், ஜெயலலிதா வசித்த, போயஸ் கார்டன் இல்லத்தில் சோதனை நடத்தப்பட்டது' என்ற, பகீர் தகவலை, வருமான வரித்துறையினர் வெளியிட்டுள்ளனர். கோடிக்கணக்கில் குவித்த சொத்துகளின், அசல் ஆவணங்கள் அங்கு இருந்ததால், சோதனை என்ற தகவல் பரவியதும், பின்னங்கால் பிடரியில் பட, இளவரசியின் மகன் விவேக், அங்கு ஓடி வந்துள்ளார். ஜெயலலிதாவின் அறை உட்பட, சில அறைகளில் சோதனை நடத்தக் கூடாது என, அவர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. அதேநேரத்தில், வருமான வரித்துறையினர் அடுத்து எங்கு, சோதனை நடத்தப் போகின்றனரோ என்ற கலக்கத்தில், சசிகலாவின் மன்னார்குடி உறவுகள் உள்ளன. சசிகலா கும்பலைச் சேர்ந்தவர்கள…

  10. ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் இடையே கருத்து வேறுபாடு! உறுதிப்படுத்தும் மைத்ரேயன் அணிகள் இணைந்து மூன்று மாதங்கள் கடந்தபிறகும் மனங்கள் இணையவில்லை என்கிறரீதியில் அ.தி.மு.க மாநிலங்களவை எம்.பி., மைத்ரேயன் கருத்து தெரிவித்துள்ளார். ஜெயலலிதா மறைவுக்குப் பின், அ.தி.மு.க தலைமைக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் போர்க்கொடி உயர்த்தினார். இதனால், அ.தி.மு.க அணிகளாகச் சிதறியது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிவிசாரணை, சசிகலா குடும்பத்தை ஒதுக்குவது என பன்னீர்செல்வத்தின் இரண்டு கோரிக்கைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணியினர் நிறைவேற்ற, ஏறக்குறைய 6 மாதங்களுக்குப் பின்னர் கடந்த ஆகஸ்ட்டில் ஈ.பி.எஸ். - ஓ.பி.எஸ். அணிகள் இணைந்தன. முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்ச…

  11. தீவிர அரசியலில் ஈடுபடுவேன்: அழகிரி Colors: சென்னை: ''தி.மு.க., தலைவர் கருணாநிதி அழைத்தால், தீவிர அரசியலில் ஈடுபடுவேன்,'' என, முன்னாள் மத்திய அமைச்சர், அழகிரி கூறினார்.…

  12. இந்தியில் பேசக் கூறி தமிழக மீனவர்கள் மீது இந்தியக் கடலோரக்காவல் படை தாக்குதல் ராமேஸ்வரம் மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய இந்திய கடலோர காவல் படையினர் மீனவர்களை இந்தியில் பேச சொல்லி தாக்குதல் நடத்தியிருப்பது மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று காலை ராமேஸ்வரத்திலிருந்து ஜெபமாலைபிச்சை என்பவருக்கு சொந்தமான படகில் அந்தோணிபிச்சை, சூசையா, நிஷாந்த், சாண்ட்ரோ, தேவராஜன், ஜான்சன் ஆகிய 6 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றுள்ளனர். இவர்கள் பாரம்பரியமாக மீன் பிடிக்கும் பகுதியில் மீன்பிடிக்க வலைகளை பாய்ச்சிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் கடலில் பாய்ச்சியிருந்த வலைகளை அறுத்து சேதப்படுத்தியதுடன் மீனவர்களின் படகுகளையும் விரட…

