தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10263 topics in this forum
-
ஜெ. பிறந்தநாளில் ஆடல் பாடல்; நலத்திட்ட உதவிகளுடன் கலக்கும் பன்னீர்செல்வம் அணியினர்! ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தின் அணியைச் சேர்ந்த ஆதரவாளர்கள், சென்னையில் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்திவருகின்றனர். ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி சசிகலா, பன்னீர்செல்வம், தீபா ஆகியோர் தரப்பு ஆதரவாளர்கள், தமிழகம் முழுவதும் நலத்திட்ட உதவிகளை வழங்கிவருகின்றனர். பன்னீர்செல்வம் அணியினர் சார்பில் சென்னை தண்டையார்பேட்டை மணிக்கூண்டில், ஜெயலலிதா பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவில், ஏழை எளிய மக்களுக்கு சைச்கிள், பைக் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளைப் பன்னீர்செல்வம் வழங்க இருக்கிறார். …
-
- 0 replies
- 731 views
-
-
கேள்விக்கென்ன பதில் - 02.12.2017 ஜெ. மகள் என்பது உண்மையா...? பதிலளிக்கிறார் அம்ருதா.கேள்விக்கென்ன பதில்...
-
- 0 replies
- 543 views
-
-
ஜெ. மரணத்தின் மர்மங்கள்: விசாரணையில் உண்மைகள் வெளிவருமா ? | Socio Talk | ஒரு நாட்டின் முதலமைச்சர்கே இந்த நிலைமை என்றால் ஒரு சாமானிய மக்களின் நிலை... 75 நாட்கள் மருத்துவமனையில் இருந்த ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5 மரணமடைந்தார். இது இன்று வரை மர்மமாகவே உள்ளது. ஜெ. வின் மரணம் கொலையா அல்லது இயற்கை மரணமா என்று கண்டு அறிய விசாரணை கமிஷன் ஒரு அமைக்கப்பட்டு விசாரணை நடத்த முதலமைச்சர் ஆரம்பித்துள்ளார். ஜெ.வை ஏன் யாரும் பார்க்க அனுமதிக்கவில்லை, அ.தி.மு.க உறுப்பினர்களின் பொய்யான தகவல்கள் மற்றும் பல. இந்த விசாரணை கமிஷன் மூலம் என்னென்ன உண்மைகள் வெளிவர போகுது என்று பார்ப்போம்.
-
- 0 replies
- 411 views
-
-
ஜெ. மரணத்தில் சந்தேகம்! பன்னீர்செல்வத்தை சந்தித்த பின் மதுசூதனன் பகீர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கருதுகிறேன் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்த பின்னர் அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் பரபரப்பு தகவலை வெளியிட்டார். அதிமுக அவைத் தலைவராக மதுசூதனன் இருந்து வருகிறார். சசிகலா ஆதரவாளராக செயல்பட்டு வந்த மதுசூதனன் இன்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை திடீரென சந்தித்துப் பேசினார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மதுசூதனன், "யாருடைய வற்புறுத்தலும் இன்றி பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளேன். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கையைப் பெற்றவர் ஓ.பன்னீர்செல்வம். ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கருதுகிறேன். …
-
- 2 replies
- 517 views
-
-
ஜெ. மரணத்தில் நீதி கிடைக்கும் வரை தர்மயுத்தம் தொடரும்! ஆர்.கே.நகரில் பன்னீர்செல்வம் சூளுரை ஜெயலலிதா மரணத்தில் நீதி கிடைக்கும் வரை தர்மயுத்தம் தொடரும் என்று ஆர்.கே.நகரில் பன்னீர்செல்வம் ஆவேசமாக பேசினார். ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி சென்னை ஆர்.கே.நகரில் நடந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், "அ.தி.மு.க.வை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது. ஒன்றரை கோடி தொண்டர்களால் உருவாக்கப்பட்டதுதான் அ.தி.மு.க. ஆட்சியும், கட்சியும் நம்மிடத்தில் தந்து விட்டு ஜெயலலிதா மறைந்து இருக்கிறார். யாருடைய குடும்பத்தில் கட்சியும், ஆட்சியும் சென்று விடக்கூடாது என்று எண்ணி அவர்கள் மீது ஜெயலலிதா நடவடிக்கை எடுத்தார். அவர்களையெல்லாம் வீட்டை விட…
