Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. இதனால், அமெரிக்காவின் மத்திய மேற்குப் பகுதி முழுவதும் பனியால் மூடப் பட்டுள்ளது. பெரும்பாலான இடங்களில் சாலைப் போக்குவரத்து முடங்கியுள்ளது. சுமார் 1.87 கோடி மக்கள் பனிப்புயலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் கிழக்கு, தெற்கு பகுதி களிலும் கடுமையான குளிர் நிலவுகிறது. பெரும்பாலான பகுதிகளில் பள்ளி, குழந்தைகள் காப்பகங்கள் மூடப்பட்டுள்ளன. சாலைகளில் ஓரடி உயரத்துக்கும் அதிக மாக பனிபடிந்துள்ளது. கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் முற்றிலு மாக பனியால் மூடப்பட்டுள்ளன. இல்லினா மாகாணத்தில் 375க்கும் மேற்பட்ட வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாயின. கடும் பனிமூட்டம் காரணமாக இவ்விபத்து நிகழ்ந்துள்ளது. இருப்பினும் யாருக்கும் பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை. வாகனங்களில் இர…

  2. பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை விரைவில் வெளியிட அக்கட்சியின் பொதுச்செயலாளர் ராகுல் காந்தி விரும்புவதாக தெரிகிறது. இம்மாதம் 17-ம் தேதி நடைபெற உள்ள அனைத்திந்திய காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்திற்கு பின் 150 முதல் 200 பேரை கொண்ட வேட்பாளர் பட்டியலை இம்மாத இறுதிக்குள் வெளியிட அவர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அக்கட்சியின் வேட்பாளர் பரிசீலிக்கும் குழு விரைவில் கூடி வேட்பாளர்கள் பற்றி இறுதி முடிவு எடுக்கும் என கூறப்படுகிறது. பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி தலைமையிலான அக்கட்சி குழு, பாராளுமன்ற தேர்தலின்போது கடைபிடிக்கவேண்டிய அம்சங்கள் குறித்த தனது அறிக்கையில், தேர்தல் நடைபெறும் சில மாதங்களுக்கு முன்னரே வேட்பாளர்களை அறிவிக்கவேண்டும் என பரிந்து…

  3. ஆம் ஆத்மி கட்சிக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளிலிருந்து இதுவரை 5 கோடி ரூபாய் அளவுக்கு நிதியுதவி குவிந்துள்ளதாக அக்கட்சி இணையதளம் குறிப்பிட்டுள்ளது. இன்றுவரை அக்கட்சிக்கு சுமார் 5 கோடியே 8 லட்ச ரூபாய் அளவிற்கு நிதியுதவி குவிந்துள்ளது. இந்தியாவிலிருந்து மட்டும் அக்கட்சிக்கு 3 கோடியே 90 லட்ச ரூபாய் நிதியுதவி கிடைத்துள்ளது. வெளிநாடுகளிலிருந்து கிடைத்துள்ள நிதியுதவியில் முதலிடத்தை அமெரிக்காவும் அதற்கடுத்து முறையே ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சிங்கப்பூர், ஐக்கிய நாடுகள் மற்றும் கனடா ஆகிய நாடுகள் பிடித்துள்ளன. 2014ல் 2014 ரூபாய் நிதியுதவி வழங்குங்கள் என்ற தங்களது விளம்பர வாசகத்தை பார்த்து 2200 பேர் அத்தொகையை வழங்கியதாக அக்கட்சி தெரிவித்துள்ளது. டெல்லி தேர்தலுக்கு பின் ஒரு நாளைக்கு…

  4. டெல்லியில் முதல்-மந்திரியாக பதவியேற்றுள்ள அரவிந்த் கெஜ்ரிவால், தனக்கு வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பை நிராகரித்தார். இந்தநிலையில் ஆம் ஆத்மியின் தலைமை அலுவலகம் மீது இந்து ரக்ஷா தள அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதைத்தொடர்ந்து, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கக்கோரி அனூப் அஸ்வதி என்ற வழக்கறிஞர் டெல்லி ஐகோர்ட்டில் அவசர மனு தாக்கல் செய்தார். பாதுகாப்பு வழங்க மத்திய அரசு மற்றும் டெல்லி போலீசாருக்கும் உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. http://www.dailythanthi.com/2014-01-08-Plea-in-Delhi-HC-for-security-to-Arvind-Kejriwal

