அயலகச் செய்திகள்
இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்
அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
3270 topics in this forum
-
பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே பிரம்மாண்டமான அணை கட்டும் சீனா! பிரம்மபுத்திராவின் குறுக்கே பிரம்மாண்டமான அணை கட்டும் நடவடிக்கையை சீனா முன்னெடுத்து வருகிறது. பிரம்மபுத்ரா ஆற்றின் குறுக்கே நீர் மின் திட்டத்துக்காக அணை கட்டுவது தங்கள் இறையாண்மைக்கு உட்பட்ட விஷயம் என சீனா கூறியுள்ளது. அந்த திட்டம் குறித்து இந்தியா மற்றும் பங்களாதேஷ் கவலை தெரிவித்திருந்த நிலையில், இது குறித்து பதிலளித்துள்ள சீன வெளியுறவுத் துறை, புதிய அணை திட்டத்தால் தூய்மையான எரிசக்தியை மேம்படுத்தும் தங்கள் முயற்சி முன்னேற்றம் அடையும் என்று கூறியுள்ளது. அணை கட்டப்படுவதால், பிரம்மபுத்திரா பாய்ந்தோடும் நாடுகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும், மாறாக அந்த ஆற்றில் ஏற்படும் அளவுக்கு அதிக வெள்ளப்பெருக்கு தடுக்…
-
- 0 replies
- 63 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சட்டக் கல்லூரி மாணவியின் பாலியல் வன்கொடுமை வழக்கு, 2024 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதை நினைவுபடுத்துகிறது. கட்டுரை தகவல் பிரபாகர் மணி திவாரி பிபிசி ஹிந்திக்காக கொல்கத்தாவில் இருந்து 27 ஜூன் 2025 மேற்கு வங்கத்தின் தலைநகரான கொல்கத்தாவில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களில் கல்லூரியின் முன்னாள் மாணவர் ஒருவரும் அடங்குவார். இதற்கிடையில், குற்றம் சாட்டப்பட்ட அந்த முன்னாள் மாணவர் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மாணவர் பிரிவான திரிணாம…
-
- 0 replies
- 63 views
- 1 follower
-
-
குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்! பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிரான முக்கியமான தீர்ப்பு இன்று (13) வெளியாகவுள்ள நிலையில், கடந்த இரண்டு நாட்களாக பங்களாதேஷ் தீ வைப்பு மற்றும் குண்டுவெடிப்புத் தாக்குதல்களால் அதிர்ந்துள்ளது. இது 2024 ஆம் ஆண்டு 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தும் கொந்தளிப்பான மற்றும் இரத்தக்களரியான மாணவர் தலைமையிலான போராட்டங்களை நினைவுபடுத்துகிறது. அண்மைய அரசியல் கொந்தளிப்பு டாக்காவில் வாழ்க்கையை ஸ்தம்பிக்க வைத்துள்ளது. தீ வைப்பு, பெற்றோல் குண்டுத் தாக்குதல்கள் தலைநகரைத் தாண்டி காசிபூர் மற்றும் பிரம்மன்பாரியா போன்ற நகரங்களுக்கும் பரவியுள்ளதாக தி டெய்லி ஸ்டாரில் ஒரு செய்தி வெளியா…
-
- 0 replies
- 61 views
-
-
உயிரிழந்த தாயின் எச்சங்களைத் தவறாக அனுப்பியதாக ஏயார் இந்தியா மீது மகன் குற்றச்சாட்டு! எயார் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்ததாகக் கூறப்பட்ட தனது தாயின் உடலுக்குப் பதிலாக வேறு ஒருவரின் எச்சங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக, லண்டனில் வசிக்கும் மகன் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். குறித்த நபரின் பெற்றோர் இருவரும் கடந்த அஹ்மதாபாத் விமான விபத்தில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. பின்னர், அவர்களது உடலங்கங்கள் என்றும் கூறப்பட்ட எச்சங்கள் அவருக்கு அனுப்பப்பட்டன. ‘எனினும் அதில் தனது தாயின் எச்சங்களுக்குப் பதிலாக வேறு ஒருவரின் எச்சங்கள் காணப்பட்டதாக ‘ அவர்களது மகன் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக உறவினர்களிடம் கையளிக்கப்பட்ட ஒருவரின் உடல் எச்சங்களில், பலரின் எச்சங்கள் உள்ளடக்கப்பட்டிருந்ததாக…
-
- 0 replies
- 61 views
-
-
