தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10260 topics in this forum
-
‘இரட்டை இலைக்கு உரிமை கோரினாரா பன்னீர்செல்வம்?!’ - ஆணைய விவாதத்தில் என்ன நடந்தது? ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட 127 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். 'தேர்தல் ஆணையத்தால் சின்னம் முடக்கப்பட்ட கவலையில் இருந்து நிர்வாகிகள் முழுமையாக மீளவில்லை. தொப்பி சின்னத்தால் எதிர்பார்த்த வெற்றி கிடைக்குமா?' என்ற கவலையும் அ.தி.மு.க நிர்வாகிகள் மத்தியில் எழுந்துள்ளது. கோடை வெயிலின் வெப்பத்தையும் தாண்டி ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் களம் தகித்துக் கொண்டிருக்கிறது. அ.தி.மு.க வேட்பாளர் டி.டி.வி.தினகரனுக்கு தொப்பி சின்னத்தை ஒதுக்கியிருக்கிறது தேர்தல் ஆணையம். ஓ.பன்னீர்செல்வம் அணியின் சார்பில் போட்டியிடும் மதுசூதனன், இரட்டை மின் கம்பம் சின்னத்தை தேர்வு செய்திருக்கிறார். எ…
-
- 0 replies
- 256 views
-
-
இதை 'வெறும் இடைத்தேர்தல்' எனக் கடந்து விட முடியாது..! ஆர்.கே.நகர் எழுப்பும் கேள்விகள் கட்சியின் நிறுவனரான எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை விமரிசையாகக் கொண்டாடவேண்டிய அ.தி.மு.க., இரண்டு, மூன்றாகப் பிளவுபட்டு, எம்.ஜி.ஆர். காட்டிய இரட்டை இலைச் சின்னத்தைத் தொலைத்துவிட்டு பரிதாபமாகக் காட்சியளிக்கிறது. அ.தி.மு.க. தேர்தல் சின்னத்தை இழப்பது, இது இரண்டாவது முறை. முதல்முறை எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின்னர், கட்சியையும், ஆட்சியையும் யார் வழி நடத்துவது என்பதில் ஏற்பட்ட மோதல், கட்சியில் பிளவை ஏற்படுத்த ஜானகி அணி, ஜெயலலிதா அணி என இரண்டாகப் பிரிந்தது. அப்போது, இரு தரப்பும் கட்சிக்கு உரிமை கோரியதால், 1989 பொதுத்தேர்தலின்போது இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டு, ஜானகிக்கு இர…
-
- 0 replies
- 359 views
-
-
சசிகலா- பன்னீர்செல்வம் அணியினருக்கு கட்சிப் பெயர், சின்னம் ஒதுக்கீடு! ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் சசிகலா அணி வேட்பாளர் டி.டி.வி.தினகரனுக்கு 'தொப்பி' சின்னத்தையும், பன்னீர்செல்வம் அணிக்கு 'இரட்டை மின்கம்பம்' சின்னத்தையும் தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுக மூன்றாக உடைந்தது. சசிகலா தலைமையில் ஓர் அணியும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஓர் அணியும், ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா தலைமையில் ஓர் அணியும் உருவானது. இதனிடையே, ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்தத் தேர்தலில் சசிகலா அணியில் டி.டி.வி. தினகரனும், பன்னீர்செல்வம் அணியில் மதுச…
-
- 2 replies
- 1.1k views
-
-
