Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. நிபந்தனைகளை நிறைவேற்ற கத்தாருக்கு மேலும் 48 மணிநேர அவகாசம் செளதி அரேபியா மற்றும் மூன்று பிற அரபு நாடுகள், தாங்கள் விதித்த கோரிக்கைகளை நிறைவேற்ற கத்தாருக்கு மேலும் இரண்டு நாட்கள்அவகாசம் அளித்துள்ளனர். படத்தின் காப்புரிமைREUTERS இரண்டு நாட்களுக்குள் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால் கத்தார் கூடுதல் தடைகளை எதிர்கொள்ள வேண்டும். ஞாயிற்றுக்கிழமைக்குள் அல் ஜசீரா தொலைக்காட்சியை மூடுவது உள்ளிட்ட 13 கோரிக்கைகளை கத்தார் நிறைவேற்ற வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. திங்களன்று, தனது அதிகாரப்பூர்வ பதிலை, கடிதமாக குவைத்திற்கு வழங்குவதாக வளைகுடா நாடான கத்தார் தெரிவித்திருந்தது. கத்தார் தீவிரவாதத்திற்கு நிதி ஆத…

  2. 6 வெளி­நாட்டு பண­யக்­கை­திகள் தோன்றும் காணொளிக் காட்சி மாலி தீவி­ர­வா­திகள் வெளி­யீடு மாலியை அடிப்­ப­டை­யாகக் கொண்டு செயற்­ப டும் அல் கொய்தா தீவி­ர­ வா­திகள் தம்மால் பண­யக்­கை­தி­க­ளாக பிடித்து வைக்­ கப்­பட்­டுள்ள 6 வெளி­நாட்­ட­வர்கள் தோன்றும் புதிய காணொளிக் காட்­சி­யொன்றை வெளியிட்­டுள்­ளனர். பிரான்ஸ் ஜனா­தி­பதி இம்­மா­னுவேல் மக்ரோன் அந்­நாட்­டுக்கு விஜயம் செய்­துள்­ள­தை­யொட்­டியே இந்தக் காணொளிக் காட்சி வெளி­யி­டப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது. மேற்­படி பண­யக்­கை­தி­களில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அரச சார்­பற்ற தொண்டு ஸ்தாப­னத்தின் பணி­யாளர், அவுஸ்­தி­ரே­லி­யாவைச் சேர்ந்த வயோ­திப சத்­தி­ர­சி­கிச்சை நிபுணர் ஒருவர…

  3. சீ.என்.என் ஊடகத்திற்கு எதிரான வகையில் அமெரிக்க ஜனாதிபதி வீடியோ வெளியிட்டுள்ளார் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் உலகின் முதனிலை ஊடகங்களில் ஒன்றான சீ.என்.என் ஊடகத்திற்கு எதிரான வகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனாலட் ரம்ப் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். சீ.என்.என். இலச்சினை பொறிக்கப்பட்ட ஓர் ரெஸ்லின் வீரரை, ட்ராம்ப் தாக்குவது போன்று வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. 2007ம் ஆண்டு ரெஸ்லிங் நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற வீடியோ காட்சி, தொகுக்கப்பட்டு இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி ட்ராம்பிற்கு ஆதரவான இணைய தரப்புக்களினால் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. சீ.என்.என். செய்தி சேவை பொய்யான ஓர் செய்தி சேவை என பல தடவைகள் நேரடியாகவே ட…

  4. வட அத்திலாந்திக் சமுத்திரத்திலுள்ள அபாயகரமான பெர்முடா முக்ககோணப் பிராந்தியத்தில் மர்மமான தீவொன்று புதிதாகத் தோன்றியுள்ளது. மேற்படி பெர்முடா முக்கோணப் பிராந்தியத்தில் பயணிக்கும் கப்பல்களும் விமானங்களும் மர்மமான முறையில் மாயமாகி வருவதால் அந்தப் பிராந்தியம் சாத்தானின முக்கோணம் என அழைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. அமெரிக்க வட கரோலினாவிலுள்ள கேப் பொயிண்ட்டுக்கு அப்பால் கடந்த ஏப்ரல் மாதம் தோன்றிய சிறிய மணல் மேடு தற்போது விரிவாக்கம் அடைந்து ஒரு தீவாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் ஷெல்லி தீவு என உள்ளூர்வாசிகளால் செல்லமாக அழைக்கப்படும் அந்தத் தீவை அண்மித்த கடலில் காணப்படும் அபாயகரமான திமிங்கிலங்கள் மற்றும் அந்தப் பிராந்தியத்தில் …

