Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. 7 தடவைகள் போர்மியுலா 1 காரோட்டப் பந்தயத்தில் சம்பியன் பட்டம் வென்ற முன்னாள் காரோட்டப் பந்தய வீரர் மைக்கேல் ஷுமாக்கர் பனிச்சறுக்கல் விளையாட்டில் ஈடுபட்டிருந்த போது விபத்துக்குள்ளாகியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பிரான்ஸின் அல்ப்ஸ் மலைத்தொடரில் சற்று முன்னர் இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலதிக தகவல்களுக்கு எம்முடன் இணைந்திருங்கள் - See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=3583#sthash.nmraM1Pc.dpuf F1 champion Michael Schumacher 'critical' after ski fall Michael Schumacher, seven-time Formula 1 world champion, is in "critical condition" after a ski ac…

  2. ரஷ்யாவின் தென்பகுதி ரயில் நிலையத்தில் பெண் தற்கொலைத்தாக்குதல் தாக்குதல் பலர் பலி ரஷ்யாவின் தென்னகரமான வோல்கோகிராட்டில் ரயில் நிலையமொன்றில் நடந்துள்ள தற்கொலை குண்டுத் தாக்குதலில் குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அங்கிருந்துவரும் செய்தி;கள் தெரிவிக்கின்றன. பெண் தற்கொலை குண்டுதாரி ஒருவர் நடத்திய இந்தத் தாக்குதலில் 50 பேர்வரையில் காயமடைந்துள்ளதாகவும் ரஷ்யாவின் பயங்கரவாத தடுப்புப் பிரிவு கூறுகின்றது. இந்தத் தாக்குதலுக்கு எந்தத் தரப்பினரும் இன்னும் உரிமை கோரவில்லை. உள்ளூர் நேரப்படி 12.45 மணியளவில் தாக்குதல் நடந்துள்ளது. கடந்த அக்டோபரிலும் பேருந்தொன்றில் பெண் தற்கொலை குண்டுதாரி என்று சந்தேகிக்கப்படுபவரால் நடத்தப்பட்ட தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர். …

  3. 2028 இல் ஜப்பானை பின்தள்ளும் இந்தியா லண்டனை சேர்ந்த நிறுவனம் ஒன்று மேற்கொண்ட கணக்கெடுப்பில் 2028 ஆம் ஆண்டு ஜப்பானை பின்னுக்கு தள்ளி, சீனா மற்றும் அமெரிக்காவிற்கு அடுத்து உலகிலேயே மூன்றாவது பொருளாதார வல்லரசாக இந்தியா உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய பொருளதாரமிக்க நாடுகளின் பட்டியல் குறித்து சிபர் அமைப்பு அட்டவணைப்படுத்தியுள்ளது. அதில் 2028 ஆம் ஆண்டில் சீனா, அமெரிக்காவிற்கு அடுத்தப்படியாக உலகின் 3வது பெரிய பொருளாதார வல்லரசு நாடாக இந்தியா இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இப்பட்டியலில் இந்தியா 11 வது இடத்தில் உள்ளது. வரும் 2018 ஆம் ஆண்டு இந்தியா 9 ஆவது இடத்தை பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதேசமயம் 2018 ஆம் ஆண்டு ரஷ்யா 6 வத…

    • 44 replies
    • 2.5k views
  4. இங்கிலாந்தில் ஏற்பட்ட கடுமையான புயலின் காரணமாக வெள்ளம், நிலச்சரிவு, மின் வெட்டு மற்றும் 109 மைல் வேகத்தில் வீசும் காற்று ஆகியவற்றால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்நாட்டு சுற்றுச்சூழல் துறை, 52 புயல் எச்சரிக்கை செய்தியை வெளியிட்டும் 157 வெள்ள அபாய எச்சரிக்கையை விடுத்தும் மக்களை உஷார்படுத்தியது. ஆனாலும் இப்புயலினால் வடக்கு இங்கிலாந்தில் உள்ள பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. அங்கு பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டதுடன் சாலை மார்க்கங்களும் மூடப்பட்டுள்ளன. குறிப்பாக மத்திய லண்டன் பகுதியில் அனைத்து ரெயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இப்புயல் காரணமாக அந்நாட்டு ஊழியர்களில் பெரும்பாலானோர் தங்கள் விழா கால விடுமுறையை நீட்டித்து தங்கள் வீடு…

