உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26693 topics in this forum
-
கத்தாரைத் தனிமைப்படுத்துவது மேற்கு ஆசியாவுக்கு நல்லதல்ல! நாட்டுடனான தூதரக உறவுகளை நிறுத்திவைப்பதாக சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், எகிப்து, யேமன் ஆகிய நாடுகள் எடுத்திருக்கும் முடிவு பொருளாதார ரீதியாகவும், புவி அரசியல்ரீதியாகவும் கடும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. இஸ்லாமிய அரசியல் இயக்கமான முஸ்லிம் சகோதரத்துவம் எகிப்து அமைப்புக்கு கத்தார் தீவிர ஆதரவு தரத் தொடங்கியதிலிருந்தே, கடந்த ஆறு ஆண்டுகளாக வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலுக்குள் பதற்றம் நிலவிவருகிறது. அந்த இயக்கம் மேற்கு ஆசியாவின் ஸ்திரத்தன்மைக்கு ஓர் அச்சுறுத்தல் என்றே சவுதி அரசும் அதன் நெருங்கிய நட்பு நாடுகளும் கருதுகின்றன. சவுதி அரேபியாவும், கத்தாரும் மேற்கு ஆசியா முழுவதும் ப…
-
- 0 replies
- 247 views
-
-
வாய் திறந்தார் FBI முன்னாள் தலைவர்... ட்ரம்ப்புக்கு நெருக்கடியா!? பல மாதங்களாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கும், எஃப்.பி.ஐ.,யின் முன்னாள் தலைவர் ஜேம்ஸ் கோமிக்கும் பனிப் போர் நிலவி வந்த நிலையில், இன்று பொதுத் தளத்தில் கோமி, ட்ரம்ப் பற்றி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். டொனால்ட் ட்ரம்ப் கடந்த ஜனவரி மாதம் அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவியேற்றதிலிருந்து விமர்சனங்களும் சர்ச்சைகளும் அவரை விட்டபாடில்லை. ட்ரம்ப் வெற்றிபெற்ற உடனேயே, 'அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்ய தலையீடு உள்ளது' என எதிர்க்கட்சியினர் முதல் முன்னணி ஊடகங்கள் வரை பலர் சந்தேகங்களை எழுப்பினர். இதையடுத்துதான் அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ, 'ஆம், அமெரிக்க அ…
-
- 1 reply
- 489 views
-
-
தலிபான்களின் ஆட்சியில் வாழ்க்கை எப்படி இருக்கும்? ================================== தலிபான்களை விரட்டுவதற்காக ஆப்கானிஸ்தானில் மேற்கு நாடுகள் தலையிட்ட போது, சில இரத்தக்களரி மோதல்கள் ஹெல்மண்ட் மாகாணத்தில் நடந்தன. ஆனால், படைகளின் வெளியேற்றம் தாம் இழந்த பெரும்பாலான பிராந்தியத்தை தீவிரவாதிகள் மீளக்கைப்பற்ற வழி செய்தது. தலிபான்களின் கீழான வாழ்க்கை எப்படியிருக்கும் என்பது குறித்து மிகவும் குறைவாகவே தெரிந்த நிலையில், பிபிசியின் ஒலியா அட்ராஃபிக்கு அண்மையில் அந்த குழுவின் தலைநகராக பார்க்கப்படும் மூஸாகலாவுக்கு செல்ல அபூர்வமான வாய்ப்பு கிடைத்தது. இவை குறித்த பிபிசியின் காணொளி. BBC
-
- 0 replies
- 524 views
-
-
இன்றைய (8/06/2017) பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * அதிபர் ட்ரம்ப் ஆட்சியின் அதிகபட்ச பரபரப்பு நாடாளுமன்றத்தில் இன்று அரங்கேறுகிறது; ட்ரம்புடனான தன் சந்திப்புகள் கவலையளிப்பதாக இருந்ததாக ஜேம்ஸ் கொமி சாட்சியம். * தாலிபன் ஆட்சியில் பொதுமக்கள் நிலையென்ன? தாலிபனின் தலைநகராக வர்ணிக்கப்படும் நகருக்கு செல்ல பிபிசிக்கு கிடைத்த பிரத்யேக அனுமதியில் சேகரித்த செய்திகள். * மூன்று லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே ஆப்ரிக்காவில் வாழ்ந்த ஆதிமனிதர்கள்; மனித பரிணாம காலகட்டத்தை புரட்டிப்போடும் புதிய புதைபடிமங்கள் ஆகியவை இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 436 views