  5. காசியாபாத்தில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் தலைமை அலுவலகம் மீது கும்பல் இன்று தாக்குதல் நடத்தியது. கெஜ்ரிவால் வீட்டின் அருகே உள்ள இந்த அலுவலகத்திற்கு காலை 11 மணியளவில் வந்த சுமார் 50 பேர், கற்களை வீசி தாக்கியதுடன், அலுவலக ஜன்னலை அடித்து உடைத்தனர். அங்குள்ள ஊழியர்களையும் தாக்க முற்பட்டதாகவும், பெண்களிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாகவும் கூறப்படுகிறது. தாக்குதல் நடத்திய நபர்கள், 'இந்து ரக்சா தள்' கொடியை ஏந்தி வந்தனர். இந்த சம்பவத்திற்கு பா.ஜனதா கட்சியும், அதன் சார்பு அமைப்புகளும் காரணம் என்று ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் பிரசாந்த் பூஷன் கடும் குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "2011-ம் ஆண்டு தனது வீட்டில் தாக்குதல் நடத்திய கும்பல்தான் இன்று தாக்குதல் நட…

  6. பிரபல நடனக் கலைஞரான மல்லிகா சாராபாய் ஆம் ஆத்மி கட்சியில் கடைநிலை தொண்டராக தன்னை இணைத்துக் கொண்டார். அரவிந்த் கெஜ்ரிவாலுடன் தான் பல பணிகளைச் செய்துள்ளதாக கூறியுள்ள சாராபாய், தன்னுடைய எண்ணங்கள் ஆம் ஆத்மி கட்சியின் செயல்பாடுகளோடு ஒத்துப்போவதால், அக்கட்சியில் இணைய முடிவெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கு பின் ஆம் ஆத்மி கட்சிக்கு நாடு முழுவதும் ஆதரவு பெருகி வருகிறது. அரசியலில் பங்குகொள்ளாத முக்கிய பிரமுகர்கள் பலர் தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சியில் இணைந்து வரும் நிலையில், இவரும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. http://www.maalaimalar.com/2014/01/08171930/Mallika-Sarabhai-joins-Arvind.html

  7. ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் பிரசாந்த் பூஷன் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் சந்திப்பின் போது, காஷ்மீரில் உள்நாட்டு பாதுகாப்பிற்கு ராணுவம் தேவையா இல்லை வேண்டாமா என்பதை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும் என்று கூறினார். இந்த பிரச்சனைக்குரிய கருத்துக்கு பதில் அளித்துள்ள ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார். இந்த கருத்துக்கு சில அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பூஷனின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காசியாபாத்தில் உள்ள ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தை இந்து அமைப்பினர் தாக்கினர். இந்நிலையில் பாரதீய ஜனதா கட்சி மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் பிரசாந்த் பூஷன் கடுமைய…

  8. சிரியாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் ரசாயன குண்டுகள் வீசப்பட்டு பொதுமக்கள் 1400 பேருக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதையடுத்து சிரியா மீது போர் தொடுக்க அமெரிக்கா ஆயத்தமானது. பின்னர் ரஷ்யா-அமெரிக்க கூட்டு உடன்படிக்கைபடி, சிரியாவிலுள்ள இரசாயன ஆயுதங்களை அகற்றும் பணியை ஐ.நா. சர்வதேச இரசாயண தடுப்பு அமைப்பு மேற்கொண்டது. இதன், முதல் கட்டமாக சிரியாவின் ரசாயன ஆயுதங்களை ஏற்றிய டேனிஷ் நாட்டு கப்பல், நேற்று லடாக்கிய துறைமுகத்தில் இருந்து இத்தாலிக்கு புறப்பட்டு சென்றது. அக்கப்பலுக்கு ரஷ்ய மற்றும் சீனா கப்பல்கள் பாதுகாப்பாக செல்கின்றன. இந்த மிகமோசமான இரசாயன ஆயுதங்கள் இத்தாலியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அமெரிக்க கப்பலுக்கு மாற்றப்படும். அங்கு, டைட்டேனியம் தொட்டியில் வைத்து ப…