  13. ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை! - 1 எஸ்.கிருபாகரன் புதிய தொடர் அரை நூற்றாண்டு காலம் திரையுலகிலும் அரசியலிலும் மின்னிய ஜெயலலிதா என்ற நட்சத்திரம் மறைந்துவிட்டது. ஆண்களே ஆதிக்கம் செலுத்திய துறைகளில் ஒரு பெண் பரபரப்பாக இயங்கி, வெற்றிக்கோட்டையில் பெருமிதமாக வீற்றிருந்தார் என்பது பெரும் வியப்பு. துணிச்சல், மிடுக்கு, யாருக்கும் எதற்கும் வளைந்து கொடுக்காத கம்பீரம்... இதுதான் ஜெயலலிதா! புறம் பேசமாட்டார்... பரபரப்புப் பத்திரிகையாளர் களிடம் பத்தடி தள்ளியே இருப்பார்... ஷாட் முடிந்த அடுத்த நொடியே மேக்கப் கலைத்து, கார் நிற்கும் போர்டிகோவை நோக்கி அவர் கால்கள் விரையும். இதுதான் நடிகை ஜெயலலிதா! 1968-ம் ஆண்டு, வார இதழ் ஒன்றுக்கு அவர் அளி…

  14. சந்தியா, எம்.ஜி.ஆர், சோ, ஜெயலலிதா... இது போயஸ் கார்டன் வீட்டின் கதை! தமிழகத்தில் கடந்த சில நாள்களாக நடந்துவரும் வருமானவரித்துறை ரெய்டு இறுதிகட்டத்தை எட்டியுள்ளதாக தெரிகிறது. சசிகலா குடும்பத்தினர் மற்றும் அவரது நண்பர்கள் இல்லங்களில் நடத்தப்பட்ட வருமானவரிச் சோதனை, அதிர்ச்சிகரமாக இப்போது ஜெயலலிதா வாழ்ந்து மறைந்த போயஸ் கார்டன் இல்லத்தையும் தொட்டிருக்கிறது. மனிதர்கள் வாழ்வில் வீடு என்பது மனித உறவுகளுக்கு ஈடான ஓர் பந்தம் கொண்டது. ரத்தமும் சதையுமாக மனிதர்கள் எப்படி உணர்வுபூர்வமானவர்களோ அப்படி செங்கற்கள், சிமென்டினால் கட்டப்பட்ட வீடுகளுக்கும் அந்த மனிதர்களோடு அவர்கள் வாழும் காலத்திலும் அதன்பின்னும் நெருக்கமான ஒரு பந்தம் இருப்பதுண்…

  15. பவரியா கொள்ளையர்களைப் பிடித்தது எப்படி? 2005ல் தமிழ்நாட்டில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருந்த பவரியா கொள்ளைக் கும்பலை தமிழக காவல்துறையினர் பல மாத முயற்சிக்குப் பிறகு கைதுசெய்தனர். சமீபத்தில் வெளியான தீரன் திரைப்படத்தின் கதை இந்த சம்பவத்தின் அடிப்படையிலேயே உருவாக்கப்பட்டது. மிகவும் அஞ்சப்பட்ட இந்த பவரியா கொள்ளையர்களை காவல்துறை கைதுசெய்தது எப்படி? 2005ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9ஆம் தேதி. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தனக்குளம். உள்ளடங்கி அமைந்திருந்தது அ.தி.மு.கவின் கும்மிடிப்பூண்டித் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் பிற்படுத்தப்பட்ட நலத்துறை அமைச்சருமான சுதர்சனத்தின் வீடு. தமிழகத்தை அச்சத்துக்குள்ளாக்கிய கொள்ளை சம்பவம் …

  16. போயஸ் கார்டனில் ஐ.டி. ரெய்டு! #ITRaids முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சசிகலா மற்றும் டி.டி.வி. தினகரன் ஆகியோரின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இல்லங்களில் கடந்த 9-ம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையைத் தொடங்கினர். சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் 187 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டது. இந்தச் சோதனையில் பல்வேறு ஆவணங்களும், ரொக்கப் பணம் மற்றும் தங்க நகைகள் கைப்பற்றப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. இதில், ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன், டாக்டர் வெங்கடேஷ் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் வீடுகளிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். ந…

