Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. தே.மு.தி.க. காங்கிரஸ் கூட்டணியில் சேர்ந்தால் அதை வரவேற்போம் என்று மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். எண்ணூர் துறைமுகத்தில் புதிய ரயில் பாதையை தொடங்கி வைத்த மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் அதன்பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியபோது, மத்திய அரசு மக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. தே.மு.தி.க. போன்ற மத சார்பற்ற கட்சிகள் காங்கிரஸ் கூட்டணியில் சேர்ந்தால் அதை வரவேற்போம். 2014 ஆம் ஆண்டு தேர்தலில் முன்பைவிட அதிக இடங்களை வென்று காங்கிரஸ் கூட்டணி மத்தியில் ஆட்சியை பிடிக்கும் என்றார். காங்கிரஸ் தலைமையின் மீது அதிருப்தியில் இருக்கும் ஜி.கே. வாசன், புதிய கட்சி ஒன்றை துவங்கப் போவதாக சில மாதங்களாக வதந்தி உருவாகி வருகிறது…

  2. திருச்சி: ஊழலற்ற அரசியலை வென்றெடுக்க மாணவர்கள், இளைஞர்கள் ஒன்று திரள வேண்டும். ம.தி.மு.க மாணவர் அணி சார்பில் ‘நாடாளுமன்றத்தில் வைகோ' என்ற தலைப்பில் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான பேச்சு போட்டிகள் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டது. முதல் கட்டமாக மாவட்ட அளவிலும் அதனை தொடர்ந்து மண்டல அளவிலும் போட்டிகள் நடத்தப்பட்டன. அதன் பின்னர் இறுதி போட்டி நடந்தது. போட்டிகளில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு மற்றும் மாநில அளவில் முதல் 4 இடங்களை பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா ஞாயிறன்று திருச்சி தேவர் மன்றத்தில் நடைபெற்றது. விழாவுக்கு ம.தி.மு.க மாணவர் அணி மாநில செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ முன்னிலையில் முதல் 4 இடங்களை பெற்ற மாணவர்கள்…

  3. பிரணாப் முகர்ஜி கடந்த 20 ஆம்நாள் சென்னைலயோலா கல்லூரிக்கு வந்தபோது திரைப்பட இயக்குனர் கவுதமன், உள்ளிட்ட மாணவர்களை கைதுசெய்து தாக்கியுள்ளார்கள் இதனை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கடந்த 20–ந்தேதி சென்னை லயோலா கல்லூரிக்கு வந்தபோது முன் எச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் திரைப்பட இயக்குனர் கவுதமன், மாணவர்கள் பார்வை தாசன், கவுதம், ரேமன், கோவண சந்திரன், ஜோதிலிங்கம் மற்றும் தமிழ்இனியன் ஆகியோரை கைது செய்து காவல்துறையினர் அழைத்து சென்று தாக்கினர். பின்னர் ஒரு தனியார் விடுதியில் அடைத்து வைத் திருந்தனர். அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்ற தகவலை தெரிவிக்கவில்லை. ஜனாதிபதி சென்னையில் இருந்து சென்றபிறகே அனைவரும் விடுவிக்கப்பட்டனர். வன்முறை தாக்குதல் நடத்த…

  4. வேஷ்டி தினம்: ஜனவரி 6ல் அரசு ஊழியர்கள் வேஷ்டி அணிய உத்தரவு. நெல்லை: பாரம்பரிய மரபை பறைசாற்றும் வகையில், அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் ஒருநாள் வேட்டி அணிந்து வேஷ்டி தினம் கொண்டாடுமாறு கோஆப் டெக்ஸ் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதனையடுத்து ஜனவரி 6ம் தேதி நெல்லை மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் வேஷ்டி அணிந்து பணிக்கு வர மாவட்ட ஆட்சியர் கருணாகரன் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் நெசவாளர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த, நெசவு தொழில் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் ஜனவரி 6 ம் தேதி வேஷ்டி தினம் கொண்டாடப்படுகிறது. இதைத் தொடர்ந்து , நெல்லை ஆட்சியர் கருணாகரன் வேஷ்டி விற்பனையை தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் கருணாகரன், ஜனவரி 6 ம் தேதி…

