Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. 'தினகரன் வீட்டுக்குத்தான் கெளம்புனேன்... ஆனா, பா.ஜ.க-ல சேர்ந்துட்டேன்'! - கலகல பொன்னம்பலம் அ.தி.மு.கவில் இருந்து விலகி, பா.ஜ.கவின் தன்னை இணைத்துக் கொண்டார் நடிகர் பொன்னம்பலம். ' இரண்டு அணிகளும் இணையும் என்று இவ்வளவு நாள் காத்திருந்தேன். அவர்கள் இணைந்திருந்தால், நான் ஏன் பா.ஜ.க பக்கம் போகப் போகிறேன்' என்கிறார் நடிகர் பொன்னம்பலம். ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு அ.தி.மு.க. தொண்டர்கள் மதில்மேல் பூனையாக உள்ளனர். சசிகலா அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணி, டி.டி.வி.தினகரன் அணி, தீபா அணி என பிரிந்துள்ளனர் அ.தி.மு.க.வினர். 'கட்சியில் தங்களுக்கு உரிய மரியாதை இல்லை' எனத் தொண்டர்களே புலம்பி வருகின்றனர். இந்நிலையில், 2011 ஆம் ஆண…

  2. ‘குடும்பச் சண்டையில் அவர்களே அழிவார்கள்!’ - எம்எல்ஏ-க்களிடம் சுட்டிக் காட்டிய எடப்பாடி பழனிசாமி #VikatanExclusive சசிகலா குடும்பத்துக்குள் ஏற்பட்டுள்ள சண்டையை மௌனமாக கவனித்து வருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. ‘தினகரன் தரப்பினர் அளிக்கும் பரிந்துரைகளை முதல்வர் அலுவலகம் ஏற்பதில்லை.' குடும்பச் சண்டையில் அவர்களே அழிந்து போவார்கள். நாம் எதுவும் செய்ய வேண்டியதில்லை' என்பதுதான் முதல்வரின் மனநிலையாக இருக்கிறது' என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில். திகார் சிறையில் இருந்து வெளிவந்த அன்று, 'கட்சிப் பணியில் ஈடுபட இருக்கிறேன்' என தினகரன் அறிவித்த தினத்தில் இருந்தே, மன்னார்குடி குடும்ப உறவுகளுக்குள் புகைச்சல் ஏற்பட்டுவிட்டது. திவாகரனும் நடராசனு…

  3. சட்டப்பேரவையில் இருந்து திமுகவினர் வெளியேற்றம்: ஸ்டாலின் தலைமையில் சாலை மறியல் சாலை மறியலில் ஈடுபட்டுள்ள திமுகவினர் | படம்: ம.பிரபு பண பேர விவகாரம் வீடியோ தொடர்பாக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவர சபாநாயகர் அனுமதி மறுத்ததைக் கண்டித்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். ராஜாஜி சாலையில் அமர்ந்து அவர்கள் மறியலில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக, பண பேர விவகாரம் குறித்து வெளியான வீடியோ தொடர்பாக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்து விவாதிக்க வேண்டும் என்ற திமுக கோரிக்கை விடுத்தது. ஆனால், திமுக கோரிக்கையை ஏற்க…

    • 6 replies
    • 1.3k views
  4. பிணிகள் ஆன அணிகள்... அ.தி.மு.க. இணைப்பில் தொடர் சிக்கல்! விக்கிரமாதித்யனின் வேதாளக் கதையை விட சுவாரஸ்யமாய் நீள்கிறது அ.தி.மு.க இரு அணிகளின் இணைப்பு விவகாரம். இரு அணிகள் என்பதும்கூட கண்ணுக்குத் தெரிகிற பிளவு. இரு அணிகளுக்குள்ளும் தலா நான்கு பிளவுகள் உருவாகியிருப்பதுதான் உண்மை. இந்நாள் எம்.எல்.ஏ-க்களாக உள்ள முன்னாள் அமைச்சர்கள் அணி ஒன்று, 'கூவத்தூர் உறுதிமொழியைக் காப்பாற்ற வலியுறுத்தி கச்சை கட்டுகிறது'. முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடமே அடிக்கடி அப்பாயின்ட்மென்ட் கேட்டு பல அதிர்ச்சிகளைத் தருகிறது இந்நாள் அமைச்சர்களில் ஓர் அணி. இந்த இரு அணியினரையும் தெற்றுப்பல் தெரியப் பேசி அனுப்பும் எடப்பாடி, இதில் எந்த அணியைச் சேர்ந்தவர் என்றே அடையாளம்…

