உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26704 topics in this forum
-
புத்தாண்டு கொண்டாட்டம்: ஐரோப்பிய நகரங்களில் உச்சகட்ட பாதுகாப்பு புத்தாண்டையொட்டி ஐரோப்பிய யூனியன் நாடுகளின் முக்கிய நகரங்கள் அனைத்திலும் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது தீவிரவாத தாக்குதலுக்கு சாத்தியம் இருப்பதால் பட்டாசு வெடிப்பு மற்றும் வானவேடிக்கை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பிரான்ஸில் சமீபத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் மற்றும் தீவிரவாதிகளின் ஊடுருவல் குறித்த உளவுத்துறை தகவல்களால் இன்று இரவு கொண்டாடப்பட இருக்கும் புத்தாண்டு நிகழ்ச்சிகளுக்கு உச்சகட்ட பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஐரோப்பிய யூனியன் நாடுகளின் எல்லைகள் ஏற்கெனவே பலத்த பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன. பெல்ஜியத்தில் கொண்டா…
-
- 1 reply
- 595 views
-
-
கொடுமையிலும் கொடுமை : இனி ஐ.எஸ். தீவிரவாதிகள் பாலியல் அடிமைகளை இப்படிதான் நடத்த வேண்டுமாம்! உலகையே மிரட்டும் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் பாலியல் அடிமைகளாக ஏராளமான பெண்களை பிடித்து வைத்திருக்கிறது. சிரியா மற்றும் ஈராக்கில் சில பகுதிகளை ஆக்கிரமித்து தனி ராஜ்ஜியம் நடத்தும் ஐ.எஸ். இயக்கம் பெண்களை படுத்தும் பாடு சொல்ல முடியாது. இவர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் ராக்கா மற்றும் மொசூல் நகருக்குள் சென்று பெண்களை பிடித்து கூண்டு வைத்த வண்டியில் அடைத்து தங்கள் இருப்பிடத்திற்கு கொண்டு செல்கின்றனர். பெண்களை போதை பொருளாகவே கருதும் இந்த இயக்கம் தற்போது பாலியல் வன்கொடுமைக்கு சில கட்டுப்பாடுகளை விதித்து பட்டியல் வெளியிட்டுள்ளது. அதனை படிக்கும் போதே மனம் பதறுகிறது.…
-
- 4 replies
- 641 views
-
-
சீனா சுரங்க விபத்தில் 5 நாட்களுக்குப் பின் 8 பேர் உயிருடன் இருப்பது கண்டுப்பிடிப்பு! [Thursday 2015-12-31 08:00] கிழக்கு சீனாவின் ஷாங்டாங் மாகாணத்தில் உள்ள ஜிப்சம் சுரங்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை திடீர் மண் சரிவு ஏற்பட்டது. இந்த மண்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளை மீட்புப் படையினர் மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே 7 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், சுரங்கத்தின் மேலிருந்து துளையிட்டு அதற்குள் காமிராவை அனுப்பி நேற்று நடத்தப்பட்ட சோதனையில் இன்னும் 8 பேர் உயிருடன் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இவர்களுக்குத் தேவையான உதவிப்பொருட்களை அனுப்பும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த மீட்புப் பணிகளில் 400 -க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் ப…
-
- 0 replies
- 437 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்… -பாரிஸ் தாக்குதல்களின் சூத்திரதாரியுடன் நெருங்கியத் தொடர்பில் இருந்த ஷராஃப் அல் முவதன் உட்பட, ஐ எஸ் அமைப்பில் முக்கியமானவர்கள் பத்து பேரை சிரியாவில் கொன்றுள்ளதாக அமெரிக்க இராணுவம் அறிவிப்பு! -வங்கதேசத்தில் இந்த வருடத்தில் ஐந்து வலைப்பதிவர்கள் கொல்லப்பட்டு, வழிபாட்டிடங்கள் பல தாக்கப்பட்டுள்ளன! ஆனால், வங்கதேசம் அனைத்து மதங்களுக்குமான நாடுதான் என்கிறார் அதன் குடியரசுத் தலைவர்! -அத்துடன், மொரோக்கோ மலைகளில் கடுமையாக உழைக்கும் கோவேறு கழுதைகளின் நிலைமையை மேம்படுத்த பெண்கள் முன்னெடுக்கும் முயற்சிகளைப் பார்க்கலாம்!
