Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. அமெரிக்காவில் பூமியில் திடீரென ஏற்பட்ட பிளவில் கட்டிடங்கள் புதைந்தன – காணொளி இணைப்பு:- அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள புளோரிடா மாநிலத்தில் பூமியில் ஏற்பட்ட பிளவில் இரண்டு கட்டிடங்கள் பூமியில் புதைந்துள்ளது. திடீரென பூமியில் ஏற்பட்ட பிளவு கட்டிடங்களை முழுமையாக பூமியினுள் புதைந்ததை தொடர்ந்து அருகாமையில் உள்ள வீடுகளில் வசிப்போர் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். சிறியதாக ஏற்பட்ட பிளவு சிறிது நேரத்தில் பெரியதானதால் இரண்டு கட்டிடங்கள் பூமிக்கடியில் செல்ல காரணமாகி உள்ளதாகக் கூறப்படும் நிலையில், தற்சமயம் பூமியில் ஏற்பட்ட பிளவு நின்றிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை இரு கட்டிடங்களை முழுமையாக அழித்துள்ள பிளவு ம…

  2. டிரம்ப் ஜுனியர் சந்திப்பு: வருகையை உறுதி செய்த ரஷ்ய பரப்புரையாளர் படத்தின் காப்புரிமைAFP Image captionநடாலியா வெசெல்னிட்ஸ்கயாவுடன் டிரம்ப் ஜுனியர் நடத்திய சந்திப்பு சர்ச்சையை கிளப்பியுள்ளது. கடந்த ஆண்டு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது மகனுடன் நடைபெற்ற சந்திப்பில் சோவியத் ஒன்றியத்தின் புலனாய்வுத்துறையின் முன்னாள் அதிகாரி மூத்த உதவியாளர்களுடன் கலந்து கொண்ட விவகாரம் வெளியாகியுள்ளது. தற்போது பரப்புரையாளராக இருக்கும் ரினாட் அக்மெட்சின் (Rinat Akhmetshin) டிரம்ப் அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பில் தான் கலந்து கொண்டதை அமெரிக்க ஊடகம் ஒன்றில் உறுதிப்படுத்தியுள்ளார். அந்த சந்திப்பில் ஹிலரி கிளிண்டன் மீத…

  3. `அணு விஞ்ஞானிகள் ஆய்வு செய்த பிறகே இறைச்சியை உண்டார் சதாம் ஹூசைன்' படத்தின் காப்புரிமைGETTY IMAGES மாட மாளிகைகளை கட்டுவதில் பிரசித்தி பெற்ற சதாம் ஹுசைன், பெரிய அளவிலான மசூதிகளை கட்டுவதிலும் விருப்பம் கொண்டவர். பாக்தாதில் சதாம் ஹுசைன் கட்டிய 'உம் அல் குரா' (Umm al-Qura) மசூதியும் அதில் ஒன்று. வளைகுடா போரில் தான் வெற்றி பெற்றதாகக் கூறிய சதாம், பத்தாவது ஆண்டு வெற்றி விழாவிற்காக சிறப்பாக கட்டப்பட்ட இந்த மசூதியின் ஸ்தூபிகள் ஸ்கட் ஏவுகணையை நினைவுபடுத்துபவை. இஸ்ரேலுடனான கடும் யுத்தத்தின் போது ஸ்கட் ஏவுகணையை சதாம் ஹுசைன் பயன்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES 43 நாட்கள் தொடர்ந்த 'ஆபரேஷன் டெஸர்ட் ஸ்டாமை' - ந…

  4. குடியேறிகளின் படகுகளை தீயிட்டு எரிக்கும் இத்தாலி லிபியாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையிலான கடல்வழி உலகின் ஆபத்தான குடியேற்ற வழியாக இது வர்ணிக்கப்படுகிறது. இந்த கடல்வழியில் இந்த ஆண்டில் இதுவரை இரண்டாயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். எப்படியாவது ஐரோப்பாவுக்குள் நுழைய விரும்பும் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளே இப்படி பலியானவர்கள். அப்படியானவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ள Doctors Without Borders என்கிற தொண்டுநிறுவன கப்பலில் கடந்த ஒருமாதமாக இருக்கும் பிபிசி செய்தியாளர் அனுப்பிய பிரத்யேகச் செய்தித்தொகுப்பு. BBC

