Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. மிகப்பெரும் உலக நாடுகளின் பிளாஸ்டிக் கழிவைக்கொட்டும் குப்பைத்தொட்டி மலேசியா! அமெரிக்கா, பிரித்தானியா, தென்கொரியா, ஸ்பெயின் ஆகிய நாடுகளிலிருந்து பிளாஸ்டிக் கழிவுகள், கப்பலின் மூலம் கொண்டுவரப்பட்டு மலேசியாவின் மிகப்பெரிய துறைமுகத்தைக் கொண்ட கோலாலம்பூரிற்கு சில கிலோமீற்றர் தூரத்திலுள்ள புலவ் இன்தாஹ் தீவில் கொட்டப்படுகின்றன. மலேசியாவிற்குச் சொந்தமான குறித்த தீவானது, 12 இற்கும் அதிகமான மீள்உற்பத்தி தொழிற்சாலைகளைக் கொண்டிருப்பினும் கொட்டப்படும் பிளாஸ்டிக் மழைமேடுகள் குறையாமலுள்ளன. புலவ் இன்தாஹ் என்பதன் பொருள் அழகான தீவாகும். எனினும், குறித்த பிளாஸ்திக் கழிவுகளினால் மிகவும் அருவருப்பான மாசுபடும் தீவாக காணப்படுவது மிகவும் வருத்தத்திற்குரிய விடயமாகும். கடந்த சில…

  2. முகப்புத்தக நிறுவனத்துக்கு இங்கிலாந்து தகவல் ஆணையகம் 5 லட்சம் பவுண்ஸ் அபராதம் October 26, 2018 1 Min Read வாடிக்கையாளர்களின் தகவல்களை திருடிய விவகாரம் தொடர்பாக, முகப்புத்தக நிறுவனத்துக்கு இங்கிலாந்து தகவல் ஆணையகம் ; 5 லட்சம் பவுண்ஸ்களை அபராதம் விதித்துள்ளது. கடந்த 2007-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் பயனாளர்களின் தகவல்களை அவர்களின் அனுமதியின்றி பயன்படுத்தியதாக முகப்புத்தக நிறுவனத்தின் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. அமெரிக்காவை சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா என்னும் தேர்தல் பிரசார நிறுவனம் முகப்புத்தக பயனாளர்களின் தகவல்களை தேர்தல் பிரசாரத்தில் பயன்படுத்தியதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பாக முகப்புத்…

  3. பாலியல் குற்றச்சாட்டு – 13 சிரேஸ்ட மேலாளர்கள் உள்ளிட்ட 48 பேரை கூகுள் நிறுவனம் நீக்கியது.. October 26, 2018 1 Min Read கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக 13 சிரேஸ்ட மேலாளர்கள் உள்பட 48 பேரை கூகுள் நிறுவனம் நீக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியான சுந்தர் பிச்சை அந்நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு எழுதிய கடிதத்தில், ஊழியர்களின் பொருத்தமற்ற நடத்தை குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக நிறுவனம் கடும் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளார். தவறான நடத்தை தொடர்பான குற்றச்சாட்டுகளை சந்தித்தபோதிலும், பணிநீக்கத்துக்கு பின்னர் கூகுள் நிறுவனத்தில் இருந்து 90 மில்லியன் டொலர்களை க…

