அயலகச் செய்திகள்
இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்
அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
3311 topics in this forum
-
ஏர் இந்தியா குறித்து வெளியான அதிர்ச்சித் தகவல்! டாடா குழுமத்திற்குச் சொந்தமான ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் செயல்பாடுகள் தொடர்பாக, மத்திய சிவில்விமானப் போக்குவரத்து ஆணையகம் (DGCA) நடத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த மாதம் 12-ஆம் திகதி, குஜராத்தின் ஆமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டன் நோக்கி புறப்பட்ட ‘ஏர் இந்தியா போயிங் 787-8’ விமானம், புறப்பட்ட சிறிது நேரத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விழுந்து நொறுங்கியது. இந்த துயரச் சம்பவம் தொடர்பான முதற்கட்ட விசாரணை அறிக்கையில், விமானம் புறப்பட்டவுடன் அதன் இன்ஜின் எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகள் ‘ரன்’ நிலைமையில் இருந்து தானாகவே ‘கட் ஆப்’ நிலைக்கு மாறியதே விபத்துக்குக் காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளத…
-
- 0 replies
- 85 views
-
-
இந்தியாவுடன் 10 ஆண்டு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அமெரிக்கா! இந்தியாவுடன் 10 ஆண்டு பாதுகாப்பு கட்டமைப்பு ஒப்பந்தத்தில் அமெரிக்கா கையெழுத்திட்டுள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் வெள்ளிக்கிழமை (31) தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையே ஒருங்கிணைப்பு, தகவல் பகிர்வு மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை மேம்படுத்துதல், பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் தடுப்புக்கான ஒரு மூலக்கல்லாக இந்த கட்டமைப்பு கருதப்படுகிறது என்று ஹெக்ஸெத் தனது இந்திய சகா ராஜ்நாத் சிங்குடனான சந்திப்பிற்குப் பின்னர் எக்ஸில் பதிவிட்டார். கடந்த ஆகஸ்ட் மாதம் வொஷிங்டன் டெல்லியன் பொருட்களுக்கான வரிகளை 50 சதவீதமாக இரட்டிப்பாக்க முடிவு செய்ததைத் தொடர்ந்து, இந்தியா-அமெரிக்க உறவுகளில் ஏற்பட்டுள்ள…
-
- 0 replies
- 85 views
-
-
பாகிஸ்தானில் பள்ளிவாசல் ஒன்றில் குண்டுவெடிப்பு – 31 பேர் உயிரிழப்பு! பாகிஸ்தான் தலைநகரின் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள பள்ளிவாசல் ஒன்றில் இன்றைய (வெள்ளிக்கிழமை ) தொழுகையின் போது இடம்பெற்ற பாரிய குண்டுவெடிப்பில் 31 பேர் கொல்லப்பட்டதுடன், குறைந்தது 169 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்தக் குண்டுவெடிப்பு ஒரு திட்டமிட்ட தாக்குதல் என்றும், இது குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இஸ்லாமாபாத் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை, காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அவர்கள் பொலிஸார் மற்றும் பொதுமக்களால் அருகில் உள்ள வைத்தியசாலைகளுக்கு கொண்டு செல்லப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் இந்த வெடிப்புச் சம்பவத்திற்கு இதுவரை…
-
- 0 replies
- 85 views
-
-
