Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. கோவை: கோவையில் ரூ.100 கோடி ரூபாய் நகைகளை மோசடி செய்து விட்டு, தலைமறைவாக இருந்த நகைக்கடை அதிபரை, போலீசார் கைது செய்துள்ளனர். கோவை, புரூக்பீல்டு அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த சகோதரர்கள் பாலாஜி, 45, மற்றும் அசோக்குமார், 42. இருவரும் கூட்டாக, கோவை வைசியாள் வீதி, பெரிய கடைவீதி, கிராஸ்கட் ரோடுகளில் ஜிஷா, ஸ்வர்ண லட்சுமி என்ற பெயர்களில் நகைக்கடைகளை நடத்தினர். பொதுமக்கள், நகை வியாபாரிகள், வங்கிகள் என, பலரிடமும் நூறு கோடி ரூபாய்க்கும் அதிகமாக மோசடி செய்துவிட்டு கடந்த மே மாதம் குடும்பத்துடன் தலைமறைவாகிவிட்டனர். தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்த நிலையில் கடந்த வாரம் சகோதரர்களில் ஒருவரான பாலாஜி, சென்னை கோர்ட்டில் சரணடைந்தார். திங்களன்று இரவு அமராவதி நகர் செக்போஸ்ட்டில், அசோக்கு…

  2. ஈழத் தமிழனின் ஆவியிலும் அரசியல் பண்ணும் இந்திய அரசியல்வாதிகள்.. காங்கிரஸ் கட்சி வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் நாட்டு வாக்காளரை கவர்வதற்கு நயவஞ்சகமான வியூகம் ஒன்றை வகுத்துள்ளது. இதற்கான முதலாவது துரும்புச் சீட்டை சுதர்சன நாச்சியப்பன் மூலமாக போட்டுள்ளது, அவர் பேசியிருக்கும் பொன் குஞ்சு வாசகங்கள் இவைதான். ” இலங்கை என்பது தமிழர்களுக்கு சொந்தமான பூமி.. அந்தப் புண்ணிய பூமியை விட்டுவிட்டு அதற்கு எதிர்ப்பாக நீங்கள் எதைச் செய்தாலும் நாளைக்கு தமிழ் ஈழம் என்பது கனவாகவே போய்விடும் ” ” நாம் அந்தக் கனவை நனவாக்குவோம், பூமியை முதலில் கைப்பற்றுவோம், இஸ்ரேல் கைப்பற்றப்பட்டது, பாலஸ்தீனம் கைப்பற்றப்பட்டது அதுபோல இலங்கையில் உள்ள தமிழ் பூமியும் கைப்பற்றப்பட வேண்டும் என்ற…

  3. இடிந்தகரை: மறைந்த சபாநாயகர் காளிமுத்துவின் மகள் கயல்விழியைக் கைப்பிடித்த கையோடு இடிந்தகரை போராட்டக்களத்திற்குப் போயுள்ளார் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான். புது மனைவியுடன் வந்த சீமானுக்கு இடிந்தகரை மக்கள் சிறப்பான வரவேற்பும், கல்யாணப் பரிசும் கொடுத்து அசத்தி விட்டனர். இந்த நிகழ்ச்சியில் அணு உலைக்கு எதிரான அமைதி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுப. உதயக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மனைவி கயல்விழியுடன் சீமான் மேற்கொண்ட முதல் பயணம் இதுதான்.திருமணம் முடித்த கையோடு சீமான், தங்களைப் பார்க்க வந்ததால் இடிந்தகரை மக்கள் குறிப்பாக போராட்டாக்குழுவினர், கிராமத்து மக்கள், பெண்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தன சிறப்பான வரவேற்பு கொடுத்து அழைத்துச் சென்று கேக் வெட்டச் சொல்லினர் இடிந்தக…

  4. விருதுநகர்: லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைப்போம் என்பது யூகம் மட்டுமே என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக விருதுநகரில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, 'மத்திய காங்., கூட்டணி அரசின் மக்கள் விரோத கொள்கைகளை எதிர்த்து பேசுகிறோம். அப்போது முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் சிறந்த மக்கள் நலத்திட்டங்களை பாராட்டியும் பேசுகிறேன். அதற்காக தேர்தலில் பா.ஜ.,வுடன் கூட்டணி சேரப்போவதாக கூறப்படுவது வெறும் யூகம் தான். கூட்டணி மற்றும் லோக்சபா தேர்தலில் நான் உட்பட கட்சி வேட்பாளர்கள், எந்தெந்த தொகுதியில் போட்டியிடுவது என்பது குறித்து தக்க நேரத்தில் உயர்மட்டக்குழு கூட்டத்தில் முடிவு செய்து அறிவிக்கப்படும் என்றார். http://tamil.oneindia.in/news/2013/…