ஜெயலலிதா போல் போராடி இரட்டை இலை சின்னத்தை பெறுவோம் - டி.டி.வி. தினகரன் தேர்தல் ஆணையத்தால் இரட்டை இலை சின்னம் தற்காலிகமாக தான் முடக்கப்பட்டுள்ளதாகவும், ஜெயலலிதா போல் போராடி சின்னத்தை மீட்போம் எனவும் அ.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். சென்னை: தேர்தல் ஆணையத்தால் இரட்டை இலை சின்னம் தற்காலிகமாக தான் முடக்கப்பட்டுள்ளதாகவும், ஜெயலலிதா போல் போராடி சின்னத்தை மீட்போம் எனவும் அ.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா மரணத்தைத் தொ…
-
- 2 replies
- 494 views
-
-
‘இதைவிட வேறு அவமானம் என்ன வேண்டும்?!’ - கொந்தளிக்கும் சசிகலா குடும்ப உறவுகள் எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு அ.தி.மு.கவில் ஏற்பட்ட புயல், 28 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மையம் கொண்டுள்ளது. 'அ.தி.மு.கவில் பிளவு நீடிப்பதையே மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு விரும்புகிறது. வி.என்.ஜானகியோடு ஜெயலலிதா முரண்பட்டபோது, இரட்டை இலை விவகாரத்தை முடிவுக்குக் கொண்டு வந்தார் ராஜீவ்காந்தி. தற்போது அப்படியான எந்த அவசியமும் பிரதமர் மோடிக்கு இல்லை' என்கின்றனர் அரசியல் வட்டாரத்தில். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின், அ.தி.மு.கவின் புதிய பொதுச் செயலாளராக பதவியேற்றுக் கொண்டார் சசிகலா. ஆட்சி அதிகாரத்தை நோக்கியும் அவர் வேகம் காட்டியபோது, ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அ.…
-
- 0 replies
- 398 views
-
-
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்! ரஜினிகாந்த் திடீர் அறிவிப்பு ஆர்.கே.நகர் தொகுதி பா.ஜ.க வேட்பாளர் கங்கை அமரன் சந்தித்துப் பேசியநிலையில், இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு அளிக்கப்போவதில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் திடீரென அறிவித்துள்ளார். ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் தி.மு.க, சசிகலா அணி, பன்னீர்செல்வம் அணி, பா.ஜ.க, தே.மு.தி.க, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதனிடையே, நடிகர் ரஜினிகாந்த்தை கடந்த செவ்வாய்க்கிழமை பா.ஜ.க வேட்பாளர் கங்கை அமரன், போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்துப் பேசினார். சுமார் 40 நிமிடங்களுக்கு மேல் நடந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்த…
-
- 0 replies
- 361 views
-
-
முடக்கப்பட்டது இரட்டையிலை. இந்திய தேர்தல் வரலாறில் ஜானகி, ஜெயலலிதா இமுபறியால் முடக்கப்பட்டு, மீண்டும் ஒரே ஒரு நிகழ்வாக வழங்கப்பட்ட இரட்டையிலை இன்று முடக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் கிடைப்பதற்கான சாத்தியம் இல்லை. இத்துடன் பட்டி தொட்டி எங்கும் அறிமுகமான ஒரு புகழ்மிக்க தேர்தல் சின்னத்தின் கதை முடிவுக்கு வருகிறது.
-
- 10 replies
- 2k views
-
-
