Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. 75% கல்லீரல் செயலிழந்த நிலையில் அமிதாப்பச்சன்: அதிர்ச்சி தகவல்! தனக்கு 75% கல்லீரல் பாதிக்கப்பட்டுள்ளதாக அமிதாப்பச்சன் தெரிவித்துள்ள தகவலால் பாலிவுட் உலகம் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. ஹெபடைடிஸ் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு ஒன்றில் மனம் திறந்து பேசியுள்ளார் அமிதாப்பச்சன். அதில் பேசிய அவர், "கூலி என்ற திரைப்படத்தில் நடித்தேன். அப்போது மோசமான விபத்து ஒன்று நேர்ந்தது. சுமார் 200 பேரிடம் இருந்து ரத்தம் பெறப்பட்டு, 60 பாட்டில்களுக்கும் அதிகமாக எனது உடலில் ரத்தம் ஏற்றப்பட்டது. இதனால் நான் உயிர் பிழைத்தேன். 2004ல் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட போது ஹெபடைடிஸ்-பி வைரஸ் தாக்கியிருப்பது தெரியவந்துள்ளது. எப்படி என மருத்துவர்கள் ஆராய்ந்தபோது, எனக்கு ஏற்…

  2. விமானத்தில் பிரசவம் பார்த்த முன்னாள் பிரஞ்சு அமைச்சர் விமானத்தில் பிரசவம் பார்த்த பிரெஞ்சு முன்னாள் அமைச்சர் பிலிப் தூஸ்த் ப்ளேசி முன்னாள் பிரெஞ்சு கேபினட் அமைச்சர் ஒருவர், அவர் இயல்பாகச் செய்யும் அரசியல் வேலைகளைத் தாண்டி, 9,000 மீட்டர் உயரத்தில் மற்றொரு உதவியையும் செய்யவேண்டிக் கோரப்பட்டார். ஆம், பிலிப் தூஸ்த் பிளேசி என்ற அந்த முன்னாள் சுகாதார அமைச்சர், விமானத்தில் பயணித்துக்கொண்டிருந்த போது, பயணி ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட, அவர் தனது பழைய தொழிலான மருத்துவர் தொழிலுக்கு மாறி ,பிரசவம் பார்த்தார். பிரான்சிலிருந்து சாட் நாட்டுக்கு இந்த ஏர் பிரான்ஸ் விமானம் பறந்து கொண்டிருந்தபோது ஒரு பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட, விமானப் பணியாளர்கள் விமானத்தில் யாரேனும…

  3. சமூக ஊடகங்களில் பூனை படத்தை வெளியிட்டு ஐஎஸ் தீவிரவாதிகளை குழப்பிய பெல்ஜியம் மக்கள் பெல்ஜியம் மக்கள் ‘ட்விட்டரில்’ ஐஎஸ் தீவிரவாதிகளை பூனைகளாக சித்தரித்து பதிவேற்றிய பல்வேறு வகையான படங்கள். பெல்ஜியத்தில் தீவிரவாதிகளை தேடும் பணிக்காக நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டிருந்த நிலையில், பொதுமக்கள் அச்சம் அடையாமல் சமூக ஊடகங்களில் பூனைப் படங்களை பதிவேற்றி ஐஎஸ் தீவிரவாதிகளை குழப்பியி ருப்பது மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 13-ம் தேதி இரவு பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 130 …

  4. அயோக்கியத்தனமான தீவிரவாதம் வா. மணிகண்டன் சில நாட்களுக்கு முன்பாக ஐ.எஸ் தீவிரவாதிகள் குறித்தான ஆவணப்படம் ஒன்று இணையத்தில் சிக்கியது. நாற்பது நிமிடங்களுக்கு மேலாக ஓடக் கூடிய அந்தப் படம் ஆப்கனில் தாலிபானுக்கு ஐஎஸ் தீவிரவாதிகளுக்கும் இடையேயான விரிசலையும் ஐஎஸ் தீவிரவாதிகள் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பதையும் பதற்றத்துடன் காட்டிக் கொண்டிருந்தது. தாலிபான்கள்தான் இருப்பதிலேயே காட்டுமிராண்டிகள் என்று நினைத்துக் கொண்டிருந்த உலகம் ‘IS is ruthless compare to Taliban' என்று சொல்ல ஆரம்பித்து வெகு நாட்கள் ஆகிவிட்டதற்கான காரணங்கள் படத்தில் பதிவு செயப்பட்டிருந்தன. குழந்தைகளிடம் துப்பாக்கியைக் கொடுத்து எதிரிகளை சுடச் சொல்கிறார்கள். ச…

