Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. 'ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் பணியில் இறங்கிவிட்டேன்' - பொதுக்குழுவுக்கு எதிராக கொந்தளித்த தினகரன் அ.தி.மு.க பொதுக்குழு குறித்து தினகரன் இன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “ பொதுக்குழு என்ற பெயரில் அவர்கள் நிறைவேற்றிய தீர்மானங்களைப் பார்த்தேன். நான் ஏற்கெனவே சொன்னதுபோல, கட்சியின் பொதுக்குழுவை பொதுச் செயலாளர்தான் கூட்ட முடியும். அவர் பணியாற்ற முடியாததால், துணை பொதுச் செயலாளர் நான்தான் கூட்ட முடியும். அவர்கள் கூட்டி இருப்பது பொதுக்குழுவே அல்ல. அவர்கள் எந்தத் தீர்மானம் நிறைவேற்றினாலும் அது சட்டப்படி செல்லாது என நேற்றே நீதிமன்றம் சொல்லிவிட்டது. நீதிமன்றம் உத்தரவிட்டால்தான் இவர்கள் தீர்மானம் செல்லும். இவர்களைப் பதவியில் வைத்…

  2. சசிகலாவின் கணவர் கவலைக்கிடம்: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலாவின் கணவர் நடராஜனின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சசிகலாவின் கணவரான நடராஜன் கல்லீரல் மற்றும் சிறுநீரகம் உள்ளிட்டது தொடர்பாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிகிச்சை அளிப்பதற்கு லண்டனைச் சேர்ந்த பிரபல கல்லீரல் அறுவை சிகிச்சை நிபுணர் முகம்மது ரீலா சென்னை வந்துள்ளதாகவும், ஓரிரு நாட்களுக்குள் கல்லீரல் மாற்று அறுவகை சிகிச்சை மேற்கொள்ள இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நடராஜனினுக்கு சிறுநீரக பாதிப்பு மற்றும் நுரையீரல் அடைப்பு இருந்ததால் அவர் தீவிர சிக…

  3. பெரும்பான்மையை நிரூபிக்க தயாராகும் பழனிசாமி அரசு: விரைவில் ஆளுநர் உத்தரவிட வாய்ப்பு? எதிர்க்கட்சிகளின் வலியுறுத்தல், அதிமுக எம்எல்ஏக்களின் ஆதரவு வாபஸ் உள்ளிட்ட சிக்கல்களுக்கிடையில் விரைவில் பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் பழனிசாமிக்கு ஆளுநர் உத்தரவிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதிமுகவின் இரு அணிகளும் இணைந்த பின், தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 21 பேர் முதல்வர் பழனிசாமிக்கான ஆதரவை வாபஸ் பெறுவதாக ஆளுநரைச் சந்தித்து கடிதம் அளித்துள்ளனர். முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரையும் மாற்ற வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்து வருகின் றனர். சமீபத்தில் தினகரன் தலைமையில் ஆளுநர் வித்யாசாகர் ராவை எம்எல்ஏக்கள், எம…

  4. அ.தி.மு.க பொதுக்குழு: முதல்வர், துணை முதல்வர் வருகை - 14 தீர்மானங்கள் இடம்பெறுவதாக தகவல் தமிழக அரசியலின் பரபரப்பான சூழலில் அ.தி.மு.க.வின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் 14 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்ற வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை: அ.தி.மு.க அம்மா மற்றும் புரட்சித்தலைவி அம்மா அணிகள் இணைந்த பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அக்கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற உள்ளது. …

  5. அ.தி.மு.க பொதுக்குழுவுக்கு பெங்களூரு நீதிமன்றம் தடை..! எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூடும் பொதுக்குழு கூட்டத்துக்கு பெங்களூரு மாவட்ட நீதிமன்றம் தடை விதித்துள்ளது. முன்னதாக, இதுதொடர்பாக மாலை 7.15 மணிக்குத் தீர்ப்பளிப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அ.தி.மு.க பொதுக்குழு நாளை சென்னையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பொதுக்குழுக்கு தடைகோரி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. வெற்றிவேல் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த தனி நீதிபதி, இந்த வழக்கு நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் செயல் என்று தெரிவித்தார். மேலும் எம்.எல்.ஏ வெற்றிவேலுக்கு ஒரு லட்ச ரூபாய் அபரா…

