Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ஸ்ரீநகர், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் சீன ராணுவத்தின் நடமாட்டம் காணப்படுவது, பாதுகாப்பு வளையத்திற்கு எச்சரிக்கை சமிக்ஞையை எழுப்பிஉள்ளது. ஜம்மு காஷ்மீரின் லாடக் பகுதியில் அவ்வபோது ஊடுருவி அத்துமீறல்களில் ஈடுபட்ட வந்த சீன ராணுவம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்தியா - பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் காணப்படுவது பாதுகாப்பு வளையத்திற்கு எச்சரிக்கை சமிக்ஞையை எழுப்பிஉள்ளது. வடக்கு காஷ்மீரின் நவ்காம் செக்டார் பகுதிக்குல் எதிர்முனையில் சீன ராணுவ அதிகாரிகளின் நடமாட்டத்தை ராணுவம் கண்டுபிடித்து உள்ளது. எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு…

  2. `ஜெர்மன்விங்ஸ் விமானி மனநல மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தார்' `விபத்துக்குள்ளான ஜேர்மன் விங்ஸ்ஸில் பயணித்த அனைவரும் கொல்லப்பட்டனர்' ஜெர்மன்விங்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்றை துணை விமானி ஆண்ட்ரியாஸ் லூபிட்ஸ் விபத்துக்கு உள்ளாக்கிய சம்பவம் இடம்பெற்று கிட்டத்தட்ட ஒரு ஆண்டு ஆகிறது. இந்த சம்பவம் நடைபெறுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர், குறித்த துணைவிமானி மருத்துவரால் மனநல மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்ததாக விமான விபத்து குறித்த அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. விமானம் 9525 விபத்துக்கு உள்ளாகி ஒரு ஆண்டு ஆகிறது பிரான்ஸில் ஆல்ப்ஸ் மலைப் பகுதியில் 9525 விமானம் விபத்துக்கு உள்ளாக…

  3. ஐஎஸ்-இன் பாலியல் அடிமைகளுக்கு கருத்தடை மருந்து கொடுக்கப்படுகிறது' அடிமை ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கமுடியும், ஆனால் அவர் கர்ப்பம் தரிக்கக்கூடாது என்ற இஸ்லாமிய பொருள் விளக்கம் ஒன்றை அடிப்படையாகக் கொண்டே கருத்தடை மருந்துகளை ஐஎஸ் பயன்படுத்துவதாக நம்பப்படுகின்றது இஸ்லாமிய அரசு ஆயுதக்குழுவினரால் பாலியல் அடிமைகளாக வைக்கப்பட்டிருக்கின்ற பெண்கள் கர்ப்பம் தரிக்காமல் இருப்பதற்காக, அவர்களுக்கு கருத்தடை மருந்துகள் கொடுக்கப்படுவதாக நியுயோர்க் டைம்ஸ் இதழ் நடத்தியுள்ள புலனாய்வொன்றில் தெரியவந்துள்ளது. அந்தப் பெண்களை ஆயுததாரிகள் கைமாற்றிக்கொள்வதற்கு வசதியாக இந்த நடைமுறை முன்னெடுக்கப்படுவதாக கூறப்படுகின்றது. இராக்கில், ஐஎஸ் ஆயுதக்குழுவின் …

  4. புதுடெல்லி, தினமும் 5 முறை தொழுகை செய்வது என்பதை ஒன்றாக குறைக்க வேண்டிய காலம் என்றும் பொது இடங்களில் அனுமதிக்க கூடாது என்றும் வங்கதேசத்தைச் சேர்ந்த பெண் எழுத்தாளரான தஸ்லிமா நஸ்ரின் கூறிஉள்ளார். வங்கதேசத்தைச் சேர்ந்த பெண் எழுத்தாளரான தஸ்லிமா நஸ்ரின் கடந்த 1994-ஆம் ஆண்டு முதல் இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு ஆளாகி வருகிறார். கடந்த 20 வருடங்களில் அவர் அமெரிக்கா, ஐரோப்பா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இடமாறி வாழ்ந்து தனது எழுத்துப் பணியை தொடர்கிறார். கடந்த வருடம் ஆங்கில பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் என்னை முஸ்லிம் என்று அழைக்காதீர்கள் நான் ஒரு நாத்திகர் என்று தஸ்லிமா குறிப்பிட்டு இருந்தார். …

