தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10268 topics in this forum
-
ஆர்.கே. நகரில் போட்டியிட எனக்கு தொல்லை: தீபா சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட எனக்கு தொல்லை கொடுக்கின்றனர் என ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா கூறியுள்ளார்.ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நான் போட்டியிடுவது மக்களின் விருப்பமே . சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த ஜெயலலிதாவில் அண்ணன் மகள் தீபா கூறுகையில் : ‛‛இரட்டை இலை சின்னத்தில் நான் போட்டியிடவில்லை. எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை சார்பாக போட்டியிடுவேன். பேரவையின் முக்கிய நிர்வாகிகளிடம் ஆலோசித்த பின்னரே முக்கிய முடிவுகள் எடுக்க இருப்பதாகவும், ஜ…
-
- 6 replies
- 1k views
-
-
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: சசிகலா அணியில் கோகுல இந்திரா, ஓபிஎஸ் அணியில் மதுசூதனன் போட்டி? இடது: சசிகலா, வலது: ஓ.பன்னீர்செல்வம் | கோப்புப் படங்கள்: எம்.வேதன் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் ஓபிஎஸ் அணி சார்பில் முன்னாள் அமைச்சர் மதுசூதனன், சசிகலா அணியில் கோகுல இந்திராவை வேட்பாளராக நிறுத்த முயற்சிகள் நடந்து வருகின்றன. ஜெயலலிதா மறைவால் காலி யாக உள்ள ஆர்.கே.நகர் தொகு திக்கு ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப் பட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் வரும் 16-ம் தேதி தொடங்கி 23-ம் தேதியுடன் முடிகிறது. இத் தேர்தலில் அதிமுகவில் சசிகலா, ஓபிஎஸ் அணிகள் தவிர, ஜெய லலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபாவும் தனியாக போட்…
-
- 0 replies
- 426 views
-
-
ஓ.பன்னீர்செல்வம் அணியில் மேலும் ஒரு எம்.எல்.ஏ ஜெயலலிதாவின் மறைவுக்குப்பிறகு, அதிமுக சசிகலா அணி, பன்னீர்செல்வம் அணி என இரு அணியாக பிரிந்துள்ளது. இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ அருண்குமார் ஆதரவு தெரிவித்துள்ளார். இவர் எடப்பாடி பழனிசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணித்தவர் ஆவார். பன்னீர்செல்வம் அணிக்கு ஏற்கெனவே11 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்திருந்தனர். இந்நிலையில், தற்போது அருண்குமாரின் வருகையால், ஆதரவு எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 12ஆக உயர்ந்துள்ளது. http://www.vikatan.com/news/tamilnadu/83443-coimbatore-north-constituency-mla-arunkumar-supports-panneerselvam-camp.html
-
- 0 replies
- 360 views
-
-