இனி சசிகலா குடும்பத்தில் ஒருவர் பின் ஒருவராக சிறைக்குப் போவார்கள்! சவால் விடும் மதுசூதனன் சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் அணி வேட்பாளர் மதுசூதனன். 1991-ம் ஆண்டு தேர்தலில் ஆர்.கே.நகர் தொகுதியில் வென்று, ஜெயலலிதாவின் முதல் அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர் என்பதால் அவர் மீதான எதிர்பார்ப்பும், பரபரப்பும் தொகுதிக்குள் இயல்பாகவே எழுந்துள்ளது. அவரைச் சந்தித்தோம்... ‘‘வடசென்னையில் மதுசூதனன் என்றாலே ஒரு டெரரர் இமேஜ் இருக்கிறதே... தொகுதி மக்கள் உங்களை எப்படிப் பார்க்கிறார்கள்?’’ “என்மீது சொல்லப்படும் ‘டெரர்’ எல்லாம் கட்டுக்கதை. நான் அமைதியான ஆளு. என் வீட்டு வாசலில் உட்கார்ந்திருக்கும் இவர்கள் வேலைக்குப் போனால் தினமும் நூறோ, இருநூற…
-
- 0 replies
- 1.2k views
-
-
மிஸ்டர் கழுகு: ‘சதி’கலா குடும்பச் சண்டை! - திவாகரன் Vs தினகரன் ஆர்.கே.நகர் தொகுதியிலிருந்து பறந்து வந்தார் கழுகார். சிறகுகளில் இருந்து செய்திகள் சிதறுவதற்கு முன் அனல் கொட்டியது. ‘‘கோடை வெயிலை மிஞ்சுவதாக பிரசார அனல் இருக்கிறது. அந்தப் பிரசார அனலை மிஞ்சுவதாக இருக்கிறது, சசிகலா குடும்பத்துக்குள் நடக்கும் அரசியல்” என்று பீடிகை போட்டார் கழுகார். ‘‘அதை முதலில் சொல்லும்” என்றோம். ‘‘அ.தி.மு.க-வை சசிகலா குடும்பம் கைப்பற்றி விட்டது என்று வெளியில் இருப்பவர்கள் மொத்தமாகச் சொன்னாலும் அதனை அந்தக் குடும்பத்தினர் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. ‘கட்சியை தினகரன் கைப்பற்றிவிட்டார்’ என்றே பிரித்துச் சொல்கிறார்கள். ஜெயலலிதா இறந்ததும், கட்சி சசிகலா கைக்கு வந்தது. ‘கட்சி திவ…
-
- 0 replies
- 1.6k views
-
-
“தீபா கேட்டதும்... பன்னீர்செல்வம் மறுத்ததும்!” - முன்னாள் நிர்வாகி சொல்லும் தகவல் தெளிவற்ற அரசியல் நிலைப்பாடுகளால் தீபா அணியின் ஆதரவுக்கூட்டம் கரைய ஆரம்பித்திருக்கிறது. தேர்தல் ஆணையத்தின் ஒற்றை பதிலுக்காக பதைபதைப்போடு காத்திருக்கும் ஓ.பி.எஸ் அணிக்கு இப்போது சற்று ஆறுதலாக இருப்பது தீபா அணியிலிருந்து இங்குவந்துசேரும் ஆதரவாளர்கள்தான். ஜெயலலிதா மறைவுக்குப்பின் அவரது அண்ணன் மகளான தீபா, சசிகலாவுடனான கடந்த கால கசப்புகளை மனதில் கொண்டு அதிரடியாக சசிகலாவின் பொதுச்செயலாளர் நியமனத்துக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினார். ஓ.பி.எஸ் சசிகலாவுடன் சுமூகமாக இருந்த இந்த நாட்களில் , சசிகலாவுக்கு எதிரான மனநிலையில் இருந்த தொண்டர்கள் சாரி சாரியாக திரண்டுவந்து தீபாவுக்கு ஆதர…
-
- 0 replies
- 394 views
-
-
சொத்துக் குவிப்பு வழக்கு: கர்நாடக அரசு சீராய்வு மனு! சொத்துக் குவிப்பு வழக்கில், கர்நாடக சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இதனால் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் மீது சுமத்தப்பட்டு இருந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால், ஜெயலலிதா இறந்துவிட்டதால் அவர் சிறை தண்டனை அனுபவிக்க முடியாத சூழல் நிலவி வருகிறது. இந்த வழக்கில், ஜெயலலிதாவுக்கு 100 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. ஜெயலலிதா சிறை தண்டனை அனுபிக்கவில்லை என்றாலும், அபராதத் தொகையை வசூலிப்பதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கின்றன. நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பில், அபராதத் தொகையை எப்படி வசூலிப்பது என்பது பற்றி தெளிவாக கூறப்பட்டு இர…