  5. டெல்லி: வரவிருக்கும் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், ராகுலுக்கு வழிகாட்டுவேன், பிரதமர் பதவியில் நான் நீடிக்க மாட்டேன் என பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார். நடந்து கொண்டிருக்கும் 15-வது நாடாளுமன்றத்தின் பதவி காலம் வருகிற மே மாதம் 30ந்தேதியுடன் முடிவடைய இருக்கிறது. அதனைத் தொடர்ந்து வருகிற ஜூன் 1-ந்தேதி புதிய அரசு பதவி ஏற்க வேண்டும். விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப் பட இருக்கிறது. தற்போது காங்கிரஸ் கூட்டணி அரசு தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சியில் இருந்து வருகிறது. மன்மோகன்சிங் 2 முறை தொடர்ந்து பிரதமர் பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் அடுத்த ஆண்டு நடை பெறும் நாடாளுமன்றத் தேர்தலில் எந்த கட்சி ஆட்சியைப் பிடிக்கும், யார் பிரதமர் ஆவார்க…

  6. அமெரிக்காவில் நியூஜெர்சி நகரின் வடக்குப்பகுதியில் உள்ள ஒரு உல்லாச விடுதி அருகே கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி நேற்றையதினம் நள்ளிரவில் திரளானோர் கூடியிருந்தனர். அப்போது மர்ம நபர் திடீரென்று துப்பாக்கியால் சுட்டார்.இந்த சம்பவத்தில் 13 வயது சிறுமி, 14 வயது சிறுவன் உள்பட 3 பேர் உயிர் இழந்ததாக நியூயார்க் நகர போலீஸ் இயக்குனர் சாமுவேல் தெரிவித்தார். மேலும் 2 பேர் குண்டு காயத்துடன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இறந்தவர்கள் யார்? சம்பவத்துக்கு காரணம் என்ன? என்பது தெரியவில்லை. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்துகிறார்கள். http://www.seithy.com/breifNews.php?newsID=100042&category=WorldNews&language=tamil

  7. 2013-ம் ஆண்டின் அதிகம் சம்பாதித்த நபராக சூதாட்ட விடுதிகள் (கேசினோ) நடத்திவரும் அமெரிக்க தொழிலதிபர் அடெல்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் லாஸ் வேகாஸ், சீனாவின் மக்காவ் மற்றும் சிங்கப்பூரில் விதவிதமான சூதாட்ட மையங்களை தொடங்கியுள்ளார். இங்குள்ள சூதாட்ட விளையாட்டுகளில் கலந்துகொள்ள உலகம் முழுவதும் உள்ள கோடீஸ்வரர்கள் அந்த விடுதிகளுக்கு படையெடுக்கின்றனர். இதனால், கேசினோ சூதாட்ட விடுதிகளுக்கு இந்த ஆண்டு கொள்ளை லாபம் கிடைத்துள்ளது. இதையடுத்து கேசினோ அதிபர் ஷெல்டன் அடெல்சனின் ஒரு நாளைய வருமானம் 254 கோடி ரூபாய் என்று போர்ப்ஸ் பத்திரிக்கை கூறியுள்ளது. இச்சாதனையின் மூலம் உலகின் முன்னணி கோடீஸ்வரரான வாரன் பப்பெட்டை அடெல்சன் முந்திவிட்டார் என்று கூறப்படுகிறது. இந்த ஆண்ட…

  8. ராஜீவ் காந்தியின் சுவிஸ் வங்கிக் கணக்கு!!!!!! ராஜீவ் காந்தியின் சுவிஸ் வங்கிக் கணக்கு!!!!!! சுவிட்சர்லாந்து மாத இதழ் Schweizer Illustriertein - இதழின் நவம்பர் 1991 மாத பதிப்பின் ஒரு பக்கம். அப்பக்கத்தில் சுவிஸ் வங்கியில் 1991-ம் ஆண்டு வரை அதிக வைப்பு பணம் வைத்திருப்பவர்களை பட்டியல் இட்டு இருக்கிறது. இதில் நம் நாட்டு ராஜீவ் காந்தியும் இடம் பெற்று இருக்கிறார்.ராஜீவ் காந்தியின் படத்தின் கீழ் என்ன எழுது இருக்கிறார்கள் தெரியுமா?? Raajiv Gandhi, Indian , Holds 2.5 Billion Swiss Francs (அதாவது இந்திய மதிப்பில் ரூபாய் 13,200 கோடி (1991ம் ஆண்டு))ஆனால் இன்று வரை காங்கிரஸ் கட்சியினர் இதனைப் பற்றி மூச்சு விடவில்லை.இவரைத் தான் Mr.Clean-க நம் முன் நிறுத்…