கேரளாவில் 10 மாத பெண்குழந்தையின் உடல் உறுப்புகள் தானம் – 4 பேருக்கு மறுவாழ்வு! கேரளாவில், சாலை விபத்தில் உயிரிழந்த 10 மாத பெண் குழந்தையின் உடலுறுப்புகள் தானமாக வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் உறுப்பு தானத்திற்காக காத்திருந்த ஐந்து பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது. கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள மலப்பள்ளி என்ற பகுதியைச் சேர்ந்த அருண் ஆபிரகாம் மனைவி ஷெரின் அன்ஜான் ஆகியோருக்கு அலின் ஷெரின் ஆபிரகாம் என்ற 10 மாத பெண் குழந்தை இருந்துள்ளது. , கோட்டயம் அருகே பள்ளம் பகுதியில் தாய் மற்றும் தாய்வழி பாட்டி, தாத்தாவுடன் பயணித்த போது சாலை விபத்தில் படுகாயம் அடைந்த பெண் குழந்தை, கொச்சியில் உள்ள அம்ரிதா மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இதையடுத்து, பெற்றோர் ஒப்புதலுட…
-
- 1 reply
- 84 views
- 1 follower
-
-
சீன ஜனாதிபதியை சந்தித்தார் இந்திய பிரதமர் மோடி 31 Aug, 2025 | 11:29 AM ஜப்பானில் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்ட இந்திய பிரதமர் மோடி, அங்கிருந்து சீனா புறப்பட்டார். சீனாவில் உள்ள தியான்ஜின் விமான நிலையத்துக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு, சிவப்பு கம்பள வரவேற்பு கொடுக்கப்பட்டது. தியான்ஜின் நகரில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். இதில் சீன ஜனாதிபதி ஜின்பிங், ரஷ்ய ஜனாதிபதி புட்டின் மற்றும் கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், பாகிஸ்தான், ஈரான், பெலாரஸ் ஆகிய நாடுகளின் தலைவர்களும் பங்கேற்கிறார்கள். இந்த மாநாட்டுக்கு இடையே ஜின்பிங்கையும், ரஷ்ய ஜனாதிபதி புட்டினையும் இந்திய ப…
-
- 0 replies
- 84 views
-
-
பாகிஸ்தான் மசூதியில் தற்கொலை குண்டு தாக்குதல்; 4 பேர் உயிரிழப்பு, பலர் காயம்! வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள ஒரு மசூதியில் வெள்ளிக்கிழமை (28)நடந்த குண்டுவெடிப்பில் குறைந்தது 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், இந்த சம்பவத்தில் குறைந்தது 12 பேர் காயமடைந்துள்ளதாக கைபர் பக்துன்க்வா பொலிஸாரின் தகவல்களை மேற்கொள்காட்டி பாகிஸ்தானின் ஜியோ நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. பெஷாவருக்கு கிழக்கே சுமார் 60 கிலோமீட்டர் (35 மைல்) தொலைவில் உள்ள அகோரா கட்டாக்கில் உள்ள தார்-உல்-உலூம் ஹக்கானியா பள்ளியில் வாராந்திர வெள்ளிக்கிழமை தொழுகைக்காக மக்கள் கூடியிருந்தபோது இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்துக்கு பதிலளிக்கும் விதமாக, குண்டுவெடிப்பு நடந்த இடத்திலிருந்து சுமார் 45 நிமிடங்க…
-
- 0 replies
- 83 views
-
-
உயிரிழந்த தாயின் எச்சங்களைத் தவறாக அனுப்பியதாக ஏயார் இந்தியா மீது மகன் குற்றச்சாட்டு! எயார் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்ததாகக் கூறப்பட்ட தனது தாயின் உடலுக்குப் பதிலாக வேறு ஒருவரின் எச்சங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக, லண்டனில் வசிக்கும் மகன் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். குறித்த நபரின் பெற்றோர் இருவரும் கடந்த அஹ்மதாபாத் விமான விபத்தில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. பின்னர், அவர்களது உடலங்கங்கள் என்றும் கூறப்பட்ட எச்சங்கள் அவருக்கு அனுப்பப்பட்டன. ‘எனினும் அதில் தனது தாயின் எச்சங்களுக்குப் பதிலாக வேறு ஒருவரின் எச்சங்கள் காணப்பட்டதாக ‘ அவர்களது மகன் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக உறவினர்களிடம் கையளிக்கப்பட்ட ஒருவரின் உடல் எச்சங்களில், பலரின் எச்சங்கள் உள்ளடக்கப்பட்டிருந்ததாக…
