யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1761 topics in this forum
-
ஆஸ்லோ: நார்வே தமிழ் திரைப்பட விழா வரும் ஏப்ரல் மாதம் 5 நாட்கள் ஆஸ்லோ மற்றும் லோறன்ஸ்கூ நகரில் நடக்கிறது. சர்வதேச அளவில் நடக்கும் ஒரே தமிழ் திரைப்பட விழா இது. மூன்றாண்டுகளுக்கு முன் நார்வே வாழ் தமிழர் வசீகரன் சிவலிங்கம் இந்த விழாவை தொடங்கினார். சிறிய நிகழ்வாக தொடங்கிய இந்த விழா, இன்று சர்வதேச அளவில் தமிழ்ப் படங்களுக்கு அங்கீகாரம் பெற்றுத் தரும் மிக முக்கிய நிகழ்வாக மாறியிருக்கிறது. வசீகரனின் விஎன் மியூசிக் ட்ரீம்ஸ் நிறுவனம் மேலும் சிலருடன் சேர்ந்து இந்த விழாவை முன்னெடுக்கிறது. கடந்த ஆண்டு, 15 தமிழ் சினிமா இயக்குநர்களை நார்வே தலைநகர் ஆஸ்லோவுக்கு வரவழைத்து சிறப்பு செய்தது விழாக்குழு. பொதுவாக இம்மாதிரி விழாக்களில் நடிகர் நடிகைகளுக்கு மட்டுமே …
-
- 0 replies
- 429 views
-
-
-
சிறிலங்கா அரசின் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை கவனமாக ஆராய்ந்து வருவதாக ஐ.நா கூறியிருந்த போதும், கடந்த ஒரு வாரமாகியும் எந்தக் கருத்தையும் வெளியிடாமல் ஐ.நா மெளனமாக இருப்பதாக இன்னர்சிற்றி பிரஸ் சுட்டிக்காட்டியுள்ளது. இந்தநிலையில், நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் பொறுப்புக்கூறுவதற்கான ஏற்பாடுகள் இல்லை என்று விமர்சனம் செய்யும் அரசசார்பற்ற நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக சிறிலங்கா அரசாங்கம் எச்சரித்துள்ளது. சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் இந்த அறிவிப்புத் தொடர்பாகவும், நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பாக ஐ.நா எந்தக் கருத்தையும் வெளியிடாதிருப்பது குறித்தும் ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் மார்ட்டின் நெஸ்ர்க்கியிடம் இன்னர்சிற்றி பிரஸ் கேள்வி …
-
- 0 replies
- 420 views
-
-
சிறிலங்காவின் தென்மாகாணத்தில் உள்ள மித்தெனிய என்ற இடத்தில் இன்று அதிகாலை ஆயுதக்குழு ஒன்றுக்கும் சிறிலங்கா காவல்துறையினருக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சண்டையில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். மாத்தறை மாவட்டம் மித்தெனியப் பகுதியில் உள்ள ஜுலாப்பிட்டிய என்ற இடத்தில் ஆயுதக்குழுவொன்றின் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்த அந்த இடத்துக்கு சிறலங்கா காவல்துறையினர் அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சென்ற சிறிலங்கா காவல்துறையினருக்கும் ஆயுதக்குழுவினருக்கும் இடையில் இன்று அதிகாலை 3 மணியளவில் துப்பாக்கிச் சண்டை இடம்பெற்றது. இந்தச் சண்டையில் ஆயுதக்குழுவைச் சேர்ந்த இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து இரண்டு ரி-56 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள…
-
- 0 replies
- 394 views
-
-
நேபாளத்தில் இன்று காலை 6.50 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகி உள்ளது என்று சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. நேபாளத்தின் லொபுசே என்ற பகுதியின் வடகிழக்கில் 93 கி.மீ. தொலைவிலேயே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நேபாளம் மற்றும் சீனா எல்லையருகே சன்குவசாபா மற்றும் தேபிள்ஜங் என்ற பகுதிகளில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் பல பகுதிகளில் கட்டிடங்கள் குலுங்கியுள்ள நிலையில், இதனை தொடர்ந்து இந்தியாவின் புதுடில்லி, பீகார் போன்ற மாநிலங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. https://jettamil.com/powerful-earthquake-in-nepal
-
- 0 replies
- 388 views
-
-
இந்திய நாகப்பட்டிண மீனவர்கள் ஆறு பேர் கடந்த ஆறு நாட்களாக கடலில் தத்தளித்த நிலையில் இன்று அதிகாலை வடமராட்சி கிழக்கில் கரையொதுங்கியுள்ளார்கள். கடந்த ஆறு நாட்களுக்கு முன்னர் நாகப்பட்டிணத்தில் இருந்து அளடி 1054 ஆம் இலக்க றோலர் படகில் மீன்பிடிப்பதற்காக புறப்பட்ட இவர்கள் நடுக்கடலில் படகின் இயந்திரம் பழுதடைந்த நிலையில் தத்தளித்தனர். இன்று அதிகாலை கடல் நீரினால் இழுத்துவரப்பட்ட இவர்கள் வடமராட்சி ஆழியவளை கடற்பரப்பில் கரையொதுங்கியுள்ளார்கள். இதனைத் தொடர்ந்து கடற்கரையில் காவல் கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர் இவர்களை கைது செய்து மருதங்கேணிப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்கள். இவர்கள் வந்த றோலர் படகு தற்போது ஆழியவளை இராணுவத்தினரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது.
