உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26703 topics in this forum
-
இன்றைய நிகழ்ச்சியில்… - ஒரு வருடத்துக்கு முன்னதாக பெஷாவர் பள்ளிக்கூடத்தில் படுகொலை செய்யப்பட்ட சுமார் நூற்று ஐம்பது பேரை பாகிஸ்தான் நினைவு கூருகிறது. - முஸ்லிம்கள் தொடர்பான தமது நிலைபாட்டை நியாயப்படுத்துகிறார் டோனல்ட் டிரம்ப். ஆனால் அவரது வாதத்தால் கஷ்டங்களைச் சந்திப்பதாக முறையிடுகின்றனர் முஸ்லிம்கள்! - கொரிய நிறுவனம் ஊழியர்களுக்கு நடத்தும் சவப்பெட்டி சடங்கு குறித்த காணொளி.
-
- 0 replies
- 366 views
-
-
பயங்கரவாதத்தை ஒழிக்க சவுதி தலைமையில் இஸ்லாமிய ராணுவ கூட்டமைப்பு 'இஸ்லாமிய ராணுவ கூட்டமைப்பு' ஏற்படுத்த 34 நாடுகள் ஒப்புதல். | படம்: ராய்ட்டர்ஸ். பயங்கரவாதத்தை ஒழிக்க சவுதி அரேபியா தலைமையில் இஸ்லாமிய ராணுவ கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டமைப்பில் பாகிஸ்தான் உள்ளிட்ட 34 நாடுகள் இடம்பெற்றுள்ளன. ஏமனில் சன்னி பிரிவு முஸ்லிகளுக்கு ஆதரவாக ஷியா பிரிவு ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மீது சவுதி அரேபியா கடந்த மார்ச் மாதம் முதல் வான் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் அங்கு பல மாதங்களாக அரசியல் நிலையற்ற சூழல் உருவாகியுள்ளது. ஏமன் அரசை ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் தங்களது வசம் வைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து ஏமன…
-
- 1 reply
- 733 views
-
-
டிரம்ப்பின் முஸ்லிம் விரோதப் பேச்சுக்கு மலாலா பதிலடி மலாலா | படம்: ஏ.எஃப்.பி பயங்கரவாதத்தை ஒழிக்க முற்படும் ஒருவர் ஒட்டுமொத்த சமுதாய மக்களையும் பழிக்க வேண்டாம் என்று நோபல் பரிசு வெற்ற மலாலா தெரிவித்துள்ளார். நோபல் பரிசு பெற்ற பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா, பிரிட்டனில் நடைபெற்ற இரங்கல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். பாகிஸ்தானின் பெஷாவரில் கடந்த ஆண்டு பயங்கரவாதத் தாக்குதலில் சுட்டுக்கொல்லப்பட்ட 150 குழந்தைகளுக்காக மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினார். இதனைத் தொடர்ந்து அவர் நிகழ்ச்சியில் பேசும்போது குடியரசுக் கட்சியின் மூத்த தலைவரும் அதிபர் பதவி வேட்பாளருமான டொனால்டு டிரம்ப்பின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து…
-
- 0 replies
- 594 views
-
-
ஐரோப்பிய நாடுகள் நிர்பந்தத்தால் அகதிகளுக்கு கதவை அடைத்தது ஜெர்மனி ஏஞ்சலா மெர்கெல் ஜெர்மனிக்கு வரும் அகதிகள் கட்டுப்படுத்தப்படுவார்கள் என்று அந்த நாட்டு பிரதமர் ஏஞ்சலா மெர்கெல் தெரிவித்துள்ளார். உள்நாட்டுப் போர் நடைபெறும் சிரியா, இராக், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து லட்சக்கணக்கான அகதிகள் கடல் மார்க்கமாக ஐரோப்பிய நாடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர். அவர்களில் பெரும்பான் மையான அகதிகளுக்கு ஜெர்மனி அடைக்கலம் அளித்தது. இதுவரை அங்கு சுமார் 8 லட்சம் அகதிகள் குடியேறி உள்ளனர். ஆனால் இதர ஐரோப்பிய நாடுகள் ஜெர்மனி மீது கடும் அதிருப்தி தெரிவித்தன. ஐரோப்பாவில் கிறிஸ்தவ மதம் மறைந்து இஸ்லாம் ஆதிக்கம் அதிகரித்…
