Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமனம்! தமிழகத்தின் ஆளுநராக பன்வாரிலால் புரோஹித்தைக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமித்துள்ளார். இவர் தற்போது மேகாலயா ஆளுநராக உள்ளார். விரைவில் விரிவான செய்தி http://www.vikatan.com/news/tamilnadu/103694-new-governor-announced-for-tamilnadu-state.html

  2. ஜெயலலிதா மரணத்தில் இன்னும் விலகாத 16 மர்மங்கள்! 'தமிழக முதல்வர் ஜெயலலிதா, கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5-ம் தேதி அன்று இரவு 11.30 மணிக்கு மாரடைப்பால் (Cardiac Arrest) சென்னை அப்போலோ மருத்துவமனையில் காலமானார்' என்று அந்த மருத்துவமனை அதிகாரபூர்வமாக அறிவித்தது. ‘ஜெயலலிதாவின் மரணத்துக்கு நீதி விசாரணை அமைக்கப்படும்' என அறிவித்துவிட்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. 'எந்த நீதிபதி விசாரணையைத் தொடங்கப் போகிறார்?' என தமிழக அரசு இன்னும் தெளிவுபடுத்தவில்லை. ‘75 நாள்களாக ஜெயலலிதாவைச் சுற்றி என்ன நடந்தது? அவர் இயற்கையாகத்தான் இறந்தாரா?' என்ற சந்தேகம் இன்றளவும் பொதுமக்கள் மத்தியில் உலவி வருகிறது. 'எங்கள் மீது சுமத்துப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் பொய்…

  3. இரட்டை இலை விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் முடிவு யாருக்கு சாதகம்... ஓர் அலசல்! தீர்வை நோக்கி நகர்கிறது இரட்டை இலை விவகாரம். அ.தி.மு.க-வின் சின்னம் குறித்து விரைவில் முடிவு எடுப்பதாக உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இதையடுத்து எந்த அணிக்கு இரட்டை இலை கிடைக்கும் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க இரண்டாக உடைந்தது. பன்னீர் தலைமையில் ஒரு அணியும் சசிகலா தலைமையில் மற்றொரு அணி என பிரிந்தது. கடந்த ஏப்ரல் மாதம் ஆர்.கே. நகர் தேர்தல் நடைபெற்றபோது, இரட்டை இலை சின்னத்தை சசிகலா அணிக்கு வழங்க கூடாது என பன்னீர் அணியினர் தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டனர். அதை தொடர்ந…

  4. “நவம்பரில் வருகிறார் நம்மவர்!” - நம்பிக்கையில் கமல் ரசிகர்கள் இதோ... அதோ... என நடிகர் ரஜினிகாந்த் போக்குக்காட்டிவருகிறார். ஆனால், அரசியலில் நுழைந்துவிட்டதாக அறிவித்து, பரபரப்பைக் கிளப்பியிருக்கிறார் நடிகர் கமல்ஹாசன். அவரது அதிரடி அறிவிப்பு குறித்துத் தமிழக அரசியல் கட்சியினர் கருத்துத் தெரிவிப்பது ஒருபக்கம் இருந்தாலும், அவருடைய ரசிகர்களுக்கு இந்த அறிவிப்பு உற்சாகத்தைக் கொடுத்துள்ளது. இப்போதே அவர்கள் களப்பணியாற்றத் தயாராகிவிட்டனர். இந்தச் சூழலில், கமல் நற்பணி மன்ற நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். அவர்களின் விறுவிறு கருத்துகள் இதோ... ‘‘தெளிவான சிந்தனை!” செந்தில் (நெல்லை மாவட்டப் பொறுப்பாளர்) ‘‘தெளிவான சிந்தனையும், நுணுக்கமான பார்வையும…

  5. $ பெங்களூரு மாநகராட்சியின் 51-வது மேயராக சம்பத் ராஜ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நீண்ட காலத்துக்கு பிறகு தமிழரான சம்பத் ராஜ் மேயராகி இருப்பதால் கர்நாடகாவில் தமிழ் அமைப்பினரும், மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த ஆண்டு நடைபெற்ற பெங்களூரு மாநகராட்சி தேர்தலில் பாஜக 100, காங்கிரஸ் 76, மதச்சார்பற்ற ஜனதா தளம் 14, சுயேச்சைகள் 7 இடங்களை கைப்பற்றின. இதில் காங்கிரஸ் கட்சி, மஜத மற்றும் சுயேச்சை உறுப்பினர்களின் ஆதரவுடன் மேயர் பதவியை கைப்பற்றியது. இந்நிலையில் கடந்த ஓராண்டாக மேயர் பதவியை வகித்த பத்மாவதியின் பதவி காலம் அண்மையில் நிறைவடைந்தது. இதையடுத்து பெங்களூரு மாநகராட்சியின் மேயர் (எஸ்.சி), துணை மேயர் (பொது) பதவிக்கான தேர்தல் நேற்று (வியாழக…

