Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. டமாஸ்கஸ்: சிரியா அருகே மத்திய தரைக் கடல் பகுதியில் இன்று 2 பேலிஸ்டிக் வகை ஏவுகணைகள் வந்து விழுந்தன. அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து நடத்திய ஏவுகணை பயிற்சியின்போது இவை ஏவப்பட்டுள்ளன. ஆனால், இது குறித்து இந்த இரு நாடுகளும் எந்த தகவலையும் வெளியிடாமல் ரகசியம் காத்தன. ஆனால், இந்த ஏவுகணைகள் வீசப்பட்டதை ரஷ்யா கண்டுபிடித்து வெளியுலகுக்கு சொன்னதையடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து இந்த ஏவுகணை பயிற்சி நடத்தியதை இஸ்ரேல் ஒப்புக் கொண்டுவிட்டது. சிரியாவில் நடந்து வரும் உள்நாட்டுப் போரையடுத்து அங்கு பொது மக்கள் மீது ராணுவம் ரசாயண ஆயுதங்களை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து சிரியா மீது ராணுவத் தாக்குதல் நடத்த அமெரிக்கா தயாராகி வருகிறது. ஆனால், சிரியாவுக்கு …

    • 5 replies
    • 706 views
  2. டமாஸ்கஸ்: சிரியா மீது இன்று 2 பேலிஸ்டிக் வகை ஏவுகணைகள் வீசப்பட்டதாகவும், ஆனால் அவை இரண்டுமே மத்திய தரைக் கடல் பகுதியில் விழுந்துவிட்டதாகவும், சிரியாவைத் தாக்கவில்லை என்றும் ரஷ்யா தெரிவித்துள்ளது. சிரியாவில் நடந்து வரும் உள்நாட்டுப் போரையடுத்து அங்கு பொது மக்கள் மீது ராணுவம் ரசாயண ஆயுதங்களை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து சிரியா மீது ராணுவத் தாக்குதல் நடத்த அமெரிக்கா தயாராகி வருகிறது. ஆனால், சிரியாவுக்கு ரஷ்யா முழு ஆதரவு தந்து வருகிறது. சிரிய அதிபர் அதிபர் பஷர் அல் அசாத்துக்கு ஆதரவாக நிற்கிறது ரஷ்யா. இதனால், ஐ.நா. சபையில் சிரியா மீது தாக்குதல் நடத்த வேண்டும் என்று அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தால் அதை ரஷ்யா தனது வீடோ அதிகாரம் மூலம் முறியடிக்கும் ந…

  3. அமெரிக்க பார்லிமென்ட் தேர்தலில், ஐயோவா மாவட்டத்திலிருந்து, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க பெண், சுவாதி தாண்டேகர் போட்டியிட உள்ளார். மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் பிறந்தவர் சுவாதி. நாக்பூர் பல்கலைக்கழகத்தில், பட்டம் பெற்றவர்; 1973ம் ஆண்டு, அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்தார். ஐயோவா மாவட்டத்தின் மேரியான் பகுதியில் வசித்து வந்த அவர், பல பொறுப்புகளை வகித்து வருகிறார். இப்போதும் அம்மாவட்ட பொது பயன்பாட்டு வாரியத்தின் உறுப்பினராக உள்ளார். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள, அமெரிக்க பார்லிமென்ட் தேர்தலில், ஐயோவா மாவட்டத்திலிருந்து இவர் போட்டியிட உள்ளார். இதற்கான அனுமதியை, அவர் சார்ந்துள்ள ஜனநாயக கட்சி வழங்கியுள்ளது. இதன் மூலம், அந்த பொறுப்புக்கு, ஐயோவா மாவட்டத்திலிருந்த…