  9. டெல்லி முதல்வராக பதவி ஏற்க உள்ள ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், தனக்கு வீடு, கார், பாதுகாப்பு போன்ற எந்த வித அரசு சலுகைகள் தேவையில்லை என்று கூறியுள்ளார். டெல்லி அரசின் தலைமை செயலாளர், கெஜ்ரிவாலை இன்று சந்தித்து பேசினார். அப்போது தனக்கு எந்த வித அரசு சலுகையும் தேவையில்லை என்று கூறியதாக தெரிகிறது. முதல்வருக்கு அளிக்கப்படும் பாதுகாப்பும் கூட தேவையில்லை என்று கூறிய அவர், கடவுள் தான் தனக்கு எப்போதும் பாதுகாப்பு என்று கூறினார். தனது அமைச்சர்களும் அவ்வாறே நடந்து கொள்வார்கள் என்றும் அவர் கூறினார். இந்த தகவலை டெல்லி அரசும், டெல்லி காவல் துறையும் உறுதி செய்துள்ளது. http://www.seithy.com/breifNews.php?newsID=99805&category=IndianNews&language=tamil

  10. உலகின் ஏதோ ஒரு மூலையில், ஏதோ ஒரு கிராமத்தில், ஏதோ ஒரு நகரத்தில், ஏதோ ஒரு மாநிலத்தில், ஏதோ ஒரு நாட்டில், ஏதோ ஒரு கண்டத்தில் உங்களுக்கு தெரியாமல் ஒரு கொடூரம் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் நீங்கள் அதை நிராகரிக்கிறீர்கள், அல்லது மறந்துவிடுகிறீர்கள். ஆனால் அது பற்றி விழிப்புணர்வுடன் இருங்கள் என ஞாபகப்படுத்துகிறது சர்வதேச மன்னிப்பு சபையின் இந்த 10 விளம்பர புகைப்படங்கள். மேற்குலகின் புகழ்பெற்ற மனித உரிமைகளுக்காக போராடும் அமைப்பான சர்வதேச மன்னிப்பு சபையின் விளம்பர பிரிவில் உள்ளவர்கள் மிகுந்த கிரியேட்டிவ் கொண்டவர்கள். அவர்களின் ஒவ்வொரு விளம்பரமும் ஏதோ ஒரு சமூகப் பிரச்சினை ஒன்றை எடுத்துக் கொண்டு முகத்தில் அறைவது போன்று நச்சென ஒரு மெசேஜ் கொடுக்கும். அப்படித்தான் இம்முறையும், இ…

  11. கிறிஸ்மஸ் தினம்- வருடா வருடம் டிசம்பர் 25ம் திகதி கிறிஸ்தவர்களால் மாத்திரம் அல்லாமல் கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களாலும் கூட மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகின்ற ஒரு தினம். (கிறிஸ்மஸ் என்கின்ற பதத்தை தமிழில் நத்தார் தினம் என்று சிலர் மொழி பெயர்ப்பதுண்டு. ஆனால் நத்தார் என்பது போர்த்துக்கீச மொழியில் கிறிஸ்மஸ் தினத்தைக் குறிப்பிடுகின்ற ஒரு சொல். அது தமிழ் அல்ல). நீண்ட விடுமுறை, கிறிஸ்மஸ் மரம் சோடிப்பது. பரிசுகள் பரிமாறிக் கொள்வது. கிறிஸ்மஸ் தாத்தாவிடம் பரிசுகளை வாங்குவது… கிறிஸ்மஸ் என்றவுடன் எங்களுக்கு நினைவில் வருகின்ற உபரியான விடயங்கள் இவை. கடவுள் பூமியில் மனிதனாகப் பிறந்தார். அவரின் பெயர் இயேசுக் கிறிஸ்த்து. அந்த இயேசுக் கிறிஸ்து பூமியில் அவதரித்த தினம்தான் டிசம்பர் 25. அந்தத் தி…

