கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
இயற்கையை நீயும் கவி ஆக்கினாய் வாழ்க்கையை நீயும் இன்பமாக மாற்றீனாய் வழியில் வந்த காதலன் அவன் ஏன் இடையில் நின்று விட்டான் உன்கண்களைப் பார்தும் அவன் இரங்கவில்லையா உன் இதயத் துடிப்பு அவனுக்கு ஏன் கேட்கவில்லையா அவன் இதயத்தை இரும்பாக்க எப்படி முடிந்தது உன்னுடய மெளனம்தான் அவனை வாட்டவில்லையா நீ பேசும் மொழி அவன்காதில் கேட்கவில்லையா காதிருந்தும் செவிடனாக ஏன் இருக்கிறான் அவனும் இங்கே
-
- 7 replies
- 1.8k views
-
-
வந்துவிடு வரைவில் ! தூக்கம் என் கண்களுக்கு தூரமாகிறது..... இரவுகளும் நீளமாகின்றன.. நிமிடங்கள் யுகங்கள் ஆகின்றன... தனிமை தரும் தாளாத துயரத்தை அணு அணுவாக அனுபவிக்குது உள்ளம் அழுதபடியே... வயிற்றில் பசியில்லை உணவில் பிடிப்பில்லை மனதுக்கு நிம்மதியில்லை எப்போது மீண்டும் உன்னுடன் கதைப்பேன்?... அதுவும் தெரியவில்லை... வெளியே சிரித்து உள்ளுக்குள் ஓயாது அழுகிறேன் செழிப்பிழந்த வதனத்துடன். நெஞ்சமே நீதானடி.....அதற்காகவேனும் வந்து விடு விரைவில்..
-
- 17 replies
- 2.2k views
-
-
போலி முகங்கள் பொய் என்று தெரிந்தும் சந்தர்ப்பத்தில் சத்தியம் செய்து அகமொன்று வைத்துப் புறமொன்று பேசி வேசத்தில் வாழும் மனிதர்கள் பலர் இன்று... உள்ளத்தில் வஞ்சகம் மறைந்திருக்கும் முகத்திலே புன்னகை மலர்ந்திருக்கும் மானிடர்க்கு பல வேடங்கள்... போலி முகங்களே இன்று பல...
-
- 2 replies
- 1.1k views
-
-
என் கவியால் கம்பனை சுடும் நோக்கம் இல்லையடா இராமாயனக் கம்மனும் நானும் இல்லையடா கூனியை போல சூழ்ச்சி செய்பவன் நானும் இல்லையடா கைகேகி போல இராமனைக்காட்டுக்கு அனுப்புபவன் நானும் இல்லையடா பத்துதலை இராவணணும் இங்கே கெட்டவன் இல்லையடா கம்பன் தன் கவிதையிலே ஈழத்தமிழனுக்கு துரோகம் செய்து விட்டானேடா இராமனும் உத்தம புத்திரன் இல்லையடா அவரும் கற்பை சோதிக்க தீக்குளிக்க சொன்னவர் தானேடா இராமயனத்து குரங்குப் படைகள் தமிழன் இல்லையடா இராமாயனம் ஈழத்தமிழனுக்கு ஒரு மாகாவம்சம் தானோடா
-
- 5 replies
- 2.1k views
-
-
முத்து முத்து மாரியம்மா எங்கள் முத்து மாரியம்மா வந்து வினை தீர்த்துடுவாய் செல்லமுத்து மாரி அம்மா வேப்பிலைக் காரி அம்மா வேதனைகள் தீர்த்துடுவாய் எழுதிவைத்த வேண்டுதலை தீர்த்துவைக்கும் வெக்காளி நீ அம்மா மதுரையிலே மீனாச்சிதான் அம்மா வேண்டும் வரம் தந்துடுவாய் நீ அம்மா காஞ்சியிலே காமாச்சிதான் அம்மா கலக்கம் எல்லாம் நீக்கிடுவாய் நீ அம்மா காசியிலே விசாலாச்சிதான் அம்மா எம்மை எல்லாம் ஆட்சி செய்யும் தாயும் நீ அம்மா
