கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
இனியவளே உன் இதயத்தின் முகவரிக்கு நான் எழுதிய கடிதம் கிடைத்ததா? உன் உதயத்திற்காக நான் வருந்திப் பாடிய வாழ்த்துப் புரிந்ததா? உன் சிரிப்புகளில் தான் என் வசந்தம் சிக்கியுள்ளது உன் இதழ் விரியும் போது தான் என் மனம் குளிர்கிறது என் இளமைக் காடுகளில் அப்போது தான் மழை பொழிகிறது.
-
- 6 replies
- 1.5k views
-
-
உனக்கு ஆட்சேபனையில்லையெனில் கவிதை மலர்களுக்குள் உன்னை தூவுகின்றேன் எங்கிருந்தோ வந்த உன் அழகு என் வாலிபத்தை துவசம் செய்தது. உன்னை நினைத்துப்பார்க்கின்றேன்.. நீ அழகான ஆனால் அரிதான படைப்பு. என்னை நினைத்துப்பார்க்கின்றேன் காலம் தந்த சிறகுகளைக்கொண்டு உனக்காக பறக்கின்றேன். வாழ்க்கையின் வெவ்வேறு பகுதிக்குள் - உன் வேர் ஊடுருவியிருப்பதாக உணர்கின்றேன்.. என்னிதயத்தில் எனக்கே தெரியாத ஓர் இடத்தில் நீ பதுங்கு குழி அமைத்திருக்கின்றாய். மனசின் இலைகளின் இடுக்கில் நீ பூத்திருக்கின்றாய். உனக்கு ஒன்று தெரியுமா?.... உன்னைக் காண்பதற்கு முன்னால் நானும் காதலை எதிர்த்தவன் தான்......
-
- 10 replies
- 1.9k views
-
-
நான் பிறந்த மண்ணைப் பற்றி கவிபாட என் கண்ணிரையே மையாக்கீனேன் இங்கே முததுமாரி அம்மனை மனதில் நினைக்க என் இதயத்தில் புதிய உற்சாகம் வருகுது இங்கே ஊரை,உறவை விட்டு வந்து அகதியாகி சிதறி விட்டோம் இங்கே சொந்தம் எல்லாம் மறந்து போச்சு யார் சொந்தம் என்று தெரியவில்லை எனக்கு இங்கே ஊரை உறவை விட்டு வந்தும் இன்னும் திருந்தவில்லையாம் கொஞ்சம் இங்கே குரும்பசிட்டியின் இணையத் தளத்தை பார்த்து புத்துணர்ச்சி வந்தது எனக்கு இங்கே என் மனதில் இருந்த உணர்வை வெளிப்படுத்த அழுது கொண்டு கவிதை எழுதுகின்றேன் இங்கே என் நண்…
-
- 28 replies
- 4k views
-
-
எங்கிருந்தோ வந்து என் இதயத்தை திருடிச் சென்றாய் எடுத்து சென்ற இதயத்தை என்ன செய்தாய்? என்னை நான் மறந்து விட்டேன் உன்னை மட்டும் நினைக்கிறேன் உன் சிரிப்பொலி கேட்டு திடுக்கிட்டு கண் விழித்தால் கண் எதிரே நீ இல்லை அதனால் என் கண்களிலே கண்ணீர் தயவு செய்து இனி வரும் தலைபுக்களை தமிழில் எழுதவும். பல தலைப்புக்கள் ஏற்கனவே தமிழில் மாற்றியுள்ளேன். -யாழ்பாடி
-
- 4 replies
- 1.5k views
-
-
எழுதா மறையாக இருந்தவனை எழுதவைத்த நண்பிக்கு நன்றி குடத்துள் விளக்காக இருந்தவனை குன்றிலே ஏற்றிவைத்தீர் நன்றி நண்பனாக வந்த எனக்கு உன் இதயதில் அண்ணாவாக இடம்தந்தாய் நன்றி நம் நட்புக்கு பாலமாக இருந்த அந்த மலர்களுக்கும் நன்றி கூண்டுக்கிளிபோல இருந்த என் சிந்தனையை சிறகுகள் விரித்து பறக்க வைத்தாய் நன்றி வீணாக இருந்த என் பேனாவுக்கு ஒரு அர்த்தம் கொடுத்தாய் நன்றி உன்னுடய அன்புக்கு நன்றி சொல்ல என் கவி நயத்தில் வார்த்தைகள் இல்லை நன்றி
-
- 7 replies
- 1.7k views
-
-