    • 27 replies
    • 2.2k views
  5. துருக்கி எல்லைக்கு ஏவுகணைகளை அனுப்பியது ரஷ்யா: மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம்! மாஸ்கோ:ரஷ்யாவின் போர் விமானத்தை துருக்கி நாட்டு ராணுவம் சுட்டு வீழ்த்தியதைத் தொடர்ந்து அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஏவுகணைகளை துருக்கி-சிரியா எல்லைக்கு ரஷ்யா அனுப்பியுள்ளது. இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவின் போர் விமானம் ஒன்று நேற்று துருக்கியின் சிரியா எல்லையில் பறந்தது. அப்போது அந்த விமானத்தை துருக்கியின் எப்-16 ரக போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தின. தங்களது வான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததால்தான் ரஷ்யாவில் போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக துருக்கி தெரிவித்தது. ரஷ்ய போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதற…

  6. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நாஸ்டர்டாமஸ் உலகில் கி.பி.3797 வரை என்னவெல்லாம் நடக்கப் போகிறது என்பதைக் கூறியுள்ள அபூர்வ ஜோதிடர். சுமார் 3000 பலன்களை இவர் கூறியுள்ளதும் அவை அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக நடந்து வருவதும் உலகில் உள்ள அனைவரையும் திகைக்க வைக்கிறது. 14-12-1503ல் பிறந்த இவர் 2-7-1566ல் மறைந்தார். இவர் வாழ்வு மிக விசித்திரமான ஒன்று. இவர் கூறிய பலன்கள் பெரும்பாலும் அழிவையும் விபத்துக்களையும் கொலைகளையும் சுட்டிக் காட்டுவதால் சிறிது பயத்துடன்தான் இந்த நூலை அணுக வேண்டியிருக்கிறது. தற்போது இவரை போலவே தன்னை நவீன நாஸ்டர்டாம்சாக கருத்தி கொள்ளும் பாஸ்டர் ரிக்கார்டோ சல்சா வயிற்றில் புளியை கரைக்கும் பல தகவல்களை கூறி உள்ளார். இதற்கு முன்னர் இவர் கூறி உள்ளது ஏதாவது…

  7. கனடா பல்கலை.,யில் இலவசமாக நடத்தப்பட்டு வந்த வாராந்திர யோகா பயிற்சி வகுப்புக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. யோகா, கலாச்சார மாறுபடுகளை ஏற்படுத்துவதாகவும், கலாச்சாரம் குறித்த பல்வேறு சர்ச்சைகளை கிளப்பும் வகையில் இருப்பதாலும் யோகாவிற்கு தடை விதித்திருப்பதாக ஒட்டோவா பல்கலை., மாணவர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. http://www.seithy.com/breifNews.php?newsID=145639&category=WorldNews&language=tamil

  8. சிங்கப்பூரில் தடை செய்யப்பட்ட பிரசுரங்களின் எண்ணிக்கை குறைப்பு சிங்கப்பூர் அரசு அந்நாட்டில் தடை செய்யப்பட்டிருக்கும் 250க்கும் மேற்பட்ட பிரசுரங்களின் எண்ணிக்கையை 17ஆகக் குறைத்திருக்கிறது. இப்போது தடை விலக்கப்பட்ட புத்தகங்களில் , 1748ம் ஆண்டில் முதலில் பிரசுரிக்கப்பட்ட ஆங்கில சிருங்கார நாவலான "ஃபேனி ஹில்"லும் அடங்கும். "தெ லாங் மார்ச்" என்ற கம்யூனிச புத்தகத்தின் மீது விதிக்கப்பட்டிருந்த தடையும் விலக்கப்பட்டிருக்கிறது. ஆனால், செக்ஸ் சஞ்சிகைகளான, 'பிளேபாய்' மற்றும் 'ஹஸ்லர்' போன்றவை மீது விதிக்கப்பட்டிருக்கும் தடை தொடர்ந்து நீடிக்கிறது. அதே போல "ஜெஹோவாவின் சாட்சிகள்" கிறித்தவ மதப் பிரிவின் பிரசுரங்கள் மீது விதிக்கப்பட்டிருக்கும் தடையும் நீட…