  5. சென்னை: மத்திய இணையமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் தமிழக அரசின் காரில் பயணம் செய்தபோது அதில் இருந்த முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படம் காங்கிரஸ் கட்சி துண்டால் மறைக்கப்பட்டது. புதுக்கோட்டைக்கு வரும் அமைச்சர்களை அழைத்துச் செல்ல தமிழக அரசு கார் உள்ளது. அந்த காரின் முன் இருக்கைகளின் முன்பு முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படம் ஒன்று உள்ளது. தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் புதுக்கோட்டை செல்லும் போதெல்லாம் மாநில அரசின் காரை தான் பயன்படுத்துவார். இந்நிலையில் புதுக்கோட்டைக்கு நேற்று சென்ற காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மத்திய இணையமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் மிரட்டுநிலைக்கு சென்றுவிட்டு அங்கிருந்து காரைக்குடி செல்ல தமிழக அரசின் கார் கொண்டு வரப்பட்டது. அந்த காரின் முன்…

  6. வேலூர் சிறையில் கைத்தொலைபேசி வைத்திருந்ததாக ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற நளினி மீது வேலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கை ரத்துச் செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. 2010ஆம் ஆண்டில் வேலூர் மகளிர் சிறையில் தன்வசம் கைத்தொலைபேசி வைத்திருந்தார் என்று நளினி மீது குற்றஞ்சாட்டப்பட்டு, வேலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. கணவருடன் நளினி ஆனால், இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி சார்பில் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கைத்தொலைபேசி வைத்திருந்த குற்றத்துக்கான தண்டனையாக நளினி ஏற்கனவே சிறையின் 'ஏ' பிரிவில் இருந்து 'பி' பிரிவுக்கு மாற்றப்பட்டுவிட்டதாகவும், ஆகவே தண்…

  7. சிறீலங்காவில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வலியுறுத்தி நாளை விடுதலை சிறுத்தைகள் சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திருமாவளவன் கூறினார். தியாகி இமானுசேகரனின் 56–வது நினைவு தினத்தையொட்டி பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இதில் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது, தமிழக அரசு சட்டம்–ஒழுங்கை காக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் பல நடவடிக்கைகளை எடுத்து உள்ளது. இமானுவேல் சேகரனின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வாடகை வாகனத்தில் வரக்கூடாது என்றும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. …

  8. சென்னை: விநாயகர் சதுர்த்தி விழா தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. சென்னையில் சிலைகளின் பாதுகாப்பிற்காகவும்,ஊர்வலத்தை ஒட்டியும் 10 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நேற்று மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையாருக்கு 150 கிலோ எடை கொண்ட மெகா கொழுக்கட்டை படையல் இடப்பட்டது. உச்சிப்பிள்ளையார் கோவிலில் செப்டம்பர் 9ம் தேதி முதல் வரும் 22ம் ந் தேதி வரை பால கணபதி, நாகாபரண கணபதி, லட்சுமி கணபதி, தர்பார் கணபதி, பஞ்சமுக கணபதி, மூஷிக கணபதி, ராஜ அலங்காரம், மயூர கணபதி, குமார கணபதி, வல்லப கணபதி, ரிஷ பாருடர், சித்திபுத்தி கணபதி, நடன கணபதி ஆகிய அலங்காரங்களில் விநாயகர் காட்சி அளிக்கிறார். சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் சதுர்த…

  9. சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கு உறுப்பினர் உரிமைச் சீட்டு வழங்கும் பணி முடிந்தவுடன் தேர்தல் நடைபெறும் என்று அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சட்ட திட்ட விதிகளின்படி, கட்சி அமைப்புகளின் பொது தேர்தல் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்திட வேண்டும், என்பதற்கு இணங்க, அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் தங்களுடைய பதிவை புதுப்பிப்பதற்கும், புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்குமான பணிகள் தொடங்கப்பட்டு ஏராளமானோர் உறுப்பினர் உரிமைச் சீட்டு வேண்டி, அதற்கான விண்ணப்ப படிவங்களை தலைமைக் கழகத்தில் சேர்ப்பித்துள்ளனர். தற்போது இவர்க…