  5. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள பிரபலமான ஏல நிறுவனத்தில் இருந்து சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான 2 சாமி சிலைகளை அமெரிக்க குடியுரிமை மற்றும் சுங்க அமலாக்க துறை அதிகாரிகளும், மன்ஹாட்டன் மாவட்ட அதிகாரிகளும் மீட்டனர். மிருதுவான கல்லில் செய்யப்பட்ட அந்த சிலைகள் இந்தியாவில் இருந்து கடத்திச் செல்லப்பட்டவை ஆகும். அந்த சிலைகளின் அமைப்பை வைத்து பார்க்கும் போது அவை ராஜஸ்தான் அல்லது மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து கடத்திச் செல்லப்பட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அந்த இரு சிலைகளின் மதிப்பும் சுமார் 3½ கோடி ரூபாய் ஆகும். அந்த ஏல நிறுவனம் அடுத்த வாரம் அந்த சிலைகளை ஏலத்தில் விற்பனை செய்வதாக இருந்தது. ஆனால் அதற்கு முன்னர் சிலைகளை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர். இந்திய அரசு …

  6. ஆல்ப்ஸ் மலையில் பனிச்சரிவு; 6 பேர் பலி இத்தாலியின் ஆல்ப்ஸ் மலையில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். 3000 மீட்டர் உயரத்தில் இந்த விபத்து நடந்திருக்கிறது (கோப்புப் படம்). மேலும் பலர் காணாமல் போயிருக்கும் நிலையில், அவர்களைத் தேடும் பணி நடந்துவருகிறது. ஆஸ்த்ரிய எல்லையை ஒட்டியுள்ள சவுத் டைரோலில் இருக்கும் மோண்ட் நெவோசோவில் மூவாயிரம் மீட்டர் உயரத்தில் இந்தப் பனிச்சரிவு ஏற்பட்டது. தேடுதல் பணியில் மோப்ப நாய்களும் ஹெலிகாப்டர்களும் பயன்படுத்தப்பட்டுவருகின்றன. http://www.bbc.com/tamil/global/2016/03/160312_alps

  7. காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: "சிறுவன் பலி" I `இஸ்ரேல் மேற்கொண்ட வான் தாக்குதலில் 10 வயது சிறுவன் பலி' காஸாவின் வடக்குப் பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட வான் தாக்குதலில் 10 வயது சிறுவன் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக பாலஸ்தீன சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சிறுவனது சகோதரர்கள் இருவர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இஸ்ரேல் மீது ஹாமாஸ் மேற்கொண்ட ராக்கட் தாக்குதலுக்கு பதில் தாக்குதலாகவே, தாம் ஹமாஸின் 4 இலக்குகளை குறிவைத்துத் தாக்கியதாக இஸ்ரேலியப் படை தெரிவித்துள்ளது. காஸாவிலிருந்து மேற்கொள்ளப்பட்ட 4 ராக்கட்கள் இஸ்ரேலிய நகரான ஸ்தெரோவுக்கு அருகே உள்ள திறந்த வெளியில் வெடித்ததாக இஸ்ரேல் படை மேலும் தெரிவித்துள்ளது. http://www.bbc.com/tamil/glo…

