உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26696 topics in this forum
-
தேடுதல் வசதி வழங்கும் இணையதளங்கள், அவை வழங்குகின்ற தேடல் முடிவுகளில் விளம்பரத்திற்கு பணம் கொடுப்போரை இனம்காட்டுவதற்கு தேவைப்படுகின்ற விதிமுறைகளை சீனா முதல்முறையாக அறிமுகப்படுத்தியுள்ளது.உடல்நல பராமரிப்பு பொருட்களுக்கான லாபகரமான விளம்பரங்கள் பற்றி இணைதள பயன்பாட்டாளர்கள் முக்கியமாக கருத்தில் கொண்டுள்ளதாக சீனாவின் இணையவெளி நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. இந்த சட்டத்திற்கு முற்றிலும் இணங்கி நடப்போம் என்று சீனாவின் மிக பெரிய தேடுதல் வசதி அளிக்கும் இணையதளமான `பெய்து' வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருக்கிறது. அரிதான புற்றுநோயால் அவதியுற்ற மாணவர் ஒருவர், பெய்து, இணையதளத்தில் தேடி கிடைத்த முடிவுகள் வழியாக கண்டறிந்த சிகிச்சையை சோதித்து பார்த்து, இ…
-
- 0 replies
- 451 views
-
-
அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகளை பணியமர்த்துவதில் உள்ள தடையை அடுத்த மாதம் பென்டகன் நீக்க உள்ளதாக அமெரிக்காவில் உள்ள அதிகாரிகள் சிலர் தெரிவித்துள்ளார்கள். இந்த விதிமுறை காலாவதி ஆகிவிட்டதாகவும், ராணுவத்திற்கு தீங்கு இழைப்பதாகவும் பாதுகாப்பு செயலர் ஆஷ் கார்டர் தெரிவித்துள்ளார்.இந்த முடிவு, திருநங்கைகளுக்கான உரிமைகளுக்காக போராடும் பிரசாரகர்களால் வரவேற்கப்பட்டுள்ளது. அமெரிக்கா ராணுவத்தின் செயலராக எரிக் ஃபேனிங் அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்ற பிறகு இந்த முடிவு வெளியாகியுள்ளது. அவரும் மூன்றாம் பாலினத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.seithy.com/breifNews.php?newsID=160221&category=WorldNews&language=tamil
-
- 0 replies
- 459 views
-
-
இராஜினாமா செய்கிறார் பிரித்தானியப் பிரதமர் கமெரோன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கு பிரித்தானியா வாக்களித்துள்ள நிலையில், பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமெரோன், எதிர்வரும் ஒக்டோபர் மாதம், தனது பதவியிலிருந்து விலகவுள்ளார். - See more at: http://www.tamilmirror.lk/175454/இர-ஜ-ன-ம-ச-ய-க-ற-ர-ப-ர-த-த-ன-யப-ப-ரதமர-கம-ர-ன-#sthash.85NF1G80.dpuf
-
- 13 replies
- 1.7k views
-
-
பெல்ஜியத்தில் பயங்கரவாத எதிர்ப்பு சோதனையில் இருவர் கைது இரவு முழுவதும் நடத்தப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சோதனையின் போது, இருவரை பெல்ஜியம் போலிசார் தடுத்து வைத்திருப்பதாக அரசு தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். ஒரு நபர், கிழக்கில் உள்ள வெர்வியர்ஸ் நகரிலும் மற்றொருவர் பிரெஞ்சு எல்லைக்கு அருகில் உள்ள டூர்னை என்ற நகரிலும் கைது செய்யப்பட்டதாக பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். தாக்குதல் குறித்து பேசுவதற்கு ஏற்ற நேரம் இதுவல்ல என்றார் அவர். கைது செய்யப்பட்டவர்களில் ஒரு நபர், ஞாயிறன்று நடைபெற உள்ள பெல்ஜியம் மற்றும் ஹங்கேரி அணிகள் இடையேயான யூரோ 2016 கால்பந்து ஆட்டத்தின் போது, ரசிகர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக உறுதி செய்ய முடியாத…
