Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. டெல்லி: நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்தியுள்ளார் கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங். அத்வானியின் எதிர்ப்பில் எந்த மாற்றமும் இல்லாத நிலையில் நாளையே மோடி பெயரை அறிவிக்க அவர் தீர்மானித்துள்ளாக லேட்டஸ்ட் தகவல் தெரிவிக்கிறது. அத்வானியை இந்த விஷயத்தில் அவரால் சமாதானப்படுத்த முடியாமல் போன நிலையில் தற்போது சுஷ்மா சுவராஜ், முரளி மனோகர் ஜோஷி ஆகியோரைச் சந்தித்துப் பேசியுள்ளார். அனைத்துத் தலைவர்களையும் சந்தித்து ஒருமித்த கருத்தை விரைவாக எட்டும் முயற்சியில் அவர் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் மோடி விவகாரம் டெல்லியில் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. அனைவருடனும் பேசி வருவதாகவும், விரைவில் முடிவு தெரிவிக்கப்படும் என்றும் ராஜ்நாத் சிங் கூறியு…

  2. சென்னை: கடந்த ஒரு மாத காலமாக இந்திய பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையில் இருந்தது, ஆனால் சென்ற வார துவக்கத்தின் முதல் இந்த நிலை மாறி வந்தது குறிப்பிடதக்கது. இதன் காரணம் என்வென்று பார்த்தால், பல விதமான பதில்கள் நமக்கு கிடைத்தது. சிலர், ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னரான ரகுராம் ராஐன் வரவால் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அதிகரித்து அதித அளவில் முதலீடு செய்தனர் எனவும், மறுபக்கம் ஆர்.பி.ஐயின் சில நடவடிக்கையின் முலம் இந்தியாவிற்கு அதிகமான டாலர் முதலீடு கிடைத்தது தான், இந்த பொருளாதார முன்னேற்றத்திற்கு காரணம் என்று கூறுகின்றனர். இதன் விளைவாக, அதள பாதளத்திற்கு சென்ற ரூபாயின் மதிப்பு தற்போது மீண்டு வந்துள்ளது. கடந்த மாதத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு ரூ.68.98 என்ற ந…

  3. சென்னை: வடக்கு தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் பரவலாக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆந்திரக் கடலோரம், வடக்கு தமிழகம் ஆகிய பகுதிகளில் தென் மேற்குப் பருவ மழை தீவிரமடைந்திருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. வரும் 48 மணி நேரத்தில் வடக்கு தமிழகம் புதுச்சேரியில், பரவலாக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளாகவும் வானிலை மையத் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் இன்று காலை லேசாக வெயில்அடித்த நிலையில் மாலையில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது. சென்னை நகரிலும், புறநகர்ப் பகுதிகளிலும் நேற்றும் இரவு முழுவதும் மழை பெய்து நகரையே வெள்ளக்காடாக்கி விட்டது. 2 நாட்களாக சென்னை நகரையும், புறநகர்ப் பகுதிகளையும், பிற வட மாவட்டங்களையும் நல்ல மழை குளிர்வித்து…

  4. மும்பை: செக் மோசடி வழக்கில் பாலிவுட் நடிகை பிரீத்தி ஜிந்தாவுக்கு எதிராக ஜாமீனில் வெளியே வர முடியாத பிடிவாரண்ட்டை மும்பை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. பாலிவுட் நடிகை பிரீத்தி ஜிந்தாவின் படங்களுக்கு வசனம் எழுதிய அப்பாஸ் டயர்வாலாவுக்கு அவர் ரூ.18.9 லட்சத்திற்கான செக்கை வழங்கியுள்ளார். ஆனால் அந்த செக்கை வங்கியில் அளித்த போது அது பணம் இல்லாமல் திரும்பி வந்துவிட்டது. இதையடுத்து பிரீத்தி மீது செக் மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை மும்பை அந்தேரி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு விசாரணை தொடர்பாக பிரீத்தி நேற்று நீதிமன்றத்தில் ஆஜராக அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் அவர் ஆஜராகவில்லை. இதனால் அவருக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்பட்டதுடன் அவ…