  4. கருங்கடலில் கண்டுபிடிக்கப்பட்ட 2,400 ஆண்டுகள் பழைமையான கப்பல்! வரலாறு அறிந்த டைட்டானிக் கப்பலைத்தான் அனைவரும் மனதில் நினைவு வைத்திருக்கிறார்கள். ஆனால் அதையும் தாண்டி வரலாற்றில் பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. பழங்காலத்தில் இடம்பெற்ற பல போர் சூழ்நிலை மற்றும் கடல்சார் விபத்துக்கள் காரணமாக இவ்வாறு பெறுமதி வாய்ந்த பல கப்பல்கள் மூழ்கி கடலுக்கடியில் மறைந்திருக்கின்றன. அந்தவகையில், பல்கேரியா நாட்டின் கடல் எல்லைக்குள் கருங்கடல் பகுதியில் சுமார் 2400 ஆண்டுகள் பழைமை வாய்ந்த கிரேக்க நாட்டை சேர்ந்த வர்த்தகக் கப்பல் ஒன்று கடலுக்கு அடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய மற்றும் பல்கேரிய விஞ்ஞானிகளின் குழு ஒன்று இந்த கப்பலை கண்டுபிடித்துள்ளது. இது பல்கேரியாவின…

  5. ரோஹிங்யா இனப்படுகொலை: ஐ.நா. பேச்சுவார்த்தையை தடுக்கும் முயற்சியில் சீனா தோல்வி! ரோஹிங்யா முஸ்லிம்களின் படுகொலை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு மாநாட்டில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளை தடுக்கும் செயன்முறையில் சீனா தோல்விகண்டுள்ளது. மியன்மார் இராணுவ வீரர்களைக் கொண்டு ரோஹிங்ய முஸ்லிம்களைக் கொன்று குவித்த குற்றத்தை விசாரணை செய்வதற்காக 15 பேர் கொண்ட குழுவை அமைக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் கலந்துரையாடலொன்று நேற்று (புதன்கிழமை) இடம்பெற்றுள்ளது. மியன்மாரின் விவகாரத்திலுள்ள உண்மைகளை வெளிக்கொண்டுவரும் நிகழ்ச்சித் திட்டத்தில் ஐக்கிய நாடுகள் சபையினால் தெரிவுசெய்யப்பட்ட தலைவர் மர்சூக்கி தருஸ்மன் தலைமையில் குறித்த கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. …

  6. ரொறன்ரோ நகரசபையின் மேயராக மீண்டும் ஜோன் ரோறி தேர்வு ரொறன்ரோ நகரசபையின் மேயராக மீண்டும் ஜோன் ரோறி தெரிவாகியுள்ளார். மாநகருக்கான புதிய ஆட்சிச் சபையினை தீர்மானிக்கும் வாக்குப் பதிவுகள் நேற்று (திங்கய்கிழமை) ஆரம்பமாகியது. இந்த தேர்தலுக்கான முன்னணி வேட்பாளர்களான ஜோன் ரோறி மற்றும் முன்னாள் நகர திட்டமிடல் அதிகாரி ஜெனிபர் கீஸ்மட் ஆகியோர் மேயர் தேர்தலில் போட்டியிட்டனர். இந்நிலையில் நேற்று இடம்பெற்ற வாக்கு பதிவில் ஜோன் ரோறி 63 விகித வாக்குகளையும், ஜெனிபர் கீஸ்மட் 23 சதவிகித வாக்குகளையும் பெற்றனர். அந்தவகையில் ரொறன்ரோ நகரசபையின் மேயராக 2 ஆவது தடவையாகவும் தொடர்ந்தும் மக்கள் ஆதரவுடன் ஜோன் ரோறி வெற்றி பெற்றுள்ளார். http://athavannews.com/category/கனடா…

  7. இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர வாட்ஸ்அப் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் பகிர்க இதை பகிர இந்த வெளிய…

  8. இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமை Getty Images Image caption முதல் இந்திய-அமெரிக்கனான மிஸ் அமெரிக்க பட்டம் பெற்ற நினா டவுலரி தெலுகு மொழி பேசக்கூடியவர் கூற்று: அமெரிக்காவில் வேகமாக வளர்ந்து வரும் மொழி தெலுங்கு. உண்மை: ஆம். சில வல்லுநர்களின் ஆய்வுப்படி இது உண்மைதான். தென் இந்திய மொழியான தெலுங்கு பேசும் மக்களின் எண்ணிக்கை கடந்த ஏழு ஆண்டுகளில் 86 சதவீதம் உயர்ந்துள்ளது. எனினும், ஆங்கிலத்தைத் தவிர பரவலாக பேசப்படும் மொழிகளில் முதல் 20 இடங்களில் தெலுங்கு இடம் பெறவில்லை. …