-
- 0 replies
- 321 views
-
-
லைகா மொபைல் நிறுவனத்தின் பிரான்ஸ் அலுவலகத்தில் ரெய்டு... மோசடிப் புகாரில் 19 பேர் கைது!! லண்டன்: மொபைல் சர்வீஸ் துறையில் சர்வதேச அளவில் பெரிய நிறுவனமாகத் திகழும் லைகா நிறுவனத்தின் பிரான்ஸ் கிளையில் கடந்த வாரம் அதிரடி சோதனை நடத்தியது பிரான்ஸ் போலீஸ். இதில் அந்த நிறுவனம் ஏராளமான பண மோசடி மற்றும் வரி ஏய்ப்பில் ஈடுபட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டதால் அந்த நிறுவனத்தின் 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கைதானவர்களில் லைகா மொபைலின் இயக்குநர்களுள் ஒருவரான் அலெய்ன் ஜோசிமெக்கும் ஒருவர் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. கைது செய்யப்பட்ட 19 பேரில், 9 பேர் வரி ஏய்ப்புக்காவும், மீதி 10 பேர் பண மோசடிக்காகவும் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரான்ஸ் போலீஸ் தகவல் வ…
-
- 8 replies
- 1k views
-
-
கிழக்காசிய கண்டத்தின் கொரிய தீபகற்பத்தில் அமைந்துள்ள முக்கிய நாடான வடகொரியா, கடுமையான பொருளாதார நெருக்கடியில் தத்தளித்து வருகிறது. இருப்பினும், கடந்த 2006-ம் ஆண்டு முதல் உலக நாடுகளின் எதிர்ப்பினை பொருட்படுத்தாமலும், சர்வதேச ஒப்பந்தங்களை புறக்கணித்தும் அணு ஆயுத சோதனைகளை வடகொரியா தொடர்ந்து நடத்தி வருகிறது.அந்த நாடு தொடர்ந்து 3 முறை அணுகுண்டு சோதனைகளை நடத்தி உள்ளது. அதைத் தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் 6-ந் தேதி, அதிரடியாக அணுகுண்டை விட பல மடங்கு சக்திமிக்க ஹைட்ரஜன் குண்டை வெடித்து சோதித்தது. இதுவும் அணுகுண்டு வகையில்தான் கணக்கில் கொள்ளப்படுகிறது. அதன்படி அந்த நாடு இதுவரை 4 முறை அணுகுண்டு சோதனைகளை நடத்தி உள்ளதாக சர்வதேச நாடுகள் பதிவு செய்துள்ளன. இ…
-
- 0 replies
- 577 views
-
-
ஐரோப்பா கண்டத்தில் உள்ள நாடுகள் தங்கள் சமூக, பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு ‘ஐரோப்பிய யூனியன்’ என்ற கூட்டமைப்பை உருவாக்கின. 1993-ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட ஐரோப்பிய யூனியனில் பிரான்சு, ஜெர்மனி, பெல்ஜியம், பிரிட்டன், இத்தாலி, டென்மார்க், போர்ச்சுக்கல் உள்ளிட்ட 28 நாடுகள் இடம்பெற்று உள்ளன.ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகிக்கும் நாடுகளில் வசிப்பவர்கள் அந்த அமைப்பில் உள்ள எந்தவொரு நாட்டுக்கும் சென்று வாழலாம்; வேலைவாய்ப்புகளை பெறலாம்; கல்வி கற்கலாம்; தொழில் தொடங்கலாம். இதன் காரணமாக ஐரோப்பா கண்டத்தில் உள்ள பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் பிரிட்டனில் அதிக அளவில் குடியேற தொடங்கினார்கள். இதனால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக, குறிப்பாக வேலைவாய்ப்பு பறிப…
-
- 0 replies
- 334 views
-
-