  12. ஏ.கே 47 ரக ரஷ்சியத் தயாரிப்பு தானியங்கித் துப்பாக்கியை கண்டுபிடித்த Mikhail Kalashnikov தனது 94 வயதில் ரஷ்சியாவில் இயற்கை மரணம் அடைந்துள்ளார். இவர் இரண்டாம் உலகப் போரில் ஜேர்மனியினரின் துப்பாக்கிகளுக்குப் போட்டியாக இதனை கண்டுபிடித்து அறிமுகப்படுத்தி இருந்தாலும்.. உலகம் பூராகவும்.. மிக பெருமளவில் பாவிக்கப்படும் அதேவேளை.. பெருமளவு மனிதப்படுகொலைகளுக்கு காரணமாக இருக்கும் ஆயுதமாக இது இன்று மாறி உள்ளது. தமிழில் செய்தி ஆக்கம்: நெடுக்ஸ். பிரதான மூலம்: http://www.bbc.co.uk/news/world-europe-25497013

  13. இந்திய எல்லையில் தொடரும் சீன ராணுவத்தின் அத்துமீறலுக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் பலவீனமான வெளியுறவு கொள்கையே என்று பாரதிய ஜனதா குற்றம்சாட்டியுள்ளது. இந்தியாவின் வெளியுறவு கொள்கைள் பலவீனமாக இருப்பதே சீனா மற்றும் பாகிஸ்தான் ராணுவங்களின் அத்துமீறலுக்கு காரணம் என்று தெரிவித்துள்ள அக்கட்சி, மத்திய அரசு இந்த அத்துமீறலுக்கு ஒருபோதும் கவலைப்பட்டதே இல்லை என்று குற்றம்சாட்டியுள்ளது. லடாக்கிற்கு அருகே ஜெப்சி என்ற இடத்தில் 20க்கும் மேற்பட்ட சீன ராணுவத்தினர் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக முகாம் அமைத்து தங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 10 கூடாரங்களை அங்கு கண்டதாக உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர். சில நாட்களுக்கு முன்னர் இந்திய எல்லை பகுதிகளில் சீன ராணுவம் …

  14. உறை பனி மழை மற்றும் ஐஸ் கட்டிகள் பொழிதல், போன்ற திடீர் காலநிலையால் கனடாவின் மத்திய பிரதேசங்கள் செயலிழப்பு. இப்பாதிப்பு காலநிலை கிறிஸ்ட்மஸ் தினம் மட்டும் தொடரலாமெனவும் கருதப்படுகின்றது. ஒன்ராறியோவின் தென்பாகம், கியுபெக் மற்றும் மரிரைம்ஸ் பிரதேசம் ஆகியவை இந்த பாரிய வானிலை மாற்றத்தினால் பெரிதும் பாதிக்கபட்டு நிலப்பரப்பு உறை பனியால் மூடப்பட்டுள்ளடுள்ளது. கியுபெக்கில் 3 பாரிய விபத்துக்களும் ரொறன்ரோ மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று சனிக்கிழமை பல விபத்தக்கள் இடம்பெற்றுள்ளதாக அறிவிக்க பட்டுள்ளது. பெரும்பாலான விபத்துக்கள் பெருந்தெருக்களில் இடம்பெற்றுள்ளன. ஒன்ராறியோவில் 300,000 பாவனையாளர்கள் மின்சாரம் செயலிழப்பினால் பாதிக்கப்பட்டதாக ஊடகங்களில் அறிவிக்கப்பட்டுள்ளது. …

  15. பிரேசில் தலைநகர் ரியோ டி ஜனரோவில் சுற்றுலாக் கடற்கரைகளில் பெண்கள் மேலாடையிலியின்றி நடமாட அனுமதிக்க வேண்டுமெனக் கோரி ஒரு சில பெண்கள் இணைந்து மேலாடையின்றி நடத்திய கவனயீர்ப்பு போராட்டம் தோல்வியில் முடிந்துள்ளது. பிரேசிலில் பெண்கள் மேலாடையின்றி வெயில் காய்வதை (Sun Bathing) சட்டப்படி தடை செய்துள்ளது அந்நாட்டு அரசு. எனினும் இது பெண்களின் தனிப்பட்ட சுதந்திரத்தை பாதிப்பதாக கூறி இதை எதுர்த்து நூற்றுக்கணக்கான பெண்கள் ரியோ கடற்கரையில் மேலாடையின்றி ஆர்ப்பாட்டம் செய்யப்போவதாக ஒரு அறிவிப்பு வெளியானது. ஆனால் மேலாடையின்றிய பெண்களை வெறுமனே பார்ப்பதற்காக வந்த கூட்டமே அதிகமாம். அதோடு ஊடகவியலாளர்கள் மாத்திரமே போராட்ட இடத்திற்கு வந்துள்ளனர். வேறு எவரும் இதனைக் கவனிக்கவே இல்லையாம். இதனால…