  9. அமெரிக்கா, பிரான்ஸ், துருக்கியுடன் இணைந்து ஐ.எஸ்.ஸுக்கு எதிராக போரிடத் தயார்: ரஷ்யா நவ.20-ம் தேதி வீடியோவிலிருந்து எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படத்தில் சிரியாவில் ஆல்-ஆசாத்துக்கு எதிரான புரட்சிக் குழுக்கள் மீது ரஷ்யா தாக்குதல். படம்: ஏ.பி. அமெரிக்கா, பிரான்ஸ், துருக்கி ஆகிய நாடுகளுடன் இணைந்து ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு எதிரான போரில் ஈடுபடத் தயார் என ரஷ்யா தெரிவித்துள்ளது. ரஷ்ய போர் விமானத்தை துருக்கி ராணுவம் செவ்வாய்க்கிழமை சுட்டு வீழ்த்திய நிலையில் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்நிலையில், பிரான்ஸ் நாட்டுக்கான ரஷ்ய தூதர் அலெக்ஸாண்டர் ஓர்லோவ் பாரீஸில் கூறும்போது, “ஐஎஸ் தீவிரவாதிகளின் இருப்பிடங்கள் மீது தாக்க…

  10. இன்றைய நிகழ்ச்சியில்… - 'திட்டமிட்டு ஆத்திரமூட்டும் செயல்'- தங்களின் விமானத்தை சுட்டு வீழ்த்திய துருக்கி மீது ரஷ்யா காட்டம்! அதேநேரம், தங்களின் விமானி ஒருவர் மீட்கப்பட்டதாக ரஷ்யா உறுதி! - பிபிசியின் நூறு பெண்கள் தொடர் வரிசையில், ஐ எஸ் ஆயுததாரிகளின் தலைநகரமான ரக்காவிலிருந்து தப்பித்த ஒரு பெண்ணின் சோகக் கதை! - பிரசிலில் அண்மையில் அணையொன்று உடைய, நீராதாரமாகவும் வாழ்வாதாரகவும் விளங்கிய நதியை பறிகொடுத்து நிற்கும் பழங்குடியின மக்கள்!

  11. ஐ.எஸ் இயக்கத்தில் இருந்து தப்பிக்க முயன்ற சிறுமி அடித்துக்கொலை ஐ.எஸ் இயக்கத்தில் இருந்து தப்பிக்க முயன்ற சிறுமி ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். சிரியா- ஈராக்கின் சில பகுதிகளை கைப்பற்றி இஸ்லாமிய நாடாக அறிவித்துள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் பல்வேறு நாடுகளில் தீவிரவாத தாக்குதலுக்கு திட்டம் தீட்டி உள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் முகாம் மீது அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் விமான தாக்குதல்களை நடத்தி வருகின்றன. ரஷ்யாவும் சிரியாவுக்கு ஆதரவாக விமான தாக்குதல்களை நடத்தி வருகிறது. உலக நாடுகளின் இந்த தாக்குதலுக்கு எதிர்ப்பு…

  12. பரிஸ் தாக்குதலாளியாக்கப்பட்ட மொரோக்கோவின் அப்பாவிப் பெண் பரிஸில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களோடு சம்பந்தப்பட்டதாகக் கருதப்படும் பெண்ணொருவர், பரிஸில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின்போது மரணமடைந்திருந்தார். அங்கு உயிரிழந்தவர் எனக் கருதப்பட்டு, சில ஊடகங்களால் வெளியிடப்பட்ட புகைப்படங்களில் காணப்படுபவர், உயிரிழந்தவர் அல்லர் எனத் தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவரின் பெயர் ஹஸ்னா அய்ட் பௌலசென் என இனங்காணப்பட்டார். தற்கொலை அங்கியை வெடிக்க வைத்தே அவர் உயிரிழந்ததாக முன்னர் அறிவிக்கப்பட்ட போதிலும், ஆணொருவரே அதை வெடிக்க வைத்ததாகப் பின்னர் உறுதிப்படுத்தப்பட்டது. அவர் தொடர்பில் ஆரம்பத்தில் வெளியிடப்பட்ட புகைப்படம் சரியென்ற போத…