-
- 0 replies
- 527 views
-
-
பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக லாஸ் ஏஞ்சலீஸ் பள்ளிகள் மூடல் லாஸ் ஏஞ்சலீஸ் பள்ளிகள் மூடப்பட்டதற்கான அறிவிப்பு பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக லாஸ் ஏஞ்சலீஸ் பகுதியில் இருக்கும் அனைத்துப் பள்ளிகளும் மூடப்பட்டிருக்கின்றன. இதனால் ஆயிரத்திற்கும் அதிகமான பள்ளிகளும் அதில் படிக்கும் சுமார் எழுபதாயிரம் மாணவர்களும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அதிகபட்ச முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாகவே அதிகாரிகள் இந்த முடிவை எடுத்திருப்பதாக நகர் மேயர் தெரிவித்திருக்கிறார். நியூ யார்க் காவல்துறைக்கும் இப்படியானதொரு அச்சுறுத்தல் வந்தது. ஆனால் அது நம்பத்தகுந்ததல்ல என்று அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். பள்ளிப் பேருந்துகள் அனைத்தும் நிறுத்தப்பட்டிருக்கும் காட்சி …
-
- 0 replies
- 576 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்… - தென் சீனக் கடலில் சீனா கட்டியெழுப்பியுள்ள செயற்கைத் தீவின் மேலே பதற்றமான சூழலில் வட்டமிட்டு செய்தி சேகரிக்க முயன்ற பிபிசி. - யேமனில் இப்போது ஏழு நாட்களுக்கு போர்நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது. இரு தரப்பும் சுவிட்சர்லாந்தில் பேச்சிலும் ஈடுபடுகிறார்கள் - வங்கதேசத்தில் தட்டு வண்டி ஓட்டும் புதுமைப் பெண் ரெபெக்கா பற்றிய குறிப்புகள்.
-
- 0 replies
- 501 views
-
-
பாரீஸ் தாக்குதலின் முக்கிய குற்றவாளி கைது: பரபரப்பு தகவல்கள்! பாரீஸ்: உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய பாரீஸ் நகரில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு காரணமாக விளங்கிய முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீஸ் நகரில் கடந்த மாதம் 13-ம் தேதி இரவு கொடூரமான முறையில் 7 இடங்களில் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இசையரங்கு மற்றும் பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தீவிரவாதிகளால் தொடர் தாக்குதல்கள் நடத்தப்பட்டதால் பிரான்ஸ் நாடு நிலை குலைந்தது. இதனால் பாரிஸின் எல்லைகள் மூடப்பட்டன. நாடு முழுக்க பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டன. இந்தக் கொடூர தாக்குதல்களில் 130 அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். …
-
- 0 replies
- 747 views
-
-
சிரியா சமாதானம்: கெர்ரி-லவ்ரொவ் மாஸ்கோவில் சந்திப்பு சிரியா விவகாரத்தில் கருத்தொற்றுமை காண அமெரிக்காவுன் ரஷ்யாவும் முயலுகின்றன. சிரியாவில் நான்கு வருட காலத்துக்கும் மேலாக நடந்துவரும் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவரும் வழிவகைகள் பற்றி ஆராயும் பேச்சுவார்த்தைகளுக்காக அமெரிக்க ராஜாங்க அமைச்சர் ஜான் கெர்ரி, ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கெய் லவ்ரொவ்வை மாஸ்கோவில் சந்திக்கிறார். இருதரப்பும் கருத்தொற்றுமை காண முடியும் என்று தான் நம்புவதாக கெர்ரி தெரிவித்துள்ளார். பின்னர் ரஷ்ய அதிபர் புடினையும் கெர்ரி சந்திக்கவுள்ளார். ஜனவரியில் நடத்தப்படக்கூடும் என்று கருதப்படும் சமாதானப் பேச்சுவார்த்தைகளில் எந்தெந்த சிரியன் குழுக்களை சேர்ப்பது என்பதை தீர்மானிக்…