  6. திருச்செந்தூரில் பொன்னாரைச் சந்தித்து கருணாஸ் வைத்த கோரிக்கை திருச்செந்தூரில், மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனை திருவாடானைத் தொகுதி எம்.எல்.ஏ., கருணாஸ், தனியாகச் சந்தித்து 15 நிமிடங்கள் வரை ரகசியமாகப் பேசியது பரபரப்பை உண்டாக்கியுள்ளது. பொன்.ராதாகிருஷ்ணன், நிதித்துறை இணை அமைச்சராகக் கூடுதல் பொறுப்பேற்ற பிறகு, முதல் முறையாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தரிசனம் செய்வதற்காக திருச்செந்தூருக்கு வந்தார். கோயில் வளாகத்திலுள்ள விருந்தினர் மாளிகையில், கட்சியினரின் வரவேற்புக்குப் பிறகு, கோயிலுக்குச் சென்று சாமி கும்பிட்டு, நாகர்கோயிலுக்குப் புறப்படத் தயாராகும் நேரத்தில், திருச்செந்தூரில் நடந்த ஒரு திருமணவிழாவில் கலந்துகொண்ட பிறகு, ஓய்வ…

  7. சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பில்லை: பொதுக் குழுவுக்கு தயாராகும் பழனிசாமி அணி - உறுப்பினர்களுக்கு மட்டுமே அனுமதி அதிமுகவில் முதல்வர் பழனிசாமி தரப்பினர் பொதுக்குழு கூட்டத்தை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். சிறப்பு அழைப்பாளர்கள் இன்றி பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களுக்கு மட்டுமே அழைப்பிதழ் அனுப்பப்பட்டு வருகிறது. அதிமுகவில் தற்போது முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோர் இணைந்து, அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தை வரும் 12-ம் தேதி கூட்டுவதாக அறிவித்துள்ளனர். அதிமுகவின் பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைந்த நிலையில், கடந்தாண்டு டிசம்பர் 28-ம் தேதி பொதுக்குழு கூடியது. அப…

  8. 'வீரத்தின் உச்சகட்டம் அஹிம்சை... அதன் விதை பயமிலாக் கேள்வி' - கமல் ட்வீட் பிக் பாஸ் நிகழ்ச்சி, அ.தி.மு.க அமைச்சர்களுடன் மோதல், ட்விட்டர் கருத்துகள் என்று கமல் தற்போது செம ஆக்டிவாக இருக்கிறார். சமூக பிரச்னைகள் குறித்து தொடர்ந்து ட்விட்டர் மூலமாக கருத்து தெரிவித்து வருகிறார். இதனிடையே, கடந்த சில நாள்களுக்கு முன்பு கேரள முதல்வர் பினராயி விஜயனை கமல் சந்தித்தார். தமிழகத்தையே சோகத்தில் மூழ்கடித்துள்ள அனிதாவின் மரணம் குறித்தும் அவர் கருத்து தெரிவித்திருந்தார். இதையடுத்து, “இந்த சட்டதை உருவாக்கியது நாம்தான். அதை பயன்படுத்திக் கொள்ளுங்கள். தவறென்றால் மாற்றிக்கொள்ளுங்கள். ஆனால், அதை அவமானம் செய்வதும், தவறாகப் பேசுவதும் கூடாது. விவாதங்கள் மூலம் மாற்ற…