  4. முத்தம் கொடுத்தால், பரீட்சையில் பாஸ்.... சீன வாத்தியாரின் அத்துமீறல். பெய்ஜிங்: சீனாவில் இயங்கி வரும் பள்ளி ஒன்றில் பணியாற்றும் ஆசிரியர், தனது மாணவிகளிடம் இருந்து முத்தம் பெறுவது போன்ற புகைப்படங்கள் வெளியானதால் பிரச்சினையில் சிக்கியுள்ளார். வடக்கு சீனாவில் இயங்கி வரும் பள்ளி ஒன்றில் பயிலும் மாணவிகள் தங்கள் பரீட்சையில் தேர்வாவதற்கு படித்தால் மட்டும்போதாதாம். நன்கு முத்தமிடவும் தெரிந்திருக்கவேண்டுமாம். இது அரசாங்க உத்தரவல்ல, கல்விக்கண் திறக்க வேண்டிய ஆசிரியர் ஒருவரின் ‘காமக் கட்டளை'. பள்ளி ஆசிரியர் வகுப்பறையில் வைத்தே மாணவிகளை ஒருவர் பின் ஒருவராக நின்று தன்னை முத்தமிட வைத்திருக்கிறார். அதற்கு ஒத்துக் கொள்ளாத மாணவிகள், ஆசிரியர் தங்களை முத்தமிட சம்மதிக்க வேண்டும்.…

  5. வாஷிங்டன்: சிரியா மீது ராணுவ நடவடிக்கை எடுப்பதற்கு அமெரிக்கா மும்முரம் காட்டி வருகிறது. ஆனால் அமெரிக்காவின் நட்பு நாடுகள் இந்த நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு தராமல் நழுவி வருவதால் அமெரிக்க அதிபர் ஒபாமா அதிர்ச்சி அடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. சிரியாவில் புரட்சி நடத்துவோரை அதிபர் ஆசாத்தின் ராணுவம் கடுமையாக ஒடுக்கி வருகிறது. கடந்த 21-ந் தேதி தலைநகர் டமாஸ்கஸ் அருகே ரசாயன குண்டுகளை வீசி குழந்தைகள் உள்பட 1,429 பேர் கொல்லப்பட்டதாக அமெரிக்கா குற்றம்சாட்டியது. இதைத் தொடர்ந்து அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் சிரியா மீது ராணுவ நடவடிக்கை மேற்கொள்ள தீர்மானித்தன. இதற்காக மத்திய தரைக்கடல் பகுதியில் போர் கப்பல்கள் குவிக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு பிரான்சு, ஜெர்ம…

    • 8 replies
    • 1.1k views
  6. கியூபாவிலிருந்து புளோரிடாவை நீந்திக கடந்த 64 வயது பெண். 103 மைல்களை 52 மணி நேரத்தில் நீந்தி கடந்திருக்கிறார். (CNN) -- [breaking news alert at 2:04 p.m. Monday] Endurance swimmer Diana Nyad reached the shores of Key West on Monday afternoon, becoming the first person to swim Cuba to Florida without a shark cage. This was the 64-year-old's fifth attempt since 1978. [Previous story published at 1:51 p.m. Monday] Diana Nyad's Cuba-to-Florida swim nearly complete (CNN) -- After more than 52 hours of swimming, the Key West shore -- and a decades-old goal -- is in sight for Diana Nyad. Nyad, 64, on her fifth attempt to swim the 103 miles from Cuba to Florida withou…

  7. மஸ்கட்: ஓமன் நாட்டில் இந்தியர்களிடம் ரூ. 66 கோடி வரை மோசடி செய்த பெண் அந் நாட்டைவிட்டுத் தப்பிவிட்டார். அவர் இப்போது கர்நாடக மாநிலம் மங்களூரில் வசிப்பதாகத் தெரிகிறது. ஓமன் நாட்டில் பல்வேறு கட்டமைப்புத் திட்டங்களை நிறைவேற்றும் டெண்டர் தனக்குக் கிடைத்திருப்பதாகவும், இதற்காக நிதி திரட்டி வருவதாகவும், இந்த நிதிக்கு அதிக வட்டி தருவதாகவும் கூறி இந்தியர்களை அந்தப் பெண் ஏமாற்றியுள்ளார். போர்ஜரி செய்யப்பட்ட ஓமன் நாட்டு அரசின் ஆவணங்களைக் காட்டி இந்தியர்களை நம்ப வைத்துள்ளார். ஓமன் நாட்டின் பல்வேறு சர்ச்சுகள், பள்ளிகளுக்கு வந்து இந்தியர்களை சந்தித்து தனது திட்டம் குறித்துப் பேசியுள்ளார். இவரை நம்பிய பலரும் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு பணம் தந்துள்ளனர். அதற்கு ரசீதுகளையும் தந்துள்ளார்…