-
- 2 replies
- 700 views
-
-
ஜெ. மரணம்! நீதிபதி கருத்தை விமர்சித்த வைகோ மீது அவதூறு வழக்கு! ஜெயலலிதா மரணம் குறித்து கருத்து தெரிவித்த நீதிபதி வைத்தியநாதனுக்கு கண்டனம் தெரிவித்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா கடந்த 5-ம் தேதி மரணம் அடைந்தார். இந்த நிலையில், ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், இந்த வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 3 பேர் கொண்ட அமர்வு விசாாரிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியும் அதிமுக பிரமுகர் ஜோசப் ஆண்டனி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன…
-
- 0 replies
- 400 views
-
-
ஜெ. மரணம்! மாநிலங்களவையில் கொந்தளித்த மைத்ரேயன்! குறுக்கிட்ட அதிமுக பெண் எம்.பி-க்குக் குட்டு ஜெயலலிதா மரணம் தொடர்பாக மத்திய அரசு விசாரணை நடத்த வேண்டும் என்று மாநிலங்களவையில் பன்னீர்செல்வம் ஆதரவு எம்பி மைத்ரேயன் ஆவேசத்துடன் பேசினார். அப்போது, அ.தி.மு.க பெண் எம்பி விஜிலா தொடர்ந்து குறுக்கிட்டதால் கோபம் அடைந்த துணைத் தலைவர் குரியன், அவரைக் கண்டித்தார். ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக நீதிவிசாரணை வேண்டும் என்று வலியுறுத்தி மாநிலங்களவையில் மைத்ரேயன், லெட்சுமணன், சசிகலா புஷ்பா ஆகியோர் அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகர் இருக்கையின் அருகே சென்று பதாகைகளை ஏந்தி, கூச்சல் போட்டனர். துணை சபாநாயகர் பி.ஜே.குரியன் அவர்களை இருக்கையில் சென்று அமரச் சொன்னார். அதன்பின்ன…
-
- 0 replies
- 335 views
-
-
ஜெ. மரணம்... - ரிச்சர்ட் பியெலுக்கு 12 கேள்விகள்! செப்டம்பர் மாதம் 22-ம் தேதி தொடங்கி மூன்று மாதங்களாக அப்போலோவில் தொடர் சிகிச்சையில் இருந்த ஜெயலலிதாவுக்கு டிசம்பர் 4-ம் தேதி திடீர் இதயத்துடிப்பு முடக்கம் ஏற்பட்டது. அதுவரை ‘சிகிச்சையில் நல்ல முன்னேற்றம் இருக்கிறது. எப்போது வேண்டுமானாலும் வீடு திரும்பலாம்’ என சொல்லி வந்தார்கள். டிசம்பர் 5-ம் தேதி வரை அளிக்கப்பட்ட ’எக்மோ’ உள்ளிட்ட தீவிர சிகிச்சைகள் எதுவும் பலனளிக்காமல் அன்றிரவு 11:30-க்கு ஜெயலலிதா இறந்ததாக அப்போலோ மருத்துவமனை அதிகாரபூர்வமாக அறிவித்தது. ‘லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பியெல் ஆலோசனைப் படிதான் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது’ என அப்போலோ நிர்வாகம் சொல்லியது. பரபரப்பான அந்தக் கடைசி இரண்டு நாட்க…
-
- 0 replies
- 584 views
-
-
ஜெயலலிதா | கோப்புப் படம். ஜெயலலிதாவின் மருத்துவச் செலவு ரூ.6 கோடியை அப்போலோ மருத்துவமனை நிர்வாகத்திடம் அதிமுக வழங்கியது. முதல்வராக இருந்த ஜெய லலிதா திடீர் உடல்நலக் குறைவால் கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி இரவு 10.30 மணி அளவில் சென்னை கிரீம்ஸ் சாலையில் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே 5 முறை யும், எய்ம்ஸ் டாக்டர்கள் குழுவினர் 3 முறையும் சென்னை வந்து முதல்வருக்கு சிகிச்சை அளித் தனர். அவர்கள் கொடுத்த ஆலோ சனைகளின்படி அப்போலோ மருத்துவமனை மூத்த டாக்டர்கள் குழுவினர் சிகிச்சை அளித்து வந்தனர். சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் இருந்து வந்த 2 பெண் பிசியோ தெரபி நிபுணர்கள், ஜெயலலிதா வுக்கு பி…
