Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. அ.தி.மு.க தொண்டர்கள் யார் பக்கம்? பன்னீர்செல்வம் Vs சசிகலா..? (Video) #OPSVsSasikala தமிழக அரசியலில் யாரும் எதிர்பாரக்காத வகையில், பதுங்கியிருந்த ஓ.பன்னீர்செல்வம் புலியாகப் பாய்ந்தது ஏன்? முதல்வராக தனக்கு ஏற்பட்ட அவமானங்களை மெரினாவில் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி விட்டு, ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் சில கருத்துகளைத் தெரிவித்தார். மக்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை அவரது பேட்டி ஏற்படுத்தி உள்ளது. பன்னீர்செல்வம் எடுத்த முடிவு திடீரென்னு எடுக்கப்பட்ட முடிவா? அ.தி.மு.க அடிமட்டத் தொண்டர்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வகையில் பன்னீர் செல்வம் முடிவெடுதது விட்டார். சசிகலா எதிர்ப்பாளர்களுக்கு தமிழகம் முழுவதும் பரிச்சயமான ஒரு முகம…

  2. அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் நேரில் ஆதரவு: ஓ.பன்னீர்செல்வம் நெகிழ்ச்சியுடன் உற்சாகம் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் | கோப்புப் படம்: பிடிஐ பொறுப்பு முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார். தமிழக அரசியல் சூழலில் நிமிடத்துக்கு நிமிடம் பரபரப்பு ஏற்பட்டுவரும் நிலையில், ஆளுநர் வருகை தருவதற்கு ஒரு சில மணி நேரங்களுக்கு முன்னதாக அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்திருக்கிறார். வியாழக்கிழமை மதியம் 1.30 மணியளவில் மதுசூதனன் திடீரென சென்னை கிரீம்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் வீட்டுக்கு வந்தார். அவர் …

  3. ரிசார்ட்டில் இருந்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் எங்கே? காஞ்சிபுரம் மாவட்டம், கூவத்தூரில் உள்ள ரிசார்ட்டில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரும் இருந்துள்ளார். இந்நிலையில் இன்று மதியம் 2 மணியளவில் ரிசார்ட்டை விட்டு வெளியேறிய ஜெயக்குமார், காரில் சென்றார். அவர் எங்கு சென்றார் என்ற விவரம் தெரியவில்லை. இது சசிகலா தரப்புக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து ஜெயக்குமாரிடம் கருத்து கேட்க அவரது செல்போனில் தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் என்று பதில் வந்தது. அவரது ஆதரவாளர்கள் கூறுகையில், "கட்சி சீனியர்களில் ஒருவர் ஜெயக்குமார். ஆனால் அவருக்கு மீன்வளத்துறை அமைச்சர் பதவி கொடுக்கப்ப…

  4. பிப்.9-ல் அதிமுக அதிர்வுகள்: நிகழ்வுகளும் திருப்பங்களும் ஓ.பன்னீர்செல்வம் (இடது) ; வி.கே.சசிகலா (வலது) முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் புதன்கிழமை சசிகலாவுக்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் பேட்டியளித்தார். அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் பல்வேறு அரசியல் அதிரடி திருப்பங்கள் அரங்கேறி வருகிறது. இந்நிலையில் இன்றும் பல்வேறு நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெற்றுவருகின்றன. அவற்றின் நிகழ்நேரத் தொகுப்பு: (அவ்வப்போது இந்தப் பக்கத்தை ரெஃப்ரஷ் செய்க) 11.15 am: 'ஜெயலலிதா சிகிச்சை மர்மங்களை மறைத்தது ஏன்?' என்பன உள்ளிட்ட பல கேள்விகளை எழுப்பியுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், 'சசிகலா குழுவி…