-
- 0 replies
- 525 views
-
-
ஐஎஸ் பிடியில் இருந்த ரமாடி நகரை ஈராக் ராணுவத்தினர் மீட்டது எப்படி? (அதிர வைக்கும் வீடியோ) ஐஎஸ் தீவிரவாதிகளின் பிடியில் இருந்த முக்கிய நகரமான ரமாடி நகரை கடும் சண்டைக்கு பின்னர் ஈராக் ராணுவத்தினர் மீட்டுள்ளனர். இதனிடையே, 2016-ம் ஆண்டில் ஈராக்கிலிருந்து முற்றிலுமாக ஐஎஸ் தீவிரவாதிகள் ஒழிக்கப்படுவார்கள் என அந்நாட்டின் பிரதமர் ஹைதர் அல் அபாடி சபதம் எடுத்துள்ளார். ஈராக்கில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஐஎஸ் தீவிரவாதிகள் தற்போது தோல்வியை சந்தித்து வருகின்றனர். ஐ.எஸ் தீவிரவாதிகளின் பிடியிலிருந்த முக்கிய நகரமான ரமாடியை ஈராக் ராணுவத்தினர் கைப்பற்றினர். பாக்தாத் மேற்கு பகுதியில் இருந்து சுமார் 100 கிலோ மீட்டர் தொலைவில்தான் ரமாடி நகர் இருக்கிறது. இதற்கிடைய…
-
- 0 replies
- 771 views
-
-
ஐ எஸ் செய்வது இனப் படுகொலை: ஹில்லரி கிளிண்டன் அமெரிக்காவில் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளருக்கான போட்டியில் முன்னிலை வகிக்கும் ஹில்லரி கிளிண்டன், மத்திய கிழக்கில் மதச் சிறுபான்மையினருக்கு எதிராக ஐ எஸ் ஆயுததாரிகள் நடத்திவரும் தாக்குதலை இனப் படுகொலை என்று வர்ணித்துள்ளார். இராக்கில் யஸீதி சிறுபான்மையினர் மற்றும் பிற இனக் குழுக்களின் உயிரையும் வாழ்வாதாரங்களையும் இலக்குவைத்து ஐ எஸ் நடத்தும் தாக்குதல் இனப் படுகொலை என்று நியுஹாம்ஃப்ஷைரில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த கிளிண்டன் அம்மையார் தெரிவித்தார். இனப் படுகொலை என்ற பதத்தை பயன்படுத்துவது சரி என்பதற்கு போதிய ஆதாரம் இருப்பதாக அவர் குறிப்பிட்டார். http://www.bbc.com/tamil/global/2015/12/151230_cl…
-
- 1 reply
- 957 views
-
-
'எல்நின்யோ காலநிலையின் தாக்கத்தால் 2016இல் பசியும் நோயும் ஏற்படும்' எல்நின்யோ காலநிலை சுற்று கடுமையாவதன் காரணமாக 2016ஆம் ஆண்டில் பல லட்சக்கணக்கான மக்கள் பசி மற்றும் நோய் ஆகியவற்றால் பாதிக்கப்படுவதற்கான ஆபத்து அதிகமாகியிருப்பதாக உதவி நிறுவனங்கள் கூறுகின்றன. 'எல்நின்யோ காலநிலை சுற்றால் பல இடங்களில் பசியும் நோயும் உருவாகும்' இந்த விநோதமான காலநிலை சில இடங்களில் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தும் அதேநேரம், வேறு சில இடங்களில் பெரும் வறட்சியை ஏற்படுத்தும். அதில் ஆப்பிரிக்காவில் சில இடங்களில் பெப்ரவரியிலேயே பெரும் உணவுத் தட்டுப்பாடு ஏற்படும். அடுத்த ஆறு மாதங்களில் கரீபியன், மத்திய மற்றும் தெற்கு அமெரிக்க பிராந்தியங்களும் இதனால் பாதிக்கப்படும். …
-
- 0 replies
- 699 views
-
-
