Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அயலகச் செய்திகள்

இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ஒரு நாட்டின் பொருளாதாரத்தைக் கணிக்கவும், ஆய்வு செய்யவும் பல காரணிகள், பல அளவுகோல்கள் உள்ளன. சின்னச் சின்ன விஷயங்கள் கூடப் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் காரணியாக உள்ளது, இதற்கு முக்கியமான காரணம் அனைத்து பொருட்களின் விற்பனையும் மக்களின் வருமானத்தின் அடிப்படையில் உள்ளது. இந்த வர்த்தகத்தின் அடிப்படையில் தான் ஒரு நாட்டின் பொருளாதாரம் அமையும். அந்த வகையில் அமெரிக்க மத்திய வங்கியின் முன்னாள் தலைவரான ஆலன் கிரீன்ஸ்பான் ஆண்களின் உள்ளாடை அதிலும் குறிப்பாக ஜட்டி விற்பனை பொருளாதார வளர்ச்சியின் முக்கிய அளவுகோல் எனக் கூறுகிறார். இந்த நிலையில் இந்தியாவில் ஆண்கள் பிரிவு உள்ளாடைகள் நிறுவனங்கள் நிஃப்டி சந்தையில் மிகவும் மோசமாகச் செயல்படுகிறது, இதனால் …

  2. எதிரிகளின் பதுங்குக் குழிகளை தகர்க்கும்... வல்லமை கொண்ட, அமெரிக்க ஆயுதங்களை பயன்படுத்த இந்தியா திட்டம்! இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இலகுரக தேஜஸ் விமானத்தில் அமெரிக்க ஆயுதங்கள் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக குறித்த விமானத்தில் பிரான்ஸின் ஹம்மமர் வகை ஆயுதங்கள் பொருத்தப்பட்டிருந்தன. தற்போது அமெரிக்காவின் JDAM எனப்படும் நேரடி தாக்குதல் நடத்தும் குண்டுகள் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வகைக் குண்டுகள் 80 கிலோமீற்றர் மற்றும் அதற்கு அப்பல் உள்ள எதிரிகளின் பதுங்குக் குழிகள், விமான ஓடு பாதைகளை தகர்க்கவும் உதவும் எனக் கூறப்பட்டுள்ளது. அதேநேரம் மோசமான வானிலை நிலவும் சந்தர்ப்பங்களிலும் இந்த வகைக் குண்டுகளை…

  3. கோவாக்ஸின் தடுப்பூசிக்கு அவுஸ்ரேலியா அங்கீகாரம்! கோவாக்ஸின் தடுப்பூசிக்கு அவுஸ்ரேலியா அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதன்படி இந்த தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்கள் அவுஸ்ரேலியாவிற்கு பயணிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அவுஸ்ரேலிய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பான டிஜிஏ வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட கோவேக்ஸின் தடுப்பூசி, சீனாவின் சைனோஃபார்ம் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட தடுப்பூசி ஆகியவை ஏற்றுக்கொள்ளப்படும் தடுப்பூசிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டினருக்கான பயணக் கட்டுப்பாடுகளை அவுஸ்ரேலியா அரசாங்கம் தளர்த்தியுள்ள நிலையில், டிஜிஏ-வின் இந்த தீர்மானம் முக்…

  4. பட மூலாதாரம்,MANSI THAPLIYAL படக்குறிப்பு, 55 வயதான பாரத் பரேக், நாட்டின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் 13.6 லட்சம் முகவர்களில் ஒருவர். கட்டுரை தகவல் எழுதியவர், சௌதிக் பிஸ்வாஸ் பதவி, பிபிசி செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பல தசாப்தங்களாக, பாரத் பரேக் ஒவ்வொரு நாளும் செய்தித்தாள்களில் அச்சிடப்படும் மரண அறிவிப்புகளை கவனமாகப் பார்ப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். நாக்பூர் நகரின் சுடுகாட்டில் கூட தினசரி நடக்கும் துக்க நிகழ்வுகளை கவனித்து வந்துள்ளார். ஆயுள் காப்பீட்டுக் கொள்கைகளை (Life Insurance Policy) விற்ப…