-
-
பிரித்தானிய பொதுத் தேர்தல் இன்று நடைபெறவுள்ளது. பிரித்தானியாவில் இன்றைய தினம் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. மில்லியன் கணக்கான மக்கள் இன்றைய தினம் பிரித்தானிய பொதுத் தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். பிரித்தானிய நேரம் 7.00 மணிக்கு வாக்கெடுப்பு ஆரம்பாக உள்ளது. சுமார் 40 ஆயிரம் வாக்களிப்பு மத்திய நிலையங்களில் வாக்களிப்பு நடத்தப்பட உள்ளது. 46.9 மில்லியன் பேர் வாக்காளர்களாக தங்களை பதிவு செய்து கொண்டுள்ளதுடன், மொத்தமாக 650 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட உள்ளனர். கடந்த 2015ம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 46.4 ஆக காணப்பட்டது. தபால் மூலம் வாக்களிப்போர் ஏற்கனவே வாக்களித்துள்ளார்கள் என்பது குறிப…
-
- 1 reply
- 235 views
-
-
பனிமனிதன் ஓட்ஸியை கொன்றது யார்?: 5000 ஆண்டுகளுக்கு முந்தைய கொலை வழக்கை மீண்டும் விசாரிக்கும் இத்தாலி பெத்தனி பெல்பிபிசி செய்தியாளர் டச்சுக் கலைஞர்கள் அல்ஃபோன்ஸ் மற்றும் அட்ரி கென்னிஸ் ஓட்ஸியை போன்ற உருவத்தை உருவாக்கினார்கள். படத்தின் காப்புரிமைSOUTH TYROL MUSEUM OF ARCHAEOLOGY/OCHSENREITER Image captionடச்சுக் கலைஞர்கள் அல்ஃபோன்ஸ் மற்றும் அட்ரி கென்னிஸ் ஓட்ஸியை போன்ற உருவத்தை உருவாக்கினார்கள் வடக்கு இத்தாலியில் ஆல்ப்ஸ் மலைத்தொடரின் ஓட்ஸெலர் ஆல்ப்ஸ் (Oetztaler Alps) பகுதியில் தொலைதூரத்தில் அமைந்திருக்கும் உயரமான பகுதியில், பனிமனிதன் ஓட்ஸி கண்டெடுக்கப்பட்டார். 5,300 ஆண்டுகளுக்கு முந்தைய …
-
- 0 replies
- 302 views
-
-
உக்ரைனில் அமெரிக்க தூதரகம் மீது வெடிகுண்டு வீசி தாக்குதல் உக்ரைன் நாட்டில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது மர்ம ஆசாமி ஒருவன் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கீவ்: உக்ரைன் நாட்டின் தலைநகர் கீவில் அமெரிக்க தூதரகம் அமைந்துள்ளது. உயர் பாதுகாப்பு நிறைந்த இந்த அலுவலகத்தைக் குறிவைத்து இன்று அதிகாலையில் மர்ம ஆசாமி ஒருவன் வெடிகுண்டை வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளான். இந்த வெடிகுண்டு வெடித்துச் சிதறியதால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இந்த வெடிகுண்டு தாக்குத…
-
- 0 replies
- 187 views
-
-
பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை 07/06/17 இரான் தலைநகரில் நடந்த இரண்டு தாக்குதல்களில் 12 பேர் பலியானது குறித்த கூடுதல் விவரங்கள்; கட்டார் -- சவுதி மோதலில் அமெரிக்க நிலைப்பாட்டின் பின்னணி பற்றிய அலசல்; மற்றும் இலங்கையில் முஸ்லிம் சிறுமிகளுக்கு நடக்கும் கட்டாய திருமணங்கள் தொடர்பான பிபிசியின் புலனாய்வு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 261 views