பிரிட்டன் - ஐரோப்பிய ஒன்றிய பிரிவினை: ஏன் இணைந்தார்கள்... ஏன் பிரிந்தார்கள்...? பெரிய சச்சரவுகள் ஏதுமின்றி, ஒரு பிரிவு நிகழ்ந்திருக்கிறது. பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியத்திலிருது வெளியேற முடிவு செய்திருக்கிறது. இது, அந்த நாடு தான்தோன்றித் தனமாக தானே எடுத்த முடிவு அல்ல. அது மக்களிடம் வாக்கெடுப்பு நிகழ்த்தி, ஜனநாயக வழியில் பிரிந்து செல்ல முடிவு செய்திருக்கிறது. வாக்கெடுப்பில் 48.11 சதவீதம் மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இருப்போமென்றும், 51.89 சதவீதம் பேர் வெளியேறுவோமென்றும் வாக்களித்து இருக்கிறார்கள். உண்மையில் இது பிரிட்டனுக்கும், ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் கடினமான காலம்தான். என்ன ஆனது ஐரோப்பிய ஒன்றியத்திற்கு...?: ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறு…
-
- 0 replies
- 369 views
-
-
விடுதலை பெறும் வாக்கெடுப்புக்கு சட்டத்தை தயார் செய்ய போவதாக ஸ்காட்லாந்து அறிவிப்பு பிரிட்டனிடம் இருந்து விடுதலை பெறுவதற்கான இரண்டாவது பொது மக்கள் வாக்கெடுப்புக்கு வழிகோலும் சட்டத்தை தன்னுடைய அரசு தயார் செய்ய தொடங்கும் என்று ஸ்காட்லாந்து முதல் அமைச்சர் நிக்கோலா ஸ்டர்ஜன் தெரிவித்திருக்கிறார். பிரிட்டனிடமிருந்து விடுதலை பெறுவதற்கான இரண்டாவது பொது மக்கள் வாக்கெடுப்புக்கு சட்டத்தை தயார் செய்யப்போவதாக ஸ்காட்லாந்து அறிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தோடு இணைந்திருக்க மிகப் பெருமளவில் ஸ்காட்லாந்து மக்கள் வாக்களித்திருந்தாலும், அவர்களின் விருப்பத்திற்கு எதிரான முடிவு வந்துள்ளதை அடுத்து இந்த அறிவிப்பு வந்துள்ளது. ஸ்காட்லாந்தின் விர…
-
- 1 reply
- 287 views
-
-
பிரிட்டன் வெளியேற்றம்: பிரிட்டிஷ் வாக்காளர்களின் கருத்தை 'மதிக்கிறேன்'- ஒபாமா அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, பிரிட்டிஷ் மக்களின் வாக்குகளை தான் மதிப்பதாகவும், ஆனால் அமெரிக்கா மற்றும் ஐக்கிய ராஜ்ஜியத்தின் இடையே உள்ள உறவு நீடித்து நிலைக்கும் என்றும் கூறியுள்ளார். மேலும், பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இரண்டும் அமெரிக்காவுக்கு தவிர்க்க முடியாத கூட்டாளிகளாக இருப்பதாக தெரிவித்துள்ளார். குடியரசு கட்சியின் உத்தேச அதிபர் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறும் முடிவை தான் வரவேற்பதாக கூறியுள்ளார். மேலும், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விடுதலை பெற பிரிட்டிஷ் மக்கள் வாக்களித்திருப்பதாக தெரிவித்…
-
- 1 reply
- 363 views
-
-
தொழிற் கட்சித் தலைவர் ஜெரிமி கோர்பினுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் தொழிலாளர் கட்சியின் தலைவர் ஜெரிமி கோர்பின் மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு முடிவுகளை தொடர்ந்து, பிரிட்டனில் எதிர்கட்சியான தொழிற் கட்சியின் தலைவர் ஜெரிமி கோர்பின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்றை அக்கட்சியை சேர்ந்த இரு எம்.பிக்கள் சமர்ப்பித்துள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் இணைந்திருக்க வேண்டும் என்ற அதிகாரபூர்வ கொள்கையை தொழிலாளர் கட்சி கொண்டிருந்த போதிலும், பாரம்பரியமாக தொழிற்கட்சியின் கோட்டையாக விளங்கிய வட இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய பகுதிகளில் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு எதிராக பெரிய அளவில் வாக்குகள் பதிவாகி இருந்தன. …