  5. இந்தியா, பாகிஸ்தான் இடையே நிலவி வரும் போர் பதற்றம் கவலையளிக்கின்றது! -ஐ.நா ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் உள்ள பிரபல சுற்றுலா தலத்தில் கடந்த 22ஆம் திகதி லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பின் கிளை அமைப்பான The Resistance Front (TRF) நடத்திய பயங்கரவாதத் தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். குறித்த தாக்குதல் சம்பவம் சர்வதேச ரீதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் மூழும் சூழ்நிலையும் உருவாகியுள்ளது. இந்நிலையில் இந்தியா- பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள போர் பதற்றம் மிகவும் கவலையளிப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார். அத்துடன் இரு நாடுகளும் போர் பதற்றத்தை தனித்து, பிரச்சினையை …

  6. வாக்குப்பதிவு விகிதத்தில் குளறுபடி – காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டு! இந்தியாவில் மக்களவைத் தேர்தலில் இறுதி வாக்குப்பதிவு விகிதத்தில் குளறுபடி செய்து பா.ஜ.க 79 தொகுதிகளில் வெற்றி பெற்றதாக காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. அதன்படி, நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் இறுதி வாக்குப்பதிவு எண்ணிக்கையில் கணிசமான வித்தியாசம் இருப்பது காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சந்தீப் தீக்ஷித் தெரிவித்துள்ளார். அத்துடன், தலைமைத் தேர்தல் ஆணைக்குழு மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு சதவீதத்தில் முதலில் கூறியதற்கும், பின்னர் அளித்த இறுதி புள்ளிவிபரங்களுக்கும் இடையே சராசரியாக 4.7 சதவீதம் வித்தியாசம் உள்ளதாகவும், இது தேசிய அளவில் சுமார் 5 கோடி வாக்குகள் எனவும் வோட் பார் டெமாக்ரச…

  7. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், அஜித் கத்வி பதவி, பிபிசி ஒரு மணி நேரத்துக்கு முன்னர் திங்கட்கிழமை இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் பங்குச்சந்தைகள் பெரும் சரிவைச் சந்தித்தன. உலகம் முழுக்க, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு, ஏப்ரல் 2ம் தேதி இறக்குமதி வரி அறிவித்தார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். இந்த அறிவிப்பு உலகெங்கும் இருக்கும் பங்குச் சந்தைகளில் பெரிய விளைவை ஏற்படுத்தியது. இன்று, அந்த இறக்குமதி வரிகளின் விளைவால் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் பங்குச்சந்தைகள் சரிவைச் சந்தித்தன. டிரம்பின் அறிவிப்புக்குப் பிறகு முதலீட்டாளர்கள் ஒவ்வொரு நிமிடமும் பல லட்சம் கோடி ரூபாயை இழந்து வருகிறார்கள். இது எவ்வளவு காலம் தொடரும் என்…

  8. அமித்ஷாவின்... வருகைக்கு எதிராக, புதுச்சேரியில் ஆர்ப்பாட்டம்! மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் புதுச்சேரி விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன்படி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் இடதுசாரி கட்சிகள், காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேர்தலின்போது புதுச்சேரி மாநிலத்திற்கு அறிவித்த மாநில அந்தஸ்து, கடன் தள்ளுபடி, கூடுதல் நிதி உள்ளிட்ட எந்த ஒரு திட்டத்தையும் மத்திய அரச நிறைவேற்றவில்லை எனத் தெரிவித்தே மேற்படி ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது. https://athavannews.com/2022/1278247

  9. 11 AUG, 2024 | 01:08 PM இந்திய இலங்கை உடன்படிக்கை உருவாக்கத்தின் போது முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியுடன் இணைந்து செயற்பட்டவரும் திரைமறைவு நடவடிக்கைகள் குறித்து நன்கறிந்தவருமான இந்தியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் நட்வர் சிங் காலமானார். முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் நட்வர் சிங் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த இரண்டு வாரங்களாக டெல்லியில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் நட்வர் சிங் நேற்று (ஆக.10) சனிக்கிழமையில் சிகிச்சைப் பலனின்றி காலமானார். அவருக்கு வயது 95. முன்னாள் மத்திய அமைச்சர் நட்வர் சிங்கின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது பதிவில் "ஸ்ரீ நட்வர் சிங்கின்…