  8. தாக்குதலுக்குத் திட்டமிட்டதாக ஃப்ரான்சில் இரு பெண்கள் கைது கடந்த நவம்பரில் நடந்தது போன்ற ஒரு தாக்குதலைத் திட்டமிட்டதாக இரு பதின்ம வயதுப் பெண்களை ஃப்ரான்ஸ் நாட்டு அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர். கடந்த ஆண்டு நவம்பரில் நடந்தது போன்ற ஒரு தாக்குதலை இப்பெண்கள் திட்டமிட்டதாக கூறப்படுகிறது (கோப்புப் படம்). இந்தத் தாக்குதல் குறித்து ஃபேஸ்புக்கில் அவர்கள் தகவல்களைப் பரிமாறிக்கொண்டிருந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் மிகவும் ஆரம்ப நிலையில் இருந்ததாகவும் அவர்களிடமிருந்து ஆயுதங்களோ, வெடிமருந்துகளோ பறிமுதல் செய்யப்படவில்லையென்றும் அதிகாரிகள் கூறியிருக்கின்றனர். மேலும் இரண்டு பெண்களும் இது தொடர்பாக விசாரணைக்குட்படுத்தப்பட்டாலும் அவர்கள் பிறகு…

  9. காசியாபாத், டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்காக இந்தியாவுக்கு வருகை தர உள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு பாதுகாப்பு அளிக்க இருப்பது குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. இதை முடிவுக்கு கொண்டுவரும் விதமாக மத்திய உள்முறை மந்திரி ராஜ்நாத்சிங் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, 'இந்தியாவுக்கு யார் வந்தாலும் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படும். பாகிஸ்தானில் இருந்து மட்டுமல்ல எந்த நாட்டின் குடிமகனாக இருந்தாலும் இந்தியாவுக்கு வந்தால் அவர்களுக்கு எப்போதும் பாதுகாப்பு வழங்கப்படும். அதில் எந்தவித சந்தேகமும் வேண்டாம்' என தெரிவித்தார். இதுபற்றி, உள்விவகாரத்துறை இணை மந்திரி கிரெண் ரிஜ்ஜூ தெரிவிக்கையில், பாகிஸ்தான் கிரிக்கெட…

  10. ராணுவத்தினருக்கு சம்பளத்திற்கு பதில் பெண்களை... - இப்படியும் ஒரு அநியாயம்! ஜெனீவா: ராணுவத்தினருக்கு சம்பளத்திற்கு பதில் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்துகொள்ள சூடான் அரசாங்கமே அனுமதி கொடுத்ததாக ஐ.நா.வுக்கான மனித உரிமைகள் ஆணையம் அதிர்ச்சி தகவலை தனது விசாரணை அறிக்கையில் வெளியிட்டுள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான தெற்கு சூடான் நாட்டில், கடந்த 2013-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் உள்நாட்டு போர் நடந்தது. ஆளும் கட்சி தனது பதவியை காப்பாற்றிக்கொள்ளவும், ஆட்சிக்கு எதிராக சதி செய்தவர்களுக்கு எதிராக ராணுவம் மூலம் கடுமையாகன தண்டனைகளை வழங்கியதாகவும், பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக ஐ.நா சபையின் மனித உரிமைகள் ஆணையம்…

  11. பிரித்தானிய பிரதமரான டேவிட் கமெரூனின் தாயார் மேரி கமெரூன் ஒரு குழந்தைகள் மையத்தில் பணிபுரிந்து வந்துள்ள நிலையில், தற்போது அவரிடமிருந்து பணி பறிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரதமர் கமெரூனின் தாயாரான மேரி கமெரூன் Oxfordshire நகரத்தில் உள்ளChieveley மற்றும் Area என்ற இரு குழந்தைகள் மையத்தில் கடந்த ஒரு வருடமாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், பிரதமர் கமெரூன் சில மாதங்களுக்கு முன்னர் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். நகரங்களில் உள்ள நிர்வாக கவுன்சில்களுக்கு அளிக்கப்பட வேண்டிய நிதியில் தற்போது பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எதிர்வரும் 2020ம் ஆண்டில் இருந்து தற்போது அளிக்கப்படும் நிதியை விட 24 சதவிகிதம் குறைவாக அளிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்…