  5. சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமறைவு, நாட்டுக்கு அவமானம்! மக்களால் தேர்வு செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் யாருக்கு வேண்டுமானாலும் ஆதரவு தெரிவிக்கலாம். ஆனால் அவர்கள் மக்கள்மன்றத்தில் தங்கள் கருத்துக்களை வெளிப்படையாகப் பேசுபவர்களாக இருக்க வேண்டும். அவர்கள் எங்கே இருக்கிறார்கள்? என்று மக்கள் தேடுகிற நிலையில் இருக்கக் கூடாது. பேருந்துகளில் இருக்கிறார்கள். ஆடம்பர விடுதிகளில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள் போன்ற செய்திகள் யாவும் இந்த நாட்டிற்கு அவமானத்தைப் பெற்றுத் தருவதாகும். சட்டமன்ற உறுப்பினர்கள் என்பவர்கள் ஆயுதங்கள் அல்லர். அவர்களை மறைவாக வைத்துக் கொண்டு தாக்குதலைத் தொடுப்பதற்கு. பெரியா…

  6. 40 வருட அரசியல்... 33 வருட நட்பு... ஓ.பி.எஸ் Vs சசிகலா கடந்து வந்த பாதை #OPSvsSasikala #Infographic ஐந்து முறை முதல்வர்களாக இருந்த கருணாநிதிக்கும், ஜெயலலிதாவுக்கும் கிடைக்காத சலுகை இப்போது சசிகலாவுக்குக் கிடைத்திருக்கிறது. ஒருமுறையாவது முதல்வர் நாற்காலியில் உட்கார மாட்டோமா என்று ஏங்கித் தவிக்கும் ஸ்டாலினுக்கும், அன்புமணிக்கும் கிடைக்காத வாய்ப்பு, 'ஜஸ்ட் லைக் தட்' சசிகலாவுக்கு உருவாகியிருக்கிறது. அதேபோல், ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிறைத்தண்டனையின்போது... இரண்டு முறை முதல்வர் நாற்காலி ஓ.பி.எஸ்ஸுக்குக் கிடைத்திருக்கிறது. ஜெயலலிதா-வின் மறைவுக்குப் பிறகு மீண்டும் அ.தி.மு.க நிர்வாகிகளால் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அந்தப் பதவியில் தற்போது தொடர்ந்தும் வர…

  7. பன்னீர்செல்வம் வீட்டுக்கு விரைந்தார் தீபா..! சென்னை: தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டிற்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா விரைந்துள்ளதாகவும் இருவரும் நீண்ட ஆலோசனைகளுக்கு பிறகு கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளிப்பார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளது. சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்துக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 8.50 மணி அளவில் திடீரென வந்து அஞ்சலி செலுத்தினார். பின்னர், கண்களை மூடி தியானம் செய்யத் தொடங்கினார். ஜெயலலிதா நினைவிடத்தில் சுமார் 50 நிமிஷங்கள் தியானம் செய்த முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிறகு செய்தியாளர்கள் சசிகலா…

  8. சசிகலா முதல்வராக வேண்டும் என ஏன் துடிக்கிறார் சுப்ரமணியன் சுவாமி? OPSvsSasikala ஜெயலலிதாவின் மறைவு தமிழக அரசியல் களத்தையேப் புரட்டிப் போட்டுவிட்டது.கடந்த டிசம்பர் 5 - ம் தேதியில் இருந்து தமிழக அரசியலில் நிகழ்ந்து வரும் மாற்றங்கள் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கின்றன.அனைத்து மாநில அரசியல் நகர்வுகளையும் மக்கள் மறந்துவிட்டு தமிழகத்தையே உற்று நோக்குகிறார்கள் இந்திய மக்கள். அந்த அளவுக்கு அதிரடி மாற்றங்கள், அனல் பறக்கும் அரசியல் பேட்டிகள் என தமிழக அரசியல் களம் அதகளப்படுகிறது. அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டவுடன் விரைவில் முதல்வராகவும் பதவி ஏற்க உள்ளதாக அப்போதே தகவல் வெளியானது. இந்த நிலையில், அந்தக் கட்சியின் எம்.எல்.ஏ-க்கள் கூ…