  5. ஜெயலலிதாவுக்கு சோ எழுதிய கடிதம்! போயஸ் கார்டன் ஃபிளாஷ்பேக் மனிதர்கள் வாழ்வில் வீடு என்பது மனித உறவுகளுக்கு ஈடான ஓர் பந்தம். ரத்தமும் சதையுமாக மனிதர்கள் எப்படி உணர்வுபூர்வமானவர்களோ அப்படி செங்கற்களாலும் சிமென்டினால் கட்டப்பட்ட வீடுகளுக்கும் அந்த மனிதர்களோடு அவர்கள் வாழும் காலத்திலும் அதன்பின்னும் நெருக்கமான ஒரு பந்தம் இருப்பதுண்டு. போயஸ்கார்டனில் 81, இலக்கமிட்ட வேதா இல்லம் ஜெயலலிதாவின் வெற்றி தோல்விகளைப் பார்த்த இல்லம். இளமைக்காலம் துவங்கி அவரது இறப்பின் இறுதிநிமிடங்கள் வரை அந்த வீட்டில் மிதந்துகிடக்கிற உணர்வுகளுக்கு வயது கிட்டதட்ட அரை நுாற்றாண்டு. 'அவரது அழுகையை ஆறுதல்படுத்தியிருக்கிறது.’ ‘தனிமையை தட்டிக்கொடுத்து மறக்கச்செய்திருக…

  6. நம்பிக்கை வாக்கெடுப்பில் லஞ்ச பேரமா? வீடியோ குறித்து விசாரணை கோருகிறது திமுக தமிழக சட்டப்பேரவை உறுப்பினர்கள் சிலரிடம் லஞ்ச பேரம் செய்யப்பட்டதாக கூறப்படும் விவகாரம் தொடர்பாக உயர்மட்ட விசாரணை வேண்டும் என திமுக இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் கோரியுள்ளது. படத்தின் காப்புரிமைFACEBOOK: M.K.STALIN அத்தோடு ஜூலை 11 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்த, பழனிச்சாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பான வழக்கையும் முன்னதாகவே விசாரிக்க வேண்டிய கட்டாயம் தற்போது உருவாகியுள்ளதாக அந்த கோரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மு.க.ஸ்டாலின் தரப்பு வழக்கறிஞர் சண்முகசுந்தரம் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பித்த மனுவில், பொறு…

  7. கீழடியின் அகழாய்வு நடைபெறும் இடம் | கோப்புப் படம் சிவகங்கை கீழடியில் அகழாய்வு பணி மேற்கொண்ட தொல்லியல் கண்காணிப்பாளர் இடமாற்றம் செய்யப்பட்டது, அகழாய்வு நடைபெற்ற இடம் மூடப்பட்டது போன்றவை தமிழர்களின் வரலாற்றை மறைக்க முயற்சி செய்வது போல் உள்ளது என உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிருப்தி தெரிவித்துள்ளது. சென்னையைச் சேர்ந்த கனிமொழி மதி உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த பொதுநலன் மனு: "மதுரையில் இருந்து 17 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கீழடியில் நடைபெற்ற அகழாய்வில் 2000 ஆண்டு பழமையான 5300 பழமையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இங்கு 110 ஏக்கர் அளவில் பழங்கால பொருட்கள், ஆவணங்கள் புதைந்துள்ளன. அதே நேரத்தில் சுமார் ஒரு ஏக்கர் அளவிலேயே ஆய்வுகள் நடத்தப…

  8. ‘சசிகலா குடும்பத்தின் தயவு தேவையில்லை!’ - தினகரன் கோரிக்கையை நிராகரித்த பா.ஜ.க. குடியரசுத் தலைவர் வேட்பாளர் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி வருகின்றன ஆளும் பா.ஜ.கவும் காங்கிரஸ் கட்சியும். 'தமிழ்நாட்டில் அ.தி.மு.க அரசின் ஆதரவு இருப்பதால்தான், சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் அமைதியாக இருக்கின்றன. 'தன்னை நோக்கி பா.ஜ.க தலைமை வரவேண்டும்' என எதிர்பார்த்தார் தினகரன். அவரது நம்பிக்கை பொய்த்துப் போய்விட்டது' என்கின்றனர் பா.ஜ.க வட்டாரத்தில். பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைபட்டிருக்கும் சசிகலாவை கடந்த 5 ஆம் தேதி சந்தித்தார் டி.டி.வி.தினகரன். 'கட்சி ஒன்றுபட வேண்டும் என்று நினைத்ததால் ஒதுங்கி இருந்தேன். கட்சிப் பணிகளில் ஈடுபட இருக்கிறேன். அறுபது நாள்கள…