விடைபெறும் நேரம் ஏன் உங்கள் விழிகளில் ஈரம் விடை கொடுத்தேன் நானும் விடை பெறும் நீரும் உயிர் விட்ட பின்பும் மறப்பேனா நானும் என் இதயத்தில் நீயும் துடிப்புத்தான் பாரும் என் கவிதைகள் எல்லாம் உன் பெயர்தான் சொல்லும் பட்ட மரத்து இந்தக்குயிலும் உன் வரவை இங்கே நாடும் நீயும் திரும்பி வரும் வரை எசப்பாட்டு இல்லாமல் இங்கு ஏங்கும்
-
- 4 replies
- 1.4k views
-
-
கண்ணிலே நீர் இல்லை துடைப்பதற்கு கவிதையிலே பஞ்சம் இல்லை உங்கள் சிற்பத்துக்கு கவிஞனாக உயிர் தந்த உங்கள் அன்புக்கு என்றும் அடிமையாகதான் இருப்பேன் இந்த உறவுக்கு
-
- 4 replies
- 1.3k views
-
-
-
செத்துவிட்டாள் அம்மா பேப்பரில் போடுங்கள் முடிந்தால் கொழும்பு பேப்பரிலும் போடுங்கள் தப்பாமல் வீடியோவும் எடுத்திடுங்கள் இயலுமாயின் வானொலிக்கும் குடுத்திடுங்கள் இணையதில் போட்டால் இன்னமும் நல்லம் கொள்ளி வைக்க யாரும் இல்லை எனின் எங்கள் வள்ளி மகன் வைப்பான் கொள்ளி.... இக் கவியில் தாய் இறந்த செய்தி கேட்ட மகன் அல்லது மகள் ஊரில் உள்ளவருக்கு தொலைபேசியில் கொடுக்கப்பட்ட கோரிக்கை...ம்ம்ம் இதிலே வள்ளி மகன் என்பது வேலைக்காரியுன் மகன்...இப்படி தான் இன்றைய காலத்தில் தாய் இறந்தால்...சில பிள்ளைகளால் கடமை செய்யபடுகின்றது...என்ன உலகமோ
-
- 7 replies
- 1.8k views
-
-
கவிதை துளிகள் சிகரட் மனிதா என்னை தானே தீயிட்டாய் பின்பு உனக்கு ஏன் மரணம்... கசிப்பு காசு கொடுத்து என்னை வாங்குங்கள் போனஸ் ஆக உங்களுக்கு மரணம் அளிக்கப்படும் ஜாதி இரத்தம் இன்றி உயிரை எடுக்கும் இருபதாம் நூற்றாண்டு காட்டேறி... காதல் வென்றவனுக்கு வேடிக்கை தோற்றவனுக்கு வாழ்க்கை பிரியம் பிரியம் என்பது எளிதல்ல, குறிப்பாக பிரிந்திருக்கும் தொலை தூரத்தில் எப்படி??? எங்கோ பிறந்தோம் எங்கோ வளர்ந்தோம் தெரியாத எமக்குள் தேனாக ஓர் உறவு எப்படி வந்தது......?
-
- 23 replies
- 5.1k views
-
-
பதில் சொல்... காரணம் சொல்ல முடியவில்லையா உன்னால் என்ன இது புது புதிர் போடுகின்றாய்... வேணும் என்று நினைத்த உன் மனம் வேணாம் என்று நினைத்த உன் மனம் நாம் இனி நண்பர்களாய் இருப்போம் என்று நினைத்த உன் மனம் இதேல்லாம் செய்ததும் உன் மனம் ஆனால் இப்போது எதோ சிறுபிள்ளை போல் உனக்கு காரணம் தெரியவில்லை என்று சொல்கிறாயே இது நியாயமா??? உன்னை சொல்லடா என்று அதட்டவில்லை சொல்லாட்டி கதைக்க மாட்டன் என்று சாவால் விடவும் இல்லை சந்திப்புகள் தற்செயலானவை பிரிவுகள் தவிர்க்க முடியாதவை இவை எல்லாம் என் வாழ்வில் நான் அனுபவிக்கும் துன்பங்கள் இதை நான் அனுபவிக்கும் முதல் கட்டதையும் நெருங்கிவிட்டேன் இருந்தும் உன்னிடம் பிரியும் முன் வேண்டுகோள் …
-
- 6 replies
- 1.4k views
-
-
சில நேரம்... சில நேரங்களில் சில அழகான விசயங்கள் நம்மை கேக்காமலே நம் கண்முன் நிக்கலாம் மாலை நேர மழை துளிகள் ஏழை குழந்தையின் வெள்ளை சிரிப்பு அழகான நாய்க்குட்டி... இயற்கை எப்போதுமே அர்த்தம் நிறைந்தது சில சம்யங்களில் நண்பர்களும் அப்படியே அமையலாம்...