  9. அந்த 75 நாட்கள்.. இந்த 60 நாட்கள்... முழு உண்மையையும் உடைப்பாரா பன்னீர் ஜெ., சமாதி முன் அமர்ந்து, அவர் கண்களை மூடியிருந்த அந்த நிமிடங்களில், பல கோடி தமிழர்களின் விழிகள் மூடாமல் இருந்தன. அவர் எழுந்து வந்து, ஊடகங்களின் முன் சொல்லப்போகும் வார்த்தைகளுக்காக, தமிழகமே செவிகளைத் திறந்து வைத்து காத்திருந்தது. பரந்து விரிந்த கடலின் மையப் பரப்பில், ஒரு புள்ளியாக உருவெடுத்து, மெதுமெதுவாக வேகமெடுத்து, சூறைக் காற்றோடு சுழற்றியடிக்கும் புயலைப் போல இருந்தது, பன்னீர் செல்வத்தின் பேட்டி. என்ன சொல்லப் போகிறாரோ, எந்தெந்த உண்மைகளை உடைக்கப் போகிறாரோ என, ஏராளமான இதயங்கள் படபடத்துக் கிடந்திருக் கலாம். ஆனால்…

  10. பன்னீர் செல்வம் அரசுக்கு திமுக ஆதரவளிக்கும் - என்.ராம் நம்பிக்கை சசிகலாவுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியுள்ள ஓ. பன்னீர் செல்வம் ஆட்சி அமைத்தால், திமுக அவருக்கு ஆதரவளிக்கும் என்று மூத்த பத்திரிகையாளர் என். ராம் பிபிசி தமிழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஎன். ராம் முதலில், சசிகலா முதலமைச்சராகப் போவதில்லை என்று கூறினார்கள். அதற்கு அடுத்து, நேர்மாறாக முடிவெடுத்தார்கள். பிறகு, பன்னீர் செல்வம்தான் முதலமைச்சராக வேண்டும் என சசிகலா கூறினார் என்றார் ராம். முதலமைச்சரை ராஜிநாமா செய்ய கட்டாயப்படுத்தினால் தீவிரமான குற்றச்சாட்டு. சொத்துக் குவிப்பு வழக்கில் அடுத்த வாரம் தீர்ப்பு வெளியாக இருக்கிறது. …

  11. அண்ணா முதல் ஓ.பன்னீர்செல்வம் வரை - தமிழக அரசியல் பிளவுகள்! #OPSvsSasikala தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க பொதுச்செயலாளர் சசிகலா இடையே ஏற்பட்டுள்ள பிரச்னை போல, குறிப்பிட்ட கால இடைவெளியில் திராவிட இயக்கத்தில் பிளவுகளும், பிரிதல்களும் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கின்றன. நீதிக்கட்சியில் பெரியார் இணைந்த பிறகு தீவிர முற்போக்கு இயக்கமாக அதை முன்னெடுத்தார். அதனால் அதில் முன்னோடியாக இயங்கிய ஜமீன்தார்களும், பணக்காரர்களும் அதை இடையூறாகக் கருதி வெளியேறினர். ஆனால் அது பெரிய பிளவாகவோ அந்த இயக்கத்துக்குத் தொய்வாகவோ இருக்கவில்லை. அதேசமயம் அந்த இயக்கம் அரசியல் கட்சியாக மாறிய பின்னர் அதில் உருவான சில பிரிவுகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது உண்மை. பெர…

  12. இந்த வரலாற்றுச் சம்பவங்களுக்கெல்லாம் மெரினா சாட்சியாக இருந்திருக்கிறது! #Marina #2MinRead உலகின் மிக நீளமான கடற்கரைகளில் ஒன்றாக விளங்கும் மெரினாக் கடற்கரைக்கு நீண்ட நெடிய வரலாற்றுச் சிறப்புகள் உண்டு. சுதந்திரப் போராட்டம் முதல் ஓ.பன்னீர்செல்வத்தின் தியானம் வரைக்கும் ஏராளமான சம்பவங்கள் இந்தக் கடற்கரை மணலில் பதிவாகியிருக்கின்றன. அப்படியான சில பதிவுகளைப் பற்றியதே இந்தக் கட்டுரை! முதலில் மெரினாவைப் பற்றி ஒரு ஸ்கேனிங்: உலகின் மிக நீளமான கடற்கரைகளில் ஒன்றாகவும் இந்தியாவின் மிக நீளமான நகர்ப்புற கடற்கரையாகவும் உள்ள மெரினா, 12 கி.மீ நீளமுடையது. தலைமைச் செயலகம், காவல்துறை தலைமை அலுவலகம் என தமிழகத்தின் பிரதான அரசு அலுவலகங்களும், சென்னை பல்கலைக்கழகம் உள்…

