Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அயலகச் செய்திகள்

இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சிலர் பிழைப்புக்காக குடும்பத்துடன் இடம்பெயர்ந்து, புதுச்சேரியின் கிராமப்புற பகுதியான கோர்க்காட்டில் குடிசை அமைத்து வசித்து வருகின்றனர். கரும்பு வெட்டும் வேலைக்காக வருடத்தின் பெரும்பாலான நாள்கள் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தங்கிவிடும் இவர்களுக்கு குழந்தைகள் என்பது எப்போதும் கூடுதல் சுமை. இந்த நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு கீழ்சாத்தமங்கலத்தைச் சேர்ந்த கன்னியப்பன் என்பவர் தனது வாத்துப் பண்ணையில் சிறுமிகளை கொத்தடிமைகளாக வைத்திருக்கிறார் என்று புதுச்சேரி குழந்தைகள் நல பாதுகாப்பு குழுவுக்கு ரகசிய தகவல் சென்றது. அதனடிப்படையில் அங்கு சென்று ஆய்வு நடத்திய குழந்தைகள் நல பாதுகாப்பு குழுவினர் 2020 அக்டோபர் 21-ம் தேதி இரண்டு சிறுமிகளை மீட்டன…

  2. குடியரசு தலைவர் தேர்தல் ஹைலைட்ஸ்: பிபிஇ ஆடையுடன் ஓபிஎஸ், நிர்மலா - தனி விமானத்தில் வந்த உதயநிதி - சர்ச்சையான சுயேச்சை எம்எல்ஏ ஓட்டு - ஹைலைட்ஸ் 43 நிமிடங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, பிபிசி கவச ஆணையுடன் வாக்குரிமை செலுத்தும் ஓ.பன்னீர்செல்வம் (இடது) இந்தியாவின் அடுத்த குடியரசு தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு திங்கட்கிழமை (ஜூலை 18) மாலையில் நிறைவடைந்தது. இந்த தேர்தலையொட்டி அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள சட்டமன்ற வளாகங்களில் நடைபெற்ற வாக்குப்பதிவில் பதிவான ஓட்டுகள் டெல்லிக்கு கொண்டு வரப்பட்டு, ஜூலை 21ஆம் தேதி நாடாளுமன்ற வளாகத்தில் வாக்கு எண்ணிக்கை நடத்தப்படும். அன்றே முடிவகள் அற…

  3. ரூ.200 கோடி மோசடி: குஜராத்தில் 'வாடகை' வங்கி கணக்குகள் வழியே புதுமையான முறையில் பணம் கைமாறியது எப்படி? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் ராக்ஸி ககடேகர் சாரா பிபிசி செய்தியாளர் 9 நவம்பர் 2025 வீடு, கடை, கார், பங்களா போன்றவற்றை வாடகைக்கு விடுவது சாதாரண விஷயம் தான். ஆனால் இப்போது, குஜராத்தில் வங்கிக் கணக்குகளை வாடகைக்கு விடும் புதிய மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சைபர் குற்றவாளிகள் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் 100-க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளை குஜராத் காவல்துறை கண்டுபிடித்துள்ளது. இந்தக் கணக்குகள் குஜராத்தின் பல பகுதிகளைச் சேர்ந்தவை. பெரும்பாலான கணக்குகள் குற்றம் சாட்டப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்குச் சொந்த…

  4. கொரோனா அச்சுறுத்தல்- இந்திய விமானங்களுக்கான தடையை மேலும் நீடித்தது கனடா கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் தொடர்ந்து நீடித்து வருகின்றமையினால் இந்திய விமானங்களுக்கான தடையை கனடா மேலும் நீடித்துள்ளது. எதிர்வரும் செப்டம்பர் 21ஆம் திகதி வரை இந்திய விமானங்களுக்கான தடையை நீடித்துள்ளதாக அந்நாட்டு போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது. இதேபோன்று இங்கிலாந்து, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளும் இந்திய விமானங்களுக்கு தடை விதித்துள்ளன. இதேவேளை அமெரிக்காவில் இருந்து இந்தியா செல்பவர்கள் 2 டோஸ் தடுப்பு மருந்து போட்ட பின்னர் செல்ல வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. மேலும் பிரான்ஸும் இந்தியாவில் இருந்து வருபவர்கள் தங்களை குறிப்பிட்ட நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும…