  5. தமிழகத்தில் ஒரு மாற்று அணி உருவாகுமா? கடந்த பல மாதங்களாக தமிழகத்தின் தேர்தல் களத்தில் ஒரு மாற்று அணி உருவாகவேண்டுமென்று முயன்ற பலரில் நாங்களும் ஒருவர். ஆனால் இன்று அந்த கனவு கனவாகவே போய்விடுமோ என்கிற நிலைதான் இருக்கிறது. தேசிய கட்சிகள் காங்கிரஸ்-பாஜக-மார்க்சிஸ்ட் போன்றவை, மற்றும் மாநில அளவில் தமிழர்கள் நலனை பின்னுக்குத் தள்ளி மக்களின் வாழ்வுரிமைப் பிரச்சனைகளில் கூட நேர்மையான நிலைப்பாட்டினை எடுக்காத அதிமுக , திமுக, தேமுதிக போன்றவைகள் அல்லாத ஒரு கூட்டமைப்பு ஏற்படுத்துதல் அவசியம் என்று பலரும் விரும்பினோம். தேர்தல் பாதை திருடர் பாதை என்று ஒதுக்குவதை காட்டிலும், அதில் செயல்படும் கட்சிகள் மூலமாக தமிழர்களின் வாழ்வுரிமை, சமூக கோரிக்கைகளை பிற தளத்தில் பிரதிபலிப்பது அவசியம…

    • 4 replies
    • 574 views
  6. சென்னை: இதோ ஜனவரி பிறந்து விட்டது; அடுத்த வாரம் பொங்கல்; பின்னர் பிப்ரவரி திங்கள் முதல் வாரத்தில் நம் அண்ணனின் நினைவு நாள்; இப்படியே நாட்கள் ஓடி விடும். பயணம் புறப்படு; பத்திரமாக வந்திடு; உன் வரவுக்காக என் விழிகள் காத்திருக்கும் என்று திருச்சி மாநில மாநாட்டுக்கு திமுக தொண்டர்களை அழைத்துள்ளார் திமுக தலைவர் கருணாநிதி. -thatstamil

    • 0 replies
    • 495 views
  7. டெல்லி: இலங்கைத் தமிழர்களுக்கு அந் நாட்டு அரசும் ராணுவமும் இழைத்துள்ள கொடுமைகளுக்கு நீதி கிடைக்கும்வரை தொடர்ந்து போராடுவேன் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். "சர்வதேச மனித உரிமைகள் பாதுகாப்பு' (எச்.ஆர்.டி.ஐ.) அமைப்பின் இரண்டு நாள் சர்வதேச மாநாடு டெல்லியில் சனிக்கிழமை நடைபெற்றது. "புலம்பெயர்ந்து வாழும் இந்தியர்களின் மனித உரிமை நிலைமை' எனும் தலைப்பில் இந்திய சட்டக் கல்வி நிறுவன மாநாட்டுக் கூட்ட அரங்கில் நடைபெற்ற இந்த மாநாட்டில் வைகோ பேசியதாவது: இலங்கைப் போரின்போது அந் நாட்டு ராணுவம் மேற்கொண்ட இன அழிப்பு நடவடிக்கையால் ஏராளமான தமிழர்கள் கொல்லப்பட்டனர். தமிழர்கள் இந்த பூமிப் பந்தின் பழமையான குடிகள் என்பதை வரலாற்று ஆய்வாளர்கள், தொல்லியல் துறையினர், மானுடவியல…