  13. திமுக ஆசைகாட்டியதா?- ஓ.பி.எஸ்.ஸுக்கு சசிகலா கேள்வி அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா | படம்: வி.கணேசன். "திமுகவைச் சேர்ந்த துரைமுருகன் சட்டமன்றத்தில் பேசியது போல், கருத்து வேறு வகையிலும் பரிமாறப்பட்டதா? ஆசைகாட்டப்பட்டதா?" என்று பொறுப்பு முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், அதிமுகவினரை பிரிக்கும் ஆற்றல் யாருக்கும் இல்லை என்றும், மக்கள் மத்தியில் எழுப்பப்படும் குழப்பங்களை உரிய நேரத்தில் நான் தீர்த்து வைப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார். பொறுப்பு முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் எதிர்ப்புப் போக்கின் தொடர்ச்சியாக, அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அவசர ஆலோசனைக் கூட்டம்…

  14. சசிகலாவால் நேரடியாக பாதிக்கப்பட்டேன் - கங்கை அமரன் திருப்பூர் : சசிகலாவால் நான் நேரடியாக பாதிக்கப்பட்டேன் என்று கங்கை அமரன் கூறியுள்ளார். அதிமுக., பொதுச் செயலாளராக உள்ள சசிகலா விரைவில் முதல்வராகவும் பொறுப்பேற்க உள்ளார். ஆனால் நேற்று முதல்வர் பன்னீர் செல்வம் கொடுத்த அதிரடி பேட்டியை தொடர்ந்து தமிழக அரசியலில் பரபரப்பு காணப்படுகிறது. சசிகலாவிற்கு எதிர்ப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் இசையமைப்பாளரும், இயக்குநருமான கங்கை அமரன், சசிகலாவால் தான் நேரடியாக பாதிக்கப்ட்டதாக கூறியுள்ளார். பன்னீருக்கே ஆதரவு: திருப்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த கங்கை அமரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசும்போது, சசிகலாவால் நான் நேரடியாக பா…

  15. பன்னீர்செல்வத்துக்காக நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு! தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு சமூக ஊடகங்களில் ஆதரவு வலுத்து வருகிறது. ஓ.பன்னீர்செல்வம் பெயரில் ட்விட்டரில், முதலமைச்சராக பன்னீர்செல்வம் தொடர வேண்டுமா என்று மக்களிடம் சர்வே எடுக்கப்பட்டு வருகிறது. இந்தக் கருத்துக்கணிப்பில், தற்போது வரை 37,000 பேர் வாக்களித்துள்ளனர். அதில் 95% பேர் ஓ.பன்னீர்செல்வம் முதல்வராகத் தொடர வேண்டும் என வாக்களித்துள்ளனர். நெட்டிசன்ஸ் மத்தியில் பன்னீர்செல்வத்துக்கு அமோக ஆதரவு!! திரு O. Pannerselvam @CMOTamilNadu News and Updates from honourable Chief Minister of TamilNadu. · http://tn.gov.in Follower 34.771 …

  16. ஒரு மாதம் அவகாசம் கொடுப்பார் ஆளுநர்!' - ஓ.பன்னீர்செல்வத்துக்கு டெல்லி நம்பிக்கை #VikatanExclusive #OPSvsSasikala 'எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில், 131 பேர் கலந்து கொண்டனர்' என பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார் அ.தி.மு.க அமைப்புச் செயலாளர் கே.ஏ.செங்கோட்டையன். ' நம்பிக்கை வாக்கெடுப்பு என்று வரும்போது எம்.எல்.ஏக்களில் பெரும்பாலானோர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரிக்க உள்ளனர். மைத்ரேயன் தலைமையில் அ.தி.மு.கவின் மாநிலங்களவைக்குள்ளும் பிளவு ஏற்பட்டுவிட்டது' என அதிர வைக்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில். தமிழக அரசியல் வரலாற்றில் நேற்றைய பொழுதை அ.தி.மு.க தொண்டர்களால் அவ்வளவு எளிதாகக் கடந்து சென்றுவிட முடியாது. முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியனின் அதிரடியைத் தொடர்ந்து…