  10. சென்னை: இலங்கையில் தமிழர் வாழும் பகுதியை பிரித்து தமிழீழம் அமைப்பதுதான் தீர்வாக அமையும் என்று மத்திய இணை அமைச்சர் சுதர்சன நாச்சியப்பனும், ஆனால் இலங்கையை பிரிக்கக் கூடாது என்று மற்றொரு இணை அமைச்சர் நாராயணசாமியும் கருத்து தெரிவித்துள்ளனர். சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன், இலங்கையில் தமிழர்கள் வாழும் வடக்கு கிழக்கு பகுதி தமிழர்களின் தாயகம். சுதந்திர தமிழீழம் என்பது அனைவரது கனவு. அந்த கனவு நிறைவேற வேண்டுமெனில் வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் சொந்த மண்ணில் குடியேற வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணையமைச்சர் நாராயணசாமியோ, இலங்கைக்கு போர்க்கப்பல்கள் வழங்குவது குறித்த ஒப…

  11. தாதுமணல் கடத்தப்படுவதை தடுக்க நிரந்தர தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை அனைத்து மாநில முதல்வர்களும் மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் கூறினார். டெல்லி செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் செய்தியாளர்களிடம் பேசினார் அப்போது அவர் கூறியதாவது: கடற்கரையோரங்களில் தோரியம் என்னும் தாதுமணல் கடத்தப்படுவதை தடுக்க நிரந்தர தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை, அனைத்து மாநில முதல்வர்களும் மேற்கொள்ள வேண்டும் என்றும், இது குறித்து எல்லா மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுத இருக்கிறேன் என்றும் தெரிவித்தார். மேலும் பேசிய அவர், சத்தியமங்கலம்- மைசூர் இடையே ரயில் போக்குவரத்திற்கு அனுமதித்தால் இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல்கள் பாதிக்கப்படும…

  12. பெங்களூர்: தம் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையை உடனே தொடரக் கோரி தமிழக முதல்வர் ஜெயலலிதா தாக்கல் செய்த மனு பெங்களூர் நீதிமன்றத்தில் இன்று தள்ளுபடி செய்யப்பட்டது. 1991-96ஆம் ஆண்டு தமிழக முதல்வராக ஜெயலலிதா பொறுப்பு வகித்த போது வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்தார் என்பதுதான் வழக்கு. இந்த வழக்கின் இறுதி கட்ட விசாரணையில் அரசு வழக்கறிஞரை கர்நாடகா அரசு திரும்பப் பெற்றது. இதை எதிர்த்து ஜெயலலிதா சார்பில் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் விசாரணையின் முடிவில் புதிய அரசு வழக்கறிஞரை கர்நாடகா நியமித்துக் கொள்ள அனுமதித்தது. இந்த நிலையில் தம் மீதான வழக்கு விசாரணையை உடனடியாக தொடரக் கோரி தமிழக முதல்வர் ஜெயலலிதா பெங்களூர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக…

  13. Started by SUNDHAL,

    ”மதச்சார்பற்றவர் என்று கலைஞர் சொல்லிக்கொண்டு ரம்ஜானுக்கு மட்டும் நோன்புக்கஞ்சி குடிக்கிறாரே? பிள்ளையார் சதுர்த்திக்கு கொழுக்கட்டை சாப்பிடத் தயரா?” என்று இந்துமுன்னணி இராம. கோபாலன் ஒருமுறை சவால் விட்டார். “இராம. கோபாலன் கொடுத்தால் கொழுக்கட்டை சாப்பிடத் தயார்” என்று கலைஞர் பதிலளித்தார். அடுத்து வந்த விநாயகர் சதுர்த்தியின்போது இராம. கோபாலன் கொழுக்கட்டையோடு அறிவாலயம் சென்றார். கலைஞரும் ஒரு பிடி பிடித்தார். :d

  14. நாகர்கோவில் ரயில் நிலைய விரிவாக்கத்துக்கு மாவட்ட நிர்வாகம் போதிய ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையம் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய ரயில் நிலையங்கள் ஆகும். இந்த ரயில் நிலையங்கள் ரயில்வேதுறைக்கு வரும் வருமான அடிப்படையில் தற்போது ஏ கிரேடு ரயில் நிலையமாக உள்ளன. நாகர்கோவில் ரயில் நிலையம் மூலம் ரயில்வேதுறைக்கு 2011-12-ம் நிதி ஆண்டில் 26 கோடி 27 லட்ச ரூபாய் வருமானம் கிடைத்தது. http://tamil.oneindia.in/news/2013/09/08/tamilnadu-nagerkovil-railway-station-extension-works-are-stagnant-183011.html