  8. திமுகவில் ஒடுக்கப்படும் அழகிரி- ஓரங்கட்டப்படும் கனிமொழி- ஓங்கும் ஸ்டாலின் கை!! சென்னை: திமுகவில் மீண்டும் கலகக் குரல் வெடிக்கும் நிலை உருவாகியுள்ளது. திமுக பொருளாளர் ஸ்டாலினுக்கு எதிராக அழகிரி, கனிமொழி முகாம்களில் இருந்து எழும்பும் குரல்கள் ஆரம்பத்திலேயே ஒடுக்கப்படுவதால் மு.க. ஸ்டாலினின் கை ஓங்கியே இருக்கிறது. மத்திய அரசில் இருந்து திமுக வெளியேறியது முதல் மு.க. அழகிரி அமைதியானார். அவர் மத்திய அமைச்சர் பொறுப்பில் இருந்துகூட தாமதமாகவே ராஜினாமா செய்தார். ஆனால் அப்போது இருந்தே காங்கிரஸுடன் கூட்டணி கிடையவே கிடையாது என்பதை மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக வலியுறுத்தி வந்தார். திமுகவின் பொதுக்குழுவில் யாரும் எதிர்பாராதபடி, காங்கிரசுடனான கூட்டணியை முறித்துக் கொள்ள வேண்டும் …

  9. "கலகக் குரல்" எதிரொலி- மதுரை மாநகர் தி.மு.க. கூண்டோடு கலைப்பு! தற்காலிக பொறுப்புக் குழு அறிவிப்பு!! சென்னை: திமுக தலைமையை விமர்சிக்கும் வகையில் போஸ்டர்கள் ஒட்டியதால் ஒட்டுமொத்த மதுரை மாநகர மாவட்ட தி.மு.க. அமைப்புக்கள் கூண்டோடு கலைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மதுரை மாநகர் மாவட்டத்துக்கு தற்காலிக பொறுப்புக் குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. அண்மையில் "இனியொரு விதிசெய்வோம்' என்ற தலைப்பில் ஜனவரி 30-ந் தேதி திமுக பொதுக்குழு சென்னையில் நடைபெறும் என்று மதுரை திமுக நிர்வாகிகள் இருவர் ஒட்டிய போஸ்டர் அக்கட்சியில் பெரும் புயலை கிளப்பியது. இதைத் தொடர்ந்து திமுக மேலிடம் கடும் எச்சரிக்கை விடுத்தது. ஆனாலும் கட்டுப்படாத மதுரை மாவட்ட திமுகவினர், மு.க…

  10. இந்தியாவின் செங்கற்சூளை தொழிற்துறையில் நிலவும் மனித அவலத்தை ஒழிக்க நிறையச் செய்ய வேண்டியுள்ளதாக செயற்பாட்டாளர்கள் கூறுகிறார்கள். இந்தியாவின் எழுச்சி கண்டுவருகின்ற நிர்மாணத்துறைக்கு கற்களை விநியோகிக்கின்ற இந்த தொழிற்துறையை பிரிட்டன் மற்றும் ஏனைய பல்தேசியக் கம்பனிகளும் பயன்படுத்துகின்றன. வேகமாக வளருகின்ற இந்தியப் பொருளாதாரத்தின் மிகவும் முக்கிய பகுதியாகவும் இந்தத் தொழிற்துறை திகழ்கிறது. இந்தியாவில் கற்சூளைகளில் 20 லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். பல சூளைகள் கொத்தடிமைத் தொழிலாளர்களை, கிட்டத்தட்ட அடிமைகள் போல பயன்படுத்துகின்றன. தினமும் 12 மணித்தியாலங்கள் பணியாற்றும் இவர்களது ஒரு நாள் கூலி தோராயமாக 150 இந்திய ரூபாய்கள் மாத்திரமே. கடுமையான வேலைநிலைமை …

  11. சாத்தியமே இல்லாதது தமிழீழம்: என்.ராம் சிறப்புப் பேட்டி:- 01 ஜனவரி 2014 உங்கள் மீதான விமர்சனங்களுக்கு வருவோம். தமிழ் மக்கள் பிரச்சினைகளில் நீங்களும் சரி ‘தி இந்து’வும் சரி… தமிழ் விரோத அணுகுமுறையோடே செயல்படுகிறீர்கள் என்ற குற்றச்சாட்டுக்கு என்ன பதில் சொல்கிறீர்கள்? இந்தியாவின் முக்கியமான, மூத்த பத்திரிகையாளர்களில் ஒருவர், அரசியல் விமர்சகர் – பத்தியாளர். ‘தி இந்து’ குழுமத்தின் தலைவர். எல்லாவற்றுக்கும் மேல் கடந்த 45 ஆண்டு கால ஆட்சியாளர்களையும் அதிகாரவர்க்கத்தையும் அருகில் இருந்து பார்த்தவர். என். ராமுடன் பேச விஷயங்களா இல்லை? அவருடைய பத்திரிகைத் துறை வருகையில் தொடங்கி தமிழில் 2013-ல் நடந்த முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான ‘தி இந்து’வின் தமிழ் வருகை வரை எல்லாம் பேசினோம்.…