  5. பாரிஸில் மசூதிக்கு வெளியே வாகனம் ஓட்டி தாக்குதல் நடத்த முயன்றதாக ஒருவர் கைது பாரிஸ் நகரில் மசூதிக்கு வெளியே ஒரு கூட்டத்திற்குள் வாகனம் ஓட்டியதற்காக ஒரு நபரை போலீசார் கைது செய்தனர். படத்தின் காப்புரிமைREUTERS இந்த சம்பவம் உள்ளூர் நேரப்படி மாலை 6:30மணிக்கு(இந்திய, இலங்கை நேரப்படி இரவு 10 மணிக்கு) க்ரீட்டல் புறநகர் பகுதியில் நடந்தது . இதில் யாரும் காயமடையவில்லை. பள்ளிவாசலை பாதுகாக்க வைக்கப்பட்டுள்ள தடைகளால் அந்த நபரின் முயற்சி முறியடிக்கப்பட்டது. அந்த நபரின் நோக்கங்கள் தெளிவாக இல்லை. ஆனால் அவர் ஆர்மீனிய இனத்தை சேர்ந்தவர் என்றும் அவர் பாரிசில் நடந்த இஸ்லாமியவாத-தொடர்புடைய தாக்குதல்களுக்கு பழிவாங்க விரும்புவ…

  6. இந்தியா முழுவதும் ஜிஎஸ்டி வரி அமலுக்கு வந்தது படத்தின் காப்புரிமைEPA இந்தியா விடுதலை பெற்ற பிறகு மேற்கொள்ளப்பட்ட மாபெரும் வரிச் சீர்திருத்தமான சரக்கு மற்றும் சேவை வரி வெள்ளிக்கிழமையன்று நள்ளிரவில் நாடு முழுவதும் அமலுக்கு வந்தது. இதன் மூலம் இந்தியா முழுவதும் நிலவிவந்த பல்வேறு விதமான மாநில அரசின் வரிகள் நீக்கப்பட்டு, ஒரே விதமான வரி விதிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமையன்று நடந்த சிறப்புக் கூட்டத்தில் இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, இதனைத் துவக்கிவைத்தார். இந்த ஒற்றை வரிவிதிப்பின் மூலம் வரி வருவாய் உயர்வதோடு, பொருளாதார வளர்ச்சியும் ஏற்படும் என இந்திய அரசு கூறுகிறது. படத்தின்…

  7. ஒருபாலுறவு திருமணச் சட்டத்துக்கு ஆதரவாக ஜெர்மனிய நாடாளுமன்றம் வாக்களித்திருப்பது குறித்த தகவல்கள், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ஆறு நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு எதிரான அமெரிக்க அதிபர் ட்ரம்பின் தற்காலிக பயணத்தடை அமலுக்கு வந்திருப்பது குறித்த செய்திகள் மற்றும் பூச்சி மருந்துகளால் உலகெங்கும் தேனிக்கள் அழிவது குறித்த ஒரு புதிய ஆய்வறிக்கை குறித்த பிபிசியின் சிறப்புத்தகவல் ஆகியவை இன்றையை பிபிசி தொலைக்காட்சி செய்திகளில் இடம்பெறுகின்றன.

  8. ஜெர்மனியில் ஒருபால் திருமணம் சட்டபூர்வமானது ஒரு பாலின திருமணத்தை சட்டமாக்கும் வகையில் ஜெர்மனிய நாடாளுமன்றம் வாக்களித்துள்ளது. இந்த சட்டமூலத்தின் மூலம் ஆண் மற்றும் பெண் ஒருபாலுறவுக்காரர்களுக்கு குழந்தைகளை தத்து எடுப்பது உட்பட முழுமையான திருமண உரிமை வழங்கப்படுகின்றது. இந்தச் சட்டத்தை அங்கீகரிப்பதற்கான வாக்களிப்பு மேலும் சமூக அமைதிக்கு வழி செய்யும் என எதிர்பார்ப்பதாக ஜேர்மன் அதிபர் ஏங்கிலா மேர்க்கல் கூறியுள்ளார். http://globaltamilnews.net/archives/31422

