அயலகச் செய்திகள்
இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்
அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
3270 topics in this forum
-
பட மூலாதாரம், Reuters 58 நிமிடங்களுக்கு முன்னர் பிரதமர் நரேந்திர மோதி ஆகஸ்ட் 31, செப்டம்பர் 1 என இரண்டு நாட்கள் சீனாவுக்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கு நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO)மாநாட்டில் அவர் பங்கேற்பார். கூடுதல் வரிவிதிப்புகள் காரணமாக அமெரிக்காவுடனான இந்தியாவின் உறவுகளில் பதற்றம் நிலவும் நேரத்தில் பிரதமர் மோதியின் சீனப் பயணம் கவனிக்கப்படுகிறது. ஐந்து ஆண்டுகளில் இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையிலான உறவுகள் மிகவும் பதற்றமான நிலையில் இருந்தன. ஆனால் சமீபத்தில் இரு நாடுகளும் தங்கள் பிரச்னைகளைத் தீர்க்க பேச்சுவார்த்தை நடத்த முயற்சிக்கின்றனர். மாறிவரும் புவிசார் அரசியல் சூழலில், குறிப்பாக டிரம்பின் 'வரிவிதிப்பு போருக்கு'ப் பிறகு, இந்த புதிய இராஜதந்திர செயல்ப…
-
- 1 reply
- 92 views
- 1 follower
-
-
மியன்மாரைச் சேர்ந்த 27 பேரை நாடு கடத்திய இந்திய அரசு! மணிப்பூரில் இருந்து சட்டவிரோதமாகக் குடியேறிய மியன்மார் நாட்டைச் சேர்ந்த 27 பேரை இந்திய அரசு நாடு கடத்தியுள்ளது. மணிப்பூரில் சுமார் 2 ஆண்டுகளாக வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன. இந்த கலவரம் தொடர்பாக அண்டை நாடான மியான்மரில் இருந்து சட்ட விரோதமாக குடியேறியவர்கள் மீது குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வருகின்றன. எனவே சட்ட விரோத குடியேறிகளை மாநில அரசு கைது செய்து தடுப்புக்காவல் மையங்களில் சிறை வைத்துள்ளது. இவ்வாறு சிறைவைக்கப்பட்ட 27 பேரின் தண்டனை காலம் நிறைவடைந்துள்ளது. எனவே அவர்கள் 27 பேரும் நேற்று மியன்மாருக்கு நாடு கடத்தப்பட்டனர். இந்தோ-மியான்மர் நட்புறவு வாயில் வழியாக அவர்களை இந்திய அதிகாரிகள் மியான்மார் அதிகாரிகளிடம் ஒப்ப…
-
- 0 replies
- 92 views
-
-
இந்திய ஜனாதிபதி முர்முவை சந்தித்த சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் 12 SEP, 2022 | 12:10 PM சர்வதேச நாணய நிதியத்தின்(IMF) தலைவர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவாராஷ்டிரபதி பவனில் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்திய தலைமைத்துவத்தில் ஜி-20 மன்றம் பலதரப்பு மற்றும் உலகளாவிய நிர்வாகத்தை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் என்று இதன் போது நம்பிக்கை தெரிவித்தார். ஜார்ஜிவாவை ராஷ்டிரபதி பவனுக்கு வரவேற்ற இந்திய ஜனாதிபதி முர்மு, உலகம் கொவிட் தொற்றுநோயின் மூன்றாம் ஆண்டைக் கடந்து செல்கிறது என்று கூறினார். சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி போன்ற பலதரப்பு நிறுவனங்கள் பல குறைந்த வருமானம் கொண்…
-
- 0 replies
- 91 views
- 1 follower
-
-