தெலுங்கானாவின் லொறி – பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து; 20 பேர் உயிரிழப்பு, பலர் காயம்! தெலுங்கானாவின் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் இன்று (03) காலை சரளைக் கற்களை ஏற்றிச் சென்ற லொறியொன்று, அரசு நடத்தும் வீதிப் போக்குவரத்துக் கழக பேருந்து மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த துயரச் சம்பவத்தில் மூன்று மாதக் குழந்தை உட்பட குறைந்தது 20 பேர் உயிரிழந்தனர். மற்றும் பலர் காயமடைந்தனர். 70 பயணிகளுடன் தந்தூர் டிப்போவைச் சேர்ந்த பேருந்து ஹைதராபாத் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, எதிர் திசையில் இருந்து வந்த லொறியுடன் மோதி இந்த விபத்து நிகழந்துள்ளது. மோதலின் தாக்கம் மிகவும் கடுமையாக இருந்ததால் லொறிரியன் சரளைக் கற்கள் பேருந்து மீது விழுந்து பல பயணிகள் கீழே சிக்கிக் …
-
- 0 replies
- 60 views
-
-
ராஜஸ்தானில் விபத்துக்குள்ளான இந்திய போர் விமானம்! ராஜஸ்தானின் சுரு மாவட்டத்தின் பானுடா கிராமத்திற்கு அருகே இன்று (09) பிற்பகல் ஜாகுவார் போர் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் இந்திய விமானப்படை (IAF) விமானி உட்பட இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். இது கடந்த ஐந்து மாதங்களில் இது போன்று பதிவான மூன்றாவது விபத்தாகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். முதற்கட்ட தகவல்களின்படி, விமானியின் உடலுடன், விமானத்தின் இடிபாடுகள் ஒரு வயலில் கண்டெடுக்கப்பட்டன. உடல் கடுமையாக சேதமடைந்த நிலையில் மீட்கப்பட்டது. விபத்தில் உயிரிழந்த விமானி மற்றும் மற்றொரு நபரின் அடையாளங்கள் இன்னும் இராணுவம் மற்றும் உள்ளூர் நிர்வாகத்தால் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. போர் விமானம் பயிற்சி…
-
- 0 replies
- 59 views
-
-
100 கோடி மக்கள் அத்தியாவசிய செலவுகளைத் தவிர வேறு எதையும் வாங்க பணம் இல்லாத சூழ்நிலை இந்தியாவில் வாழும் 140 கோடி மக்களில் 90 சதவீதம் பேர், அதவாது சுமார் 100 கோடி மக்கள் அத்தியாவசிய செலவுகளைத் தவிர வேறு எதையும் வாங்க பணம் இல்லாத சூழ்நிலையில் உள்ளனர் என்று அதிர்ச்சி அறிக்கை வெளியாகி உள்ளது. ப்ளும் வெண்ட்சர்ஸ் (Blume Ventures) எனும் முதலீட்டு` நிறுவனம் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவின் 140 கோடி மொத்த மக்கள் தொகையில் வெறும் 14 கோடி மக்கள் மட்டுமே சந்தையில் பங்களிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வளர்ந்து வரும் நுகர்வோர்களாக இருக்கும் 30 கோடி மக்கள் பெரும் தயக்கத்துடனேயே செலவு செய்கின்றனர். ஏறத்தாழ 100 கோடி மக்கள் அத்தியாவசிய செலவுகளைத் தவிர வேறு எதையும் வாங்க …
-
- 0 replies
- 59 views
-
-
பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, போலி தூதரகம் பற்றிய முழு தகவலையும் உத்தரபிரதேச சிறப்புப் படையின் எஸ்.எஸ்.பி சுஷில் குலே வழங்கியுள்ளார். 8 மணி நேரங்களுக்கு முன்னர் போலி தூதரகம் நடத்திய குற்றச்சாட்டின் பேரில் உத்தரபிரதேச சிறப்புப் படையின்(எஸ்டிஎஃப்) நொய்டா பிரிவு, ஜூலை 22ம் தேதி செவ்வாய்க்கிழமையன்று காஜியாபாத்தில் ஒருவரை கைது செய்தது. குற்றம் சாட்டப்பட்டவர் மேற்கு ஆர்க்டிகா, சபோரா, பால்வியா மற்றும் லோடோனியா போன்ற நாடுகளின் தூதர் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, மக்களைத் தொடர்பு கொண்டுள்ளார். "மேற்கு ஆர்க்டிகா, சபோர்கா, பால்வியா, லோடோனியா மற்றும் வேறு சில 'நாடுகளின்' தூதர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு அவர் மக்களைத் தொடர்பு கொண்டுள்ளார். அவரிடமிருந்து சந்தேகத்திற்குரிய …
-
- 0 replies
- 59 views
- 1 follower