  15. சென்னை: ஈழத்தமிழர்களுக்கும், தமிழக மீனவர்களுக்கும் அனுசரணையாக இல்லாமல் இலங்கைக்கே மத்திய அரசு அனுசரணையாக இருக்கிறது என்று திமுக தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடல் எல்லையைப் பாதுகாக்க இலங்கைக்கு 2 போர்க் கப்பல்களை இந்தியா வழங்கும் என்று செய்தி வெளியாகியுள்ளது.2009-ஆம் ஆண்டு இலங்கையில் போர் நடைபெற்றபோது, இலங்கை அரசுக்கு, இந்தியா உதவி செய்ததாக சிலர் விமர்சனம் செய்த நேரத்தில் திமுக அதை நம்பவில்லை. இலங்கை அரசைக் கண்டித்து சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கினேன். அந்த நேரத்தில் இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டு விட்டதாகவும், இலங்கை அரசு போரை நிறுத்தி விட்டதாகவும் எனக்குத் தகவல் கொடுத்து, உண்ணாவி…

  16. இந்தியாவின் முன்னணி மற்றும் பாரம்பரிய நாளிதழ்களில் ஒன்றான தி ஹிந்து, செப்டம்பர் 16ம் தேதி முதல் தனது தமிழ்ப் பதிப்பை களத்தில் இறக்குகிறது.மிகத் தீவிரமான மார்க்கெட்டிங் உத்திகள், தரமான பத்திரிக்கையாளர் தேர்வு என பக்காவாக களம் இறங்கப்போகிறது ஹிந்துவின் தமிழ்ப் பதிப்பு. ஹிந்துவின் தமிழ் வரவால் தமிழ்ப் பத்திரிக்கை உலகில் புதிய போட்டி படு வீரியத்துடன் உருவாகியுள்ளதாக கருதப்படுகிறது. இந்தத் தமிழ்ப் பதிப்புக்கு காமதேனு என்று பெயரிடப்பட்டுள்ளதாக ஒருபேச்சு உலவுகிறது. ஆனால் இந்தப்பெயர் மக்களிடம் எடுபடாது என்று இன்னொரு பேச்சும் அடிபடுவதால் அதிகாரப்பூர்வமாக தனது பெயரை இன்னும் அறிவிக்காமல்உள்ளது ஹிந்து. புதன்கிழமையன்று ஹிந்துவில் இந்தப் பத்திரிக்கை குறித்த விளம்பரம் வெள…

  17. இலங்கைக்கு போர்க்கப்பல்களை வழங்கினால் தமிழகம் கொந்தளிக்கும் : ராமதாஸ் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையின் கடல்பரப்பை பாதுகாப்பதற்காக இரு போர்க்கப்பல்களை அந்நாட்டிற்கு வழங்க இந்தியா முடிவு செய்திருப்பதாகவும், கோவாவில் உள்ள அரசுக்கு சொந்தமான கப்பல் கட்டும் தளத்தில் தயாரிக்கப்பட்டு வரும் இந்த போர்க் கப்பல்கள் வரும் 2017 மற்றும் 18ஆம் ஆண்டில் இலங்கையிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இலங்கையில் கடந்த 2009ஆம் ஆண்டு நடந்த போரின்போது ஒன்றரை லட்சம் அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். போர் முடிவடைந்து 4 ஆண்டுகளுக்கு மேலாகியும் போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு மறு வாழ்வு அளிக்கப்பட வில்லை. லட்சக்கணக்கான தமிழர்கள் இன்னும் வீடின்ற…

  18. மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி கிடைக்காததால், தமிழ்நாட்டில் உள்ள செய்யூர் அனல் மின் நிலைய பணிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. -இந்திய சுற்றுச் சூழல் அமைச்சர் செயந்தி நடராசன் - தமிழ்நாட்டிலிருந்து வெற்றிபெற்று மத்திய அமைச்சரானவர்.. செய்யூர் மின் நிலையத்திக்கு அனுமதி கிடைத்து விட்டால் மொத்தம் 4000 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். ( தமிழ்நாட்டிக்கு வெறும் 1600 மெகாவாட் தான்.),.... அது அதிமுகவுக்கு சாதகமாக அமைந்துவிடும் என்பதால் இன்னும் அனுமதி தராமல் இழுத்தடிக்கிறார்..... - இத்தனை அதிகாரமிக்க செயலலிதா என்ன செய்யவேண்டும்??? சுற்றுச் சூழல் அமைச்சர் செயந்தி நடராசனுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தவேண்டும்.. அவர் வீடு , அலுவலகம் முன்பாக தொடர் போராட்டங்கள் நட…