  8. டெல்லி: சீனாவுக்கு செல்ல இருந்த இந்திய விமானப் படைத் தளபதி ஏர் சீப் மார்ஷல் என்.ஏ.கே. பிரவுனியின் பயணத்தை மத்திய அரசு திடீரென ரத்து செய்துவிட்டது. எல்லைப் பகுதியில் சீன ராணுவத்தின் ஊடுருவல்கள் அதிகரித்து வரும் நிலையில், அந்த நாட்டுக்கு நமது விமானப் படைத் தலைவர் நல்லெண்ணப் பயணம் மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை என்று இந்தியா கருதுவதாகத் தெரிகிறது. முன்னதாக பிரவுனியை தனது நாட்டுக்கு வருமாறு சீன அரசு அழைப்பு விடுத்திருந்தது. ஆனால், பிரவுனி அங்கு செல்வதற்கு முன் சீனாவில் இருந்து முப்படைத் தலைவர்களில் ஒருவர் இந்தியாவுக்கு வரட்டும் என்று மத்திய அரசு கருதுவதாகத் தெரிகிறது. அதே போல இந்திய ராணுவத் தளபதி பிக்ரம் சிங் வரும் நவம்பரில் சீனா செல்ல உள்ளார். சீனா-இந்தியா கூட்டு ராணுவப் பயிற…

  9. இந்தியாவில் சராசரியாக ஒரு மணி நேரத்துக்கு ஒரு பெண் வரதட்சணைக் கொடுமை காரணமாக உயிரிழப்பதாக உத்தியோகப்பூர்வ புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. இந்தியா எங்கிலும் பார்க்க 2012ஆம் ஆண்டில் வரதட்சணைக் கொடுமை சம்பந்தமான உயிரிழப்புகளாக 8233 சம்பவங்கள் பதியப்பட்டுள்ளதாக தேசிய குற்றச் சம்பவ பதிவு அலுவகம் வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன. சட்டம் தடுத்தாலும் பெண்களிடம் இருந்து வரதட்சணை வாங்கும் நிலை நீடித்துவரவே செய்கிறது. வரதட்சணைக் கொடுமையால் பெண்கள் இறந்ததாக குற்றம்சாட்டப்படும் சம்பவங்களில் சராசரியாக 35 சதவீத வழக்குகளில் மட்டுமே குற்றம் நிரூபிக்கப்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.2007 ஆண்டு முதல் இந்த எண்ணிக்கை எட்டாயிரத்துக்கு…

  10. சிரியா மீதான இராணுவ நடவடிக்கைக்கு அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரஸை இணங்க வைக்கும் முயற்சிகளில் அதிபர் ஒபாமா நிர்வாகம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. காங்கிரஸில் அடுத்தவாரம் இதற்கான வாக்கெடுப்பு நடக்கவுள்ளது. ஒபாமாவின் சிரியா மீதான இராணுவ நடவடிக்கையை நியாயப்படுத்தும் அமெரிக்க புலனாய்வு விளக்கக் கூட்டத்தில் காங்கிரஸ் உறுப்பினர்கள் கலந்துகொள்ளவுள்ளனர் சிரியாவில் சுமார் 1400க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்படக் காரணமான ஸரின் நச்சுவாயுத் தாக்குதலை அரசாங்கம் நடத்தியுள்ளதாக ஒபாமா நிர்வாகம் முன்வைக்கும் குற்றச்சாட்டை நிறுவுவதற்காக இந்தப் புலனய்வு விளக்கக் கூட்டம் நடக்கவுள்ளது.கோடைகால விடுமுறையை முடித்துக்கொண்டு திரும்பியுள்ள பெரும்பாலான காங்கிரஸ் உறுப்பினர்கள், புலனாய்வு விளக…