  5. பெங்களூர்: வில்லாக்கள், அபார்ட்மென்ட்கள், ரோ வீடுகள் என கிட்டத்தட்ட 1.82லட்சம் வீடுகளை கட்டி வைத்தும், அதில் கிட்டத்தட்ட 60,000 வீடுகளை விற்க முடியாமல் தவித்து வருகிறார்களாம் பெங்களூர் ரியல் எஸ்டேட் அதிபர்கள். இவற்றில் 80 சதவீதம் அபார்ட்மென்ட்கள் ஆகும். பத்து சதவீதம் பிளாட்டுகள் ஆகும். பெங்களூரில் தற்போதைய நிலையில் கிட்டத்தட்ட 700க்கும் மேற்பட்ட குடியிருப்புத் திட்டங்கள் ஜரூராக மேற்கொள்ளப்பட்டு வருகிறதாம். ஆனால் கட்டியவற்றை வாங்கத்தான் ஆளில்லை என்கிறார்கள். 2012ம் ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் மாதத்திற்கு 3774 வீடுகள் வரை பெங்களூரில் விற்று வந்ததாம். ஆனால் தற்போது அதில் சரிவு ஏற்பட்டுள்ளது. தற்போது தேக்கமடைந்துள்ள வீடுகளை முழுமையாக விற்க இன்னும் 16 மாத…

  6. தென் ஆப்ரிக்காவில் நடக்கும் சட்டவிரோத வேட்டை காரணமாக அங்கேயிருக்கும் கழுகுகளின் எண்ணிக்கை வேகமாக குறைந்து வருவதாக வன உயிர் பாதுகாப்பாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இறையைத் தின்ன போட்டியிடும் கழுகு சட்டவிரோத வேட்டையை வன அதிகாரிகள் கண்டுபிடிக்கக் கூடாது என்ற நோக்கில், சிலர் கொல்லப்பட்ட யானைகள், காண்டாமிருகங்கள் போன்றவற்றின் உடல்களின் விஷத்தை செலுத்திவிடுகின்றனர். பொதுவாக இறந்த மிருகங்கள் இருக்கும் இடத்தின் மேல் கழுகள் மற்றும் பருந்துகள் வட்டமிடும். இதைவைத்து, குற்றம் நடந்த இடத்தை வனக்காவலர்கள் எளிதில் கண்டுபிடிப்பார்கள். இப்போது உலகில் 10 ஆயிரத்துக்கும் குறைவான கேப் கழுகுகள்தான் இருக்கின்றன. விஷம் வைக்கப்பட்ட ஒரு யானையின் உடல், 600 கழுகுகளைக் கொல்லக் கூடியது. இது …

  7. வாஷிங்டன்: ரசாயன ஆயுதங்களை சிரியா ஒப்படைத்தால் தாக்குதல் நடத்துவது கைவிடப்படும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஒபாமா கூறுகையில், நாட்டின் தேசிய பாதுகாப்பைக் கருதிதான் சிரியா மீது ராணுவத் தாக்குதல் நடத்தத் தீர்மானித்தோம். ஆனால் ராணுவ நடவடிக்கை இல்லாமலேயே தேசிய பாதுகாப்பு உறுதி செய்யப்படுமானால் அதை முதலில் வரவேற்போம். ராணுவ நடவடிக்கை எடுப்பதற்கான ஏற்பாடுகளில் நாம் இவ்வளவு மும்முரமாக இறங்கியிருக்காவிட்டால், சர்வதேச கட்டுப்பாட்டுக்குள் சிரியாவின் ரசாயன ஆயுதங்களைக் கொண்டுவரும் பேச்சே எழுந்திருக்காது. சிரியா தமது ரசாயன ஆயுதங்களை அமெரிக்காவிடம் ஒப்படைத்துவிட்டால் அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்துவது கைவிடப்படும். மேலும் சிரியா மீதான தாக்குதலுக்கு ஒப்ப…