-
-
பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளை கடுமையாக சாடிப் பேசிய பிரதமர் மோடி! இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தனது சீனப் பயணத்தின் மூன்றாவது நாளான இன்று (01) தியான்ஜினில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார். உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி தனது உரையைப் பயன்படுத்தி பயங்கரவாதம் குறித்து ஒரு கூர்மையான செய்தியை வழங்கினார். அதில் பயங்கரவாத அமைப்புகளுக்கு “சில நாடுகள்” வழங்கும் வெளிப்படையான ஆதரவை இனியும் பொறுத்துக்கொள்ள முடியுமா என்றும் கேள்வி எழுப்பினார். சீனாவின் தியான்ஜினில் நடைபெறும் 25 ஆவது SCO உச்சி மாநாட்டில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கலந்து கொண்டார். இதன்போது தனது உரையினை உறுதியாக வெளிப்படுத்திய பிரதமர் மோடி, “ப…
-
- 0 replies
- 59 views
-
-
‘திருமணத்துக்கு முந்தைய பாலியல் உறவு சாதாரணமாகிவிட்டது’ - உயர் நீதிமன்றம் வேதனை மதுரை: திருமணத்துக்கு முந்தைய பாலியல் உறவு சர்வ சாதாரணமாகிவிட்டது என உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. நெல்லையை சேர்ந்தவர் தேவா விஜய். இவர் மீது இளம் பெண் ஒருவர் வள்ளியூர் காவல் நிலையத்தில் பாலியல் புகார் அளித்தார். புகாரில் இருவரும் கல்லூரியில் படிக்கும் போது காதலித்ததாகவும், திருமணம் செய்வதாக கூறி 9 ஆண்டுகளாக பாலியல் உறவு கொண்டதாகவும், பின்னர் திருமணம் செய்ய மறுத்துவிட்டதாகவும் இளம் பெண் கூறியிருந்தார். இப்புகாரின் பேரில் தேவா விஜய் மீது வள்ளியூர் போலீஸார் வழக்கு பதிவு செய்தார். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி தேவா விஜய் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத் தாக்கல் செய்தார். மனுவை விசாரித்…
-
- 0 replies
- 58 views
-
-
செயற்கை மழைக்கான டெல்லியின் மேக விதைப்பு சோதனை தோல்வி! டெல்லியில் செயற்கை மழை பெய்ய வைக்கும் விலையுயர்ந்த முயற்சி செவ்வாய்க்கிழமை (29) தோல்வியடைந்தது. அதே நேரத்தில் மேலும் பல சோதனைகள் நடந்து வருவதாக காற்றின் தரம் மிகவும் மோசமாக இருந்த நிலையில், புகைமூட்டம் நிறைந்த நகரத்தில் மேக விதைப்பு சோதனையை மேற்கொண்ட பின்னர் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) தலைமையிலான அரசாங்கம், தெரிவித்துள்ளது. டெல்லியில் செயற்கை மழை பெய்ய வைக்கும் முயற்சிக்கு 1 கோடி இந்திய ரூபாவுக்கு மேல் செலவானதாகக் கூறப்படுகிறது. கான்பூர் இந்திய தொழில்நுட்பக் கழகத்தினால் இயக்கப்படும் ஒரு சிறிய, ஒற்றை-இயக்கி விமானம் செவ்வாயன்று வடமேற்கு டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தின் சில பகுதிகளில் பறந்து, மழையை பொழிய வைக்…
-
- 0 replies
- 58 views
-
-
இங்கிலாந்துடன் முக்கிய வர்த்தக ஒப்பந்தம்; இந்தியப் பிரதமர் மோடி லண்டன் விஜயம்! இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் இங்கிலாந்து விஜயமாக வியாழக்கிழமை (23) லண்டன் சென்றடைந்துள்ளார். லண்டன் சென்றடைந்த மோடியை, விமான நிலையத்தில் இந்தோ-பசுபிக் பகுதிக்குப் பொறுப்பான இங்கிலாந்து வெளிவிவகார அமைச்சர் கேத்தரின் வெஸ்ட், புது டெல்லிக்கான இங்கிலாந்தின் உயர் ஸ்தானிகர் லிண்டி கேமரூன் உள்ளிட்டோர் வரவேற்றனர். தனது வருகையை அறிவித்த பிரதமர் மோடி, இந்த பயணம் இந்தியாவிற்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான பொருளாதார கூட்டாண்மையை மேம்படுத்தும் என்று கூறினார். இந்தப் பயணத்தில் மோடி, இங்கிலாந்துடன் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடவுள்ளார். மேலும், இங்கில…
-
- 0 replies
- 58 views
-
-
