உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26701 topics in this forum
-
ஆஃப்கானிஸ்தான்: ஐ.எஸ் பிடியில் அமெரிக்க ராணுவ வீரர்? ஆஃப்கானிஸ்தானில் தங்கள் படையை சேர்ந்த அமெரிக்க ராணுவ வீரர் ஒருவரை ஐ.எஸ் அமைப்பினர் பிடித்து வைத்துள்ளதாக வெளியான தகவலை அமெரிக்க தலைமையிலான நேட்டோ படையினர் மறுத்துள்ளனர். ஐ.எஸ் இணைய தளத்தில் ரையன் ஜே லார்சன் என்ற ராணுவ அதிகாரியின் அடையாள அட்டை வெளிப்படையாக பதிவு செய்யப்பட்ட ஒரு நாளுக்குப் பிறகு நேட்டோ படையினரின் இந்த மறுப்பு வந்துள்ளது. கிழக்கு ஆஃப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க படைகளிடம் இருந்து கைப்பற்றியதாக சொல்லப்படும் ஆயுதங்கள், வெடிப்பெருட்கள் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்களின் புகைப்படங்களும் இடம்பெற்றிருந்தன. நங்கர்ஹார் மாகாணத்தில் ஆஃப்கன் படைகளுக்கு உதவியாக அமெரிக்க சிறப்பு …
-
- 0 replies
- 345 views
-
-
டெல்லி இந்திரா காந்தி மைதானத்தில் மக்களை சந்தித்த பிரதமர் மோடி தமிழ்நாட்டு இட்லியை பீட்சாவோடு ஒப்பிட்டு கருத்து தெரிவித்துள்ளார். டெல்லி இந்திராகாந்தி மைதானத்தில் முதல்முறையாக பிரதமர் நரேந்திர மோடி மக்களை நேரடியாக சந்தித்து அவர்களுடன் உரையாடியானர். அப்போது PMO app என்னும் ஸ்மார்ட் போன்களுக்கான புதிய செயலியை அறிமுகப்படுத்தினார். இந்த செயலியின் மூலம் நரேந்திர மோடியின் அரசு சார்ந்த செயல்பாடுகளை கண்காணிக்க முடியும். மேலும் பசு மாட்டினை பாதுகாப்பதாக கூறிக் கொண்டு சிலர் தேவையற்ற வன்முறைகளில் ஈடுபடுவதாகவும் பசுக்கள் கொல்லப்படுவதை விட சாலைகளில் கிடக்கும் பிளாஸ்டிக் குப்பைகளை உண்பதால் தான் அதிக பசுக்கள் உயிரிழப்பதாகவும் மோடி கூறினார். உணவு குறித்தும் அதன் பா…
-
- 2 replies
- 453 views
-
-
ஜேர்மனி நாட்டில் பயங்கர ஆயுதங்களுடன் மர்ம நபர் ஒருவர் நுழைந்து அங்குள்ளவர்களை பிணையக்கைதியாக வைத்துள்ளதால் பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.ஜேர்மனியில் உள்ள Saarbruecken நகர் உணவகம் ஒன்றில் சற்று முன்னர் ஆயுதம் ஏந்திய மர்ம நபர் ஒருவர் நுழைந்து அங்குள்ளவர்களை சிறை பிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.எனினும், உணவகத்தில் இருந்து சில ஊழியர்கள் தப்பி வெளியேறியுள்ளனர்.மேலும், எந்த நேரத்திலும் உணவகத்திற்குள் நுழைந்து தாக்குதல் நடத்த உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இச்செய்தி உறுதி செய்யப்பட்டதும் தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தும் பொலிசார் உணவகத்தை சுற்றி குவிக்கப்பட்டனர். இதற்கிடையில், பொலிசார் உணவகத்திற்குள் நுழைந்தபோது, அங்கு கீழ்தளத்தி…
-
- 3 replies
- 359 views
-
-
எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் துருக்கி அதிபர் எர்துவான் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட பேரணி துருக்கியில் தோல்வியில் முடிந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதில் பலியானோருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் அங்குள்ள பெரிய நகரமான இஸ்தான்புல்லில் பிரம்மாண்ட பேரணி ஒன்று இன்று நடைபெற உள்ளது. துருக்கி அதிபர் ரிசீப் தாயிப் எர்துவான் எதிர்க்கட்சி தலைவர்களுடன் துருக்கி அதிபர் ரிசீப் தாயிப் எர்துவான் கூட்டத்தினரிடையே உரையாற்ற இருக்கிறார். இந்த கூட்டத்திற்கு குர்து குழுக்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. ஜனநாயகத்தை நிலைநாட்ட துணையாக நிற்போம் என்று மக்கள் பலர் கூறினாலும், தோல்வியில் முடிந்த ஆட்சிக் கவிழ்ப்பு…
-
- 0 replies
- 346 views
-
-
படாம், இந்தோனேஷியாவின் படாம் தீவுப்பகுதியில் நேற்று முன்தினம் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 6 பயங்கரவாதிகள் சிக்கினர். அவர்கள் சிங்கப்பூரில் தாக்குதல் நடத்த திட்டமிட்டதும், இவர்களுக்கு ஐ.எஸ். பயங்கரவாதி பஹ்ருன் நயிமுடன் தொடர்பு இருந்ததும் தெரியவந்தது. மேலும் படாமில் இருந்தவாறே சிங்கப்பூரில் ராக்கெட் தாக்குதலில் ஈடுபட திட்டமிட்டதாகவும் கூறப்படுகிறது. சிங்கப்பூருக்கு மிக அருகே வெறும் 15 கி.மீ. தொலைவிலேயே படாம் இருப்பதால் ராக்கெட் வீச்சு சாத்தியப்படும் என பாதுகாப்பு வல்லுனர்கள் கூறியுள்ளனர். படாமில் இருந்து சிங்கப்பூருக்கு படகு போக்குவரத்து நடக்கிறது. சுற்றுலா பிரதேசங்களான இந்த பகுதிகளில் மக்கள் அடிக்கடி கூடி தங்கள் விடுமுறையை கொண்டாடி வருகின்றனர். எனவே இந்த பகுதிகள…
-
- 1 reply
- 355 views
-
-
ஆஸ்திரேலியாவின் மெல்ஃபோன் தாக்குதலை திட்டமிட்டதாகக் கருதப்படும் நபர் கைது ஆஸ்திரேலியாவின் மெல்ஃபோன் நகரில் ஒரு தீவிரவாதத் தாக்குதலை திட்டமிட்டதாக, தீவிரவாதக் குழுக்களோடு தொடர்புடையதாக அறியப்படும் தீவிர வலதுசாரி நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தீவிரவாதத் தடுப்பு காவல்துறையினர் பல்வேறு இடங்களில் நடத்திய தேடுதல் வேட்டைக்கு பிறகு, சனிக்கிழமை அன்று பிலிப்பு காலியே கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்த ஆண்டு மெல்போர்னில் குடியேறிகள் ஆதரவு குழுக்களோடு நடைபெற்ற வன்முறை மோதல்களில், ட்ரு புளு மற்றும் ரிகிளெயிம் ஆஸ்திரேலியா போன்ற தீவிர வலதுசாரி குழுக்கள் ஈடுபட்டிருந்தன. http://www.bbc.com/tamil/global/2016/08/160807_australia_arrest
-
- 0 replies
- 281 views
-
-