  5. இரோம் ஷர்மிளா கொடைக்கானலில் திருமணம் செய்ய விஜயகாந்த் கட்சி பிரமுகர் எதிர்ப்பு மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலரான இரோம் ஷர்மிளா கொடைக்கானலில் திருமணம் செய்துகொள்ளக் கூடாது என்று ஆட்சேபணை தெரிவித்து தே.மு.தி.கவைச் சேர்ந்தவரும் சமூக ஆர்வலருமான மகேந்திரன் என்பவர் மனு செய்திருக்கிறார். படத்தின் காப்புரிமைPTI மணிப்பூர் மாநிலத்தில் சிறப்பு ஆயுதப் படைச் சட்டத்தை எதிர்த்துப் போராடி வந்த சமூக ஆர்வலரான இரோம் ஷர்மிளா, தனது நீண்ட நாள் தோழர் டெஸ்மாண்ட் அந்தோணி ஹட்டின்ஹோவை மணப்பதற்காக திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள சார் - பதிவாளர் அலுவலகத்தில் புதன்கிழமையன்று விண்ணப்பித்திருந்தார். டெஸ்மாண்ட் வெளிநாட்டவர் எ…

  6. விமான பணிப்பெண்ணை 'பாட்டி' என்று கேலி செய்த கத்தார் ஏர்வேஸ் தலைமை நிர்வாகி படத்தின் காப்புரிமைREUTERS விமானப் பணியாளர்கள் குறித்து ஆபாசமாக கருத்து கூறியதற்காக கண்டனம் தெரிவிக்கப்பட்ட கத்தார் ஏர்வேஸ் தலைமை நிர்வாகி மன்னிப்புக் கோரினார். கடந்த வாரம் அயர்லாந்தில் நடைபெற்ற இரவு விருந்து ஒன்றில் பேசிய கத்தார் ஏர்வேஸின் தலைமை நிர்வாகி அக்பர் அல் பெக்கர், அமெரிக்க ஏர்லைன்ஸ் "தரம்" குறைவாக இருப்பதாகவும், அதில் "பாட்டிகள் சேவை வழங்குவதாகவும்" கூறியிருந்தார். "எங்கள் விமான பணியாளர்களின் சராசரி வயது 26 மட்டுமே" என்று தற்புகழ்ச்சியாகவும் அவர் பேசினார்.. இந்தக் கருத்துகளுக்கு பலரும் கண்டனங்களை எழுப்பியிருக்கும் நிலை…

  7. உயிரைப்பணயம் வைத்து மத்தியதரைக்கடலில் பயணித்த ஆயிரம் குடியேறிகள் ஒரே நாளில் மீட்பு! ஆட்கடத்தல் படகுகளை அழிப்பதன் மூலம் இவர்களின் எண்ணிக்கையை குறைக்க இத்தாலிய கடற்படை முயற்சி; பிரெகெஸிட்டுக்குப்பின் ஆசிய நாடுகளில் புதிய வர்த்தக வாய்ப்புகளை நாடும் ஐக்கிய ராஜ்ஜியம், ஆனால் மூடப்பட்ட சீன சந்தையின் கதவுகள் பிரிட்டனுக்குத் திறக்குமா? மற்றும் வானிலிருந்து வரும் பாதுகாப்பு! பிரிட்டனின் புத்தம்புது ஆளில்லா விமான காவல்துறை குறித்த பிபிசியின் பிரத்யேக படப்பிடிப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  8. பாரீஸ் நகரில் வரலாறு காணாத மழை! பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒரே நாளில் மட்டும் வரலாறு காணாத அளவுக்கு மழை கொட்டித் தீர்த்துள்ளது. இதனால், 20 மெட்ரோ ரெயில் நிலையங்கள் மூடப்பட்டன. பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நேற்று முன்தினம் திடீரென புயல் தாக்கியது. சுமார் இரண்டு மணி நேரம் வெளுத்த மழை 54 மில்லி மீட்டர் அளவுக்கு பதிவாகியுள்ளது. இது ஒரு மாதத்தில் பெய்யும் சராசரி மழையின் அளவாகும். இதன் காரணமாக அந்நகரில் உள்ள 20 மெட்ரோ ரெயில் நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. நகரின் முக்கிய சாலைகள் வெள்ளத்தால் மிதக்கின்றன. கடந்த 1995-ம் ஆண்டு 47.4 மி.மீ அளவுக்கு மழை பெய்ததே அதிகபட்சமாக இருந்தது. பாரீசின் புறநகர் பகுதிகளிலும் மழையின் தாக்கம் அதிகமாக இருந்ததாக அந்நாட்…