நேபாளத்தில் 1,500 கைதிகள் தப்பியோட்டம்! நேபாளத்தில் சமூக ஊடகத் தடைக்கு எதிராக வெடித்த இளைஞர் போராட்டங்கள், நாட்டின் அரசியல் அமைப்பில் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடை எதிர்ப்பு நடவடிக்கையாக, ‘ஜென் Z’ போராட்டம் எனப்படும் இயக்கத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள், மாணவர்கள் வீதிகளில் குதித்தனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடந்த வன்முறைகளில் இதுவரை 19 பேர் உயிரிழந்ததுடன், 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். கலவரங்கள் தீவிரமடைந்த நிலையில், போராட்டக்காரர்கள் நாகு சிறையை உடைத்து கைதிகளை வெளியேற்றினர். முதல் கட்டமாக சுமார் 2,000 கைதிகள் விடுவிக்கப்பட்டனர். பின்னர் மற்றொரு பகுதியில் இருந்த 1,500 கைதிகளும் சிறையிலிருந்து வெளியேறினர். பொல…
-
- 0 replies
- 58 views
-
-
பேராசிரியர் பாலியல் துஷ்பிரயோகம் புரிந்ததால் கல்லூரியில் உயிரை மாய்த்த மாணவி. ஒடிசாவில் பேராசிரியர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் புரிந்ததால் பாதிக்கப்பட்ட மாணவி பல்கலைக்கழக வளாகத்தில் தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பக்கீர் மோகன் கல்லூரியில் பி.எட். படித்து வந்த 20 வயதான மாணவி ஒருவரை பேராசிரியர் சமீரா குமார் சாகு பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி கடந்த 30ம் திகதி கல்லூரி முதல்வர் திலீப் கோஷிடம் புகாரளித்திருந்தார். அத்துடன் கல்லூரி வளாகத்திலேயே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். ஆனால் சம்மந்தப்பட்ட பேராசிரியர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்…
-
- 0 replies
- 57 views
-
-
இந்தியா- அமெரிக்கா இடையிலான போர் ஏவுகணை ஒப்பந்தம் விரைவில்! இந்தியா- அமெரிக்கா இடையே போர் ஏவுகணை ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக உள்ளது. இந்த ஒப்பந்தத்திற்கு பின்னர் , 2026ம் ஆண்டு முதல் காலாண்டில் போர் ஏவுகணைகள் இந்தியா வந்தடைய உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பஹல்காமில் பயங்கரவாத தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு எதிராக ஒபரேஷன் சிந்தூர் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. இந்த நடவடிக்கைக்கு பின்னர் ஆயுத கொள்முதலில் இந்திய பாதுகாப்பு துறை கவனம் செலுத்தி வருகிறது. அதன் அடிப்படையில், வானில் நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகள் உள்ளிட்ட ஆயுதங்களை கொள்வனவு செய்ய இந்திய மத்திய அரசு ஆர்வம் காட்டி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போது, அவசரகால கொள்முதல் திட்டத்தின் கீழ், பாதுகாப்பு அ…
-
- 0 replies
- 56 views
-
-
பட மூலாதாரம், Imran Qureshi கட்டுரை தகவல் இம்ரான் குரேஷி பிபிசி இந்திக்காக 23 நவம்பர் 2025, 06:41 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒரு வங்கியில் இருந்து இன்னொரு வங்கிக்கு பணத்தை எடுத்துச் செல்லும் வாகனத்தில் இருந்து, சினிமா பட பாணியில் 7.11 கோடி ரூபாய் பணத்தைக் கொள்ளையடித்ததாக சந்தேகிக்கப்பட்ட 7 பேரைப் பிடித்திருப்பதாக பெங்களூரு போலீஸார் தெரிவித்தனர். கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் 6.29 கோடி ரூபாயை மீட்டிருப்பதாகவும் காவல் துறையினர் தெரிவித்தனர். பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய பெங்களூரு காவல்துறை ஆணையர் சீமந்த் குமார் சிங், விசாரணை சரியான திசையில் இருப்பதாகக் கூறினார். மேலும், மீதமுள்ள தொகை மற்றும் இந்த குற்றத்தில் தொடர்புடையவர்கள் விரைவில் பிடிபடுவார்கள…
-
- 0 replies
- 56 views
- 1 follower
-
-
