Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களுக்கு திடீரென தடை விதிக்கப்பட்டு, வங்கிப் பணிகளும் ஒரு நாள் நிறுத்தப்பட்டதை அடுத்து, பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியைத் தீர்க்கும் வகையில், வரும் சனிக்கிழமை (நவம்பர் 12) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 13 ஆகிய இரண்டு தினங்களும் இந்தியா முழுவதும் வங்கிகள் செயல்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அந்த இரண்டு தினங்களும் முழுமையான சேவைகளை வழங்குமாறு அனைத்து வங்கிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. சுங்கக் கட்டணம் இடைநிறுத்தம் இதனிடையே, நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிப்பதை வரும் 11-ம் தேதி வெள்ளிக்கிழமை நள்ளிரவு வரை இடைநிறுத்தி வைக்க அரசு மு…

  2. தண்ணீரின்றி கருகிய பயிர்கள்.. காவிரி டெல்டாவில் இதுவரை 5 விவசாயிகள் மரணம்.. தஞ்சாவூர்: காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயிகளின் மரணம் தொடர்கதையாகி வருகிறது. அடுத்தடுத்து அதிர்ச்சியில் விவசாயிகள் மரணமடைந்து வருகின்றனர் கருகிய நெற்பயிரைக் கண்டு மரணமடைந்த விவசாயிகளின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் ஜீவாதாரமே விவசாயம்தான். ஜூன் மாதம் வரவேண்டிய காவிரி நீர் வராத காரணத்தால் கடந்த சில மாதங்களாக குறுவை பொய்த்துப் போக, காலம் தாழ்ந்து வந்த காவிரி நதிநீரை நம்பி சம்பா பயிரிட்டனர். வடகிழக்குப் பருவமழை கை கொடுக்கும் என்று நம்பிய நிலையில் மழையும் இன்னும் சரிவர பெய்யவில்லை. கடன்வாங்கி பயிரிட்ட நெற்பயிர்கள் கருகியதுதான் மிச…

  3. 'எங்கள் ஆதரவு விஜயகாந்துக்கே....!' - வைகோவை ஓரம் கட்டுகிறதா மக்கள் நலக் கூட்டணி? தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த்தைப் பற்றி வைகோ தெரிவித்த கருத்துக்கள் மக்கள் நலக் கூட்டணிக்குள் புயலைக் கிளப்பியுள்ளது. 'மூன்று தொகுதிகளுக்கான தேர்தலில் விஜயகாந்த் கேட்டால், அவரை நாங்கள் ஆதரிப்போம்' என்கின்றனர் வி.சி.க மற்றும் இடதுசாரிகள். தஞ்சை, திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி தொகுதிகளுக்கு வருகின்ற நவம்பர் 19-ம் தேதி தேர்தல் நடக்க இருக்கிறது. அ.தி.மு.க, தி.மு.க, தே.மு.தி.க, பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் களத்தில் உள்ளன. ' தேர்தலில் போட்டியிட விரும்புகிறோம்' என சி.பி.எம் கட்சி நிர்வாகிகள் தெரிவித்தாலும், மக்கள் நலக் கூட்டணியின் இதர தலைவர்களிடம் இதற்கு…

  4. அம்மா.... அப்போலோ... அ.தி.மு.க.... ரத்தத்தின் ரத்தங்களின் மனநிலை!? #JVBreaks (வீடியோ!) ஜெயலலிதாவின் அப்போலோ வாசம் 40 நாட்களைக் கடந்துவிட்டது. அரசு இயந்திரம் வழக்கம்போலச் செயல்பட ஆரம்பித்துவிட்டது. அமைச்சர்கள் இடைத்தேர்தல் பிரசாரத்துக்குச் சென்றுவிட்டார்கள். ஆனால், தொண்டர்களின் மனநிலை என்ன தெரியுமா ? ரத்தத்தின் ரத்தங்கள் தெளிவாக இருக்கிறார்களா அல்லது தங்களது தலைமை பற்றித் தெரியாமல் இருக்கிறார்களா ? ஒருபக்கம், காவடி... பால்குடம்... மறுபக்கம், அலகு குத்துதல்... மண்சோறு... என தங்களது பிரார்த்தனைகளை ஆரம்பித்துவிட்டார்களே? இவைதானே கர்நாடக நீதிமன்றத்தில் ஜெயலலிதா வழக்கு விசாரணையின்போதும் நடந்தது. இதில் என்ன வித்திய…