-
- 2 replies
- 462 views
-
-
சசிகலாவுக்காகக் களமிறங்கிய சல்மான் குர்ஷித்! -திவாகரன் குடும்பத்தின் 'திடீர்' மூவ் ' இரட்டை இலை சின்னம் யாருக்கு?' என்ற கேள்விக்கான பதில், இன்று மாலை தெரிந்துவிடும். ' தேர்தல் ஆணைய விவகாரத்தை நேரடியாக சசிகலாவே கையில் எடுத்துவிட்டார். தினகரன் தரப்பினர் ஆதிக்கம் செலுத்துவதையும் அவர் விரும்பவில்லை. திவாகரன் மகன் ஜெயானந்த் மேற்பார்வையிலேயே அனைத்து விவகாரங்களும் கையாளப்படுகின்றன' என்கின்றனர், அ.தி.மு.க நிர்வாகிகள். ஆர்.கே.நகர் தொகுதிக்கு, வரும் ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. அ.தி.மு.க வேட்பாளராக டி.டி.வி.தினகரன் களம் இறங்குகிறார். வேட்பாளராக அவர் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே, சசிகலா குடும்பத்துக்குள் முட்டல், மோதல்கள் அதிகரித்து…
-
- 0 replies
- 831 views
-
-
இரட்டை இலை யாருக்கு? டில்லியில் இன்று பஞ்சாயத்து கட்சியும், சின்னமும் யார் கைக்கு கிடைக்கப் போகிறது என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பில், ஒட்டுமொத்த, அ.தி.மு.க.,வுமே திகிலுடன் காத்திருக்கும் நிலையில், அது குறித்து முக்கிய முடிவை எடுப்பதற்கு, சசிகலா மற்றும் ஓ.பி.எஸ்., என, இருதரப்புக்கான பஞ்சாயத்தை, தேர்தல் கமிஷன் இன்று கூட்டியுள்ளது. இந்த விஷயத்தில், இன்று இரவோ அல்லது நாளையோ முடிவு அறிவிக்கப்படலாம். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின், அ.தி.மு.க., இரு அணிக ளாக பிளவுபட்டு உள்ளது; இருதரப்புக்குமே, உள்ளுக்குள் பெரும் அச்சம் நிலவுகிறது. மற்ற எந்த அரசியல் கட்சிகளுக்கும் இல்லாத அளவு,…
-
- 1 reply
- 523 views
-
-
தினகரன் வேட்புமனுவை ஏற்கக்கூடாது என கோரி வழக்கு சென்னை:அன்னிய செலாவணி சட்டம், சுங்க சட்டத்தின் கீழ், அபராதம் விதிக்கப்பட்டவர் களின் வேட்புமனுக்களை ஏற்க, தேர்தல் ஆணையத்துக்கு தடை விதிக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுஉள்ளது. சென்னை, அரும்பாக்கத்தைச் சேர்ந்த, ஜோசப் தாக்கல் செய்த மனு: தகுதியிழப்பு எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களுக்கான தகுதியிழப்பு குறித்து, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. சுங்க சட்டம், அன்னிய செலாவணி ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ், ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டால், …
-
- 0 replies
- 174 views
-
-
அ.தி.மு.க.,வில் கும்மாங்குத்து: வளர்மதி - நிர்மலா லடாய் அ.தி.மு.க., சசிகலா அணியில் இருந்த பேச்சாளர் நிர்மலா பெரியசாமி, நேற்று பன்னீர் அணிக்கு மாறினார். அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், நட்சத்திர பேச்சாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டம் துவங்குவதற்கு முன், முன்னாள் அமைச்சர் வளர்மதி, நடிகை சி.ஆர். சரஸ்வதி, நிர்மலா பெரியசாமி ஆகியோர் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, நிர்மலா, 'பன்னீர்செல்வம், நமக்கு எதிரி அல்ல; அவரை நம்மோடு சேர்த்தால், நன்றாக இருக்கும்; பிரச்னை தீர்ந்து விடும்' எனக் கூறி உள்ளார். அதை கேட்ட சி.ஆர்.சரஸ்வதி, 'பன்னீர்செல்வத்தை எதிரி இல்லை என்று, எப்படி கூறலாம…