வட கொரிய தலைவரின் உயர்மட்ட உதவியாளர் கார் விபத்தில் பலி வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன்னின் உயர்மட்ட உதவியாளர் கிம் யங் கோன் கார் விபத்தில் உயிரிழந்துள்ளார். வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன்னின் உயர்மட்ட உதவியாளர் கார் விபத்தொன்றில் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரச ஊடகம் தெரிவித்துள்ளது. கிம் யங் கோன் என்ற எழுபத்து மூன்று வயதான அவர், தென் கொரியாவுடனான உறவுகளை கையாளும் பொறுப்பில் இருந்தார். இரு நாடுகள் மீள இணைவது தொடர்பிலான பேச்சுவார்த்தைகளையும் இவர் கையாண்டு வந்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் தென் மற்றும் வட கொரியாவுக்கு இடையில் பீரங்கித் வெடி பரிமாற்றதை அடுத்து ஏற்பட்டிருந்த பதற்றநிலையை தளர்த்த உதவிய வட கொரிய பிரதிநிதிகள் குழுவில் இவரும் இருந்தார். ப…
-
- 0 replies
- 652 views
-
-
ஒரே நாளில் கொட்டிய மழையால் மிதந்த இங்கிலாந்து (வீடியோ) இங்கிலாந்தில் பெய்த கனமழையால் பயங்கர வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். இங்கிலாந்தின் வடக்குப் பகுதியில் யார்க்சயர், லங்காசயர் மாகாணங்களில், கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், அங்குள்ள கியூஸ், பாஸ் ஆகிய நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, நகரங்களுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. சுமார் 800 ஆண்டுகள் பழமையான யார்க் நகரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் முழுமையாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. நதியோரத்தில் இருந்த கட்டடங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. இரு மாகாணங்களிலும் சுமார் 350-க்கும் மேற்பட்ட நகரங்கள், கிராமங்கள் வெள்ளத்தில் ம…
-
- 0 replies
- 476 views
-
-
'பாரீஸ் தாக்குதலில் தொடர்புடைய ஐ.எஸ். தீவிரவாதி கொலை' பாரீஸ் நகரில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய கம்போடிய ஹோட்டல் முன்பு பொதுமக்கள் மலர்க் கொத்துகளை வைத்து அஞ்சலி செலுத்தினர். உறவினரை இழந்த துக்கம் தாளாமல் ஒரு பெண் கதறி அழுகிறார். படம்: கெட்டி இமேஜஸ் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஐ.எஸ். தீவிரவாதி கொல்லப்பட்டதாக அமெரிக்காவின் ராணுவ தலைமையகம் பென்டகன் அறிவித்துள்ளது. பாரீஸ் தாக்குதலை சிரியாவில் இருந்துக்கொண்டு செயல்படுத்திய ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் முக்கிய நபர் கொல்லப்பட்டார். சிரியாவில் இந்த மாதத்தில் அமெரிக்கா பலமுறை வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில் தீவிரவாதி சரப்பே அல் மவுவ…
-
- 0 replies
- 690 views
-
-
ஆசியாவின் மிகப்பெரிய சுரங்க ரயில் நிலையம் இன்று திறப்பு சென்ஜென் சுரங்க ரயில் நிலையத்தின் உட்புறம். ஆசியாவின் மிகப்பெரிய சுரங்க ரயில் நிலையம் சீனாவின் சென்ஜென் நகரில் கட்டப்பட்டுள் ளது. இந்த ரயில் நிலையம் இன்று திறக்கப்படுகிறது. சென்ஜென் சுரங்க ரயில் நிலையத்தின் மொத்த பரப்பளவு 1,47,000 சதுர அடியாகும். இது 21 கால்பந்து மைதானங்களுக்கு சமமானதாகும். பூமிக்கடியில் 3 அடுக்குகள் அமைக்கப் பட்டுள்ளன. இங்கு ஒரே நேரத்தில் 3 ஆயிரம் பயணிகள் வரை ரயிலுக்காக காத்திருக்க முடியும். இந்த ரயில் நிலையம் வழியாக முதல் கட்டமாக 11 அதிவேக ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்நகரில் இருந்து 15 நிமிடங்களில் ஹாங்காங் செல்ல முடியும். http://tamil.thehi…