  13. துனிஷியாவில் அதிபரின் பாதுகாவலர்கள் மீது தாக்குதல்; 12 பேர் பலி: அவசரநிலை அமல்! துனிஷ்: வடக்கு ஆப்ரிக்க நாடான துனிஷியாவில், அதிபரின் பாதுகாவலர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து அந்நாட்டில் அவசரநிலைப் பிரகடனம் அமல்படுத்தப்பட்டுள்ளது. தலைநகர் துனிஷில், அதிபரின் பாதுகாவலர்களை ஏற்றிச் சென்ற பேருந்து திடீரென வெடித்துச் சிதறியதில், அதில் இருந்த 12 பேர் உயிரிழந்தனர். இது தற்கொலைப் படை தாக்குதல் என கூறப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தாக்குதலைத் தொடர்ந்து, சுவிட்சர்லாந்து பயணத்தை ரத்து செய்த துனிஷிய அதிபர் பெஜி கய்டு எஸிப்சி, நாடு முழுவதும் 30 நாட்கள் அவசர நிலையை பிரகடனம் செய்…

  14. விமானத்திலிருந்து ஏவப்படும் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது துருக்கியால் நேற்று சுட்டு வீழ்த்தப்பட்ட ரஷ்ய விமானத்தின் விமானிகளில் ஒருவரை சிரியாவின் இராணுவத்தினர் மீட்டுள்ளதாக பிரான்ஸிற்கான ரஷ்யத் தூதர் தெரிவித்திருக்கிறார். யுரோப் வன் வானொலிக்குப் பேட்டியளித்த ரஷ்யத் தூதர் அலெக்ஸாண்டர் ஆர்லோவ், அந்த விமானி சிரியாவில் உள்ள ரஷ்ய விமான தளத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டிருப்பதாக கூறியுள்ளார். எனினும், இந்தத் தகவலை மாஸ்கோவில் உள்ள அதிகாரிகள் இன்னும் உறுதிசெய்யவில்லை. சுட்டுவீழ்த்தப்பட்ட விமானத்தில் இருந்து பாராசூட் மூலம் குதித்திருந்த மற்றொரு விமானியும், விமானிகளை மீட்பதற்காக சென்ற ஹெலிகாப்டரில் ரஷ்யாவின் மரைன் படை வீரர் ஒருவரும் கொல்லப்பட்டுவிட்டதாக ரஷ்யாவி…

  15. ரஷ்ய விமானத்தை துருக்கி சுட்டு வீழ்த்தியதற்கு அமெரிக்கா ஆதரவு அமெரிக்க அதிபர் ஒபாமா சிரியாவின் மீது வான் தாக்குதலில் ஈடுப்பட்டிருந்த ஒரு ரஷ்ய போர் விமானத்தை துருக்கி சுட்டு வீழ்த்தியதற்கு, அமெரிக்கா தனது ஆதரவை தெரிவித்துள்ளது. துருக்கிய அதிபர் ரெஜெப் தயிப் எர்துவானுடன் தொலைப்பேசி மூலம் பேசிய அமெரிக்க அதிபர் ஒபாமா, துருக்கி தனது இறையாண்மையைப் பாதுகாத்துக்கொள்ள அதற்கு உரிமை என்று தெரிவித்துள்ளார். துருக்கியின் இஸ்லாமிய அரசு ஆயுததாரிகளை பாதுகாப்பதையே இச்செயல் காட்டுகிறது என்று ரஷ்ய பிரதமர் திமித்ரி மெட்வியதேவ் தெரிவித்துள்ளார். ஐஎஸ் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களில் எண்ணெய் விற்பனையின் மூலம் சில துருக்கிய அதிகாரிகள் பணம் சம்பாதிப்பதாகவும் அவர் குற்…

  16. இந்திய முஸ்லிம்கள் உள்பட தெற்காசிய நாடுகளிலிருந்து ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் இணைவோரை, தற்கொலைப் படையாகவே அந்த இயக்கத்தினர் பயன்படுத்துவதாக சர்வதேச உளவுத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் செயல்பாடுகளைக் கண்காணித்து வரும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த உளவுத் துறை நிறுவனங்கள், அதுகுறித்து தகவல்களை இந்திய உளவுத்துறையிடம் அண்மையில் பகிர்ந்து கொண்டன.அந்த அறிக்கையில், இந்தியர்கள் உள்பட தெற்காசிய நாடுகளைச் சேர்ந்தவர்களை ஐ.எஸ். இயக்கத்தினர் நடத்தும்விதம் குறித்து அதிர்ச்சியான தகவல்கள் கூறப்பட்டுள்ளன.அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கியத் தகவல்கள் வருமாறு:ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் அரபு நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே உயர்ந்த பதவிகள் வழங்கப்படுகின்றன. த…