  16. இந்திய தொழில் வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பு (பிக்கி) கூட்டத்தில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது; நாட்டில் இன்று ஊழல், வறுமை மற்றும் பணவீக்கம் ஆகியவை மிகப்பெரிய சவாலாக உள்ளது. ஊழல் நமது மக்களின் மீது ஏற்றுக்கொள்ள முடியாத சுமையாக உள்ளது. மக்களின் ரத்தத்தை உறிஞ்சும் ஊழலை ஒழிக்க அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும். பணவீக்கம் அதிகரித்திருப்பது கவலை அளிக்கிறது. இது ஒவ்வொரு நாளும் மக்களை பாதிக்கிறது. பணவீக்கத்தை கட்டுப்படுத்த முன்னுரிமை அளித்து செயல்பட்டு வருகிறோம். வளர்ச்சி இல்லாமல் வறுமைக்கு எதிராக போராடி அதனை ஒழிக்க முடியாது. ஒழுங்குமுறை அமைப்பு முற்றிலும் சீரமைக்கப்பட வேண்டும். இதற்கு முழுமையான உடன்பாடு தேவை. உங்கள் பணியில் போராட்டம் என்றால் மெதுவாக முடிவெடுப…

  17. அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்தின் துணை தூதர் தேவயானி கொப்ராகோட் கைது செய்யப்பட்டு, மோசமாக நடத்தப்பட்ட விவகாரம் இந்தியா நாடாளமன்றத்தில் விவாதம் நடத்தும் அளவுக்கு சென்றுள்ளது. உத்தம்கோப்ரகடே. மகாராஷ்டிரா மாநில கேடர் ஐ.ஏ.எஸ் அதிகாரி. ஓய்வு பெற்றுவிட்டார். அவரது மகள் தான் தேவயானி. மருத்துவம் படித்தவர். ஐ.எப்.எஸ் தேர்வில் வெற்றி பெற்று 1999ல் வெளியுறவுத்துறையில் பணியில் சேர்ந்துள்ளார். அமெரிக்காவில் பணியாற்றுவதற்க்கு முன் பாகிஸ்தான், ஜெர்மனி, இத்தாலி தூதரகங்களில் அரசியல் பிரிவில் பணியாற்றியுள்ளார். அதன்பின்பே அமெரிக்காவுக்கு வந்துள்ளார். அவர் அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியில் சேர்ந்த ஆண்டு 2012. அங்கும் அரசியல், பொருளாதாரம், பெண்கள் விவகாரத்தை கவனிக்கும் துண…

  18. கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரேனில் அரசுக்கு எதிராக கிளர்ந்தெழுந்துள்ள மக்கள் புரட்சி பெரும் ஊடக கவனம் பெற்றுள்ளது. உக்ரேன் தலைநகர் கியெவ்வில் அரச கட்டிடங்களை முற்றுகையிட்டு சூறையாடி வரும் பொதுமக்கள், அங்குள்ள சுதந்திர சதுக்கத்தையும், நகர மையத்தையும் ஆக்கிரமித்துள்ளனர். கிழக்கு ஐரோப்பிய நாடுகளுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ளும் பொருட்டும் அவற்றுடன் நட்புறவை வளர்க்கும் நோக்குடனும் ஐரோப்பிய ஒன்றியம் ஓர் மாநாட்டை லிதுவேனியாவில் கடந்த வாரம் நடத்தியது. இதன் படி எதிர்வரும் 2014ம் ஆண்டிலிருந்து உக்ரேன் உள்ளிட்ட ஆறு கிழக்கு ஐரோப்பிய நாடுகள், ஐரோப்பிய ஒன்றியத்துடன் அங்கத்துவமற்ற நட்பு நாடுகளாக வர்த்தக தொடர்பை மேற்கொள்ளும் சூழ்நிலை தோன்றவுள்ளது. எனினும் இந்…