  5. ஜெ. சுகவீனத்தால் கவலை... நடிகர் ராமராஜனுக்கு திடீர் நெஞ்சுவலி... மருத்துவமனையில் அனுமதி சென்னை: முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதால் கவலையில் இருந்த நடிகர் ராமராஜனுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழின் முன்னணி நாயகர்களுள் ஒருவராக வலம் வந்தவர் நடிகர் ராமராஜன். பின்னர் அவர் அரசியலில் குதித்தார். கடந்த 1998ல் திருச்செந்தூர் மக்களவை தொகுதியில் அதிமுக சார்பில் தேர்வு செய்யப்பட்ட ராமராஜன் எம்.பி., ஆனார். தொடர்ந்து அதிமுகவில் அவர் உறுப்பினராக உள்ளார். இந்த சூழ்நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா சென…

  6. இந்தியனும் நாங்களும் அண்ணன் தம்பிகளாம் ? உணவு பாதுகாப்பு சட்டம் தமிழர் வாழ்வில் அரிசி இல்லாத ஒன்று நினைத்து பார்க்க இயலாது. இந்த அரசியலுக்கு வருவம். அதாவது நாம இங்க நெல்லை விளைவிப்பமாம் .இவனுங்க மத்திய அரசு வாங்கிட்டு போய்விடுவார்களாம்.. கேட்டால் மத்திய தொகுப்பாம் அதை அரிசியாக மாற்றி சட்டீஸ்கருக்கு சலுகை விலையில் கொடுப்பார்களாம்..இங்க தமிழக அரசு பொது விநியோக திட்டத்தின் கீழ் ஏழைக்களுக்கு அதாங்க ரேசன் கார்டு மூலம் கொடுக்க கூடிய அரிசிக்கு கிலோ ஒன்று ரூபாய் 22 என்று எங்களிடம் வாங்கி நீங்கள் உங்களின்ட ஏழைகளுக்கு இலவசமாக கொடுங்க என்கிறது கிந்திய அரசு .. அதாவது தேனை எடுப்பவன் ஒருத்தன் நக்கி தின்பவன் இன்னோருத்தன்.. கேட்டால் நாம் அனைவரும் கிந்தியர்கள் சகோதர்கள் ஒ…

  7. ஜெய­ல­லிதா எதிர்ப்பு தெரிவித்த திட்டங்களுக்கு அமைச்சரவை அனுமதி மத்திய அரசு கொண்டுவரும் அனைத்துத் திட்டங்களுக்கும் 'தலையாட்டாத' மாநில முதல்வர்களென தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் மேற்கு வங்கமுதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட சிலரைக் குறிப்பிட்டுச் சொல்வார்கள். அந்த வகையில் ஜெயலலிதா எதிர்த்து வந்த திட்டங்களுக்கு தற்போது அனுமதி வழங்கப்பட்டிருப்பது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதா எதிர்ப்புத் தெரிவித்து வந்த மத்திய அரசின் மின்சார சீர்திருத்தத் திட்டம், தேசிய உணவு பாதுகாப்புத் திட்டம், புதிய கல்விக்கொள்கை உள்ளிட்ட திட்டங்களுக்கு ஜெயலலிதா இல்லாத அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதையே இது சுட்டிக்காட்டுக…

  8. மறைந்த முதலமைச்சர் என்று ஒளிபரப்பிய டிவி (வைரல் வீடியோ) தந்தி டிவியில் செய்தி வாசிப்பின் போது மறைந்த முதலமைச்சர் என்று வாசித்து விட்டு பின்னர் வேறு செய்திக்கு தாவியுள்ளார் செய்தி வாசிப்பாளர். இது நேரலையில் நடந்த குளறுபடி என்றாலும், தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. இது சாதாரண குளறுபடியால் நடந்துள்ளது. செய்தி திரையில் ஓடுவதை தான் செய்தி வாசிப்பாளர்கள் பார்த்து படிப்பார்கள். செய்தி கொடுத்தவர்கள் தவறாக கொடுத்திருக்கலாம். இதுபோன்று நேரலை செய்தியில் தவறு நிகழ்வது வழக்கமான ஒன்றுதான். இருந்தாலும் அதில் முதலமைச்சர் என்ற வார்த்தை வந்ததன் காரணத்தினால், தற்போது இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகி…