  9. 55 கிமீ நீளம், 4 லட்சம் டன் இரும்பு.. கடல் மீது கட்டப்பட்ட உலகின் நீளமான பாலம்.. சீனா சாதனை! உலகின் மிக நீளமான பாலம் சீனாவில் இந்த வாரம் திறக்கப்பட உள்ளது. சீனா தற்போது உலகின் மிக வேகமாக வளரும் நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. இந்த நிலையில் அந்த நாட்டின் வளர்ச்சிக்கு கட்டுமான துறை மிக முக்கியமான காரணமாக உருவெடுத்து இருக்கிறது. அதன் ஒரு கட்டமாக சீனாவில் உலகிலேயே நீளமான பாலம் கட்டப்பட்டு இருக்கிறது. இந்த பாலம் கடல் மீது கட்டப்பட்டு இருப்பதுதான் வியக்கத்தக்க விஷயம் ஆகும்.சீனாவின் தென்புறத்தில் உள்ள மாக்கா தீவையும், ஹாங்காங்கையும், சீனாவில் உள்ள சுஹாய் நகரத்தையும் இணையும் வகையில் இந்த பாலம் கட்டுப்பட்டு இருக்கிறது. உலகிலேயே அதிக போக்குவரத்து நெரிச…

    • 5 replies
    • 1.7k views
  10. மருத்துவ வசதிகளுக்காக 11 குழந்தைகள் நவ்ரூ தீவு தடுப்பு முகாமிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு மாற்றம் October 23, 2018 நவ்ரூ தீவில் உள்ள தடுப்பு காவல் முகாமிலிருந்து 11 குழந்தைகள் மருத்துவ வசதிகள் பெறுவதற்காக அவுஸ்திரேலியாவுக்கு மாற்றப்பட்டுள்ளார்கள். அவுஸ்திரேலியாவில் புகலிடம் தேடும் ஆயிரகணக்கான மக்கள் நரூ தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அந்த தீவில் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு மோசம் அடைந்துள்ளதாக தொடர்ந்து மனித உரிமை செயற்பாட்டாளர்கள் குற்றம் சுமத்தி வருகிறார்கள். குறிப்பாக முகாம்களில் உள்ள குழந்தைகள் மோசமான மனசிதைவுக்கு உள்ளாகி வருவதாக கூறப்படுகிறது.இந்தநிலையில் நவ்ரூ தீவில் உள்ள தடுப்பு காவல் முகாமிலிருந்து 11 குழந்தைகள் மருத்துவ வசதிகள் பெறுவதற்காக அ…

  11. சவுதி இளவரசருடன் அமெரிக்க சிரேஷ்ட அதிகாரி சந்திப்பு! சவுதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசன் முகம்மது பின் சல்மானை அமெரிக்காவின் திறைசேரி செயலாளர் ஸ்டீவன் மெனூசிகன் சவுதியின் தலைநகர் றியாதில் சந்தித்துள்ளார். சவுதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியின் கொலை விவகாரம் தொடர்பில் சவுதி அரேபியா மீது உலக நாடுகள் குற்றச்சாட்டுக்களை குவித்து கொண்டிருக்கும் தருணத்தில், நேற்று (திங்கட்கிழமை) அமெரிக்க திறைசேரி செயலாளர் ஸ்டீவன் மெனூசிகன், சவுதி இளவரசரைச் சந்தித்து கலந்துரையாடலொன்றை மேற்கொண்டுள்ளார். கடந்த இரண்டாம் திகதி துருக்கியின் இஸ்தான்புலிலுள்ள சவுதி தூதரகத்திற்கு சென்ற ஜமால் கஷோக்கி, அலுவலகத்திற்குள் வைத்து கொல்லப்பட்டதாக சவுதி அரேபியா மீது துருக்கி குற்றஞ் சுமத்தியிருந்தது…