    • 2 replies
    • 765 views
  17. ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான கூட்டுப் படையில் ரஷ்யா பங்கேற்க ஒபாமா நிபந்தனை! வாஷிங்டன்: உலகை அச்சுறுத்தி வரும் ஐ.எஸ்.தீவிரவாதிகளுக்கு எதிரான கூட்டுப்படையில், ரஷ்யா பங்கேற்க அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா புதிய நிபந்தனை விதித்துள்ளார். சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் பலமாகியுள்ள நிலையில், 65 உலக நாடுகள் அவர்களை எதிர்க்கும் ராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் ரஷ்யா, சிரியா நாட்டு அதிபர் பஷர் அல் ஆசாத்தை பாதுகாக்கவும், அந்நாட்டு அரசுக்கு உதவும் வகையில் ஐ.எஸ்.தீவிரவாதிகளை அழிக்கும் நோக்கில் ராணுவ தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனையடுத்து அமெரிக்க அதிபர் ஒபாமா, "ரஷ்யா தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு, தீவிரவாதிகளை ஒழிக்க மட்டுமே தாக்குதல்களை ந…

  18. சிரியாவிலிருந்து வந்து கொண்டிருந்த ரஷ்ய போர் விமானத்தை துருக்கி நாட்டைச் சேர்ந்த போர் விமானங்கள், துருக்கி-சிரியா எல்லைப்பகுதிக்கருகே, இன்று காலை சுட்டு வீழ்த்தியது. எச்சரிக்கை விடுத்ததையும் மீறி, துருக்கி வான்வெளிக்குள் நுழைய முயன்றதால் போர்விதிகளுக்குட்பட்டு அதனை சுட்டு வீழ்த்தியதாக துருக்கி அதிகாரிகள் தெரிவித்தனர். தங்கள் நாட்டு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகமும் உறுதி செய்தது. இந்நிலையில், ரஷ்ய போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது பற்றி கருத்து தெரிவித்துள்ள அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் “முதுகில் குத்திவிட்டார்கள் என்று தான் கூறவேண்டும். இதை வேறு மாதிரி சொல்லமுடியாது. இன்று நடைபெற்ற சம்பவம் துருக்கி - ரஷ்ய இட…

    • 3 replies
    • 1.4k views
  19. சிங்கப்பூரில் தமிழர் ஹோட்டலில் மசால் தோசை சாப்பிட்ட மோடி! ( வீடியோ) சிங்கப்பூரில் உள்ள பிரபல கோமளவிலாஸ் ஹோட்டலில், பிரதமர் மோடிக்கு மசால்தோசை விருந்தளித்தார் சிங்கப்பூர் பிரதமர் லீ . இந்திய பிரதமர் நரேந்திர மோடி, முதன் முறையாக சிங்கப்பூருக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். லிட்டில் இந்தியா பகுதியில் உள்ள பிரபலமான இந்திய ஹோட்டலான, கோமளவிலாசில் மோடிக்கு சிங்கப்பூர் பிரதமர் நேற்று இரவு விருந்தளித்தார். இதில் என்ன விஷேசம் என்னவென்றால், தலைவர்கள் இருவரும் அந்த ஹோட்டலுக்கு நேரடியாக சென்று விருந்து உண்டதுதான். பிரதமர் மோடி மசால்தோசை, வடை போன்றவற்றை விரும்பி உண்டார். இந்த ஹோட்டலை ராஜ்குமார் என்பவர் நிர்வகித்து வருகிறார். …

  20. சிரியாவில் ரஷ்ய யுத்த விமானம் ஒன்றை துருக்கி சுட்டு வீழ்த்தியுள்ளது சிரியாவுக்கு மேலே வைத்து ரஷ்யாவின் சுக்கோய் 24 ரக போர் விமானம் ஒன்றை துருக்கி சுட்டு வீழ்த்தியுள்ளது. சிரியாவுடனான எல்லையின் அருகே தமது வான் பரப்புக்குள் அந்த ரஷ்ய விமானம் அத்துமீறி நுழைந்ததால், தமது எஃப் 16 ரக விமானங்கள் இரண்டு அதனை சுட்டு வீழ்த்தியதாக துருக்கிய இராணுவ அதிகாரிகள் கூறுகின்றனர். சுடுவதற்கு முன் ஐந்து நிமிட நேரத்தில் பத்து தடவை அந்த விமானத்தை தாம் எச்சரித்திருந்ததாக அவர்கள் கூறுகின்றனர். ஆனால் ரஷ்ய விமானம் துருக்கிய வான் பரப்பில் நுழைந்ததாகக் கூறப்படுவதை மாஸ்கோ மறுக்கிறது. தமது விமானம் இன்னொரு விமானத்திலிருந்து சுடப்படவில்லை, தரையிலிருந்துதான் சுடப்பட்…