  5. ஸ்ரீநகர்: காஷ்மீரில் அனந்தநாக் மாவட்டத்தை ஒட்டிய வனப்பகுதியில் காணாமல் போன ராணுவத்தைச் சேர்ந்த வீரரின் உடல், குண்டு காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக புதன்கிழமை அதிகாரிகள் தெரிவித்தனர். ஷா பகுதியில் இருந்து காணாமல் செவ்வாய்க்கிழமை போயிருந்ததாக கூறப்பட்ட பிராந்திய ராணுவத்தைச் சேர்ந்த வீரர் ஹிலால் அஹ்மத் பட்-டின் உடல் அனந்தநாக் மாவட்டத்தின் உட்ரசோ பகுதியில் உள்ள சங்லான் வனப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ராணுவ வீரரின் உடல் மருத்துவ நடைமுறைகளுக்காக மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னதாக, இது குறித்து விவரமறிந்த வட்டாரங்கள் கூறும்போது, “ராணுவ வீரர்கள் இருவர் அனந்தநாக் ஒட்டிய வனப்பகுதியில் கட…

  6. உக்ரைனில் இருக்கும் இந்தியர்களை உடனடியாக வெளியேறுமாறு வலியுறுத்து! உக்ரைனில் போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், அங்குள்ள இந்தியர்களை உடனடியாக வெளியேறுமாறு இந்திய தூதரகம் வலியுறுத்தியுள்ளது. இது குறித்து இந்திய தூதரகம் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ” உக்ரைனில் போர் பதற்றம் நிலவுவதால், இங்கிருக்கும் இந்தியர்கள், குறிப்பாக அத்தியாவசிய தேவைகளுக்கு தங்கியிருக்கும் மாணவர்கள் உள்ளிட்டோர் உடனடியாக நாடு திரும்புமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். மேலும் பதற்றம் தனியும் வரை உக்ரைனுக்கு அத்தியாவசிய பயணத்தை தவிர்க்குமாறு இந்தியர்களிடம் கேட்டுக்கொள்கிறோம்’ எனத்…

  7. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, வங்கதேசம் ஏற்கெனவே மின் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளது எழுதியவர், அர்ச்சனா சுக்லா பதவி, பிபிசி நியூஸ் அதானி குழுமம் `அதானி பவர்’ நிறுவனம் வாயிலாக வங்கதேசத்தில் மின் விநியோகம் செய்து வந்தது. அங்கு விநியோகிக்கப்படும் மின்சாரத்தில் 10% அதானி பவர் நிறுவனத்தால் வழங்கப்படுகிறது. வங்கதேசம் செலுத்த வேண்டிய 800 மில்லியன் டாலர் தொகை நிலுவையில் இருப்பதால், அதானி பவர் நிறுவனம் தற்போது அதன் மின்சார விநியோகத்தைப் பாதியாகக் குறைத்துள்ளது. இதையடுத்து வங்கதேச அரசு நிலுவைத் தொகையைச் செலுத்தும் நடவடிக்கையை விரைவுப்படுத்தியுள்ளது. பிபிசியிடம் பேசிய இரண்டு மூத்த அரசு அதிகாரிகள், அதானி…

  8. சீனாவின் கடன் வலையில் முழுமையாக சிக்கிய பங்களாதேஷ்!! இலங்கையை விட நிலைமை மோசமாகியுள்ளது Mano ShangarJanuary 9, 2026 12:27 pm 0 பங்களாதேஷ் இப்போது பொருளாதார அழுத்தத்தில் மட்டுமல்ல, சீனாவின் கடன் பொறியிலும் ஆழமாக சிக்கியுள்ளது. நிலைமை மிகவும் மோசமாக இருப்பதால், அந்நாட்டு உயர் அதிகாரிகள் கூட நாடு கடன் பொறியில் விழுந்துவிட்டதாக ஒப்புக்கொள்கிறார்கள். விவசாயம் மற்றும் கல்வி போன்ற அடிப்படைத் துறைகளின் கடன் சேவைச் செலவுகளை விடக் கடன் சேவைச் செலவுகள் அதிகமாகிவிட்டதால், கொள்கை முடிவுகளுக்கான வாய்ப்பு கிட்டத்தட்ட நீக்கப்பட்டுள்ளது. அதிகாரிகளின் கூற்றுப்படி, பங்களாதேஷ் இப்போது இலங்கையை விட மோசமான பாதையில் சென்று கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடன் வலையில் சிக்கித் தவிக்கும் ப…