மேற்கு வங்க வன்முறை; அமைதியை பேணுமாறு முதல்வர் மம்தா பானர்ஜி வேண்டுகோள்! மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் வெடித்த வன்முறையின் சில நாட்களின் பின்னர் மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி குடிமக்கள் அமைதியையும் ஒற்றுமையையும் பேணுமாறு வலியுறுத்தி ஒரு பொது வேண்டுகோளை நேற்றைய தினம் விடுத்தார். அதேநேரம், அரசியல் ஆதாயத்திற்காக அமைதியின்மையைத் தூண்டுவதற்காக, பாரதீய ஜனதா கட்சி (BJP) மற்றும் அதன் துணை அமைப்புகளான RSS உட்பட, இந்த சம்பவத்தைப் பயன்படுத்திக் கொள்வதாகவும் அவர் குற்றம் சாட்டினார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சில குழுக்கள் “ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவத்தின் பின்னணியைப் பயன்படுத்தி” ஒரு பிளவுபடுத்தும் நிகழ்ச்சி நிரலை ஊக்குவிப்பதாகவும் சுட்டிக்காட்டியு…
-
- 0 replies
- 91 views
-
-
Published By: SETHU 03 SEP, 2023 | 04:53 PM இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் காக்ராபர் அணு மின் நிலையம் முற்றிலும் உள்நாட்டில் மேம்படுத்தப்பட்ட 3 ஆவது அலகு மின் உலை முழு உற்பத்தித் திறனை எட்டியமை தொடர்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். 'எக்ஸ்' வலைதள (முன்னர் டுவிட்டர்) பக்கத்தில் பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், 'இந்தியா மற்றுமொரு மைல்கல்லை எட்டியுள்ளது. முதல் உள்நாட்டு அணு மின் உலையான 700 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட காக்ராபர் அணு மின் நிலையத்தின் 3ஆவது அலகு முழு உற்பத்தித் திறனை எட்டியுள்ளது. அதற்காக விஞ்ஞானிகள் மற்றும் பொறியியலாளர்களுக்கு பாராட்ட…
-
- 0 replies
- 91 views
- 1 follower
-
-
சீனா, பாகிஸ்தான் எல்லையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ள இந்திய ராணுவம் திட்டம்..! சீனா மற்றும் பாகிஸ்தான் நடமாட்டத்தைக் கண்காணிக்க எல்லைப் பகுதியில் இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. உளவுத்துறையை வலுப்படுத்தவும் போர் ஏற்படும் சூழலில் டிஜிட்டல்மயமான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது பற்றியும் இந்திய ராணுவம் திட்டமிட்டுள்ளது. செயற்கைக்கோள்கள், டிரோன்கள் ராடார்கள் மூலமாக சமிக்ஞைகளைப் பெற ராணுவத்திற்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் எல்லைகளில் ஒரு டஜனுக்கும் அதிகமான ஒருங்கிணைந்த கண்காணிப்பு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. https://athavannews.com/2023/1331505
-
- 0 replies
- 90 views
-
-
இலங்கை - இந்திய மீன்பிடி உரிமை ஒப்பந்தம் தொடர்பில் பேச்சுவார்த்தை General17 July 2025 இலங்கை இந்திய கடற்றொழிலாளர்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இரண்டு தரப்பினரையும் உடன்பாடு ஒன்றுக்கு கொண்டு வருவதே முக்கியமானதாகும் என்று பாரதிய ஜனதா கட்சி தெரிவித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளாகப் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான இந்திய மத்திய அரசு, தமிழக கடற்றொழிலாளர்களை பாதுகாக்கத் தவறிவிட்டது என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சுமத்தி வரும் குற்றச்சாட்டுக்கே இந்த பதில் வழங்கப்பட்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் பேச்சாளர் நாராயண் திருப்பதி இந்த விடயம் தொடர்பில் தமது கருத்துக்களை வெளியிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட இலங்கை தமிழ் கடற்றொழிலாளர்கள் மற்றும் இந்திய தமிழ் கடற்றொழிலாளர்களுடன் இந்த பிரச்ச…