  9. ஜெ. சிகிச்சை பெற்றபோது எடுத்த படத்தை வெளியிட விரும்பவில்லை: ரத்த வாரிசுகளுக்கே போயஸ் இல்லம் சொந்தம் - டிடிவி தினகரன் திட்டவட்ட அறிவிப்பு டிடிவி தினகரன் | கோப்புப் படம்: எல்.சீனிவாசன். மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெறும் படம் எங்களிடம் உள்ளது. ஆனால், அதை எந்த விதத்திலும் வெளியிட விரும்ப வில்லை என அதிமுக அம்மா கட்சி துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். போயஸ் தோட்ட இல்லம், ஜெய லலிதாவின் ரத்த வாரிசுகளுக்கே சொந்தம் என்றும் அவர் கூறி யுள்ளார். இது தொடர்பாக ‘தி இந்து’ நாளிதழுக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியிருப்பதாவது: ‘வேதா நிலையம்’ அமைந்துள்ள போயஸ் த…

  10. 'கோடிகளில் பேரம் பேசிய அ.தி.மு.க அணிகள்'... ஆதாரத்தை வெளியிட்டது டைம்ஸ் நவ்! ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க பல்வேறு அணிகளாக சிதறிக் கிடக்கின்றன. குறிப்பாக, கடந்த பிப்ரவரி மாதம் ஓ.பன்னீர் செல்வம் போர் கொடி எழுப்பியப் பிறகு நடந்த அரசியல் திருப்பங்கள் அனைவரும் பார்த்ததுதான். எம்.எல்.ஏ-க்கள் அணி மாறியது, கூவத்தூர் ரிசார்ட், நம்பிக்கை வாக்கெடுப்பு, எடப்பாடி ஆட்சி என்று கடந்த சில மாதங்களில் பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில், எம்.எல்.ஏ-க்கள் கூவத்தூர் ரிசார்ட்டில் இருந்தபோது, அவர்களுக்கு பன்னீர்செல்வம் அணி மற்றும் சசிகலா அணி கோடிகளில் பேரம் பேசியதாக, 'டைம்ஸ் நவ்' ஆங்கில தொலைக்காட்சி ஆதாரங்களை வெளியிட்டுள்ளது. அதில், சசிகலா அணியில் இர…

  11. 135 பேர் யார் எந்தப் பக்கம்? டெல்லி திகார் சிறையில் இருந்து திரும்பிய தினகரனுக்கு அ.தி.மு.க-வில் கிடைத்திருக்கும் வரவேற்பு, எடப்பாடி அணிக்கு அதிர்ச்சி தந்துள்ளது. பெங்களூரு சிறையில் சசிகலாவைச் சந்தித்தபோது, தினகரனை அடுத்த 60 நாள்களுக்குப் பொறுமை காக்கும்படி அட்வைஸ் செய்து அனுப்பியிருந்தார். ஆனால், தினகரன் பொறுமை காக்கவில்லை. அடுத்தடுத்து, எம்.எல்.ஏ-க்களைச் சந்திக்க ஆரம்பித்துவிட்டார். இதுவரை அவரை வீடு தேடிப் போய் சந்தித்த எம்.எல்.ஏ-க்கள் 32 பேர். ‘இத்தனை எம்.எல்.ஏ-க்கள் எப்படிப் போனார்கள்? யார் லாபி செய்தது? உளவுத்துறை எப்படிக் கோட்டை விட்டது?’ என்கிற கேள்விகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளர்களிடம் கேட்டு வருகிறார். வெற்றிவேல்,…

  12. சீராய்வு மனுவில் நீதி கிடைக்கும், சசிகலா மீண்டு வருவார்: கணவர் நடராஜன் பேட்டி சொத்து குவிப்பு வழக்கின் சீராய்வு மனுவில் நீதி கிடைக்கும். எனது மனைவி சசிகலா சிறையில் இருந்து மீண்டு வருவார் என அவரது கணவர் நடராஜன் தெரிவித்துள்ளார். சென்னை: அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலாவின் கணவர் நடராஜன் டி.வி. சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:- ஜெயலலிதா அ.தி.மு.க.வின் தலைவராக வருவதற்கு நாங்கள்தான் பின்னணியில் இருந்தோம். 1980-ம் ஆண்டுவாக்கில் ஜெயலலிதா அரசியலுக்கு வந்த காலத்தில் நாங்கள் அவருக்கு உதவியாக செயல்பட்டோம். எம்.ஜி.ஆர். இறந்த போது, அந்த தக…