    • 2 replies
    • 744 views
  9. முதல்வர் எப்போது வீடு திரும்புவார்? அப்போலோ பிரதாப் ரெட்டி பதில் முதல்வர் ஜெயலலிதா எப்போது வீடு திரும்புவார் என்பது குறித்த கேள்விக்கு அப்போலோ மருத்துவமனை நிர்வாகத் தலைவர் பிரதாப்ரெட்டி பதில் அளித்துள்ளார். உடல்நலக்குறைவால் முதல்வர் ஜெயலலிதா, சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 44-வது நாளாக சிகிச்சை பெற்று வரும் முதல்வரின், உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மூச்சுத்திணறல் காரணமாக முதல்வருக்கு வைக்கப்பட்டிருந்த வென்டிலேட்டர் நேற்று எடுக்கப்பட்டது. தற்போது, அவர் நன்றாக சுவாசிப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், முதல்வரின் உடல்நிலை குறித்து அப்போலோ மருத்துவமனை தலைவர் டாக்டர்…

  10. “ஜெயலலிதாவுடன் சேர்ந்ததும் தவறு... விஜயகாந்தை முன்மொழிந்ததும் தவறு!” எஸ்.முத்துகிருஷ்ணன், அ.சையது அபுதாஹிர் - படங்கள்: பா.காளிமுத்து சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு வைகோவுடன் நடத்தும் முதல் சந்திப்பு இது. செம உற்சாகத்தில் இருக்கிறார் வைகோ. காரணம், எட்டு ஆண்டுகளாக நடந்த அரசு விரோத வழக்கில் இருந்து நீதிமன்றம் அவரை விடுதலை செய்திருக்கிறது. கறுப்பு சால்வையைச் சரிசெய்துகொண்டே கேள்விகளை எதிர்கொள்ளத் தயாரானார். ‘‘எட்டு ஆண்டுகளாக நடந்த வழக்கில் இருந்து விடுதலையாகி இருப்பதை எப்படி உணர்கிறீர்கள்?” ‘‘பாலகங்காதர திலகர், வ.உ.சி., சுப்பிரமணிய சிவா போன்ற புகழ்வாய்ந்த தலைவர்கள் மீது, ஆங்கிலேயர் ஆட்சியின்போது எந்தப் பிரிவுகளில் வழக்கு போட்டார்களோ, அதே ப…

  11. கான்ஷியஸ்... அன்கான்ஷியஸ்? சிகிச்சைஓவியம்: கார்த்திகேயன் மேடி செப்டம்பர் 22-ம் தேதி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ஜெயலலிதா. அக்டோபர் 22 முடிந்து நவம்பரும் தொடங்கிவிட்டது. ஆனால் ஜெயலலிதா நலம்பெற்று எப்போது அழைத்துவரப்படுவார் என்ற குழப்பம் அ.தி.மு.க. நிர்வாகிகள் மத்தியில் இப்போதுதான் தொடங்கி இருக்கிறது. சில வாரங்களுக்கு முன்பு, ‘‘ஜெயலலிதா நன்கு பேசுகிறார்” என்று அப்போலோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டு பீதியை அதிகப்படுத்தியது. ‘‘நன்கு பேசுகிறார்” என்று மருத்துவமனை இப்போது அறிவிக்கிறது என்றால் இதுவரை அவர் பேசாமல் இருந்தாரா? என்ற கேள்வி கிளம்பி தொண்டர்களை இன்னும் குழப்பத்தில் ஆழ்த்தியது. தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுத…

  12. தமிழ் தொலைக்காட்சி விவாதங்களில் பாரதீய ஜனதா கட்சியினர் மற்ற பங்கேற்பாளர்களை மிரட்டுவதாக புகார் தமிழ்நாட்டில் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கும் பாரதீய ஜனதா கட்சி, ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்கள், அதே விவாதத்தில் பங்கேற்கும் மற்றவர்களைத் தரக்குறைவாக பேசுகிறார்கள் என புகார்கள் எழுந்துள்ளன. இது தொடர்பாக சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றும் நடைபெற்றிருக்கிறது. தமிழ்நாட்டில் செயல்படும் பெரும்பாலான தனியார் செய்தித் தொலைக்காட்சிகளில் இரவில் நடைபெறும் விவாத நிகழ்ச்சிகள் மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகின்றன. அரசியல், சமூகம் தொடர்பான விஷயங்கள் விவாதிக்கப்படும் இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த பிரமுகர்கள், ஆர்.எஸ்.எஸ். பிரம…