  8. சிரியா மீது அமெரிக்கா இராணுவத் தாக்குதல் நடத்தினால், அது புதிய ஒரு தீவிரவாத அலையை உருவாக்கி சர்வதேச அளவில் சட்டம் ஒழுங்குப் பிரச்சினையை பெரும் சிக்கலாக்கிவிடும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் எச்சரித்துள்ளார். அமெரிக்க தினசரி ஒன்றில் எழுதியுள்ள கட்டுரையிலேயே இந்தக் கருத்தை அவர் வெளியிட்டுள்ளார். சிரியாவின் ரசாயன ஆயுதங்களை சர்வதேசத்தின் கட்டுப்பாட்டில் ஒப்படைப்பது குறித்த ரஷ்யாவின் பிரேரணைகளை விவாதிக்க, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி, ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கேய் லாஃபராவை ஜெனீவாவில் இன்று சந்தித்து பேசவுள்ள நிலையில், புடினின் கட்டுரை வெளியாகியுள்ளது. நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் எழுதியுள்ள கட்டுரையில், உலகெங்கும் உள்ள லட்சக் கணக்கான மக்கள் அமெரிக்கா…

  9. முன்னேப்போதும் இல்லாத அளவுக்கு அதிக அளவிலானோர் இடம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழ்வதாக ஐ நா அறிக்கை தெரிவிக்கிறது. இந்த ஆண்டின் கணக்கெடுப்பின்படி 23 கோடிபேர் வெளிநாடுகளில் வாழ்கின்றனர். இது உலக மக்கள் தொகையில் முப்பதில் ஒரு பங்காகும். வெளிநாட்டில் வாழ்வோரின் எண்ணிக்கை இந்த நூற்றாண்டின் துவக்கத்தோடு ஒப்பிடுகையில் முப்பது சதவீதத்துக்கும் மேல் உயர்ந்துள்ளது. அமீரகத்தில் உள்ள வெளிநாட்டுத் தொழிலாளர்க இடம்பெயர்ந்து செல்வோரில் பெரும்பாலானோர் தெற்காசியாவைச் சேர்ந்தவர்கள். அதிகம் பேர் இடம்பெயர்ந்து வரும் கண்டமாக ஐரோப்பா இருக்கிறது. ஆசியா இரண்டாவது இடத்தில் இருக்கிறது. அதிகம் பேர் இடம்பெயர்ந்து வரும் நாடாக அமெரிக்கா இருக்கிறது. அந்நாட்டில் இருக்கும் 4 கோடியே 60 லட்சம் பேர் வெளிந…

  10. கர்ப்பம் தரித்தது போன்ற பொய்த் தோற்றத்தை ஏற்படுத்திக் கொண்டு, கோக்கைன் போதைப் பொருள் கடத்த முயன்ற கெனேடியப் பெண் கோலம்பியா விமான நிலையத்தில் கைது செய்ப்பட்டுள்ளார். போதை மருந்து தடுப்பு சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த பெண் அதிகாரி ஒருவர் இவரது வயிற்றைத் தடவி சோதனை நடத்துகையில், கர்ப்பத்தால் வீங்கியதாக கூறப்பட்ட வயிற்றுப் பகுதி மிகவும் கடினமாகவும், ஜில்லென்றும் இருந்ததால் அவர் சந்தேகம் கொண்டார். அந்தப் பெண்ணின் இடுப்பில் கட்டப்பட்டிருந்த செயற்கை வயிற்றுக்குப் பின்னால் இரண்டு கிலோ எடையுள்ள போதைப் பொருட்கள் இருந்தன. இவருக்கு எட்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. http://www.bbc.co.uk/tamil/multimedia/2013/09/130912_fakepregncy.shtml

  11. சிறீலங்காவில் நடைபெறவுள்ள பொதுநலவாய தலைவர்களின் மாநாட்டில் கலந்துகொள்ளப்போவதாக அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமர் டொனி அபொட் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இன்று இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது புதிய பிரதமரை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வாழ்த்தியுள்ளார். கடைசி பொதுநலவாய தலைவர்களின் மாநாடு கடந்த 2011 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவின் பேர்த்தில் நடைபெற்றது. இந்நிலையில் இது தொடர்பில் இலங்கைக்கு உதவிசெய்யும் பொருட்டு கடைசி மாநாட்டின் ஏற்பாட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் ஜூன் மாதம் இங்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.sankathi24.com/news/33079/64//d,fullart.aspx