-
- 1 reply
- 90 views
-
-
இந்தியாவில் முதல் முறையாக டிஜிட்டல் முறையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு! இந்தியா முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு விரைவில் நடத்தப்படவுள்ள நிலையில், குறித்த கணக்கெடுப்பானது முழுமையாக டிஜிட்டல் முறையில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வரும் நிலையில், 2021ம் ஆண்டு நடத்தப்பட வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பு கொரோனா காரணமாக நடக்காமல் போனது. அதன்பின்னர் நீண்ட காலமாக இப் பணிகள் தொடங்கப்படாமல் இருந்த நிலையில் 2027ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு எப்போது? ஏப்ரல் 2026 முதல் வீடுகளை கணக்கெடுக்கும் பணியும், பெப்ரவரி 2027 முதல் மக்கள் …
-
- 0 replies
- 89 views
-
-
டொலரை பலவீனப்படுத்தும் எண்ணம் இந்தியாவுக்கு இல்லை – எஸ் ஜெய்சங்கர். பிரிக்ஸ் நாடுகளுக்கு 100 சதவீத வரி விதிக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்பின் மிரட்டலுக்கு பதிலளித்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், அமெரிக்க டொலரை பலவீனப்படுத்தும் எண்ணம் இந்தியாவுக்கு இல்லை என்று கூறினார். கட்டார் தலைநகர் தோஹாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் இது தொடர்பில் உரையாற்றிய அவர், பிரிக்ஸ் நாணயத்தை வைத்திருக்கும் திட்டம் எங்களிடம் இல்லை என்றும், அமெரிக்கா இந்தியாவின் மிகப்பெரிய வர்த்த பங்காளியாகும். இந்த விவகாரத்தில் பிரிக்ஸ் அமைப்பில் உள்ள நாடுகள் ஒரே மாதிரியான நிலைப்பாட்டை கொண்டிருக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டினார். அமெரிக்க …
-
- 0 replies
- 89 views
-
-
பட மூலாதாரம்,INDIAN NAVY கட்டுரை தகவல் ஜுஹல் ப்ரோஹித் பிபிசி செய்தியாளர், விசாகப்பட்டினத்தில் இருந்து 2 மணி நேரங்களுக்கு முன்னர் இந்திய கடற்படையில் ஐ.என்.எஸ். அர்னாலா கப்பல் இணைக்கப்பட்டுள்ளது. உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இந்த கப்பல் நீருக்கடியில் செல்லும் நீர்மூழ்கிக் கப்பல்களை தாக்கும் திறன் கொண்டது. இந்திய கடற்படைக்கு மேலும் பலம் சேர்த்துள்ளது இக்கப்பல். இந்த கப்பல் குறித்து செய்தி சேகரிக்க பிபிசி இந்திக்கு அனுமதி கிடைத்தது. இருப்பினும், பாதுகாப்பு காரணங்களுக்காக கப்பலின் சில பகுதிகளுக்குள் எங்களுக்கு அனுமதி வழங்கவில்லை. இந்திய கடற்பாதுகாப்பு அமைப்பில் இந்த கப்பல் எத்தகைய பங்காற்றப் போகிறது என்பதை அறிந்து கொள்ள பிபிசி முயன்றது. இந்தியாவின் சர்வதேச வர்த்தகத்தில் 95% கட…
-
- 0 replies
- 89 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 15 JUN, 2025 | 10:30 AM இந்தியாவில் உத்தரகாண்ட் மாநிலத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (15) அதிகாலை 5:20 மணியளவில் ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. ஸ்ரீ கேதார்நாத் தாம் நகரிலிருந்து குப்தகாஷிக்குச் சென்று கொண்டிருந்த ஹெலிகொப்டர் ஒன்றே, கௌரிகுண்ட் அருகே விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் குழந்தை உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர். மோசமான வானிலை காரணமாக தெளிவற்ற நிலையில் கௌரிகுண்ட் காட்டு பகுதியில் விழுந்து விபத்து நிகழ்ந்ததாக உத்தரகாண்ட் மாநில அனர்த்த முகாமைத்துவ அதிகாரி ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/217490