  11. பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃப் மீது கொலைக் குற்றச்சாட்டுகள் பதியப்பட்டுள்ளன. கடந்த 2007 ஆம் ஆண்டு ஒரு பள்ளிவாசலை முற்றுகையிட்ட சம்பவம் இடம்பெற்ற போது, தீவிரவாதக் கொள்கைகளைக் கொண்டிருந்த மதகுரு ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே காவல்துறையினர் அவர் மீது கொலைக் குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளனர். முஷாரஃப் கைது செய்யப்படும் போது ( பழைய படம்) தலைநகர் இஸ்லாமாபாதிலுள்ள செம்மசூதிக்குள் பாகிஸ்தானியத் துருப்புகள் அதிரடியாக நுழைந்தபோது நூற்றுக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர். அதில் தீவிரவதாக் கொள்கைகளைக் கொண்டிருந்த இந்த மதகுருவான அப்துல் ரஷீத் காசியும் அடங்குவார். புட்டோ கொலையிலும் தொடர்பு? சுட்டுக் கொல்லப்பட்ட பேனசீர் புட்டோ பாகிஸ்தானை 1999 மு…

  12. அவுஸ்திரேலிய பெண்ணொருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய சிறீலங்காவினைசேர்ந்த ஒருவரை அந்நாட்டு காவல்துறையினர் பிளேக் டவுன் ரயில் நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளனர். அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பெண்ணொருவரை குறித்த சந்தேக நபர் கடந்த ஆகஸ்ட் மாதம் இரு முறை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார். இந்நிலையில் தேப்பட்டு வந்தநிலையில் குறித்த நபர் பிளேக் டவுன் ரயில் நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே நீதிமன்றம் பிணை வழங்க மறுத்துள்ளது. http://www.sankathi24.com/news/32769/64//d,fullart.aspx

  13. சிரியா மீது எதிர்வரும் புதன்கிழமை அமெரிக்கா தாக்குதல் நடத்தலாம் என்ற நிலையில், அங்கு பதட்டம் நிலவுகிறது. அதற்கு எந்த விதத்திலும் குறையாத பதட்டம் இஸ்ரேலில் நிலவுகிறது. அமொிக்கா, சிரியா மீது 48 மணிநேர மட்டுப்படுத்திய தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. அமொிக்கா மேற்கொள்ளவிருக்கும் இந் நடவடிக்கையில் நாசகாரி நீர்மூழ்கிகள் மூலம் 100 ஏவுகணைகள் ஏவப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. முக்கிய இலக்குகளாக கட்டளை மையங்கள், விமானத் தளங்கள், ஆயுத தளபாட விநியோக மையங்கள், புலனாய்வுத் தளம், இராணுவப் பயிற்சி முகாங்கள் தெரிவாகியுள்ளது. தாக்குதல் தொடுக்கப்பட்டால் சிரியா உடனடியாக திருப்பி தாக்கப்போவது, இஸ்ரேலை நோக்கித்தான். இதனால், இஸ்ரேலிய நகரங்களில் பலத…

  14. காங்கிரஸ் தலைவர் சோனியா, மருத்துவ பரிசோதனைக்காக ஆண்டு தோறும் வெளிநாடு சென்று வருவது வழக்கம். அதாவது 2011ல் நடந்த அறுவை சிகிச்சைக்கு பின் ஆண்டு தோறும் மருத்துவ பரிசோதனைக்கு சென்றுவருகிறார்.கடந்த ஆண்டும் இதே போல் செப்டம்பர் மாதம் ‌சென்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த வாரம் திங்களன்று லோக்சபாவில் உணவு பாதுகாப்பு மசோதா தாக்கலின் போது அதில் கலந்து கொண்டு பேசினார். பின்னர் நெஞ்சுவலியால் உடல் நிலை சரியில்லாமல் எய்ம்ஸ் மரு்த்துவமனையில் சேர்க்கப்பட்டு 5 மணி நேர சிகிச்சைக்கு பின் செவ்வாய் அன்று அதிகாலை வீடு திரும்பினார். அதன் பின்னர் சனிக்கிழமை மாலையில் மீண்டும் மருத்துவமனைக்கு சென்று ஒரு மணி நேர சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார். கண் ‌நோய், எ…