ஓட்டுக்கு துட்டு ’நோ’! ஒரே குடும்ப ஆட்சி ‘நோ’! மக்களாட்சிக்கு ’யெஸ்’ - ஜனநாயகத்திற்காக களமிறங்கும் பெண்கள் "ஒளிபடைத்த கண்ணினாய் வா! வா! வா!" என்று பாரதியார் எழுதிய வரிகளுடன் தொடங்கியது அந்த நிகழ்வு. கொளுத்தும் வெயிலில் பெசன்ட் நகர் கடற்கரையோரம் சுமார் 300 பெண்கள் நீலநிறத்தில் உடையணிந்து ஒன்றாகக் குழுமியிருந்தார்கள். புரட்சி உற்சாகமூட்டும் வரிகளும், அநீதி, ஊழல், முறைகேடான ஜனநாயகத்திற்கு எதிரான பதாகைகளை அவர்கள் ஏந்தியிருந்தார்கள். மெரினாவில் 2017 ஜனவரியில் கண்ட மக்கள் புரட்சிக்குப் பிறகு கடற்கரையோரம் மக்கள் ஒன்றாகக் களமிறங்கி குரல் கொடுப்பது என்பது அடிக்கடி நிகழும் செயலாகி விட்டது. தைப்புரட்சி முழுவதுமாய் வெற்றி பெற்றதோ இல்லையோ, ஆனால் மக்கள் தங்களது தேவைக…
-
- 0 replies
- 352 views
-
-
ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு! சென்னை, ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கும் என, தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவையடுத்து, இந்தத் தொகுதி காலியென அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தமிழகத்தில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில், ஏப்ரல் 12-ம் தேதி ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. மார்ச் 23-ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல்செய்யலாம். ஏப்ரல் 15-ம் தேதி வாக்கு எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படுகிறது. http://www.vikatan.com/news/tamilnadu/83140-rknagar-byelection-to-be-held-on-12th-april.html
-
- 14 replies
- 1.4k views
-
-
சிக்கல் ! சசிகலாவின்பதவியை அங்கீகரிப்பதில்... ஆணையத்துக்கு வரவில்லை 'வானகரம்' ஆர்.கே.நகரில் சி்ன்னம் 'அரோகரா?' வானகரம் பொதுக்குழு கூட்ட தீர்மான நகல் ரூபத்தில், இன்னொரு சோதனை மேகம், சசிகலா அணிக்கு எதிராக சூழத் துவங்கியுள்ள தால், ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில், இந்த அணி சார்பில் போட்டியிடும் நபருக்கு, இரட்டை இல்லை சின்னம் கிடைப்பதில் சிக்கல் ஏற்படலாம் என, தகவல் வெளியாகி உள்ளது. அ.தி.மு.க., பொதுச் செயலராக இருந்த ஜெயலலிதா மரணத்திற்கு பின், சென்னை வானகரத்தில், அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில், அந்தக் கூட்டத்தில் பங்கேற்காத, ஜெ.,வின் தோழியான சசிகலா, தற்காலிக பொதுச…
-
- 1 reply
- 527 views
-
-
'சி.பி.ஐ என்னிடம் விசாரித்தால் அப்போலோ மர்மம் சொல்வேன்!' ஓ. பன்னீர்செல்வம் தடாலடி மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மங்கள் சிபிஐ மூலம் விசாரிக்கப்பட்டு உண்மைகள் வெளிவரும்வரை தர்மயுத்தம் தொடரும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சென்னையில் இதே கோரிக்கையை வலியுறுத்தி இன்று (புதன்) நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் நிறைவு உரை ஆற்றினார். அப்போது அவர் பேசுகையில்,"ஒன்றரை கோடி அ.தி.மு.க.தொண்டர்களின் மனதில் உள்ள ஒரே சந்தேகம் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம். அதற்கு நீதி விசாரணை நடத்தினால் மட்டுமே உண்மை மக்களுக்குத் தெளிவாகும். அதனை வலியுறுத்தி இந்த உண்ணாவிரதத்தை வெற்றிக…
-
- 4 replies
- 974 views
-
-