  12. இலங்கைத் தமிழர்கள் தொடர்பில் இந்தியா அக்கறை கொண்டிருக்கவில்லை என்று கூறப்படுவதில் உண்மையில்லை என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழர்களின் நியாயமான கோரிக்கைளுக்கு தீர்வுகாண்பதற்காக இலங்கை அரசாங்கத்தை இணங்கச்செய்வதற்கான எல்லா நடவடிக்கைகளையும் இந்தியா எடுத்துள்ளதாகவும் அவர் கூறினார். தொடர்புடைய விடயங்கள் துஷ்பிரயோகம், மீனவர், மனித உரிமை, காமன்வெல்த், மன்மோகன் சிங், காங்கிரஸ் மன்மோகன் சிங்கின் 10 ஆண்டுகால ஆட்சியில் மூன்றாவது செய்தியாளர் சந்திப்பு டில்லியில் இன்று நடந்தது. அதன்போது, இலங்கைத் தமிழர்கள் தொடர்பில் இந்திய அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்காதது ஏன் என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த …

  13. வாழ்வின் விளிம்பு நிலையில் பூம்பூம் மாட்டுக்காரர்கள்.. அழிந்து வருகிறது தமிழ் கலாச்சாரத்தின் ஒரு அடையாளம் நம்பிக்கை இன்மை என்பது தற்போதைய வாழ்க்கையில் ஒரு அம்சமாக மாறிவிட்டது. அத நேரத்தில் யாராவது நம்பிக்கை வார்த்தை சொல்லமாட்டார்களா? என்ற தவிப்பும் ஏக்கமும் இதயத்தின் ஓரத்தில் இருப்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் நாம் ஏங்கும் நம்பிக்கை வார்த்தையை மனிதனோ மாடோ சொன்னால் கூட திருப்தியடையும் மனநிலையில் தான் முந்தைய காலங்கள் இருந்தன. மனைவியோ அல்லது தான் சார்ந்த கட்சியின் தலைவர் / தலைவியோ எதைச் சொன்னாலும் மறுதலிக்காமல் தலையினை ஆட்டுபவர்களை பூம் பூம் மாடு எனக் கிண்டலாகச் சொல்வதுண்டு. கிண்டலாகச் சொல்லப்பட்டாலும் பூம்பூம் மாடு என்பது தமிழ்ச் சமூகத்தின் கலாச்சார அடையாளம் என்பதை மறுக…

  14. பெண்ணிற் பெருந்தக்க யாவுள.. மஞ்சு காலை 7 மணிக்கே தன் வீட்டிலிருந்து பள்ளிக்குக் கிளம்பி விடுவாள். அப்போதுதான் 12 ஆம் வகுப்புப் படிக்கும் அவள் பள்ளியில் 8.30 மணிக்கு நடக்கும் சிறப்பு வகுப்புக்கு வந்து சேர முடியும். 7 மணிக்கே கிளம்புவதனால் அவள் காலையில் எதுவும் சாப்பிடுவதில்லை; மதிய உணவும் கூடத்தான். பத்தாம் வகுப்பு வரை மட்டுமே சத்துணவு என்பதை இங்கே நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். அவளுடைய ஊரிலிருந்து பள்ளிக்குப் பேருந்து வசதி கிடையாது. சரியான பாதை இல்லாததால் பேருந்து இன்னும் அவளுடைய ஊருக்குள் நுழையவில்லை. அவளும் அவளையொத்த பிற மாணவிகளும் நடந்தேதான் பள்ளிக்கு வந்து செல்கிறார்கள். மாலை 5.30 மணிக்குச் சிறப்பு வகுப்புகள் முடிந்து வீட்டுக்கு அவள் சென்று சேர இரவு 7 மணியாகி விடும…