-
- 0 replies
- 709 views
-
-
மாவோ சேதுங் எழுதிய கடிதம் லண்டனில் ஏலம் போகிறது இந்தக் கடிதம் ஒன்றரை லட்சம் டாலருக்கும் அதிகம் ஏலம் போகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது சீனக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் மாவோ சேதுங் 1937-ம் ஆண்டில் பிரிட்டனின் முக்கிய அரசியல்வாதி ஒருவருக்கு எழுதியிருந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கடிதம் லண்டனில் ஏலத்தில் விற்கப்படுகின்றது. மாவோ கையொப்பம் இட்டுள்ள இந்தக் கடிதத்தை 'மிகவும் அரிதானது' என்று அதனை ஏலத்தில் விற்கும் நிறுவனம் வர்ணித்துள்ளது. சீனா மீதான ஜப்பானின் படையெடுப்புக்கு எதிராக சீனாவின் கம்யூனிஸ்டுகளுக்கு நடைமுறை ரீதியான உதவிகளை வழங்குமாறு பிரிட்டனின் அப்போதைய எதிர்க்கட்சியான தொழிற்கட்சியின் தலைவர் கிளெமென்ட் அட்லீக்கு மாவோ கடிதம் எழுதியுள்ள…
-
- 0 replies
- 689 views
-
-
என் அலுவலகத்தை சிபிஐ சோதனையிட்டது 'கோழைத்தனம்'- மோடி மீது கேஜ்ரிவால் காட்டம் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால். | கோப்புப் படம் தன் அலுவலகத்தில் சிபிஐ சோதனை மேற்கொண்டதாக தெரிவித்த டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், இது 'கோழைத்தனமான செயல்' என்று பிரதமர் மோடியை குற்றம்சாட்டியுள்ளார். மத்திய அரசுக்கும் டெல்லி அரசுக்கும் இடையே தொடர்ச்சியாக மோதல் போக்கு வலுத்து வரும் நிலையில், அம்மாநில முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் ஆவேசமாக கருத்துகளைப் பதிந்தார். முதலில் "என் அலுவலகத்தில் சிபிஐ சோதனை மேற்கொண்டுள்ளது" என்று அவர் ட்விட்டரில் தெரிவித்ததுடன், "மோடியால் என்னை அரசியல் ரீதியில் எதிர…
-
- 0 replies
- 437 views
-
-
'அடுத்தது நீங்களே'- ஐஎஸ் தலைவர்களுக்கு ஒபாமா எச்சரிக்கை அமெரிக்க அதிபர் ஒபாமா. | கோப்புப் படம். ஐ.எஸ்.ஸுக்கு எதிராக அமெரிக்க கூட்டுப் படைகள் தாக்குதல் நடத்துவதை குறிப்பிட்டு, தங்களது அடுத்த குறி அந்த இயக்கத்தின் தலைவர்கள் தான் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா மறைமுகமாக எச்சரித்தார். சிரியா, இராக்கில் பெரும்பகுதியை ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. அந்தப் பகுதியை இஸ்லாமிய தேசம் என்று அறிவித்துள்ள ஐ.எஸ். அமைப்பு தனி அரசை நடத்தி வருகிறது. இவர்களுக்கு எதிரான தொடர் தாக்குதல்களை அமெரிக்கா மற்றும் அதன் கூட்டுப் படைகள் நடத்தி வருகின்றன. இது தொடர்பாக அமெரிக்க அதிபர் ஒபாமா பேசும்போது, "ஐ.எஸ். மீது இதுவரை…
-
- 0 replies
- 726 views
-
-