-
- 0 replies
- 557 views
-
-
உலகின் மிகப் பெரிய எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடான சவூதி அரேபியாவின் பட்ஜெட் பற்றாக்குறை 98 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது சர்வதேசச் சந்தையில் பெட்ரோலியத்தின் விலை தொடர்ந்து குறைந்துவரும் நிலையில், உலகின் மிகப் பெரிய எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடான சவூதி அரேபியாவின் பட்ஜெட் பற்றாக்குறை 98 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது. சவூதியின் புதிய மன்னராக சல்மான் பதவியேற்ற பிறகு போடப்பட்டிருக்கும் முதல் பட்ஜெட்டில், 162 பில்லியன் டாலர்கள் - அதாவது 608 பில்லியன் ரியால்கள்- வருவாய் எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது அதிகாரபூர்வ எதிர்பார்ப்பைவிட 15 சதவீதம் குறைவாகும். ஆனால், இந்த ஆண்டிற்கான செலவு 975 பில்லியன்களாக இருக்கும். எதிர்பார்த்ததைவிட இது 13 சதவீதம் அதிகமாகும். இந்தப் பற்…
-
- 0 replies
- 431 views
-
-
குடிநீர் தட்டுப்பாடு இதேபோல தொடர்ந்தால் இன்னும் 10 ஆண்டுகளில் பெங்களூர் நகரில் இருந்து மக்கள் கூட்டம், கூட்டமாக வெளியேறும் நிலை வரும் என்று ஆய்வுகள் எச்சரிக்கின்றன. ஐடி நிறுவனங்களின் அதிகரிப்பு காரணமாக, பெங்களூரின் புறநகர் பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகள் மிக அதிகமாக பெருகிவிட்டன. தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலத்தவர்களே அதிகம் குடியேறி வருகிறார்கள். காவிரி நதி நீரில் தமிழகத்திற்கு கொடுத்ததுபோக, எஞ்சியுள்ள நீரில் பெங்களூருக்கு கிடைக்கும் பங்கு சொற்பமே. எனவே, புதிய குடியிருப்புகள் போர்வெல் நீரையே நம்பியுள்ளன. புறநகர் ஏரியா1/6 புறநகர் ஏரியா குறிப்பாக, சர்ஜாப்பூர் ரோடு, பெல்லந்தூர், ஒயிட்பீல்டு, மாரத்தஹள்ளி, எலஹங்கா, பன்னேருகட்டா ரோடு போன்ற பக…
-
- 0 replies
- 460 views
-
-
நியூஸிலாந்திலிருந்து புறப்பட்டபோது 8 நிமிட நேரம் தவறான திசையில் பறந்த மலேஷிய எயார்லைன்ஸ் விமானம் நியூஸிலாந்திலிருந்து மலேஷியாவுக்குப் புறப்பட்ட மலேஷிய எயார்லைன்ஸ் விமானமொன்று 8 நிமிட நேரம் தவறான திசையில் சென்றுகொண்டிருந்த சம்பவம் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது. விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்களுக்கு மலேஷிய எயார்லைன்ஸ் நிறுவனம் தவறான பயணத்திட்டத்தை வழங்கியமையே இதற்குக் காரணமாகும். மலேஷிய எயார்லைன்ஸின் பிளைட் எம்.எச். 132 எனும் விமானம், கடந்த வியாழக்கிழமை காலை நியூஸிலாந்தின் ஆக்லாந்து நகரிலிருந்து மலேஷியாவின் கோலாலம்பூர் …
-
- 0 replies