  9. வடகொரியாவில் நாடாளுமன்றத் தேர்தல் வரும் மார்ச் 9-ஆம் தேதி நடைபெறும் என்று அந்நாட்டு மாநில ஊடகங்கள் இன்று தெரிவித்துள்ளன. பொதுவாகவே நாடாளும் அதிபரின் ஆணைகளுக்கு ஒப்புதல் அளிக்கும் விதமாகவே இந்நாட்டு நாடாளுமன்றம் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை இதன் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கம். எனினும் ஆளும் கட்சியான தொழிலாளர் கட்சியிலிருந்தே நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு விடுவதால் தேர்தல் என்பது இந்நாட்டில் ஒரு சம்பிரதாயமாகவே செயல்பட்டு வந்துள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டின் இறுதியில் அதிபர் கிம் ஜோங்-2 இறந்து அவரது மகன் கிம் ஜோங் உன் பதவி ஏற்றபின்னர் நடக்கவிருக்கும் முதல் நாடாளுமன்றத் தேர்தல் இதுவாகும். இவர் கடந்த மாத இறுதியில் அரச த…

  10. பாராளுமன்றத்துக்கு ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக பாராளுமன்றத்தை கூட்டி கூடுதல் செலவுக்கான முன் அனுமதி பெற திட்டமிட்டுள்ளனர். இதற்கான பாராளுமன்ற கூட்டத்தொடர் பிப்ரவரி முதல் வாரம் கூடும் என்று பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி கமல்நாத் இன்று தெரிவித்தார். http://www.maalaimalar.com/2014/01/08132805/Parliament-meets-for-the-first.html

  11. டெல்லி: டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வேண்டாம் என அறிவுரை கூறியுள்ளார் சமூக ஆர்வலரான அன்னா ஹசாரே. நடந்து முடிந்த டெல்லி சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சியில் அமர்ந்துள்ளது ஆம் ஆத்மி கட்சி. கட்சி ஆரம்பித்த ஓராண்டிற்குள் மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றுள்ள அக்கட்சி தற்போது நாடாளுமன்றத் தேர்தலை மனதில் கொண்டு செயல் பட்டு வருகிறது. ஆம் ஆத்மி வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் அதிக தொகுதிகளில் போட்டியிடும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் யோகேந்ர யாதவ் தெரிவித்துள்ள நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட…

  12. தெலங்கானா விவகாரம் தொடர்பாக 5வது நாளாக இன்றும் ஆந்திர சட்டசபை முடங்கியது. ஆந்திர மாநில சட்டசபை இன்று காலை 9 மணிக்கு தொடங்கியது. தொடங்கிய 3 நிமிடத்திலேயே சீமாந்திரா எம்.எல்.ஏ.க்கள் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டனர். சபாநாயகர் உறுப்பினர்களை இருக்கையில் அமரும் படி கேட்டுகொண்டார். இருப்பினும் தெலங்கானா விவாகரம் குறித்து கூச்சல் கடுமையாக இருந்ததால் அவையை ஒத்திவைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. http://www.dinamani.com/latest_news/2014/01/08/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-5%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE/article19…

  13. புதுதில்லியில் இன்று புலம்பெயர்ந்தவர்கள் 12வது மாநாடு நடந்தது.இன்றைய மாநாட்டை துவக்கிவைத்து பேசிய பிரதமர் மன்மோகன்சிங் இந்தியா கடந்த 10 ஆண்டுகளில் தனது வளர்ச்சியை இழந்துள்ளது என வெளியில் பேசப்படுகிறது இதை பற்றி நாம் கவலைப்பட தேவையில்லை. இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்து வருகிறது எனப்துதான் உண்மை வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக உள்ளனர் என்று பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்தார். மேலும் . வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு நான் உறுதியளிக்கிறேன். தற்போதைய அல்லது எதிர்காலத்தை பற்றி நீங்கள் கவலைப்பட தேவையில்லை இந்தியாவின் எதிர்காலம் குறித்து நம்மபிகையோடு இருங்கள் பொருளாதாரத்தில் நாம் மேலும் வளர்ச்சி அடைவோம் என்று தெரி…