  19. சென்னை: சென்னையில் ரூ.6 கோடி மதிப்புள்ள கம்யூட்டர்களுடன் லாரி கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை துறைமுகத்தில் இருந்து புதன்கிழமை இரவு 2 கண்டெய்னர் லாரிகளில் கம்ப்யூட்டர்கள் ஏற்றிச் செல்லப்பட்டன. ஒரு லாரியில் மட்டும் ரூ.6 கோடி மதிப்புள்ள கம்ப்யூட்டர்கள் இருந்தன. இவைகளை மாதவரத்தில் உள்ள குடோனுக்கு கொண்டு செல்லும் வழியில் மாதவரம் பால்பண்ணை அருகே மஞ்சம்பாக்கம் சந்திப்பில் டிரைவர் லாரியை நிறுத்தி வைத்திருந்தார். வியாழன்று காலையில் இந்த லாரியை திடீரென காணவில்லை. டிரைவர் எங்கு சென்றார் என்பதும் தெரியவில்லை. இது பற்றி மாதவரம் பால்பண்ணை போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் காசியப்பன் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மாயமான கண்டெய்னர் லாரிய…

  20. நித்யானந்தாவும், நடிகை ரஞ்சிதாவும் ஒன்றாக இருப்பது போன்ற ஆபாச வீடியோ காட்சிகளை வெளியிட்டதற்காக, ஸ்டார் விஜய் டிவி நிறுவனம் நடிகை ரஞ்சிதாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது டிவி சேனல் ஒழுங்கு முறை அமைப்பு. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர், நித்யானந்தா-ரஞ்சிதா தனியறையில் இருப்பதுபோன்ற ஆபாச வீடியோ ஒன்றை தனியார் சேனல் ஒன்று ஒளிபரப்பி மக்களுக்கு அதிர்ச்சியளித்தது. தொடர்ந்து 2 மணி நேரத்திற்கு ஒருமுறை அந்த படுக்கையறைக் காட்சிகளை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் என மாறி மாறி ஒளிபரப்பியது அந்த சேனல். கடந்தாண்டு மார்ச் 21ஆம் தேதி இதே காட்சிகளை ஸ்டார் விஜய் டிவி, தனது நடந்தது என்ன - குற்றமும் பின்னணியும் என்ற நிகழ்ச்சியில் ஒளிபரப்பியது.இதையடுத்து இந்த வீடியோ காட்சிகளை வெள…

  21. நாகர்கோவில்: தே.மு.தி.க.வில் இருந்து விலகிய ஆஸ்டின், கருணாநிதி முன்னிலையில் தி.மு.க.வில் இணையப்போவதாக தெரிவித்துள்ளார். நாகர்கோவிலைச் சேர்ந்த ஆஸ்டின் தேமுதிகவில் மாநில துணைச் செயலாளர் பதவியை வகித்து வந்தார். 2009-ல் லோக்சபா தேர்தலில் நாகர்கோவில் தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிட்டுத் தோற்றார். 2011-ல் பத்மநாபபுரம் சட்டசபை தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிட்டும் தோற்றார். தேமுதிகவில் ஏற்பட்ட உள்கட்சி பூசலால் கட்சிட்க் பணிகள் எதிலும் ஈடுபடாமல் விலகி இருந்து வந்த ஆஸ்டின் கடந்த சில தினங்களுக்கு முன்பு அக்கட்சியில் இருந்து விலகினார். இதையடுத்து, அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதில் பெரும்பாலானவர்கள் தி.மு.க.வில் சேர வலியுறுத்தினர்…