  19. ஆப்பிரிக்காவில் உள்ள எயிட்ஸ் நிலைமை பற்றி சமூகவலைத் தளமான டுவிட்டரில் வெளியாகியிருந்த கருத்தொன்று(comment) இணைய தளங்களில் ஆத்திரத்துடன் கூடிய எதிர்ப்பலைகளை உருவாக்கியுள்ளது. அமெரிக்க பொது விளம்பர நிறுவனமொன்றைச் சேர்ந்த அதிகாரியின் டுவிட்டர் கணக்கில் இருந்தே இவ்வாறான சர்ச்சைக்குரிய கருத்து வெளியாகியுள்ளது. தொடர்புடைய விடயங்கள் தொழில்நுட்பம் ஐ-ஏ-சி- என்ற பெரும் விளம்பர ஊடக நிறுவனத்தைச் சேர்ந்த ஜஸ்டின் சாக்கோ என்ற அந்த அதிகாரியின் டுவிட்டர் பக்கத்தில், 'ஆப்பிரிக்காவுக்குச் செல்கிறேன். எனக்கு எயிட்ஸ் தொற்றாது என்று நம்புவோமாக. விளையாட்டாகச் சொல்கிறேன். நான் வெள்ளையினத்தவர்!'(going to Africa. Hope I don't get Aids. Just kidding. I'm white!)என்று கருத்தொன்று வெளியாகி…

  20. அயல்நாட்டு தூதரக அதிகாரிகளை நடத்தும் விஷயத்தில் இந்தியாவை பார்த்து அமெரிக்கா பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என வெளியுறவுத் துறை செயலாளர் சுஜாதா சிங் கூறியிருக்கிறார். இந்திய பெண் துணை தூதர் தேவயானி அவமதிக்கப்பட்ட விவகாரத்தில் இந்திய அமெரிக்க அரசுகளுக்கு இடையேயான கருத்து மோதல் தொடர்ந்து நீடிக்கிறது. இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத் துறை சுஜாதா சிங், தூதரக அதிகாரிகளை நடத்துவது பற்றி இந்தியாவிடமிருந்து அமெரிக்கா பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். இதனிடையே இந்த விவகாரத்தில் மன்னிப்பு கேட்கும் பேச்சுக்கே இடமில்லை என அமெரிக்கா மீண்டும் கூறியுள்ளது. வீட்டிப் பெண் பணியாளருக்கு விசா பெற்றதில் தேவயானி பொய்யான ஆவணங்களை தாக்கல் செய…

  21. சி.பி.ஐ. அதிகாரி தியாகராஜன் என்னைக் கையெழுத்துப் போடச் சொன்னார். நான் (நளினி) வெற்றுக் காகிதத்தில் கையெழுத்துப் போட மறுத்தேன். இப்போது நீ கையெழுத்துப் போடவில்லை என்றால், நிர்வாணம் ஆக்கப்படுவாய். நீ எப்போது கையெழுத்து போட சம்மதிக்கிறாயோ அதுவரை நீ நிர்வாணமாகத்தான் இருப்பாய் என்றார். கற்பனையைவிட நிஜம் சில நேரங்களில் அதிகமான சாகசங்களையும் அதிரடித் திருப்பங்களையும் புரியாத புதிர்களையும் தனக்குள் புதைத்து வைத்திருக்கும். ராஜீவ் காந்தி படுகொலை வழக்கு அப்படிப்பட்ட நிஜம். அந்த துயரச் சம்பவம் நடந்து 22 ஆண்டுகள் கழிந்துவிட்டன. ஆனால், இந்த நிமிடம் வரையில், புதிய விவரங்கள் அந்த வழக்கில் வெளியாகிக்கொண்டே இருக்கிறது. அதில் சமீபத்திய புதுவரவு, குற்றம்சாட்டப்பட்டவர்களிடம் ஒ…