  12. சவுதி அரேபியாவின் முதலீட்டு மாநாட்டை புறக்கணிப்போர் பட்டியல் வெளியானது! ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியின் படுகொலையில் சவுதி அரேபியாவின் ஈடுபாட்டைத் தொடர்ந்து அங்கு இடம்பெறவுள்ள மிகப் பிரமாண்டமான முதலீட்டு மாநாட்டில் கலந்துகொள்வத்திலிருந்து வணிக உலகின் மிக சக்திவாய்ந்த முதலாளிகள் மற்றும் பல நாடுகளின் அரச அதிகாரிகள் விலகியுள்ளனர். ஆனாலும் ரியாத்தில் நடைபெறவுள்ள இம்மூன்று நாள் நிகழ்வானது நூற்றுக்கும் மேற்பட்ட பேச்சாளர்கள் மற்றும் மதிப்பீட்டாளர்களின் வருகை எதிர்பார்ப்புடன் முன்னோக்கி செல்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் செவ்வாயன்று ஆரம்பிக்கவுள்ள இம்மாநாட்டைப் புறக்கணிப்போரின் பட்டியலை கீழே காணலாம். சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டின் லகார்ட் (Christ…

  13. மத்திய அமெரிக்க நாடுகளிலிருந்து அமெரிக்க நாட்டிற்குள் நுழைய ஆயிரக்கணக்கான மக்கள் ஊர்வலமாக சென்று கொண்டிருக்கின்றனர். எல்லை நகரமான சுயோடாட் இடால்கோவிலிருந்து வடக்கு நோக்கி அந்த மக்கள் நடந்து சென்று கொண்டிருக்கின்றனர். எங்கும் வறுமை, வன்முறை முன்னதாக இவர்களை மெக்சிகோ அதிகாரிகள் மெக்சிகோ, குவாட்டமாலா இடையே உள்ள எல்லை பாலம் அருகே தடுத்து நிறுத்த முயற்சித்தனர். ஆனால் சிலர் சட்டத்திற்கு புறம்பாக படகுகள் மூலம் தப்பித்து தங்கள் ஊர்வலத்தை முன்னெடுத்தனர். படத்தின் காப்புரிமை Reuters இவர்களில் பெரும்பாலானவர்கள் மத்திய அமெரிக்க நாடான ஹோண்டியுரஸ் நாட்டை சேர்ந்தவர்கள். ஏன் அவர்கள் அமெரிக்காவுக்குள் செல்ல முயல்கிறார்கள்? வறுமை, வன்முறை காரணமாக, அவற்ற…

  14. பெல்ஜியத்தில் இந்திய உணவை தேடிச் சென்ற துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு. 2 வது ஆசிய – ஐரோப்பிய நாடுகளின் மாநாடு பெல்ஜியத்தின் தலைநகர் பிரஸ்ஸல்ஸ் நகரில் இடம்பெற்று வருகின்றது. இதில் கலந்து கொள்வதற்காக 3 நாள் விஜயமாக இந்திய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ஐரோப்பிய நாட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அவர் நேற்று (சனிக்கிழமை) தென் இந்திய பிரபல உணவகமான சரவண பவனில் இரவு உணவு உட்கொண்டார். அத்துடன், பெல்ஜியத்தின் இந்திய தூதர் காயத்திரி இசார் குமார் உட்பட இந்திய பிரதிநிதிகளை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சந்தித்தார். இதுகுறித்து துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தனது டிவிட்டர் பதிவில், “பிரஸ்ஸல்ஸில், பெல்ஜியத்தின் இந்திய தூதர் காயத்திரி இசார் குமார் உட்பட இந்திய பிரதிநிதிகளுட…