-
- 5 replies
- 1.4k views
-
-
பூட்டிய வீட்டுக்குள் புளுங்கிக் கொண்டிருந்தேன்..... காற்றினைத்தேடி கதவினைத் திறந்தேன்...... வந்தது காற்று ! ஒரு முறை..... பூஞ் சோலையில்- புகுந்து பூக்களில் புரண்டு புதுத் தென்றலாய்- மிதந்து (பூ) வாசனையோடு... வாசலில்- வந்தது ! மறுமுறை....... சாக்கடையில்- புகுந்து சகதிகளில் நனைந்து நாற்றத்தைச் சுமந்தபடி.... வாசலில்- வந்தது ! மறுமுறை...... கோவிலில்- புகுந்து தீபத்தில் எரிந்து தூபத்துள் புகைந்து தெய்வீக வாசனையாய்..... வாசலில்- வந்தது ! ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விதமாய் ஒவ்வொரு காற்று...... ஒவ்வொரு காற்றைப் போல் ஒவ்வொரு விதமாய் ஒவ்வொரு மனிதர்..! ம்..... ஒவ்வொரு காற்றையும் சுவாசிக்கப் ப…
-
- 14 replies
- 2.6k views
-
-
காதல் என்பது இனிய சுவாசம் என்றாயே பெண்ணே உயிரும் உயிரும் கலப்பதுதான் காதல் என்று சொன்னாயே பெண்ணே நான் தான் உன்னுடய முதல் கவிதை என்றாயே பெண்ணே பொய்கள் உனக்கு பிடிக்காது என்று சொன்னாயே பெண்ணே என்னை வெறுப்பதாக ஏன் பொய் பேசுகின்றாய் பெண்ணே முற்களாக ஏன் என்னை குத்துகின்றாய் பெண்ணே உன் சொற்களாலே ஏன் என்னை கொல்கின்றாய் பெண்ணே உன் கண்களாலே ஏன் என்னை எரிக்கின்றாய் பெண்ணே நான் இங்கு மரித்து விடுகிறேன் உன் கைகளால் விசம் கொடு பெண்ணே
-
- 32 replies
- 4.2k views
-
-
கடலலையின் வழிநெடுகே கடலலையின் வழிநெடுகே தத்தளிக்கும் உறவுகள்.. கண்ணெதிரே உயிர்துறக்கும் தமிழர் உடன்பிறப்புகள் படகுகளில் கரையொதுங்கப் பரிதவிக்கும் முயற்சிகள் பாரதத்துக் கடற்கரையில் தினம்தினம் இந் நிகழ்ச்சிகள் என்னவெல்லாம் நடக்குதடா ஈழமகன் காணியில் எமது ரத்தம் கொதிக்குதடா இவற்றையெல்லாம் காண்கையில் சின்னமதிச் சிங்களனின் வெறியடங்க வில்லையோ!.. செந்தமிழன் வாழிடங்கள் சித்ரவதைப் பள்ளியோ?... வாழ்ந்திருந்த தமிழனுக்கு வந்ததென்ன சாபமோ! வரலாற்றின் தலைவனுக்கு அகதியென்ற பட்டமோ! ஊழ்வினையோ, உறுவினையோ, கேட்பதெலாம் உண்மையோ?... ஒருமரத்துப் பறவைகட்கு முடிவிலாத கொடுமையோ?... இந்தியனாய்ப் பிறந்ததனால் தமிழனுக்கு மௌனமா? இலங்கையிலே பிறந்ததனால் தமிழனுக்…
-
- 6 replies
- 1.3k views
-
-
என்னவனே ஏனோ நீயும் என் நிஜபெயரை உச்சரிக்க தயங்குகின்றாய் அன்பே யார் சொன்னார் உனக்கு உறவாட வேணாம் என்று ஏனோ நீயும் மாறிவிட்டாய் எந்த இன்னல்கள் வந்தாலும் தோள் கொடுப்பாய் என்று நானும் பகல் கனவுகள் கண்டுகொண்டிருக்கின்றேன் உனக்கு என்னாச்சடா எனோ நீயும் இப்படி விலகி விலகி செல்கின்றாய்... உறவது நீண்டுசெல்ல நீயோ நினைவுகளை கூட்டிக்கொண்டே செல்கின்றாய் ஏனடா என்னவனே என் பெயரதை உச்சரிக்காது என் புனைபெயரை உச்சரிகின்றாய் ஏன் என்று கேட்டால் இதற்கு அப்படி இப்படி என்று பதில் சொல்லுங்கின்றாய் ஏனடா என்ன நான் செய்தேன் நீயும் எனக்கு இப்படி செய்வதற்க்கு...அன்பே