  12. டொரண்டோ: பிரபல காமிக்ஸ் கதாபாத்திரமான சூப்பர் மேனின் 75வது ஆண்டு நிறைவு விழாவை ஒட்டி, அவரது உருவம் பொறித்த 7 தங்க, வெள்ளி நாணயங்களை வெளியிட்டுள்ளது கனடா. உண்மை, நீதி மற்றும் நியாயத்திர்குப் போராடும் காமிக்ஸ் கதாபாத்திரம் சூப்பர்மேன். இந்த காமிக்ஸ் ஹீரோ தோன்றி கிட்டத்தட்ட 75 வருடங்கள் நிறைவு பெற்று விட்டதாம். அதனைக் கொண்டாடும் வகையில், கனடா நாட்டின் டொரண்டோ துண்டாஸ் சதுக்கத்தில் ஒரு விழா ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. நேற்று நடைபெற்ற அந்தவிழாவில், 7 புதிய நாணயங்களை வெளியிட்டது ராயல் கனடா மின்ட். இந்த நாணயங்கள் தங்கம் மற்றும் வெள்ளியால் ஆனவை. உண்மைக்காக, நீதிக்காகப் போராடும் சூப்பர்மேன் கதாபாத்திரம், கனடா நாட்டின் ஜோ ஷஸ்டர் மற்றும் அவரது அமெரிக்க நண்பரான ஜெர்ரி சீகல் ஆகியோ…

  13. கேதார்நாத்: புனரமைப்புப் பணிகள் முடிவடைந்ததை அடுத்து 86 நாட்களுக்குப் பின்னர் கேதார்நாத் கோவிலில் இன்று முதல் பூஜைகள் தொடங்கியுள்ளன. உத்தரகாண்ட் மாநிலம் கேதர்நாத் மலை மாவட்டங்களில் கடந்த ஜூன் மாதம் ஏற்பட்ட இமாலய சுனாமியால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து பெரிய அளவில் சேதம் ஏற்பட்டது. ஏராளமான பக்தர்கள் பலியானார்கள். பிரசித்தி பெற்ற கேதர்நாத் கோவிலை சுற்றி அமைந்திருந்த ஹோட்டல்கள், கடைகள் வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டன. ஆனால் கோவிலுக்குஎந்த வித சேதமும் ஏற்படவில்லை. எனினும் சடலங்கள் குவிந்திருந்த காரணத்தினாலும், கோவிலுக்கு செல்லும் பாதை முற்றிலும் துண்டிக்கப்பட்டதாலும் பூஜைகள் நிறுத்தப்பட்டன. இந்த நிலையில் கேதார்நாத் கோவிலில் மீண்டும் பூஜை நடத்துவதற்காக கடந்த 3-ந் தேத…

  14. டெல்லி: டெல்லி சட்டசபைத் தேர்தலில் பாஜக தனிப் பெரும் கட்சியாக உருவெடுக்கும் என்று ஏபிபி நியூஸ் நீல்சன் மூட் ஆப் தி நேஷன் சர்வே தெரிவித்துள்ளது. பாஜகவுக்கு மொத்தம் உள்ள 70 இடங்களில் 32 இடங்கள் கிடைக்கும் என்றும், ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு 27 இடங்கள் கிடைக்கலாம் என்றும் இது கணித்துள்ளது. ஆகஸ்ட்14 முதல் 20 வரை இந்த சர்வே எடுக்கப்பட்டது. மொத்தம் 7084 பேரிடம் கருத்து கேட்டு பெற்றனர். 1998 முதல் டெல்லியை காங்கிரஸ் ஆண்டு வரும் நிலையில் கருத்துக்கணிப்பு மூலம் பல்வேறு சுவாரஸ்யமான தகவல்கள் தெரியவந்துள்ளன.டெல்லி சட்டசபைக்கு இந்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ளது. அரவிந்த் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி, பாஜக மற்றும் காங்கிரஸ் இரண்டையும் பாதிக்கும் என்றும் கணிப்பு கூறுகிறது. இந்தக் கட்சிக்கு…

