யாழ் முரசம்
கள விதிமுறைகள் | அறிவித்தல்கள் | உதவிக்குறிப்புகள்
யாழ் முரசம் பகுதி நிர்வாகத்தினரைச் சேர்ந்தவர்களுக்கானது. இப்பகுதியில் கள விதிமுறைகள், அறிவித்தல்கள், உதவிக்குறிப்புகள் போன்றன நிர்வாகத்தினரால் இணைக்கப்படும்..
80 topics in this forum
-
வணக்கம், நேற்று முதல் இணைய வழங்கி மாற்றத்தையும், அத்துடன் கள மாற்றத்தினையும் மேற்கொண்டிருந்தோம். வழமைபோலவே எதிர்பார்ப்பதை விட வேறு வேறு பிரச்சனைகள் என்று நினைத்ததை விட அதிக நேரம் செலவழிக்க வேண்டி வந்து விட்டது. தற்போது கருத்துக்களத்தினை இயங்கு நிலைக்கு கொண்டு வந்தாலும் சில செயற்பாடுகள் இன்னும் முழுமையாக்கப்படவில்லை. - converter இன்னும் இணைக்கப்படவில்லை - திண்ணைப் பகுதி செயலிழந்து உள்ளது - இணைப்புகள் சரியாக இல்லை - முதற்பக்கத்தில் விடயங்கள் காண்பிக்கவில்லை ... இவ்வாறு பல பிரச்சனைகள் உள்ளன. எம்மால் முடிந்தவரை மிக விரைவில் இவைகளைத் தீர்க்க முயற்சிக்கின்றோம்.
-
- 1 reply
- 1.7k views
-
-
மண்ணினதும் மக்களதும் விடிவிற்காய் தம்முயிர் ஈய்ந்தவர் நினைவுவோடு இன்று (30.03.2023) யாழ் இணையம் 24 அகவைகளைப் பூர்த்திசெய்து தனது 25 ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கின்றது. உலகத் தமிழரை இணையவெளியில் ஒன்றிணைத்து, தமிழ்மொழியில் தனித்துவமாகக் கருத்தாடுவதை ஓர் உன்னதமான நோக்காகக் கொண்டு, 1999ம் ஆண்டு மார்ச் மாதம் 30ம் நாள் மென்பொருள் சிற்பி மோகன் அவர்களால் தொடங்கப்பட்ட யாழ் இணையம், பல்வேறு சவால்களையும் தாண்டி, தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகமான மாற்றங்களுக்கும், சமூக வலைத்தளங்களின் துரித வளர்ச்சிக்கும் ஈடுகொடுத்து இன்றும் தன்நிகரற்ற தமிழ் இணையத்தளமாய் இருக்கின்றது. முதலாவது கருத்துக்களம் பாமினி எழுத்துருவில் அமைந்திருந்தது. அதனால் பாமினி எழுத்துருவில் பரிச்சயமானவர்கள் ம…
-
- 0 replies
- 1.1k views
-
-
யாழ் கள உறவுகள் அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்! யாழ் இணையம் வேகமான தொழில்நுட்ப வளர்ச்சியின் மாற்றங்களுக்கு ஈடுகொடுத்தும், தமிழ் சமூகத்தின் தேவைகளுக்கும், சிந்தனைமுறைகளுக்கும் ஏற்ப தன்னை காலத்துக்குக் காலம் புதுப்பித்துக்கொண்டும், பல சவால்களையும் தாண்டியும், தமிழிலே கருத்தாடல்கள் புரியும் தனித்துவமான இணையத்தளமாக விளங்குகின்றது. தமிழ்த் தேசியத்துக்கும், தாயக மக்களுக்கும் தொடர்ந்தும் துணைநிற்பதோடு, அவைசார்ந்த ஆக்கபூர்வமான கருத்தாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வரவேற்கிறது. தமிழ் மக்கள் சகல உரிமைகளுடனும், சுயகெளரவத்துடனும் வாழ தனிநாடே தீர்வாகும் என்ற கொள்கையுடன் மக்களின் விடுதலைக்காகப் போராடி விதையான மாவீரர்க்கும், மக்களுக்கும் தனது வீரவணக்கத்தை த…
-
- 0 replies
- 1.1k views
-
-
இணைய வழங்கியினை மாற்ற வேண்டியிருப்பதால் வரும் 15ம் திகதியில் இருந்து 17ம் திகதி வரையான காலப் பகுதியில் யாழ் இணைய சேவைகளில் தடங்கள் ஏற்படுவதற்கான சந்தர்ப்பங்கள் அதிகம் உள்ளது. தடங்கலுக்கான நேரம் சில மணி நேரங்களாகத் தான் இருக்கும் எனக் கணிப்பிட்டாலும் எதிர்பாராது வரும் சிக்கல்களைப் பொறுத்து தடங்கலுக்கான காலப்பகுதி நீளலாம் என்பதால் 15ம் திகதியில் இருந்து 17ம் திகதி வரை என்று காலம் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
-
- 5 replies
- 1.3k views
-
-