  9. அண்டார்டிகாவில் மிகப்பெரிய பனிப்பாறை உடைந்து பிரிந்தது: கடல் மட்டம் உயரும் அபாயம் அண்டார்டிகாவின் மேற்கில் இருந்து மிகப்பெரிய அளவிலான பனிப்பாறை உடைந்து தனியாகப் பிரிந்து சென்றுள்ளது. இதுவரை பிரிந்து சென்ற மிகப்பெரிய பனிப்பாறைகளில் இதுவும் ஒன்றாகும். இதன் சுற்றளவு 5,800 சதுர கிலோமீட்டர்களாகும். எடை சுமார் ட்ரில்லியன் டன் வரை இருக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால் அண்டார்டிகாவின் மேற்குப் பகுதியான ”லார்சன் C” என்ற பனி அடுக்கு 12 சதவீதம் அளவிற்கு குறைந்துவிட்டது. இந்த பனிப்பாறையை ஜரோப்பிய செயற்கைக்கோள்களின் மூலமாக அறிவியலாளர்கள் கடந்த சில தினங்களாக தீவிரமாகக் கண்காணித்து வந்தனர். இதனி…

  10. பிரிட்டனில் குறைந்த விலையில் விமான ஓடுபாதைகளை அமைக்கவிருக்கும் இந்தியர் பிரிட்டனின் ஹீத்ரூ விமானநிலையத்தில் மூன்றாவது ஓடுபாதை அமைப்பதற்காக பிரிட்டனில் வசிக்கும் இந்தியர் உருவாக்கிய திட்ட மதிப்பீட்டை கேட்ட அனைவரும் வியப்பின் உச்சிக்கே சென்றுவிட்டனர். விமான ஓடுபாதை திட்டத்தை முன்வைத்த அரோரா குழுமத்தின் நிறுவகர் சுரிந்தர் அரோராவின் திட்ட மதிப்பீடு, தற்போதைய திட்டத்தைவிட 6.7 பில்லியன் பிரிட்டன் பவுண்டுகள் குறைவானதாக இருக்கும். பாகிஸ்தானின் எல்லைப் பகுதியில், இந்தியாவில் பஞ்சாப் மாநிலத்தில் ஃபாஜில்கா மாவட்டத்தில் பிறந்த சுரிந்தர், தொழிலில் குறுகிய காலத்திலேயே நல்ல பெயரை சம்பாதித்துவிட்டார். பிரிட்டனின் மி…

  11. 'பிசிக்கல் ஷேப் நல்லா இருக்கு'' ட்ரம்ப்பின் புது சர்ச்சை! ட்ரம்ப் செய்வதெல்லாம் சர்ச்சையாகிறதா.. இல்லை சர்ச்சையைத் தேடித் தேடி ட்ரம்ப் செய்கிறாரா என விவாதிக்கும் அளவுக்கு வைரல் சர்ச்சைகளில் சிக்கி வருகிறார் ட்ரம்ப். ட்ரம்ப்பின் தற்போதைய ஹாட் சர்ச்சை ஃப்ரான்ஸ் அதிபரின் மனைவியை வர்ணித்ததுதான். நேற்று ட்ரம்ப் மற்றும் அவருடைய மனைவி மெலானியா ட்ரம்ப் பிரான்ஸ் நாட்டில் உள்ள பிரபல இடத்துக்குச் சுற்று பயணம் சென்றனர். பின்னர், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன் மற்றும் அவருடைய மனைவி பிரிஜிட்டே மேக்ரோன் இருவரையும் சந்தித்துப் பேசினர். அவர்கள் பேசி முடித்து பிரியும் முன்னர், அதிபர் ட்ரம்ப் மேக்ரோனின் மனைவியிடம் "உங்கள் உடலமைப்பு நன்றாக…

  12. ஆப்பிரிக்க பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து வெளியிட்ட பிரான்ஸ் அதிபர் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார்:- ஆப்பிரிக்க பெண்கள் 8 குழந்தைகள் வரை பெற்றுக்கொள்வதனாலேயே அங்கு பிரச்சனை நிலவுகிறது என சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மாக்ரோன் பேசியிருப்பது சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் கடந்த வாரம் நடந்த ஜி-20 உச்சி மாநாட்டில் ஆப்பிரிக்கா எதிர்கொள்ளும் சவால்கள் என்ற தலைப்பில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மாக்ரோன் உரையாற்றினார். அந்த பேச்சு குறித்த வீடியோ பதிவுகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த கூட்டத்தில்…