  12. தென் சீனக் கடல் சர்ச்சை: அமெரிக்கா எச்சரிக்கை தென் சீன கடலில் சர்ச்சைக்குரிய உள்ள சர்ச்சைக்குரிய தீவுகளுக்கு பயணிகள் விமானப் போக்குவரத்தை துவங்க சீனா திட்டமிட்டிருப்பது குறித்து அமெரிக்கா எச்சரித்துள்ளது. தென் சீனக் கடல் தீவுகளுக்கு பல நாடுகள் உரிமை கோரி வருகின்றன. அந்தத் தீவுகளுக்கு உரிமை கோரும் பிற நாடுகளுடன் மோதலை அதிகரிக்கவே இது வழிவகுக்கும் என அமெரிக்கா கூறியிருக்கிறது. இந்தப் பிராந்தியத்தில் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்கப்போவதாக முன்பு சீனா அளித்த வாக்குறுதியை சீனா கடைப்பிடிக்க வேண்டுமென அமெரிக்க வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பாளர் கூறியிருக்கிறார். மலேசியா, ஃபிலிப்பைன்ஸ், வியெட்னாம் உள்ளிட்ட பல ஆசிய நாடுகள் இந்தத் தீவுகளின்…

  13. வட கொரியாவின் நீர்மூழ்கி மாயம் வடகொரியா காணாமல் போன தன்னுடைய நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றைத் தேடிக்கொண்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. நீர்மூழ்கி ஒன்றில் வடகொரிய அதிபர் கிம் யோங் உன் (கோப்புப் படம்). இவ்வாரத் துவக்கத்தில் இந்தக் கப்பலுடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டன. வடகொரிய கடற்கரையை ஒட்டியுள்ள பகுதியில் இந்தக் கப்பல் நீண்ட காலமாக இயங்கிவந்தது. தென் கொரியாவும் அமெரிக்காவும் மிகப் பெரிய அளவில் ராணுவ பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் நிலையில், வட கொரியாவின் இந்தக் கப்பல் தொலைந்து போயுள்ளது. தங்கள் நாட்டிற்குள் நுழைவதற்கான அறிகுறிகள் தென்பட்டால்கூட, முன்கூட்டியே தாக்குதல் நடத்துவோம் என வட கொரியா தெரிவித்திருக்கிறது. http://www.bb…

  14. குஜராத் அணு உலை கசிவால் மூடல்: ஊழியர்கள் பாதுகாப்பாக வெளியேற்றம்! அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் உள்ள கக்ரபார் அணுமின் நிலையத்தின் முதல் அணு உலையில் இருந்து தண்ணீர் கசிந்ததை அடுத்து அங்கு அவசரநிலை அறிவிக்கப்பட்டு ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு உள்ளனர். இந்த சம்பவம் குறித்து கக்ரபார் அணுமின்நிலைய இயக்குநர் எல்.கே.ஜெயின் கூறும்போது, ''முதல் அணுஉலையில் உள்ள குளிர்விப்பானில் கசிவு இருப்‌பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அணுஉலை மூடப்பட்டது. இதனால், அணுக் கதிர்வீச்சு ஏதும் பரவவில்லை. குளிர்விப்பானுக்கு சேதம் ஏதும் ஏற்படவில்லை. மேலும், இதனால் அணுமின் நிலைய ஊழியர்கள் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. ஊழியர்கள் அனைவரும் உடனே பாதுகாப்பாக வெ…