  9. நாகாலாந்து துப்பாக்கிச்சூடு: இந்திய ராணுவத்தினர் மீது காவல்துறை குற்றப்பத்திரிகை 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டிசம்பர் 2021இல் இந்திய பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்ட பலருக்கும் ஒன்றாக இறுதிச்சடங்கு நடந்தது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ஒரு தவறான ராணுவ நடவடிக்கையில் குடிமக்கள் கொல்லப்பட்ட நிகழ்வு தொடர்பாக ராணுவத்தினர் 30 பேர் மீது நாகலாந்து காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த ஒரு மேஜரும் அடக்கம். மோன் மாவட்டத்தில் உள்ள திஜித் காவல் நிலையத…

  10. தொடர்ச்சியாக... உணரப்படும், நில நடுக்கங்களால் அச்சத்தில் மக்கள்! ஹைதராபாத்தின் தெற்கு பகுதியில் இன்று (திங்கட்கிழமை) மிதமான நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 4.0 என்ற ரிக்டர் அளவில் பதிவாகியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அதேநேரம் இதனால் ஏற்பட்ட சேதவிபரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. அதேநேரம் சிக்கிம் மாநிலத்திலும் 4.0 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இவ்வாறு இந்தியாவின் பல பாகங்களிலும் அண்மைக்காலமாக நிலநடுக்கங்கள் உணரப்பட்டு வருகின்றன. இதன்காரணமாக மக்கள் அச்சத்தை எதிர்நோக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1230619

  11. வானில், ஏவுகணைகளை... அழித்துத் தாக்கும் "அபியாஸ்" வெற்றிக்கு... ராஜ்நாத் சிங் வாழ்த்து. வானில் ஏவுகணைகளை அழித்துத் தாக்கும் ‘அபியாஸ்’ விமான சோதனை வெற்றிகரமாக நிறைவேறயமையை அடுத்து பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். அத்துடன், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் வளர்ச்சி ஆயுதப்படைகளுக்கான வான்வழி இலக்குகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் என்றும் அவர் கூறினார். அநேரம், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் வடிவமைப்பு, மேம்பாடு மற்றும் சோதனை ஆகியவற்றில் தொடர்புடைய குழுக்களின் முயற்சிகளை பாதுகாப்பு துறையின் செயலாளரும், இந்த அமைப்பின் தலைவருமான கலாநிதி. ஜி.சதீஷ் ரெட்டியும் பாராட்டியுள்ளார். …

  12. பட மூலாதாரம்,அபயன் ஜி எஸ் கட்டுரை தகவல் எழுதியவர்,சௌதிக் பிஸ்வாஸ் பதவி,பிபிசி செய்தியாளர் 5 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியாவில் உலகின் ஆரம்பகால நகர நாகரிகங்களில் ஒன்றிற்குச் சொந்தமான ஒரு விரிவான கல்லறைத் தளத்தைக் கண்டுபிடித்துள்ளனர். ஆரம்பகால இந்தியர்கள் எவ்வாறு வாழ்ந்து இறந்தார்கள் என்பதற்கான தகவல்களை இந்தக் கல்லறைகள் நமக்குத் தரலாம் என்பதைப் பற்றி பிபிசியின் சௌதிக் பிஸ்வாஸ் ஆராய்கிறார். 2019 ஆம் ஆண்டு, பாகிஸ்தானுக்கு அருகில் உள்ள இந்தியாவின் மேற்கு மாநிலமான குஜராத்தில், குறைந்த மக்கள் தொகை கொண்ட கட்ச் பகுதியில் உள்ள ஒரு தொலைதூர கிராமத்திற்கு அருகில், மணல் மண் குன்றை அகழ்வாராய்ச்சி செய்யும் போது, அங்கு …