-
- 0 replies
- 89 views
- 1 follower
-
-
10 NOV, 2023 | 11:50 AM 70 ஆண்டுகளில் காங்கிரஸ் எதுவுமே செய்யவில்லை என்றால் மோடி எப்படி பள்ளிக்கு சென்றார் ” என பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார் 90 தொகுதிகளைக் கொண்ட சத்தீஸ்கர் சட்டப்பேரவைக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு நவம்பர் 7ம் தேது நடைபெற்றது. அதேபோல மிசோரம் மாநில சட்டபேரவையும் தேர்தலுக்கான வாக்குப்பதிவும் நவம்பர் 7அன்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து 70தொகுதிகளுக்கான தேர்தல் வருகிற நவம்பர் 17ம் தேதி நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து மத்திய பிரதேச மாநிலத்திற்கான தேர்தல் வருகிற நவம்பர் 17ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரங்களை அரசியல் கட்சியினர் தீவிரப்படுத்தியுள்ளனர். மத்திய பி…
-
- 0 replies
- 88 views
- 1 follower
-
-
கலாசாரத்தை புரிந்துகொள்ள... தேசிய மொழியான, ஹிந்தியை... கற்க வேண்டும் – அமித் ஷா. நமது வரலாறு மற்றும் கலாசாரத்தை புரிந்துகொள்ள தேசிய மொழியான ஹிந்தியை கற்க வேண்டும் என உட்;துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம், சூரத்தில் நடைபெற்ற அகில இந்திய அதிகாரப்பூர்வ மொழி மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். உள்ளூர் மொழிகளும், ஹிந்தி மொழியும் நமது கலாச்சாரத்தின் உயிரோட்டம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஹிந்தி மொழியும், உள்ளூர் மொழிகளும் இணைந்து ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட மொழிகளின் தாழ்வு மனப்பான்மையை வேரோடு பிடுங்கி எறியும் நேரம் வந்துவிட்டது என்றும் உட்;துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித…
-
- 0 replies
- 87 views
-
-
பாகிஸ்தான் மோசடி மையத்தில் சோதனை; இலங்கையர்கள் உட்பட 149 பேர் கைது! பாகிஸ்தான் பொலிஸார் ஒரு மோசடி மையத்தில் நடத்திய சோதனையில் 149 பேரை கைது செய்துள்ளதாக அந்நாட்டின் தேசிய சைபர் குற்றப் புலனாய்வு நிறுவனம் (NCCIA) வியாழக்கிழமை (10) தெரிவித்துள்ளது. பைசலாபாத் நகரில் செயல்பட்டு வரும் இந்த வலையமைப்பு குறித்து கிடைத்த இரகசிய தகவலை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இந்த மையம் பிரமிட் திட்டங்களில் ஈடுபட்டுள்ளதாகவும், போலி முதலீடுகள் என்ற பெயரில் மக்களை ஏமாற்றி ஏராளமான பணத்தை மோசடி செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்டவர்களில் 78 பாகிஸ்தானியர்கள், 48 சீனர்கள், எட்டு நைஜீரியர்கள், நான்கு பிலிப்பைன்ஸ் நாட்டவர்கள், இரண்டு இலங…
-
- 0 replies
- 87 views
-
-