  22. ஹைதராபாத்: உலக புகழ் பெப்சி குளிர்பான நிறுவனம் இந்த வருடம் துவக்கத்தில் இந்தியாவில் சுமார் 33,000 கோடி ரூபாயை முதலீடு செய்ய திட்டமிட்டு இருந்தது. இதன் ஒரு பகுதியாக 1,200 கோடி செலவில் ஆந்திர பிரதேசத்தின் ஸ்ரீ சிட்டியில் புதிதாக குளிர்பான தொழிற்சாலை அமைக்க அடிக்கல் நாட்டினர். அடிக்கல் நாட்டும் விழாவில் கலந்து கொண்ட பெப்சி நிறுவனத்தின் சிஇஒ சிவக்குமார் கூறுகையில், இந்த தொழிற்சாலை நிறுவனத்தின் 33,000 கோடி முதலீட்டில் ஒரு பகுதியே மேலும் இதன் எங்களது உலகலாவிய சந்தையை எதிர்கொள்ள இந்தியா சரியான இடமாக இருக்கும் என நம்புவதாக அவர் தெரிவித்தார். இந்த விழாவில் ஆந்திர பிரதேசத்தின் முதல்வர் என். கிரண் ரெட்டி கலந்து கொண்டு பேசுகையில், இந்த தொழிற்சாலையின் மூலம் சுமார் 8,000 நபர்களு…

  23. இந்தியாவின் மத்திய வன மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சரான ஜெயந்தி நடராஜன் அவர்கள் பதவி விலகியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரும் தமிழகத்தைச் சேர்ந்தவருமான ஜெயந்தி நடராஜனின் பதவிவிலகலை குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரியவருகிறது. அவரது அமைச்சுப் பொறுப்புகள் தற்போது மத்திய பெட்ரோலிய அமைச்சரான வீரப்ப மொய்லிக்கு வழங்கப்பட்டுள்ளது. தேர்தல்கள் நெருங்குவதை அடுத்து, அவர் கட்சிப்பணிகளில் அதிக கவனம் செலுத்தவுள்ளதாகக் கூறப்படுகின்றது. http://www.bbc.co.uk/tamil/india/2013/12/131221_jeyanthiresign.shtml

  24. அகமதாபாத்: பங்கு சந்தை முதலிட்டில், வர்த்தகத்தில் தனிநபர் ஈடுப்பாடு அதிகம் கொண்ட சந்தை நமது இந்திய பங்கு சந்தை தான். உலகெங்கிலும் உள்ள வேறு எந்த ஈக்விட்டி சந்தையைக் காட்டிலும் இந்திய பங்குச் சந்தைகளில் சுமார் ஒன்பது மடங்கு அதிகமாக உள்ளது என்று ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் பேராசிரியராக பணியாற்றி வரும் தருண் ராமதுறை அவர்கள் கடந்த புதன்கிழமையன்று இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப்மேனேஜ்மென்ட் -அகமதாபாத் (ஐஐஎம்-ஏ) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தியா ஃபைனான்ஸ் கான்ஃபரன்ஸில், முக்கிய குறிப்புகளடங்கிய தனது உரையை ஆற்றியபோது குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் ஈக்விட்டி சந்தைக்கான டெபாசிட்டராக விளங்கும் நேஷனல் செக்யூரிட்டீஸ் டெபாசிட்டரி லிமிட்டெட்டிலிருந்து பெறப்பட்ட, 2004-12க்கு இடைப்பட…

  25. சிங்கப்பூரில் நிகழ்ந்த கலவரம் தொடர்பாக 52 இந்தியர்களை வெளியேற்றும் நடவடிக்கையை அந்நாட்டு அரசு தொடங்கியுள்ளது. சிங்கப்பூரில் கடந்த 8-ஆம் தேதி நிகழ்ந்த பேருந்து விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சக்திவேலு என்பவர் உயிரிழந்தார். இதன் எதிரொலியாக லிட்டில் இந்தியா பகுதியில் கலவரம் மூண்டது. அப்போது கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வர முயன்ற போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் 60-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், கலவரத்தில் ஈடுபட்டவர்கள் காவல் துறையின் கட்டளைக்கு பணிய மறுத்ததோடு, அவர்களை பணி செய்யவிடாமல் தடுத்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் விளைவாக இந்தியர்கள் 52 பேரையும், வங்கதேசத்தைச் சேர்ந்த ஒருவரையும் நாடு கடத்தும் செயலில் சிங்கப்பூ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.