  13. சீனா: நோபல் பரிசு பெற்ற மனித உரிமை ஆர்வலர் லியு சியாபோ மரணம் சீனாவில் நடைபெற்று வரும் ஜனநாயக படுகொலையை தோலுரித்து காட்டியதற்காக நோபல் பரிசு பெற்ற மனித உரிமை ஆர்வலர் லியு சியாபோ புற்றுநோய் முற்றிய நிலையில் இன்று மரணம் அடைந்தார். பீஜிங்: சீனாவில் ஜனநாயகம் தொடர்பான ‘சார்ட்டெர் 8’ என்ற நூலை கடந்த 2009-ஆம் ஆண்டு வெளியிட்ட காரணத்துக்காக அந்நாட்டின் பிரபல எழுத்தாளரான லியு சியாபோ (61), என்பவருக்கு சீன அரசு 11 வருட சிறைத் தண்டனை விதித்தது. கடந்த 2010-ம் ஆண்டு அவருக்கு சமாதானத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இதனால் சீனாவுக்கும் நோபல் பரிசை அளித்துவரும் நார்வே நாட்ட…

  14. கத்தார் - அமெரிக்கா ஒப்பந்தத்தால் திருப்தியடையாத அரபு நாடுகள் கூட்டணி தீவிரவாதத்தை எதிர்த்து போராடுவதற்கான நிதி தொடர்பான ஒப்பந்தத்தில் வாஷிங்டன், கத்தாருடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டாலும், கத்தாரை புறக்கணிக்கும் முடிவை நான்கு அரபு நாடுகளும் தொடரவிருக்கின்றன. படத்தின் காப்புரிமைEPA அமெரிக்க வெளியுறவுச் செயலர் ரெக்ஸ் டில்லர்சனால் முன்னெடுக்கப்பட்ட இந்த ஒப்பந்தம் "போதாது" என்று செளதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்டுகள், பஹ்ரைன், எகிப்து ஆகிய நாடுகள் கூறுகின்றன. "கத்தாரை நம்பமுடியாது" என்று கூறும் இந்த நாடுகள், அதற்கு உதாரணமாக முந்தைய ஒப்பந்தங்களை சுட்டிக்காட்டுகின்றன. வளைகுடா பிராந்தியத்தில் தீவிரவாதக் குழ…

  15. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பிரான்ஸ் வந்திருக்கிறார்! அமெரிக்க தேர்தலில் ரஷ்யத்தலையீடு இருந்த சர்ச்சை குறித்து அவரது ஆதரவு வாக்காளர்களின் கருத்தென்ன? கீழைத்தேசங்களில் வர்த்தகத்தை விரிவாக்க விரும்பும் ஐரோப்பிய திட்டத்துக்கு சீனாவின் புதிய பட்டுப்பாதை உதவியா? உபத்திரமா? மற்றும் சேர்ந்து விளையாடும் சிறாரும் முதியோரும்! முதியோர் இல்லத்துக்கு மத்தியில் சிறுவர் பராமரிப்பு நிலையம் அமைக்கும் வித்தியாசமான முயற்சி குறித்த சுவாரஸ்யமான செய்தித்தொகுப்பு! ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  16. பெர்லின் மியூசியத்திலிருந்து களவாடப்பட்ட 100 கிலோ எடை கொண்ட அரிய தங்க நாணயம் ’பிக் மேப்பிள் லீஃப்’ என்ற 100 கிலோ எடையுள்ள அரிய தங்க நாணயம் களவாடப்பட்டது. | படம். ஏ.பி. பெர்லினில் உள்ள போட் மியூசியத்திலிருந்து 100 கிலோ எடை கொண்ட அரிய தங்க நாணயம் களவாடப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 1 மில்லியன் டாலர்களாகும், இது 53 செமீ (21 அங்குலங்கள்) அகலமும், 3 செமீ அடர்த்தியும் கொண்டது, இதில் இங்கிலாந்து ராணி 2ம் எலிசபத் படம் பொறிக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 1 மில்லியன் டாலர்கள் என்றாலும் சந்தை மதிப்பு சுமார் 4 மில்லியன் டாலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. திருடர்கள் மியூசியத்திற்கு அருகில் இருக்கும் ரயில்வே இர…