  17. 'பதவி ஆசை இல்லை'- ஓபிஎஸ் வெளியிட்ட சசிகலாவின் பழைய மன்னிப்புக் கடித விவரம் ஓபிஎஸ் பண்னீர்செல்வம் செய்தியாளர் சந்திப்பு. | படம்: ம.பிரபு தமிழக முதல்வராக சசிகலா கடும் பிரயத்தனம் மேற்கொண்டுள்ள சூழலில், தனக்கு 'அரசியல், பதவி ஆசை இல்லை' எனக் குறிப்பிட்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சசிகலா எழுதிய பழைய மன்னிப்புக் கடிதத்தை வெளியிட்டார் ஓ.பன்னீர்செல்வம். சென்னை, க்ரீம்ஸ் சாலையில் உள்ள தனது வீட்டில் செய்தியாளர்களை புதன்கிழமை சந்தித்தார் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். நேற்று ஜெயலலிதா நினைவிடத்தில் அவர் மேற்கொண்ட தியானப் புரட்சியும் அதனைத் தொடர்ந்து அவர் அளித்த அதிரடி பேட்டியும் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படு…

  18. ஜெயலலிதா மரண விசாரணைக் கமிஷனில் இந்தக் கேள்விகள் இடம்பெறுமா...? #OPSvsSasikala முதல்வர் பன்னீர்செல்வம், மெரினாவில்... நேற்று (7-2-17) ஜெயலலிதாவின் நினைவிடத்தின் முன்பு, 40 நிமிடங்கள் தியானம் மேற்கொண்ட பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து, தனது மன உந்துதலால்தான் சில உண்மைகளைச் சொல்ல வெளிவந்ததாகக் கூறினார். சசிகலா கட்டாயப்படுத்தியதன் பேரிலேயேதான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததாகக் கூறிய அவர், சசிகலா முதல்வராகப் பதவியேற்பதில் தனக்கு இருந்த அதிருப்தியை வெளிப்படுத்தினார். இதையடுத்து கட்சியின் பொருளாளர் பதவியிலிருந்து சசிகலாவால் நீக்கப்பட்டார் ஓ.பி.எஸ். இந்த நிலையில் இன்று காலை செய்தியாளர்களை மீண்டும் சந்தித்த பன்னீர்செல்வம், ''ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த அந…

  19. மோடியின் பாராமுகம் முதல் முதல்வருக்கான சதுரங்கம் வரை...! -பன்னீர்செல்வத்தின் தைரியமும் சசிகலாவின் கொந்தளிப்பும் #VikatanExclusive #OPSVsSasikala அரசியல் மேகங்கள் போர்க்கோலம் பூண்டுள்ளன. முதலமைச்சர் பன்னீர்செல்வத்தின் பேட்டியும் சசிகலாவின் குற்றச்சாட்டுகளும் தேசிய அளவில் அனைத்து செய்திகளையும் பின்னுக்குத் தள்ளிவிட்டன. 'ஆளுநர் வருகையை எதிர்பார்த்திருக்கிறோம்' என தம்பிதுரை நம்பிக்கை தெரிவிக்க, 'இன்னும் ஒரு வாரத்திற்கு ஆளுநர் தமிழகம் பக்கமே வர மாட்டார்' என்கின்றனர் ராஜ்பவன் வட்டாரத்தில். கலங்க வைத்த கடைசி ஃபிளைட்! தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நேரத்திலேயே, ' அடுத்த முதல்வர் யார…

  20. சசிகலாவை பொ.செ.,வாக நியமிக்க வழியில்லை: தேர்தல் ஆணையம் புதுடில்லி: அதிமுக பொது செயலாளராக நியமிக்கப்பட்டதற்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் சசிகலா புஷ்பா மற்றும் சிலர் புகார் தெரிவித்தனர். இது தொடர்பாக தேர்தல் ஆணையம் ஆராய்ந்து வந்தது.இந்நிலையில், இடைக்கால பொது செயலாளரை நியமிப்பதற்கான வழிகள் அதிமுக சட்ட விதியில் இல்லை. சட்ட விதிகளை மாற்றினால், மட்டுமே பொது செயலாளராக நியமிக்க முடியும் என தேர்தல் ஆணையம் வட்டாரங்கள் கூறியுள்ளது. இது குறித்து அதிமுக விரைவில் பதில் அளிக்கும் என தெரிகிறது. http://www.dinamalar.com/news_detail.asp?id=1706953