-
- 0 replies
- 396 views
-
-
ஜெ. மறைவுக்குப் பின் அதிமுக: மூன்று மாத நிலவர பார்வை அமைச்சர் எடப்பாடி பழனிசாமி | கோப்புப் படம். அதிமுக சட்டப்பேரவை கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமியை தமிழக முதல்வராக நியமித்து ஆளுநர் வித்யாசாகர் ராவ் உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம் தமிழகத்தின் 21-வது முதல்வராக இன்று மாலை 4 மணிக்கு எடப்பாடி பழனிசாமி பதவியேற்கிறார். மேலும், சட்டப்பேரவையில் 15 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் அவகாசம் வழங்கியிருக்கிறார். பின்னணி தமிழகத்தில் கடந்த 2016-ல் நடந்த சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சியைப் பிடித்தது. இதையடுத்து, தமி…
-
- 0 replies
- 424 views
-
-
ஜெ. மீதான 'பிறந்தநாள் பரிசு வழக்கு' 4 வாரங்கள் ஒத்திவைப்பு தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா தமிழக முதல்வர் ஜெயலலிதா முறைகேடாக பிறந்தநாள் பரிசு பெற்றதாக தொடுக்கப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனுவின் இறுதிக்கட்ட விசாரணையை இந்திய உச்சநீதிமன்றம் நான்கு வாரங்களுக்கு ஒத்திவைத்துள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.சி.கோஷ் மற்றும் அருண் மிஸ்ரா ஆகியோரை உள்ளடக்கிய அமர்வு முன்பாக இந்த வழக்கின் விசாரணை இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அப்போது ஜெயலலிதா தரப்பிலான வாதத்தில், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே இந்த வழக்கு பதியப்பட்டது என்றும், அதிலும் காலம் கடந்தே அந்த வழக்கு பதியப்பட்டது என்றும் கூறப்பட்டது. மேலும், இதே காரணங்களை ஏற்றக்கொண்டே, முன்னதாக உயர்நீதிமன்றமும் …
-
- 0 replies
- 494 views
-
-
தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு நாளை சனிக்கிழமையன்று வழங்கப்படவிருக்கிறது. கடந்த 18 ஆண்டுகளாக நடந்துவந்த இந்த வழக்கின் வாதப் பிரதிவாதங்கள் ஆகஸ்ட் மாதம் 28ஆம் தேதி முடிவடைந்தன. செப்டம்பர் 20ஆம் தேதியன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று இந்த வழக்கை விசாரித்துவந்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கல் டி குன்ஹா முன்னர் அறிவித்திருந்தார். பின்னர், பாதுகாப்புக் காரணங்களுக்காக தீர்ப்பு வழங்கப்படும் இடமும் தேதியும் மாற்றப்பட்டன. தீர்ப்பு செப்டம்பர் 27ஆம் தேதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தற்போதைய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, 1991 முதல் 1996 வரை முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது குற்றம…
-
- 118 replies
- 14.6k views
-
-
ஜெ. மேல்முறையீட்டு மனு விசாரணையில் சேர்க்கக் கோரி தி.மு.க. பொதுச்செயலர் அன்பழகன் மனுத்தாக்கல்! பெங்களூர்: சொத்துக் குவிப்பு வழக்கில் தமக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து அ.தி.மு.க. பொதுச்செயலர் ஜெயலலிதா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் தங்களையும் சேர்க்கக் கோரி தி.மு.க. பொதுச்செயலர் க. அன்பழகன் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டுகாலம் சிறைத் தண்டனை விதித்துள்ளது. மேலும் ஜெயலலிதாவுக்கு ரூ100 கோடி அபராதமும் சசிகலா உள்ளிட்ட மூவருக்கு தலா ரூ10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. ஜெ. மேல்முறையீட்டு …