  6. மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை நுங்கம்பாக்கம் போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மெரினா கடற்கரையில் தமிழ் இயக்கங்கள் சார்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சியை தடையை மீறி நடத்த முயன்றதாக மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி (42), தமிழர் விடியல் கட்சி முதன்மை ஒருங்கிணைப்பாளர் டைசன் (27), மாநில ஒருங்கிணைப்பாளர் இளமாறன் (32), உறுப்பினர் அருண்குமார் (27) உட்பட 17 பேரை சில மாதங்களுக்கு முன்பு போலீஸார் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து திருமுருகன் காந்தி, டைசன், இளமாறன், அருண்குமார் ஆகிய 4 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைத்தனர். இவர்கள் மீதான குண்டர் சட்டத்தை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து ச…

  7. ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைப்பு ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிப்பதற்கு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை: தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி உடல்நலக் குறைவால் சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலன் இன்றி டிசம்பர் மாதம் 5-ந்தேதி மரணம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டது. அவர் மரணம் குறித்த சந்தேகங்களும், கேள்விகளும் எழுந்த நிலையில், ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக…

  8. சிவாஜி மணி மண்டபம்: அரசின் 'அலட்சியம்' ஏன்? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க மறைந்த பிரபல நடிகர் சிவாஜி கணேசனுக்கு சென்னை அடையாறு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நினைவு மண்டபத்தைத் திறந்துவைக்க தமிழக முதல்வரோ, துணை முதல்வரோ செல்லத் திட்டமிடாமல் செய்தி மக்கள் தொடர்புத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு திறந்துவைப்பார் என்ற அரசின் அறிவிப்பு ஏமாற்றத்தை அளிப்பதாக சிவாஜி குடும்பத்தினரும…

  9. தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள்: தினகரனுடன் தீவிர ஆலோசனை குடகில் இருந்து சென்னை திரும்பிய தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள், டிடிவி தினகரனை சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தினர். முதல்வர் பழனிசாமிக்கு ஆதரவை வாபஸ் பெற்ற தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்து சட்டப்பேரவைத் தலைவர் ப.தனபால் அறிவித்தார். இதை எதிர்த்து 18 பேரும் தாக்கல் செய்துள்ள வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் வரும் 4-ம் தேதி விசாரணைக்கு வருகிறது. அவர்கள் 18 பேரும் கர்நாடக மாநிலம் குடகில் உள்ள விடுதியில் தங்கியுள்ளனர். சில நாட்களுக்கு முன்பு குடகுக்கு சென்ற டிடிவி தினகரன், தனது ஆதரவாளர்களை சந்தித்து…

  10. போயஸ் கார்டனில் என்ன நடந்தது? ஜெயலலிதா மருத்துவ அறிக்கை விவரம் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து புதிய தலைமுறை தொலைக்காட்சி புதிய தகவல்களை வெளியிட்டுள்ளது. அவர்கள் வெளியிட்டுள்ள தகவலின் விவரங்கள் வருமாறு.. ''2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 22ம் தேதி இரவு 10.15க்கு போயஸ் கார்டனில் இருந்து ஜெயலலிதா உடல்நிலை சரியில்லை என்று தொலைப்பேசி அழைப்பு வந்ததும் அப்போலோ மருத்துவமனையில் இருந்து 3 பேர் கொண்ட குழு போயஸ் கார்டன் சென்றுள்ளது. முதல் தளத்தில் இருந்த ஜெயலலிதா மயங்கிய நிலையில் படுக்கையில் இருந்துள்ளார். அவரை தட்டி எழுப்பியபோது எந்த எதிர்வினையும் ஆற்றவில்லை. உடலில் அசைவு மட்டுமே இருந்துள்ளது. பின்னர் மருத்துவ…