குற்ற வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்கலாமா? - முக்கிய அரசியல் கட்சிகள் என்ன சொல்கின்றன? குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடைவிதிக்க வேண்டும் என டெல்லி மாநில பாஜக செய்தி தொடர்பாளர் அஸ்வினி குமார் உபாத்யாய் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருக்கிறார். கடந்த 3-ம் தேதி, நீதிபதிகள் ரஞ்சன் காகோய், நவீன் சின்ஹா அமர்வில் இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, குற்ற வழக்குகளில் தண்டிக்கப்பட்டவர்களுக்கு தேர்த லில் போட்டியிட வாழ்நாள் தடை விதிப்பது குறித்து தேர்தல…
-
- 0 replies
- 197 views
-
-
அதிருப்தி சசிகலா குடும்பத்தினர் மீது முதல்வர் பழனிசாமி... ஆட்சி மன்ற குழுவில் இடம் அளிக்க மறுப்பு தினகரன் ஆதிக்கத்தால் மந்திரிகளும் விரக்தி முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் போல், முதல்வர் பழனிசாமி தனித்து செயல்பட விரும்புவதால், அவருக்கும், சசிகலா குடும்பத் தினருக்கும் இடையே, கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. ஜெ., மறைந்ததும், பன்னீர்செல்வம் முதல்வ ரானார். அ.தி.மு.க., பொதுச் செயலராக, சசிகலா நியமிக்கப்பட்டார். பன்னீர்செல்வத்தை முதல்வர் பதவியில் இருந்து இறக்கிவிட்டு, தானே முதல்வராக, சசிகலா முடிவு செய்தார். அதன்படி, பன்னீர்செல்வத்தை ராஜினாமா செய்ய வைத்…
-
- 0 replies
- 244 views
-
-
மக்கள் முற்றுகை: மந்திரிகள் பரிதவிப்பு முதல்வர் பழனிசாமி தலைமையில், புதிய அரசு பதவியேற்றதற்கு பின், அரசு விழாக் களில், அமைச்சர்களை மக்கள் முற்றுகை யிட்டு, கெரோ செய்யும் நிகழ்வுகள், ஆங்காங்கே அதிகரித்து வருகின்றன. இந்த வகையில், நேற்றும் இரண்டு இடங்களில், மக்கள் முற்றுகையால் அமைச்சர்கள் பரிதவித்து உள்ளனர். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, நேற்று காலை நடந்தது. அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணன் பங்கேற்றனர். விழாவிற்கு வந்த இருவரையும், சத்திய மங்கலம் நகராட்சி, 23வது வார்டைச் சேர்ந்த, ௫௦க்கும் மேற்பட்டோர், வாசலில் வழிமறித்த னர். 'நாங்கள், 40 ஆண்டுகளாக பட்டா கேட்…
-
- 0 replies
- 415 views
-
-
ஜெயலலிதாவின் இறுதி நிமிடங்களும்... விசாரணை வளையத்தில் 9 மருத்துவ உதவியாளர்களும் ! ஜெயலலிதா மரணம் குறித்த மர்மங்கள் இன்னும் நீடித்து வரும் நிலையில், அப்போலோவில் அவருடைய இறுதி நிமிடங்களின்போது நடந்த சிகிச்சைகள் குறித்த தகவல்களை மத்திய உளவுத்துறை சேகரித்து வருகிறது. அதில், பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் கிடைத்திருப்பதாக அதிகாரிகள் மட்டத்தில் செய்திகள் கசிந்துவருகின்றன. கடந்த செப்டம்பர் 22-ம் தேதி இரவு, ஜெயலலிதா மயக்க நிலையில் அப்போலோ மருத்துவமனையின் இரண்டாவது தளத்தில் அனுமதிக்கப்பட்டார். அவரை, போயஸ் கார்டனிலிருந்து எப்படிக் கொண்டுவந்தார்கள், அப்போலோவின் இரண்டாவது தளத்துக்கு அவரை எப்படிக் கொண்டு சென்றார்கள் என்பது குறித்த பல்வேறு வினாக்கள் இப்போது கி…
-
- 4 replies
- 1.3k views
-
-