  17. சசி குடும்பம் மிரட்டல்: அமைச்சர்கள் கலக்கம் வருமான வரித்துறை சோதனையை தொடர்ந்து, சசிகலா குடும்பத்தினர் விடுத்த மிரட்டல், முதல்வர் மற்றும் அமைச்சர்களிடம், கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. ஜெ., முதல்வராக இருந்த போது, சசிகலா குடும்பத்தினர், மிகப்பெரிய அதிகார மையமாக செயல்பட்டனர். அவர்களின் ஆதரவாளர் களுக்கே, தேர்தலில், 'சீட்' வழங்கப்பட்டது. அமைச்சர்கள், அதிகாரிகள் என, அனைவரை யும் மிரட்டி, காரியம் சாதித்து வந்தனர். அமைச்சர்களும், அவ்வப்போது கப்பம் கட்டி வந்தனர். இவை அனைத்தும், ஜெ.,க்கு தெரிந்தே நடந்தது. ஆட்சி அதிகாரத்தில், நேரடியாக பங்கு வகிக்காத நிலையில், அமைச்சர்கள் வழியே வந்த பணத்தில், சசிகலா குடும்பத…

  18. மிஸ்டர் கழுகு: புறப்பட்டார் புரோஹித்... டிசம்பரில் கவர்னர் ஆட்சி! ‘‘தமிழகத்தில் மறைமுகமாக பி.ஜே.பி ஆட்சி நடக்கிறது என இனி யாரும் சொல்ல முடியாது” என்றபடியே என்ட்ரி ஆனார் கழுகார். ‘‘ஏன், தமிழகத்தைக் கைகழுவ பி.ஜே.பி முடிவு செய்துவிட்டதா?’’ என்றோம். சிரித்தபடி ‘‘இல்லை’’ எனத் தலையாட்டிய கழுகார், ‘‘நேரடியாகவே பி.ஜே.பி ஆட்சி செய்யத் தொடங்கிவிட்டது என்பதற்கான தொடக்கம்தான் கவர்னர் பன்வாரிலால் புரோஹித்தின் கோவை விசிட்’’ என்றபடி தொடங்கினார். ‘‘புதுச்சேரியில் ஏற்கெனவே துணைநிலை ஆளுநர் கிரண் பேடியை வைத்து ஆட்சி செய்துகொண்டிருக்கிறது பி.ஜே.பி; அல்லது அங்கு ஆட்சி நடத்தும் காங்கிரஸ் முதலமைச்சர் நாராயணசாமிக்குக் குடைச்சல் கொடுத்துக்கொண்டிருக்கிறது. இ…

  19. சசிகலா கும்பலில் இந்த ஆண்டு தண்டனை பெற்றவர்கள் 1 - 2 - 3 - 4 - 5 - 6... Colors: சென்னை:சொத்துக்குவிப்பு வழக்கில், நான்காண்டு தண்டனை பெற்ற சசிகலா, சிறையில் உள்ள நிலையில், லண்டனில் இருந்து சொகுசு கார் இறக்கும…

  20. சென்னை சுங்கத்துறையின் இணையதளம் தீவிரவாதிகளால் முடக்கம் சென்னை மண்டல சுங்கத்துறைக்கு சொந்தமான ‘இணையதளத்தை பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகள் முடக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது. சென்னை மண்டல சுங்கத்துறையினரால் செயற்படுத்தப்ட்டு வரும் ‘www.chennaicustoms.gov.in’ என்னும் இணையதளமே இன்றைய தினம் இணையத்திருடர்களினால் முடக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘டீன் பாக் சைபர் ஸ்கல்ஸ்’ என்னும் பாகிஸ்தானை சேர்ந்த இணையத்திருடர்கள் இணையத்தினை முடக்கி அதில் சுதந்திர காஷ்மீருக்கு ஆதரவான வாக்கியங்களை பதிவு செய்ததுடன் இந்தியபிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகவும் விமர்சனம் செய்திருந்தனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் சிறிது நேர…