    • 0 replies
    • 656 views
  15. காமராஜர் சென்ட்!’ காங்கிரஸின் சர்வரோக நிவாரணி ப.திருமாவேலன், ஓவியங்கள்: கண்ணா நாற்பது ஆண்டுகால வரலாற்றில், முதன்முதலாக தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கு இப்போது நடுக்கம் வந்துவிட்டது. காங்கிரஸ் கட்சி இருக்கும் திசையின் பக்கமே திரும்பவில்லை அ.தி.மு.க.. ஏதோ, அவர்களைப் பார்ப்பதே பாவம் என்பதைப்போல கழுத்தைத் திருப்ப ஆரம்பித்திருக்கிறது தி.மு.க.. இனி எந்த இறைத்தூதன் வந்து காங்கிரஸ் தலைவர்களை இந்தத் தேர்தலில் காப்பாற்றுவானோ தெரியவில்லை! ஆனால், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் ஞானதேசிகனும், முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும் பேசும் பேச்சைப் பார்த்தால், அத்தனை தொகுதிகளிலும் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் சக்தி படைத்ததாக தங்கள் கட்சி இருக்கிறது என்ற கர்வம் தெறிக்க…

  16. சென்னை: காங்கிரஸ் கட்சியை வீழ்த்த பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணியில் மதிமுக இடம்பெறும் என்று அக்கட்சிப் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். மதிமுக பொதுச்செயலர் வைகோ ஆண்டுதோறும் ஆங்கில புத்தாண்டு நாளில் சென்னையில் செய்தியாளர்களை சந்திப்பது வழக்கம். இன்றும் செய்தியாளர்களை சந்தித்த வைகோ கூறியதாவது: காங்கிரசை ஆட்சியை விட்டு அகற்ற வேண்டும் என்பதுதான் எங்களின் ஒரே நோக்கம். அதை நிறைவேற்ற சக்தி வாய்ந்த பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைக்க முடிவு செய்துள்ளோம். பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணிக்கான பேச்சு நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 4ந் தேதி நடைபெறம் கட்சி பொதுக் குழுவில் கூட்டணி பற்றிய இறுதி முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்படும். துரோகம் செய்யாது பாஜக …

  17. ஈழத் தமிழர்களுக்காகத் துணிந்து குரல் கொடுத்த தீரமும் திட சித்தமும் மிக்கப் போராளித் தலைவன் கொடுங்கோலர்களால் கோரமான முறையில் கொல்லப்பட்டு விட்டான் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் குறித்து இந்திய இணையதளத்துக்கு அளித்த சிறப்பு பேட்டியில் திமுக தலைவர் கருணாநிதி குறிப்பிட்டுள்ளார். திமுக தலைவர் கருணாநிதி, இந்தியா இணையதளத்துக்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார். நேற்று நாம் வெளியிட்ட கருணாநிதியின் சிறப்பு பேட்டியின் முதல் பகுதியில் தேர்தல் கூட்டணிகள், தமிழக அரசியல் கட்சிகள் பற்றிய கருத்தை வெளிப்படுத்தியிருந்தார். இன்றைய பகுதியில் ஈழத் தமிழர் பிரச்சனை, திமுகவில் அடுத்தது யார் என்பது உள்ளிட்ட கேள்விகளுக்கான கருணாநிதி விரிவான பதிலை அளித்துள்ளார். தடுமாறிய…