-
- 0 replies
- 344 views
-
-
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளது. இப்போது வெளியானது ஒன்றும் இறுதித் தீர்ப்பு அல்ல என்று பாஜக கருத்துத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பாஜக துணைத் தலைவர் முக்தர் அப்பாஸ் நக்வி கூறியதாவது: “இது ஒன்றும் இறுதித்தீர்ப்பு அல்ல. நீதித்துறை சார்ந்த நடவடிக்கைகளின் ஒரு பகுதிதான் இது. தனக்கு எதிராக வழங்கப்பட்டுள்ள தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கான வாய்ப்பு ஜெயலலிதாவுக்கு உள்ளது. இது ஒரு உணர்வுப்பூர்வமான விஷயமாகும். ஜெயலலிதாவின் அரசியல் எதிரிகள், இந்த சந்தர்ப்பத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்பது துரதிர்ஷடவசமானது” என்றார். மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறும்போது, “தீர்ப…
-
- 0 replies
- 686 views
-
-
ஜெ. வீடியோ ஆதாரத்தை பொதுவெளியில் வெளியிடாதது ஏன்?- தினகரன் விளக்கம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் இருந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ ஆதாரங்களை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடாதது ஏன் என்பது குறித்து அதிமுக அம்மா அணியின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விளக்கமளித்துள்ளார். ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது அவர் வார்டுக்கு கொண்டு வரப்பட்ட பின்னர், ஜெயலலிதா சாதாரணமாக டிவி பார்க்கும் காட்சிகளை சசிகலா வீடியோவாக எடுத்த காட்சிகள் தங்களிடம் உள்ளதாகவும் நீதிமன்ற விசாரணையில் வெளியிடுவோம் என்றும் தினகரன் தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தினகரனிடம் 7…
-
- 0 replies
- 364 views
-
-
ஜெ. வைத்த துளசி மாடம்... சுற்றிவந்த சசிகலா... டி.வி பார்க்கும் இளவரசி... மிரட்டும் சுதாகரன்! பரப்பன அக்ரஹாரா ஜெயில் வாழ்க்கை தமிழகத்தைத் தாண்டி பெங்களூருவிலும் ஆயிரம் வாட்ஸ் கேள்வியாக இருப்பது, ‘சிறைக்குள் சசிகலா என்ன செய்துகொண்டிருக்கிறார்’ என்பதுதான். ‘‘ஆடைகளும் இடமும் மட்டுமே சக கைதிகளுக்கு வழங்கப்பட்டிருப்பவை போல இருக்கின்றன. இவை தவிர, ‘சிறப்பு ஏற்பாட்டில்’ எல்லா வசதிகளும் இவர்களுக்குக் குறைவில்லாமல் கிடைக்கின்றன’’ என்கிறார்கள், இந்தச் சிறையை நன்றாக அறிந்தவர்கள். சசிகலா சிறைக்குள் சென்ற முதல் நாளில், கடுமையாக நடந்துகொள்வதைப் போல சிறைத்துறை காட்டிக்கொண்டது. ஒரே நாளில், சிறையின் நெளிவு சுளிவுகளை சசிகலா தரப்பு கண்டுகொண்டது. அதன்பின், அவர்களுக்கான …
-
- 0 replies
- 860 views
-
-
ஜெ., - சசி வாங்கி குவித்த நிலங்கள் : திரும்ப கிடைக்குமா என விவசாயிகள் ஏக்கம் திருநெல்வேலி: ஏக்கருக்கு, 2,000 ரூபாய்க்கு வாங்கப்பட்ட ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங் கள், ஜெ., இறந்ததை அடுத்து, தங்களுக்கு திரும்ப கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர். கடந்த 1991 - 96 அ.தி.மு.க., ஆட்சியில், முதல்வர் ஜெயலலிதா, சசிகலா பெயர்களில், தமிழகம் முழுவதும் ஏராளமான சொத்துக்கள் வாங்கி குவிக்கப்பட்டன. அவர்கள் வாங்கி குவித்த சொத்து பட்டியலில், துாத்துக்குடி மாவட்டம், கருங்குளம் அருகே சேரகுளம், வல்லகுளம், மீரான்குளம், அரசர்குளம் உள்ளிட்ட இடங்களில், 969 ஏக்கர் நிலங்களும் அடக்கம். வானம் பார்த்த பூ…