  21. சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு சிறைத்தண்டனை உறுதியானது! Chennai: சொகுசுக் கார் இறக்குமதி மோசடி வழக்கில் சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. சசிகலாவின் கணவர் நடராஜன் 1994-ம் ஆண்டு லண்டனிலிருந்து, 'லெக்சஸ்' என்ற சொகுசு காரை இறக்குமதி செய்தார். புதிய காரை, ஏற்கெனவே பயன்படுத்திய பழைய கார் எனக்கூறி இறக்குமதி செய்து, வரி ஏய்ப்பு செய்ததாகப் புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில் நடராஜன் இறக்குமதி செய்தது 1994-ல் உற்பத்தி செய்யப்பட்ட புதிய ரக கார் எனத் தெரிய வந்தது. இதன்மூலம், ரூ.1.06 கோடி வரி ஏய…

  22. ரூ.259 கோடி கிரானைட் முறைகேடு தொடர்பான வழக்கில் துரை தயாநிதிக்கு எதிராக 5,191 பக்க குற்றப்பத்திரிகை: மேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது மேலூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்காக 5,191 பக்கங்கள் அடங்கிய குற்றப் பத்திரிகையை எடுத்து வந்த போலீஸார். முன்னாள் மத்திய அமைச்சர்மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி மீதான ரூ.259 கோடி கிரானைட் முறைகேடு வழக்கில் மேலூர் நீதிமன்றத்தில் 5,191 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. மதுரை மாவட்டத்தில் செயல்பட்டுவந்த கிரானைட் குவாரிகளில் ரூ.16 ஆயிரம் கோடி அளவுக்கு முறைகேடு நடந்திருப்பதாக கடந்த 2012-ல் அப்போதைய மாவட…

  23. நளினிக்கு 6 மாதம் பரோல் வழங்க முடியாது: உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்மனு தாக்கல் மகள் திருமணத்திற்கு 6 மாதம் பரோல் கோரிய நளினியின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்மனு தாக்கல் செய்துள்ளது சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி ஸ்ரீபெரும்புதூரில் 1991-ம் ஆண்டு மனித வெடிகுண்டு மூலம் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் பேரறிவாளன், முருகன், நளினி உள்ளிட்டோர் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். …

  24. சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில், சசிகலாவின் அக்கா மகள்,மருமகனுக்கு விதிக்கப்பட்ட, சிறை தண்டனையை, சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இதன்படி, சசிகலா அக்கா மகளுக்கு, மூன்று ஆண்டுகள்; 1.68 கோடி ரூபாய் சேர்த்த, மருமகனுக்கு, ஐந்தாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் ஏற்கனவே தண்டனை பெற்று, பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள, சசிகலா குடும்பத்துக்கு, அடி மேல் அடி விழுவதால், கோடிகளை குவித்த அவர்களின் சொந்தங்களுக்கு, கிலி ஏற்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியில், அதிகாரியாக பணியாற்றியவர் எஸ்.ஆர்.பாஸ்கரன். இவரது மனைவி, சீதளாதேவி. சசிகலாவின் அக்கா வனிதாமணியின் மகள்; தினகரனின் சகோதரி. 1998ல், பாஸ்கரனின் வங்கி ல…

  25. 'தென்னிந்திய நடிகர்களின் போர்க் குணமும், மண்டியிடும் வட இந்திய நடிகர்களும்' இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைG VENKET RAM எந்தக் கட்டுரையும் விளக்க முடியாத அளவிற்கு வட இந்தியா மற்றும் தென் இந்தியாவிற்கு இடையிலான கலாசார வேறுபாட்டை சமீபத்தில் நடந்த இரண்டு நிகழ்வுகள் நமக்கு திறம்பட வரையறுத்துக் காட்டியுள்ளன. விளம்பரம் 'பத்மாவதி' என்ற இந்தி படத்தை…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.