  10. உலகின், மருந்தகமாக... இந்தியா விளங்குகிறது – ராம்நாத் கோவிந்த் உலகின் மருந்தகமாக விளங்கும் இந்தியா கொரோனா தொற்று பாதிப்பு சிகிச்சைக்கான மருந்துகளை உலக நாடுகளுக்கு வழங்கியுள்ளதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். கொலம்பியா, உருகுவே, ஜமைக்கா, ஆர்மீனியா ஆகிய நாடுகளுக்காக புதிதாக நியமிக்கப்பட்ட தூதுவர்கள் தங்கள் சான்றுகளை குடியரசு தலைவரிடம் அளிக்கும் நிகழ்வு நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது. காணொலி வாயிலாக நடைபெற்ற இந்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ‘கொரோனா தொற்று பாதிப்பு சூழலில் கொரோனா தொற்று தடுப்புக்கான அத்தியாவசிய மருந்துகளை உலக நாடுகளுக்கு இந்தியா வழங…

  11. ஐரோப்பிய ஆணைய தலைவர்... இந்தியா, வந்தடைந்தார்! ஐரோப்பிய ஆணைய தலைவர் உர்சுலா வொன் டெர்லெயன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார். இந்தியா வந்துள்ள அவர், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரை சந்தித்து பேசவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தையின்போது பருவநிலை மாற்றம், பல்லுயிர் பெருக்கத்தின் இழப்பு, எரிசக்தி மற்றும் டிஜிக்டல் பரிமாற்றம், பாதுகாப்பு, பொருளாதாரம், இலவச வர்த்தக ஒப்பந்தம், இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் நிலவும் பிரச்சினைகள், ரஷ்யா-உக்ரைன் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு கருத்துகளை …

  12. வீர் பால் திவஸ்: ஒளரங்கசீப் பற்றி பிரதமர் மோதி சொன்னது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES 53 நிமிடங்களுக்கு முன்னர் குரு கோவிந்த் சிங்கின் இளம் மகன்களான பாபா ஃஜோராவர் சிங், பாபா ஃபதே சிங் மற்றும் மாதா குஜ்ரி ஆகியோரின் அசாதாரண தைரியத்தையும் தியாகத்தையும் நினைவுகூரும் வகையில், தில்லி உட்பட நாடெங்கிலும் மற்றும் வெளிநாடுகளிலும் டிசம்பர் 26 ஆம் தேதியை 'வீர் பால் திவஸ்' என்று இந்திய அரசு கொண்டாடுகிறது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோதியும் கலந்து கொண்டார். நிகழ்ச்சியின் போது, சுமார் முன்னூறு குழந்தைகள் பாடிய 'ஷபத் கீர்த்தனிலும்’ பிரதமர் மோதி பங்கேற்றார். வீர் பால் திவஸ் நிகழ்ச்சியில் பே…

  13. பட மூலாதாரம்,GETTY IMAGES எழுதியவர், மெரில் செபாஸ்டியன் பதவி, பிபிசி செய்திகள் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறையாக தேர்தலில் வெற்றி பெற்றுள்ள நிலையில், அவருடன் மீண்டும் பணியாற்றுவதில் எந்த பதற்றமும் இல்லை என்று இந்தியா கூறியுள்ளது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்ஷங்கர் ஞாயிற்றுக்கிழமை அன்று, பல நாடுகள் டிரம்ப் தலைமையில் உள்ள அமெரிக்கா குறித்து பதற்றத்தில் இருக்கின்றன, ஆனால் 'இந்தியா அவற்றில் ஒன்று அல்ல' என்று தெரிவித்துள்ளார். 2017 முதல் 2021 ஆம் ஆண்டு வரையிலான டொனால்ட் டிரம்புடன் முதல் பதவிக் காலத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோதி அவருடன் நல்லுறவைப் பகிர்ந்து கொண்டார். …