  11. எம்.நடராஜன் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் CHENNAI TAMILNADU 12/09/2016 M.Natarajan PHOTO L_SRINIVASAN சென்னை: தமிழ்நாடு: 12-09-2016: எம்.நடராஜன். படம்.எல்.சீனிவாசன். - L_SRINIVASAN சசிகலாவின் கணவர் நடராஜனின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருக்கிறது. அதிமுக (அம்மா) பொதுச் செயலாளர் வி.கே.சசிகலாவின் கணவரும், ‘புதிய பார்வை’ ஆசிரியருமான எம்.நடராஜன் (74), கல்லீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். கல்லீரல், சிறுநீரகம் பாதிப்பு கடந்த 10-ம் தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கல…

  12. நடிகர் கமல் போன்றவர்கள் பற்றி கேள்வி கேட்டு என்னை அவமானப்படுத்தாதீர்கள் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார். நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம் கமலின் அரசியல் பிரவேசம் பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு சீமான் ஆவேசத்துடன் கூறியதாவது:- கமல் போன்றவர்கள் பற்றி கேள்வி கேட்டு என்னை அவமானப்படுத்தாதீர்கள். அவர்கள் வரும்போது வரட்டும். அப்போது பார்த்து கொள்ளலாம். தமிழக அரசு மின்சாரம் வாங்குவதற்கு 9 ஆயிரம் கோடி ரூபாயை செலவிடுவதில் முனைப்பு காட்டுகிறது. ஆனால் உற்பத்தி துறையில் அந்த தொகையை முதலீடு செய்ய மறுக்கிறது. இதுபோன்று பல பிரச்சினைகள் உள்ளன. அவைகளை…

  13. சடுகுடு ஆடும் ரஜினி-கமல் அரசியல் கோவையில் ரஜினி ரசிகர்களின் போஸ்டர். கமல்ஹாசன் அரசியல் கட்சி ஆரம்பிக்க நாள் பார்க்க, ரஜினியோ அதற்கு அமைதி காக்க, கோவை ரஜினி ரசிகர்கள் கமலுக்கு எதிராக போஸ்டர், வாட்ஸ் அப் படங்களை கடைவிரித்துக் கொண்டிருக்கின்றனர். அதில், 'சப்பாணிகிட்ட பத்த வச்சது பரட்டையா?' என்ற வேடிக்கை குரல்களும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. 'போர் வரட்டும் பார்க்கலாம்' என்று ரஜினி சொல்லிச் சென்றது இன்னமும் அடையில் அப்படியே இருக்க, பிக்பாஸ் வருகையில் திடீர் எழுச்சி பெற்ற கமலஹாசன் அதீத அரசியல் பேசி, இறுதியில் தான் கட்சி ஆரம்பிக்கப் போவதையும், அதற்கான சின்னம், கட்சிப் பெயர் பணிகளில் இறங்கி …

  14. என்ன செய்கிறார்கள் குன்ஹாவும் குமாரசாமியும்?! - ‘ஜட்ஜ்மெண்ட் டே’ செப்டம்பர் 27 #VikatanExclusive ‘உங்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டுவிட்டது. தீர்ப்பை அறிவிக்கும்வரையில் பக்கத்தில் உள்ள அறையில் அமர்ந்திருங்கள்’ - 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இதே நாளில் சொத்துக் குவிப்பு வழக்கின் தனி நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா அறிவித்தபோது, மனதளவில் நொறுங்கிப் போனார் ஜெயலலிதா. ஒரு மாநில முதல்வரின் அத்தனை அதிகாரங்களையும் ஒடுக்கி, அவரைக் குற்றவாளி என அறிவித்தார் குன்ஹா. ஜெயலலிதாவைப் போலவே, இந்தத் தீர்ப்பால் அ.தி.மு.க தொண்டர்களும் நிலைகுலைந்தார்கள். 'காவிரியை வைத்துக்கொள்; அம்மாவை விடுதலை செய்' என்ற முழக்கங்களும் பதவியேற்பில் கதறியழுது கொண்டே அம…

  15. பரோலுக்கு துணைநின்ற ஸ்டாலினுக்கு நன்றி: நெகிழும் அற்புதம்மாள் பேரறிவாளனுக்குப் பரோல் கிடைக்க துணை நின்ற தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பதற்காக அவரை பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் சந்தித்தார். ராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர். இதனிடையே, பேரறிவாளன் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள தனது தந்தையைக் காண பரோல் கோரியிருந்தார். இதையடுத்து, 26 ஆண்டுகளாக சிறையில் இருந்த பேரறிவாளனுக்கு ஒரு மாத காலம் பரோலில் விடுவிக்க கடந்த மாதம் 24-ம் தேதி தமிழக அரசு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து தனது தந்தை மற்றும் தாயாருடன் நேரத்தை கழித்து வரும் பேரறிவாளனை, ஸ்ட…