-
- 0 replies
- 83 views
-
-
பிரான்சிடம் இருந்து 26 ரபேல் விமானங்களை வாங்கும் இந்தியா! பிரான்சிடம் இருந்து 26 ரபேல் விமானங்களை வாங்குவதற்கு இந்தியா தீர்மானித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பிரான்ஸ் நாட்டின் டசால்ட் ஏவியேசன் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் ரபேல் விமானங்களை இந்தியா ஏற்கனவே வாங்கியுள்ளது. விமானப்படையில் 36 ரபேல் விமானங்கள் பயன்பாட்டில் உள்ளன. தற்போது கடற்படைக்கும் ரபேல் விமானங்களை வாங்க மத்திய அரசு பேச்சு வார்ததை நடத்தி வருகின்றது. இந்நிலையில், பிரான்சிடம் இருந்து இந்திய பெறுமதியில் 63,000 கோடி ரூபாய் செலவில் 26 ரபேல் விமானங்களை வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது. அந்தவகையில் ஒற்றை இருக்கை கொண்ட 22 விமானங்கள், இரண்டு இருக்கை கொண்ட 4 விமானங்கள் என மொத்தம் 26 ரபேல் விமானங்களை இந்தியா வாங்…
-
- 0 replies
- 82 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். 3 மே 2025 பாகிஸ்தானின் நீர்வழிப் பாதையை நிறுத்தவோ அல்லது திருப்பிவிடவோ இந்தியா ஏதேனும் கட்டமைப்பை உருவாக்கினால், அது அழிக்கப்படும் என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் இந்தியாவை எச்சரித்துள்ளார். பாகிஸ்தானின் தனியார் தொலைக்காட்சியான ஜியோ நியூஸின் 'நயா பாகிஸ்தான்' நிகழ்ச்சியில் பேசிய பாதுகாப்பு அமைச்சர், "இந்தியா சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை மீறி, தண்ணீரை நிறுத்தவோ அல்லது திருப்பிவிடவோ ஏதேனும் கட்டமைப்பை உருவாக்கினால், அது பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதலாகக் கருதப்படும். அந்தக் கட்டமைப்பை நாங்கள் அழிப்போம்" என்றார். "சிந்து நதி நீர் ஒப்பந்தத்…
-
- 0 replies
- 80 views
- 1 follower
-
-
இந்தியா- அமெரிக்கா இடையிலான போர் ஏவுகணை ஒப்பந்தம் விரைவில்! இந்தியா- அமெரிக்கா இடையே போர் ஏவுகணை ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக உள்ளது. இந்த ஒப்பந்தத்திற்கு பின்னர் , 2026ம் ஆண்டு முதல் காலாண்டில் போர் ஏவுகணைகள் இந்தியா வந்தடைய உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பஹல்காமில் பயங்கரவாத தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு எதிராக ஒபரேஷன் சிந்தூர் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. இந்த நடவடிக்கைக்கு பின்னர் ஆயுத கொள்முதலில் இந்திய பாதுகாப்பு துறை கவனம் செலுத்தி வருகிறது. அதன் அடிப்படையில், வானில் நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகள் உள்ளிட்ட ஆயுதங்களை கொள்வனவு செய்ய இந்திய மத்திய அரசு ஆர்வம் காட்டி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போது, அவசரகால கொள்முதல் திட்டத்தின் கீழ், பாதுகாப்பு அ…
-
- 0 replies
- 78 views
-
-