-
- 8 replies
- 1k views
-
-
நான் பிறந்த மண்ணை தொட்டுப்பார்க்க ஆசை வேப்பமரத்து நிழலில் படுத்து உறங்க ஆசை பலாமரத்து கனியை பறித்து திண்ண ஆசை பனை மரத்துக்கள்ளை களவாகுடித்துப் பார்க்க ஆசை ஒடியல் மா புட்டு சாப்பிடத்தான் ஆசை தேக்க மரத்துக்கிளியை பிடித்து வளர்க்க ஆசை தமிழ் வாத்தியாரிடம் குட்டு வாங்க ஆசை கோவில் மணியை ஒருக்கா அடித்துப்பார்க்க ஆசை புளியமரத்து பழத்தை சூப்பித்திண்ண ஆசை மாமரத்துக் காயை குத்திதிண்ண ஆசை கிணத்து தண்ணிரில் அள்ளி குளிக்க ஆசை கொடிகாமத்து தேங்காய் கொறித்து திண்ண ஆசை கீரி மலைக் கேணியில் நீச்சல் அடிக்கத்…
-
- 23 replies
- 2.5k views
-
-
கவிபாடும் புலவர்களே இங்கே வாருங்கள் யாழ் இணையம் மன்னனுக்கு வாழ்த்துப் பாடுங்கள் தமிழாலே அவனை நீங்கள் குளிப்பாட்டுங்கள் உங்கள் கவிதையலே அவனை நீங்கள் அலங்கரியுங்கள் கப்பம், வரி இல்லாத இந்த மன்னனை வாழ்த்துக்கூறுங்கள் கவிஞர்களை ஊக்குவிக்கும் இவன் பண்பை பாருங்கள் சங்ககாலப் புலவர்போல கவிகள் புனையுங்கள் வீரம் செறிந்த கவிகளையும் இந்தமன்னனுக்குப் பாடுங்கள் வீதி உலா வரும் மன்னன் அழகைப் பாருங்கள் குடிக்கள் குறைகளை எடுத்துக் கூறுங்கள் இந்த தமிழ் மன்னன் நீடூழி வாழ வழிகள் செய்யுங்கள்
-
- 2 replies
- 959 views
-
-
ஏன் படைத்தாய் இறைவா என்னை ஏன் படைத்தாய் ஏன் வதைத்தாய் இறைவா என்னை ஏன் வதைத்தாய் பாவி ஜீவனாக என்னை ஏன் இறைவா நீ படைத்தாய் பரலோகத்தில் ஏன் என்னை ஏற்கமறுத்தாய் ஏன் இந்த பூலோகத்தில் என்னைப் படைத்தாய் நான் உன்மீது கொண்ட அன்பினாலா என்னை உதைத்தாய் பாவம் அறியாத என்னை ஏன் இந்த சாத்தானின் பூமியில்படைத்தாய்
-
- 2 replies
- 961 views
-
-
நான் பூலோக கன்னியை பார்த்ததும் இல்லை தேவலோக தேவதையை கண்டதும் இல்லை இறம்பை ஊர்வசியை பார்த்ததும் இல்லை உன்னை பார்த்தேன் பெண்ணே நீதான் அந்த தேவதையோ? பிரம்மன் செதுக்கிய சிற்பமும் நீதானோ? விசுவாமித்திரனின் தவத்தை குலைத்தவளும் நீதானோ? இந்திரனை மயக்கிய மோகினியும் நீதானோ? மதுரை மீனாச்சி அம்மனும் நீதானோ? நெல்லை காந்திமதி தேவியும் நீதானோ? தஞ்சாவூர் சிற்பமும் நீதானோ பெண்ணே? என்னை நீயும் ஏன் நாடி வந்தாய்? என் இதயத்தை திருடவா நீயும் வாந்தாய்? வேண்டாம் பெண்ணே நீயும் என்னை விட்டுவிடு!!!