  13. போயஸ் கார்டன் ஜெ., வீட்டுக்கு விரைந்த தீபா..! போயஸ் கார்டன் வேதா இல்லத்திற்கு ஜெ.தீபா வந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, தனிப்பேரவை தொடங்கி நடத்தி வருகிறார். ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லமான 'வேதா இல்லம்' தனக்குதான் சொந்தம் என தீபா கூறிவந்தார். இந்நிலையில், இன்று திடீரென போயஸ் கார்டன் இல்லத்திற்கு வந்தார் தீபா. ஆனால், அங்கிருந்த தனியார் நிறுவன செக்யூரிட்டிகள் தீபாவை உள்ளே அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், 'தினகரன் ஆதரவாளர்கள் தங்களை 'வேதா இல்ல'த்துக்குள் நுழைய அனுமதிக்க மறுக்கின்றனர். எங்களை உள்ளே செல்லவிடாமல் அவர்கள் தடுக்கின்றனர்', என தீபா ஆதரவாளர்கள…

  14. ஒட்டி உறவாடுவதா; ஒதுக்கி வைப்பதா? குழப்பத்தில் தவிக்கும் தமிழக மந்திரிகள் சசிகலா குடும்பத்தை விரட்டவும் முடியாமல், ஒட்டி உறவாடவும் முடியாமல், அமைச்சர்கள் தடுமாறி வருகின்றனர். ஜெ., இருந்த வரை, அமைச்சர்கள், அவர் சொல்லுக்கு மறு சொல் கூறாமல், அடக்கமாக இருந்தனர். அவர் மறைவுக்கு பின், சசிகலா சொல்லுக்கு கட்டுப்பட்டனர். அவர் சிறைக்கு சென்றதும், தினகரன் சொல்லுக்கு கட்டுப்பட்டனர். தினகரன் சிறைக்கு சென்றதும், சுதந்திரமாக செயல்படத் துவங்கினர். கடும் அதிர்ச்சிஅதே நிலையை தற்போதும் தொடர விரும்புகின்றனர். எனவே, சசிகலா மற்றும் தினகரனை சந்திக்க, யாரும் செல்ல வில்லை. இது, சசிகலா குடும்பத்தின ருக்கு, கட…

  15. சூடுபிடிக்கிறது ! விஜயபாஸ்கர் வழக்கு விசாரணையை துரிதப்படுத்த சென்னைக்கு மாற்றம் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான, வருமான வரி வழக்கு விசாரணை, சென்னைக்கு மாற்றப்படுகிறது. இந்த வழக்கை, சென்னை யில் உள்ள தலைமை ஆணையர் தலைமையிலான குழு, விசாரிக்க உள்ளது. சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நேரத்தில், விஜயபாஸ்கர் வீடுகளில், வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். அவரது நண்பர் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களில், ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்களுக்கு, அமைச்சர்கள் மூலம், 89 கோடி ரூபாய் பணப்பட்டுவாடா செய்தது தொடர்பான ஆவணங்கள் சிக்கின; தேர்தல் ரத்து செய்யப்பட்டது. பின், அமைச்சர்…

  16. சேப்பாக்கத்தை அடுத்து மெரினாவில் விவசாயிகள் போராட்டம்!? போலீஸ் குவிப்பு! சேப்பாக்கத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், விவசாயிகள் இன்று போராட்டத்தை மெரினாவுக்கு கொண்டு செல்லலாம் என்று தகவல் வந்துள்ளது. இதையடுத்து மெரினா கடற்கரையில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர். டெல்லியைத் தொடர்ந்து சென்னையில் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர் விவசாயிகள். வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அய்யாக்கண்ணு தலைமையில் டெல்லி ஜந்தர் மந்தி…