-
-
116 பேருடன் விமானம் மாயம் : மியான்மாரில் சம்பவம் மியன்மாரில் 116 பேருடன் பரந்த இராணுவ விமானம், தொடர்பு எல்லையிலிருந்து காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மியன்மாரின் இராணுவத்திற்கு சொந்தமான விமானத்தில், 116 பேருடன் யாங்கோன் பிராந்தியத்தை நோக்கி சென்றுகொண்டிருந்த நிலையில், மேக் பகுதியில் வைத்து ராடார் தொடர்பிலிருந்து காணாமல் போயுள்ளதாகவும், விமானத்தை தொடர்புகொள்ள தரையிலிருந்து மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளில் பயன் கிட்டவில்லையென அந்நாட்டு ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன. குறித்த விமானத்தில் 105 பயணிகளும், 11 விமான ஊழியர்களும் இருந்ததாக மியன்மார் இராணுவ விமானநிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் காணாமல்போன விமானத்த…
-
- 1 reply
- 433 views
-
-
கத்தாருடனான தனது ராஜீய உறவைத் துண்டிக்கும் மாலத்தீவு இந்திய பெருங்கடலில் இருக்கும் தீவான மாலத்தீவு கத்தாருடனான தனது ராஜீய உறவைத் துண்டிக்கும் ஏழாவது நாடாகியுள்ளது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES கத்தார் பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பதாக கூறி, ஏற்கனவே செளதி அரேபியா, பஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரேட்டுகள், எகிப்து, லிபியா மற்றும் ஏமன் ஆகிய நாடுகள் கத்தாருடனான தங்கள் ராஜீய உறவை துண்டித்துக் கொள்வதாக அறிவித்தன. மாலத்தீவு, கத்தாருக்கு எதிரான முடிவை எடுத்துள்ள போதும் அது கடினமானதாக இல்லாமல் சற்று தளர்வானதாகவே உள்ளது. கத்தாருடனான ராஜீய உறவுகள் மட்டுமே துண்டிக்கப்படும் எனவும், வர்த்தக உறவுகள் தொடரும் எனவும் மாலத்தீவு …
-
- 0 replies
- 407 views
-
-
ஈரான் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்த மர்ம நபர் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதில் பலர் காயமடைந்தனர். ஈரான் தலைநகர் டெஹ்ரானில் அந்நாட்டு நாடாளுமன்றம் அமைந்துள்ளது. இந்நிலையில் இன்று (புதன்கிழமை) காலை நாடாளுமன்றத்துக்குள் நுழைந்த மர்ம நபர் அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது. மேலும், அந்த நபர் நாடாளுமன்றத்துக்குள் சிலரை பிணைக் கைதிகளாகப் பிடித்துவைத்திருப்பதாகவும்ஒரு சில ஊடகங்களில் தாக்குதலில் ஒன்றுக்கும் மேற்பட்ட மர்ம நபர்கள் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக அந்நாட்டின் செய்தி நிறுவனங்களான பார்ஸ், மெஹர் ஆகியவை முதற்கட்ட தகவலை வெளியிட்டுள்ளன. "ஈரான் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர்…
-
- 1 reply
- 551 views
-
-
சௌதி அரேபியாவின் பிரபல ஆயுத வியாபாரி அத்னான் கஷ்ஷோகி காலமானார் யாவின் பிரபல ஆயுத வியாபாரி அத்னான் கஷ்ஷோகி லண்டனில் தனது 82வயதில் காலமானார். படத்தின் காப்புரிமைAFP Image caption2005ல் தன்னுடைய மனைவி லாமியவுடன் ஒரு நிகழ்வில் அத்னான் கஷ்ஷோகி பங்கேற்ற போது எடுத்த படம் தன்னுடைய ஆடம்பர வாழ்க்கைக்காக அறியப்பட்ட இந்த தொழிலதிபர், பார்கின்சன் நோய்க்கான சிகிச்சையை எடுத்துவந்த சமயத்தில் இறந்துள்ளார் என்று அவரது குடும்பத்தினர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளனர். 1970 மற்றும் 1980களில், சர்வதேச ஆயுத பேரங்களை நடத்தியதால், உலகின் பணக்கார நபர்களில் ஒருவராக அத்னான் கஷ்ஷோகிஅறியப்பட்டார். அவரது…