  13. பசு கடத்தல் புகாரில் முஸ்லிம் இளைஞர் கொலை? ஹரியாணா போலீஸ் மீது என்ன சந்தேகம்? பிபிசி கள ஆய்வு அபிநவ் கோயல் பிபிசி செய்தியாளர், நூஹிலில் இருந்து 38 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,BBCHINDI படக்குறிப்பு, பசுப் பாதுகாவலர்கள் என அழைத்துக்கொள்ளும் நபர்களின் பிடியில் ஜனவரி 28-ம் தேதி காணப்பட்ட வாரிஸ், நஃபீஸ், ஷௌகீன். ஹரியாணாவில் பசுக்காவலர்கள் என்று தங்களை அழைத்துக்கொண்ட ஒரு கும்பல் மூன்று முஸ்லிம் இளைஞர்களைப் பிடித்து வைத்துத் தாக்கியதாக காட்ட…

  14. புட்டினின் இந்திய விஜயம்; மோடியுடன் விரிவான பேச்சுவார்த்தை இன்று! புது டெல்லிக்கும் மொஸ்கோவிற்கும் இடையிலான இருதரப்பு மற்றும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், அரசு முறைப் பயணமாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, புது டெல்லி விமான நிலையத்தில் ரஷ்ய ஜனாதிபதியை நேற்று (04) மாலை வரவேற்றார். பழைய நண்பரை உற்சாகத்துடன் கட்டிப்பிடித்து, இறுக்கமான கைகுலுக்கினார் மோடி. இன்று தனது பயணத்தின் இரண்டாம் நாளில் புட்டின், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவைச் சந்தித்து மரியாதை செலுத்த உள்ளார். பின்னர், அனைத்து வருகை தரும் தலைவர்களைப் போலவே, அவர் மகாத்மா காந்தியின் நினைவிடமான ராஜ்காட்டுக்குச் சென்று மரியாத…

  15. இந்தியாவின், அண்டை நாடுகள் இரண்டுமே... இந்தியாவிற்கு எதிராக உள்ளது – நிர்மலா சீதாராமன் இந்தியாவின் அண்டை நாடுகள் இரண்டுமே இந்தியாவிற்கு எதிராக இருப்பதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சர்வதேச நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்திர கூட்டங்களில் கலந்துகொள்வதற்காக வொஷிங்டன் சென்றுள்ளார். இதன்போது செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர், இந்தியா அதன் பெரும்பாலான இராணுவத் தளவாடங்களை ரஷ்யாவிடமிருந்து வாங்குகிறது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தியாவின் அண்டை நாடு இன்னொரு அண்டை அண்டை நாட்டுடன் கைகோர்க்கும் நிலை ஏற்படலாம் எனத் தெரிவித்த அவர், அவ்விரு நாடுகளுமே இந்தியாவிற்கு எதிராக இருப்…

  16. படக்குறிப்பு, ஜஞ்ஜிரா கோட்டை கட்டுரை தகவல் எழுதியவர், ஜெய்தீப் வசந்த் பதவி, பிபிசி செய்தியாளர் 20 ஆகஸ்ட் 2023 22 ஏக்கர் பரப்பளவில், 22 பாதுகாப்பு நிலைகளோடு பரந்து விரிந்திருக்கும் ஜஞ்ஜிரா கோட்டையை கட்ட 22 ஆண்டுகள் எடுத்துகொண்டது. சத்ரபதி சிவாஜி, சாம்பாஜி மன்னர், போர்த்துகீசியர்கள், ஃபிரஞ்ச், பிரிட்டீஷ் என பலரும் இந்த கோட்டையை கைப்பற்ற முயன்றனர். ஆனால், யாராலும் ஜஞ்ஜிரா கோட்டையை வசப்படுத்த முடியவில்லை. 350 ஆண்டுகளுக்கும் மேலாக யாராலும் வெல்ல முடியாததாக இக்கோட்டை திகழ்ந்தது. சத்ரபதி சிவாஜி இந்த கோட்டையை வெல்வதற்காகவே அதன் அருகில் ஒரு கோட்டையை கட்டினார். ஆனாலும் அவரால் ஜஞ்ஜிராவை கைப்பற…