09 JUL, 2025 | 12:41 PM போபால்: ஆசியாவின் மிக வயதான யானையான 'வத்சலா', நேற்று (செவ்வாய்க்கிழமை) மத்தியப் பிரதேசத்தில் உள்ள பன்னா புலிகள் காப்பகத்தில் உயிரிழந்தது. அந்த யானைக்கு 100 வயதுக்கு மேல் இருக்கும் என மதிப்பிடப்படுகிறது. ஆசியாவின் மிகவும் வயதான பெண் யானையான ‘வத்சலா’ பல ஆண்டுகளாக, பன்னா புலிகள் காப்பகத்தில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் அடையாளமாக இருந்தது. மிகவும் வயதான யானையாக இருந்ததால், அது காப்பகத்தில் உள்ள மற்ற யானைகள் குழு அனைத்தையும் வழிநடத்தியது. காப்பகத்தில் உள்ள மற்ற பெண் யானைகள் குட்டிகளைப் ஈன்றெடுக்கும் போது, ‘வத்சலா’ ஒரு பாட்டி போல செயல்பட்டு குட்டிகளை கவனித்துக்கொண்டது என பன்னா புலிகள் காப்பகம் தெரிவித்துள்ளது. வத்சலா யானையின் முன் கால்களின் நகங்களில் ஏ…
-
- 0 replies
- 78 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சட்டக் கல்லூரி மாணவியின் பாலியல் வன்கொடுமை வழக்கு, 2024 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதை நினைவுபடுத்துகிறது. கட்டுரை தகவல் பிரபாகர் மணி திவாரி பிபிசி ஹிந்திக்காக கொல்கத்தாவில் இருந்து 27 ஜூன் 2025 மேற்கு வங்கத்தின் தலைநகரான கொல்கத்தாவில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களில் கல்லூரியின் முன்னாள் மாணவர் ஒருவரும் அடங்குவார். இதற்கிடையில், குற்றம் சாட்டப்பட்ட அந்த முன்னாள் மாணவர் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மாணவர் பிரிவான திரிணாம…
-
- 0 replies
- 78 views
- 1 follower
-
-
பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே பிரம்மாண்டமான அணை கட்டும் சீனா! பிரம்மபுத்திராவின் குறுக்கே பிரம்மாண்டமான அணை கட்டும் நடவடிக்கையை சீனா முன்னெடுத்து வருகிறது. பிரம்மபுத்ரா ஆற்றின் குறுக்கே நீர் மின் திட்டத்துக்காக அணை கட்டுவது தங்கள் இறையாண்மைக்கு உட்பட்ட விஷயம் என சீனா கூறியுள்ளது. அந்த திட்டம் குறித்து இந்தியா மற்றும் பங்களாதேஷ் கவலை தெரிவித்திருந்த நிலையில், இது குறித்து பதிலளித்துள்ள சீன வெளியுறவுத் துறை, புதிய அணை திட்டத்தால் தூய்மையான எரிசக்தியை மேம்படுத்தும் தங்கள் முயற்சி முன்னேற்றம் அடையும் என்று கூறியுள்ளது. அணை கட்டப்படுவதால், பிரம்மபுத்திரா பாய்ந்தோடும் நாடுகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும், மாறாக அந்த ஆற்றில் ஏற்படும் அளவுக்கு அதிக வெள்ளப்பெருக்கு தடுக்…
-
- 0 replies
- 77 views
-
-
‘திருமணத்துக்கு முந்தைய பாலியல் உறவு சாதாரணமாகிவிட்டது’ - உயர் நீதிமன்றம் வேதனை மதுரை: திருமணத்துக்கு முந்தைய பாலியல் உறவு சர்வ சாதாரணமாகிவிட்டது என உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. நெல்லையை சேர்ந்தவர் தேவா விஜய். இவர் மீது இளம் பெண் ஒருவர் வள்ளியூர் காவல் நிலையத்தில் பாலியல் புகார் அளித்தார். புகாரில் இருவரும் கல்லூரியில் படிக்கும் போது காதலித்ததாகவும், திருமணம் செய்வதாக கூறி 9 ஆண்டுகளாக பாலியல் உறவு கொண்டதாகவும், பின்னர் திருமணம் செய்ய மறுத்துவிட்டதாகவும் இளம் பெண் கூறியிருந்தார். இப்புகாரின் பேரில் தேவா விஜய் மீது வள்ளியூர் போலீஸார் வழக்கு பதிவு செய்தார். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி தேவா விஜய் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத் தாக்கல் செய்தார். மனுவை விசாரித்…
-
- 0 replies
- 75 views
-
-