மும்பை தாக்குதலில் தொடர்பை நிரூபிக்க முடியுமா? - இந்தியாவுக்கு ஹபீஸ் சயீத் கேள்வி ஹபீஸ் சயீத் மும்பை தாக்குதலில் எனக்கு தொடர்பு இருப்பதாக இந்தியாவால் நிரூபிக்க முடியுமா என ஜமாத் உத் தவா தலைவரும், தாக்குதலில் முக்கிய மூளையாகச் செயல்பட்டவர் என இந்திய அரசால் குற்றம்சாட்டப்படுபவருமான ஹபீஸ் சயீத் சவால் விடுத்துள்ளார். சில நாட்களுக்கு முன்புதான் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் திரும்பியுள்ளார். இந்நிலையில் ஹபீஸ் இந்தியாவுக்கு சவால் விடுத்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவேற்றியுள்ள வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது: நமது அரசு மவுனம் காக்கிறது. ஆனால், சுஷ்மாவுக்க…
-
- 0 replies
- 385 views
-
-
துருக்கி கப்பலை விரட்டியது ரஷ்யா துருக்கி சரக்கு கப்பலை விரட்டியடித்த ரஷ்யாவின் கடலோர காவல் படை ரோந்து கப்பல். ரஷ்ய எல்லைப் பகுதியை நெருங்கிய துருக்கி கப்பலை அந்த நாட்டு கடற்படை விரட்டியடித்தது. இதனால் இருநாடுகளிடையே பதற்றம் எழுந்துள்ளது. சிரியா அதிபர் ஆசாத்துக்கு ஆதரவாக ரஷ்ய ராணுவம் அங்கு முகாமிட்டுள்ளது. கடந்த நவம்பர் 24-ம் தேதி சிரியா எல்லையில் பறந்து கொண்டிருந்த ரஷ்ய போர் விமானத்தை துருக்கி ராணுவம் சுட்டு வீழ்த்தியது. இதில் ஒரு விமானி உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டார். தங்கள் நாட்டு எல்லைக்குள் நுழைந்ததால் ரஷ்ய விமானம் சுடப்பட்டது என்று துருக்கி அரசு விளக்கம் அளித்துள்ளது. ஆனால் சிரியா எல்லையில்…
-
- 0 replies
- 460 views
-
-
மிகப்பெரிய கடல்நீர் சுத்திகரிப்பு ஆலை அமெரிக்காவில் திறப்பு [ Tuesday,15 December 2015, 05:55:24 ] மிகப்பெரிய கடல்நீர் சுத்திகரிப்பு ஆலை வட அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நேற்று திங்கட்கிழமை திறந்துவைக்கப்பட்டுள்ளது. பசுபிக் சமுத்திரத்திலுள்ள நீரை சுத்திகரித்து, குடிநீராகப் பயன்படுத்தும் நோக்கில் இந்த நீண்டகால திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. இந்த கடல்நீர் சுத்திகரிப்பு ஆலையை நிர்மாணிப்பதற்கான பணிகள் கடந்த 2012ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டிருந்தன. இதற்காக 1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதோடு, இதன் ஊடாக ஒருநாளைக்கு சுமார் 4 இலட்சம் பேருக்கான குடிநீரை சுத்திகரித்து விநியோகிக்க எதிர்பார்க்கப்படுகின்றது. …
-
- 0 replies
- 479 views
-
-
இந்தியாவை இழிவுபடுத்தும் கேலிச்சித்திரம் அவுஸ்திரேலிய பத்திரிகையில் வெளியீடு [ Tuesday,15 December 2015, 04:55:59 ] அஸ்திரேலிய பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ள கேலிச்சித்திரம் இந்திய மக்களை இழிவுபடுத்தும் வகையில் அமைந்திருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த கேலிச்சித்திரம் இனவெறியுடன் வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரீசில் நடந்த பருவ நிலை மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, அம்மாநாட்டில் இந்தியா சார்பில் சர்வதேச சூரியசக்தி கூட்டணியை ஆரம்பித்து வைத்திருந்தார். இந்த நிலையில், பருவ நிலை மாநாடு குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டை கேலிக்குள்ளாக்கும் வகையில், அவுஸ்திரேலியாவின் முன்னணி பத்திரிகையான 'தி அவுஸ்திரே…
-
- 0 replies
- 407 views
-
-