-
- 2 replies
- 1.1k views
-
-
-
காதல் வந்தால் கவிதையும் பிறக்கும் காயங்கள் எல்லாம் தானாக மாறும் நோய்கள் எல்லாம் பறந்து போகும் சோகத்தின் வலி எல்லாம் மறைந்து போகும் சிந்தனை எல்லாம் மாறிப் போகும் கனவுகள் எல்லாம் வந்து குவியும் கடசியில் எல்லாம் கவிழ்ந்து போகும் :roll: :wink:
-
- 5 replies
- 1.6k views
-
-
உதவிகள் தேவை என்றால் சுற்றி சுற்றி வந்திடுவாய் உதவிகள் பெற்றவுடன் நைசாக மாறிடுவாய் சேர்ந்து இருக்கும் போது சிரித்து சிரித்து பேசுடுவாய் அடுத்தவிடு போயும் நீ அவனைத் தூற்றிடுவாய் சந்தர்ப்பம் கிடைக்கும் போது நல்லா சுரண்டிவிடுவாய் பச்சோந்தி போல நீயும் உன்னை நீ மாற்றிடுவாய் கூட இருந்து நீயும் குழி பறிக்கப் பார்த்திடுவாய் சமயம் கிடைக்கும் போது குழியிலே தள்ளிவிடுவாய் கடனாக காசு வாங்கி நல்ல செலவழிப்பாய் கொடுத்த பணத்தை கேட்டால் அடிக்கவும் வந்திடுவாய் முன்னேறி வந்தால் போட்டும் கொடுத்திடுவாய் வசதிகள் பெற்று விட்டால் …
-
- 5 replies
- 1.5k views
-
-
-
- 17 replies
- 2.4k views
-
-
தாய் பிடிக்கும் என்மேல் பாசத்தை பொழிவதால் அண்ணன் பிடிக்கும் எனக்கு குடும்பதை வழி நடத்துவதால் அக்கா பிடிக்கும் எனக்கு தாய்க்கு ஆறுதலாய் இருப்பதால் தம்பி பிடிக்கும் எனக்கு சிறுவனாய் இருந்தும் என் தங்கையை படிப்பிப்பதால் தங்கை பிடிக்கும் எனக்கு என உயிர் தோழியாய் இருப்பதால் நட்பு பிடிகும் எனக்கு வழி நடத்தி செல்வதால் காதல் பிடிக்கும் எனக்கு காயங்களை கற்பித்ததால் மௌனம் பிடிக்கும் எனக்கு அது உன்னிடம் நிறையவே இருக்கின்றதனால்... காத்திருப்பு பிடிக்கும் எனக்கு உனக்காகவே காலம் பூராகவும் காத்திருக்க போவதால்.
-
- 8 replies
- 2.1k views
-
-
என்ன அநியாயம் நான் பிறக்குபுன்பே யாழ் மண்ணின் இதயம் அழிந்துவிட்டதாம் ஓ நான் கண்ணாலே கண்டதும் அந்த அழிந்த இதயத்தை தானே என்ன தான் எம் யாழ் இதயத்தை மீண்டும் கட்டி எழுப்பினாலும் இதயமது இழந்தவை மீளப்பெறமுடியாது கயவர்கள் யாழ் மக்களின் உயிரை உணர்வை...பண்பாட்டை எரித்துவிட்டார்கள் காடையர்கள் எதிரியின் இந்த கொடூரம் தான் தூங்கிகிடந்த தமிழனை விழிக்க வைத்தது... கயவர்கள் தீயிட்டதால் தீயாகவே எழுந்தார்கள் தமிழர்கள்...தீயவனை அழிப்பதென முடிவோடு அன்று வைத்த தீ தான் இன்று தமிழன் நெஞ்சில் சுடர்விட்டு எரிகிறது ஈடுகொடுக்க முடியாத இழப்பல்லவா எம் இதயத்தின் இழப்பு....... இறைவனே கயவர்களை கண்கொண்டு பாத…
-
- 8 replies
- 1.6k views
-
-
காதலின் வேதனையை கவிவரிகளில் முடக்கலாமா? காதலின் சோகத்தை கண்ணீரினால் கழுவலாமா? உடலின் உயிரை காதலுக்காக மாய்க்கலாமா? இதயத்தின் காதல் வலியை மருந்து கொண்டு மாற்றலாமா? காதலின் வலியுடன் மறு பிறப்புமட்டும் காத்து இருக்கலாமா? கிடைத்த காதலைத்தான் இப்பிறப்பில் இழக்கலாமா? காதல் என்னும் இனிய சாக்கடையில் எதிர் நீச்சல் போடாமல் இருக்கலாமா?