  17. சவூதி அரேபியாவில் ஏற்பட்ட தீவிபத்தில் இந்தியர் உட்பட 11 பேர் உயிரிழப்பு சவூதி அரேபியாவில் உள்ள நஜ்ரான் என்ற நகரில் உள்ள ஒரு வீட்டில் இன்று ஏற்பட்ட தீவிபத்தில் புலம்பெயர்நத தொழிலாளர்கள் 11 பேர் உயிரிழந்துள்ளதுடன் 6 பேர் படுகாயமடைந்துள்ளனர். தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் இந்தியா மற்றும் பங்களாதேசைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. தீ விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்ப http://globaltamilnews.net/archives/32672

  18. ரஷ்ய வழக்கறிஞரை தான் சந்தித்தது குறித்து தந்தைக்கு தெரியாது என்கிறார் டொனால்ட் ட்ரம்பின் மகன்! ஹிலரி கிளிண்டனை பற்றி தகவல் சேகரிக்க நடந்த சந்திப்பால் தொடரும் சர்ச்சை, மொசூல் நகரெங்கும் மழலைகளின் அழுகுரல்! பாதுகாப்பு தேடி வெளியேறும் குடும்பங்கள் அனாதையான குழந்தைகளையும் முதியவரையும் அரவணைத்து ஆறுதல்! மற்றும் சீனாவின் புதிய பட்டுப்பாதை திட்டத்தால் தமக்கு வேலைவாய்ப்பு உருவாகவில்லை; செல்வம் பெருகவில்லை என கசகிஸ்தானில் கவலை அதிகரித்துள்ளது குறித்த செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  19. கத்தார் பால் தேவைக்கு ஜெர்மனியில் இருந்து பறந்து வந்த மாடுகள் சௌதி அரேபியா தலைமையிலான அரபு நாடுகள் கத்தாரை தனிமைப்படுத்தியுள்ள நிலையில், கத்தாரில் பால் விநியோகத்தை அதிகரிக்க மாடுகள் விமானத்தில் கொண்டுவரப்பட்டுள்ளன. படத்தின் காப்புரிமைREUTERS இறக்குமதி செய்யப்பட்ட உள்ள 4000 மாடுகளில், முதல்கட்டமாக 165 ஹால்ஸ்டீன் பால் மாடுகள் ஜெர்மனியில் இருந்து கத்தார் வந்து சேர்ந்துள்ளன. கத்தாரில் வாழும் 2.7 மில்லியன் மக்களுக்கான அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய அந்நாடு இறக்குமதி பொருட்களை நம்பியிருக்கும் நிலையில், பிற நாடுகள் விதித்திருக்கும் வான், கடல் மற்றும் நில வழி தடையின் காரணமாக கத்தாரில் பெருங்குழப்பம் ஏற்பட்டுள்ளது. …

  20. கத்தார்: சமரச தூதுவரா, சர்ச்சையின் நாயகனா? பல விடயங்களில், மத்தியஸ்தராக தன்னைக் காட்டிக் கொள்ளும் கத்தார் நாடு, அந்தத் தகுதியைப் பெற்றிருக்கிறதா?, கத்தார் ஏன் குறிவைக்கப்படுகிறது? அதன் இலக்கு என்ன? படத்தின் காப்புரிமைREUTERS பிபிசி உலக சேவைக்காக, கத்தார் குறித்து அலசும் ஜேம்ஸ் ஃப்ளெட்சரின் விரிவான ஆய்வின் அடுத்த பாகம்: இதில், முதலாவதாக, கத்தார் விவகாரங்கள் பற்றி நிபுணத்துவம் பெற்ற லீனா காதிப் பார்வையில் என்னென்ன விவரங்கள் கிடைக்கின்றன என்பதைத் தருகிறார். (பிரிட்டனுக்குச் செல்வதற்கு 20 ஆண்டுகளுக்கு முன்னர் லெபனானில் வளர்ந்த லீனா காதிப், இப்போது சத்தம் சிந்தனைக் குழுவின் மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக…