- 460 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்… - போக்கோ ஹராமை ஒழிப்பதற்கு நைஜீரிய அரசு கோரிய காலக்கெடு முடிவுக்கு வரும் நிலையில், அந்த ஜிகாதிகளின் இதய பூமியான சம்பீஸா காட்டுக்கு, இராணுவத்துடன் பிபிசி விசேட பயணம்! - மேற்கு ஆப்பிரிக்காவில் இம்முறை இபோலா பரவ ஆரம்பித்த நாடான கினீயில், இரண்டு ஆண்டுகள் பெருந்துயரத்துக்குப் பின், இபோலா பரவல் முடிவுக்கு வந்துவிட்டதாக உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு! - ஜப்பானில் ஒலிக்கும் ஸ்காட்லாந்து இசை! சுற்றுலாப் பயணியாக பிரிட்டன் வந்த ஜப்பானியர், பேக்பைப் வாத்தியக் கருவி மீது காதலில் விழுந்த கதை!
-
- 0 replies
- 555 views
-
-
கொல்லப்பட்ட 110 செய்தியாளர்களில் 9 பேர் இந்தியர்கள் : பத்திரிகையாளர்களுக்கு டேஞ்சரான நாடு இந்தியா செய்தியாளர்களுக்கு டேஞ்சரான நாடு இந்திய என ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த ஆண்டு உலகம் முழுக்க கொல்லப்பட்ட 110 செய்தியாளர்களில் 9 பேர் இந்தியர்கள். 'ரிபோர்ட்டர்ஸ் விதவுட் பார்டர்ஸ்' என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் இது தெரிய வந்துள்ளது. இந்தியாவை பொறுத்தவரை, கிரைம் செய்தியாளர்களும், அரசியல்வாதிகளை பற்றிய புலனாய்வு செய்திகள் தரும் செய்தியாளர்களும் கனிம வளக் கொள்ளை பற்றிய செய்தி வெளியிட்ட செய்தியாளர்களும் கொல்லப்பட்டுள்ளனர். இதில் செய்தி சேகரிக்கும் இடத்திலேயே 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மற்ற 4 பேர் விபத்து ஏற்படுத்தப்பட்டு, கொல்லப்பட்டுள்ளார்கள். இந்த…
-
- 2 replies
- 752 views
-
-
ஐ.எஸ். தீவிரவாதிகளை நடுங்க வைக்கும் நாடு எது? வெளியான ஆச்சரிய தகவல் ஐ.எஸ்.தீவிரவாதிகளுக்கு எதிராக கூட்டுப்படைகள் ஒன்றிணைந்து தாக்குதல் நடத்தி வந்தாலும், ஐ.எஸ். பயத்துடன் நோக்கும் நாடு குறித்த ஆச்சரிய தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யா, பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் ஒன்றிணைந்து ஐ.எஸ்.தீவிரவாதிகளை வான் தாக்குதலால் சிதறடித்து வருகின்றன. இதனால் சிறப்பு படையினர் தரையில் முன்னேறிச் சென்று ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தவும் கூட்டுப்படையினர் உதவி வருகின்றனர். இதனிடையே, சிரியாவில் தங்கியிருந்து ஐ.எஸ். ஆதரவாளர்களுடன் சில காலம் இருந்த ஊடகவியலாளர் ஒருவர் உலக நாடுகள் ஆச்சரியமடையும் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அமெரிக்கா, இங்கிலாந…
-
- 0 replies
- 643 views
-
-
பெல்ஜியம்: புத்தாண்டில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட சந்தேக நபர்கள் கைது புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக நம்பப்படும் சந்தேக நபர்களை பெல்ஜிய காவல் துறையினர் கைது செய்துள்ளனர். பிரஸ்ஸல்ஸில் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது முக்கியச் இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக நம்பப்படும் இரண்டு சந்தேக நபர்களை பெல்ஜிய காவல் துறையினர் கைது செய்துள்ளனர். கடந்த ஞாயிறு மற்றும் திங்களள் ஆகிய நாட்களில் இவர்களை பிடித்து, தடுத்து வைத்துள்ளதாக அரச வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர், பயங்கரவாத செயல்களுக்காக ஆட்களை சேர்த்தது மற்றும் தாக்குதல்களுக்கு திட்டமிட்டது ஆகிய குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார். பயங்…