    • 3 replies
    • 583 views
  18. இலங்கையில் இருந்து ஒரு வயது குழந்தையுடன் படகு மூலம் தமிழகத்திற்கு அகதிகளாக சென்ற 4 பேர் இந்திய கடற்படையினரிடம் பிடிபட்டனர். இராமேஸ்வரம் முகாமில் இருந்து இந்திய கடற்படையினர் இன்று அதிகாலை ரோந்து சென்றனர். இராமேஸ்வரம் சேரான்கோட்டை கடல் பகுதியில் ரோந்து சென்ற போது அப்பகுதியில் பிளாஸ்டிக் படகு ஒன்றை கண்டனர். அந்த படகின் அருகில் சென்று பார்த்த போது அதில் இலங்கையை சேர்ந்த ஒரு வயது குழந்தை உட்பட 4 பேர் இருந்துள்ளனர். இதையடுத்து அவர்களை கடற்படை முகாமிற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இலங்கை யாழ்ப்பாணம் பகுதியை சேர்ந்த நிர்மலன் (24), இவரது மனைவி நிஷாந்தினி (23), இவர்களது ஒரு வயது குழந்தை மற்றும் நிர்மலனின் நண்பர் கலையரசன் (31) என தெரியவந்தது. மேலும் …

  19. மத்திய அரசாங்கத்தின் பலவீனமான அணுகுமுறை இலங்கைக் கடற்படையினரை வலுப்படுத்தி வருவதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கடத்திச் செல்வதாகக் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கு எதிராக இந்திய மத்திய அரசாங்கம் கடுமையான நிலைப்பாட்டைப் பின்பற்ற வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். மத்திய அரசாங்கத்தின் மெத்தனப் போக்கை இலங்கைக் கடற்படையினர் பயன்படுத்திக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்திய மீனவர்களை விடுதலை செய்ய உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் வலிறுயுத்தியுள்ளார். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/101051/language/ta-IN/article.aspx

  20. விஜயகாந்த், ராமதாஸ், வைகோ ஓரணியில் இடம் பெறுவரா என்ற கேள்விக்கு விடை சொல்ல, அடுத்த மாதம், 2ம் தேதி பா.ம.க.,வும், 4ம் தேதி ம.தி.மு.க.,வும், 5ம் தேதி தே.மு.தி.க.,வும் பொதுக்குழுவை கூட்டுகின்றன. தி.மு.க., அ.தி.மு.க.,வுக்கு மாற்றாக, தமிழகத்தில், பா.ஜ., தலைமையில் ஒரு அணி அமைப்பதற்கான, முதல்கட்டப் பேச்சுவார்த்தை முடிந்துள்ளது. பா.ம.க.,வும், ம.தி.மு.க.,வும் அணியில் சேர்வது உறுதியாகி உள்ளது. ஆனால், தே.மு.தி.க., மட்டும், இன்னும் சம்மதம் சொல்லவில்லை. "பொங்கலுக்கு முன், அணியை முடிவு செய்து விட வேண்டும். அதன்பிறகு, தேர்தல் பணியை துவங்க வேண்டும்' என, பா.ஜ., மேலிடம் விரும்புகிறது. எனவே, அதற்கு வசதியாக, "சீக்கிரம் முடிவை சொல்லுங்கள்' என, தே.மு.தி.க.,வுக்கு, பா.ஜ., தரப்பில…

  21. பிராய்லர் சிக்கன் சாப்பிடுவதால் ஆபத்துகள் : பிராய்லர் கோழி தற்போது கிலோ 180rs க்கு விற்பனை செய்யப்படுவதன் நோக்கம் தெரியுமா ? பிறந்து 55நாட்களில் கல்லீரல்,தமனி,நுரையீரல் என்று எல்லாத்தையும் இழக்கும் ஒரு செயற்கை பிராணியை தான் நாம் ஹலால் என்று முட்டாள் தனமாக உண்டு வாழ்கிறோம் ... இந்த விசயத்தில் கொஞ்சம் சிந்தியுங்கள் நண்பர்களே ... இன்னும் சில நாட்களில் கோழி கறியினால் வரப்போகும் பிரச்சனைகளால் 120rs-இல் இருந்து 40rs நோக்கி குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் , இவர்களின் திட்டத்தின் படி 180rs என்று விலையை உயர்த்தி , பிறகு 120rs என்ற சமநிலையை கொண்டு வரும் நோக்கத்தில் தான் இப்படி செய்கின்றனர் மேலும் இதை விரும்பி சாப்பிடும் நமக்கு எலும்புகளில் இருக்கும் சத்து முற்றிலும் அ…