  9. அ.தி.மு.க-வை இயக்குகிறதா பி.ஜே.பி ? உண்மை உணர்த்தும் 18 'பரபர' சம்பவங்கள்! #Vikatan Exclusive ‘‘தமிழக அரசின் ரிமோட் கன்ட்ரோல் தற்போது பி.ஜே.பி-யிடம் இருக்கிறது.’’ ‘‘மத்திய அரசின் கட்டுப்பாட்டில்தான் அ.தி.மு.க அரசு இயங்குகிறது.’’ "தனக்கு சலாம் போடும், தலையாட்டும் பொம்மைகளுக்காக அ.தி.மு.க-வை மறைமுகமாக ஆட்டிவைக்கிறது பி.ஜே.பி.’’ - தமிழக அரசியலில் இப்போது நடக்கும் அத்தனை அக்கப்போர்களுக்கும் பின்னால் வைக்கப்படும் விமர்சனங்கள்தான் இவை! ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி அணிகள் இணைந்தபோது, ‘‘டெல்லியிலிருந்து கதை, வசனம், இயக்கம் நடக்கிறது. அதற்கு ஏற்றபடி ஓ.பி.எஸ், இ.பி.எஸ் இருவரும் நடித்துக்கொண்டிருக்கிறார்கள். அ.…

  10. தினகரனுக்கு ஸ்டாலின் அனுப்பிய மெசேஜ்..! #VikatanExclusive இன்று அணி அணியாகப் பிரிந்துள்ள அ.தி.மு.க-வுக்குள், பிரதான அணியாக இருக்கும் டி.டி.வி. தினகரன், சமீபத்தில் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் வேகமானதாகவும், தீர்க்கமானதாகவும் உள்ளது. தனக்குள்ள செல்வாக்கை உணர்த்துவதற்காக, மதுரையில் பிரமாண்ட பொதுக்கூட்டத்தை நடத்திய அவர், தற்போது பொதுப்பிரச்னைகளில் தீவிர கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார். நீட் தேர்வால் மருத்துவ இடம்கிடைக்காமல் மனம் உடைந்து தற்கொலை செய்துகொண்ட அரியலூர் மாணவி அனிதாவின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போது, "மாணவி அனிதா பிளஸ்-2 தேர்வில் 1,176 மதிப்பெண்கள் பெற்ற போதிலும், நீட் தேர்வில் இருந்து விலக்கு கிடைக்காததல், தற்கொலை செய்…

  11. நீலத் திமிங்கல விளையாட்டில் ஈடுபட்ட மாணவன் ஒருவனுக்குத் “தற்கொலை கூடாது” என்று தமிழ்நாடு காவல்துறை அறிவுரைகளை அள்ளி வழங்கிக் கொண்டிருந்த அதே நேரம், நடுவண் – மாநில அரசுகளின் மருத்துவப் பொது நுழைவுத் தேர்வு என்ற விளையாட்டால் பாதிக்கப்பட்டுத் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் அனிதா! எந்த அனிதா?... பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வில் 196.75 தகைவு மதிப்பெண் (cut-off) பெற்ற அனிதா!... தன் ஊர் மொத்தத்தின் மருத்துவக் கனவையும் ஒற்றை ஆளாய்ச் சுமந்த அனிதா!... இந்த நுழைவுத் தேர்வுக்கு எதிராக ஏழ்மை நிலையிலும் உச்சநீதிமன்றம் வரை போராடிய அனிதா!... உண்மையில் இது தற்கொலையா? இல்லை, தற்கொலைக்குத் தூண்டப்பட்டிருக்கிறார் அந்த வருங்கால மரு…

  12. மிஸ்டர் கழுகு: உட்கட்சி விவகாரம் என்று நான் சொல்லவே இல்லை! தினகரனிடம் பல்டி அடித்த கவர்னர் இரண்டு நாள்கள் இரவு பகலாக தினகரனின் பெசன்ட் நகர் வீட்டை வட்டமடித்த கழுகார், தூக்கமில்லாமல் சிவந்த கண்களுடன் அலுவலகம் வந்தார். திடீரென போனில் அழைப்பு வர, ‘‘ஒரு மணி நேரத்தில் வருகிறேன்” என்று சொல்லிவிட்டுக் கிளம்பிய கழுகார், சொன்னதுபோலவே வந்தார். ‘‘ஒன்றுமில்லை... கவர்னரை தினகரன் சந்தித்த நேரத்தில் கிண்டி கவர்னர் மாளிகையை வட்டமடித்துவிட்டு வந்தேன்’’ என்றார். ‘‘தினகரனின் ஆட்டம் வேகம் பிடித்துள்ளதே?” ‘‘கடந்த வாரம் முழுவதும் தினகரன் தீவிர ஆலோசனையில் இருந்தார். தனக்கு நெருக்கமானவர்களையும், சட்ட வல்லுநர்களையும் அழைத்து பல விஷயங்களைக் கேட்டுக் கொண்டிருந்தார்.…