மிஸ்டர் கழுகு: உளவுத்துறைக்கு வரத் தயங்கும் உயர் அதிகாரிகள்! கழுகார் காட்சியளித்ததும், ‘‘உள்ளாட்சித் தேர்தல் வருமா?’’ என்று கேள்வியை வீசினோம். ‘‘ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் அனல் பறக்கப் போகிறது. உள்ளாட்சித் தேர்தலா இப்போது முக்கியம்?’’ என்று செல்லமாகக் கடிந்து கொண்டவர், ‘‘நீர் நல்லாத்தான் தலைப்பு போட்டீர். ‘121 முதல்வர்கள்... 1 எம்.எல்.ஏ’ என்று! அதுதான் இப்போது நடக்க ஆரம்பித்துள்ளது’’ என்ற பீடிகையுடன் தொடங்கினார் கழுகார். ‘‘அப்படியா?’’ ‘‘ஆட்சிக் கவிழ்ப்பு பூச்சாண்டியை சில அமைச்சர்களே இப்போது காட்டிவருகிறார்கள். இதனால், எடப்பாடி பழனிசாமி தன் முதல்வர் பதவி எப்போது வேண்டுமானாலும் பறிபோகலாம் என நினைக்க ஆரம்பித்துவிட்டார். வரிசையாக சில விஷயங்களைச்…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஜெ.,வுக்கு என்.எஸ்.ஜி., பாதுகாப்பை விலக்கியது யார்? கேள்விகளால் நிலை குலையும் மத்திய உள்துறை தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் எண்ணற்ற மர்மங்கள் புதைந்து கிடப்பதாக, அக்கட்சியின் முன்ணணி பிரமுகர்கள் நாள்தோறும், ஊடகங்கள் வாயிலாக, தங்கள் சந்தேகங்களை வெளியிட்டு வருகின்றனர். இதில், முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன்தான், முதன் முதலில், ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருக்கிறது என்று பூதம் கிளப்பினார். லேட்டஸ்ட்டாக அவர் எழுப்பி இருக்கும் சந்தேகம், ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட பூனைப் படை பாதுகாப்பு, அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த, 75 நாட்களும் அந்த பக்கம் எட்டியே பார்க்காதது ஏன் என்பது குறித்துத்தான். ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதி…
-
- 0 replies
- 403 views
-
-
"நெடுவாசல்" போர்க்குரல், ஒவ்வொரு வீட்டு வாசலையும் தட்டட்டும்.. ஒவ்வொன்றையும் போராடி மீட்க வேண்டிய, பாதுகாத்துக் கொள்ள வேண்டிய கட்டாய இக்கட்டில் தள்ளப்பட்டு நிற்கிறார்கள் தமிழர்கள். ஜல்லிக்கட்டு நமது பாரம்பரியம், கலாச்சாரம் என்றால்... "நெடுவாசல்" நமது வாழ்வாதாரத்திற்கான போராட்டமாக மாறியுள்ளது. தமிழகமே அதிமுக கோஷ்டிகளின் அடிதடி மோதலை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த வேளையில்தான் சத்தம் போடாமல் ஹைட்ரோகார்பன் எரிவாயு திட்டத்திற்கு அனுமதி அளித்தது மத்திய அரசு. தமிழர்களால் அதை முதலில் புரிந்து கொள்ளக் கூட முடியாத அவல நிலை. நெடுவாசல் மக்கள்தான் முதலில் தனித்துக் குரல் எழுப்பினர். அவர்களின் அவலக் குரல் மிகவும் தாமதமாகத்தான் தமிழகத்தின் பல பகுதிகளைத் தொட்டது. ஏ…
-
- 25 replies
- 1.1k views
-
-