  14. Published By: DIGITAL DESK 7 03 APR, 2024 | 12:45 PM (நா.தனுஜா) உலகளாவிய ரீதியில் மிகத்துரிதமாக வளர்ச்சியடைந்துவரும் பிராந்தியமாக தெற்காசியா விளங்குவதாகவும், இந்தியாவின் வேகமான வளர்ச்சியே அதற்குப் பிரதான காரணமாக அமைந்திருப்பதாகவும் சுட்டிக்காட்டியிருக்கும் உலக வங்கி, இப்பிராந்தியத்திலுள்ள ஏனைய நாடுகளின் வளர்ச்சி மந்தகரமான நிலையிலேயே இருப்பதாகத் தெரிவித்துள்ளது. உலக வங்கியின் 2024 ஆம் ஆண்டுக்கான தெற்காசியப்பிராந்திய அபிவிருத்தி நிலைவரம் மற்றும் இலங்கையின் அபிவிருத்தி நிலைவரம் தொடர்பான மதிப்பீடு நேற்று செவ்வாய்கிழமை 'வன் கோல்பேஸ் டவரில்' அமைந்துள்ள உலக வங்கியின் இலங்கைக்கிளை அலுவலகத்தில் வெளியிடப்பட்டது. அதனை முன்னிட்டு இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் …

  15. உலகெங்கிலும் தமிழ் மொழியை படிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு-நரேந்திர மோடி! நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்ற பிறகு மனதின் குரல் நிகழ்ச்சியில் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார் இன்னிலையில் நேற்றுடன் 117-வது அத்தியாயத்தை எட்டியுள்ளதுடன் இந்தாண்டுக்கான கடைசி மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றியுள்ளார் இதில் உலகிலேயே மிகவும் தொன்மையான மொழி தமிழ் மொழி ஆகும் என்றும் இது, இந்தியர்கள் அனைவருக்கும் பெருமிதமான, பெருமை சேர்க்கும் விஷயம். என்றும் உலகெங்கிலும் உள்ள நாடுகளில் தமிழ் மொழியை படிப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது என அவர் தெரிவித்தார் இ…

  16. பாலியல் துன்புறுத்தலுக்குள்ளான 4 வயது நிரம்பிய 2 சிறுமிகள் – 72 பேர் கைது. மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்திலுள்ள பத்லாப்பூரில் நான்கு வயதே நிரம்பிய 2 பாடசாலை சிறுமிகளை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதால் நடந்த மிகப் பெரிய போராட்டத்தைத் தொடர்ந்து அங்கு இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மகாராஷ்டிர மாநிலம் மும்பைக்கு அருகே 50 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பத்லாப்பூர் பொலிஸ் நிலையத்துக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த ஒரு பாடசாலையில் படித்து வந்த நான்கு வயதே நிரம்பிய 2 சிறுமிகளை பள்ளியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. இதை அறிந்த பொதுமக்கள் நேற்…

  17. 09 Mar, 2025 | 10:07 AM பெங்களூரு: கர்நாடகாவில் உள்ள ஹம்பியில் நேற்று முன் தினம் நள்ளிரவில் இஸ்ரேலிய சுற்றுலாப் பயணி உட்பட 2 பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டனர். அவர்களுடன் இருந்த ஆண் சுற்றுலா பயணி சனாப்பூர் கால்வாயில் தள்ளி கொல்லப்பட்டார். இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹம்பி உலக புகழ்ப்பெற்ற சுற்றுலா தலம் ஆகும். இங்கு தங்கும் விடுதி நடத்திவரும் பங்கஜ் பாட்டீல் (42)இ தனது விடுதியில் தங்கியிருந்த சுற்றுலா பயணிகளான அமெரிக்காவை சேர்ந்த‌ டேனியல் ஜேம்ஸ் (23) ஒடிஸாவை சேர்ந்த பிபாஷ் குமார் (27) சுற்றுலா வழிகாட்டியான 28 வயதான பெண் இஸ்ரேலை சேர்ந்த 27 வயதான பெண் ஆகியோருடன் நேற்று முன் தினம் இரவு 11 மணியளவில் சனாப்பூர் கால்வாய் அருகே அமர…

  18. நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயார்! ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் உள்ள பிரபல சுற்றுலா தலத்தில் கடந்த 22ஆம் திகதி லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பின் கிளை அமைப்பான The Resistance Front (TRF) நடத்திய பயங்கரவாதத் தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். குறித்த தாக்குதல் சம்பவம் சர்வதேச ரீதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் மூழும் சூழ்நிலையும் உருவாகியுள்ளது. இந்நிலையில் இப் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து, நடுநிலையான விசாரணைக்குத் தாம் தயாராக உள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்ப…