  15. லிபிய விவகாரம்: வெளியில் வந்தது அமெரிக்க-பிரிட்டன் மோதல் ------------------------------------------------------------------------------------------------------------------------------ லிபியாவில் பெரும் குழப்பநிலையை ஏற்படுத்தியதாக அமெரிக்க அதிபர் ஒபாமா பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் மீது குற்றஞ்சாட்டியுள்ளார். அட்லாண்டிக் சஞ்சிகைக்கு பேட்டியளித்த ஒபாமா, இரண்டாயிரத்து பதினொன்றில் லிபியாவில் இராணுவ ரீதியில் தலையீடு செய்த பிறகு டேவிட் கமரென்னின் கவனம் சிதறிவிட்டதாக கூறியுள்ளார். இது பிரிட்டனில் பெரும் சர்ச்சையாக உருவெடுத்திருக்கிறது. அதைத் தொடந்து தற்போது விளக்கமளித்திருக்கும் அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை, பிரிட்டனுடனான உறவின் பலத்தை வலியுறுத்தியுள்ளது. …

  16. இன்றைய நிகழ்ச்சியில்… - லிபியாவில் பெரும் குழப்ப நிலையை ஏற்படுத்தியதாக அதிபர் ஒபாமா பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் மீது குற்றஞ்சாட்டியுள்ளார். - சிரியா உள்நாட்டு போர் ஆரம்பித்து ஐந்து வருடங்களின் பின்னர், கிளர்ச்சி முதன் முதல் வெடித்த டெர்ரா நகருக்கு பிபிசி சென்றது. - ஆளில்லாமல் ஓடும் கார். ஓட்டுனர் இல்லாத தமது காரை சுவீடனின் வொல்வோ நிறுவனம் சோதிக்கிறது.

  17. அமெரிக்காவில் முஸ்லிம் என நினைத்து பவுத்தத் துறவிக்கு சரமாரி அடி உதை அமெரிக்காவின் ஆரிகன் மாகாணத்தில் கோஸென் சாம்ப்சன் (66) என்ற பவுத்த துறவி மீது அவர் முஸ்லிம் என்று தவறாக நினைத்து தாக்குதல் நடத்தப்பட்டது சர்ச்சையாகியுள்ளது. ஹூட் ரிவர் பகுதியில் பவுத்தத் துறவி கார் கதவை நபர் ஒருவர் எட்டி உதைக்க அது அவரது தலையை பதம் பார்த்தது. பிறகு பவுத்தத் துறவியை அந்த மர்ம நபர் கடும் வசைச்சொற்களால் திட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக போலீஸ் தரப்பு செய்தி கூறுகிறது. தாக்குதல் நடத்தியவர் பிரவுன் நிற தலைமுடி கொண்ட வெள்ளை ஆண் நபர் என்று போலீஸ் கூறுகிறது, பிப்ரவரி 29-ம் தேதி நடந்த இந்தச் சம்பவத்தின் மீதான விசாரணை தற்போது முடுக்கி விடப்பட்டுள்ளது. இது இன…

    • 1 reply
    • 428 views
  18. இந்திய போர் விமானங்களில் விமானிகளாக பணியாற்ற பயிற்சி பெற்று வரும் 3 பெண் விமானிகளுக்கும் 4 ஆண்டுகளுக்கு தாய்மையடையக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.போர் விமானங்களை இயக்க பெண் போர் விமானிகளுக்கு தற்போது பயிற்சி அளிக்கப்பட்டு தற்போது ஹைதரபாத்தில் அதற்காக பயிற்சியும் பெற்று வருகின்றனர். தற்போது ஹக்கிம்பேட் விமானப்படை மையத்தில் இவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.முதல் கட்ட பயிற்சி முடிந்து 2வது கட்ட பயிற்சி கிரண் எம்.கே 2 ரக போர் விமானங்களில் பயிற்சி பெறவுள்ளனர். 2வது கட்ட பயிற்சி முறைதான் மிக முக்கியமானது.இந்த பயற்சி முறைக்கு தேர்வு செய்யப்பட்ட 3 பெண் விமானிகளும் நிச்சயம் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் தயராகியிருக்க வேண்டும். அப்போதுதான் அடுத்த கட்ட பயிற்சிக்கு தேர்…