யாழ்ப்பாணம் சிறையிலிருந்து தமிழக மீனவர்கள் 53 பேர் விடுதலை! தமிழக மீனவர்கள் 53 பேர் யாழ்ப்பாணம் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர். அவர்களை விடுவித்து ஊர்க்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விடுவிக்கப்பட்ட 53 மீனவர்களும் இந்தியத் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். இலங்கைச் சிறைகளில் மொத்தம் 85 மீனவர்கள் சிறை வைக்கப்பட்டிருந்தனர். மீனவர் பிரிட்ஜோ, இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதன்பின்னர், மீனவர் நலன் குறித்து தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை மத்திய அரசிடம் தொடர்ந்து வைக்கப்பட்டது. சமீபத்தில் இதுகுறித்து நடந்த உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் இந்தியா - இலங்கை இரு நாடுகளும் த…
-
- 0 replies
- 343 views
-
-
தேர்தல் ஆணையத்துக்கு, சசிகலா அளித்த 70 பக்க அடடே விளக்கம் சசிகலாவை அ.தி.மு.க பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டது செல்லாது என அறிவிக்கக்கோரி பன்னீர்செல்வம் அணியினர் கொடுத்த புகார் மனுவுக்கு, சசிகலா இன்று தேர்தல் ஆணையத்துக்கு பதில் அளித்துள்ளார். 70 பக்கத்தில் அவர் விளக்கம் அளித்துள்ளார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து அ.தி.மு.க சட்டமன்ற தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து, முதல்வர் பதவியை ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்தார். பின்னர், சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதியில் மவுன தியானம் செய்தார். சுமார் 40 நிமிட தியானத்துக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பன்னீர்செல்வம…
-
- 2 replies
- 560 views
-
-
ஜெ. மரணம்! மாநிலங்களவையில் கொந்தளித்த மைத்ரேயன்! குறுக்கிட்ட அதிமுக பெண் எம்.பி-க்குக் குட்டு ஜெயலலிதா மரணம் தொடர்பாக மத்திய அரசு விசாரணை நடத்த வேண்டும் என்று மாநிலங்களவையில் பன்னீர்செல்வம் ஆதரவு எம்பி மைத்ரேயன் ஆவேசத்துடன் பேசினார். அப்போது, அ.தி.மு.க பெண் எம்பி விஜிலா தொடர்ந்து குறுக்கிட்டதால் கோபம் அடைந்த துணைத் தலைவர் குரியன், அவரைக் கண்டித்தார். ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக நீதிவிசாரணை வேண்டும் என்று வலியுறுத்தி மாநிலங்களவையில் மைத்ரேயன், லெட்சுமணன், சசிகலா புஷ்பா ஆகியோர் அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகர் இருக்கையின் அருகே சென்று பதாகைகளை ஏந்தி, கூச்சல் போட்டனர். துணை சபாநாயகர் பி.ஜே.குரியன் அவர்களை இருக்கையில் சென்று அமரச் சொன்னார். அதன்பின்ன…
-
- 0 replies
- 337 views
-
-
சிறையில் மயங்கி விழுந்த இளவரசி! -உச்சகட்ட மோதலில் சசிகலா குடும்பம் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலாவை, தினகரன் மட்டுமே சந்தித்துப் பேசிவருகிறார். ' ஆட்சி அதிகாரத்திற்குள் தினகரன் கோலோச்சுவதை சசிகலா உறவுகள் ரசிக்கவில்லை. அதன் விளைவாகவே சிறையில் அடைபட்டிருக்கும் சசிகலாவை உறவுகள் புறக்கணிக்கின்றனர் ' என்கின்றனர் கார்டன் வட்டாரத்தில். சொத்துக்குவிப்பு வழக்கில் நான்காண்டு சிறைத் தண்டனையை சசிகலாவுக்கு விதித்தது உச்ச நீதிமன்றம். இந்த வழக்கில் கடந்த பிப்ரவரி 15-ம் தேதி பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார். அவருடன் இளவரசி, சுதாகரன் உள்ளிட்டவர்களும் சிறைப்பட்டனர். அவர் சிறை சென்ற மறுநாளே முதலமைச்சகராக பதவியேற்றார் எடப்பாடி …