மியன்மாரில் சைபர் குற்றங்களில் ஈடுபடுத்தப்பட்ட 283 இந்தியர்கள் மீட்பு. மியான்மர், தாய்லாந்து போன்ற நாடுகளில் வேலை பெற்று தருவதாகக்கூறி இந்தியர்கள் அழைத்து செல்லப்பட்டு அங்கு சட்டவிரோத வேலைகள், சைபர் குற்றங்களில் ஈடுபடுத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இவ்வாறான சைபர் குற்றங்களில் ஈடுபட மறுப்பவர்கள் வேலை அளிப்போரால் மின்சாரம் பாய்ச்சியும், பணய கைதிகளாக அடைத்து வைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்படும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. இவ்வாறு சட்டவிரோத வேலைகள், சைபர் குற்றங்களில் ஈடுபட சிக்க வைக்கப்பட்டுள்ளவர்களை மீட்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், வேலை என கூறி மியான்மருக்கு அழைத்து செல்லப்பட்டு சைபர் குற்றங்களில் ஈடுபடுத்தப்பட்ட 283 இந்தியர்க…
-
- 0 replies
- 87 views
-
-
ஆப்ரேஷன் சிந்தூர்; ரஃபேல் நற்பெயரை கலங்கப்படுத்த முயற்சிக்கும் சீனா! பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பின்னர், பிரான்சின் முதன்மை ரஃபேல் போர் விமானங்களின் செயல்திறன் குறித்த சந்தேகங்களைப் பரப்ப சீனா தனது தூதரகங்களைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. பிரெஞ்சு உளவுத்துறையின்படி, போர் விமானங்களின் விற்பனை மற்றும் நற்பெயரைக் குறைமதிப்பிற்கு உட்படுத்த சீனா தனது தூதரகங்களைப் பயன்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. அசோசியேட்டட் பிரஸ் அறிக்கையின்படி, பிரெஞ்சு இராணுவ போர் விமானத்தை வாங்குவதை நாடுகளை நிறுத்த வைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, ரஃபேல் ஜெட் விமானங்களின் விற்பனை மற்றும் செயல்திறனைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் குற்றச்சாட்டை வழிநடத்த சீன…
-
- 0 replies
- 87 views
-
-
பட மூலாதாரம்,FACEBOOK படக்குறிப்பு, மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் 1 ஜூலை 2025 மகாராஷ்டிராவில் சர்ச்சைக்குரிய மும்மொழிக் கொள்கை தொடர்பான அரசாங்க ஆணை ரத்து செய்யப்பட்டுள்ளது என்ற அறிவிப்பை முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஒரு செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்டார். துணை முதலமைச்சர்கள் ஏக்நாத் ஷிண்டே மற்றும் அஜித் பவார் ஆகியோரும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டனர். மும்மொழிக் கொள்கையை எந்த வகுப்பிலிருந்து அமல்படுத்த வேண்டும் என்பதை முடிவு செய்ய மாநில அரசின் சார்பாக நரேந்திர ஜாதவ் தலைமையில் ஒரு குழு அமைக்கப்படும் என்று கூறிய ஃபட்னாவிஸ், இந்தக் குழுவின் அறிக்கைக்குப் பிறகு, மும்மொழிக் கொள்கை செயல்படுத்தப்படும் என்றும் கூறினார். மேலும், "எங்களுக்கு மராத்தி முக…
-
- 0 replies
- 86 views
- 1 follower
-
-
அமெரிக்காவின் வர்த்தகப் போருக்கு மத்தியில் சீனா செல்லும் மோடி : ரஷ்யா மற்றும் சீன ஜனாதிபதிகளை சந்திக்கிறார் ! 30 Aug, 2025 | 10:48 AM அமெரிக்காவுடனான வர்த்தக மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ரஷ்யா மற்றும் சீன ஜனாதிபதிகளை சந்திக்கவுள்ளார். ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜப்பானில் இருந்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை (30) சீனாவுக்கு விஜயம் செய்கின்றார். அமெரிக்க அரசாங்கம் அண்மையில் இந்தியப் பொருட்களுக்கு 50 வீத வரி விதிப்பை நடைமுறைக்குக் கொண்டு வந்தது. இது இந்தியாவுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ரஷ்யாவிடம் இருந்து மசகு எண்ணெய் வாங்குவதே இந்த உயர் வரி விதிப்பிற்கான காரணம் என அமெரிக்க ஜனாதிபதி …