நேபாளத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி இதுவரை 47 பேர் உயிரிழப்பு! நேபாளத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி இதுவரை 47 பேர் உயிரிழந்துள்ளதுடன் நேபாளத்தின் பிற இடங்களிலும் ஏற்பட்ட மின்னல் தாக்கத்தில் சிக்குண்டு மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். இதேவேளை, நேபாளத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக வீதிகள் சேதம் அடைந்ததால், போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், மீட்பு பணிகளுக்காக நேபாள இராணுவம் வானூர்திகளை அனுப்பியுள்ளதுடன் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து ஏராளமானோரை இராணுவத்தினர் மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்துள்ளனர். இருப்பினும், குறித்த மோசமான வானிலை காரணமாக, தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மீட்பு நடவடிக்கைகள் தடைபட்ட…
-
- 0 replies
- 75 views
-
-
“அணு ஆயுத மிரட்டலை இனி பொறுத்துக்கொள்ள மாட்டோம்” – சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உறுதி August 15, 2025 11:20 am “இந்திய ஆயுதப் படைகளால் பாகிஸ்தானில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. அணு ஆயுத அச்சுறுத்தல்களை இனி பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்று இந்தியா முடிவு செய்துள்ளது. எந்த மிரட்டலுக்கும் நாம் அடிபணிய மாட்டோம்” என்று சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி கூறினார். இந்தியா முழுவதும் 79-வது சுதந்திர தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டுவருகிறது. தலைநகர் டெல்லியில் அமைந்துள்ள செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடியேற்றினார். தொடர்ந்து 12-வது முறையாக செங்கோட்டையில் தேசிய கொடியை அவர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், “ நாம் அனைவரும் இந்தியாவை நம் உயிருக்கும் மேலாக நேசிக்க…
-
- 0 replies
- 75 views
-
-
நேபாளத்தில் 1,500 கைதிகள் தப்பியோட்டம்! நேபாளத்தில் சமூக ஊடகத் தடைக்கு எதிராக வெடித்த இளைஞர் போராட்டங்கள், நாட்டின் அரசியல் அமைப்பில் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடை எதிர்ப்பு நடவடிக்கையாக, ‘ஜென் Z’ போராட்டம் எனப்படும் இயக்கத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள், மாணவர்கள் வீதிகளில் குதித்தனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடந்த வன்முறைகளில் இதுவரை 19 பேர் உயிரிழந்ததுடன், 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். கலவரங்கள் தீவிரமடைந்த நிலையில், போராட்டக்காரர்கள் நாகு சிறையை உடைத்து கைதிகளை வெளியேற்றினர். முதல் கட்டமாக சுமார் 2,000 கைதிகள் விடுவிக்கப்பட்டனர். பின்னர் மற்றொரு பகுதியில் இருந்த 1,500 கைதிகளும் சிறையிலிருந்து வெளியேறினர். பொல…
-
- 0 replies
- 75 views
-
-
செயற்கை மழைக்கான டெல்லியின் மேக விதைப்பு சோதனை தோல்வி! டெல்லியில் செயற்கை மழை பெய்ய வைக்கும் விலையுயர்ந்த முயற்சி செவ்வாய்க்கிழமை (29) தோல்வியடைந்தது. அதே நேரத்தில் மேலும் பல சோதனைகள் நடந்து வருவதாக காற்றின் தரம் மிகவும் மோசமாக இருந்த நிலையில், புகைமூட்டம் நிறைந்த நகரத்தில் மேக விதைப்பு சோதனையை மேற்கொண்ட பின்னர் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) தலைமையிலான அரசாங்கம், தெரிவித்துள்ளது. டெல்லியில் செயற்கை மழை பெய்ய வைக்கும் முயற்சிக்கு 1 கோடி இந்திய ரூபாவுக்கு மேல் செலவானதாகக் கூறப்படுகிறது. கான்பூர் இந்திய தொழில்நுட்பக் கழகத்தினால் இயக்கப்படும் ஒரு சிறிய, ஒற்றை-இயக்கி விமானம் செவ்வாயன்று வடமேற்கு டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தின் சில பகுதிகளில் பறந்து, மழையை பொழிய வைக்…