-
- 3 replies
- 365 views
-
-
ஐரோப்பிய யூனியனை விட்டு பிரிகிறது பிரிட்டன்.. இங்கிலாந்து மக்கள் அதிரடி தீர்ப்பு! லண்டன்: ஐரோப்பிய யூனியனில் பிரிட்டன் நீடிப்பதா வேண்டாமா என்பது குறித்து நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்பில் 54 % பேர் பிரிட்டன் வெளியேற வேண்டும் எனவும், 46 % பேர் தொடர்ந்து ஐரோப்பிய யூனியனிலே நீடிக்க வேண்டும் எனவும் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஐரோப்பிய யூனியனின் உறுப்பு நாடாக நீடிக்கலாமா, வேண்டாமா என்பதற்கான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொது வாக்கெடுப்பு பிரிட்டனில் வியாழக்கிழமை (ஜூன் 23) நடைபெற்றது.28 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட ஐரோப்பிய யூனியனில் பிரிட்டனும் அங்கம் வகிக்கிறது. இதற்கு எதிராக பிரிட்டனில் ஒரு சாரார் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இதுகுறித்த மக்களின் கருத்த…
-
- 5 replies
- 554 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில் - ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகுவது என்ற முக்கிய முடிவை பிரிட்டன் எடுத்துள்ளது. நாட்டின் பிரதமர் டேவிட் கமெரன் ஒக்டோபரில் பதவி விலகுகிறார். - ஐரோப்பிய தலைவர்கள் வரும் வாரங்களில் ஸ்திரத்தன்மைக்கு அழைப்பு விடுத்துள்ளனர். ஸ்டெர்லிங் பவுண்ட் வீழ்ச்சி கண்டது. ஆசிய ஐரோப்பிய சந்தைகளிலும் வீழ்ச்சி. - கருத்தறியும் வாக்கெடுப்பு முடிவு குறித்து ஐரோப்பாவிலும், உலகெங்கிலும் உள்ள தலைவர்கள் அதிர்ச்சியும் ஏமாற்றமும் வெளியிட்டுள்ளனர்.
-
- 0 replies
- 449 views
-
-
“ஐரோப்பிய ஒன்றியம் 27 நாடுகளை கொண்ட அமைப்பாக தொடர்ந்து செயற்படும்” ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்ந்து நீடிப்பதா? அல்லது விலகுவதா? என்பது பற்றி தீர்மானிக்க பிரிட்டனில் நேற்று (வியாழக்கிழமை) பொதுவாக்கெடுப்பு நடைபெற்றது. பிரிட்டன் நாட்டின் குடியுரிமை பெற்ற 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த பொதுவாக்கெடுப்பில் கலந்து கொண்டு வாக்களித்தனர். இன்று வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவு அறிவிக்கப்பட்டது. ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என ஒரு கோடியே 61 லட்சத்து 41 ஆயிரத்து 241 (48.1 சதவீதம்)பேரும், விலக வேண்டும் என ஒரு கோடியே 74 லட்சத்து 10 ஆயிரத்து 742 பேரும் (51.9 சதவீதம்) விருப்பம் தெரிவித்து வாக்களித்துள்ளனர். 12 லட்சத்து 69 ஆயிரத்து 501 வாக்கு வித்தியாசத்…
-
- 0 replies
- 314 views
-
-