அமெரிக்கா ஜனாதிபதி பதவிக்கு மட்டும் தான் போட்டியிடுவேன்: உலக புகழ் பெற்ற நடிகர் வில் சுமித்! [Tuesday 2015-12-15 08:00] மென் இன் பிளாக், இண்டிபெண்டன்ஸ் டே போன்ற படங்களில் நடித்து உலக புகழ் பெற்ற நடிகர் வில் சுமித், நான் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட கூடும் என தெரிவித்துள்ளார். சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டியில் நடிப்பு, இசை போன்ற துறைகளை தவிர்த்து, வேறு செயல்பாடுகள் மூலமாக தன்னால் உலகிற்கு மிகப் பெரிய பங்களிப்புகளை செய்யமுடியும் என்று தெரிவித்துள்ளார். மேலும் உலகின் பிரபலமான திரை நட்சத்திரமாக இருப்பது என்பது மிகச் சிறிய சாதனைதான் என்று கூறியுள்ள அவர், முஸ்லிம்களை அமெரிக்காவிற்குள் அனுமதிக்க கூடாது போன்ற பேச்சுகள் தன்னை தீவிர அரசியலில் வலுகட்டாயமாக ஈட…
-
- 0 replies
- 875 views
-
-
பிரான்ஸில் ஆசிரியர் மீது தாக்குதல் பிரான்ஸின் தலைநகர் பாரிஸின் புறநகர் பகுதியில், பள்ளிக்கூட ஆசிரியர் ஒருவர் வகுப்பறையில் வைத்து தாக்கப்பட்டுள்ளார். பிரான்ஸில் ஆசிரியர் மீது தாக்குதல் கத்தரிக்கோல் மற்றும் பிளேட் கத்தி போன்றவற்றை வைத்திருந்த ஒருவரே அவரை தாக்கியதாக போலிஸார் கூறுகின்றனர். அந்த தாக்குதலை நடத்திய போது, தான் இஸ்லாமிய அரசு குழுவை சேர்ந்தவர் என்று அந்த நபர் கூறியதாக போலிஸார் தெரிவிக்கின்றனர். ''இது இஸ்லாமிய அரசு. இது ஒரு எச்சரிக்கை'' என்று அந்த நபர் கூறியதாக கூறப்படுகின்றது. வகுப்பை நடத்த தயாராகிக்கொண்டிருந்த போது அந்த ஆசிரியர் விலா மற்றும் தொண்டையில் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அவருக்கு உயிராபத்து இல…
-
- 2 replies
- 797 views
-
-
யேமென் சண்டையில் சவுதி , எமிரேட்ஸ் தளபதிகள் பலி சவூதியின் சிறப்புப்படைகள் யேமெனிய அரசுக்கு ஆதரவாக போரிட்டு வருகின்றன யேமனில் ஹுத்தி கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான சண்டையின்போது கொல்லப்பட்ட வெளிநாட்டு படையினரில் சவூதி அரேபியாவைச் சேர்ந்த மூத்த தளபதி ஒருவரும், ஐக்கிய அரபு எமிரேட்ஸை சேர்ந்த அதிகாரி ஒருவரும் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. யேமன் அரசாங்கத்திற்கு ஆதரவாகப் போரிட்டு வரும், சவூதி தலைமையிலான கூட்டுப்படையினர் தங்கியிருந்த முகாம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட ரொக்கெட் தாக்குதலில் இவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என தெரியவருகிறது. கொல்லப்பட்டவர்களில், சூடானியப் படையினர் ஒருவரும் அடங்குவார். யேமன் அரசாங்கத்திற்கும் ஹுத்தி கிளர்ச்சியாளர்களுக்குமிடையி…
-
- 0 replies
- 601 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்… - குற்றச்சாட்டோ, வழக்கு விசாரணையோ இல்லாமல் குவாண்டனாமோவில் பதினான்கு ஆண்டுகால சிறைவாசத்தை அனுபவித்த ஷகிர் ஆமிர் பிபிசிக்கு வழங்கிய செவ்வி. - முதற்தடவையாக பெண்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்ட சவுதி அரேபியாவில் 13 பெண்கள் நகர சபைகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். - புவியை வெப்படையச் செய்யும் வாயு வெளியேற்றத்தை குறைப்பதற்கான தீர்வாக பூச்சி, புழுக்களை உண்ண முடியுமா என்பது குறித்த ஒரு ஆய்வு.