  14. காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல் காந்தி தான் தேர்ந்தெடுக்கப்பட்ட அமேதி தொகுதிக்கு வரும் ஜனவரி 10 ஆம் தேதி செல்கிறார். அங்கு பாரதஸ்டேட் வங்கியின் 9 கிளைகளை திறந்து வைக்கும் அவர், ஒரு எப்எம் ரேடியோ ஸ்டேசனையும் திறந்து வைக்கவுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன http://www.dinamani.com/latest_news/2014/01/08/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%A9.10-%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE/article1989537.ece

  15. தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் ஊழலை ஒழிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளார். லஞ்சம் மற்றும் ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களை காட்டி கொடுக்கும் ஸ்டிங் ஆப்ரேசன் பற்றி தெரிந்து கொள்வதற்காக பொதுமக்களுக்கு இலவச உதவி எண்ணை அறிவித்துள்ளார். 011-27357169 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு ஊழல்வாதிகளை எப்படி காட்டிகொடுப்பது என்பது பற்றிய தகவல்களை அறிந்து கொள்ளலாம். சிறப்பம்சங்கள்: காலை 8 மணி முதல் மாலை 8 மணி வரை இந்த உதவி எண் வேலை செய்யும். அனைவரது மனதில் பதியும் வகையில் நான்கு டிஜிட் உதவி எண் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இந்த உதவி எண்ணை தில்லிவாசிகள் அனைவரும் பயன்படுத்தலாம். உதவி தேவைப்படும் எனில் தில்லி போலீஸ் உதவும். மாநில லஞ்ச ஒழிப்பு துறை இதனை கண்…

  16. டெல்லியில் உள்ள ராகுல் காந்தி வீட்டில் நேற்று காங்கிரஸ் கட்சி கூட்டம் நடந்தது. அதில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா திடீரென கலந்து கொண்டார். இதன்மூலம் இவர் மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபட உள்ளார் என்றும், காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்ற கருத்து நிலவுகிறது. இதுகுறித்து பா.ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளர் சுதான்ஷு திரிவேதி கூறியதாவது:– பிரியங்கா காந்தி மீண்டும் அரசியலுக்கு வந்து இருப்பது காங்கிரஸ் கட்சியின் உள் விவகாரமாகும். பிரியங்காவின் வருகை பாராளுமன்ற தேர்தலில் அக்கட்சிக்கு எந்த முன்னேற்றத்தையும் ஏற்படுத்தாது. அவரது பிரசாரத்தின் மூலம் காங்கிரஸ் கட்சியை காப்பாற்ற முடியாது. பா.ஜனதாவை பொறுத்த வரை எங்களது தலைமை மிக தெ…

  17. மும்பை பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் முறைகேடுகளை கண்டித்து பேசிய பேராசிரியர் நீரஜ் ஹடேகர் கடந்த சனிக்கிழமையன்று சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மும்பை பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜன் வெலுக்கர் தவறான நிர்வாகம் செய்து வருவதாக பேராசிரியர் ஹடேகர் பகிரங்கமாக குற்றம் சாட்டினார். இதையடுத்து, பல்கலைக்கழகத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து வெளிப்படையாக பேசியதற்காக அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஹடேகரை சஸ்பெண்ட் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறன்றனர். பிரபல வரலாற்று ஆய்வாளரான ராமசந்திரா குஹாவும் பேராசிரியருக்கு ஆதரவாக தனது டுவிட்டர் இணையதளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். மாணவர்களின் இந்த போராட்டத்த…