  13. அப்போலோவில் கோலோச்சும் மன்னார்குடி அதிகாரம்! - ஜெயலலிதாவைச் சுற்றி ‘பவர் சென்டர்’கள் தமிழக முதல்வர் ஜெயலலிதா, கடந்த 42 நாட்களுக்கும் மேலாக அப்போலோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருக்கிறார். அவரது உடல்நலனில் இன்னும் முழுமையான முன்னேற்றம் ஏற்படவில்லை. லண்டன் மருத்துவர் ரிச்சர்ட்டின் தொடர் கண்காணிப்பு மற்றும் ஆலோசனைகளும் சிங்கப்பூர் பிஸியோதெரபிஸ்டுகளில் தொடர் சிகிச்சையும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. 'முதல்வரின் தற்போதைய சூழலைப் பயன்படுத்தி, சில நிகழ்வுகள் அதிகாரத்தில் நடந்து கொண்டிருக்கின்றன. பதிவு செய்யப்பட்ட காட்சிகளை மட்டுமே, முதல்வருக்கு டி.வியில் காண்பிக்கிறார்கள். மன்னார்குடி உறவுகளின் அதிகாரம் உறுத்தும்படி இருக்கிறது!’ எனக் குமுறு…

  14. தகர்க்கப்பட்டது மவுலிவாக்கம் 11 மாடி அடுக்குமாடி கட்டடம் சென்னை மவுலிவாக்கத்தில் உள்ள 11 மாடி அடுக்குமாடி கட்டடம் வெடி மருந்து மூலம் இன்று மாலை 6.52 மணிக்கு தகர்க்கப்பட்டது. கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் 28-ம் தேதி மவுலிவாக்கத்தில் இருந்த இரண்டு 11 மாடி அடுக்குமாடி கட்டத்தில் ஒன்று இடிந்து விழுந்தது. இதில் 61 பேர் உயிரிழந்தனர். உச்ச நீதிமன்றம் உத்தரவுப்படி அருகில் இருந்த மற்றொரு அடுக்குமாடி கட்டத்தை இடிக்க தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி அடுக்குமாடி கட்டடம் இன்று இடிக்க முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து கட்டடத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ள மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். இதையடுத்து, தரைதளம், 5வது தளம் உள்ளிட்டவற்றில் உ…

  15. ஈழத் தமிழரை படுகொலை செய்த காங்கிரஸ் கட்சியை புதுவையில் விடுதலைச் சிறுத்தைகள் ஆதரிப்பதற்கு சீமான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சீமான் இந்திய ஊடகங்களுக்கு கூறியுள்ளதாவது: “ஈழத் தமிழரை கொன்று குவித்த காங்கிரஸ் கட்சியை புதுவையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எப்படி ஆதரிக்கலாம்? டெல்லியில் இன்று மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. 4 அல்ல 40 கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தினாலும் மீனவர் பிரச்சினை தீரப்போவதில்லை. சிறுவாணியில் அணை கட்ட கேரளாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதை நாம் வரவேற்கிறோம். தமிழர்களின் தொடர் போராட்டத்தால்தான் மத்திய அரசு இந்த தடையை …

  16. இன்று இரவு சிறப்பு வார்டுக்கு மாற்றப்படுகிறார் முதல்வர் ஜெயலலிதா! சென்னை அப்போலோ மருத்துவமனையில் எம்டிசிசியு வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, இன்று இரவு 2-வது தளத்தில் உள்ள சிறப்பு வார்டுக்கு மாற்றப்படுகிறார். கடந்த 22-ம் தேதி இரவு முதல்வர் ஜெயலலிதாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதைத் தாெடர்ந்து சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்றுடன் சேர்த்து 42-வது நாளாக முதல்வர் சிகிச்சை பெற்று வருகிறார். 2-வது தளத்தில் உள்ள எம்டிசிசியு வார்டில் சிகிச்சை பெற்று வந்த முதல்வரின் உடல்நிலையில் தற்போது நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 2-…