  17. பட மூலாதாரம்,P.T.V. 13 ஜனவரி 2024 கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 27 அன்று பாகிஸ்தான் விமானப்படை இந்திய போர் விமானத்தைச் சுட்டு வீழ்த்தி, போர் விமானி விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமானை தனது காவலில் எடுத்துக்கொண்டது. அதன் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே ராஜ்ஜீய மற்றும் எல்லைப் பதற்றம் புதிய எச்சத்தை எட்டியது. பிப்ரவரி 27 அன்று என்ன நடந்தது என்பது மீண்டும் தற்போது ஒரு விவாதப் பொருளாக மாறியுள்ளது. அந்த இரவு பற்றிய சில புதிய விஷயங்கள் வெளிவந்துள்ளன. இதற்குக் காரணம், அப்போது பாகிஸ்தானில் பதவியேற்றிருந்த இந்தியாவின் முன்னாள் தூதர் அஜய் பிசாரியாவின் ‘ஆங்கர் மேனேஜ்மென்ட்’ என்ற புத்தகம். பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர…

  18. புதிய பிரதமர் நியமிக்கப்படும் வரை இம்ரான் இடைக்கால பிரதமராக நீடிப்பார் - பாகிஸ்தான் ஜனாதிபதி அறிவிப்பு பாகிஸ்தான் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதால் பிரதமர் இம்ரான் கான் பிரதமராக நீடிக்க முடியாது என அமைச்சரவை செயலாளர் அறிவித்த நிலையில், காபந்து பிரதமர் அறிவிக்கப்படும் வரை இம்ரான் பிரதமராக நீடிப்பார் என அந்நாட்டு ஜனாதிபதி ஆரிப் அல்வி அறிவித்துள்ளார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம், அந்நாட்டு பாராளுமன்றத்தில் நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து, பாராளுமன்றத்தை கலைக்க கோரி ஜனாதிபதி ஆரிப் அல்வியிடம் பிரதமர் இம்ரான் கான் கடிதம் எழுதினார். இதனை ஏற்ற ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்ததுடன், 90 நாட்களுக்குள்…

  19. உக்ரைன்.... கீவ்வில், சிக்கியுள்ள மாணவர்களுக்கு இந்திய தூதரகம் வேண்டுகோள்! உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், அங்கிருக்கும் இந்திய மாணவர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு ரயில்களை பயன்படுத்தி மேற்குபகுதிக்கு செல்லுமாறு இந்திய தூதரகம் வலியுறுத்தியுள்ளது. உக்ரைன் தலைநகர் கீவ்வில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய தூதரகம் மேற்படி வலியுறுத்தியுள்ளது. மேற்கு பதிகள் பாதுகாப்பான பகுதிகளாக இருப்பதாகவும், அங்கு அத்தியாவசிய தேவைகள் தட்டுப்பாடின்றி கிடைப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. https://athavannews.com/2022/1269696

  20. பாகிஸ்தான் இராணுவத்தினருக்கு எதிராக தொடரும் போராட்டம் பலுசிஸ்தான் பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த இரண்டு மாணவர்களை பாகிஸ்தான் இராணுவத்தினர் கடத்திச் சென்றமையைக் கண்டித்து போராட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. அனைத்து கல்வி நிறுவனங்களிலும் வகுப்புகள் மற்றும் பரீட்சைகளைப் புறக்கணிக்குமாறு மாணவர் தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளதாக எக்ஸ்பிரஸ் டெய்லி தெரிவித்துள்ளது. கடத்தப்பட்டவர்கள் பலுசிஸ்தானின் நோஷ்கி மாவட்டத்தில் வசிக்கும் லால் மொஹமட்டின் புதல்வர்களான ஃபசிஹ் பலூச் சோஹைல் அஹமட் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர்களை கடந்த திங்கட்கிழமையன்று பல்கலைக்கழக விடுதியில் இருந்து பாகிஸ்தான் இராணுவத்தினர் வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றதையடுத்து வலுக்கட்டாயமாக காணா…

  21. கொவிட்-19 ஐ ஒத்த வைரஸ் காய்ச்சலொன்று இந்தியாவில் பரவுகிறது! கொவிட்-19 வைரஸைப் போன்ற வைரஸ் காய்ச்சலொன்று இந்தியாவில் பல மாநிலங்களில் பரவி வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்திய சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிக காய்ச்சல், தலைவலி மற்றும் தொடர் இருமல் ஆகியவை இந்த வைரஸின் முக்கிய அறிகுறிகளாகும். இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இது தொடர்பாக இந்திய சுகாதாரத் துறை ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது. இது இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் குழுவைச் சேர்ந்த H3N2 உப பிறழ்வு வகை என அடையாளம் காணப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/243387