பிரிட்டன் வாக்கெடுப்பு: ஸ்திரத்தன்மையை நிலைநாட்ட ஐரோப்பியத் தலைவர்கள் அழைப்பு மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேற பிரிட்டன் வாக்களித்திருப்பதற்கு பிறகு, வரவிருக்கும் வாரங்களிலும் மாதங்களிலும் ஸ்திரத்தன்மையை நிலைநாட்ட ஐரோப்பிய தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். ஐரோப்பியத் தலைவர்கள் ஸ்திரத்தன்மையை நிலைநாட்ட அழைப்பு ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் சீர்திருத்தங்களும், மாற்றங்களும் கொண்டு வருவதற்கான எச்சரிக்கை அழைப்பு இது என்றும் பலர் தெரிவித்திருக்கின்றனர். இந்த மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பின் விளைவுகளை மதிப்பிட செவ்வாய்கிழமை ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வு நடைபெற இருக்கிறது. …
-
- 0 replies
- 350 views
-
-
ஐரோப்பிய ஒன்றிய கூட்டமைப்பில் இருந்து விலக பிரிட்டன் தீர்மானித்துள்ள நிலையில் பிரான்ஸ் மந்திரிசபை இன்று அவசரமாக கூடுகிறது. பாரிஸ்: ஐரோப்பிய யூனியனில் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என ஒரு கோடியே 61 லட்சத்து 41 ஆயிரத்து 241 (51.9 சதவீதம்) பேரும், விலக வேண்டும் என 51.5 ஒரு கோடியே 74 லட்சத்து 10 ஆயிரத்து 742 (48.1 சதவீதம்) பேரும் விருப்பம் தெரிவித்து வாக்களித்துள்ளனர். 12 லட்சத்து 69 ஆயிரத்து 501 வாக்கு வித்தியாசத்தில் ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலகுவது உறுதியாகி விட்டது. இந்நிலையில், வாக்கெடுப்பு ம…
-
- 0 replies
- 369 views
-
-
பிரெக்சிஸ்ட் என்று அழைக்கப்பட்ட வாக்கெடுப்பில், ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறும் முடிவுக்கு பிரிட்டன் வந்து விட்டது. இந்த யூனியனில் இருந்து வெளியேறும் முதல் நாடு பிரிட்டன்தான். ஐரோப்பிய யூனியனில் உள்ள நாடுகளில், 18 சதவீத உள்நாட்டு உற்பத்தி திறனும், மிகப் பெரிய வலுவான பொருளாதாரத்தையும் கொண்ட நாடு பிரிட்டன். தற்போது பிரிட்டனின் வெளியேற்ற முடிவு, ஐரோப்பாவுக்கு மட்டுமல்ல இந்தியாவுக்கு கூட கடும் நெருக்கடியை அளித்துள்ளது. இந்தியாவுக்கும் பிரிட்டனுக்கும் பொருளதார ரீதியாக மிகுந்த தொடர்பு உண்டு. இந்தியாவுக்கு அதிக அன்னிய செலாவணியை ஈட்டித் தரும் நாடுகளின் பட்டியலில் பிரிட்டனுக்கு 5வது இடம். அமெரிக்கா மற்றும் பிரான்சுக்கு அடுத்தபடியாக பிரிட்டனில் அதிக முதலீடு செய்ய…
-
- 0 replies
- 390 views
-
-
பிரிட்டன் வெளியேற்றத்தை தாங்குமா ஐரோப்பிய யூனியன்?- நிபுணர்கள் கருத்து லண்டன் | கோப்புப் படம்: ஏ.எஃப்.பி. ஐரோப்பிய யூனியனிலிருந்து விலக பிரிட்டன் வாக்களித்ததையடுத்து, இரண்டாம் உலகப் போருக்குப் பிறகான ஐரோப்பாவின் பெருங்கனவு நொறுங்கியதாக அதிகாரிகளும், நிபுணர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். ஏற்கெனவே அகதிகள் நெருக்கடி மற்றும் பொருளாதார மந்தநிலைமைகளை எதிர்கொண்டு வரும் ஐரோப்பிய யூனியனிலிருந்து மிகப்பெரிய உறுப்பினரான பிரிட்டன் வெளியேறுவதையடுத்து மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படலாம் என்று கருதப்படுகிறது. தற்போது முக்கிய விவகாரத்தில் மக்கள் தீர்ப்பை பிரிட்டன் நாடியதையடுத்து மற்ற நாடுகளும் ஐரோப்பிய யூனியனில் இருப்பதா வேண்டாமா என…