  18. கர்நாடக முன்னாள் முதல்–மந்திரி பி.எஸ். எடியூரப்பா. 2008–ம் ஆண்டு நடந்த கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா ஆட்சியை பிடித்தது. அவர் முதல்வர் ஆனார். தென் இந்தியாவின் முதல் பா.ஜனதா முதல்– மந்திரியான எடியூரப்பா சுரங்க நில பேர ஊழல் வழக்கில் சிக்கினார். இதனால் முதல்–மந்திரி பதவியை இழந்தார். இதைத் தொடர்ந்து அவர் பாரதீய ஜனதாவில் இருந்து விலகி 2012–ம் ஆண்டு கர்நாடகா ஜனதா கட்சியை தொடங்கினார். சட்டமன்ற தேர்தலில் அவருக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. இதன் காரணமாக பாரதீய ஜனதாவில் மீண்டும் இணைய எடியூரப்பா முடிவு செய்தார். தனது ஆதரவாளர்களுடன் அவர் பாரதீய ஜனதாவில் இணைந்தார். அதிகாரப்பூர்வமாக தனது கட்சியை பா.ஜனதாவுடன் நாளை இணைத்துக் கொள்கிறார். இந்த நிலையில் பாராளு மன்ற தேர்தலி…

  19. இந்தியப் பாதுகாப்புத்துறையின் தகவல்களின்படி கடந்த சில மாதங்களாக இரண்டு வாரங்களுக்கு ஒரு முறையேனும் சீனத் துருப்புகள் இந்திய எல்லைக்குள் நுழைவதாகத் தெரியவந்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் 13 ஆம் தேதி இந்திய எல்லையின் சில இடங்களில் சீனப்படையினரின் ஊடுருவல்கள் காணப்பட்டன. அதன்பின் அந்த மாதம் 19, 20 தேதிகளில் சுமரில் உள்ள தெப்சங் சமவெளியிலும், ஜனவரி முதல் வாரத்தில் தக்டிப் பகுதியிலும் சீனத் துருப்புகள் கண்டறியப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. இந்திய எல்லைக்குள் வரும் சீனத் துருப்புகள் தங்களின் ஆதிக்கத்தை அங்கு உறுதிப்படுத்துவதில்லை. அந்தப் பகுதிகளில் நிலவும் கடுங்குளிரினைத் தாங்க முடியாமல் அவர்கள் ஒரு மணி நேரத்தில் திரும்பிச் சென்றுவிடுகின்றார்கள். சமீப காலங்களில் இவர்க…

  20. புதுடெல்லி, – டெல்லி முதல்–மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி குடிநீர் வாரிய தலைவராகவும் இருக்கிறார். அவர் பதவி ஏற்ற அன்றே குடிநீர் வாரிய தலைமை செயல் அதிகாரி தேபஸ்ரீ முகர்ஜி இடமாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில், குடிநீர் வாரிய பணிகளை மேம்படுத்தும் நடவடிக்கையாக, அதன் அதிகாரிகள் 800–க்கும் மேற்பட்டோரை இடமாற்றம் செய்ய அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டார். அதன்பேரில், நேற்று இரவு அவர்களுக்கு இடமாறுதல் உத்தரவு வழங்கப்பட்டது. மேலும், லஞ்சம் வாங்கிய டெல்லி குடிநீர் வாரிய ஊழியர்கள் வினோத் குமார், பட்வாரி சுனில்குமார், அது பிரகாஷ் ஆகியோர் இடைநீக்கம் செய்யப்பட்டனர். அவர்கள் லஞ்சம் வாங்குவதை, தனியார் டெலிவிஷன் சேனல் ரகசியமாக படம் பிடித்து அம்பலப்படுத்தியதை தொடர்ந்து இந்த நடவட…

  21. Posted Date : 10:00 (08/01/2014)Last updated : 10:00 (08/01/2014) ஜனவரி 8: ஸ்டீபன் ஹாகிங் எனும் நம்பிக்கை நாயகன் பிறந்த தினம் ஜனவரி எட்டு. இதே தினத்தில் எழுபத்தி ஒரு வருடங்களுக்கு முன் பிறந்தார் அவர் ;பள்ளியில் சுட்டியாக இருந்த அவர் இளம் வயதிலேயே வீட்டில் கிடந்த சாமான்கள்,கடிகார பாகங்கள் அட்டைகள் எல்லாவற்றையும் இணைத்து ஒரு கணினியை உருவாக்கினார் . அப்பா மருத்துவம் படிக்க சொல்ல இவர் இயற்பியலை ஆக்ஸ்போர்டில் படித்தார் ; வகுப்புகள் அவருக்கு போர் அடித்தன . மூன்று வருட காலத்தில் மொத்தமே ஆயிரம் மணிநேரம் தான் படித்திருப்பார் ; முதல் கிரேடில் தேர்வு பெறாவிட்டால் காஸ்மாலஜி துறையில் மேற்படிப்பை படிக்க இயலாது ;எனினும் தன் திறனை கல்லூரியின் நேர்முகத்தில் காட்டி கேம்ப்ரிட்ஜில்…