  13. தமிழன் ஆள்வான், ரஜினி அரசியல், அமெரிக்காவில் அவமரியாதையா..? பதிலளிக்கிறார் A.R. Rahman

  14. ஆதரவு எம்எல்ஏக்களுடன் சென்று ஆளுநரை இன்று சந்திக்கிறார் தினகரன்: தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பு டிடிவி தினகரன். - படம்: பி.ஜோதிராமலிங்கம் அதிமுக (அம்மா) துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் ஆளுநர் வித்யாசாகர் ராவை இன்று பகல் 12.30 மணிக்கு சந்தித்துப் பேசுகிறார். சட்டப்பேரவையைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வருக்கு உத்தரவிட வேண்டும் என்று ஆளுநரிடம் தினகரன் வலியுறுத்துவார் என்று கூறப்படுகிறது. 21 எம்எல்ஏக்கள் ஆதரவு அதிமுக இரு அணிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்எல்ஏக்கள் 19 பேர், டிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அந்த 19 எம்எல்ஏக்களும் ஆளுநர் …

  15. சிறிய நாடான இலங்கை முன்னோடியாகத் திகழ்கிறது: ஆராய்ச்சியில் இந்தியா பின்தங்கியுள்ளது - மத்திய ஆராய்ச்சித் துறை செயலாளர் கவலை தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் 29வது பட்டமளிப்பு விழாவில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் பட்டங்களை வழங்குகிறார் ஆளுநர் வித்யாசாகர் ராவ். உடன் மத்திய சுகாதார ஆராய்ச்சித் துறை செயலாளர் சவுமியா சுவாமிநாதன், துணைவேந்தர் கீதாலட்சுமி, தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், சுகாதாரத் துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன். (அடுத்த படம்) பதக்கங்கள் பெற்ற மாணவ, மாணவியர். - படங்கள்: க.ஸ்ரீபரத் …

  16. முதல்வரை தகுதியிழப்பு செய்யலாமா? : வழக்கில் செப்., 13 வரை அவகாசம் மதுரை: சிறையில் சசிகலாவை சந்தித்த விவகாரத்தில், முதல்வர் பழனிசாமி மற்றும் நான்கு அமைச்சர்களை தகுதியிழப்பு செய்ய கோரிய வழக்கில், 13ம் தேதி வரை அவகாசம் அளித்து, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. ஸ்ரீவில்லிபுத்துார்ஆணழகன் தாக்கல் செய்த பொதுநல மனு:அமைச்சர்கள் செங்கோட்டையன், ராஜு, சீனிவாசன், காமராஜ், பிப்., 28ல், பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்தித்தனர். அவர்கள், 'அரசின் செயல்பாடுகள் பற்றி சசிகலாவிடம் பேசினோம்' என்றனர். இதற்கு, முதல்வர் பழனிசாமி ஆட்சேபனை தெரிவிக்கவில்லை.முதல்வர் மற்றும் நான்கு அமைச்சர்களி…

  17. ' நீயே எல்லாத்தையும் பார்த்துக்கோப்பா....!' - தினகரனிடம் உருகிய சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கின் சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டதில் இருந்தே உறைந்து போய் கிடக்கிறார் அ.தி.மு.க அம்மா அணியின் பொதுச் செயலாளர் சசிகலா. ' கட்சி நிர்வாகம் தொடர்பாக தினகரன் எடுக்கும் முடிவுகளுக்கு அவர் முழுமையான ஒப்புதல் அளித்துவிட்டார். சிறைக் கட்டுப்பாடுகளால், மனதளவில் உடைந்து போய் இருக்கிறார்" என்கின்றனர் சிறைத்துறை வட்டாரத்தில். அண்ணா தி.மு.கவின் பொதுக்குழுவை வரும் செப்டம்பர் 12-ம் தேதி கூட்ட இருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இந்தக் கூட்டத்துக்கு நீதிமன்றம் வழியாக தடை பெறுவது குறித்து தினகரன் தரப்பில் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர். 'பொதுக்கு…