-
- 0 replies
- 603 views
-
-
ஜெ., அண்ணன் மகள் தீபா ஆதரவாளர்கள் சென்னையில்... முகாம்!:அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தீவிர ஆலோசனை:பேனர்களை அகற்றிய போலீசாருடன் பல இடங்களில் மோதல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள், தீபாவின் ஆதரவாளர்கள், சென்னையில் முகாமிட்டுள்ளனர். அவர்களுடன் தீபா ஆலோசனை நடத்தி, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்கிறார். இதற்கிடையில், தமிழகத்தின் பல பகுதிகளில், தீபா பேனர்களை அகற்றிய போலீசாருடன், அவரது ஆதரவாளர்கள் மோதலில் ஈடுபட்டனர். அ.தி.மு.க., பொதுச்செயலராக, சசிகலா நியமிக்கப்பட்டதற்கு, கட்சியின் கீழ்மட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பெரும்பாலானோர், தீபாவை அரசியலுக்கு வரும்படி, அழைப்பு விடுத்து வருகின்றனர். த…
-
- 0 replies
- 281 views
-
-
ஜெ., அண்ணன் மகள் தீபா புத்தாண்டில் புது முடிவு சென்னை:''அரசியலுக்கு வருவது தொடர்பான முடிவை, ஜன., 2ல் அறிவிப்பேன்,'' என, அ.தி.மு.க., தொண்டர்களிடம், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா உறுதி அளித்தார். ஜெயலலிதாவால், கட்சியில் இருந்து நீக்கப் பட்டவர் சசிகலா; அவரது குடும்பத்தி னரை, ஜெயலலிதா இருந்த வரை, கட்சியில் சேர்க்க வில்லை. சசிகலாவிற்கு எந்த பதவியும் வழங்கவில்லை. ஆனால், ஜெயலலிதா மறைந் ததும், அவரால் விலக்கப்பட்ட சசிகலா குடும்பத்தி னர் அனைவரும் ஒன்றாகினர். கட்சியை தங்கள்கட்டுப்பாட்டில் கொண்டு வர, தொடர் நடவடிக் கைகள் எடுத்தனர். இதனால், சசிகலா, அ.தி.மு.க., பொதுச் செயலராகி உள்ளார…
-
- 0 replies
- 443 views
-
-
ஜெ., ஆதரவு அதிகாரிகள் அடுத்தடுத்து ராஜினாமா ஏன்? ஜெ.,வால் நியமிக்கப்பட்ட, ஓய்வு பெற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், ஒவ்வொருவராக ராஜினாமா செய்து வருவது, அரசு வட்டாரத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஜெ., முதல்வராக இருந்த போது, தலைமைச் செயலராக பணியாற்றி, ஓய்வு பெற்ற ஷீலா பாலகிருஷ்ணன், அரசு ஆலோசகராக நியமிக்கப்பட்டார். ஓய்வு பெற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரி வெங்கடரமணன், முதல்வர் அலுவலக செயலராக பணியாற்றினார். மழை நீர் சேகரிப்பு திட்டத்தை, ஜெ.,க்கு எடுத்துரைத்து, அவருக்கு பெயர் கிடைக்க வழிவகுத்த, ஓய்வு பெற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரி சாந்தா ஷீலா நாயர், முதல்வர் அலுவலக சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். கடும் விமர்சனம் ஓய்வு பெற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், ஜெ.,வின் நம்…
-
- 0 replies
- 267 views
-
-
ஜெ., உடல் வலிக்கு சசி கொடுத்த மாத்திரை எது? கோடநாட்டில் பணியாற்றிய டிரைவர் சந்தேகம் 26 'முன்னாள் முதல்வர் ஜெ., மரணம் குறித்து, சி.பி.ஐ., விசாரணை வேண்டும்' என, அ.தி.மு.க.,வின் பன்னீர் அணியைச் சேர்ந்தவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதற்காக, உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதாகவும் அறிவித்துள்ளனர். இந்த அணியைச் சேர்ந்த, முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன், 'மாடியிலிருந்து ஜெ., தள்ளி விடப்பட்டதாக' பகிரங்கமாக சந்தேகம் கிளப்பியுள்ளார். கொலை முயற்சி இந்நிலையில், கோடநாட்டில் பல ஆண்டுகளாக டிரைவராக பணியாற்றிய திவாகர், 42, அங்கு நடந்த பல்வேறு விஷயங்களை பற்றி கேள்வி எழுப்பி, ஜெ., மரணம் குறித்…