-
- 0 replies
- 459 views
-
-
கூடமாட்டார்கள் என்பதால் ரத்தானது முதல்வர் கூட்டம்! சேலம்:முதல்வர் பங்கேற்கும் விழாவுக்கு, எதிர்பார்த்த அளவு கூட்டம் வராது என,உளவுத் துறை எச்சரித்ததால், சேலத்தில் நாளை நடை பெறுவதாக இருந்த, ஜெ., பிறந்த நாள் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா, பொதுக் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. முன்னாள் முதல்வர், பன்னீர்செல்வம் அணி சார்பில், மார்ச், 8ல் உண்ணாவிரதம், மார்ச், 12ல் பொதுக்கூட்டம் நடத்த, போலீசில் அனுமதி கோரி கடிதம் வழங்கினர். பழனிசாமி அணி சார்பில், மார்ச், 11ல் ஜெ., பிறந்த நாள் விழா நலத்திட்ட உதவிகள் வழங்குதல், பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி போலீசில் கடிதம் கொடுக்கப்பட்டது. பன…
-
- 0 replies
- 424 views
-
-
தினகரனுக்கு எதிராக பழனிசாமி சதி? தி.மு.க., பரபரப்பு புகார் சென்னை:'முதல்வர் பழனிசாமி, அமைச்சர் செங்கோட்டையன் போன்றோர், தினகரனிடம் தற்காலிகமாக அடகு வைக்கப்பட்டுள்ள, அ.தி.மு.க., தலைமையை நிரந்தரமாக மீட்பது என்ற ரகசிய உடன்பாட்டுக்கு, ஏற்கனவே வந்து விட்டனர்' என, தி.மு.க., கூறியுள்ளது. தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலினுக்கு எதிராக, அ.தி.மு.க., துணை பொதுச்செயலர் தினகரன் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதற்கு பதிலடி தரும் விதமாக, ஸ்டாலின் சார்பில், மன்னார்குடி எம்.எல்.ஏ., - டி.ஆர்.பி.ராஜா ராஜா வெளியிட்ட அறிக்கை: 28 கோடி ரூபாய்: குடியுரிமையில் பொய் சொல்லி, 'பெரா' என்ற, அன்னிய செலாவணி மோசட…
-
- 0 replies
- 446 views
-
-
‘தேர்தலில் வெற்றி கிடைக்குமா?’ - ஆர்.கே.நகரில் ஆராய்ந்த தீபா #VikatanExclusive 'சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல்' என அறிவித்துவிட்டது தேர்தல் ஆணையம். 'இடைத்தேர்தலில் மும்முனைப் போட்டி ஏற்பட்டால், பேரவைக்கு எப்படிப்பட்ட வரவேற்பை மக்கள் கொடுப்பார்கள் என வார்டு வாரியாக அலசி வருகிறார் தீபா. அவருடைய முயற்சிக்கு பன்னீர்செல்வம் அணியினரும் ஆதரவு தெரிவிக்கின்றனர்' என்கின்றனர் தீபா பேரவை அமைப்பினர். அ.தி.மு.க அரசுக்கு மிகப் பெரும் தலைவலியாக உருவெடுத்திருக்கிறது, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல். இதனை மனதில் வைத்தே இத்தொகுதியில் நலத்திட்ட உதவிகளை வழங்கும் விழாவில் பங்கேற்றார், முதல்வர் எடப்பாடி பழனிசாமி. 'அம்மாவுக்குக் கிடைத்த வரவேற்ப…
-
- 1 reply
- 556 views
-
-