  21. மெசெடோனியாவுக்குள் நுழைய முடியாத குடியேறிகள் வாய்த் தைப்புப் போராட்டம் ====================================== பாரிஸ் தாக்குதல்களை அடுத்து ஐரோப்பாவுக்குள் நுழைவதில் புதிய கெடுபிடிகளை சந்தித்திவரும் இரானிய, பாகிஸ்தானிய குடியேறிகள் வாயைத் தைத்துக்கொண்டு உண்ணாவிரத மற்றும் மௌன விரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். http://www.bbc.com/tamil/global/2015/11/151124_refugeesmanivannan

  22. இருந்ததே நான்கு,அதிலும் ஒன்று போய்விட்டது உலகளவில் கடைசியாக எஞ்சியிருந்த வடபகுதி வெள்ளையின காண்டாமிருங்கள் நான்கில் ஒன்று உயிரிழந்துள்ளது. நோலா 'கொலை செய்யப்பட்டாள்'. அறுவை சிகிச்சை பலனளிக்காததால் கருணைக் கொலை. அமெரிக்காவிலுள்ள வனவிலங்கு பூங்காவில் இருந்த 41 வயதான நோலா எனும் பெண் காண்டாமிருகத்தின் உடல்நிலை, அறுவை சிகிக்சை ஒன்றின் பின்னர் மோசமடைந்தது. இடுப்புப் பகுதியில் ஏற்பட்டிருந்த புண் ஒன்றுக்காக நவம்பர் மாதம் 13ஆம் தேதி நோலாவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனாலும் அதன் உடல்நிலை பின்னரும் மோசமடைந்ததால் மருத்துவரீதியில் அதை கருணைக் கொலை செய்ய முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை மருத்துவர்களால் அது கொல்லப்பட்டது. …

  23. இன்றைய நிகழ்ச்சியில்… - துருக்கி சிரியா எல்லையில் சுட்டுவீழ்த்தப்பட்டது ரஷ்ய யுத்த விமானம்- துருக்கிய வான் பரப்பில் அத்துமீறி நுழையவில்லை என்கிறது ரஷ்யா! - விமானத் தாக்குதல்களால் மட்டும் ஐஎஸ் குழுவினரை தோற்கடிக்க முடியுமா? - சிரியா விவகாரம் பற்றி பேசுவதற்காக பிரான்ஸ் அதிபர் அமெரிக்கா செல்லும் நிலையில், ஐஎஸ் மீதான வான் தாக்குதல்களின் பலன்கள் பற்றி ஆராய்கிறது பிபிசி - பாரிஸ் தாக்குதலை அடுத்து, ஐரோப்பாவுக்குள் குடியேறிகளை அனுமதிப்பதில் அதிகரிக்கும் கெடுபிடிகளுக்கு எதிராக மசெடோனிய எல்லையில் குடியேறிகள் போராட்டம்!

  24. ஐஎஸ்-க்கு நிதி எங்கிருந்து வருகிறது? ஐஎஸ்-க்கு எதிராக போர் புரிய ஐநா அமைப்பே அறிவுறுத்திய பின்பும் கூட உலக நாடுகளுக்கு முன்னால் இருக்கும் பெரிய சவால் ஐஎஸ்.க்கு வரும் பணத்தை முடக்குவது எப்படி என்பதாகவே இருக்கும். டமாஸ்கஸின் புறநகர் பகுதிகளிலிருந்து பாக்தாத் புறநகர்ப்பகுதி வரை தங்கள் ஆதிக்கத்தை ஏற்படுத்தியுள்ள ஐஎஸ், உலகிலேயே பெரிய அளவுக்கு நிதியுதவி பெற்று வரும் பயங்கரவாத அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களிடம் மத போலீஸ் துறை உள்ளது, இவர்கள் பள்ளிகள் நடத்தி வருகின்றனர், உணவு மையங்கள் மற்றும் பிற நிர்வாக மையங்களையும் ஐஎஸ் நடத்தி வருகிறது. 'தி இகானமிஸ்ட்' பத்திரிகையின் படி, ஐஎஸ் போர் படையினருக்கு மாதம் 400…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.