  22. பாலியல் துன்புறுத்தலுக்குள்ளான 4 வயது நிரம்பிய 2 சிறுமிகள் – 72 பேர் கைது. மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்திலுள்ள பத்லாப்பூரில் நான்கு வயதே நிரம்பிய 2 பாடசாலை சிறுமிகளை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதால் நடந்த மிகப் பெரிய போராட்டத்தைத் தொடர்ந்து அங்கு இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மகாராஷ்டிர மாநிலம் மும்பைக்கு அருகே 50 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பத்லாப்பூர் பொலிஸ் நிலையத்துக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த ஒரு பாடசாலையில் படித்து வந்த நான்கு வயதே நிரம்பிய 2 சிறுமிகளை பள்ளியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. இதை அறிந்த பொதுமக்கள் நேற்…

  23. "அக்னிபாதை" திட்டத்தின் கீழ்... விமானப் படைக்கு, ஆட்சேர்க்கும் நடவடிக்கை இன்று ஆரம்பம்! அக்னிபாதை திட்டத்தின் கீழ் விமானப் படைக்கு ஆட்சேர்க்கும் நடவடிக்கை இன்று முதல் தொடங்குகிறது. இந்திய இராணுவத்தில் அக்னி வீரர்களைத் தெரிவு செய்வதற்காக, அக்னி பாதை என்ற புதிய திட்டத்தை பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இராணுவத்தில் 4 ஆண்டுகள் ஒப்பந்தத்தின் கீழ் பணியாற்ற, 17அரை வயது முதல் 21 வயது வரையுள்ள இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் விமானப் படைகளுக்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கை இன்று தொடங்கும் என்று விமானப் படை தலைமை தளபதி வி.ஆர்.சவுத்ரி அறிவித்தள்ளார். வெற்றிடங்களுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் IAF…

  24. இந்தியாவில் விலங்குகளுக்கான கொரோனா தடுப்பூசி அறிமுகம் இந்தியாவில் முதன்முறையாக விலங்குகளுக்கான அனோகோவேக்ஸ் என்ற கொரோனா தடுப்பூசி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மனிதர்களை தவிர சிங்கம், புலி உள்ளிட்ட சில விலங்குகளுக்கும் கடந்த காலத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டன. இந்நிலையில், இந்தியாவில் அரியானா மாநிலத்தைச் சேர்ந்த தேசிய ஆராய்ச்சி மையம் ஒன்று விலங்குகளுக்கான கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வந்தது. இதன்படி, இந்தியாவில் முதன்முறையாக உள்நாட்டில் தயாரான விலங்குகளுக்கான அனோகோவேக்ஸ் என்ற கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த தடுப்பூசியானது டெல்டா மற்றும் ஒமிக்ரோன் வகை கொரோனாவை அழிக்கும் திறன் படைத்த நோயெதிர்ப்பு ஆ…

  25. மின்சார கார்களின் விலை... பெற்றோல் காருக்கு இணையாக குறைந்து விடும் – நிதின் கட்கரி மின்சார கார்களின் விலை பெற்றோல் காருக்கு இணையாக குறைந்து விடும் என மத்திய போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், ‘மின்சார கார் உற்பத்திக்கு அரசு ஊக்கத்தொகை வழங்குவதுடன், முக்கிய நெடுஞ்சாலைகளில் மின்கார்களுக்கான சார்ஜிங் மையங்களை திறக்க உள்ளதால் இது சாத்தியமாகும் எனத் தெரிவித்துள்ளார். மின்சார கார்களுக்கு 5 சதவிகித ஜிஎஸ்டி மட்டுமே வசூலிக்கப்படுவதாகவும், அவற்றுக்கான லித்தியம் பேட்டரிகளின் விலை குறைந்து வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இது குறித்த கொள்கை முடிவை அரசு ஏற்கனவே எடுத்துள்ளதாக தெரிவித்துள்ள அவர், ச…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.