-
- 0 replies
- 342 views
-
-
வளைகுடா ஒற்றுமை அவசியம்: சவுதி மன்னரிடம் தொலைபேசியில் வலியுறுத்திய ட்ரம்ப் கோப்புப் படம்: டொனால்ட் ட்ரம்ப் கத்தாருடனான ராஜாங்க உறவை முறித்துக்கொள்வதாக சவுதி உள்ளிட்ட 4 நாடுகள் அறிவித்துள்ள நிலையில் பயங்கரவாதத்தை ஒழிக்கவும் வளைகுடா பிராந்திய ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தவும் அரபு நாடுகளின் ஒற்றுமை அவசியம் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார். அண்மையில், இஸ்லாமியக் குழுக்களுக்கு ஆதரவு தெரிவிப்பதால் கத்தாருடனான தங்கள் ராஜாங்க உறவுகளைத் துண்டித்துக் கொள்வதாக சவுதி அரேபியா, பஹ்ரைன், எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 4 அரபு நாடுகளும் அறிவித்தன. இந்நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப…
-
- 0 replies
- 297 views
-
-
கத்தார் அதன் அண்டை நாடுகளுடன் முரண்பட 4 காரணங்கள் சௌதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்டுகள், பஹ்ரைன், எகிப்து ஆகிய நாடுகள், கத்தாருடன் ராஜீய உறவுகளை முறித்துக் கொள்வது என்று முடிவெடுத்த பின்னர், அந்த நாடுகளுடன் கத்தாருக்கு ஏற்பட்ட பதற்றங்கள் மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளன. படத்தின் காப்புரிமைREUTERS Image captionசௌதி அரசர் சல்மான் பின் அப்தலஸிஸ் , கத்தார் எமிர் தமிம் பின் ஹமத் அல்-தானியுடன் கத்தார் அரசு மீது அழுத்தம் தரும் நோக்கிலான ஒரு நடவடிக்கையில், கத்தாரின் வளைகுடா பகுதி அண்டை நாடுகள் , அதனுடன் தத்தம் நாடுகளின் எல்லைகளையும் மூடிவிட்டன. எகிப்து ஒரு படி மேலே சென்று தனது வான்பரப்பையும் துறைமுகங்களையும் கத்தார் போக…
-
- 5 replies
- 621 views
-
-
கத்தார் விவகாரம்... ட்ரம்ப்பின் அதிர வைத்த ட்வீட்! 'கத்தாருக்கு எதிராக ஐக்கிய அரபு நாடுகள் எடுத்து வரும் நடவடிக்கைகள், தீவிரவாதத்துக்கான முடிவின் தொடக்கம்' என்று ட்விட்டர் மூலம் கூறியுள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப். கத்தார் நாடு தீவிரவாதத்துக்கு ஆதரவாகச் செயல்படுவதாகக் கூறி சவுதி அரேபியா, ஐக்கிய அரேபிய நாடுகள், எகிப்து மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகள், தூதரகத் தொடர்புகள் உள்பட கத்தாருடனான அத்தனை தொடர்புகளையும் துண்டிப்பதாக அறிவித்துள்ளன. கத்தார் நாட்டின் விமானங்கள், கப்பல்கள் அனைத்தும் இன்னும் இரண்டு வார காலத்தில் வெளியேற வேண்டும் என பஹ்ரைன் உத்தரவிட்டுள்ளது. மேலும் எமிரேட்ஸ், எத்திஹாட் ஏர்வேஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் கத்தாருக்க…
-
- 1 reply
- 573 views
-
-