-
- 0 replies
- 517 views
-
-
இஸ்ரேலிய முன்னாள் பிரதமருக்கு சிறை ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் எகுட் ஒல்மேர்ட் அவர்களுக்கு 18 மாதங்கள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இஸ்ரேலிய முன்னாள் பிரதமருக்கு சிறை அவருக்கு இன்னுமொரு நீதிமன்றத்தால் 6 வருடங்கள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. ஆனால் உச்ச நீதிமன்றம் அதனை 18 மாதங்களாக குறைத்துள்ளது. 2006 இல் பிரதமராக வருவதற்கு முன்னதாக ஜெரூசலத்தில் அவர் மேயராக இருந்தபோது நடந்ததாக கூறப்படும் வீடுமனைகளை வாங்கிவிற்கும் நடவடிக்கை ஒன்றில் நடந்த ஊழலுக்காகவே இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 70 வயதான ஒல்மேர்ட் 2009இல் பதவி விலகினார். இஸ்ரேலின் சிறை செல்லும் முதலாவது முன்னாள் பிரதமர் இவராவார். இவர் தனது தண்டனைக் கா…
-
- 0 replies
- 541 views
-
-
ஓடும் ரயிலில் ராணுவ வீரர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 14 வயது சிறுமி! ஓடும் ரயிலில் 14 வயது சிறுமி ஒருவர் இரு ராணுவ வீரர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கொல்கத்தா- அம்ரிஸ்தர் இடையே ஓடும் 'டம் டம் ' எக்ஸ்பிரஸ் ரயிலில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று இந்த சம்பவம் நடந்துள்ளது. கொல்கத்தாவை சேர்ந்த அந்த சிறுமி, வீட்டில் கோபித்துக் கொண்டு, ஹவுரா ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ரயிலில் ஏறியிருக்கிறார். சிறுமி வீட்டை விட்டு வெளியேறியது குறித்து போலீசுக்கு வீட்டார் தகவல் அளித்துள்ளனர். போலீசார் சிறுமியை தேடிக் கொண்டிருக்கையில், அவர் 'டம் டம் 'எக்ஸ்பிரஸ் ரயிலிலில் ஏறி சென்றிருக்கிறார். ஹவுர…
-
- 0 replies
- 684 views
-
-
அட... இதற்குதான் சீனா இரண்டாவது குழந்தைக்கு அனுமதித்ததா? வரும் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் ஒரு தம்பதியினர் 2 குழந்தைகள் வரை பெற்றுக்கொள்ளலாம் என சட்டப்பூர்வமாக அறிவித்திருக்கிறது சீன அரசு. 1978-ம் ஆண்டு முதல் இருந்து வரும் சர்ச்சைக்குரிய 'ஒரு தம்பதி-ஒரு குழந்தை' திட்டத்தை நீக்கியிருப்பது சீன மக்களிடையேயும், மனித உரிமை ஆர்வலர்களிடமும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால், இந்த முடிவுக்கு, சீனா வந்தது ஏன்? திட்டம் பிறந்த கதை அதைத்தெரிந்து கொள்வதற்கு முன்பு இந்த திட்டத்தின் வரலாற்றையும் கொஞ்சம் அறிய வேண்டியது அவசியம். 1949-ல் மாவோ சீனாவை தன்வசப்படுத்தியபோது, உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இருந்ததும் சீனாதான். 50 கோடிக்கும் மேல் இருந்தது அன்றைய ச…
-
- 0 replies
- 989 views