-
- 0 replies
- 86 views
-
-
பாகிஸ்தானுக்குச் செல்லும் நீர் நிறுத்தம்! பஹல்காம் தாக்குதலின் எதிரொலியாக ஜம்மு – காஷ்மீரில் செனாப் நதிக்கு குறுக்கேவுள்ள பாக்லிஹார் மற்றும் சலால் அணைகளில் இருந்து பாகிஸ்தானுக்கு வெளியேறும் நீர் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் உள்ள பிரபல சுற்றுலா தலத்தில் கடந்த 22ஆம் திகதி லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பின் கிளை அமைப்பான The Resistance Front (TRF) நடத்திய பயங்கரவாதத் தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். குறித்த தாக்குதல் சம்பவம் சர்வதேச ரீதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் மூழும் சூழ்நிலையும் உருவாகியுள்ளது. இந்நிலையில் இந்திய அரசு, 1960ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட சிந்து நதிந…
-
- 0 replies
- 85 views
-
-
சர்வதேச விமான சேவைகளை தற்காலிகமாக குறைத்த ஏர் இந்தியா! ஏர் இந்தியா தனது சர்வதேச விமான சேவைகளை தற்காலிகமாகக் குறைப்பதாக அறிவித்துள்ளது. அதன்படி, ஜூலை நடுப்பகுதி வரை அகலமான உடல் வடிவங்கள் கொண்ட விமானங்களின் செயல்பாடுகளை 15% குறைப்பதாக அறிவித்துள்ளது. ஜூன் 12 அன்று அகமதாபாத்தில் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வந்துள்ளது. பல கூட்டு சவால்களுக்கு மத்தியில் அதிக செயல்பாட்டு ஸ்திரத்தன்மை, சிறந்த செயல்திறன் மற்றும் பயணிகளின் சிரமத்தைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கில் நிலவும் புவிசார் அரசியல் பதற்றங்கள், ஐரோப்பா மற்றும் கிழக்கு ஆசியாவின் பல ந…
-
- 0 replies
- 82 views
-
-
பாகிஸ்தான் பிரஜைகளை உடனடியாக வெளியேறுமாறு இந்திய அரசாங்கம் அறிவிப்பு! இந்தியாவிலுள்ள பாகிஸ்தான் பிரஜைகளை உடனடியாக வெளியேறுமாறு இந்திய அரசாங்கம் இன்று உத்தியோகபூர்வாக அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து இந்திய விமானங்கள் தமது வான் வெளியை பயன்படுத்துவதற்கு பாகிஸ்தான் அரசாங்கம் இன்று தடை விதித்துள்ளது. காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தான் உடனான இராஜதந்திர உறவுகளை இந்தியா நிறுத்திக்கொண்டுள்ள நிலையில் பாகிஸ்தானும் இந்தியாவிற்கு எதிரான தீர்மானங்களை அறிவித்து வருகின்றது. இதேவேளை பிரபல சமூக ஊடக தளமான எக்ஸ் இல், இந்திய மத்திய அரசின் அறிவுறுத்தலுக்கமைய, பாகிஸ்தான் அரசாங்கத்தின் உத்தியோகப்பூர்வ பக்கம் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் …
-
- 0 replies
- 81 views
-
-