  16. ’ஜெயலலிதா கைரேகை உண்மைத் தன்மை’: விளக்கம் கேட்கும் உயர் நீதிமன்றம் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் கைரேகையின் உண்மைத் தன்மை தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கமளிக்க தலைமைத் தேர்தல் ஆணைய முதன்மைச் செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளருமான ஜெயலலிதா, உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்தபோது திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி உள்ளிட்ட தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வந்தது. அதில், வேட்பாளர்களுக்கு கட்சியின் சின்னத்தை ஒதுக்கக் கோரும் மனு ஜெயலலிதாவின் கையெழுத்துக்குப் பதிலாகக் கைரேகையுடன் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த தேர்தலில் அ.தி.மு.க. ச…

  17. ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சையில் எந்த ஒளிவு மறைவும் இல்லை’ - அப்போலோ "எங்களிடம் எந்த ஒளிவு மறைவும் இல்லை. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணையத்தை வரவேற்பதாகவும் அப்போலோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் ஒன்றை தமிழக அரசு அமைத்துள்ளது. இந்த ஆணையம் இன்னும் விசாரணை தொடங்கவில்லை. இதனிடையே, ஜெயலலிதா மரணம்குறித்து விசாரிக்க தற்போது அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணையத்தை வரவேற்பதாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக டெல்லி…

  18. தமிழக மக்களுக்காக முதல்வராக விரும்புகிறேன் – மக்களை நேரில் சந்திக்க உள்ளேன் – மனம் திறந்த கமல் தாம் அரசியலுக்கு வருவது உறுதி எனவும் தமிழக மக்களுக்காக முதல்வராக விரும்புகிறேன் எனவும் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இந்தியா டுடே தொலைக்காட்சி சேவைக்கு வழங்கிய சிறப்பு பேட்டியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அரசியலுக்குள் நுழைவது என்பது முள் கிரீடத்தை தலையில் சுமப்பதற்கு சமமானது என தெரிவித்துள்ள அவர் மக்களைப் பொறுத்தவரை அவர்களின் பிரச்னைகளை யாரும் கண்டு கொள்வதில்லை என்றே நினைக்கின்றனர். இடதுசாரியா, வலதுசாரியா அல்லது வேறு சிந்தனையுடையவனா என்பதையெல்லாம் மக்கள் பார்க்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார். என்னைப் பொருத்தவரை கறுப்ப…

  19. புதுடில்லி: 'ஏர்செல் - மேக்சிஸ்' முறைகேட்டில், கார்த்தி சிதம்பரம், எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என, தெரிகிறது. அதற்கு முன்னோட்டமாக, அவரின், 1.16 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை முடக்கி, அமலாக்கத் துறை உத்தரவிட்டு உள்ளது. இது தொடர்பான விசாரணையில், வங்கி கணக்குகளை, அவர் அவசரமாக கைமாற்றியதும் அம்பலமாகி உள்ளது. அமலாக்கத் துறையின் அதிரடி நடவடிக்கையில், மகன் சிக்கியுள்ளதால், 'மாஜி' நிதி அமைச்சர், சிதம்பரம் அதிர்ச்சி அடைந்துள்ளார்.காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான, சிதம்பரத்தின் மகன், கார்த்தி மீது, மே மாதம், சி.பி.ஐ., ஊழல் வழக்கு பதிவு செய்தது. அதாவது, 2௦௦7ல், மத்திய நிதி அமைச்சராக இருந்த, சிதம்பரத்தின் உதவி…

  20. 19 மாவட்ட எஸ்.பி-க்களுக்கு டி.ஜி.பி திடீர் உத்தரவு! அசாதாரண சூழ்நிலையால் சட்டம்- ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால் அதைச் சமாளிக்கத் தயாராக இருக்க வேண்டும் 19 மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர்களுக்கு டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரன் திடீரென உத்தரவுப் பிறப்பித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் அரசியல் பரபரப்பு அடங்குவதற்குள் 19 மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் மற்றும் மாநகர காவல்துறை ஆணையர் ஆகியோருக்கு டிஜிபி டி.கே.ராஜேந்திரன் இன்று முக்கிய உத்தரவுப் பிறப்பித்துள்ளார். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, திருப்பூர், நாகப்பட்டினம், மதுரை, திண்டுக்கல், தேன…