கத்தாருக்கு வலுக்கும் நெருக்கடி: வான்பரப்பை மூடும் செளதி, எகிப்து கத்தார் விமானங்களுக்கு தனது வான்பரப்பை எகிப்து மூடிவிட்ட நிலையில் செளதி மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளும் கத்தார் விமானங்களுக்கு தங்கள் வான்பரப்பை இன்று செவ்வாய்க்கிழமைமூடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் காப்புரிமைAFP வளைகுடா பகுதியில் பயங்கரவாதத்திற்கு கத்தார் ஆதரவளிப்பதாக குற்றம் சுமத்தி, கத்தாருடனான தங்கள் ராஜிய உறவுகளை பல நாடுகள் துண்டித்துவிட்டன. பஹ்ரைன், செளதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்டுகளில் உள்ள கத்தார் நாட்டினர் இரண்டு வாரங்களில் அந்நாடுகளிலி்ருந்து வெளியேற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் தீவிரவாதிகள…
-
- 2 replies
- 353 views
-
-
பிரான்சின் பரிஸ் நகரில் பொலிஸ் அதிகாரியை தாக்கிய நபர் சுடப்பட்டுள்ளார். பிரான்சின் பரிஸ் நகரில் பொலிஸ் அதிகாரியை தாக்கிய நபர் ஒருவர் சுடப்பட்டுள்ளார். பிரபல நோர்த் டாம் தேவாலயத்திற்கு முன்னால் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த பிராந்தியத்தில் ரோந்தில் ஈடுபட்டிருந்த மூன்று பொலிஸ் அதிகாரிகளில் ஒருவர் மீது தாக்குதலாளி சுத்தியலால் தாக்கி உள்ளதோடு, தொடர்ந்தும் காவல் அதிகாரிகளை அச்சுறுத்தியுள்ளார். தாக்கப்பட்ட பொலிஸ் அதிகாரி சிறு காயங்களுக்கு இலக்காகி உள்ளாகிய நிலையில் நிலமையை கட்டுப்பாட்டுள் கொண்டு வருவதற்காக அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும், எனினும் அவர் காயங்களுடன் உயிருடன் இருப்பதாகவும் காவல் துறை தெரிவித…
-
- 0 replies
- 405 views
-
-
லண்டன் தாக்குதலை நடத்தியவர்களில் மூன்றாவது நபரின் தகவல்களும் வெளியிடப்பட்டுள்ளது லண்டன் தாக்குதலை நடத்தியவர்களில் மூன்றாவது நபரை பற்றிய தகவலையும் பிரித்தானிய காவற்துறையினர் வெளியிட்டு உள்ளனர். இத்தாலியை சேர்ந்த தாய்க்கும் மொராக்கோவை சேர்ந்த தந்தைக்கும் பிறந்த இந்நபரின் பெயர் யூசுவ் சாக்பா – youssef Zaghva என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே பாகிஸ்தானை பிறப்பிடமாகவும் பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்ட, 27 வயது மதிக்கத்தக்க குராம் பட் ((Khuram Butt ) மற்றும் 30 வயது மதிக்கத்தக்க, மொரோக்கோக்கோ மற்றும் லிபியாவுடன் தொடர்புபட்ட, ரஷீட் (Rachid Redouane ) ஆகியோரின் பெயர்கள் வெளியான நிலையில் இன்று 3 ஆவது தாக்குதல்தாரியின் பெயரும் வெளியாகி உள்ளமை குறிப்பிடத…
-
- 0 replies
- 314 views
-
-
இன்றைய (6/06/2017) பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * லண்டன் தாக்குதலை நடத்திய மூன்றாவது நபரின் அடையாளத்தை வெளியிட்டது காவல்துறை; இருபத்தி இரண்டு வயதான யூசுஃப் சக்பா மொரொக்கோ இத்தாலியன் என்று அறிவிப்பு. * ஐ எஸ் அமைப்பிடமிருந்து மராவி நகரை மீட்க பிலிப்பைன்ஸ் இராணுவம் தீவிர முயற்சி; மோதலில் சிக்கிய பொதுமக்களின் அவலம் குறித்து பிபிசியின் நேரடி படப்பிடிப்பு. * இரண்டு நாட்களில் பிரிட்டிஷ் தேர்தல்; இதில் முக்கிய பிரச்சனையான குடியேற்றம் குறித்த விரிவான அலசல்.