  15. பயங்கர ஆயுதங்கள் மற்றும் போதைபொருட்களுடன் கைதான மர்ம மனிதன் தீவிரவாதியா? டொரண்டோ போலீஸார் தீவிர விசாரணை. பயங்கர ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்கள் வைத்திருந்த 25 வயது நபர் ஒருவர் டொரண்டோவில் நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டான். அவன் தீவிரவாதி இயக்கத்தை சேர்ந்தவனா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர். டொரண்டோவில் நேற்று இரவு போலீஸார் ரோந்து பணியில் northwest, near Kipling and Finch avenues, என்ற இடத்தில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தபோது ஒரு குழுவை சேர்ந்த சிலர் போலீஸாரிடம் வந்து, ஒரு மர்ம மனிதன் போலீஸாரை பார்த்ததும் சந்தேகத்திற்கிடமாக ஒடுவதாக தகவல் கொடுத்தனர். உடனடியாக அவர்கள் காட்டிய பாதையில் போலீஸார் சென்று பார்த்தபோது ஒரு மர்ம மனிதன் ஓடிக்கொண்டு இருப்பது த…

  16. பல நாட்களாக மருத்துவமனையில் இருந்துவந்த தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா வீடு திரும்பியுள்ளார். பிரெட்டோரியாவிலுள்ள மருத்துவமனையிலிருந்து விடப்பட்டதை அடுத்து ஜோஹன்னஸ்பர்கிலுள்ள வீட்டுக்கு மண்டேலா அழைத்துவரப்பட்டார். நெல்சன் மண்டேலா மண்டேலாவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவே இருப்பதாகவும், சில நேரங்களில் என்ன நடக்கும் என்று சொல்ல முடியாத அளவுக்கு அது மோசமடைவதாகவும் தென்னாப்பிரிக்க அதிபர் அலுவலகம் கூறுகிறது. மருத்துவமனையில் அவருக்கு கிடைக்கக்கூடிய அனைத்து விதமான தீவிர சிகிச்சைகளுமே அதேயளவில் வீட்டில் வைத்தும் அவருக்கு வழங்கப்படும் என மண்டேலாவின் மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். தீவிர சிகிச்சை அளிக்கப்படும் விதமாக அவரது வீட்டில் மாற்ற…

  17. இந்தியாவில் சராசரியாக ஒரு மணி நேரத்துக்கு ஒரு பெண் வரதட்சணைக் கொடுமை காரணமாக உயிரிழப்பதாக உத்தியோகப்பூர்வ புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. இந்தியா எங்கிலும் பார்க்க 2012ஆம் ஆண்டில் வரதட்சணைக் கொடுமை சம்பந்தமான உயிரிழப்புகளாக 8233 சம்பவங்கள் பதியப்பட்டுள்ளதாக தேசிய குற்றச் சம்பவ பதிவு அலுவகம் வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன. சட்டம் தடுத்தாலும் பெண்களிடம் இருந்து வரதட்சணை வாங்கும் நிலை நீடித்துவரவே செய்கிறது. "பெண்ணைப் பரிவர்த்தனைப் பொருளாகவே பார்க்கிறோம்"2007 ஆண்டு முதல் இந்த எண்ணிக்கை எட்டாயிரத்துக்கும் கூடுதலாகவே இருந்துவந்துள்ளது என்றும் தெரியவருகிறது. எழுத்தாளர் வ. கீதா தவிர 2007க்கும் 2011க்கும் இடைப்பட்ட காலத்தில் இந்த எண்ணிக்கை தொடர்ந்தும் அதி…

  18. டுபாய் காவல்துறை குற்ற விசாரணைப் பிரிவுத் தலைமையகத்தை வெடிக்கச் செய்யப் போவதாக பெண் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். உடலில் வெடிபொருட்களை கட்டியிருப்பதாகவும், கட்டடத்தை வெடிக்கச் செய்யப் போவதாகவும் குறித்த பெண் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆறு வயது சிறுமி ஒருவரையும் குறித்த பெண் அருகில் வைத்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த பெண் ரஸ்ய மொழியில் பேசியதாகத் தெரிவிக்கப்படுகிறது. டுபாய் ஆட்சியாளரை சந்தித்து தமது பிரச்சினைகளை தெரிவிக்க சந்தர்ப்பம் வழங்காவிட்டால், குண்டை வெடிக்கச் செய்ய நேரிடும் என பெண் அச்சுறுத்தியுள்ளார். இதனால் குறித்த கட்டடத்தில் இருந்தவர்கள் பெரும் பீதியடைந்துள்ளனர். கட்டடத்தில் இருந்தவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். குடும்பப் பிரச்சினை காரணமா…