  9. தேவாலயம் வாங்க பிரிட்டன் கிராம மக்களுக்கு உதவிய துபாய் ஷேக் பிரிட்டனின் கோன்வாலிலுள்ள சிறிதொரு கிராமம், மேத்தோடிஸ்ட் சிற்றாலயத்தை வாங்குவதற்கு துபாயை ஆட்சி செய்கின்ற ஷேக் முகமுது பின் ரஷீத் அல் மக்டோம் உதவி செய்துள்ளார். இந்த தேவாலயத்தை வாங்குவதற்காக நிதி திரட்டும் கடைசி முயற்சியாக ஹெல்ஸ்டனுக்கு அருகிலுள்ள கோடால்பின்வாசிகள் துபாய் ஷேக்கிற்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளனர். உலகப் புகழ்பெற்ற கோடால்பின் ஸ்டேபிள்ஸூடன் ஷேக்கின் நிதி ஆதரவு என்ற பெயரையும் இந்த கிராமம் பகிர்ந்துள்ளது. "இந்த செயலை மிகவும் பாராட்டுகின்றோம்" என்று கோடால்பின் சிலுவை சமூக கூட்டமைப்பின் ரிச்சர்ட் மைக்கி தெரிவித்திருக்கிறார். சமூ…

  10. வத்திக்கானின் மூத்த கார்டினால் ஜோர்ஜ் பெல் மீது ஆஸ்திரேலியாவில் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளமை. • ஆசிய பொருளாதார நெருக்கடியின் இருபது ஆண்டுகள், பூச்சியத்தில் இருந்து மீண்ட வணிகர்களின் கதை. • இந்திய வம்சாவளி என்ற காரணத்தால் வெள்ளையின குழந்தையை தத்து எடுக்க தடுக்கப்பட்ட தம்பதி பற்றிய தகவல்கள் இன்றைய செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன

  11. 'பாரீஸ் ஒப்பந்தத்திலிருந்து பின் வாங்கவே முடியாது!'- அமெரிக்காவுக்கு சவால்விடும் ஜெர்மனி! இன்னும் ஒரு வாரத்தில் ஜி-20 நாடுகளுக்கான மாநாடு நடக்கவுள்ள நிலையில், ஜெர்மனியின் சான்செலர் எஞ்செலா மெர்கெல், 'பாரீஸ் ஒப்பந்தத்திலிருந்து பின்வாங்கவே முடியாது. அதை பேச்சுவார்த்தைக்கு உட்படுத்தவும் முடியாது' என்று கடுகடுத்துள்ளார். 2015-ம் ஆண்டு, 196 நாடுகளின் பிரதிநிதிகள் பாரீஸில் சந்தித்து, இரவு பகலாக பருவநிலை மாற்றம் குறித்து விவாதித்து, ஓர் ஒப்பந்தத்தை வடிவமைத்தார்கள். அந்த ஒப்பந்தத்தின் நோக்கம், ஒவ்வொரு நாடும் கரியமில வாயு வெளியேற்றத்தை (Carbon Emmission) குறிப்பிட்ட அளவு குறைப்பது. அதற்கு ஏற்றாற்போல நாடுகள் தங்கள் கொள்கைகளை வடிவமைக்க வேண்டும் என்…

  12. அமெரிக்கா வரும் விமானங்களில் கூடுதல் பாதுகாப்பு, லேப் டாப் தடை தற்போதைக்கு இல்லை அமெரிக்கா தனது நாட்டிற்குள் நுழையும் விமானங்களில் பாதுகாப்பை அதிகரிக்க கடுமையான புதிய நடவடிக்கைகளை கொண்டுவந்துள்ளது. ஆனால் விமானத்திற்குள், பயணிகள் தங்களுடன் மடிக்கணினிகளை கொண்டு வருவதற்கான தடையை நீட்டிப்பதை தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளது. படத்தின் காப்புரிமைAFP பெரும்பாலும் எட்டு இஸ்லாமிய நாடுககளில் இருந்து வந்து செல்லும் விமானங்களில் பயணிகள் கேபின்களில் மடிக்கணினிகளை வைத்துக்கொள்ள மார்ச் மாதத்தில் அமெரிக்கா தடை விதித்திருந்தது. மடிக் கணினிகளில் குண்டுகளை மறைத்து வைக்கக்கூடும் என்ற அச்சத்தில் இந்த தடை கொண்டுவரப்பட்டதாக கூறப்பட்டது. அமெரிக்காவின் இந்த புதிய நடவடிக்கைகள்…