Published By: DIGITAL DESK 3 25 JUL, 2025 | 01:36 PM இந்தியாவின், ராஜஸ்தான் மாநிலம் ஜலாவர் மாவட்டம் பொப்லொடி பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (25) காலைபாடசாலை ஒன்றில் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்துள்ளது. இந்த சம்பவத்தில் பாடசாலை வகுப்பறைகளில் இருந்த மாணவ-மாணவியர், ஆசிரியர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டுள்ளனர். இந்நிலையில், இந்த கட்டிட விபத்தில் 7 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 28 மாணவ, மாணவியர் அருகில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் மாணவ, மாணவியரில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பாடச…
-
- 0 replies
- 81 views
- 1 follower
-
-
பாகிஸ்தானில் பேருந்தில் சென்றவர்கள் மீது பயங்கரவாதத் தாக்குதல்: 9 பேர் உயிரிழப்பு. பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பஸ்சில் சென்ற 9 பயணிகளை கிளர்ச்சியாளர்கள் சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் குவெட்டாவில் இருந்து லாகூர் சென்று கொண்டிருந்த பஸ்சில் துப்பாக்கியுடன் ஏறிய கிளர்ச்சியாளர்கள் குழு, அதில் இருந்த பயணிகளை தீவிரமாக சோதனை செய்தனர். பின்னர் சில பயணிகள் கடத்தப்பட்ட நிலையில் அதில் 9 பேரை கிளர்ச்சியாளர்கள் கொடூரமான முறையில் சுட்டுக்கொன்றனர். மாகாணத்தின் சோப் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இந்த சம்பவம் நடந்ததாகவும் சுட்டுக்கொல்லப்பட்ட ஒன்பது பேரும் பஞ்சாப் மாகாணத்தின் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்களது உடல்கள்…
-
- 1 reply
- 80 views
-
-
இன்றுடன் நிறைவுபெறும் மகா கும்பமேளா நிகழ்வு! மகா கும்பமேளா நிகழ்வு இன்று பிரம்மாண்டமாக நிறைவடைகிறது, இறுதி அமிர்த ஸ்நானத்திற்காக பக்தர்கள் குவிந்தனர் மகாசிவராத்திரியை முன்னிட்டு மகா கும்பமேளா நிகழ்வில் இறுதிப் புனித நீராடலுக்காக புதன்கிழமை (26) பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் இலட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். மகாசிவராத்திரி என்பது சிவன் மற்றும் பார்வதி தேவியின் தெய்வீக சங்கமத்தை குறிக்கிறது மற்றும் கும்பமேளாவின் பின்னணியில் ஆழமான முக்கியத்துவத்தை கொண்டுள்ளது. இது 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மற்றும் பக்தர்களுக்கு ‘மோட்சம்’ வழங்குவதாக நம்பப்படுகிறது. இந்துக்களால் புனித தலமாக போற்றப்படும் கங்கை, யமுனை மற்றும் புராண சரஸ்வதியின் புனித சங்கமத்திற்கு ஏராளமான பக்…
-
- 0 replies
- 80 views
-
-
சத்தீஸ்கரில் எஸ்.பி.ஐ. பெயரில் போலி வங்கிக் கிளை நடத்திய கும்பல் - உண்மை வெளிப்பட்டது எப்படி? சத்தீஸ்கரில் உள்ள பன்பராஸ் கிராமத்தைச் சேர்ந்த ஜோதி யாதவ் கடந்த வாரம் வரை 'ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா - சப்போரா கிளை' என்றழைக்கப்பட்ட ஒரு வங்கிக் கிளையில் பணியாற்றி வந்தார். ஆனால், அது உண்மையில் வங்கியே இல்லை என்பதை அவரால் இன்னும் நம்ப முடியவில்லை. ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் அதிகாரிகள் சிலர் போலீஸாருடன் அந்த வங்கிக் கிளைக்கு வந்தபோதுதான், ஜோதிக்கு அந்த வங்கியின் நிர்வாகக் குழுவில் இருந்து, வங்கி ஊழியர்கள், தனது பணி நியமனக் கடிதம் என அனைத்தும் போலி என்பது தெரிய வந்தது. சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் இருந்து சுமார் 200கி.மீ. தொலைவில் உள்ள சக்தி மாவட்டத்தில் உள்ள சப்போரா கிராமத…
-
- 0 replies
- 79 views
-