  15. பிரெக்சிற் புதிய வாக்கெடுப்பு: லண்டனில் வரலாறு காணாத பேரணி! பிரெக்சிற் தொடர்பான புதிய வாக்கெடுப்பை வலியுறுத்தி லண்டனில் மிகவும் பிரம்மாண்டமான ஆர்ப்பாட்ட பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது. லண்டனிலுள்ள நாடாளுமன்ற சதுக்கத்தில் இந்த ஆர்ப்பாட்ட பேரணி நேற்று (சனிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. பிரித்தானிய வரலாற்றில் பதியப்படும் அளவிற்கு சுமார் 700,000இற்கும் அதிகமான மக்கள் அலையென திரண்டு இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஏராளமான நாடாளுமன்ற உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் இந்த ஆர்ப்பாட்ட பேரணி முன்னெடுக்கப்பட்டது. லண்டன் மேயர் சாதிக்கான் இந்த ஆர்ப்பாட்ட பேரணியை ஆரம்பித்து வைத்து உரையாற்றியதையடுத்து, முக்கிய கட்சிகளின் உறுப்பினர்களும் பங்கேற்றனர். பொ…

  16. ரஷ்யாவுடனான அணுவாயுத ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேற்றம்! பனிப்போர் காலத்தில் ரஷ்யாவுடன் அமெரிக்கா மேற்கொண்ட அணுவாயு வர்த்தக ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்காவை விலக்கிக்கொள்ளப் போவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஊடகங்களுடனான சந்திப்பில் நேற்று (சனிக்கிழமை) கருத்துத் தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கடந்த 1987ஆம் ஆண்டு இடைப்பட்ட தூரத்திற்குள் செயற்படும் அணுவாயுதங்களுக்கான வர்த்தக ஒப்பந்தத்தை அமெரிக்கா-ரஷ்யா கைச்சாத்திட்டதற்கு இணங்க, ரஷ்யா முறையாக செயற்படவில்லையென ட்ரம்ப் மேலும் குறிப்பிட்டுள்ளார். குறித்த ஒப்பந்தமானது, 500 தொடக்கம் 5,500 வரையான கிலோ மீற்றர் பரப்பிற்குள் செயற்படும் அணுவாயுதங்க…

  17. ஆப்கானிஸ்தானில் இன்று பாராளுமன்ற தேர்தல் சார்ந்த வன்முறைக்கு 13 பேர் பலி ஆப்கானிஸ்தான் பாராளுமன்றத்துக்கு இன்று நடைபெற்ற தேர்தலில் பல்வேறு பகுதிகளில் வாக்குச்சாவடிகளை குறிவைத்து தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்களில் 13-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். #Afghanistanpoll காபுல்: 249 உறுப்பினர்களை கொண்ட ஆப்கானிஸ்தான் பாராளுமன்றத்துக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. 2500-க்கும் அதிகமான வேட்பாளர்கள் மோதும் இந்த தேர்தலில் சுமார் 89 லட்சம் வாக்களிக்கவுள்ளனர். சுமார் ஐயாயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என அறிவுத்துள்ள…

    • 0 replies
    • 272 views
  18. உலகமயமாக்கலின் விளைவே கிரைமியா துப்பாக்கிச்சூடு: ஜனாதிபதி புட்டின் உலகமயமாக்கலின் விளைவே கிரைமிய கல்லூரி தாக்குதலென ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையங்களால் ஏற்படும் சமூக மாற்றங்கள் தொடர்பாக அன்றாடம் தெரியவருகின்றதென குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி புட்டின், குறிப்பாக அமெரிக்காவில் பாடசாலைகளிலேயே இவ்வாறான துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் ஆரம்பித்து விடுகின்றன என சுட்டிக்காட்டினார். கிரைமியாவிலுள்ள கல்லூரியொன்றில் நேற்று முன்தினம் (புதன்கிழமை) நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில், துப்பாக்கிதாரியான கல்லூரி மாணவன் உள்ளடங்களாக 21 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் 15 மாணவர்களும் 5 ஆசிரியர்களும் உள்ளட…