  13. டிரம்ப் பயணத்தடை: 6 முஸ்லிம் நாட்டினர் விசா பெற புதிய விதிகள் பெரும்பாலும் முஸ்லிம்கள் வாழ்கின்ற 6 நாடுகளின் பிரஜைகளுக்கும், அகதிகளுக்கும் புதிய விசா வரையறையை வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES இந்த நாடுகளை சேர்ந்தோரும், அகதிகளும் இனிமேல் அமெரிக்கா விசா பெறுவதற்கு, அமெரிக்காவோடு நெருங்கிய குடும்ப அல்லது வர்த்தகத் தொடர்புகள் கொண்டவராக இருக்க வேண்டும் என்று இந்த புதிய வரையறை வலியுறுத்துகிறது. இரான், லிபியா, சிரியா, சோமாலியா, சூடான் மற்றும் ஏமன் நாட்டு மக்களை பாதிக்கின்ற இந்த விதிமுறைகள் வியாழக்கிழமை முதல் நடைமுறைக்கு வருகின்றன. அதிபர் டொனால்ட் டிரம்பின் பயணத்தடை உத்தரவின் ஒரு ப…

  14. பிரெக்சிற் வரை ஸ்கொட்லாந்து காத்திருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய இராச்சியம் (பிரெக்கிற்) விலகுவதற்கான நிபந்தனைகள் முடிவாகும் வரை, ஐக்கிய இராச்சியத்திலிருந்து ஸ்கொட்லாந்து விலகுவதற்கான சர்வஜன வாக்கெடுப்பைத் தள்ளிவைப்பதற்கு, ஸ்கொட்லாந்து முதன்மை அமைச்சர் நிக்கொலா ஸ்டர்ஜியோன் தீர்மானித்துள்ளார். இரண்டாவது சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவதற்கு வழிவகுக்கும் சட்டமூலத்தைச் சமர்ப்பிக்கும் தனது திட்டத்தைப் பிற்போடுவதாக, முதன்மை அமைச்சர் தெரிவித்தார். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய இராச்சியம், 2019ஆம் ஆண்டு மார்ச்சிலேயே விலகவுள்ள நிலையில், அக்கட்சியின் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுமாயின், பிரெக்சிற்றுக்கு …

    • 1 reply
    • 447 views
  15. வெனிசுவேலா நாட்டு உச்ச நீதிமன்றத்தின் மீது கடத்தப்பட்ட ஹெலிகாப்டர் ஒன்று கைக்குண்டு தாக்குதல் நடத்தியது குறித்த செய்தி, உலகெங்கும் மீண்டும் அதிரவைத்த இணைய வழி தாக்குதல் மற்றும் அதனை தடுப்பதற்கான செயலி கண்டுபிடிக்கப்பட்டிருப்பது குறித்த தகவல்கள் மற்றும் ஊசியால் குத்தி வலி ஏற்படுத்தி தடுப்பு மருந்து போடுவதற்கு மாற்றாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய நோய் தடுப்பு முறை குறித்த பிபிசியின் சிறப்பு செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  16. ஐந்து மணி நேர மோடி - ட்ரம்ப் சந்திப்பில் நடந்தது என்ன? உலக அரசியல் வரலாற்றில் சமீபத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வு என்றால், அது அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் முதல் முறையாக சந்தித்துக்கொண்டதாகத்தான் இருக்கும். அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்தின்போது மோடியை ட்ரம்ப் புகழ்ந்ததும், அதிபராக பதவியேற்ற ட்ரம்ப்புக்கு மோடி வாழ்த்து தெரிவித்ததும் அனைவரும் அறிந்ததே. அமெரிக்காவில் இரண்டுநாள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடிக்கு, வெள்ளை மாளிகையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா ஆகியோர் மோடியை வரவேற்றனர். பின்பு பேசிய ட்ரம்ப் 'மோடி ஒரு சிறந்த பிரதமர். அவரைப் …

  17. உலக பயங்கரவாதி என்று அமெரிக்காவால் அழைக்கப்படும் சையத் சலாஹுதின் யார்? சையத் சலாஹுதின். | கோப்புப் படம்.| ஏ.பி. உலக பயங்கரவாதி என்று அமெரிக்காவினால் முத்திரைக் குத்தப்பெற்ற சையத் சலாஹுதின் காஷ்மீரி தீவிரவாத அமைப்பான ஹிஸ்புல் முஜாஹிதினின் தலைமைக் கமாண்டர் ஆவார். இவர் பற்றி அமெரிக்க அரசுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “சலாஹுதின் காஷ்மீர் பிரச்சினைக்கு எந்த ஒரு சுமுகத் தீர்வும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் தீவிரமானவர். இன்னும் அதிகமாக காஷ்மீர் தற்கொலைப் படையினரைத் தயார் செய்யப் போவதாக அச்சுறுத்துபவர், இந்தியப் படைகளுக்கு காஷ்மீர் பள்ளத்தாக்கை ஒரு சுடுகாடாக மாற்றுவதற்கு உறுதி பூண்டவர்” என்று பயங்கரமாகக் கூறப்பட்டுள்ளது.…