  22. Started by துளசி,

    வீடியோவை பார்க்க: http://www.ndtv.com/video/player/news/salman-khan-woos-the-aam-aadmi/304272?hp&video-featured ஹிந்தியில் கதைப்பதை ஹிந்தி தெரிந்த யாராவது மொழிபெயருங்கள்.

  23. புதுடெல்லி: சிதம்பரம் நடராஜர் கோயிலை தமிழக அரசு நிர்வகிக்க தடை விதித்து உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு கூறியுள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் தாலுகா குமுடிமூலை கிராமத்தைச் சேர்ந்தவர் சிவனடியார் ஆறுமுகசாமி (90). கடந்த 2000ம் ஆண்டில் இவர், சிதம்பரம் நடராஜர் கோயிலில் தமிழில் தேவாரம் பாடுவதற்கு சென்ற போது, கோயில் பொது தீட்சிதர்களால் தாக்கப்பட்டார். சிவனடியார் ஆறுமுகசாமிக்கு ஆதரவாக மனித உரிமை பாதுகாப்பு மையம், பாமக, விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் தமிழ் உணர்வாளர்கள் இணைந்து கடலூர் மாவட்டத்தில் பல்வேறு போராட்டங்களை நடத்தினார்கள். தமிழக அரசுக்கு மனுக்கள் அனுப்பி கோரிக்கையை தெரிவித்தனர். இதன்பின், 2008ம் ஆண்டு அப்போதைய திமுக அரசின் உத்தரவையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிவனட…

  24. புதுடெல்லி, மத்தியில் ஆட்சிக்கு வந்தால் வரி விதிப்பு முறையில் மாற்றம் செய்ய பாரதீய ஜனதா தீர்மானித்து உள்ளது. இது தொடர்பாக, ஆய்வுக்குழு சில யோசனைகளை தெரிவித்து அக்கட்சியிடம் அறிக்கை தாக்கல் செய்து இருக்கிறது. வரி சீர்திருத்தம் பாராளுமன்றத்துக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாரதீய ஜனதா வெற்றி பெற்றால் வரிவிதிப்பு முறையில் மாற்றங்கள் செய்யப்படும் என்று அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி சமீபத்தில் அறிவித்தார்.மத்தியில் ஆட்சியை பிடிக்கும் பட்சத்தில் பல்வேறு துறைகளிலும் சீர்திருத்தங்களை செய்ய பாரதீய ஜனதா தீர்மானித்து உள்ளது. இதற்காக முன்னாள் தலைவர் நிதின் கட்காரியின் தலைமையில், ‘விஷன் 2025 கமிட்டி’ என்ற பெயரில் பாரதீய ஜனதா அமைத்துள்ள தொல…

  25. புதுடெல்லி, சேது சமுத்திர திட்டம் தொடர்பான வழக்கில் இருந்து மத்திய அரசு வக்கீல் ராஜீவ் தவான் நேற்று திடீரென்று விலகினார். இதனால் விசாரணை 3 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது. சேதுசமுத்திர திட்டம் சேது சமுத்திர திட்டம் தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு காரணமாக, அந்த திட்டம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டு இருக்கிறது. இந்த திட்டத்திற்காக ராமர் பாலத்தை சேதப்படுத்தக்கூடாது என்றும், மாற்றுப்பாதையில் இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும் வற்புறுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், இத்திட்டத்தை மாற்று வழிப்பாதையில் கொண்டு செல்ல சாத்தியமில்லை என்றும், அதே சமயம் தற்போதைய நிலையில் திட்டத்தை செயல்படுத்தினால் எந்த பலனும் இருக்க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.