வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5549 topics in this forum
-
லேடி சூப்பர்ஸ்டாருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்: நயனை வாழ்த்தி விக்னேஷ் சிவன் ட்வீட் "லேடி சூப்பர்ஸ்டாருக்கு, என் மரியாதைக்குரிய பெண்ணுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்" என நடிகை நயன்தாராவுக்கு அவரது காதலர் இயக்குநர் விக்னேஷ் சிவன் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "என் மரியாதைக்குரிய பெண்ணுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். துணிச்சலும் அழகும் சேர வாழ்க. நயன்தாரா என்றால் யார் என்பதை நிரூபிக்கும் கதைகளை தொடர்ந்து உருவாக்கிக்கொண்டே இருக்கவும். எப்போதும் போலவே உங்களைப் பார்த்து பெருமிதம் கொள்கிறேன். என் தங்கமே.. எனது அளவில்லா அன்பையும் மரியாதையை…
-
- 2 replies
- 515 views
-
-
இப்போதெல்லாம் சிறு பட்ஜெட் படங்கள் நல்ல கதைகளை தாங்கி வருகிறதோ இல்லையோ சில விசயங்களால் ஈர்க்கப்படுகிறது. அதில் ஒன்றாக இப்போது வந்திருக்கும் என் ஆளோட செருப்ப காணோம் படம் வந்துள்ளது. பல படங்கள் வந்தாலும் இப்படி ஒரு டைட்டில் விட்டபோதே இது எப்படி இருக்குமோ என்ற திரும்பி பார்க்க வைத்த இப்படக்கதையில் செருப்பின் பங்கு என பார்க்கலாம். கதைக்களம் கதையின் ஹீரோ தமிழ். இவருக்கேற்ற மாதிரி ஒரு பேக்கிரவுண்ட். இவருடைய நண்பன் யோகி பாபு செய்யும் விசயங்களால் ஒரு சிக்கலில் மாட்டிக்கொள்கிறார். காமெடியாக இருந்தாலும் உணர்வுமிக்க காதல் பற்றுகிறது. ஹீரோயின் கயல் ஆனந்தி தன் தோழியுடன் பஸ்ஸில் செல்லும் நேரத்தில் எதிர்பாராத விதமாக தான் அணிந்திருக்…
-
- 0 replies
- 398 views
-
-
கார்த்தி கொம்பன், தோழா என தொடர் வெற்றிகளை கொடுத்தவர். இந்த வருடம் காற்று வெளியிடையில் கொஞ்சம் சறுக்கினார், விட்டதை பிடிக்க சதுரங்க வேட்டை வினோத்துடன் களத்தில் தீரனாக இறங்கினார், விட்டத்தை பிடித்தாரா? பார்ப்போம். கதைக்களம் கார்த்தி DSP ட்ரெயினிங்கில் நல்ல ரேங்கில் தேர்ச்சியாகி வெளியே வருகிறார். அதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் இரவு நேரங்களில் பல வீடுகளில் கொள்ளை நடக்கின்றது. அந்த கொள்ளையும் மிகவும் கொடூரமாக மக்களை கொன்று செய்கின்றனர். கார்த்தி கைக்கு இந்த கேஸ் வருகின்றது. இவர் இந்த கேஸில் முழு மூச்சாக இறங்க பிறகு தான் தெரிகின்றது இந்த கொள்ளை இந்தியா முழுவதும் நடக்கின்றது என்று. அதை தொடர்ந்து பல வருடம் அந்த…
-
- 1 reply
- 984 views
-
-
டொப் 10 திரைப்படங்களின் ’பாகுபலி 2’ முதலிடம் தமிழ்த் திரையுலகத்தில் இதுவரை எந்த ஒரு திரைப்படத் தயாரிப்பாளரும் அவர்களது திரைப்படங்களின் வசூல் எவ்வளவு என்பதைப் பற்றி அறிவித்ததே இல்லை. இருந்தாலும், திரைப்படத்தை ஓட வைக்கவும் அந்தந்த திரைப்பட நாயகர்களின் திருப்திக்காகவும், சில பல வழிகளில் ஒரு தொகையைப் பரப்புவது வழக்கம். அப்படித்தான் பல திரைப்படங்களின் வசூல் நிலவரங்களின் விவரங்கள் வெளிவருகின்றன. சில சமயங்களில் வினியோகஸ்தர்கள் மூலமாகவும் ஊடகங்கள் வாயிலாகவும், சில திரைப்படங்களின் வசூல் விவரங்கள் வெளியிடப்படுகின்றன. இருந்தாலும், எதையும் நாம் அதிகாரப்பூர்வமானவை என்று எடுத்துக்கொள்ள முடியாது. தமிழில் இதுவரை அதிக வசூலைப் பெற்றத் திரைப…