-
- 0 replies
- 73 views
-
-
இங்கிலாந்துடன் முக்கிய வர்த்தக ஒப்பந்தம்; இந்தியப் பிரதமர் மோடி லண்டன் விஜயம்! இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் இங்கிலாந்து விஜயமாக வியாழக்கிழமை (23) லண்டன் சென்றடைந்துள்ளார். லண்டன் சென்றடைந்த மோடியை, விமான நிலையத்தில் இந்தோ-பசுபிக் பகுதிக்குப் பொறுப்பான இங்கிலாந்து வெளிவிவகார அமைச்சர் கேத்தரின் வெஸ்ட், புது டெல்லிக்கான இங்கிலாந்தின் உயர் ஸ்தானிகர் லிண்டி கேமரூன் உள்ளிட்டோர் வரவேற்றனர். தனது வருகையை அறிவித்த பிரதமர் மோடி, இந்த பயணம் இந்தியாவிற்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான பொருளாதார கூட்டாண்மையை மேம்படுத்தும் என்று கூறினார். இந்தப் பயணத்தில் மோடி, இங்கிலாந்துடன் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடவுள்ளார். மேலும், இங்கில…
-
- 0 replies
- 73 views
-
-
பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளை கடுமையாக சாடிப் பேசிய பிரதமர் மோடி! இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தனது சீனப் பயணத்தின் மூன்றாவது நாளான இன்று (01) தியான்ஜினில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார். உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி தனது உரையைப் பயன்படுத்தி பயங்கரவாதம் குறித்து ஒரு கூர்மையான செய்தியை வழங்கினார். அதில் பயங்கரவாத அமைப்புகளுக்கு “சில நாடுகள்” வழங்கும் வெளிப்படையான ஆதரவை இனியும் பொறுத்துக்கொள்ள முடியுமா என்றும் கேள்வி எழுப்பினார். சீனாவின் தியான்ஜினில் நடைபெறும் 25 ஆவது SCO உச்சி மாநாட்டில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கலந்து கொண்டார். இதன்போது தனது உரையினை உறுதியாக வெளிப்படுத்திய பிரதமர் மோடி, “ப…
-
- 0 replies
- 73 views
-
-
ராஜஸ்தானில் அரச தேர்வில் மோசடி: 415 பேருக்கு வாழ்நாள் தடை. ராஜஸ்தானில் அரச வேலைக்கான தேர்வுகளில் மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் பொது தேர்வு ஆணையம் (RPSC) அண்மையில் நடத்திய விசாரணையில், போலி ஊனமுற்ற சான்றிதழ்கள், போலி பட்டப்படிப்பு சான்றிதழ்கள் மற்றும் சந்தேகத்திற்கிடமான ஆவணங்களை பயன்படுத்தி தேர்வில் பங்கேற்ற 524 பேர் அடையாளம் காணப்பட்டனர். இதனையடுத்து 415 பேருக்கு வாழ்நாள் முழுவதும் அரசு தேர்வுகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், 109 பேருக்கு 1 முதல் 5 ஆண்டுகள் வரை தேர்வுகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தடை செய்யப்பட்டவர்களில் 514 பேர் ராஜஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்…
-
- 0 replies
- 72 views
-
-