    • 0 replies
    • 314 views
  19. 15 பெண்களை பாலியல் பலாத்காரப்படுத்திய வழக்கில் 20 பேருக்குத் தண்டனை 2004 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் Huddersfield இல் 15 இளம் பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட இருபது பேருக்கு இன்று லீட்ஸ் நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது. இக்குழுவின் தலைவரான 35 வயதான அமீர் சிங் தலிவாலுக்கு 18 ஆண்டுகளும் ஏனையவர்களுக்கு 5 முதல் 18 ஆண்டுகள் வரையிலும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 11 முதல் 17 வயதிற்குட்பட்ட இளம்பெண்கள் மீது பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட இவர்களின் செயல் வெட்கத்துக்குரியது மனிதாபிமானமற்றது எனவும் தீர்ப்பளித்த நீதிபதி தெரிவித்தார். http://athavannews.com/15-பெண்களை-பாலியல்-பலாத்கா/

  20. பாரிய இஸ்ரேலை நிறுவும் நோக்கில் டிரம்ப் நிர்வாகம் செயல்படுவதாக குற்றச்சாட்டு : October 19, 2018 1 Min Read அமெரிக்காவுடனான பலஸ்தீன விவகாரங்களை நிர்வாகம் செய்து வரும், ஜெருசலேமில் உள்ள அமெரிக்கத் துணைத் தூதரகத்தை, தங்கள் புதிய தூதரகத்துடன் இணைப்பதற்கு அமெரிக்கா முடிவு செய்துள்ளது என அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மைக் பாம்பயோ தெரிவித்துள்ளார். இந்த முடிவு நிர்வாகக் காரணங்களுக்கு மட்டுமே எடுக்கப்பட்டது எனவும் ஜெருசலேம், மேற்குக் கரை அல்லது காஸா மீதான தங்கள் கொள்கையில் எவ்விதமான மாற்றத்தையும் இது குறிக்காது என்றும் பாம்பயோ தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் இந்த நகர்வுக்கு பலஸ்;தீனர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இரு நாட்டு கொள்கை …

  21. குயின்ஸ்லேன்டில், கருக்கலைப்பு சட்டபூர்வமாக்கப்பட்டுள்ளது! அவுஸ்ரேலியாவில் கருக்கலைப்பை சட்டபூர்வமாக்கும் ஐந்தாவது மாநிலமாக குயின்ஸ்லேன்ட் அமைந்துள்ளது. அவுஸ்ரேலியாவின் பிரபல மாநிலமாக குயின்ஸ்லேன்டில் நேற்று (புதன்கிழமை) கருக்கலைப்பானது சட்டபூர்வமாக்கப்பட்டுள்ளது. 19 ஆம் நூற்றாண்டிலிருந்து உறுதியான கருக்கலைப்புத் தடைச்சட்டத்தைக் கொண்டிருந்த குயின்ஸ்லேன்ட் மாநிலம், பெண்களின் உரிமைகள் தலைதூக்கியமையை அடுத்து நேற்று குறித்த சட்டம் திருத்தப்பட்டுள்ளது. எனினும், பொருளாதார, சமூக கட்டமைப்புப் பிரச்சினைகளுக்காக கடந்த 1960 கள், 1970 களில் பொதுச்சட்டத்தை பிரதானமாகக் கொண்டு ஆட்சியை முன்னெடுத்த இடைப்பட்ட காலப்பகுதிக்குள் மருத்து காரணிகளின் உதவியுடன் கருக்கலைப்பு சட்…