  17. மிஸ்டர் கழுகு: ஆடும் அரசு கழுகார் உள்ளே நுழைந்ததும் டேபிளில் இருந்த ‘நமது எம்.ஜி.ஆர்’ நாளிதழை எடுத்து அவர் முன்னால் விரித்தோம். ‘‘காலையிலேயே பார்த்துவிட்டேன். தலைப்புச் செய்தியைப் பற்றித்தானே கேட்கிறீர்?” எனச் சிரித்தார். ‘ஆமாம்’ என்பதுபோல தலையாட்டினோம். ‘‘அ.தி.மு.க-வில் தினகரன், ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி என முக்கியமான மூன்று அணிகள் இருப்பது மாதிரி, கண்ணுக்குத் தெரியாமல் இன்னொரு கோஷ்டியும் இருக்கிறது. அதுதான் ‘நமது எம்.ஜி.ஆர் மருது அழகுராஜ் கோஷ்டி’. தினமும் மருது அழகுராஜ் என்ன நிலைப்பாடு எடுக்கிறாரோ, அதுதான் அ.தி.மு.க-வின் அதிகாரபூர்வ நாளிதழான நமது எம்.ஜி.ஆரில் வெளிவருகிறது. அந்த நிலைப்பாடு விநோதமானது. தினகரனையும் எடப்பாடியையும் ஒரே நேரத்தில…

  18. மகாராஷ்டிர முதல்வரின் மனைவியை ரஜினி சந்தித்தது ஏன்? (படங்கள்) மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸின் மனைவி அம்ருதா ஃபட்னவீஸை ரஜினி சமீபத்தில் சந்தித்தார். இதையடுத்து கலைகளில் மிகவும் ஆர்வம் கொண்ட முதல்வரின் மனைவியை ரஜினி சந்திக்கவேண்டிய காரணம் என்ன என்கிற கேள்வி எழுந்துள்ளது. ரஜினியை சந்தித்தது குறித்து சமூகவலைத்தளத்தில் வெளியிட்ட அம்ருதா, ரஜினியை இன்று சந்தித்தேன். சமூகத்தில் நிலவும் பிரச்னைகள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்து விவாதித்தோம் என்று கூறியுள்ளார். இந்நிலையில், அம்ருதா ஒரு தேர்ந்த பாடகி என்பதால் காலா படத்தில் அவர் ஒரு பாடல் பாடவுள…

  19. ஆபத்தானவர்களின் பட்டியலில் பெயர்.. மலேசியாவுக்குள் நுழைய வைகோவுக்குத் தடை!! மலேசியாவுக்குள் நுழைய ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோவுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மலேசிய நாட்டுக்கு ஆபத்தானவர்களின் பெயர் பட்டியலில் வைகோவின் பெயர் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வைகோவின் பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்றிரவு விமானத்தில் சென்னைக்குத் திருப்பி அனுப்பப்படுகிறார் அவர். விடுதலைப்புலிகள் அமைப்புடன் வைகோ தொடர்பு கொண்டிருந்ததாக மலேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ம.தி.மு.க தலைமைக் கழகம், 'மலேசியாவின் பினாங்கு மாநிலத் துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி அவர்களுடைய மகள் திருமண வரவேற்பு ஜூன் 10 சனிக்கிழமை மாலை பினாங்க…

  20. ‘ஆட்சியைக் கலைக்கவும் தயங்க மாட்டேன்!’ - எம்.எல்.ஏக்களிடம் கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி #VikatanExclusive இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தலை மனதில் வைத்து ஆட்டத்தைத் தொடங்கியிருக்கிறார் அ.தி.மு.க அம்மா அணியின் டி.டி.வி.தினகரன். 'எங்கள் ஆதரவை பா.ஜ.க நேரில் வந்து கேட்கட்டும்' என வெளிப்படையாகப் பேசத் தொடங்கியுள்ளனர் அவர் ஆதரவு எம்.எல்.ஏக்கள். இந்த ஆட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் ரசிக்கவில்லை. 'என்னுடைய தயவில்தான் ஆட்சி நீடிக்கிறது. இதை நினைவில் வைத்துக் கொண்டு பேசுங்கள்' என எம்.எல்.ஏக்களை அவர் எச்சரித்திருக்கிறார். அ.தி.மு.க அம்மா அணியின் டி.டி.வி.தினகரனை இதுவரையில் முப்பதுக்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர். நா…

  21. அதிமுகவின் இரு அணிகளும் இணைய வேண்டியது காலத்தின் கட்டாயம்: ம.நடராஜன் ம.நடராஜன் | கோப்புப் படம். அதிமுகவின் இரு அணிகளும் இணைய வேண்டியது காலத்தின் கட்டாயம் என்றும், இதனை தவறவிட்டால் காலம் நம்மை மன்னிக்காது என்றும் 'புதிய பார்வை' ஆசிரியர் ம.நடராஜன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''1987 டிசம்பர் 24-ம் தேதி எம்.ஜி.ஆர். மரணம் அடைந்ததும் அவரால் உருவாக்கப்பட்ட அதிமுகவிலும், ஆட்சியிலும் வெற்றிடம் ஏற்பட்டது. 1989 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக, காங்கிரஸ், அதிமுக (ஜெயலலிதா), அதிமுக (ஜானகி) என நான்கு முனை போட்டி நிலவியது. அந்தத் தேர்தலில் 79 லட்சம் வாக்குகள் பெற்று திமுக ஆட்சி அமைத…