-
- 0 replies
- 573 views
-
-
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும், அ.தி.மு.க., துணை பொதுச் செயலர் தினகரனுக்கு, வெறும், 30 ஆயிரம் ஓட்டுகள் தான் கிடைக்கும்' என, உளவுத் துறை அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதால், சசிகலா அணியினர் உற்சாகம் இழந்துள்ளனர். அதனால், இரட்டை இலை சின்னம் கிடைக்காத பட்சத்தில், போட்டியில் இருந்து விலக, தினகரன் முடிவு செய்திருப்பதாக, சசி ஆதரவு வட்டாரத்தில் கூறப்படுகிறது. சென்னை, ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தல், ஏப்., 12ல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில், அ.தி.மு.க., சசிகலா அணி சார்பில் தினகரன், பன்னீர்செல்வம் அணி சார்பில், மதுசூதனன் மற்றும் ஜெ., அண்ணன் மகள் தீபா ஆகியோர் போட்டியிடுகின்றனர். மூன்று பேரும், நாளை மறுநாள் வேட்பு மனு தாக்கல…
-
- 0 replies
- 233 views
-
-
ரஜினி சந்திப்பில் என்ன நடந்தது? - கலகலக்கிறார் கங்கைஅமரன் "நான், தேர்தலில் போட்டியிடுவதை தெரிந்த ரஜினியே என்னைப் போனில் அழைத்து தன்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்தார். மேலும், என்னைச் சந்திக்க அவர் இன்று மதியம் எனக்கு அழைப்புவிடுத்ததால் அங்கு சென்றேன்" என்றார் பா.ஜ.க.வேட்பாளர் கங்கை அமரன். பாடலாசிரியர், இசையமைப்பாளர், சினிமா இயக்குநர் எனப் பல பரிணாமங்களிலிருந்து திடீர் அரசியல் பிரவேசம் ஏன்? "ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவது காலத்தின் கட்டாயமாகக் கருதுகிறேன். தேர்தல் களத்தில் போட்டியாளனாக இருப்பது என்னுடைய முதல் அனுபவம். ஆனால், வாக்காளராக இதுவரை என்னுடைய ஜனநாயகக் கடமையைச் செய்திருக்கிறேன். ஒரு வாக்காளனின் எண்ணம் என்ன என்பது எனக்கு நன்றாகத் தெரியும…
-
- 0 replies
- 445 views
-
-
நிர்மலா பெரியசாமி ஓ.பி.எஸ் அணியில் இணைந்தார்! ஜெயலலிதா இறப்புக்குப் பின்னர், அ.தி.மு.க ஓ.பி.எஸ் அணி - சசிகலா அணி என இரண்டாக பிளவுபட்டு உள்ளது. இந்நிலையில், சசிகலா அணியில் இருந்த நிர்மலா பெரியசாமி இன்று ஓ.பி.எஸ் அணியில் இணைந்துள்ளார். ஓ.பி.எஸ் அணியில் இணைந்த பின்னர் நிர்மலா பெரியசாமி, 'இனி தொண்டர்களை எந்தவித மனத்தடையும் இன்றி சந்திப்பேன். ஜெயலலிதா மரணத்தில் தொண்டர்களுக்கு சந்தேகம் உள்ளது. அதை தெளிவுபடுத்த வேண்டும். உண்மையான துரோகி யார் என்பது ஆர்.கே.நகர் தேர்தலில் தெரியவரும்' என்று கூறியுள்ளார். வரும் ஏப்ரல் மாதம் 12-ம் தேதி, ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் வரவுள்ள நிலையில், அ.தி.மு.க-வில் உள்கட்சி குழப்பம் அதிகரித்த வண்ணம் உள்ளது. …
-
- 0 replies
- 305 views
-
-