அல்ஜியர்ஸ்: ஆப்பிரிக்க நாடான அல்ஜீரியாவில் அல்ஜியர்ஸ் நகரில் இருந்து மார்செய்லே என்ற இடத்துக்கு போயிங் 737-600 ரக பயணிகள் விமானம் புறப்பட்டு சென்றது.அதில் ஏராளமான பயணிகள் இருந்தனர். இந்த நிலையில் புறப்பட்ட சிறிது நேரத்தில் விமான நிறுவனத்தின் “ரேடார்” கட்டுப்பாட்டில் இருந்து அந்த விமானம் திடீரென மாயமானது. இதனால் பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது. அந்த விமானம் எங்கோ விழுந்து நொறுங்கி விபத்துக் குள்ளானதாக கருதப்பட்டது. ஆனால் சிறிது நேரத்தில் அது விபத்துக்குள்ளாகவில்லை என அறிவிக்கப்பட்டது.தொழில்நுட்ப கோளாறு காரணமாக அந்த விமானம் புறப்பட்ட 30 நிமிடத்தில் மீண்டும் அல்ஜியர்ஸ் விமான நிலையத்திலேயே பத்திரமாக தரை இறக்கப்பட்டது. இச…
-
- 0 replies
- 250 views
-
-
ஐ.நா. சபையின் அடுத்த பொதுச் செயலாளர் யார்? - போர்ச்சுகல் முன்னாள் பிரதமர் முன்னிலை: பெண் போட்டியாளர்கள் பின்னடைவு அந்தோனியோ குட்டெர்ஸ் ஐ.நா.சபையின் அடுத்த பொதுச் செயலாளரை தேர்ந்தெடுப்பதற் கான நடவடிக்கையில் போர்ச்சு கல் முன்னாள் பிரதமர் அந்தோ னியோ குட்டெர்ஸ் முன்னிலை வகிக்கிறார். இவர் ஐ.நா. தூதராக (அகதிகள்) 10 ஆண்டுகள் பணி யாற்றி உள்ளார். இப்போதைய ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி-மூனின் பதவிக் காலம் வரும் டிசம்பர் 31-ம் தேதியுடன் முடிவடைகிறது. 11 பேர் போட்டி இந்நிலையில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான நடவடிக் கைகள் தொடங்கி உள்ளன. முன் எப்போதும் இல்லாத வகையில் வெளிப்படையான முறையில் பொதுச் செயலாளரை தேர்…
-
- 0 replies
- 171 views
-
-
கார்களுக்கு அடிப் பகுதி வழியாக வழி விடும் அளவுக்கு உயரமான பேருந்தின் சோதனை ஓட்டம் சீனாவில் நடத்தப்பட்டது. இந்தப் புதுமையான வடிவமைப்பின் மூலம், போக்குவரத்து நெரிசல் பெருமளவு மிச்சமடைவதுடன், சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இந்தப் பேருந்து மின்சாரத்தில் இயங்கக் கூடியது என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து சீன அரசு நாளிதழான "பீப்பிள்ஸ் டெய்லி' தெரிவித்ததாவது: கார்கள் புகுந்து செல்லும் அளவுக்கு உயரமாக வடிவமைக்கப்பட்ட பிரம்மாண்ட "டி.ஈ.பி-1' வகைப் பேருந்து, செவ்வாய்க்கிழமை சோதனை முறையில் ஓட்டிப் பரிசோதிக்கப்பட்டது. ஹெபேய் மாகாணம், குன்ஹுவான்டாவ் நகரில் இந்தப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது என்று அந்த நாளிதழ் தெரிவித்தது. 22 மீட்டர் …
-
- 3 replies
- 411 views
-
-