‘EX - DOSTI – XVII’ முத்தரப்பு கடலோர காவல்படை கடற்படைப் பயிற்சி வெற்றிகரமாக நிறைவடைந்தது! 21 Jan, 2026 | 11:34 AM இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக, இலங்கை கடலோர காவல்படைத் துறை, இந்திய கடலோர காவல்படை மற்றும் மாலைத்தீவு தேசிய பாதுகாப்புப் படையின் பங்கேற்புடன், ஜனவரி 16 முதல் 19 வரை மாலைத்தீவில் நடைபெற்ற ‘EX – DOSTI - XVII’ முத்தரப்பு கடலோர காவல்படை கடற்படைப் பயிற்சி வெற்றிகரமாக நிறைவடைந்தது. இந்தியா, மாலைத்தீவு மற்றும் இலங்கை கடலோர காவல்படை உறுப்பினர்களிடையே ஒத்துழைப்பை வளர்த்து நட்பை மேலும் வலுப்படுத்துதல், பரஸ்பர செயல்பாட்டு திறன்களை மேம்படுத்துதல் மற்றும் இயங்குநிலையை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டு, ‘EX – DOSTI – XVII …
-
- 0 replies
- 71 views
- 1 follower
-
-
பாஜகவுக்கு கடந்த நிதியாண்டில் அதிக நன்கொடை வழங்கிய 5 தொழிலதிபர்கள் பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் ராகவேந்திர ராவ் மற்றும் ஜாஸ்மின் நிஹலானி பிபிசி செய்தியாளர்கள் 3 பிப்ரவரி 2026 உச்ச நீதிமன்றம் கடந்த 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தேர்தல் பத்திரத் திட்டத்தை நீக்கி உத்தரவிட்டது. இதன்பின், 2024-25 நிதியாண்டில் பாஜக சுமார் ரூ. 6,000 கோடி நன்கொடையை பெற்றுள்ளது. இதில் 3,689 கோடி ரூபாயை தேர்தல் அறக்கட்டளைகள் மூலம் பாஜக பெற்றது. இது, மொத்த நன்கொடையில் தோராயமாக 62%. இந்திய நிறுவன சட்டத்தின்கீழ் பதிவு பெற்ற எந்தவொரு நிறுவனமும் தேர்தல் அறக்கட்டளையை அமைக்க முடியும். இந்திய குடிமகன் எவரும் அல்லது இந்தியாவில் பதிவுபெற்ற எந்தவொரு நிறுவனமும் இந்து கூட்டுக் குடும்பம் (Hindu Undiv…
-
- 0 replies
- 71 views
- 1 follower
-
-
பட மூலாதாரம், Imran Qureshi கட்டுரை தகவல் இம்ரான் குரேஷி பிபிசி இந்திக்காக 23 நவம்பர் 2025, 06:41 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒரு வங்கியில் இருந்து இன்னொரு வங்கிக்கு பணத்தை எடுத்துச் செல்லும் வாகனத்தில் இருந்து, சினிமா பட பாணியில் 7.11 கோடி ரூபாய் பணத்தைக் கொள்ளையடித்ததாக சந்தேகிக்கப்பட்ட 7 பேரைப் பிடித்திருப்பதாக பெங்களூரு போலீஸார் தெரிவித்தனர். கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் 6.29 கோடி ரூபாயை மீட்டிருப்பதாகவும் காவல் துறையினர் தெரிவித்தனர். பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய பெங்களூரு காவல்துறை ஆணையர் சீமந்த் குமார் சிங், விசாரணை சரியான திசையில் இருப்பதாகக் கூறினார். மேலும், மீதமுள்ள தொகை மற்றும் இந்த குற்றத்தில் தொடர்புடையவர்கள் விரைவில் பிடிபடுவார்கள…
-
- 0 replies
- 70 views
- 1 follower
-
-
ராஜஸ்தானில் விபத்துக்குள்ளான இந்திய போர் விமானம்! ராஜஸ்தானின் சுரு மாவட்டத்தின் பானுடா கிராமத்திற்கு அருகே இன்று (09) பிற்பகல் ஜாகுவார் போர் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் இந்திய விமானப்படை (IAF) விமானி உட்பட இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். இது கடந்த ஐந்து மாதங்களில் இது போன்று பதிவான மூன்றாவது விபத்தாகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். முதற்கட்ட தகவல்களின்படி, விமானியின் உடலுடன், விமானத்தின் இடிபாடுகள் ஒரு வயலில் கண்டெடுக்கப்பட்டன. உடல் கடுமையாக சேதமடைந்த நிலையில் மீட்கப்பட்டது. விபத்தில் உயிரிழந்த விமானி மற்றும் மற்றொரு நபரின் அடையாளங்கள் இன்னும் இராணுவம் மற்றும் உள்ளூர் நிர்வாகத்தால் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. போர் விமானம் பயிற்சி…
-
- 0 replies
- 69 views
-