-
- 2 replies
- 1.1k views
-
-
எதிர்பார்ப்பு மனம் தான் நம் அனைவருடைய உண்மையான முகம் அது என்னை சதா துரத்திக் கொண்டே இருக்கிறது நான் சொல்ல நினைத்த, நினைக்கிற எண்ணங்கள் என் மனதுள்ளே புதைந்து போகின்றன எங்கே என்னிடம் உள்ள ரகசியங்களை வெளியே சொல்ல முடியுமா உன்னால்? என்று என்னை பார்த்து அது நகைக்கின்றது ஓவ்வொரு முறையும் நான் சொல்ல நினைத்து சொல்லாமல் விடுகின்ற எண்ணங்கள் என் மனதோடு சேர்ந்து என்னை பார்த்து சிரிக்கின்றன என் எண்ணங்களை சொல்ல வேண்டியவர்களிடம் சொல்ல வேண்டிய நேரத்தில் தயங்காமல் நான் சொல்ல போவதை ஆவலுடன் என்னுடன் சேர்ந்து என் மனமும் எதிர்பார்க்கின்றது
-
- 17 replies
- 2.4k views
-
-
-
துரோகம் என்மீது பிரியம் உள்ளவன் போல நடித்த... பிரியமில்லாதவனுக்கு... இதயம் நொருங்கியவளின்... இரங்கற்பா ! எனக்கு எதையெல்லாமோ கற்றுக்கொடுத்தாய்! ஏழையாய் வாழ... கவிதை எழுத... அவமானப்பட... அதற்கு குருதட்சணையாகத்தான் என் காதலை பறித்துக்கொண்டாயோ மௌனம் சம்மதத்தின் அறிகுறி! ஆனால் உன் மௌனமோ என்... காதலின் சவக்குழி! நீ என்றேனும் இந்த கவிதையை பார்க்க நேர்ந்தால்... பதில் அனுப்பு எனக்கு துரோகம் செய்த காரணத்தை...
-
- 2 replies
- 1.4k views
-
-
இனியவனே உனக்காக நீ இருக்கும் போதும் என்னைப் போல் யாரும் உன்னை நேசிக்கவில்லை நீ இறக்கும் போதும் யாரும் உன்னுடன் இறக்கப் போவதில்லை ஆனாலும் அவர்களுக்கெல்லாம் பயந்து கொண்டு உன்னை நேசிக்கும் என்னை எப்போதும் ஏமாற்றிவிடுகிறாய் நீ உன்னை நான் துரோகி என்று சொல்லவில்லை.... பாவி என்றும் சொல்லவில்லை..... அந்தளவுக்கு என்னிடம் தைரியம் இல்லடா..... மறக்கத்தான் நினைக்கிறேன் ஆனால் முடியவில்லை சொல் தாங்கமாட்டேன் கல் இல்லை என் இதயம் கசக்காதே உன் வார்தைகளால் வலிக்குதடா...... பலர் வாழும் உலகம் இது... நீயும் வாழனும் தானேடா எங்கேனும் நீ சந்தோசமாய் வாழ்ந்திடு...
-
- 2 replies
- 914 views
-
-
சிங்களவன் கால் கழுவவா? சிரித்துகொண்டே சரியென்பார் வெள்ளை சேலையுடுத்தி இவர் மகளைகூட அழகுபார்ப்பார் ........ மனசு என்பது ஏதடா?! இந்த மனிதனிடம் அது இருக்குமா- அது நீ கூறடா! சேற்றில் அமிழுதடா தீயில் எரியுதடா உனை தூக்கி வளர்த்தவொரு ஜீவனே! பார்த்து நிற்கிறாய் -பதுங்கி மறையுறாய் இது பாவமென்று சொல்வேன் அது நியாயமே! கூடு கலையுதடா குருவி தொலையுதடா கூடவிருந்த உயிர்யாவும் ஓடி மறையுதடா எண்ண மறுக்கிறாய் நீ எனக்கென்ன என்றே கிடக்கிறாய் திண்ணைவரை தீ வந்தபின்னும் தெய்வம் காப்பாத்தும் என்று நம்புறாய்! இருப்பு அழியுதே வாழ்வு கறுப்பு ஆகுதே வண்ணக்கிளிகளை வல்லூறுகள் கொன்று தின்னுதே வயல் கொண்டபயிர் வாடி நிக்குதே …
-
- 17 replies
- 2.5k views
-
-