-
- 0 replies
- 482 views
-
-
சென்னை : உடல்நலக் குறைவு காரணமாக தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை குறித்து விசாரிப்பதற்காக 2வது முறையாக தமிழக கவர்னர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் வந்துள்ளார். கவர்னர் வந்தார் : செப்டம்பர் 22 ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை குறித்து விசாரிப்பதற்காக அக்டோபர் 1ம் தேதி வித்யாசாகர் ராவ், அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தார். பின்னர் அவர் பூரண நலம் பெறும் வரை அவர் கவனித்து வந்த இலாக்காக்களை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கவனிப்பார் என அறிவிப்பு வெளியிட்டார். இந்நிலையில் ஜெயலலிதாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர…
-
- 3 replies
- 934 views
-
-
ஜெ., குடியிருந்த வீட்டில் கும்மாளமிடும் சசி சொந்தங்கள் * அமைச்சர் பாண்டியராஜன் ஆவேசம் ''சொத்து குவிப்பு வழக்கில், சசிகலாவுக்கு சாதகமான தீர்ப்பு வந்தாலும், அவரை முன்னி றுத்தி, ஓட்டு கேட்பது தற்கொலைக்கு சமமானது,'' என, அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார். முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பாண்டியராஜன், நமது நாளிதழுக்கு அளித்த பேட்டி: * முதல்வர் பன்னீர்செல்வத்தை ஆதரிக்க வேண்டும் என்ற எண்ணம், திடீரென தோன்றியது ஏன்? ** கடந்த சில நாட்களாக, தமிழகத்தில் இருந்து மட்டுமின்றி, வெளிநாடுகளில் உள்ள தமிழர்களும், என்னை தொடர்பு கொண்டனர். முதல்வர் பன்னீர்ச…
-
- 0 replies
- 1k views
-
-
ஜெ., கைரேகை பதிவு கேட்டு சிறை அதிகாரிக்கு உத்தரவு சென்னை: மறைந்த முதல்வர், ஜெயலலிதா வின் கைரேகை பதிவு இருந்தால், தாக்கல் செய்யும்படி, பெங்களூரு சிறை அதிகாரி மற்றும், 'ஆதார்' அட்டை வழங்கும் ஆணைய அதிகாரிக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில், அ.தி.மு.க., வேட்பாளர், போஸ் வெற்றி பெற்றார்.அதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், தி.மு.க., வேட்பாளர், டாக்டர் சரவணன் வழக்கு தொடுத்துள்ளார். இந்த வழக்கில், வேட்பாளர் நியமனம் மற்றும் சின்னம் ஒதுக்கீடுக்கான படிவத்தில் இருந்த, ஜெயலலிதாவின் கைரேகை குறித்து, சந்தேக…
-
- 0 replies
- 282 views
-
-
ஜெ., கைரேகை பெற டாக்டருக்கு ரூ.5 லட்சம்? தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு, 2016 நவம்பரில், தேர்தல் நடந்தது. அப்போது, அ.தி.மு.க., பொதுச்செயலரான ஜெயலலிதா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அ.தி.மு.க., வேட்பாளர்களுக்கு, சின்னம் ஒதுக்கக் கோரும் ஆவணத்தில், ஜெ., கையெழுத்துக்கு பதிலாக, அவரது கைரேகை வைக்கப்பட்டது. சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை டாக்டர் பாலாஜிமுன்னிலையில், கைரேகை பெறப்பட்டதாக, அ.தி.மு.க., விளக்கம் அளித்திருந்தது. இந்நிலையில், அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில், வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில், பல ஆவணங்கள் சிக்கின. அதில், ஜெ., கைரேகை வைத்தார் என்பதை உறுதி செய்த, டாக்டர் ப…
-
- 4 replies
- 1.2k views
-