பாரிஸ்: ஐரோப்பிய நாடான பிரான்சில், மதுபான விடுதி ஒன்றில், பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பிரான்ஸ் நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள, ரோயூன் நகரில் மதுபான விடுதியுடன் கூடிய ஓட்டல் ஒன்றில், நேற்று முன்தினம் இரவு பிறந்த நாள் கொண்டாட்டம் நடந்தது. இதையொட்டி, கேக் வெட்டப்பட்ட போது, அதன் மீது இருந்த மெழுகுவர்த்தி, எரிந்த நிலையில் கீழே விழுந்தது. தரை விரிப்பில் பற்றிய தீ, வேகமாக பரவி, அந்த அறையின் கூரை வரை பரவியது. உள் அலங்கார வேலைப்பாடுகள் நிறைந்த அந்த அறையில், அனைத்தும் எளிதில் தீ பற்றக்கூடியதாக இருந்தன. இதனால், வேகமாக பற்றிய தீ, அந்த அறை முழுவதும் பரவியது. அங்கு இருந்தவர்களில் பலர், அலறியடித்து வெளியேறினர். தீயை…
-
- 4 replies
- 377 views
- 1 follower
-
-
ஜெர்மனி தீவிரவாதத் தாக்குதல்: பின்னணியில் யார் என கண்டறிய சௌதி அரேபியா உதவி ஜெர்மனியில் கடந்த மாதம் நடைபெற்ற இஸ்லாமியவாதிகளின் தாக்குதல்களுக்கு பின்ணியில் இருப்போரை கண்டறிய சௌதி அரேபியா உதவி வழங்க முன்வந்து இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதல்களில் சௌதி அரேபியர்கள் என்ன பங்களிப்பை செய்திருக்கின்றனர் என்பதை கண்டறிய இரு நாடுகளும் தங்களால் இயன்ற அனைத்தையும் செய்யும் என்று கூறுகின்ற மூத்த சௌதி அதிகாரிகளின் கூற்றுக்களை மேற்கோள்காட்டி டெர் ஸ்பீகில் இதழ் தெரிவித்திருக்கிறது. தாக்குதல் நடத்தியோரை தீவிரவாத உணர்வு அடைய செய்வதிலும், அறிவுறுத்தியதிலும் பங்காற்றியிருக்கம் இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்து கொள்ளும் அமைப்பைச் சேர்ந்த …
-
- 0 replies
- 350 views
-
-
பீஜிங், தென் சீனக் கடல் விவகாரத்தில் இந்தியாவின் உதவியை நாட சீன அரசு முடிவு செய்துள்ளது. தென் சீனக் கடல் பகுதியில் சீனா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அங்கு பல்வேறு பகுதிகளில் மணல், கற்களை கொட்டி செயற்கை தீவுகளை, சீனா அமைத்து வருகிறது. மேலும் விமானப்படை தளம், கலங்கரை விளக்கம், கடற்படை தளம் போன்றவற்றை உருவாக்கி வருகிறது. இதனால் பிலிப்பைன்ஸ், வியட்நாம், ஜப்பான், மலேஷியா, தைவான், புருனே உள்ளிட்ட நாடுகளுக்கும், சீனாவுக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. பிலிப்பைன்ஸ், ஜப்பானுக்கு ஆதரவாக, அமெரிக்கா குரல் கொடுத்து வருகிறது. இந்நிலையில், சீனாவுக்கு எதிராக பிலிப்பைன்ஸ், ஐ.நா.,விடம் முறையிட்டது. அத்துடன், ஐ.நா., நிரந்தர கோர்ட்டில் முறையிட்டது. அதன்படி, இந்த பிரச்ன…
-
- 0 replies
- 388 views
-
-
உணவகத்தில் பணியாற்றும் ஒபாமாவின் மகள் ஐக்கிய அமெரிக்காவின் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் மகள் சாஷா ஒபாமா, வெள்ளை மாளிகையின் வசதிகளை துறந்து, கடலுணவு உணவகமொன்றின் சேவை முகப்பு நிலையமொன்றில் பணியாற்றுவதாக தெரிவிக்கப்படுகிறது. மஷஷூஷஸ் மாநிலத்தில் உள்ள மர்தாஸ் வின்யார்ட் தீவிலுள்ள வர்த்தக நிலையமொன்றில், கோடைகால வேலையாக, 15 வயதான சாஷா உணவு பரிமாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது முழுப் பெயரான நதாஷா எனும் பெயரைப் பயன்படுத்திய சாஷா, உணவகத்தில், ஆறு பேரைக் கொண்ட இரகசிய சேவை முகவர்களுடனேயே உணவகத்தில் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடைகால விடுமுறைகளின் மேற்கூறப்பட்ட மர்தாஸ் வின்யார்ட்டே, ஒபாமா குடும்…