என்னவளே என்னவளே என் கண்ணின் கருவிழியே! கருவுக்கு உயிர்கொடுக்கும் உன்னதப் பெண் இவளே! என்னவளே என்னவளே என் குருதியும் நீதான் என்னவளே! உன் குருதியை பாலாக்கி சேய்க்கு ஊட்டும் உமையும் நீதான் என்னவளே! என்னவளே என்னவளே உன் கூந்தல்தலின் கருமைதான் என்னவளே! மதிபோன்றமுகத்தின் கருமுகில்தான் உன் கூந்தலா மன்னவளே! என்னவளே என்னவளே உன் குரலின் இனிமைதான் என்னவளே! நான் கேட்கும் இசைதானா உன் குரல் என்னவளே! என்னவளே என்னவளே என் இதயத்துடிப்பும் நீதான் என்னவளே! நீ இல்லை எனின் என் இதயத்துடிப்பு நின்றுவிடும் மன்னவளே! என்னவள…
-
- 3 replies
- 1.2k views
-
-
-
-
வணக்கம் சகோதரரே சிறிலங்காவிற்குச் சுதந்திரம் கிடைச்சதிலை இருந்து நாங்கள் படுற பாட்டை ஒரு கவிதையா எழுதுவம் எண்டு வெளிக்கிட்டனான். ஒரேயடியா எழுதினா நீங்களெல்லாம் கூடிப் போச்சுது எண்டு சண்டைக்கு வருவியள் எண்டபடியாலை கொஞ்சம் கொஞ்சமா எழுதுறன். நல்ல பிள்ளைகள் மாதிரி வாசிச்சுப் போட்டு உங்கடை கருத்துக்களைக் கட்டாயம் எழுதுங்கோ. அப்ப தானே எனக்கும் உசார் வரும். (அடுத்த பாகம் எழுதினதும் தலையங்கத்தை நான் இரண்டாம் பாகம் எண்டு மாத்திறன் . அப்ப உங்களுக்கு வாசிக்க லேசா இருக்கும். வரலாற்றை மறப்போமா? (முதலாம் பாகம்) போர் ஓய்ந்து விட்டதனால் போராட்டம் முடிந்ததென்று புளகாங்கிதம் கொண்ட புதல்வர்களே கேட்டிடுவீர் சாமான்கள் போவதனால் சமாதானம் வந்ததென்று சந்த…
-
- 74 replies
- 8.9k views
-
-
அப்பா அம்மா அண்ணா அக்கா தம்பி தங்கை இவையெல்லாம் இறைவனால் தேர்ந்தெடுக்கப் பட்ட உறவு ஆனால் நீ அப்படி இல்லையடா எனக்காக நான் தேர்ந்தெடுத்த உறவு உன்னை ரசித்து உன் குணத்தைப் புரிந்து நீ எனக்கானவன் என நானே முடிவு செய்து எனக்கு என நானே சொந்தமாக்கிய உறவு உன்னை எவருக்காகவும் எந்த சந்தர்ப்பத்திலும் நான் விட்டுக் கொடுக்க மாட்டேன் எப்பொழுதும் நீ எனக்கு மட்டும் தான் சொந்தம்
-
- 2 replies
- 6k views
-
-
சொந்தம் என்று சொல்ல பலர் உண்டு இருந்தும் அவர்கள் எல்லாம் உன் சொந்தம் போல் வருமா????? அன்பாய் பழகிட நண்பர்கள் பலர் உண்டு ஆனால் உன் நட்பு போல் வருமா????? என்னை நேசிக்க பல சொந்தங்கள் உண்டு ஆனால் உன் நேசிப்புக்கு அவை ஈடாகுமா????? என்னைக் காதலித்தவர்கள் பல பேருடா ஆனால் உன்னைப் போல் எவரும் என்னைக் காதலித்ததில்லையாடா.......
-
- 1 reply
- 977 views
-
-
எனக்காக நான் கடவுளைக் கும்பிட்டதில்லை உனக்காக தான் என்பதை ஏன் நீ உணரவில்லை எனக்காக நான் அழுததில்லை உனக்காக தான் அழுதேன் என்பதை ஏன் நீ அறியவில்லை எதற்காக நான் பிறந்தேன் என்று தெரியவில்லை ஆனால் உன்னைக் காதலிப்பதால் தான் உயிரோடு ஊசலாடுகிறேன் என்று மட்டும் தெரிகிறது
-
- 1 reply
- 901 views
-
-
இனம் மதம் பணம் மொழி சாதகம் சாதி என்று இதுவரை அறியாத அந்த இதயம் மட்டும் உள்ள காதலுக்கு இறுதியில் கிடைப்பது என்ன????? இரக்கம் அற்ற முடிவு மட்டும் தானே?????
-
- 1 reply
- 865 views
-