  15. டெல்லி: குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி தொடர்ந்தும் மறுத்து பிடிவாதம் காட்டி வருகிறார். இதனால் நரேந்திர மோடி பிரதமராக அறிவிப்பது ஓரிரு நாட்கள் தள்ளிப் போகும் என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக்கியே தீருவது என்பதில் பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்.இயக்கம் கங்கணம் கட்டிக் கொண்டு இருக்கிறது. பந்தை தமது எல்லைக் கோட்டிலிருந்து பாஜக தலைவர் ராஜ்நாத்சிங் பக்கம் தட்டிவிட்டிருக்கிறது அந்த இயக்கம். இதனால் விரைவில் முடிவெடுத்து அறிவிக்க வேண்டிய நெருக்கடியில் ராஜ்நாத் சிங் இருக்கிறார். இந்த நெருக்கடிக்குத் தீர்வு காணும் வகையில் மோடியை எதிர்க்கும் அத்வானியை இன்று பகலில் சந்தித்து ஆ…

  16. நியூயார்க்: அமெரிக்க வர்த்தக மைய கட்டிட தாக்குதலின் 12ம் ஆண்டு நினைவு நாளான இன்று, அமெரிக்க, இஸ்ரேல் இணையதளங்களை முடக்கப் போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர் ஹேக்கர்ஸ்எனப்படும் இணையதள ஊடுறுவல்காரர்கள். கடந்த 2001ம் ஆண்டு, அமெரிக்காவின் நியூயார்க்கில் அல்குவைதா இயக்கத் தீவிரவாதிகள் உலக வர்த்தக மைய கட்டிடங்கள் மீது விமானங்களை மோத விட்டு தாக்குதல் நடத்தினர். இதில் சுமார் 3 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். அந்த கொடூரத் தாக்குதலின் 12ம் ஆண்டு நினைவு நாளான இன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாட்டு இணையத் தளங்களை செயலிழக்க வைக்கப் போவதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இது போன்ற மிரட்டல்கள் விடுக்கப்பட்ட போதும், இந்த சமீபத்திய மிரட்டல் கடந்த 2ம் தேதி யூ ட்யூப் வீடியோ வாயிலாக விடுக்கப்ப…

  17. நியூயார்க்: அமெரிக்கர்கள் மட்டுமல்ல.. உலகமே நினைத்துப் பார்க்க முடியாத பெருந்தாக்குதல் செப்டம்பர் 11.. 3 ஆயிரம் பேரை பலி கொண்ட அமெரிக்கா மீதான வான் தாக்குதலின் 12வது ஆண்டு நினைவு நாள்.. 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11-ந் தேதி அமெரிக்காவின் இரட்டை கோபுரத்தை விமானம் மூலம் தகர்த்தனர் ஒசாமா பின்லேடனின் அல் குவைதா இயக்க தீவிரவாதிகள்.. ஈராக் மீதான அமெரிக்காவின் மறைமுக ஆக்கிரமிப்புக்கான எதிர்வினை என்று பிரகடனம் செய்து கொண்டது அல்குவைதா. ஆனால் உலகம் இதுவரை கண்டிராத ஒரு கொடூர முறையில் தாக்குதலை நடத்தியிருந்தனர் அல்குவைதாவினர். விமானங்களை அல்குவைதா தீவிரவாதிகள் கடத்தி உலக வர்த்தக மையக் கட்டடங்கள் மீது மோதச் செய்தனர். அடுத்தடுத்து விமானங்கள் கட்டடங்கள் மீது மோதியதில் கட்டடம் இடிந்து தர…

  18. பெங்களூர்: பிரிட்டானியா நிறுவனம், உலகளவில் தனது புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தவும், விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. நிதி பற்றாக்குறையினால் இந்நிறுவனம் பெங்களூர் பிரிட்டானியா கார்டன் எஸ்டேடில் உள்ள தனது சொத்துக்களை, 700 கோடிக்கு விற்ற திட்டமிட்டுள்ளது. இதனால் பிரிட்டானியா நிறுவனம் தனது தலைமையகத்தை 90,000 சதுர அடியில் பெங்களூர், ஒயிட்ஃபீல்ட் பகுதியில் உள்ள கார்டன் சிட்டி வளாகத்திற்கு மாற்ற உள்ளது. மேலும் இந்தியாவில் பொருளாதார நிலை மிகவும் மோசமாக உள்ளதால், இத்தகைய பெரும் மதிப்புடைய சொத்தை ஒப்பந்தம் செய்ய பொருத்தமான நபரை கண்டறிய முடியவில்லை என நிறுவன அறிக்கை தெரிவிக்கிறது. மேலும் இந்நிறுவனத்தின் லாப விகிதம் பெருமளவில் குறைந்துள்ளது, கடந்த 2005ஆம் ஆண்டு இதன் லாப விகிசம் 12.3…