-
- 0 replies
- 355 views
-
-
பகுதி 1: ஏன் பயிற்சி விண்ணப்பம் அவசியம்? மாணவர்கள் தொழில்முறை வாழ்க்கையை தொடங்கும் முன்பாக சந்திக்கும் முதன்மை வாய்ப்புகளில் ஒன்று தான் "பயிற்சி" (Internship). இது ஒரு துறை சார்ந்த நிறுவனத்தில் நேரடி அனுபவத்தை பெறும் அரிய சந்தர்ப்பமாகும். ஒரு பயிற்சி வாய்ப்பு கிடைக்க, அதற்கேற்ப ஒரு உரிய விண்ணப்பம் (Internship Application Letter) எழுதப்பட வேண்டும். அந்த விண்ணப்பமே உங்கள் திறமைகள், இலக்குகள் மற்றும் ஆர்வங்களை வெளிப்படுத்தும் சாதனமாகும். ஒரு பயிற்சி விண்ணப்பம் எழுதுவதன் முக்கிய நோக்கங்கள்: தொழில்முறை நெறிமுறைகளை பின்பற்றுதல்: உங்கள் நெருக்கமான எழுத்து மற்றும் தொழில்முறை அணுகுமுறையை நிறுவனம் பார்க்க முடியும். உங்கள் தனித்துவத்தை வெளிக்காட்டுதல்: பலரும் விண்ணப்பிக்கும் சூழ்நில…
-
- 0 replies
- 272 views
-
-
சிறிலங்காவின் தென்மாகாணத்தில் உள்ள மித்தெனிய என்ற இடத்தில் இன்று அதிகாலை ஆயுதக்குழு ஒன்றுக்கும் சிறிலங்கா காவல்துறையினருக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சண்டையில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். மாத்தறை மாவட்டம் மித்தெனியப் பகுதியில் உள்ள ஜுலாப்பிட்டிய என்ற இடத்தில் ஆயுதக்குழுவொன்றின் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்த அந்த இடத்துக்கு சிறலங்கா காவல்துறையினர் அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சென்ற சிறிலங்கா காவல்துறையினருக்கும் ஆயுதக்குழுவினருக்கும் இடையில் இன்று அதிகாலை 3 மணியளவில் துப்பாக்கிச் சண்டை இடம்பெற்றது. இந்தச் சண்டையில் ஆயுதக்குழுவைச் சேர்ந்த இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து இரண்டு ரி-56 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள…
-
- 0 replies
- 269 views
-
-
வினோதன் படையணியின் முதற் தாக்குதல் தளபதி லெப்.கேணல் விஜயகாந் அண்ணன். 01.05.1996 ல் அவர் படையினரின் பதுங்கி தாக்குதலில் வீரச்சாவடைந்த பின்னர்தான் தாத்தா வினோதன் படையணி தளபதியாக நியமிக்கப்பட்டார். 1991ல் தலைவரின் பணிப்பிற்கமைய அவரின் பாதுகாப்பு பிரிவில் கடமையாற்றிய லெப் கேணல் ஜோய் (விசாலகன்) (இவரின் பெயரில்தான் விசாலகன் படையணி உருவாக்கப்பட்டது.) லெப்.கேணல் விஜயகாந், மேஜர் வினோத் ஆகியோர் மட்டக்களப்பிற்கு அனுப்பப்பட்டனர். இவர்களின் வருகையின் பின்னர்தான் மட்டக்களப்பில் பரவலாக தாக்குதல்கள் இடம் பெற்றன. 1995 ல் சந்திவெளி ராணுவ முகாம், மற்றும் ரோந்து சென்ற படையினர் மீது விஜயகாந் அண்ணன் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது. அதில் ஏராளமான படையினர் கொல்லப்பட்டதுடன் பெரும் வெற்றித் தாக்குதலா…
-
- 0 replies
- 254 views
-
-
வணக்கம் அனைத்து உறவுகளுக்கும் ! மீண்டும் உங்களுடன் இணைவதில் மகிழ்ச்சி. பல வருடங்களுக்கு முன்னர் இதே பெயரில் யாழில் குப்பை மொக்கை பதிவுகள் போட்டுக்கொண்டிருந்தேன். ஆனால் நீண்ட காலமாக எந்த பதிவுகளும் இல்லாமல் களத்திற்கு வந்து வாசிப்பதோடு மட்டும் இருந்து விட்டேன். ஆனால் சமீப காலமாக மீண்டும் செயற்பட வேண்டும் என தோன்றியது. ஆனால் எனது கடவுச்சொல் மின் அந்ச்சல் முகவரி மற்ந்து விட்டது. ஆகவே பழைய பெயருக்கு பின் 25 இனை சேர்த்து இணைந்து விட்டேன். நன்றி
-
- 0 replies
- 205 views
-
-
௳ சிவமயம் வணக்கம் அன்பு தமிழ் மக்கள் !! தமிழனுக்கு வெற்றி ...அன்பு ௐ முருகா... மனிதனுக்கு விளக்கு...அன்பு திருவெந்தெழுத்து..புணிதமான நவீனமான அற்புதமான ரகசிமான நமசிவாயம் !!!!! வேற முருகனுக்கும் ருத்திரனுக்கும் வாற ௫ தான் அஞ்சுக்கு எண் குறியீடு ஆகும். சுகமா எண்ணும் எழுத்தும் ஒன்றாகும். அதுவில் நம் தமிழ் எழுத்தள் குறியீடு ஆகும். சிவ சிவ ஹர ஹர ௐ வீரவேல் ௐ முருகவேல் திருவைந்தெழுத்து நமசிவாயம் வாழ்க.
-
- 2 replies
- 109 views
-