-
- 1 reply
- 1.1k views
-
-
கருப்பின மக்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகளை கண்டித்து லண்டனின் முக்கிய சாலைகளில் சமூக ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அமெரிக்காவை சேர்ந்த ‘ப்ளாக் லைவ்ஸ் மேட்டர்’ என்ற அமைப்பை சார்ந்த சமூக ஆர்வலர்கள் அமெரிக்கா போலீஸ் அதிகாரிகளால் கருப்பின மக்கள் கொல்லப்பட்டதை கண்டிக்கும் வகையில் லண்டனில் இன்று (வெள்ளிக்கிழமை) விமான நிலையங்களுக்கு செல்லும் முக்கிய சாலைகளில் போராட்டத்தில் ஈடுபட்டனர். லண்டனின் போராட்டகாரர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுப்பட்ட போலீஸார். இது தொடர்பாக போராட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜோஸ்வா வீராசாமி பிபிசி செய்தி நிறுவனத்திடம், “அமெரிக்காவில் கருப்பின மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை லண்டன் உள்ளிட்ட பிற உலக நாடுகள் அறிந்து …
-
- 0 replies
- 291 views
-
-
மாயமான எம்.எச்.370 விமானி ஜஹாரி அகமது ஷா-வின் சகோதரி சகினாப் ஷா, மொபைலில் உள்ள தனது சகோதரனின் புகைப்படத்தை பார்க்கிறார். | கோப்பு படம்: ஏ.பி. விமானியின் சதி காரணமாகவே மலேசியாவின் எம்.ஹெச்.370 விமானம் திசை மாற்றப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனத் தலைநகர் பெய்ஜிங் நோக்கி 239 பயணிகளுடன் கடந்த 2014 மார்ச், 8-ம் தேதி புறப்பட்டுச் சென்ற மலேசிய விமான நிறுவனத்துக்கு சொந்தமான எம்.ஹெச்.370 விமானம் இந்திய பெருங்கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என நம்பப்படுகிறது. விபத்து நிகழ்ந்து 2 ஆண்டுகள் உருண்டோடியும், இதுவரை விமானத்தின் சிதைந்த பாகங்கள் கூட கண்டுபிடிக்கப்படவில்லை. அதே சமயம் கடந்த ஆண்டு ஜனவரி மாதம்…
-
- 0 replies
- 321 views
-
-
-
- 0 replies
- 407 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில் * சிரியாவில் பெரும் மனிதநேய அவலம். அங்கு போரால் காயமடைந்த மக்களுக்கு சிகிச்சை வழங்கிய மருத்துவர் பிபிசியிடம் பேசினார். * தெற்கு சூடானில் ஊட்டச்சத்தின்மையால் மோசமாக பாதிக்கப்பட்ட குழந்தைகள். கடும் சண்டையால் இருப்பிடங்களை விட்டு ஓடும் பொது மக்கள். * எதிர்ப்பு போராட்டங்கள், ஊக்க மருந்து ஊழல், ஸீக்கா அச்சுறுத்தல் ஆகியவற்றுக்கு மத்தியிலும் ரியோ ஒலிம்பிக்ஸ் இன்று ஆரம்பிக்கிறது.