  19. நடப்பாண்டில்... "40 ஆயிரம் கோடி டொலரை" தாண்டியது, இந்தியாவின் ஏற்றுமதி! இந்தியாவின் ஏற்றுமதி நடப்பு நிதியாண்டில் நாற்பதாயிரம் கோடி டொலரை தாண்டியுள்ளதாக பிரதமர் நரேந்தி மோடி தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள ருவிட்டர் பதிவில், இந்தியா முதன்முறையாக நாற்பதாயிரம் கோடி டொலர் என்னும் ஏற்றுமதி இலக்கை எட்டியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இது இந்திய மதிப்பில் 30 இலட்சத்து 39 ஆயிரத்து 740 கோடி ரூபாயாகும். இந்தச் சாதனையை எட்டியமைக்கு பங்காற்றிய அனைவருக்கும் வாழ்த்துக்களையும் அவர் பகிர்ந்துள்ளார். உள்நாட்டில் பொருட்கள் தயாரித்துத் தன்னிறைவு பெறும் திட்டத்தில் இது குறிப்பிடத் தக்க மைல்கல்லாகும் எனக் குறிப்பிட்டுள்ள அவர், …

  20. இந்தியாவில் சீனாவின் ஆதிக்கம் அதிகரிப்பு. இந்தியா உடனான எல்லைப் பகுதியில் உட்கட்டமைப்பு வசதிகளை சீனா தொடர்ந்து அதிகரித்து வருவதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது. இதுகுறித்து பென்டகன் வெளியிட்டுள்ள வருடாந்திர அறிக்கையில், போர்களை எதிர்த்துப் போராடி வெற்றிபெறும் திறனை சீனா வலுப்படுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளளது. 2049 ஆம் ஆண்டுக்குள் உலகத் தரம் வாய்ந்த இராணுவத்தை உருவாக்குவதே சீனாவின் இலக்கு என்றும் பென்டகனின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்திய, சீன எல்லையில் உள்ள டோக்லாம் அருகே நிலத்தடி சேமிப்பு வசதிகள், புதிய சாலைகள், பூட்டானின் சர்ச்சைக்குரிய பகுதிகளில் புதிய கிராமங்களையும் சீனா உருவாக்கி வருவதாகவும் தெரிவிக…

  21. படக்குறிப்பு, 1990-களில் குழந்தையாக இருக்கும்போது கைவிடப்பட்ட பின்னர் காப்பாற்றப்பட்ட மோனிகாவைச் சந்திக்கும் போது மருத்துவச்சி சீரோ உடைந்து அழுகிறார் கட்டுரை தகவல் எழுதியவர், அமிதாப் பராசர் பதவி, பிபிசி ஐ புலனாய்வுகள் 11 செப்டெம்பர் 2024, 05:09 GMT புதுப்பிக்கப்பட்டது 11 செப்டெம்பர் 2024, 05:32 GMT மருத்துவச்சியான சீரோ தேவி, மோனிகா தாட்டேவை கட்டிப்பிடித்து அழுகிறார். 20களில் இருக்கும் மோனிகா, தான் பிறந்த இடத்திற்குத் திரும்பியிருக்கிறார். இந்த இந்திய நகரத்தில்தான் சீரோ நூற்றுக்கணக்கான குழந்தைகளை பிரசவிக்க உதவியிருக்கிறார். சீரோ அழுததற்குக் காரணம், பிரசவிக்க தான் உதவிய குழந்தையை மீண்டும் சந்தித்…