  19. தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளைப் பேணியதாக நேபாளத்தின் மாவோயிஸ்ட் அமைப்பின் தலைவர் புஷ்ப கமல் தஹால் தெரிவித்துள்ளார். நேபாளத்தில் ஒரு தசாப்த காலமாக நீடித்த கிளர்ச்சிகளின் போது புலிகளுடன் தொடர்புகளை பேணியதாகக் குறிப்பிட்டுள்ளார். நேபாள மாவோயிஸ்ட்கள், தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார். 2008ம் ஆண்டு நேபாளத்தின் பிரதமராக தஹால் கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. காத்மண்டு நகரில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். முதல் தடவையாக தமது கட்சி புலிகளுடன் தொடர்புகளைப் பேணியதாக பகிரங்கப்படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் இன விடுதலைக்காக போராடியதாகவும் அ…

  20. உளவுபார்க்கும் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் நாரையொன்று எகிப்தில் பிடிபட்டுள்ளது. குறித்த பறவையை நபரொருவர் பிடித்துள்ளதுடன் கெயிரோவிற்கு தென்கிழக்கில் சுமார் 280 மைல்கள் தொலைவில் உள்ள கீனா என்ற பகுதியில் உள்ள பொலிஸ் நிலையமொன்றில் ஒப்படைத்துள்ளார். நாரையின் உடலின் மேற்பகுதியில் இலத்திரனியல் உபகரணமொன்று பொருத்தப்பட்டுள்ளமையால் இது உளவு பார்க்கும் நடவடிக்கையில் ஈடுபடும் பொருட்டு பயிற்றுவிக்கப்பட்டிருக்கலாம் என ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இதனை பரிசோதித்த அதிகாரிகள் நாரையின் உடலில் பொருத்தப்பட்டுள்ள கருவி வெடிக்கக்கூடியதோ அல்லது உளவுபார்க்கும் கருவியோ அல்லவென தெரிவித்துள்ளனர். இது பறவைகளின் நடவடிக்கை தொடர்பில் அவதானிக்கும் 'டி…

  21. டமாஸ்கஸ்; ரசாயன குண்டுகள் மூலம் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதா என்பதை ஆய்வு செய்ய வந்த ஐக்கிய நாடுகள் சபையின் குழு சிரியாவை விட்டு வெளியேறிவிட்டது. இதனால் அமெரிக்கா தாக்குதல் நடத்துவதற்கான ஏதுவான சூழல் உருவாகியுள்ளது. பொதுமக்கள் மீது ரசாயன குண்டுகளை சிரியா ராணுவம் வீசித் தாக்குதல் நடத்தியது என்று அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் புகார் கூறின. இதைத் தொடர்ந்து ஐக்கிய நாடுகள் சபையின் வல்லுநர் குழு, ரசாயன குண்டுகள் பயன்படுத்தப்பட்டதா என்பதை ஆய்வு செய்ய சிரியா வந்தது. இந்த நிலையில் சிரியா மீது சிறிய அளவிலாவது ராணுவ தாக்குதலை நடத்திவிடுவது என்ற முடிவில் அமெரிக்கா உறுதியாக இருக்கிறது. அனேகமாக அடுத்த ஓரிரு நாட்களில் இத்தாக்குதல் நடைபெறக் கூடும் எனக் கூறப்படுகிறது. மேலும் ஐ.…