-
- 0 replies
- 356 views
-
-
புதுடெல்லி, டெல்லி ஆஸ்பத்திரியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு ஆபரேஷன் நடந்தது. சோனியா காந்திக்கு காயம் உத்தரபிரதேச சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற இருப்பதால், அங்குள்ள வாரணாசி நகரில் சோனியா காந்தி கடந்த செவ்வாய்க்கிழமை காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். காரில் ஊர்வலமாக சென்று தெருமுனை பிரசாரத்தில் ஈடுபட்ட அவருக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. சோனியா காந்திக்கு தோள்படையில் காயம் ஏற்பட்டதாகவும், கடுமையான காய்ச்சலால் அவர் பாதிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. இதனால் சோனியா காந்தியின் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. ஆபரேஷன் அங்கிருந்து தனி விமானம் மூலம் டெல்லி அழைத்து வரப்பட்ட ச…
-
- 0 replies
- 475 views
-
-
ஜேர்மனியில் பேருந்து ஒன்றை 11 வயதே ஆன சிறுவன் திருடி ஓட்டிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனியில் உள்ள பாவரியன் நகரில் இச்சம்பவம் நடந்துள்ளது. சில வாரங்களுக்கு முன்னர் தெருவில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்து ஒன்றில் நுழைந்து குறிப்பிட்ட சிறுவன் விளையாடி வந்துள்ளான். தனியாருக்கு சொந்தமான அந்த பேருந்து சில காரணங்களால் அந்த பகுதியில் உரிமையாளர்களால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனிடையே பேருந்தினுள் புகுந்து விளையாடி வந்த சிறுவனின் கண்ணில் பேருந்தை இயக்கும் சாவி சிக்கியுள்ளது.இதை வாய்ப்பாக பயன்படுத்திய சிறுவன் அந்த பேருந்தை அங்கிருந்து இயக்கி தெருவழியாக பிரதான சாலைக்கு எடுத்து வந்துள்ளான். மட்டுமின்றி பேருந்து நிறுத்தங்களில் …
-
- 3 replies
- 503 views
-
-
அமெரிக்காவில் ஐஎஸ் அமைப்பை சேர்ந்தவர் என்று தவறாக கருதி இளைஞரை அடித்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நெப்ராஸ்கா மாகாணத்தின், ஒமாஹா நகரில் உள்ள பிரபல உணவகத்தில் இந்தியாவை சேர்ந்த சுதாகர் சுப்புராஜ்(30), சமையல்காரராக வேலை செய்து வருகிறார். சம்பவ தினத்தன்று சுப்புராஜ் உணவகத்திற்கு வெளியே நின்று கொண்டிருந்தார். அப்போது அமெரிக்காவை சேர்ந்த ஒருவர் சுப்புராஜை பலமாக முகம் மற்றும் வாயில் தாக்கினர்.இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அந்த நபர் சுப்புராஜை அடிக்கும் போது ஐஎஸ் எங்கள் நாட்டை விட்டுவெளியே போ என்று உரக்ககத்தி விட்டு, அங்கிருந்து ஓடி விட்டார். இதை அறிந்த அமெரிக்கா வாழ் இந்தியர்கள் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்ததோடு மட்டுமில்லாமல், இது…
-
- 0 replies
- 344 views
-
-
கனடாவில் பயணிகள் விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததையடுத்து, பயணிகள் அவசரமாக வெளியேற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.West Jet என்ற பயணிகள் விமானம் நேற்று மாலை 4.25 மணி அளவில் வான்கூவர் நகரிலிருந்து, ஒட்டாவா நகருக்கு புறப்பட்டு சென்றது. விமானத்தின் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம அழைப்பு ஒன்று வந்தது. அதில் ஓட்டாவா நகருக்கு புறப்பட்டு சென்றுள்ள விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக தகவல் கிடைத்தது. இதனால் அதிகாரிகள் விமானத்தை உடனடியாக தரையிறக்கும் படி, விமான ஓட்டுனரிடம் தெரிவித்துள்ளனர்.இதன் காரணமாக Thunder Bay என்ற நகரில் விமானம் சுமார் 10.30 மணி அளவில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.அதன் பின்னர் விமானத்தில் இருந்த 125 பயணிகளும் ப…
-
- 0 replies
- 329 views
-
-