  19. 'முஸ்லிம்களுக்கு எதிரான நிலைப்பாட்டில் மாற்றமில்லை': டோனல்ட் ட்ரம்ப் மிச்சிகனில் நடைபெற்ற விவாதம் ஒன்றில்சக போட்டியாளர்களுடன் ட்ரம்ப் (மார்ச் 3) அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான, குடியரசுக் கட்சியின் வேட்பாளர் போட்டியில் முன்னணியில் இருக்கின்ற டோனல்ட் ட்ரம்ப், முஸ்லிம்களுக்கு எதிரான அவரது கடும்போக்கு நிலைப்பாட்டை மீண்டும் நியாயப்படுத்தி வாதிட்டுள்ளார். நேரடி தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் அவரது போட்டியாளர்கள் முன்வைத்த கடுமையான விமர்சனங்களுக்கு நடுவே, டோனல்ட் ட்ரம்ப் தனது நிலைப்பாட்டை தொடர்ந்தும் நியாயப்படுத்தி பேசியுள்ளார். "இஸ்லாம் அமெரிக்காவை வெறுக்கிறது" என்ற ட்ரம்ப்-இன் கோசத்தை சவாலுக்கு உட்படுத்திய அவரது போட்டியாளரான ஃபுளோரிடா மாநில செனெட்டர் மார…

  20. ஐ.எஸ்.கிளர்ச்சியாளர்கள் வசம் 31,000 கர்ப்பிணி பெண்கள் 2016-03-11 10:48:10 ஐ.எஸ்.கிளர்ச்­சி­யா­ளர்கள் வசம் 31,000 கர்ப்­பிணி பெண்கள் இருப்­ப­தாக குவில்­லியம் என்ற அறக்­கட்­டளை தெரி­வித்­துள்­ளது. ஐ.எஸ். கிளர்ச்­சி­யா­ளர்­களின் நடை­மு­றைகள் மற்றும் துஷ்­பி­ர­யோ­கங்கள் குறித்து பிரித்­தா­னி­யாவின் குவில்­லியம் அறக்­கட்­டளை 6 மாதங்­க­ளாக ஆய்வு செய்து அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, ஈராக்கின் மொசூல் நகரில் கிளர்ச்­சி­யா­ளர்கள் 8 வயது சிறு­மியை கடத்திச் சென்று ஒரு கட்­ட­டத்தல் வைத்து வல்­லு­றவு செய்­துள்­ளனர். வலியால் துடிக்கும் அந்த சிறுமி அல­றி­யதை பிற சிறு­மி­களை கட்­டா­யப்­ப­டுத்தி கேட்க வைத்­து…

  21. பிரிட்டன் இந்துக்கள் சிலர் கோமியம் குடிப்பதேன்? லண்டனில் பசுவின் கோமியம் கடைகளில் விற்கப்படுவதை பிபிசியின் ஆசிய பிரிவு சேவை கண்டறிந்துள்ளது. லண்டனில் இருக்கும் தெற்காசியக்கடைகளில் கோமூத்ரா என்கிற பெயரில் விற்கப்படும் இந்த பசுவின் கோமியத்தை பிபிசி செய்தியாளர் காசு கொடுத்து வாங்க முடிந்தது. இந்த கடைகள் எல்லாமே உணவுப்பொருட்களையும் விற்கும் கடைகள். ஒரு கடையில் இந்திய துணைக்கண்டத்தின் அன்றாட உணவான ரொட்டிகளுக்கு அருகில் இந்த கோமியமும் அடுக்கி வைத்து விற்கப்பட்டது. “இந்துக்கள் இதை மத காரணங்களுக்காக வாங்கிச் செல்கிறார்கள். உதாரணமாக ஒரு வீட்டில் குழந்தை பிறந்தால் அந்த வீட்டில் அதிர்ஷ்டத்தை வரவழைக்க இந்த கோமியம் தெளிக…

  22. இன்றைய நிகழ்ச்சியில்… - சிரியாவில் போர் ஆரம்பித்து 5 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் அங்கு போரால் பாதிக்கப்பட்ட சிறார்கள் குறித்த தகவல்கள். - ஜப்பானின் ஃபுக்குஷிமா பேரழிவு நடந்து ஐந்து ஆண்டுகள் கழிந்த பின்னர் அணு கதிரியக்க ஆபத்துள்ள அந்த பகுதிக்கு பிபிசி சென்றது. - ஆப்பிரிக்காவில் அழிந்துவரும் காண்டா மிருகங்களை காப்பாற்றுவதற்கான ஒரு திட்டம்.