  18. மெரினாவை அதிரவைத்த மாணவர்கள்..! ஜெ. நினைவிடத்திலும் போராட்டம் அனிதா மரணத்துக்கு நியாயம் கேட்டும், நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வலியுறுத்தியும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நீட் தேர்வுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த மாணவி அனிதா செப்டம்பர் 1-ம் தேதி தற்கொலை செய்துகொண்டார். அவருடைய தற்கொலை தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அனிதா மரணத்துக்கு நியாயம் கேட்டும் நீட் தேர்வை நிரந்தரமாகத் தடை செய்ய வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் போராட்டம் தீவிரமடைந்துவருகிறது. இந்த நிலையில், ஜெயலலிதா நினைவிடம் அமைந்திருக்கும் இடத்தில் இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டத்தி…

  19. பழனிசாமி அரசுக்கு தனியரசு ஆதரவு: தனித்து செயல்படுவதாக அன்சாரி அறிவிப்பு - எம்எல்ஏ கருணாஸ் நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை அதிமுக ஆதரவு எம்எல்ஏக்களில், முதல்வர் பழனிசாமி அரசுக்கு ஆதரவளிப்பதாக தனியரசு தெரிவித்துள்ள நிலையில், தமிமுன் அன்சாரி ‘இனி யாருக்கும் ஆதரவில்லை, தனித்து செயல்பட உள்ளேன்’ எனக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் அதிமுக ஆதரவு கட்சிகளின் எம்எல்ஏக்கள் 3 பேரும் பங்கேற்கவில்லை. இருப்பினும், அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறும்போது, 3 பேரும் அரசுக்கு ஆதரவளிப்பதாக கூறியுள்ளனர் என்றார். ஆனால், தினகரனுக்…

  20. மிஸ்டர் கழுகு: ஓ.பி.எஸ்ஸை வேவு பார்க்கும் இ.பி.எஸ்! ‘‘அனிதா மரணம், நீட் தேர்வுக்கான எதிர்ப்பு எனத் தமிழகம் கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. தமிழகத்தின் பல கல்லூரிகளில் மாணவர்கள் வீதிக்கு வந்துள்ளார்கள். இந்த நேரத்திலும் உள்கட்சி மோதலை விடாமல் தொடர்கிறது அ.தி.மு.க” என்றபடியே உள்ளே நுழைந்தார் கழுகார். உட்கார்ந்தபிறகு, அதையே பேசினார். ‘‘நாடு என்ன ஆனால் அவர்களுக்கு என்ன? ஆட்சியில் இருப்பவர்களுக்கு அவர்களின் பஞ்சாயத்துக் களைப் பார்ப்பதற்கே நேரம் சரியாக இருக்கிறது. குறிப்பாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் நிலை இருதலைக் கொள்ளி எறும்பைப் போல் இருக்கிறது. ஒரு பக்கம் தினகரனோடு மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறார்; இன்னொரு பக்கம் ஓ.பி.எஸ்ஸோடு உரசிக் கொண்டிருக்கிறார்.” ‘‘தினகரனோ…

  21. முரசொலி பவளவிழா பொதுக்கூட்டம்: 11 ஆண்டுகளுக்குப் பிறகு தி.மு.க மேடையில் வைகோ சென்னை கொட்டிவாக்கம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் முரசொலி பவளவிழா பொதுக்கூட்டம் தொடங்கியது. இந்த விழாவில் திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், திருநாவுக்கரசர்(காங்.), ஜவாஹிருல்லா (ம.ம.க.), க.வீரமணி(தி.க), காதர் மொய்தீன் (இ.யூ.மு.லீ) உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். 11 ஆண்டுகளுக்குப் பிறகு தி.மு.க மேடையில் ஏறுகிறார் வைகோ. முரசொலி பவள விழாவில் மாணவி அனிதா மறைவுக்கு 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. கடந்த மாதம் 11-ம் தேதி நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் முரசொலி பவள விழா பொதுக்கூட்டம் நடைபெற இருந்த…