அஸ்ஸாமில் தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூட்டில் பலர் உயிரிழப்பு இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் சற்று நேரத்துக்கு முன்னர் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கித் தாக்குதலில் பலர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். பலர் உயிரிழந்திருப்பதை, மாநில காவல்துறை தலைவர் முகேஷ் சகாய் பிபிசியிடம் உறுதியளித்தார். ஆனால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை முழுமையாகத் தெரியவில்லை என்றார். கீழ் அஸ்ஸாம் பகுதியில் கோக்ரஜார் மாவட்டத்தில் உள்ள பாலாஜார் பகுதியில், மக்கள் கூட்டம் மிகுந்த மார்க்கெட் பகுதியில் தேசிய போடோலேண்ட் முன்னணி தீவிரவாதிகள் சரமாரியாக துப்பாக்கித் தாக்குதல் நடத்தினார்கள்.கோக்ரஜாரில் இருந்து 40 கி.மீ. தொலைவில் இந்தப்பகுதி அமைந்துள்ளது. அந்தத் தாக்…
-
- 0 replies
- 245 views
-
-
வீட்டில் வளர்த்த நாகப் பாம்பு ஒன்று தீண்டி சுற்றாடல் ஆய்வாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஆய்வு நோக்கத்திற்காக வீட்டில் வளர்த்து வந்த நாகப் பாம்பு ஒன்றே இவ்வாறு தீண்டியுள்ளது. காலியைச் சேர்ந்த 47 வதான அமல் விஜேசேகர என்பவரே இவ்வாறு சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். காலி கலேகானே பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்று முன்தினம் இந்த நபரை வீட்டு வாயிட் கதவு அருகாமையில் இறந்து கிடந்த நிலையில் உறவினர்கள் மீட்டுள்ளனர். இலங்கைக்கே உரிய உயிரினங்கள் தொடர்பில் ஆய்வு நடத்தி வரும் ஆய்வுக் குழுவொன்றின் அங்கத்தினராக இவர் கடமையாற்றி வந்தார். பிரதேசத்தில் பல்வேறு வீடுகளுக்கு வரும் பாம்பு இனங்களை பிடித்துக் கொண்டு வீட்டுக்கு சென்று ஆய்வு செய்து வந்துள்ளார்…
-
- 0 replies
- 527 views
-
-
இந்திய துணைக் கண்டமானது 100 கோடி ஆண்டுகளுக்கு முன்பு அன்டார்க்டிகா கண்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது என்ற கருத்துக்கான ஆதாரத்தை புவியமைப்பியல் விஞ்ஞானிகள் தங்கள் புதிய ஆய்வில் நிரூபித்துள்ளனர்.இந்தியா மற்றும் ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் பூமியின் வெளிப்புற அடுக்குகள் குறித்து ஆராய்ந்து வருகின்றனர். அவர்கள் இந்தியாவின் கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் தொன்மையான பாறைகள் குறித்து ஆய்வு நடத்தினர். அப்போது கண்டங்கள் உருவானது தொடர்பான முக்கிய விஷயங்களைக் கண்டறிந்தனர்.இது குறித்து இந்த ஆய்வுக்குத் தலைமை தாங்கிய கோரக்பூர் ஐஐடி கல்வி நிறுவன பேராசிரியர் தேவாசிஸ் உபாத்யாயவும், ஸ்விட்சர்லாந்தின் பெர்ன் பல்கலைக்கழகப் பேராசிரியர் கிளாஸ் மெஸ்கரும் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறி…
-
- 0 replies
- 479 views
-
-
பிரான்ஸ் நகர சாலையில் ஒயின் வெள்ளம்! ஒயின் சாலை! தென் பிரான்ஸ் நகர் ஒன்றில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒயின் குழாயை உடைத்ததால், சாலையில் ஒயின் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஒயின் வெள்ளத்தைக் கட்டுப்படுத்த, அவசர சேவைகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. தரையின் கீழ் தளத்தில் உள்ள கார் நிறுத்துமிடங்களுக்குள் ஒயின் வெள்ளம் புகுந்துவிடாமல் தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. பிரான்ஸ் நாட்டின் மிகப்பெரிய ஒயின் உற்பத்தி பிராந்தியங்களில் ஒன்றான லாங்குடாக் - ருசிலோன் என்ற துறைமுக நகரில் உள்ள செடே பகுதியில் இந்தப் போராட்டம் நடந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள், ஒயின் உற்பத்தியாளர்களுக்கான பிராந்திய நடவடிக்கைக் குழு (க்ரேவ்) என்ற தீவிரவாதக்குழுவைச் ச…
-
- 0 replies
- 358 views
-