  22. அருந்ததி ராயுடன் சமஸ் அருந்ததி ராயுடன் பேசுவது மனசாட்சியுடன் உரையாடுவதுபோல. உரையாடல் மிக நெருக்கமானதாக இருக்கும். ஆனால், உண்மையை எதிர்கொள்ளும் திராணி உங்களுக்கு வேண்டும். பொதுவாக தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கைபற்றிப் பேசுவதைத் தவிர்க்கும் அருந்ததி அன்றைக்கு எந்தக் கேள்வியையும் ஒதுக்காமல் பதில் அளித்தார். ‘‘இன்றைய அருந்ததி ராய் உருவாக, சின்ன வயது வாழ்க்கை எந்த அளவுக்கு அடிப்படையாக இருந்தது என்று சொல்ல முடியுமா?’’ ‘‘எனக்கு ஒரு வயதானபோது என் பெற்றோருக்கு விவாகரத்து ஆனது. கலப்புத் திருமணம் செய்துகொண்டு, கணவனைப் பிரிந்த ஒரு பெண் ஊர் திரும்பும்போது நம் சமூகம் எப்படி வரவேற்கும் என்று நான் சொல்ல …

  23. உங்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் செந்தமிழன் சீமான். உங்கள் கேள்விகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்: ntkmaanavar@gmail.com உங்களின் கேள்விகள் பதிலுடன் இணையத்தில் இடம்பெறும். www.thee.co.in படம்: இரா.சண்முகப்ரியன் கேள்விகள் தனிப்பட்ட விபரங்களை கேட்பதாக இல்லாமல் அரசியல், சமூகம் சார்ந்து இருப்பது நலம். இடும்பாவனம் கார்த்திக் (facebook)

  24. வேலூர் சிறையில் 23 ஆண்டுகளாக வாடிய மன நலம் பாதித்த ஆயுள் தண்டனை கைதியான பக்கா என்ற விஜயா இம்மாதம் 19-ம் தேதி விடுதலை செய்யப்பட்டுள்ளார். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு தற்போது வேலூர் சிறையில் இருக்கும் நளினியின் முயற்சியாலேயே விஜயா விடுதலை ஆகியுள்ளார். உருக்கமான காதல் விஜயா ஒரு நடனக் கலைஞர். ஆனால் மாபெரும் அரங்குகளின் மேடைகளில் நடனமாடும் கலைஞர் அல்ல. சாதாரண மக்களுக்காக வீதிகளில் நடனமாடும் நாடோடிக் குடும்பம் ஒன்றின் கழைக்கூத்தாடி கலைஞர் அவர். அவரின் நடனத்தால் மயங்கிய சுப்பிரமணியன் என்பவர் விஜயாவிடம் காதல் வயப்பட்டார். இதனால் சுப்பிரமணியனை அவரது சுற்றத்தார் ஒதுக்கினர். ஆனால் சுப்பிரமணியனோ தனது காதலில் உறுதியாக இருக்க விஜயாவும் அவரது காதலை ஏற்றுக் …

  25. உலகின் பாரம்பரியச் சின்னமும் இந்தியாவின் பெருமையுமான தஞ்சைப் பெரிய கோயில் முழுக்க முழுக்க மணல் மீது கட்டப்பட்டுள்ளது என்கின்றன சமீபத்திய ஆய்வுகள். 2010-ம் ஆண்டு நடந்த பெரிய கோயிலின் ஆயிரமாவது ஆண்டு விழாவின்போது கருவறையில் இருந்து சுமார் 100 அடி தொலைவில் ஆழ்துளைக் கிணறு தோண்டப்பட்டது. மூன்று நாட்கள் தொடர்ந்து துளையிட்டதில் சுமார் மூன்று லாரி அளவுக்கு மணல் வந்தது. பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்த கோயில் கட்டிடக் கலை நிபுணர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அப்பணி நிறுத்தப்பட்டது. இதுகுறித்து கோயில் கட்டிடக் கலைஞரும் ஆய்வாளருமான பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் ‘தி இந்து’விடம் கூறியதாவது: கீழே இரு மடங்கு சுமை பெரிய கோயில் வடிவமைப்பையும் அதன் தரைப்பகுதியையும் சில ஆண்டுகளுக்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.