  22. சுவிசர்லாந்தின் மிக நீளமான சுரங்கப்பாதையாக கருதப்படும் கோத்தாட் தொடரூந்து சுரங்கப்பாதையில் முதலாவது தொடரூந்தின் வெள்ளோட்டம் இடம்பெற்றது. ஊரி மாநிலத்திலிருந்து திச்சினோ மாநிலம் வரையான 57கிலோ மீற்றர் நீளம் கொண்ட இந்த சுரங்கப்பாதை உலகில் நீளமான சுரங்கப்பாதை என கருதப்படுகிறது. 2010ஆம் ஆண்டு ஒக்டோபர் 15ஆம் திகதி ஆரம்பமான சுரங்கப்பாதை நிர்மாணிப்பு பணிகள் 1000 நாட்களில் நிறைவு பெற்றிருப்பதாக தொடருந்து பாதை நிர்மாண பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் சூரிச் நகரிலிருந்து இத்தாலி மிலான் நகருக்கான அதிவேக தொடருந்தின் நேரம் மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. http://www.thinakkathir.com/?p=51943#sthash.mtcWhMFU.dpuf

  23. எங்கள் தேசிய #மொழி #தெலுங்கு. இந்திய பாராளுமன்றத்தில் எங்கள் மொழியில் பேச எங்களுக்கு உரிமை இல்லையா? - ஹரி கிருஷ்ணா தெலுங்கு தேச எம்.பி சாடல். சில நாட்களுக்கு முன்பு தெலுங்கான விவகாரம் குறித்து பாராளுமன்றத்தில் ஹரி கிருஷ்ணா பேசும் போது அவருடைய தாய் மொழியில் தான் பேசுவேன் என்று கூறினார் . பாராளுமன்ற உறுப்பினர்கள் அவர்கள் தாய் மொழியில் பேசலாம் என்ற விதி உள்ளது . அமைச்சர்கள் மட்டும் தான் தங்கள் #தாய் மொழியில் பேச உரிமை இல்லை. இருந்தும் பாராளுமன்ற நாயகர் மலையாளி குரியன் அதற்கு அனுமதி மறுத்தார். தனக்கு தெலுங்கு மொழி தெரியாது அதனால் ஹிந்தியிலோ ஆங்கிலத்திலோ ஹரிகிருஷ்ணா பேசுமாறு கூறினார் . அதற்கு ஹரி கிருஷ்ணா கூறிய பதில்கள்.. #ஆந்திரா எங்கள் நாடு. தெலுங்கு எங்கள் தேசிய மொழி.…

  24. ஒரு நாட்டின் பிரதமரை திருடன் என்று கூறுவது எந்த நாட்டிலாவது நடப்பதுண்டா? என பிரதமர் மன்மோகன் சிங் வேதனை தெரிவித்துள்ளார். இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவை அடைந்து வரும் நிலையில், இது தொடர்பாக பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இதனையடுத்து, பிரதமர் மன்மோகன் சிங் நாடாளுமன்ற மேல்சபையில் இன்று விளக்கம் அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது: இந்திய ரூபாயின் மதிப்பு சரிவடைவதை மத்திய அரசு கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுத்து வருகிறது.ரூபாய் மதிப்பின் வீழ்ச்சிக்கு பல்வேறு உள்நாட்டுக் காரணிகளும் காரணங்களாக உள்ளன. சர்வதேச பொருளாதார வீழ்ச்சியும்,ரூபாயின் மதிப்பு சரிவுக்கு மற்றொரு காரணமாக அமைந்துள்ளது. சிரியாவில் தற்ப…

  25. இஸ்லாமாபாத்: துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் பிரதமர்களின் பிரதிநிதிகள் இடையேயான அதிகாரப்பூர்வமற்ற பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது. ஜம்மு காஷ்மீர் எல்லையில் இந்திய ராணுவத்தினர் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும் 5 இந்திய ராணுவ வீரர்களும் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர். இந்நிலையில் நியூயார்க் நகரில் இந்திய-பாகிஸ்தான் பிரதமர்கள் சந்தித்து பேசுவர் என்று கூறப்பட்டு வருகிறது. ஆனால் பாகிஸ்தான் பிரதமருடன் எந்தப் பேச்சுவார்த்தையையும் நடத்தக் கூடாது என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில் இருநாட்டு பிரதமர்களின் பிரதிநிதிகளாக பாகிஸ்தானின் முன்னாள் வெளியுறவுச் செயலர் செர்யார் கான், இந்தியாவின் முன்னாள் தூதர் லம்பா ஆகியோர் நேற்று அதிகாரப்பூர்வம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.