  21. 'நான் வேறு ரஜினி வேறு...' - கமல் பரபரப்புப் பேட்டி! பிக் பாஸ் நிகழ்ச்சி, ட்விட்டர் கருத்துகள் என்று கமல் பரபரப்பாக இயங்கிவருகிறார். தமிழக அரசின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்துவரும் அவர், 'மக்கள் விரும்பினால் அரசியலுக்கு வருவேன்' என்று கூறினார். இதனிடையே, கடந்த வாரம் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், கமலைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ஊழலுக்கு எதிராக இணைந்து செயல்படப்போவதாக அவர் தெரிவித்தார். மேலும், 'தனிக்கட்சி தொடங்குவேன், முதல்வர் ஆக விரும்புகிறேன்' என்றும் கருத்து தெரிவித்து பரபரப்பைக் கிளப்பினார். இந்நிலையில், நியூஸ் 18 ஆங்கிலத் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் கமல், "மாநில சுயாட்சிகுறித்து அண்ணா கோரிக்கையை முன்வைத்து, பின…

  22. ரஜினி Vs கமல் -ஜெயிக்கப்போவது யார் ? | Socio Talk | சில நாட்களாக கமல் அரசியலுக்கு வரப்போகிறார், ரஜினி கமலுக்கு வரப்போகிறார் என பேச்சுக்கள் நாம் கேட்டுக்கொண்டு இருக்கிறோம் ஆனால் இருவரும் அரசியலில் குதித்தால் வெற்றி யாருக்கு? பி.ஜே.பியுடன் சேர மறுக்கும் கமல், அக்கட்சிக்கு ஆதரவு அளிக்கும் ரஜினி. இருவரில் யார் வந்தால் நன்றாக இருக்கும்? மக்கள் யாரை விரும்புகிறார்கள்? மேலும் பல கேள்விகளும். விடைகளும்.

  23. ’ஓ.பன்னீர்செல்வம் போன்ற அரசியல்வாதிகள் தேவையில்லை!’ - பொளேர் மக்கள் கருத்து #VikatanSurveyResult சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா கலையரங்கில், கடந்த 20-ம் தேதி பள்ளிக்கல்வித் துறையில் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பணி நியமன ஆணைகளை வழங்கினார். அப்போது பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்,"எங்களைப் போன்ற நல்ல அரசியல்வாதிகளை, ஆசிரியர்களாகிய நீங்கள்தான் உருவாக்க வேண்டும்" என்று பேசியிருந்தார். இதையடுத்து, "ஓ.பன்னீர்செல்வம் போன்ற நல்ல அரசியல்வாதிகள் தமிழகத்துக்கு அவசியமா" என்ற தலைப்பில் 'விகடன்' இணையதளத்தில் சர்வே நடத்தப்பட்டது. சர்வேயில் கலந்துகொண்டவர்கள் தற்போதைய அரசியல் தலைவர்கள் பற்றிய…

  24. 11 எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்யுங்க! உயர்நீதிமன்றத்தில் தி.மு.க., வழக்கு சென்னை: நம்பிக்கை ஓட்டெடுப்புக்கு எதிராக ஓட்டளித்த, துணை முதல்வர் பன்னீர் செல்வம் உட்பட, ௧௧ எம்.எல்.ஏ.,க்களை தகுதியிழப்பு செய்யக் கோரி, சென்னை உயர் நீதி மன்றத்தில், தி.மு.க., மனு தாக்கல் செய்துள்ளது.தி.மு.க., - எம்.எல்.ஏ.,வும், கொறடாவுமான, ஆர்.சக்கரபாணி தாக்கல் செய்த மனு: முதல்வர் பழனிசாமி தலைமையிலான அரசு, சட்டசபையில், நம்பிக்கை ஓட்டெடுப்பு கோரும் போது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர். பிரதான எதிர்க்கட்சிகள் இல்லாத நிலையில், ஓட்டெடுப்பு நடந்து, பழனிசாமி தலைமையிலான அரசு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்…

  25. ஆளுநர் பார்க்க வரும்போது ஜெயலலிதா சுயநினைவுடன் இல்லை: தீபக் பரபரப்பு பேட்டி Share Tweet அ-அ+ அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவை ஆளுநர் பார்க்க வரும்போது ஜெயலலிதா சுயநினைவுடன் இல்லை என அவரது அண்ணன் மகன் தீபக் தெரிவித்துள்ளார். சென்னை: முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ந்தேதி திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர், 72 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு டிசம்பர் மாதம் 5-ந்தேதி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.