  22. செயற்குழு, பொதுக்குழுவில் முடிவெடுக்க எடப்பாடிக்கு முழு அதிகாரம்: அதிமுக நிர்வாகிகள் தீர்மானம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க Image captionஅஇஅதிமுக நிர்வாகிகள் கூட்டம். அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி எடுக்கும் முடிவே இறுதியானது என இன்று நடைபெற்ற அக்கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. …

  23. பெரியார்: யாராலும் மறக்க முடியாத மனிதர் ! | Socio Talk | பெரியார், எழுச்சியூட்டும் அரசியல்வாதியாக மட்டுமல்லாமல் சமூக சீர்திருத்ததிற்காவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், சாதி வேற்றுமைகளை அகற்றுவதற்காகவும் போராடிய மிகப்பெரிய பகுத்தறிவாளர். தமிழகத்தின் மிகப்பெரிய கழகமான திராவிடர் கழகத்தை தோற்றுவித்தவர். பெண்விடுதலைக்காகவும், சாதி மற்றும் பாலின சமத்துவம் போன்ற கொள்கைக்காகவும், திராவிடர்கள் பார்பனரல்லாதார் என்ற காரணத்தால் புறக்கணிக்கப்படுவதையும் எதிர்த்துப் போராடிய சமூக சீர்திருத்தத்தின் தந்தை.

  24. புதுடில்லி: 'பெரா' வழக்கில், 'டிமிக்கி' கொடுக்கும் தினகரனுக்கு, உச்ச நீதிமன்றம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது;மூன்று மாதத்தில், வழக்கை முடிக்க நீதிபதிகள் கெடு விதித்தனர். 'வழக்கை இழுத்தடிக்க, இது போன்ற மனுக்களை தாக்கல் செய்தால், 10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்' என, நீதிபதிகள் எச்சரித்தனர். சசிகலாவின் அக்கா மகன் தினகரன், 1996ல், பிரிட்டன் உள்ளிட்ட வெளிநாட்டு வங்கிகளில், சட்ட விரோதமாக, பல கோடி ரூபாய் முதலீடு செய்தது தொடர்பாக, அமலாக்கத் துறை, இரு வழக்குகளை பதிவு செய்தது. மனு தாக்கல் இவை, சென்னை, எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில், 20 ஆண்டுகளாக நடந்து வருகின்றன. 'இந்த வழக்குகளை விரை…

  25. அ.தி.மு.க சண்டையில் வேட்டி கிழிந்தால் கவர்னருக்கு ஏன் வியர்க்கிறது? ப.திருமாவேலன் கவர்னர் வித்யாசாகர் ராவ்தான் தமிழ்நாட்டின் இன்றைய சூழ்நிலைக்கு வில்லன். எடப்பாடியும் பன்னீர்செல்வமும் தினகரனும் பாவம்... தாங்கள் செய்வது இன்னதென்று தெரியாமல் செய்கிறார்கள். வித்யாசாகர் ராவ் தெரிந்தே செய்கிறார். தவறுக்கு மேல் தவறைத் திட்டமிட்டுச் செய்கிறார். ஆடும் நாற்காலியில் உட்கார்ந்து இருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு முட்டுக்கொடுக்கும் இரண்டு கால்கள் கவர்னருடையவை. ‘ஏன் இப்படி நடந்துகொள்கிறார்’ என்பதற்கான காரணங்கள் பச்சையாக வெளியே தெரிந்தபிறகும், தெருவில் நாறிய பிறகும் வித்யாசாகர் ராவ் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. அவருக்கான அசைன்மென்ட் ‘அவ்வளவு’ பெரியது போல! அ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.