  22. பிரிட்டிஷ் காலனித்துவம் 40 ஆண்டுகளில் 100 மில்லியன் இந்தியர்களைக் கொன்றது எப்படி? 1880 முதல் 1920 வரை, இந்தியாவில் பிரிட்டிஷ் காலனித்துவக் கொள்கைகள் சோவியத் யூனியன், மாவோயிஸ்ட் சீனா மற்றும் வட கொரியாவில் ஏற்பட்ட அனைத்து பஞ்சங்களையும் விட அதிகமான உயிர்களைக் கொன்றன. டிலான் சல்லிவன் மற்றும் ஜேசன் ஹிக்கல் ஆகியோரால் மெக்குவாரி பல்கலைக்கழகத்தின் சமூக அறிவியல் பள்ளியில் துணை உறுப்பினர். சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (ICTA-UAB) பேராசிரியர் மற்றும் ராயல் கலை சங்கத்தின் உறுப்பினர். 2 டிசம்பர் 2022 அன்று வெளியிடப்பட்டது2 டிச., 2022 பின்னர் படிக்க கட்டுரைகளைச் சேமித்து, உங்கள் சொந்த வாசிப்புப் பட்டியலை உருவாக்கவும். சமூக ஊடகங்களில் பகிர இங்கே கிளிக் செய்ய…

    • 0 replies
    • 128 views
  23. சீனாவை மீண்டும் அச்சுறுத்தும் மர்ம காய்ச்சலால் மருத்துவமனைகள் நிரம்பிவரும் நிலையில், அது ஒரே ஒரு நோய்க்கிருமி அல்ல, பல வகை என மருத்துவர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். நிபுணர்கள் தரப்பு பீதி சீனாவின் பெய்ஜிங் மற்றும் லியோனிங்கில் நிமோனியாவின் உறுதி செய்யப்படாத பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து நிபுணர்கள் தரப்பு பீதியடைந்துள்ளனர். மட்டுமின்றி, நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிரடியாக உயர்ந்து வருவதை அடுத்து, ProMED அமைப்பால் ஏற்கனவே தொற்றுநோயாக அறிவிக்கப்பட்டுள்ளது. @getty இந்த மர்ம காய்ச்சலுக்கு பல எண்ணிக்கையிலானோர் பதிக்கப்பட்டு மருத்துவமனைகளை நாடியுள்ளனர். இருமல் உள்ளிட்ட எந்த குறிப்பிடத்தக்க அறிகுறியும் இல்லை என்றும், ஆனால் தீவிரமான காய்ச்சல் மட…

  24. நவீன அறிவியல், பண்டைய அறிவியல்: மத்திய பாஜக அரசின் புதிய முன்னெடுப்பால் சர்ச்சை இம்ரான் குரேஷி பிபிசி இந்தி ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,PIB இந்தாண்டு நவம்பர் முதல் அடுத்தாண்டு மார்ச் வரை, பண்டைய அறிவியல் குறித்து தொடர் கருத்தரங்குகள் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ள நிலையில், இது நவீன அறிவியலைவிட பண்டைய அறிவியல் சிறந்தது எனக் காட்டுவதற்கான முயற்சி என பரவலாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இஸ்ரோ உள்ளிட்ட இந்திய அரசின் அறிவியல் துறைகள், டேராடூனில் வரும் நவம்பர் 6 முதல் 8ஆம் தேதிவரை 'ஆகாஷ் தத்வா' என்ற பெயரில் கருத்தரங்கு நடத்துவதற்கான அறிவிப்பை வெளியிட்டிருக்கு…

  25. இந்தியாவிற்கு... அழுத்தம் கொடுக்க, உலகில் எந்த சக்தியும்... இல்லை – பியுஷ் கோயல் இந்தியாவிற்கு அழுத்தம் கொடுக்க உலகில் எந்த சக்தியும் இல்லை என மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்தார். உலக வர்த்தக அமைப்பின் 12வது அமைச்சர்கள் மாநாட்டில் பேசிய அவர், கொரோனா காலத்தில் ஏழை நாடுகளை காக்க உலக வர்த்தக அமைப்பு தவறிவிட்டதாக குற்றம் சாட்டினார். இந்நிலையில் தற்சார்பு இந்தியா திட்டத்திற்கு யாராலும் அழுத்தம் கொடுக்க முடியாது என்றும் இதனால் ஏற்படும் சவாலை எதிர்கொள்ள இந்தியா தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார். இதேவேளை மீனவர்களுக்கான மானியத்தை குறைப்பதற்கான உலக வர்த்தக அமைப்பின் முன்மொழிவுக்கு பியூஷ் கோயல் எதிர்ப்பும் வெளியிட்டார். https://athavannews.…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.