அ.தி.மு.க.,வில், எதிரும் புதிருமாக உள்ள சசிகலா - பன்னீர் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் இடையே, திடீர் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. சட்டசபை கூட்டத்தில், இரு தரப்பினரும் சகஜமாக பேசி, பழைய நட்பை வெளிப்படுத்தினர். சசிகலா நியமனம், இரட்டை இலை சின்னம் போன்ற விவகாரங்களில், தேர்தல் கமிஷன் தீர்ப்பு நெருங்குவதால், சசி தரப்பினர், பன்னீர் அணியினர் மீது பாசம் காட்ட துவங்கி உள்ளனர். இதற்கிடையில், ஓ.பன்னீர்செல்வம் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சந்திப்பால், தினகரன் வட்டாரம் கலக்கம் அடைந்துள்ளது. சட்டசபையில், நேற்று பட்ஜெட் மீதான விவாதம் நடந்தது. கேள்வி நேரத்தின் போது, தி.மு.க., - எம்.எல்.ஏ., தங்கம் தென்னரசு, 'சிட்டுக் குருவிகளை பாதுகாக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' …
-
- 1 reply
- 366 views
-
-
'டாக்டர் ரிச்சர்ட் பீலேவுக்கு 'செக்' வைக்கும் ஆர்.டி.ஐ கேள்விகள்!' - மத்திய உள்துறை உத்தரவால் அதிர்ச்சியில் சசிகலா ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே, தமிழகத்துக்கு எப்போது எல்லாம் வருகைப்புரிந்தார் என்பது தொடர்பாக ஆர்.டி.ஐ மூலம் நெல்லை வழக்கறிஞரும், ஆர்.டி.ஐ போராளியுமான பிரம்மா கேள்வி கேட்டிருந்தார். அந்தக் கேள்விகளுக்குப் பதில் அளிக்கும்படி சென்னை இமிகிரேசன் அலுவலகத்துக்கு மத்திய உள்துறை அதிரடி உத்தரவுப் பிறப்பித்துள்ளது. நெல்லை, வி.எம்.சத்திரத்தைச் சேர்ந்த வழக்கறிஞரும், ஆர்.டி.ஐ. போராளியுமான பிரம்மா, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை, மரணம் தொடர்பாக பல ஆர்.டி.ஐ. கேள்விகளை கேட்டுள்ளார். கடந்த 19…
-
- 0 replies
- 634 views
-
-
ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு தாவுகிறார்களா 6 அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள்?! - பி.ஜே.பியின் அடுத்த அதிரடி சசிகலா அணியிலிருந்து ஒ.பன்னீர்செல்வம் அணிக்கு ஆறு எம்எல்ஏ-க்கள் மாற சம்மதம் தெரிவித்துவிட்டதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இவர்களை அணி மாற்றும் வேலையில், பி.ஜே.பி தலைமைக்கு நெருக்கமான காவிவேட்டி அணிந்த மனிதர் ஈடுபட்டுவருகிறார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க-வில் அதிகார மோதல் வலுவடைந்துள்ளது. இதன்விளைவு சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இரண்டு அணிகள் உருவாகின. இருப்பினும், சசிகலா அணியில் இருந்த எடப்பாடி பழனிசாமி, முதல்வராகி ஆட்சியை அமைத்துவிட்டார். அவரது தலைமையிலான அமைச்சரவை, நிதிநிலை பட்ஜெட்டையும் தாக்கல்செய்துவிட்டது. மழை நின்ற பிறகும் …
-
- 0 replies
- 353 views
-
-