  21. ரஷ்யா: '30 அமெரிக்க தூதரக அதிகாரிகளை வெளியேற்ற தயார்' படத்தின் காப்புரிமைGETTY IMAGES வாஷிங்டனின் தடைகளுக்கு பதிலடியாக, 30 அமெரிக்க தூதரக அதிகாரிகளை வெளியேற்ற தயார் என்று கூறும் ரஷ்ய அதிகாரிகள், அமெரிக்க அரசின் சொத்துக்களை பறிமுதல் செய்யவும் தயராக இருப்பதாக அறிவித்துள்ளனர். ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சகத்தை மேற்கோள்காட்டி, இந்த செய்தியை லெஸ்வெஸ்டா (Izvestia) நாளிதழ் வெளியிட்டிருக்கிறது. அண்மையில் இதேபோன்ற அச்சுறுத்தல்களை வேறு ரஷ்ய அதிகாரிகளும் வெளியிட்டிருந்தனர். டிசம்பர் மாதத்தில் 35 ரஷ்ய தூதர்களை வெளியேற்றிய ஒபாமா நிர்வாகம், ரஷ்யாவின் இரண்டு புலனாய்வு அமைப்புக்களையும் மூடியது. அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் த…

  22. வீழ்ந்தது ஐ.எஸ் சாம்ராஜ்யம்: அல்-பக்தாதி மரணமடைந்ததாக சிரிய போர் கண்காணிப்பகம் அறிவிப்பு சிரியா மற்றும் ஈராக் நாட்டில் செயல்பட்டு வரும் ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தின் தலைவர் அபு பக்கர் அல்-பக்தாதி ராணுவத்தினரின் வான் ஏவுகணை தாக்குதலில் மரணமடைந்ததாக சிரிய போர் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. டமாஸ்கஸ்: சிரியா மற்றும் ஈராக்கில் அரசுப் படைகளை எதிர்த்து தாக்குதல் நடத்தி வரும் தீவிரவாதிகள் ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்கள். ஐ.எஸ்.ஐ.எஸ். என்பது ‘இஸ்லாமிக் ஸ்டேட் ஆப் ஈராக் அன்ட் சிரியா’ (சிரியா மற்றும் ஈராக்கில் நாடு கடந்த இஸ்லாமிய ஆட்சி) என்ற ஆங்கில வார்த்தையின் ச…

  23. ஜி.எஸ்.டியின் தாக்கம் நடுத்தர மக்களை எப்படி பாதிப்படைய வைக்கிறது. Positive and Negative impact of GST | Socio Talk

  24. சிரியாவில் நடக்கும் ஐஎஸ் அமைப்புக்கு எதிரான சண்டையின் நிலவரமென்ன? ரக்காவில் முன்னேறும் குர்துப்படைகளோடு செல்லும் பிபிசி செய்தியாளர் போரின் முன்னரங்கிலிருந்து தரும் பிரத்யேக செய்திகள்!! சீனாவின் வர்த்தகத்தையும் சுற்றுலாவையும் வளர்க்கும் புதிய பட்டுப்பாதையில் பெருகும் நவீன ரயில்கள்! சீன செல்வாக்கை பெருக்குமா? சிறுபான்மையினரை அரவணைக்குமா? மற்றும் பழங்கால கருப்பு வெள்ளை புகைப்படங்களை வண்ணமயமான நவீன படங்களாக மாற்றுபவரின் கதை ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  25. கத்தாருக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்? படத்தின் காப்புரிமைJULIAN HERBERT/GETTY IMAGES ஒரு மாதம் முன்பு ஒரு செவ்வாய்க்கிழமை காலை, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வழக்கம்போல் தனது போனை எடுத்து, டிவிட்டரை திறந்தார்…. அன்று அவர் டிவீட் செய்த செய்தி என்ன? போலி செய்தி ஊடகங்கள்? "மோசடி ஹிலாரி" அல்லது ஜனநாயக கட்சி?… இல்லை. மத்திய கிழக்கில் இருக்கும் சிறிய நாடு கத்தார். "செளதி அரேபியப் பயணம் நன்றாக இருந்தது… அதற்கு நன்றி சொல்லலாம்" என டிரம்ப் டிவீட் செய்கிறார், "தீவிரவாதத்திற்கு நிதியுதவி அளிப்பது குறித்து கடுமையான முடிவு எடுக்கப் போவதாக சொன்னார்கள்.. அவர்கள் சொல்லும் அனைத்தும் கத்தாரை சுட்டிக்காட்டுகிறது". கத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.