  18. ஐரோப்பிய ஆணையத்தால் கூகுள் நிறுவனத்திற்கு 2.42 பில்லியன் யூரோ அபராதம் விதிப்பு கூகுள் நிறுவனம், தனது தேடல் வசதி மூலம் ( செர்ச் எஞ்சின்) கிடைக்கும் தேடல் முடிவுகளில், தனது சந்தை ஒப்பிட்டுச் சேவையை முன்னிலைப்படுத்தியதாக அதன் மீது 2.42 பில்லியன் யூரோ அபராதத்தை, ஐரோப்பிய ஆணையம் விதித்துள்ளது. படத்தின் காப்புரிமைGOOGLE சந்தையின் நிலையைச் சிதைத்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த ஆணையம் ஒரு நிறுவனத்திற்கு, இது நாள் வரை விதித்த அபராதத் தொகையில் இதுவே அதிகமானதாகும். தொழிற்போட்டிக்கு எதிரான நடவடிக்கைகளை 90 நாட்களுக்குள் முடிவுக்கு கொண்டுவராவிட்டால் இன்னும் அதிகமான அபராதத் தொகையைச் செலுத்த வேண்டியிருக்கும் என்றும் அந்…

  19. சிரியாவில் மீண்டும் இரசாயன தாக்குதல நடத்தினால் விளைவு மிக மோசமாக இருக்கும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் சிரியாவை எச்சரித்திருப்பது குறித்த செய்தித் தொகுப்பு, அதிபர் டிரம்பின் பயணத்தடைக்கு ஒரு பகுதி ஆதரவாக அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது குறித்த தகவல்கள் மற்றும் பிரிட்டனின் மிகப்பெரிய போர்க்கப்பலான எஹ்.எம்.எஸ் குவீன் எலிசபெத் கப்பல் சோதனைக்காக முதல் முறையாக கடல் பயணம் மேற்கொண்டுள்ளது குறித்த செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  20. அண்டை நாடுகளின் நிபந்தனைகளை கத்தார் நிறைவேற்ற இயலாது: டில்லர்சன் கத்தார் மீது நான்கு அரபு நாடுகள் விதித்த தடையை நீக்குவதற்கு அந்நாடுகள் விதித்த கோரிக்கையை நிறைவேற்ற முடியாது என அமெரிக்க வெளியுறவுச் செயலர் ரெக்ஸ் டில்லர்சன் தெரிவித்துள்ளார். படத்தின் காப்புரிமைAFP இருப்பினும் அந்த கோரிக்கைகள் நிலவிவரும் நெருக்கடிக்கான தீர்வின் அடிப்படையாக அமைந்துள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார். சனிக்கிழமையன்று, செளதி அரேபியா மற்றும் அதன் கூட்டணி நாடுகளான எகிப்து, ஐக்கிய அரபு எமிரேட்டுகள் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகள் விதித்த 13 நிபந்தனைகளை கத்தாரின் வெளியுறவுத் துறை அமைச்சர் நிராகரித்தார். செளதி மற்றும் பிற நாடுகள் கத்த…