-
- 0 replies
- 488 views
-
-
’’ ‘அந்த’ நடிகரும், ’சிரிப்பு’ நடிகரும் 'எப்படி வாழக்கூடாது’னு உதாரணம்..!’’ – 'அண்ணாதுரை' விழாவில் பரபரப்பு Chennai: விஜய் ஆண்டனியின் 'எமன்' பட வெற்றியைத் தொடர்ந்து அடுத்த படமான 'அண்ணாதுரை' வருகிற நவம்பர் 30-ந் தேதியன்று திரைக்கு வர இருக்கிறது. தற்போது திரைக்கு வருவதற்கு முன்பே படங்களை பற்றிய பல்வேறு சர்ச்சைகள் இணையத்தில் உலா வருவது வழக்கமாகிவிட்டது. இதற்கு அண்ணாதுரை படமும் விதிவிலக்கல்ல. மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் அண்ணாதுரையின் வாழ்க்கை வரலாற்றுப் படம் போன்ற செய்திகள் உலா வந்த நிலையில், படக்குழு அதனை மறுத்து , இது சமூக பிரச்னையை பொதுவாக சாடும் படம் என்ற தகவலை தெரிவித்தார்கள். மேலும், படத்தின் இசை வெளியீட்டு நிகழ்வின் போது படத்திலிருந்து …
-
- 0 replies
- 472 views
-
-
ரஜினி, கமலுக்கு விருது: ஆந்திர அரசு அறிவிப்பு 2014, 2015, 2016-ம் ஆண்டுகளுக்கான ஆந்திர அரசின் என்.டி.ஆர். தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்ளிட்டோருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளன. என்.டி.ஆர். தேசிய விருது, பி.என்.ரெட்டி விருது, நாகி ரெட்டி மற்றும் சக்ரபாணி, ரகுபதி வெங்கையா அரசு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 2014-ம் ஆண்டுக்கான விருதுகள்: 1. என்.டி.ஆர். தேசிய விருது: கமல்ஹாசன் 2. பி.என்.ரெட்டி அரசு விருது: இயக்குநர் ராஜமவுலி 3. நாகிரெட்டி & சக்ரபாணி அரசு விருது: நாராயண மூர்த்தி 4. ரகுபதி வெங்க…
-
- 0 replies
- 293 views
-
-
மீண்டும் தெலுங்கு செல்லும் அமலா பால் ‘வேலையில்லா பட்டதாரி- 2’ படத்தை அடுத்து திருட்டுப்பயலே-2, பாஸ்கர் ஒரு ராஸ்கல், ராட்சஷன், சண்டக்கோழி-2 என பல படங்களில் நடிக்கிறார் அமலாபால். இதில் சுசிகணேசன் இயக்கத்தில் அவர் நடித்துள்ள திருட்டுப்பயலே-2 படம் நவம்பர் 30 ஆம் திகதி தமிழ், தெலுங்கில் வெளியாகிறது. இதில் தெலுங்கு பதிப்பிற்கு டாங்கோடோச்சடு என்று பெயரிடப்பட்டுள்ளது. இதற்கு முன்பு தெலுங்கில் லவ் பெயிலியர், நாயக், ஜன்டாபாய் கபிராஜு என பல படங்களில் நடித்துள்ள அமலாபால், அதன்பிறகு எந்த தெலுங்கு படத்திலும் நடிக்கவில்லை. ஆக சில வருட இடைவெளிக்குப் பிறகு தமிழ் டப்பிங் படம் மூலம் மீண்டும் தெலுங்…
-
- 0 replies
- 246 views
-
-