-
-
மலேசியாவில் ஏறக்குறைய 50,000 பேர் ஐஎஸ் இயக்கத்தின் அனுதாபிகளாக இருப்பதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் அவர், நாட்டில் தீவிரவாதத்தை அலட்சியப்படுத்திவிட முடியாது என்றும் எச்சரித்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக தேசிய பாதுகாப்பு மற்றும் ஐஎஸ் அச்சுறுத்தல் மாநாட்டில் போக்குவரத்துத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ லியோவ் தியோங் லாய் கூறுகையில், “தீவிரவாதம் தொடர்பான புள்ளிவிவர எண்ணிக்கை (50,000) என்பது உளவுத்துறையின் மதிப்பீடுகள் தான். தற்போது ஐஎஸ் இயக்கத்தின் அனுதாபிகளாக இருப்பவர்களில் 1 சதவீதம் பேர் தீவிரவாதத்தில் இறங்கி, மலேசியாவில் தாக்குதல் நடத்தினாலும், அது நாட்டிற்கு மிகப் பெரிய சிக்கலை ஏற்படுத்திவிடும்” என்று தெரிவித்துள்ளார். …
-
- 0 replies
- 462 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்… - இராக்கிய படைகளின் அதிரடியில் வசப்பட்டது ரமாடி! கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த முன்னாள் அரசு வளாகம் ஐ எஸ் வசமிருந்து மீட்பு! - கூரைகளைப் பிய்த்தெறிந்து டெக்ஸாஸைத் துவம்சம்செய்தது டொர்னேடோ சுழல்காற்று! ஆயிரக்கணக்கானோரை வீடிழக்கச் செய்து பராகுவேயை உருகவைத்துள்ளது வரலாறு காணாத வெள்ளம்! - தென்கொரிய மக்களை ஆட்கொண்டு ஆட்டிவைக்கும் ஆட்டம்! வீடியோ கேம் விளையாட்டு விரைவில் ஒலிம்பிக்கிலும் இடம்பிடிக்குமா?
-
- 0 replies
- 469 views
-
-
மேற்கு சிரியாவில் குண்டுத்தாக்குல்களில் 32 பேர் பலி மேற்கு சிரியாவில் ஹோம்ஸ் நகரத்தில் இன்று இரண்டு குண்டுத்தாக்குல்களில் 32 பேர் உயிரிழந்துள்ளதுடன் 90க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். ஹோம்ஸ் நகரின் சஃர் பகுதியில் இன்று மதியம் , சிற்றூர்ந்து குண்டு தாக்குதல் மற்றும் தற்கொலை குண்டு தாக்குதலால் இப்பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தாக்குதலுக்கு எந்த ஒரு அமைப்பும் இதுவரை பொறுப்பேற்க வில்லை. http://www.virakesari.lk/article/1433
-
- 0 replies
- 356 views
-
-
மோடி- நவாஸ் சந்திப்பு பின்னணியில் பாகிஸ்தான் ராணுவம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் சந்திப்பு பின்னணியில் பாகிஸ்தான் ராணுவம் முக்கிய பங்காற்றியுள்ளது. கடந்த 2008 மும்பை தாக்குதல் சம்பவத்துக்குப் பிறகு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே விரிசல் அதிகமானது. அண்மைகாலமாக இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் சுமுக உறவு துளிர்விட்டுள்ளது. பாரீஸில் நடைபெற்ற பருவநிலை மாறுபாடு மாநாட்டில் மோடியும் நவாஸும் சந்தித்துப் பேசினர். டிசம்பர் 6-ல் இருநாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் பாங்காக்கில் ஆலோசனை நடத்தினர். கடந்த 9-ம் தேதி இந்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பாகிஸ்தான் மாநாட்டில் பங்கேற்றார்…
-
- 0 replies
- 560 views
-