  17. தமிழ்நாடு - வயது 60 ப.திருமாவேலன் நவம்பர் 1 - தமிழ்நாட்டுக்குப் பிறந்த நாள். அதுவும் இந்த நவம்பர் 1, வைர விழா ஆண்டு. `‘இது தமிழ்த் தேசியப் பெருநாள்’' என உதிரம் கொதிக்க ஜீவா சொன்னது இந்த நாளைத்தான். ‘தமிழ் கூறும் நல்லுலகத்து...’ என்று தொல்காப்பியமும், ‘தென் தமிழ் நன்னாடு...’ என இளங்கோவடிகளும், ‘தமிழ்ப் பூமி...’ என அடியார்க்கு நல்லாரும், ‘தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்...’ என மனோன்மணியம் சுந்தரனாரும், ‘திராவிட உத்கல பங்கா...’ என ரவீந்திரநாத் தாகூரும் சொன்ன தமிழ்நாடு, 1956-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி உதயமானது. ``இந்த அவையில், தெலுங்கு நாட்டுக்காரர் இருக்கிறார்கள்; கன்னடர் இருக்கிறார்கள்; கேரள தேசத்தவர் இருக்கிறார்கள்; தமிழ்நா…

  18. 5001 பேர் கலந்து கொண்ட, அதிமுக பால் குட ஊர்வலம்... ஸ்தம்பித்தது வேலூர்.சென்னை: இந்தப் புகைப்படத்தைப் பார்க்கும்போது ஷங்கர் படத்தில் வரும் கிராபிக்ஸ் காட்சி போலவே இருக்கிறது இல்லையா. ஆனால் இது வேலூரில் அதிமுகவினர் நடத்திய பால் குட ஊர்வலம். இந்த ஊர்வலத்தால் வேலூரே ஸ்தம்பித்துப் போனது. உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமணையில் சிகிச்சை பெற்றுவரும் முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமடைய வேண்டிய அதிமுகவினர் தொடர்ந்து விதம் விதமான பிரார்த்தனைகளை நடத்தி வருகின்றனர்.அந்த வகையில், ஜெயலலிதா பூரண குணம்பெற வேண்டி வணிக வரித்துறை அமைச்சர் கேசி வீரமணி தலைமையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபீல் முன்னிலையில் வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வர்ர் ஆலயத்தில் 5001பெண்கள் பால்குடம் ஏ…

  19. ஜெயலலிதா கார்டன் திரும்புவது தாமதமாவது ஏன்? - அப்போலோ அப்டேட்ஸ் அப்போலோ மருத்துவமனையில் 36 நாட்களாக தீவிர சிகிச்சையில் இருக்கிறார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. ' நோய்த் தொற்றால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கான சிகிச்சை தீவிரமாக நடந்து வருகிறது. இன்னும் 20 நாட்களில் பூரண நலம் பெற்றுத் திரும்புவார்' என்கின்றனர் மருத்துவமனை வட்டாரத்தில். முதல்வர் ஜெயலலிதாவின் துறைகளை கவனித்து வருகிறார் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். அவருக்கான உத்தரவுகள் அனைத்தும் அப்போலோவில் இருந்தே பிறப்பிக்கப்படுகின்றன. அன்றாடம் கவனிக்க வேண்டிய பணிகள் குறித்து ஆலோசிக்க, காலையிலும் மாலையிலும் மருத்துவமனைக்குத் தவறாமல் ஆஜராகிவிடுகிறார் ஓ.பி.எஸ். அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்க…

  20. அப்போலோவில் அம்மா... எட்டு பேர் கையில் ஆட்சி! கவர் ஸ்டோரிஅட்டை ஓவியம்: பிரேம் டாவின்ஸி தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, சிகிச்சைக்காக அப்போலோவில் அனுமதிக்கப்பட்டு, 40 நாட்கள் ஓடிவிட்டன. அவருக்கு சிகிச்சை எப்போது முடியும்; அவர் எப்போது வீடு திரும்புவார் என்பது ‘டாப் சீக்ரெட்’. ஆனால்கூட, இதுநாள்வரை ஜெயலலிதாவையே மையமாக வைத்துச் சுழன்ற அ.தி.மு.க-வும், தமிழக அரசாங்கமும் இப்போது எட்டு பேரை சுற்றி சுழன்று கொண்டிருக்கின்றன. இதைவிட ஆச்சர்யம், கட்சியிலும் ஆட்சியிலும் அதிரடியாக சில முடிவுகள் எடுக்கப்படுகின்றன; அவை அவசர அவசரமாக நிறைவேற்றவும் படுகின்றன. அ.தி.மு.க-வை நன்கு அறிந்தவர்களுக்குத்தான் தெரியும், இதற்குள் ஒளிந்தி…