-
- 0 replies
- 400 views
-
-
பிரிட்டன் முடிவு: ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் அதிர்ச்சி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேற வேண்டும் என்று பிரிட்டனில் நடந்த கருத்தறியும் வாக்கெடுப்பின் முடிவுகள் குறித்து ஐரோப்பிய ஒன்றிய அரசியல் தலைவர்கள் அதிர்ச்சி தெரிவித்திருக்கிறார்கள். "முடிவை மதிக்கிறேன்" - மார்ட்டின் ஷூல்ஸ் ஐரோப்பிய நாடாளுமன்றத் தலைவர் ,மார்ட்டின் ஷுல்ஸ், இந்த முடிவைத் தான் மதிப்பதாகவும், ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்தையும் யுரோ நாணயத்தையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு தமக்கு இருப்பதாகவும் கூறியிருக்கிறார். இது பிரிட்டனுக்கும் ஐரோப்பாவுக்கும் ஒரு சோகமான நாள் என்று ஜெர்மனியின் வெளியுறவு அமைச்சர் , பிராங்க் வால்டர் ஸ்டெயின்மெயர்…
-
- 4 replies
- 396 views
-
-
போபால்: காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி சென்றிருக்கும் நாடு பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று பா.ஜ.க. பிரமுகர் விஜேந்திர சிங் சிசோடியா அறிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி தற்போது வெளிநாடு சென்றுள்ள நிலையில், மத்தியப் பிரதேச பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் விஜேந்திர சிங் சிசோடியா வெளியிட்டுள்ள அறிக்கையில், ''ராகுல் காந்தி எந்த நாட்டுக்குச் சென்றிருக்கிறார் என்பது குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு எனது சொந்தப் பணத்தில் இருந்து ரூ.1 லட்சம் பரிசு தரக் காத்திருக்கிறேன். எந்த நாட்டுக்குச் செல்கிறார் என்பதைத் தெரிவிக்காமல், ராகுல் காந்தி வெளிநாடு செல்வது ஏன்? எனத் தெரியவில்லை. இ…
-
- 0 replies
- 294 views
-
-
மத்திய கலிஃபோர்னியாவில் ஏற்பட்ட காட்டுத்தீ நூற்றுக்கணக்கான மக்களை தங்களது வீடுகளில் இருந்து வெளியேறச் செய்தது. லேக் இசபெல்லா என்ற மலை நகரத்தில் இருந்த 50 முதல் 60 கட்டிடங்கள் அழிந்துள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த நெருப்பு பெரிய அளவில் வளர்ந்ததால், ஆயிரக்கணக்காண வீடுகள் ஆபத்தின் பிடியில் இருப்பதாக கூறப்படுகிறது தீயணைப்பு வீரர்கள் தாங்கள் தீயை கட்டுப்படுத்துவதில் முன்னேறிச் செல்வதாக தெரிவித்துள்ளனர்.சமீபத்தில் மேற்கு அமெரிக்காவில் சூடான மற்றும் வறண்ட வானிலை தான் இது போன்ற தீ பரவிய பல சம்பவங்களைத் தூண்டியது என்று கூறப்படுகிறது. http://www.seithy.com/breifNews.php?newsID=160148&category=WorldNews&language=tamil
-
- 0 replies
- 210 views
-
-