-
- 0 replies
- 312 views
-
-
கத்தார் பிரச்சனை: பயணிகளுக்கு என்ன பாதிப்பு? கத்தார் தலைநகர் தோஹாவுக்கான விமானசேவைகளை பல விமான நிறுவனங்கள் ரத்து செய்துள்ளன. படத்தின் காப்புரிமைAFP ஐக்கிய அரபு எமிரேட்ஸ், செளதி அரேபியா, எகிப்து, பஹ்ரைன், லிபியா, ஏமன் ஆகிய நாடுகள், கத்தாருடனான அனைத்து ராஜீய தொடர்புகளையும் நிறுத்திக் கொண்டன. இஸ்லாமிய தீவிரவாத குழுக்களுக்கு கத்தார் ஆதரவளிப்பதாக இந்த நாடுகள் சுமத்தும் குற்றச்சாட்டுக்களை அந்த நாடு மறுத்துள்ளது. இந்த நாடுகள், தங்கள் வான்பரப்பையும் கத்தாரின் விமான நிறுவனமான கத்தார் ஏர்வேஸ் பயன்படுத்த தடை விதித்துள்ளன. இனி பயணிகள் என்ன செய்யலாம்? இதில் யாருக்கு நேரடி பாதிப்பு? இந்த திடீர் தடையால…
-
- 0 replies
- 438 views
-
-
இஸ்ரேல் பிரச்சனை: மனித உரிமைக் கவுன்சிலில் இருந்து அமெரிக்கா வெளியேறும் ? இஸ்ரேல் குறித்து ஐ.நா மனித உரிமைக்கவுன்சிலின் ``காழ்ப்புணர்ச்சி`` மனப்பான்மையைக் கோடிட்டுக் காட்டும் அமெரிக்கா அதன் காரணமாக மனித உரிமைக் கவுன்சிலிலிருந்து விலகுவது பற்றி தான் பரிசீலித்துக் கொண்டிருப்பதாகக் கூறுகிறது. படத்தின் காப்புரிமைAFP Image captionமனித உரிமைக் கவுன்சிலில் இருந்து அமெரிக்கா வெளியேறும் ? ஐநா மனித உரிமைக் கவுன்சில் தான் ஆற்றி வரும் பங்கை அமெரிக்கா `கவனமாக` ஆராய்ந்து கொண்டிருப்பதாக மனித உரிமைக் கவுன்சிலுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹேலி கூறினார். வெனிசுவேலாவுக்கு எதிராக ஒரு தீர்மானத்தையும் பரிசீலிக்காத மனித உரிமைக் கவுன்சில், அமெரிக்கக் கூட்டாளியான இஸ்ரேல…
-
- 0 replies
- 346 views
-
-
வட கொரியாவை புரிந்து கொள்ள அழைக்கும் ஒரு பிரிட்டிஷ் மாணவர் ஏவுகணை மற்றும் அணு ஆயுத சோதனைகளால் வட கொரியா உலக நாடுகளை மிரட்டி வருகிறது. அதனால், அங்கு வாழும் வட கொரிய மக்களை பற்றி அதிகமாக அறிய வர, அவர்களில் நண்பாகளை உருவாக்கி கொள்ள இந்நேரமே சரியான தருணம் என்கிறார் ஒரு பிரிட்டிஷ் மாணவர். Image captionசர்வதேச நட்புறவு இல்லத்தில் தேனீர் விருந்து வட கொரியா என்றதும், தடை செய்யப்பட்டது, வெளிநாடுகளுக்கு திறக்கப்படாத நாடு, நலிவுற்றது, துன்பப்படுகின்ற நாடு என்ற மிக விரைவாக நாம் முத்திரை குத்திவிடுகிறோம். நாம் உருவாக்கிய இந்த முத்திரைகளை சற்று அகற்றிவிட்டு, மனித நிலையில் வட கொரியாவை பற்றி தெரி…
-
- 0 replies
- 399 views
-
-