  19. மாணவர்கள் நீந்தும் நீச்சல் குளத்தில் முஸ்லீம் மாணவிகளும் நீச்சல் பயிற்சி பெறுவதிலிருந்து விலக்கு அளிக்கப்படலாமா என்பது குறித்து ஜெர்மன் நீதிமன்றம் ஒன்று இன்று தீர்ப்பளிக்க இருக்கிறது. ஜெர்மன் நகரான பிராங்க்பர்ட்டில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் படிக்கும் 13 வயது மாணவியின் பெற்றோர்கள், தங்களது மகள் அந்தப்பள்ளியில் நீச்சல் பயிற்சி பெறக்கூடாது என்று கூறியதை அடுத்து இந்த வழக்கு வந்திருக்கிறது. ஜெர்மன் பள்ளியொன்றில் முஸ்லிம் மாணவிகள் ( ஆவணப்படம்) சில முஸ்லீம் மாணவிகள், புர்கினி ( புர்கா + பிக்கினி) என்றழைக்கப்படும் உடல் முழுவதையும் மறைக்கும் நீச்சலுடையை அணிந்து கொண்டு , சக மாணவர்களுடன் நீச்சல் பயிற்சி பெறுகிறார்கள். ஆனால் , நீச்சல் அரைக்காலுடை மட்டும் அணிந்திருக்கும் மாணவ…

  20. சிரியாவின் நிலைமைகள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள புதிய அறிக்கை அங்கு இரு தரப்புமே போர்க் குற்றங்களிலும், மனித குலத்துக்கு எதிரான குற்றங்களிலும் ஈடுபடுவதாக குற்றஞ்சாட்டியுள்ளது. அரசாங்க படைகள் கடந்த மே மாதம் முதல் ஜூலை மாதம் வரையிலான காலப்பகுதியில், பெருமளவில் பொதுமக்களை கொலை செய்து, மருத்துவமனைகள் மீது ஷெல் தாக்குதல் நடத்தி, கொத்தணிக் குண்டுகளையும் பயன்படுத்தியதாக ஆணைக்குழு கண்டுபிடித்துள்ளது. பொதுமக்களை ஒட்டுமொத்தமாகக் கொலை செய்யும் நடவடிக்கைகளில் கிளர்ச்சிக்காரர்கள் ஈடுபடுவதாகவும் அந்த அறிக்கை கூறியுள்ளது. இந்தக் குற்றங்களைச் செய்பவர்கள் அதற்கான பொறுப்புக் கூற நேரிடலாம் என்ற அச்சமின்றி இருப்பதாகவும், அவர்கள் நீதி முன்பாக நிறுத்தப்ப…

  21. நோர்வே பொதுத் தேர்­தலில் பழை­மை­வாத கட்­சியைச் சேர்ந்த எர்னா சோல்பேர்க் வெற்­றி­பெற்­றுள்ளார். அந்­நாட்டின் தொழிற்கட்­சியைச் சேர்ந்த பிர­தமர் ஜீன்ஸ் ஸ்ரொல்­ரென்பேர்க் தோல்­வியை ஒப்புக்கொண்­ட­தை­ய­டுத்து ஆட்­சியை அமைக்க எர்னா சோல்பேர்க் தயா­ரா­கி­வ­ரு­கிறார். மேற்­படி தேர்­தலில் பெரும்­பான்மை வாக்­குகள் எண்­ணப்­பட்ட நிலையில், 4 வல­து­சாரி கட்­சி­களை உள்­ள­டக்­கிய எர்னா சோல்­பேர்க்கின் கூட்­ட­மைப்­பா­னது பாரா­ளு­மன்­றத்தின் 169 ஆச­னங்­களில் 96 ஆச­னங்­களை வென்­றெ­டுத்­துள்­ளது. தேர்தல் வெற்­றி­யை­ய­டுத்து எர்னா உரை­யாற்­று­கையில், இது வல­து­சாரி கட்­சி­க­ளுக்­கான வர­லாற்று முக்­கி­யத்­து­வ­மிக்க வெற்றி எனக் கூறினார். 2011 ஆம் ஆண்டில் 77 பேர் பலி­யா­வ­தற்க…