  22. மயிரிழையில் உயிர் தப்பினார் ஆப்கானிற்கான அமெரிக்க தளபதி ஆப்கானிஸ்தானிலஇடம்பெற்ற தாக்குதலொன்றின் போது ஆப்கானிஸ்தானிற்கான அமெரிக்க படையினரின் தளபதி ஜெனரல் ஸ்கொட் மில்லர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார். கந்தகாரில் இடம்பெற்ற தாக்குதலில் ஆப்கானிஸ்தானின் முக்கிய படையதிகாரிகள் பலர் கொல்லபட்டுள்ளனர். கந்தகாரில் இடம்பெற்ற முக்கிய கூட்டத்தை முடித்துக்கொண்டு வெளியேறிக்கொண்டிருந்தவர்கள் மீது அப்பகுதி ஆளுநரின் மெய்ப்பாதுகாவலர் ஒருவர் துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் போது ஆப்கானிஸ்தானின் புலனாய்வு பிரிவின் தலைவரும் தலைமை பொலிஸ் அதிகாரியும் கொல்லப்பட்டுள்ளனர். அமெரிக்க படைகளின் தளபதி ஸ்கொட் மில்லர் காயங்கள் எதுவுமின்றி உயி…

  23. இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமை Getty Images கேரளாவில் சபரிமலையை ஒட்டி உள்ள பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு சாலைகள் வெறிச்சோடி இருப்பதாக களத்தில் இருக்கும் பிபிசி தமிழ் செய்தியாளர் பிரமிளா கிருஷ்ணன் தெரிவிக்கிறார். சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கப்படுவதற்கு எதிராக இந்து அமைப்புகள் கடையடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தன. சன்னிதானம், நிலக்கல், இலவுங்கல் மற்றும் பம்பை ஆகிய பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது. இந்து அமைப்புகளின் கடை அடைப்பு அழைப்புக…

  24. பெண்களிடம் மன்னிப்புக் கோரினார் நோர்வே பிரதமர்… October 18, 2018 இரண்டாம் உலகப் போரின் போது நாஜி ஜெர்மனின் படையெடுப்புக்கு நோர்வே உள்ளானபோது, ஜெர்மன் ராணுவத்தினருடன் உறவில் இருந்த தங்கள் நாட்டுப் பெண்களை (நோர்வே பெண்களை), பழிவாங்கும் முகமாக மோசமாக நடத்தியதற்காக நோர்வே பிரதமர் எர்னா சோல்பர்க் அதிகாரபூர்வமாக மன்னிப்பு கோரியுள்ளார். ஏப்ரல் 1940இல் நாஜி ஜெர்மன், நோர்வே மீது படையெடுத்த போது ஜெர்மன் ராணுவத்தினருடன் சுமார் 50,000 நோர்வே பெண்கள் நெருக்கமான உறவில் இருந்ததாக அப்போது கருதப்பட்ட நிலையில் அவர்களில் பல பெண்கள், அவர்களது குழந்தைகளுடன் நோர்வேயை விட்டு வெளியேற்றப்பட்டனர். ஜெர்மன் ராணுவத்தினருடன் நெருக்கமாக இருந்த பெண்களுக்கு ஏறத்தாள 10…

  25. கிரிமியாவின் தொழில்நுட்ப கல்லூரியில் பயங்கரவாத தாக்குதல்- பத்திற்கும் மேற்பட்டவர்கள் பலி உக்ரைனிடமிருந்து ரஸ்யா கைப்பற்றிய கிரிமியாவில் கல்லூரியொன்றில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 10ற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கேர்ச் நகரில் உள்ள தொழில்நுட்ப கல்லூரியில் இனந்தெரியாத பொருள் வெடித்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரஸ்ய பாதுகாப்பு படையதிகாரியொருவர் இது பயங்கரவாத செயல் என குறிப்பிட்டுள்ளார். வெடிபொருளொன்றே வெடித்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டவர்கள் மாணவர்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன இதேவேளை உள்ளுர் தொலைக்காட்சியொன்று ஆயுதம் தாங்கிய நபர்கள் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர், கல்லூரியில் பல உடல்க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.