  21. தவறான மருந்தால் ஜெ., மரணம்: பி.எச்.பாண்டியன் சென்னை: முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் கூறுகையில், *தவறான மருந்தை கொடுத்ததால் தான் ஜெ., மரணம் அடைந்தார் என சசிகலா உறவினரான டாக்டர் சிவக்குமார் கூறியதாக டிவியில் செய்தி வெளியாகியுள்ளது. *பன்னீர்செல்வத்தை நாம் தான் பாதுகாக்க வேண்டும். இதற்காக நான் எதை வேண்டுமானாலும் செய்வேன். இவ்வாறு அவர் கூறினார். http://www.dinamalar.com/news_detail.asp?id=1706949 சசிகலா மீது எப்.ஐ.ஆர்.,: பி.எச். பாண்டியன் சென்னை: பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்து முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் கூறியதாவது: *எங்களையும், பன்னீர்செல்வத்தையும், எம்.எல்.ஏ.,க்களையும். நல்லாட்சியையும் தொந்தரவு செய்யக்கூடாது. *இதை தடு…

  22. ஓபிஎஸ் சிரித்ததை காரணம் காட்டுவது வெட்கக் கேடானது: சசிகலா மீது ஸ்டாலின் காட்டம் ஸ்டாலின் | கோப்புப் படம் "அதிமுகவுக்குள் நிலவும் காட்சிகளுக்கு, என்னைப் பார்த்து முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சிரித்ததுதான் காரணம் என்று கூறுவது விசித்திரமானது, வெட்கக் கேடானது" என்று அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவை திமுக செயல் தலைவர் ஸ்டாலின் காட்டமாக கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், "எதிர்கட்சி தலைவரைப் பார்த்து முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார்" என்று அதிமுகவின் பொதுச் செயலாளர் சசிகலா நடராஜன் குற்றம் சாட்டியிருப்பது உதவாக்கரை வாதம் போன்று இருக்கிறது. நினை…

  23. கவர்னர் சென்னை வருவது உறுதியாகவில்லை சென்னை : தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ் இன்று சென்னை வருவது உறுதியாகவில்லை என மும்பை கவர்னர் மாளிகை தகவல் வெளியிட்டுள்ளது. கவர்னரின் தமிழக பயணம் பற்றி தங்களுக்கு எந்த தகவலும் வரவில்லை எனவும், அவர் இப்போது வரை டில்லியில் தான் இருக்கிறார் எனவும் மும்பை கவர்னர் மாளிகை செய்திகள் தெரிவிக்கின்றன. http://www.dinamalar.com/news_detail.asp?id=1706941

  24. சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பேன்: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி ராஜினாமாவை திரும்பப் பெறும் கட்டாயச் சூழல் ஏற்பட்டால் திரும்பப் பெறுவதாகவும், சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளதாகவும் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். சென்னை: பதவி விலகிய முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று இரவு ஜெயலலிதாவின் சமாதியில் தியானம் செய்து பின்னர் அளித்த பேட்டி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதாக கூறிய அவர், 75 நாட்களும் அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றும…

  25. அ.தி.மு.க. விலிருந்து... இன்று நீக்கப்படுகிறார், பன்னீர் செல்வம்! சென்னை: அதிமுகவிலிருந்து இன்று முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நீக்கப்படுவார் என்று தெரிகிறது. அதன் பிறகு முறைப்படி அதிமுக உடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. முதல்வராக உள்ள ஓ.பன்னீர் செல்வம், சசிகலாவுக்கு எதிராக பகிரங்கமாக போர்க்கொடி உயர்த்தியுள்ளார். சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பார்கள். இன்று கார்டனையே அசைத்துப் பார்த்து விட்டார் ஓ.பன்னீர் செல்வம். அவர் இப்படி மாறுவார் என்பதை யாருமே எதிர்பார்க்கவில்லை. அத்தனை பேரும் மிரண்டு போயுள்ளனர்.இந்த நிலையில் நேற்று இரவே ஓ.பன்னீர் செல்வத்திடமிருந்து பொருளாளர் பதவியை பறித்து விட்டார் சசிகலா. ஆனால் அது எனக்கு ஜெயலலிதா கொடுத்த பதவி. அதைப் பறிக்க யாருக்கும…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.