எங்கள் தலைவர் இவர்களில் எவருமே இல்லை! - இளைஞர்கள் ஆதரவு யாருக்கு? அதிரடி சர்வே முடிவுகள்விகடன் டீம்படங்கள்: வீ.சக்தி அருணகிரி, கே.ரமேஷ் கந்தசாமி, தே.சிலம்பரசன், அ.குரூஸ்தனம் `யாரோ... ஏதோ ஆட்சி செய்கிறார்கள், என்னமோ பண்ணட்டும்!' என விலகி நின்று அரசியலை வேடிக்கை பார்த்த காலம் இல்லை இது. `எங்களுக்கும் அரசியல் தெரியும். நாங்கள் போராடத் தயார். எதிர்த்து நிற்போம்' என நேரடியாகவே களத்தில் இறங்கிவிட்டார்கள் இளைஞர்கள். ஜல்லிக்கட்டுப் புரட்சி முதல் இப்போதைய நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் போராட்டம் வரை அனைத்தையும் முன்னெடுத்து, அடுத்தடுத்தக் கட்டங்களுக்குக் கொண்டுசெல்பவர்களும் இளைஞர்களே! அதேசமயம், `எல்லாவற்றுக்கும் நாங்களேதான் போராட வேண்டும் எனில், எங்களால் தே…
-
- 0 replies
- 1.6k views
-
-
திராவிட ஆட்சி 50 ஆண்டுகள் - காங்கிரஸ் தலையில் தேய்க்கப்பட்ட எலுமிச்சைப்பழம்! ப.திருமாவேலன் * தமிழகம் பெற்றதும் மற்றவர்கள் கற்றதும்! * தேசியக் கட்சிகள் இங்கு செல்வாக்கு இழந்தது ஏன்? * தமிழ் மண் அடைந்த மாற்றங்களும் ஏற்றங்களும் எவை? * தமிழக அரசியல் களத்தின் எதிர்காலம் எப்படி? சிறப்புக் கட்டுரைகள் உள்ளே சும்மா இருந்த சி.என்.அண்ணாதுரையை சி.சுப்பிரமணியம் தூண்டியதன் விளைவுதான், காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் அதல பாதாளத்தில் தள்ளப்பட்டது. ‘‘முச்சந்தியில் நின்று முழங்கக்கூடிய திராவிட முன்னேற்றக் கழகத்தவர்க்கு சட்டசபைக்குள் வருவதற்கு தைரியம் உண்டா?” என்று கேட்டார் சி.சுப்பிரமணியம். அதற்காகவே காத்திருந்த அண்ணா, அடுத்து நடந்த திருச்சி தி.மு.க ம…
-
- 0 replies
- 1.7k views
-
-
75 நாள்கள் எப்படி இருந்தார் ஜெயலலிதா? - மூன்று ரிப்போர்ட் முழு விவரம் சந்தேகத்தைத் தீர்ப்பதற்காகச் சொல்லப்படும் விளக்கம், இன்னும் பல புதிய சந்தேகங்களை உருவாக்குமா? ஜெயலலிதா மரண விஷயத்தில் தமிழக அரசு சார்பில் அளிக்கப்படும் விளக்கங்கள் அப்படியான விளைவுகளையே ஏற்படுத்துகின்றன. ‘மருத்துவமனையில் ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார்’, ‘நர்ஸ்களோடு விளையாடினார்’, ‘காவிரிப் பிரச்னை குறித்து விவாதித்தார்’ என்றெல்லாம் சொன்னார்கள். ‘ஜெயலலிதா எப்போது வீட்டுக்குத் திரும்ப வேண்டும் என்பதை அவரே முடிவு செய்வார்’ என அப்போலோ தலைவர் பிரதாப் ரெட்டி சொன்னார். ஆனால், ‘இவற்றில் எதுவுமே உண்மையில்லை’ என்பதை இப்போது அவர்கள் தந்திருக்கும் அறிக்கைகளே அம்பலப்படுத்தி இருக்கின்றன. ஜெயலலிதாவுக்க…
-
- 0 replies
- 1.3k views
-
-
'ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு இவ்வளவு ஆதரவா!?' - அதிர்ச்சியில் சசிகலா, திவாகரன் #VikatanExclusive ஓ.பி.எஸ். அணியினர் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்துக்கு கிடைத்த ஆதரவைக் கண்டு சசிகலாவும், டி.டி.வி.தினகரனும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். சிறையிலிருந்த சசிகலா, கட்சியினரை கண்டித்ததோடு சில கட்டளைகளையும் பிறப்பித்துள்ளார். சசிகலா Vs ஓபிஎஸ் ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதன்விளைவு அ.தி.மு.க.வில் இரு அணிகள் உருவாகின. சசிகலா சிறைக்குச் சென்றுவிட்டதால் அவரது அணியில் இருந்த எடப்பாடி பழனிசாமி, முதல்வராகி விட்டார். ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு வந்த எம்எல்…
-
- 0 replies
- 448 views
-