  22. சென்னை: சென்னை விமானநிலையத்தின் சரக்கு குடோனில் பயங்கர கதிர்வீச்சு கருவி ஒன்று 5 ஆண்டுகளாக கேட்பாரற்று கிடப்பது கண்டறியப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையம் அருகில் சரக்கு விமான போக்குவரத்து அலுவலகம் மற்றும் குடோன் உள்ளது. அங்கு உயிருக்கு உலை வைக்கும் பயங்கர கதிர் வீச்சு கருவி ஒன்று கேட்பாரற்று கிடக்கிறது. 5 ஆண்டுகளுக்கு மேலாக இந்த கருவி அங்கு இருந்துள்ளது. பாதுகாப்பு மிகுந்த விமான நிலைய எல்லைக்குள் இந்த கருவி ‘கார்கோ' பகுதியில் நீண்ட காலமாக யாரும் எடுத்து செல்லாமல் இருப்பது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரி விமான நிலைய அதிகாரிகளுக்கோ, பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கோ தெரிவிக்கவில்லை. சென்னை விமான நிலையம் பாதுகாப்பு எச்சரிக்கையில் உள்ளது. அப்படி இருக்கும் பட்சயத்தில் கதிர்வீச…

  23. ராமநாதபுரம் சமஸ்தானத்துக்கு சொந்தமான கச்சத்தீவு பகுதியில் கடலில் சங்கு குளிக்கவும், கச்சத்தீவில் அபூர்வ செடி, கொடிகளை எடுத்துக் கொள்ளவும் கடந்த 133 ஆண்டுகளுக்கு முன்பு ராமநாதபுரம் சேதுபதி மன்னர்கள் குத்தகைக்கு விட்டுள்ளனர். அந்த குத்தகை ஆவணங்களை, ராமநாதபுரம் மன்னரின் வாரிசு தமிழக அரசுக்கு அனுப்பினார். ராமேசுவரத்தில் இருந்து 10 கி.மீ தூரத்தில் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ளது, சின்னஞ்சிறிய கச்சத்தீவு. இந்தியாவிடம் இருந்து பெற்ற இந்த தீவுப்பகுதியில் இந்திய மீனவர்களையே மீன்பிடிக்க விடாமல் இலங்கை அடாவடி செய்து வருவதால், கச்சத்தீவு பிரச்சினை இப்பொழுது பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இந்த தீவு நீண்ட நெடுங்காலமாக ராமநாதபுரம் சமஸ்தான மன்னர்களுக்கு பூர்வீக பாத…

  24. சென்னை: காவிரி ஆற்றில் நீர்த்தேக்கம் அமைக்கும் கர்நாடக அரசின் நடவடிக்கையை தடுத்து நிறுத்தக் கோரி பிரதமரை முதல்வர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார். கர்நாடகாவில் அணைகள் நிரம்பி உபரி நீராக காவிரியில் வெளியேற்றப்படும் தண்ணீரினால் மேட்டூர் அணை நிரம்புகிறது. இவ்வாறு உபரிநீராக தமிழகத்திற்கு திருப்பி விடப்படும் தண்ணீரை முறையாகப் பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில், காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டு அருகே நீர் மின் உற்பத்தி நிலையம் அமைக்க கர்நாடக அரசு ஆலோசித்து வருகிறது. இதற்காக மேக்கேதாட்டு அருகே 3 நீர்த்தேக்கங்களைக் கட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது. காவிரி ஆற்றின் உபரிநீரை கர்நாடகம் பயன்படுத்திக் கொள்வதில் காவிரி நடுவர் மன்றத்தில் எந்தவிதத் தடங்கலும் இல்லை. எனவே, மேக்கேதாட்டு அரு…

  25. சென்னை: உணவு பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்றியதால் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியை, கலியுக மணிமேகலை என திமுக தலைவர் கருணாநிதி சொன்னாலும் சொன்னார், ஃபேஸ்புக், டுவிட்டரில் கமெண்ட் போட்டு தாக்குகின்றனர். சிலப்பதிகார காப்பியத்தில் கோவலன்- மாதவிக்கு பிறந்தவர் மணி மேகலை. துறவரம் பூண்டு மக்களின் பசியை போக்க ஆண்டனை வேண்டிய காரணத்தால் மக்களின் பசியை போக்கும் அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம் அமுதசுரபி மணிமேகலைக்கு கிடைத்தது. அதன் மூலம் அனைவருக்கும் உணவு அளித்ததாக சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் கோடிட்டு காட்டியுள்ளார். இத்தாலியில் பிறந்த சோனியா காந்தியை மணிமேகலையோடு ஒப்பிட்டு பாராட்டுவதா என்று கொதித்த இணைய போராளிகள் சமூக வலைத்தளங்களில் கமெண்ட் தோராணங்களால் கட்டி தொங்க விடுகின்றனர் சாம…

    • 2 replies
    • 3k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.