  22. டெல்லி: பிரதமர் பதவிக்கு ராகுல் காந்தி நல்ல சாய்ஸ்தான். அவரது தலைமையின் கீழ் பணியாற்ற நான் தயாராகவே இருக்கிறேன் என்று கூறியுள்ளார் பிரதமர் மன்மோகன் சிங். கிட்டத்தட்ட டெல்லியின் ஓ.பன்னீர்செல்வமாக மாறி வருகிறார் பிரதமர் மன்மோகன் சிங். இடைக்காலமாக முதல்வர் பதவியில் ஓ.பன்னீர் செல்வம் இருந்தார். பின்னர் ஜெயலலிதா முதல்வர் பதவிக்கு வந்ததும், அவரது தலைமையின் கீழ் செயல்பட்டு வருகிறார். கிட்டத்தட்ட அதே ஸ்டைலில் செயல்பட தானும் தயாராகவே இருப்பதாக பிரமதர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கொடுத்துள்ள பேட்டி.... 2014 பொதுத் தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியில் எந்தப் பொறுப்பிலும் இருக்க நான் தயார். ராகுல் காந்தி தலைமையின் கீழ் செயல்பட வேண்டும் என்றாலும் அதற்கும் ந…

  23. சோனியாவுக்கு யு.எஸ். மருத்துவமனையிலேயே சம்மன் வழங்க கோர்ட் உத்தரவு! நியூயார்க்: சீக்கியர் கலவர வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அவர் சிகிச்சை பெற்று வரும் நியூயார்க் நகர மருத்துவமனையிலேயே சம்மன் வழங்க அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கடந்த 1984-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31-ந் தேதி அவரது பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து நாடு முழுவதும் நடந்த கலவரத்தில் ஏராளமான சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக அமெரிக்க வாழ் வெளிநாட்டினர் சித்ரவதை இழப்பீடு சட்டத்தின் கீழ் சீக்கிய மனித உரிமை அமைப்பினர் அமெரிக்காவில் வழக்கு தொடர்ந்தனர். அவர்கள் தொடர்ந்த வழக்கில், சீக்கியர்களுக்கு எதிரான இத் தாக்குதலை ம…

  24. அந்தமான் நிக்கோபார் தீவுக்கு அருகே சிறிய படகில் ஆயுதங்கள் மற்றும் ஏராளமான வெடிபொருட்களுடன் வந்து கொண்டிருந்த 5 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்தமான் நிக்கோபார் தீவுப் பகுதியில் இந்திய கடற்படையினரின் பாதுகாப்புப் பணியின் போது அங்கு சந்தேகத்துக்கு இடமான வகையில் வந்த படகு ஒன்றை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் ஆயுதங்களும், வெடிபொருட்களும் இருந்ததை அடுத்து, படகில் வந்த தாய்லாந்தைச் சேர்ந்த 4 பேரையும், மியான்மரைச் சேர்ந்த ஒருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் எந்த ஆவணங்களும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. http://www.seithy.com/breifNews.php?newsID=92525&category=IndianNews&language=tamil

  25. டெல்லி: லோக்சபா தேர்தலில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியையே பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவது என பாரதிய ஜனதா கட்சியும் அதன் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கமும் முட்டுக்கட்டைகளையும் மீறி ஒருமனதாக முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது. பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநில முதல்வர்களில் ஒருவரான இருந்தவர் நரேந்திர மோடி. ஆனால் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களாக வலம் வந்தவர்கள் எல்.கே.அத்வானி, சுஷ்மா ஸ்வராஜ் போன்றோர். கடந்த சில ஆண்டுகளாக நரேந்திர மோடியின் விஸ்வரூபமானது அவரை பாரதிய ஜனதா கட்சியின் தலைமை நிர்வாகிகளில் ஒருவர் என்ற நிலைக்கு உயர்த்தியது. ராஜ்நாத்சிங், பாஜகவின் தலைவரான பின்னர் மோடி கட்சியின் நாடாளுமன்ற குழுவில் இடம்பெற்றார். பின்னர் கடுமையான எதிர்ப்புகளுக்கு இடையே லோக்சபா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.