  21. கொதிக்கும் வைகோ... திமுக திருமா... கறார் கம்யூனிஸ்ட்டுகள்... இழுபறியில் மக்கள் நலக்கூட்டணி...! 2016 சட்டமன்றத் தேர்தலின் ஆச்சர்யமாகப் பார்க்கப்பட்டது ‘மக்கள் நலக் கூட்டணி’. அதில், தானாக முன்வந்து தே.மு.தி.க-வை விஜயகாந்த் இணைத்தபோது, மக்கள் நலக் கூட்டணி அதிசயமாகப் பார்க்கப்பட்டது. கூட்டணிக்குக் கட்சிகள் இல்லாமல் களம் கண்ட தி.மு.க-வே தேர்தல் ரிசல்ட் வரும்வரைக்கும் மக்கள் நலக் கூட்டணியைப் பார்த்து கொஞ்சம் ‘ஜெர்க்’ ஆனது. ஆனால், 2016 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிவந்தபோது, மக்கள் நலக் கூட்டணி மீது இருந்த ஆச்சர்ய - அதிசய பிம்பங்கள் உடைந்து நொறுங்கின. தமிழகத்தின் தலையெழுத்து அ.தி.மு.க.; அ.தி.மு.க இல்லையென்றால், தி.மு.க என்பதை தேர்தல் முடிவுகள் நிரூபித்தன. …

  22. கைநாட்டு தான் வைத்தார் ஜெயலலிதா...தேர்தல் கமிஷனின் ஆதாரம்... கடந்த சட்டசபை தேர்தலில், பணப்பட்டுவாடா புகாரில் அரவக்குறிச்சி,தஞ்சாவூர் தொகுதிகளின் தேர்தலை ரத்து செய்தது தேர்தல் கமிஷன். திருப்பரங்குன்றம் தொகுதியில் வென்ற திமுக எம்.ல்.ஏ சீனிவேல் மரணமடைந்தார். தஞ்சாவூர், அரவக்குறிச்சி,திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளின் இடைத் தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது. நவம்பர் 19-ம் தேதி இந்த மூன்று தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த மூன்று தொகுதிகளுக்கான வேட்புமனு தொடங்கியது.திமுக, அதிமுக வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.தேர்தல் கமிஷனால் அங்கீகரிக்கப்ட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளுக்கு தேர்தலில் ப…

  23. செம்மரக் கடத்தல் வழக்கு : 97 தமிழர்களுக்கு சிறை ஆந்திர மாநில வனப்பகுதியில் சட்டவிரோதமாக செம்மரங்களை வெட்டியதாக கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 97 பேரை சிறையில் அடைக்க ஆந்திர மாநில நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆந்தரா மாநிலத்தில் 2015ல் என்கவுன்டர் நிகழ்ந்த இடம் (கோப்புப்படம்) ஆந்திர மாநிலத்தின் கடப்பா மாவட்டத்தில் உள்ள மைதுகூர் நீதிமன்றம் முன்பாக இன்று சனிக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டிருந்த அந்த 97 பேரை 15 நாட்கள் சிறையில் அடைக்க நீதிபதி சத்தியகுமாரி உத்தரவிட்டார். ஆந்திராவில் லங்கமால் பகுதியில் உள்ள நல்லமலா வனப்பகுதியில் இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் வெட்டிய செம்மரக்கட்டைகள் மற்றும் அவர்கள் பயன்பட…

  24. 1926-2016 - 50 நிகழ்வுகள்... அழியாத சுவடுகள்! தமிழக வரலாற்றின் தவிர்க்க முடியாத தருணங்களின் புகைப்படத்தொகுப்பு இங்கே... http://www.vikatan.com/anandavikatan

  25. 3 தொகுதி இடைத் தேர்தல்களில் சி.பி.ஐ.எம் போட்டி... உடைகிறதா மக்கள் நலக்கூட்டணி? தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டிட முடிவு செய்துள்ளது. இன்னும் ஓரிரு நாள்களில், அந்தக் கட்சி சார்பில் போட்டியிடப்போகும் வேட்பாளர்களும் அறிவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இந்த முடிவு, மக்கள் நலக்கூட்டணியை சிதறடிக்கும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர். பின்னணியில் நிகழ்ந்தவை என்ன? மக்கள் நலக்கூட்டணி 2016-சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக, மக்கள் நலக்கூட்டியக்கம் உருவானது. சட்டமன்றத் தேர்தலையொட்டி, அந்த கூட்டியக்கம், மக்கள் நலக்கூட்ட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.