  21. கொலம்பியாவில் சுற்றுலா பயணிகள் சென்ற படகு விபத்துக்குள்ளானதில் 6 பேர் பலியானது குறித்த தகவல்கள், மொசூல் நகரில் முன்னேறிய இராக்கிய படைகள் மீது இஸ்லாமிய அரசு என்று தம்மை அழைத்துக்கொள்ளும் அமைப்பின் தீவிரவாதிகள் கடுமையான பதில் தாக்குதல் நடத்துவது குறித்து மோதல்களத்தில் இருந்து வரும் பிபிசியின் நேரடி செய்திகள் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திரமோதி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை சந்திக்கவுள்ள நிலையில் அமெரிக்காவில் இருக்கும் இந்திய பணியாளர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்த பிபிசியின் சிறப்பு தகவல் ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  22. முன்னணிக்கு வருகிறாரா பின்லேடனின் மகன்? அப்பா ஒசாமா பின்லேடன் இறந்து நான்கு வருடங்களுக்குப் பிறகு அவரது மகன் ஹம்ஜா பின்லேடன் குரல் கொடுக்கத் தொடங்கியிருக்கிறார். 2001 ஆப்கானிஸ்தான் பாகிஸ் தான் எல்லையில் உள்ள ஜலாலாபாத் என்ற பகுதியில் அமைந்துள்ள மலைத்தொடரில் ஒரு தந்தை தன் மூன்று மகன்களுடன் அமர்ந்து பேசினார். ஒவ்வொருவருக்கும் ஒரு புராதன மணி மாலையைக் கொடுத்தார். அந்தத் தந்தை ஒசாமா பின்லேடன். அந்த மகன்களில் ஒருவர்தான் ஹம்ஜா பின்லேடன். ஹம்ஜாவை அல் காய்தாவின் தலைவராக்கும் எண்ணம் ஒசாமாவுக்கு இருந்ததாம். 2001 செப்டம்பர் இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்கா ஆப்கானிஸ்தான் மீது ஆக்கிரமிப்பு செய்தது.…

  23. "அரச குடும்பத்திற்கு வெளியே இருக்க விரும்பினேன்": இளவரசர் ஹாரி படத்தின் காப்புரிமைGETTY IMAGES அரசு குடும்பத்தின் ஒரு பகுதியாக இருப்பது தொடர்பாக மிகவும் தெளிவாக அறிய வந்த இளவரசர் ஹாரி, அதிலிருந்து விலகி இருக்க முடிவு செய்ததாக தெரிவித்திருக்கிறார். தன்னுடைய உரிமையை விட்டுக் கொடுத்துவிடுவதை கருத்தில் கொண்டிருந்த அவர் இறுதியில், அரச குடும்பத்தில் இருக்க வேண்டும். ஆனால், தனக்கென ஒரு பங்கை திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும் என்று முடிவு செய்ததாக கூறியுள்ளார். பிரிட்டன் படையோடு இணைந்து பணியாற்றியதுதான் "நான் (கோட்டையில் இருந்து) தப்பிக்க இதுவரை கண்டவற்றில் சிறந்த தருணம்" என்று முடிக்குரிய 5-ஆவது வாரிசாக இருக்கின்ற இளவர…

  24. பாகிஸ்தான் பெட்ரோல் டேங்கர் வெடித்த பயங்கர விபத்து... பலி எண்ணிக்கை 150 ஆனது. இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பெட்ரோல் ஏற்றிச் சென்ற லாரி தீப்பிடித்து எரிந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 150 ஆக அதிகரித்துள்ளது. பாகிஸ்தானில் இன்று அதிகாலை கராச்சியிலிருந்து லாகூருக்கு பெட்ரோல் ஏற்றிக்கொண்டு லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது பஞ்சாப் மாகாணத்தின் முல்தான் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பஹவல்பூர் என்ற இடத்தில் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இதில், லாரியிலிருந்து பெட்ரோல் கசிந்தது. அதனைக் கண்ட அப்பகுதிவாசிகள், அதனைப் பிடிக்க கூட்டமாக சென்றனர். 40000 லிட்டர் பெட்ரோலை ஏற்றியிருந்த அந்த லாரி திடீரென தீப்பற்றி, வெடிக்க ஆரம்பித்தது. இதில், கசிந்த…

  25. பாராளுமன்ற இணையதளம் முடக்கம் ; அமைச்சர்கள் அச்சத்தில் ; தீவிரவாத குழுக்களின் சதிவேலையா..? இங்கிலாந்தில் உள்ள சுகாதார இணையதளங்களை தொடர்ந்து பாராளுமன்ற இணையதளத்தை மர்ம மனிதர்கள் முடக்கியுள்ளனர். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இங்கிலாந்தில் உள்ள சுகாதார இணையதளத்தினை மர்மநபர்கள் முடக்கினர்.அதை தொடர்ந்து, தற்போது பாராளுமன்றத்தின் இணையதளத்தை மர்ம கும்பல் ஹேக்கிங் மூலம் முடக்கியுள்ளனர். எனவே, பாராளுமன்ற இணைய தளம் மூலம் அனுப்பப்படும் தகவல்கள் மற்றவர்களுக்கு சென்றடைவதில்லை என தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக பாராளுமன்றம் மூலம் அமைச்சர்களுக்கு அனுப்பக்கூடிய மின்னஞ்சல்கள் சம்பந்தப்பட்டவர்கள் பார்க்க முடியவில்லை. இதை யார் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.