லண்டனில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளில் இருவர் பெயர் வெளியீடு லண்டன் பாலத்தில் தாக்குதல் நடத்திய குராம் ஷாசத் பட், ரஜித் ரிடோனே லண்டன் பாலத்தில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளில் இருவரது பெயரை அந்நாட்டு போலீஸார் வெளியிட்டுள்ளனர். இதுகுறித்து லண்டன் போலீஸார் வெளியிட்ட தகவலில், "லண்டன் பாலத்தில் சனிக்கிழமை நள்ளிரவு தாக்குதல் நடத்திய மூன்று தீவிரவாதிகளில் சுட்டுக் கொல்லப்பட்ட இருவரது பெயர் தெரியவந்துள்ளது. ஒருவர், குராம் ஷாசத் பட் (27) பாகிஸ்தானில் பிறந்தவர். மற்றொருவர் ரஜித் ரிடோனே லிபியாவைச் சேர்ந்தவர். மூன்றாவது நபரை பற்றியத் தகவலை சேகரித்து வருகிறோம். …
-
- 1 reply
- 323 views
-
-
லண்டன் மேயர் சாதிக் கானுடன் டிரம்ப் மீண்டும் மோதல் லண்டன் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, அந்த நகர மக்களுக்கு மேயர் சாதிக் கான் அளித்த உத்தரவாதம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் மோதியுள்ளார். படத்தின் காப்புரிமைEPA லண்டன் தெருக்களில் அதிக போலீஸார் காவல் பணியில் ஈடுபடுவர். அதனை கண்டு மக்கள் பீதியடைய வேண்டாம் என்று மேயர் சாதிக் கான் தெரிவித்திருந்தார். ஆனால், தாக்குதல் அச்சுறுத்தலை குறைத்து மதிப்பிடுவதாக ஞாயிற்றுக்கிழமை குற்றம்சாட்டிய அதிபர் டிரம்ப், லண்டன் மேயரின் விளக்கம் "பரிதாபமான சாக்குப்போக்கு" என்று திங்கள்கிழமை தெரிவித்திருக்கிறார். சனிக்கிழமை இரவு நடைபெற்ற தாக்குதல்களில் 7 பேர் …
-
- 0 replies
- 508 views
-
-
அணு விநியோக நாடுகள் அமைப் பில் (என்எஸ்ஜி) இந்தியா உறுப்பி னராவது மிகவும் சிக்கலானது என, சீனா மீண்டும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. அணு மூலப்பொருள் விநியோ கிக்கும் நாடுகள் (என்எஸ்ஜி) அமைப்பில் அமெரிக்கா, ஜப்பான், சீனா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 48 நாடுகள் உறுப்பினராக உள்ளன. இதில் இந்தியா உறுப்பினராகச் சேர பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு அந்த அமைப்பில் உள்ள பல்வேறு நாடுகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றன. என்எஸ்ஜி அமைப்பைப் பொறுத்தமட்டில் ஒரு நாடு எதிர்ப்பு தெரிவித்தால்கூட புதிதாக விண்ணப்பிக்கும் நாடு உறுப்பினராக முடியாது. இந்தியா என்எஸ்ஜி-யில் சேருவதற்கு சீனா தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறது. அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில…
-
- 0 replies
- 350 views
-