  22. "நான் ராஜீவ் காந்தி மகன் வந்திருக்கேன்!" - கருணாநிதியிடம் நெகிழ்ந்த ராகுல்! பொதுவாகத் தலைவர்களைப்போலவே அவர்களின் மகன்களும் நெருக்கமாக இருப்பார்கள் என்று சொல்லப்படுவது உண்டு. ஆனால், ராஜீவ் காந்தி, சோனியா காந்தியுடன் கருணாநிதிக்கு இருந்த சகோதரத்துவம், அவர்களின் மகன்களான ராகுல் காந்திக்கும், ஸ்டாலினுக்கும் இடையே இருந்ததில்லை. அவர்களுக்கிடையே பகையுமில்லை, உறவுமில்லை என்பதான அணுகுமுறையே காணப்பட்டன. ஆனால், இவையனைத்தும் கருணாநிதியின் வைரவிழா கொண்டாட்டத்துக்கு முந்தைய காட்சிகளே. வைரவிழா கொண்டாட்டத்திலோ ராகுலும், ஸ்டாலினும் காட்டிய நட்பின் நெருக்கம் 'ஹாய் ரமேஷ், ஹாய் சுரேஷ்' என 'முஸ்தபா முஸ்தபா' பாடுமளவுக்குத் தீவிரமாக இருந்தது. ஸ்டாலின் என்ற…

  23. ' கருணாநிதியை ஏன் வாழ்த்தினார் திரௌபதி மர்மு?' - பா.ஜ.கவின் குடியரசுத் தலைவர் தேர்தல் சீக்ரெட் #VikatanExclusive இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. ' பா.ஜ.க வேட்பாளர் யார்? எதிர்க்கட்சிகள் யாரை முன்னிறுத்தப் போகின்றன?' என்ற கேள்விகளும் அரசியல் அரங்கில் எழுந்துள்ளன. ' குடியரசுத் தலைவர் தேர்தலை நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டமாக பார்க்கிறார் பிரதமர் மோடி. பா.ஜ.க நிறுத்தும் வேட்பாளரை ஆதரிக்க வேண்டிய சூழலுக்கு மாநிலக் கட்சிகள் தள்ளப்படலாம்' என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் ஜூலை 24 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, புதிய குடியரசுத் தலைவரை தே…

  24. திருமுருகன் காந்தி மீது குண்டர் சட்டம்..... ஐ.நா.வில் ஒலித்த எதிர்ப்புக் குரல்கள்! மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கு, ஐ.நா மனித உரிமைகள் ஆணைய கூட்டத்தில் மூன்று உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். கடந்த 2009-ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற போரில் முள்ளிவாய்க்கால் பகுதியில் ஈழத்தமிழர்கள் ராணுவத்தினரால் கொன்று குவிக்கப்பட்டனர். இந்த சம்பவம் மே மாதம் 17-ஆம் தேதி நடைபெற்றது.உயிரிழந்த தமிழர்களுக்கு கடந்த 7 ஆண்டுகளாக மே 17 இயக்கத்தினரும், தமிழ் அமைப்புகளும் சென்னை மெரினாவில் ஆண்டு தோறும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதே போன்று இந்த ஆண்டும் ஈழத்தமிழர்களுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. …

  25. மகளிரணியினர் குடுமிபிடிச் சண்டை! போர்க்களமானது சத்தியமூர்த்தி பவன் காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் மகளிரணி நிர்வாகிகள் இடையே கடும் சண்டை ஏற்பட்டது. ஒருவருக்கொருவர் பலமாக தாக்கிக்கொண்டதால் அந்த இடமே போர்க்களமானது. சென்னையில் கடந்த 3 ஆம் தேதி நடந்த கருணாநிதியின் சட்டப்பேரவை வைர விழாவில் காங்கிரஸ் துணைப் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி பங்கேற்றார். அடுத்தநாள் காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். இதன் பிறகு அவர் டெல்லி சென்றுவிட்டார். இந்தநிலையில், சத்தியமூர்த்தி பவனில் மகளிரணி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர். மகளிரணி நி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.