  23. சிரியாவின் குழந்தைகள் : தொலைந்துபோன சந்ததி ============================================= அதிபர் பஷர் அல் அஸ்ஸாத்துக்கு எதிராக சிரியாவில் கிளர்ச்சி ஆரம்பித்து ஐந்து வருடங்கள் ஆகிவிட்டன. அதனை தொடர்ந்த மோதல்களால் இரண்டரை லட்சம் பேர்வரை அங்கு இறந்திருக்கிறார்கள். அவர்களில் பலர் குழந்தைகள். எழுபத்தைந்து லட்சம் பேருக்கு அங்கு உதவிகள் தேவைப்படுகின்றன. இருபத்தெட்டு லட்சம் பேருக்கு எந்தவிதமான கல்வி வசதியும் கிடையாது. அவர்களில் இரண்டு குழந்தைகளின் கதை இது.

  24. `இளையவர்கள் பெரும்பான்மையாக உள்ள ஆப்பிரிக்காவின் தலைவர்கள் மட்டும் வயதானவர்கள்' இளம் வயதினர் அதிகமாக வாழும் ஆப்பிரிக்க நாடுகளில் வயதான தலைவர்களே ஆட்சியில் உள்ளனர். மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் தலைவர்கள் ஆப்பிரிக்க கண்டம் முழுவதுமாக உள்ள நாடுகளின் தலைவர்களின் சராசரி வயது 61 என தெரிவிக்கப்படுகிறது. அந்த நாட்டுத் தலைவர்களில், வயதில் மூத்த முதல் 10 தலைவர்களின் சராசரி வயது 79 என்று தெரிவிக்கப்படுகிறது. உலகிலேயே இளம் வயதானோர் அதிகம் வாழும் ஆப்பிரிக்கக் கண்டத்தில், அந்த நாடுகளின் தலைவர்கள் எப்போதுமே வயது முதிர்ந்தவர்களாக உள்ளதற்கு காரணம் பற்றிய ஆய்வுகளும் துறைசார் வல்லுனர்களின் கருத்துக்களும் முன்வைக்கப்பட்டுள்ளன. கிழக்கு ஆப்பிரிக்க சந…

  25. நான்கு வயது குழந்தையை பெட்டியில் வைத்து விமானத்தில் வந்த பெண் துருக்கியில் இருந்து பிரான்சுக்கு பெண் ஒருவர் தனது நான்கு வயது குழந்தையை , கையில் எடுத்துவரும் பெட்டியில் வைத்து விமானத்தில் பயணித்தது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அந்தப் பெண்ணின் காலடியில் வைத்திருந்த அந்தப் பை அசைய ஆரம்பித்ததை அடுத்து, அந்த ஏர் பிரான்ஸ் விமானத்தில் சென்ற சக பயணிகள் அதைக் கண்டுபிடித்தனர். பிரான்ஸில் வசித்து வரும் அந்தப் பெண், ஹைத்தியைச் சேர்ந்த இந்தக் குழந்தையை தத்தெடுக்க முயன்று கொண்டிருக்கிறார் என்றும், ஆனால் அதற்கான சரியான ஆவணங்கள் அவரிடம் இல்லை என்றும் கருதப்படுகிறது. இஸ்தான்புல்லில் அவர் பயண மாற்றும் பகுதியில் ( ட்ரான்ஸிட் பகுதி) இருந்த அந்தப் பெண்ணை முதலில…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.