கன்டெய்னரில் வந்த பணம்! சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் விளக்கம் என்ன? நாட்டின் முதல் குடிமகனில் இருந்து கடைசிக் குடிமகன் வரையில், ஒரே அளவுகோலில்தான் நீதி பரிபாலனம் செய்யும் நீதிமன்றம் இயங்குகிறது. அதேவேளையில், நீதிமன்ற அவமதிப்பு என்கிற விஷயமும் மிகச் சாதாரணமாக நடந்துகொண்டுதான் இருக்கிறது. கோர்ட் அவமதிப்பை அதிக அளவில் செய்வது, உயரிய பொறுப்பில் இருப்பவர்களே என்பதுதான் வேதனையான தகவலும்கூட.சென்னை போலீஸ் கமிஷனராக மூன்றாவது முறை பொறுப்பில் இருக்கும் ஜார்ஜ், இரண்டாவது முறையாக நீதிமன்ற அவமதிப்பு குற்றத்தைச் செய்தது, அனைத்துத் தரப்பிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சென்னை மாநகர போலீஸ…
-
- 1 reply
- 678 views
-
-
மிஸ்டர் கழுகு: திருப்புமுனை தருமா திருவண்ணாமலை பூஜை? கழுகார் உள்ளே நுழைந்ததும் சூடான சூப் கொடுத்தோம். ‘‘வரவேற்பு பலமாக இருக்கிறதே?’’ என்றபடி சிரித்தார் கழுகார். நாமும் சிரித்தோம். சூப்பை அருந்தும்போது அவருக்கு இருமல் வந்தது. ‘‘யாரோ நினைக்கிறார்கள்” என்றோம். ‘‘உமக்கு முழுக் கதையும் தெரிந்திருக்கிறது” என்று சொல்லி மீண்டும் சிரித்தார். நாம் பதில் சொல்லவில்லை. சூப்பை முழுமையாக அருந்தி முடித்தப் பிறகு, ‘‘சுவை நன்றாகத்தான் இருக்கிறது” என்று சொல்லிக்கொண்டே செய்திகளைக் கொட்ட ஆரம்பித்தார். ‘‘திருவண்ணாமலையை அடுத்த ஒரந்தவாடி கிராமத்தில் இருக்கும் ஓரக்கண்டியம்மன் கோயிலுக்கு வந்து சென்ற மறுநாள் ஆர்.கே.நகர் தொகுதி வேட்பாளராக தினகரன் அறிவிக்கப்பட்டார்!” ‘‘தினகரனின் அ…
-
- 1 reply
- 849 views
-
-
இரட்டை இலையை தக்கவைக்க... டி.டி.வி. தினகரனின் ஆயுதம்! அ.தி.மு.க தற்காலிகப் பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டது தொடர்பாக விளக்கம் கேட்டு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதற்கான கெடு புதன்கிழமை முடிவடைகிறது. இந்தநிலையில், அ.தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், இரட்டை இலையைத் தக்கவைக்க கடைசி ஆயுதமாக தமிழகம் முழுவதும் உள்ள அ.தி.மு.க நிர்வாகிகளிடம் தனித்தனியாகக் கடிதம் வாங்கியுள்ளார். அந்தக் கடிதங்களை எல்லாம் தொகுத்து, இத்தனை பேரின் ஆதரவு தங்களுக்கு இருக்கிறது. தாங்கள்தான் உண்மையான அ.தி.மு.க என்ற கடிதத்துடன் தேர்தல் ஆணையத்தில் சமர்பிக்கும் முன்னேற்பாடுகளில் அ.தி.மு.க நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர். ஆதரவுக் கடிதங்களை தினகரன் தரப்பில் 2…
-
- 0 replies
- 478 views
-
-
தனிக்கட்சி தொடங்குகிறார் தீபாவின் கணவர் மாதவன்! தீபாவின் கணவர் மாதவன் புதியதாக கட்சி தொடங்க இருப்பதாக பேட்டி அளித்துள்ளார். மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியதற்கு பின் செய்தியாளர்களிடம் பேசினார் மாதவன். அப்போது அவர், 'புதிய கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இங்கு வந்துள்ளேன். தீபா பேரவை நடத்துகிறார். நான் கட்சி நடத்த இருக்கிறேன். அது பற்றி விரைவில் அறிவிப்பேன். நான் கட்சி தொடங்க இருப்பது பற்றி தீபா கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. தீபா பேரவையில் தீய சக்திகள் புகுந்துள்ளன. எம்ஜிஆர்-அம்மா-தீபா பேரவையில் உள்ள தீய சக்திகள் யார் என்பதை தகுந்த நேரம் வரும்போது மக்களிடம் அறிவிப்பேன். தீபா தன்னிச்சையாக செயல்படவில்லை. …
-
- 7 replies
- 1.3k views
-