-
- 2 replies
- 1.1k views
-
-
சுத்துகின்ற பூமியில் நாம் நிரந்தரம் இல்லை இதை சிந்திக்க மனிதனுக்கு நேரமும் இல்லை சத்தம் போட்டு யாரும் இங்கு சண்டை போடத்தேவை இல்லை நாளை இந்த பூமியில் நாம் யாரும் இல்லை உயர்வு தாழ்வு இங்கு தேவை இல்லை நாளை நீ போகும் போது உன் கூடவருவது இல்லை சாதி மத பேதம் இங்கு பெரும் தொல்லை அதனால் தமிழனின் வாழ்வில் முன்னேற்றம் இல்லை கறுப்பு வெள்ளை என்று இங்கு யாரும் இல்லை இது மாயையின் தோற்றம்தான் நீ புரிந்து கொள்வது இல்லை இங்கு வாழ்வதுதான் வாழ்க்கை இல்லை இதை புரியாத மனிதன் பூரணமனிதனும் இல்லை
-
- 11 replies
- 1.8k views
-
-
தமிழனையே தாக்குகின்றாய் நீயும் தமிழன் இல்லையடா? தேசியத்துக்கு துரோகம் செயவது நீங்கள் இங்கு ஏனடா ஏன் தான் நாய்கள் போல குரைக்கிறீங்கள் இங்கு ஏனடா கிணத்து தவளை போல நீங்கள் கத்துவது ஏனடா மாரித் தவக்கை போல கத்துவது நீங்கள ஏனடா கடசியில வயிறு வெடித்து சாவதும் நீங்கள் தானேடா தமிழனையே தூற்றுவது நீங்கள் ஏனடா இங்கு தமிழ்தாயின் துகிலை உரிவது ஏனடா?
-
- 9 replies
- 3.1k views
-
-
-
கட்டுப்பாடில்லா என்கவி கேட்பின், குளிர்நிலா வானில் ஓவியம் கீறும்.
-
- 14 replies
- 2.5k views
-
-
நெஞ்சு (உ)ரசிய பூவே... --------------- செவ்வானச் சிவப்புக் கன்னம் சிந்தாகும் முல்லைச் சிரிப்பு முன்னாடும் இரண்டு கண்கள் முத்தாடும் செவ் விதழ்கள் தள்ளாடும் வாழைக் கால்கள் தடுமாறும் அந்த நினைவு பந்தாடும் உந்தன் அங்கம் பஞ்சாகும் எந்தன் இதயம் முகம் துடைக்கும் காற்றில் முந்தானை அது சரிய தீ வளர்த்த மெழுகாய் தீப்பிடித்து நான் உருக கண் மூடி ரசிப்பதேன் காதல் நோயை வளர்ப்பதேன் மனம் அமிழ்ந்து போகுமட்டும் மது நிரப்பி வைப்பதேன் சொல் ஆடும் சுந்தரம் செதுக்கி வைத்த சிற்பமிது வில் ஆடும் புருவம் விளை யாடும் பருவமிது கொன்று கொன்று போகிறாய் கொஞ்சம் மீதி வைக்கிறாய் நெஞ்சு (உ) ரசிய பூவே கொஞ்சி இருக்க வந்துவிடு -எல்…
-
- 11 replies
- 1.9k views
-