-
- 0 replies
- 294 views
-
-
ருவாண்டா இனப்படுகொலை: குற்றவாளிகள் மீது ஐநா தீர்ப்பாயம் இறுதித் தீர்ப்பு சுமார் 20 ஆண்டுகளாக ருவாண்டா இனப்படுகொலை விசாரணைகள் நடந்துவந்தன ருவாண்டாவுக்கான ஐநாவின் சர்வதேச குற்றவிசாரணை தீர்ப்பாயம் விசாரணை நடத்திவந்த 6 பேரையும் குற்றவாளிகள் என்று உறுதிசெய்து இறுதித் தீர்ப்பை அளித்துள்ளது. ஆறு பேரின் கடைசி மேன்முறையீடுகளும் தோல்வியில் முடிந்துள்ளன. அத்தோடு இந்தத் தீர்ப்பாயம் தனது பணிகளை முடித்துக்கொள்கின்றது. மூன்று குற்றவாளிகளின் ஆயுள்தண்டனைகள் தலா 47- ஆண்டு சிறைத் தண்டனையாக இந்தத் தீர்ப்பு மூலம் குறைக்கப்பட்டுள்ளன. ருவாண்டாவில் 1994-ம் ஆண்டில் நடந்த இனப்படுகொலையில் முக்கிய சந்தேகநபர்களாக குற்றம்சாட்டப்பட்டிருந்தவர்களை விசாரிப்பதற்காக தன்ஸானியாவ…
-
- 0 replies
- 668 views
-
-
முதல் முறையாக பெண் ஒருவர் தேர்வு சவுதி அரேபியாவில் முதல் முறையாக சல்மா பிண்ட் ஹிஜாப் அல்-ஒடேய்பி எனும் பெண்மணி ஒருவர் நேற்று நடைப்பெற்ற உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் மக்கள் பணிக்கு தேர்தெடுக்கப்பட்டுள்ளார். முதல் முறையாக சவுதி அரேபியாவில் இத்தேர்தலில் பெண்கள் போட்டியிடவும், வாக்களிக்கவும் அனுமதி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/988
-
- 1 reply
- 771 views
-
-
பிலிப்பைன்ஸை தாக்கும் பயங்கர ‘மெலர்’ சூறாவளி: 7 லட்சம் பேர் வெளியேற்றம் பிலிப்பைன்ஸில் உள்ள கியூசான் நகரத்தில் அந்நாட்டு அரசு வானிலை ஆய்வு மைய நிபுணர்கள் மெலார் சூறாவளியின் சாட்டிலைட் படத்தை கண்காணிக்கின்றனர். | படம்: ஏ.பி. மெலர் என்ற பயங்கர சூறாவளி பிலிப்பைன்ஸை தாக்கியது ஆழிப்பேரலைகள், கடும் வெள்ளம், நிலச்சரிவு ஏற்படும் என்ற எச்சரிக்கை காரணமாக மத்திய பிலிப்பைன்ஸிலிருந்து சுமார் 7 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றனர். வடக்கு முனையான சமர் என்ற விவசாயத் தீவில் இன்று அதிகாலை மெலார் புயல் கரையை மோதியது. மணிக்கு 185 கிமீ வேகத்தில் பயங்கர காற்று வீசியது. இங்குள்ள 1.5 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றதால் உயிர்ச்சேதம் எதுவு…
-
- 0 replies
- 437 views
-
-