பிரபல பாகிஸ்தான் சுஃபி பாடகர் சுட்டுக் கொலை பாகிஸ்தானின் சிறந்த பாடகர்களில் ஒருவராக அறியப்பட்ட அம்ஜத் சப்ரி, நாட்டின் தெற்கு நகரமான கராச்சியில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அம்ஜத் சப்ரி கவ்வாலி எனப்படும் சுஃபி பக்தி பாடல்கள் பாடுவதில் புகழ் பெற்ற அம்ஜத் சப்ரி, தனது வீட்டுக்கு அருகாமையில் உள்ள பரபரப்பான பகுதியில் காரில் பயணித்து கொண்டிருக்கும் போது, மிக அருகாமையிலிருந்து துப்பாக்கி ஏந்திய இருவரால் சுடப்பட்டுள்ளார். மருத்துவமனை செல்லும் வழியில், அவர் உயிரிழந்துள்ளார். சுஃபியிஸத்துடன் தொடர்புடைய இசையினை மத நிந்தனை செய்யும் இசையாக சுன்னி தீவிரவாதிகள் கருதி வருகின்றனர். கடந்த சில வருடங்களாக, பாகிஸ்தானில் உள்ள சில ச…
-
- 1 reply
- 375 views
-
-
31 வருடங்களில் இல்லாத வகையில் பவுண் சரிந்தது ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும் என பிரித்தானியா வாக்களித்தமை, சந்தையில் பிரதிபலித்துள்ள நிலையில், 1985ஆம் ஆண்டுக்கு பின்னர், ஐக்கிய அமெரிக்க டொலருக்கெதிரான மிகக் குறைந்த மட்டத்தை பிரித்தானியாவின் ஸ்டேர்லிங் பவுண் அடைந்துள்ளது. - See more at: http://www.tamilmirror.lk/175452/-வர-டங-கள-ல-இல-ல-த-வக-ய-ல-பவ-ண-சர-ந-தத-#sthash.5ifirHmz.dpuf
-
- 1 reply
- 456 views
-
-
சீனாவில் ஆலங்கட்டி மழை - 98 பேர் பலி : 5 இலட்சம் பேர் வெளியேற்றம் சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் பெய்த ஆலங்கட்டி மழையினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் இடிபாடுகளில் சிக்கி 98 பேர் பலியாகியுள்ளதுடன் 5 இலட்சம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் மணிக்கு 100 முதல் 125 கிலோமீட்டர் வேகத்தில் பெய்த கனமழையினால் ஜியாங்சு மாகாணத்தின் யான்செங் நகரில் உள்ள நூற்றுக்கணக்கான வீடுகள் நாசமடைந்தன. வெள்ளத்தில் பல வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. இடிபாடுகள் மற்றும் வெள்ளத்தில் சிக்கி 98 பேர் உயிரிழந்தனர். 1000 இற்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர் என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சூறைக்காற்றுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் ஏராளமான மரங்…
-
- 0 replies
- 323 views
-
-
அணுசக்தி விநியோக நாடுகள் கூட்டமைப்பில் இந்தியா சேர பிரேசில், நியூசிலாந்து, ஆஸ்திரியா, அயர்லாந்து, துருக்கி ஆகிய 5 நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.48 நாடுகள் உறுப்பினர்களாக உள்ள அணுசக்தி விநியோக நாடுகள் கூட்டமைப்பில் (என்.எஸ்.ஜி.) உறுப்பினர் ஆவதற்கு கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியா தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.இந்த குழுவில் உள்ள பெரும்பான்மையான நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் அண்டை நாடான சீனா, இந்தியாவை இந்த குழுவில் இணைப்பதற்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் பல்வேறு முட்டுக்கட்டுகளை போட்டு வருகிறது. அணு ஆயுத பரவல் தடைச் சட்டத்தில் கையெழுத்திடாத நாடுகளை உறுப்பினராக சேர்ப்பது என்றால் இந்தியாவுடன் பாகிஸ்தானையும் சேர்க்கவேண்டும் என்று பிடிவாதமாக உள்ளது. …
-
- 4 replies
- 510 views
-