ராஜஸ்தானில் அரச தேர்வில் மோசடி: 415 பேருக்கு வாழ்நாள் தடை. ராஜஸ்தானில் அரச வேலைக்கான தேர்வுகளில் மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் பொது தேர்வு ஆணையம் (RPSC) அண்மையில் நடத்திய விசாரணையில், போலி ஊனமுற்ற சான்றிதழ்கள், போலி பட்டப்படிப்பு சான்றிதழ்கள் மற்றும் சந்தேகத்திற்கிடமான ஆவணங்களை பயன்படுத்தி தேர்வில் பங்கேற்ற 524 பேர் அடையாளம் காணப்பட்டனர். இதனையடுத்து 415 பேருக்கு வாழ்நாள் முழுவதும் அரசு தேர்வுகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், 109 பேருக்கு 1 முதல் 5 ஆண்டுகள் வரை தேர்வுகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தடை செய்யப்பட்டவர்களில் 514 பேர் ராஜஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்…
-
- 0 replies
- 55 views
-
-
“அணு ஆயுத மிரட்டலை இனி பொறுத்துக்கொள்ள மாட்டோம்” – சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உறுதி August 15, 2025 11:20 am “இந்திய ஆயுதப் படைகளால் பாகிஸ்தானில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. அணு ஆயுத அச்சுறுத்தல்களை இனி பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்று இந்தியா முடிவு செய்துள்ளது. எந்த மிரட்டலுக்கும் நாம் அடிபணிய மாட்டோம்” என்று சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி கூறினார். இந்தியா முழுவதும் 79-வது சுதந்திர தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டுவருகிறது. தலைநகர் டெல்லியில் அமைந்துள்ள செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடியேற்றினார். தொடர்ந்து 12-வது முறையாக செங்கோட்டையில் தேசிய கொடியை அவர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், “ நாம் அனைவரும் இந்தியாவை நம் உயிருக்கும் மேலாக நேசிக்க…
-
- 0 replies
- 55 views
-
-
ஆப்கானிஸ்தான் எல்லை அருகே தற்கொலைத் தாக்குதல்; 7 பாகிஸ்தான் வீரர்கள் மரணம்! ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகே வெள்ளிக்கிழமை (17) நடந்த தற்கொலைத் தாக்குதலில் ஏழு பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாக இஸ்லாமபாத் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். இஸ்லாமாபாத் – காபூல் இடையேயான பலவீனமான போர்நிறுத்தம் முன்னாள் நட்பு நாடுகளுக்கு இடையேயான கடுமையான மோதலை நிறுத்திய நிலையில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (TTP) உடன் தொடர்புடைய ஒரு தற்கொலை கார் குண்டுதாரி வடக்கு வசிரிஸ்தானின் மிர் அலியில் உள்ள பாதுகாப்புப் படை வளாகத்தில் மோதியதாகவும், துப்பாக்கிச் சண்டையில் மூன்று போராளிகள் கொல்லப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இந்த மிகப்பெரிய குண்டுவெடிப்பு அருகிலுள்ள வீ…
-
- 0 replies
- 51 views
-
-
பாகிஸ்தானின் முப்படைகளின் பிரதானியாக அசிம் முனீர் நியமனம் 06 Dec, 2025 | 11:20 AM பாகிஸ்தானில் இதுவரை இல்லாத புதிய உயர்பதவியாக “ முப்படைகளின் பிரதானி” (Chief of Defence Forces – CDF) உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் பதவியை உருவாக்க, பாகிஸ்தான் அரசியலமைப்பின் 243 ஆவது பிரிவில் 27வது திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தியாவின் “ஆபரேசன் சிந்தூர்” நடவடிக்கையில் பாகிஸ்தான் எதிர்கொண்ட கடும் பின்னடைவை அடுத்து, பாதுகாப்பு அமைப்பை மறுசீரமைக்கும் நோக்கில் பாகிஸ்தான் அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், தற்போதைய இராணுவத் தளபதியான பீல்ட் மார்ஷல் அசிம் முனீருக்கு பதவி நீட்டிப்பு வழங்கும் வகையிலும் இந்த புதிய பதவி உருவாக்கப…
-
- 0 replies
- 41 views
- 1 follower
-