முஸ்லிம் சிறுமியிடம் வெடிகுண்டு சோதனை: மன்னிப்புக் கேட்டது அமெரிக்க பள்ளி அமெரிக்க பள்ளியில் சிறுமியின் பையில் வெடிகுண்டு உள்ளதா என்று ஆசிரியை கேள்வியெழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்துச் சம்பவத்துக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் மன்னிப்பு கோரினார். அமெரிக்க மாகாணமான ஜியார்ஜியா தலைநகர் அட்லாண்டாவில் செயல்படுகிறது ஷில்லோ என்ற பள்ளி. இங்கு படித்து வந்த 13 வயது சிறுமியிடன் தோல்பையில் வெடிகுண்டு இருக்கிறதா? என்று கேள்வி கேட்டு ஆசிரியை சோதனை நடத்தியதாக அந்தச் சிறுமி வீட்டில் கூறினார். இதனால் பள்ளியில் கேலிக்கு உள்ளானதாகவும் வேதனையை தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து சிறுமியின் தந்தை அப்திர்ஸாக் ஆடன், பள்ளியில் தனது குழந்தை நடத்தப்பட்ட விதம் வேத…
-
- 0 replies
- 581 views
-
-
ஜெர்மனியில் ஃபேஸ்புக் அலுவலகம் மீது மர்ம கும்பல் தாக்குதல்; சுவரில் 'டிஸ்லைக்' வாசகம் பதிவு சுவற்றில் 'ஃபேஸ்புக் டிஸ்லைக்' என்று எழுதப்பட்டிருந்தது. | படம்: ஏ.பி. ஜெர்மனியில் உள்ள ஃபேஸ்புக் அலுவலகத்தை மர்ம கும்பல் அடித்து நொறுக்கியதோடு அல்லாமல் 'ஃபேஸ்புக் டிஸ்லைக்' என்ற வாசகத்தை சுவற்றில் எழுதி சென்றனர். ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரில் ஃபேஸ்புக் அலுவலகம் செயல்படுகிறது. இங்கு நேற்று (ஞாயிறு) இரவு கறுப்பு உடையணிந்த சுமார் 20 நபர்கள் நுழைந்து அலுவலக ஜன்னல்களை சூறையாடியதாக புலனாய்வு போலீஸார் கூறினர். அதோடு, ஃபேஸ்புக் பேனர்களை மறைக்கும்படியாக கருப்பு மை ஊற்றியும் சுவற்றில் 'ஃபேஸ்புக் டிஸ்லைக்' என்று எழுதியதாக அந்நாட்டு காவல்து…
-
- 0 replies
- 464 views
-
-
ஐ.எஸ்.பயங்கரவாதிகளுக்கு எதிராக கிறிஸ்தவப் பெண் போராளிகள்! [Monday 2015-12-14 08:00] சிரியாவில் கணிசமான பகுதிகளைத் தங்களது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கும் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளுக்கு எதிராக கிறிஸ்தவப் பெண் போராளிகள் போராடி வருகின்றனர். இது தொடர்பாக ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்தியில் தெரிவித்திருப்பதாவது:சிரியாவின் ஹசாகே மாகாணத்தில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிராக சண்டையிட, சிரியா-கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்த பெண்களின் படை உருவாக்கப்பட்டுள்ளது.புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படையில், தற்போது சுமார் 50 பெண்கள் போராளிகள் உள்ளனர். இவர்களில் சிலர் திருமணமானவர்கள். அதில் ஒருவரான பாபிலோனியா என்பவர் கூறியதாவது: சிரிய…
-
- 0 replies
- 666 views
-