அமிதாப் பச்சன் 75: அமிதாப் எனும் அதிசயம்! அமிதாப் பச்சன் என்ற சூப்பர்ஸ்டார், ஒரு நல்ல நடிகராகப் பரிமாணம் அடைந்தது அவர் ஹீரோவாக நடிப்பதை நிறுத்திக்கொண்டபின்புதான். 1992வில், ‘ஹுதா கவா’ (Khuda Gawah) படத்திற்குப் பிறகு, ‘இனி திரைப்படங்களில் நடிப்பதில்லை’ என்ற முடிவை அவர் மேற்கொண்டபோது அவருக்கு வயது ஐம்பது. அந்த வகையில், இந்தியாவின் பல சூப்பர்ஸ்டார் நடிகர்களுக்கு அவர் முன்னுதாரணமாகவும் திகழ்ந்தார் எனலாம். ரஜினிகாந்துக்குத் தற்போது அறுபத்து ஏழு வயது. இன்றும் ஹீரோவாகவே நடித்துக்கொண்டிருக்கிறார். அதனாலேயே ‘லிங்கா’ போன்ற அபத்தங்கள் நிகழ்ந்தன. கமல்ஹாஸனுக்கு வயது அறுபத்து மூன்று. அவரும் இப்போது வரை ஹீரோதான். இவ…
-
- 0 replies
- 365 views
-
-
சினிமா விமர்சனம்: நெஞ்சில் துணிவிருந்தால் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க 'அறம் செய்து பழகு' என்ற பெயரில் துவக்கப்பட்ட படம், பிறகு 'நெஞ்சில் துணிவிருந்தால்' என்று பெயர் மாற்றப்பட்டு இப்போது வெளியாகியிருக்கிறது. மருத்துவக் கல்லூரி சேர்க்கையின்போது "இப்படியும் நடக்கக்கூடுமோ?" என்று அஞ்ச வைக்கக்கூடிய ஒரு கதையை எடுத்துக்கொண்டு, ஒரு சுவாரஸ்யமான த்ரில்லராக்க முயற்சித்திருக்கி…
-
- 0 replies
- 409 views
-
-
சினிமா விமர்சனம்: அறம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் தமிழில் கதாநாயகிகளை மையமாகக் கொண்டு வெளிவரும் படங்கள் பொதுவாக வெற்றிபெறுவதில்லை. நயன்தாரா நடித்த மாயா, அனுஷ்கா நடித்த அருந்ததி, ரித்திகா சிங் நடித்த இறுதிச் சுற்று, ஜோதிகா நடித்த மொழி ஆகிய படங்கள் விதிவிலக்குகள். கோபி நயினார் இயக்கியிருக்கும் இந்தப் படம் இந்த விதிவிலக்குகளின் வரிசையில் சேரக்கூடும். விளம்பரம…
-
- 3 replies
- 2.7k views
-
-
நவம்பர் 24-ம் தேதி நமீதாவுக்கு திருமணம் தமிழ் திரையுலகின் பல்வேறு படங்களில் நடித்த நமீதாவுக்கும், வீராவுக்கும் நவம்பர் 24-ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது. 'எங்கள் அண்ணா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நமீதா. அதனைத் தொடர்ந்து 'ஏய்', 'இங்கிலீஷ்காரன்', 'சாணக்யா', 'கோவை பிரதர்ஸ்' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இறுதியாக 2016-ம் ஆண்டு 'இளமை ஊஞ்சல்' படத்தில் நடித்திருந்தார். விரைவில் பரத்துடன் இவர் நடித்துள்ள 'பொட்டு' வெளியாகவுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பின்பு, சில …
-
- 8 replies
- 1.2k views
-
-
'பிக்பாஸ் ஜூலி இப்போது விளம்பரத்திலும்!' - காரணம் சொல்லும் இயக்குநர் Chennai: ராமநாதபுரத்தில் பாபா பகுர்தீனைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது. ஆறடி உயரம், நீண்ட முடி, கறுப்பு ஆடை எனத் தமிழ் சினிமாவின் வில்லன் மெட்டீரியலான இவர், பிஸியான விளம்பரம் மற்றும் குறும்பட இயக்குநரும்கூட. `பிக் பாஸ்' ஜூலியின் கழுத்தில் அவர் அரிவாளை வைத்திருக்கும் போட்டோ ஒன்று இணையத்தில் தற்போது உலாவருகிறது. `என்னாச்சு பாஸ்?' என பகுர்தீனிடம் கேட்டேன். ``நான் `வெள்ளைக் காக்கா'னு விளம்பரப் பட நிறுவனம் ஒன்று சென்னையில ஆரம்பிச்சு, சக்சஸ்ஃபுல்லா போயிகிட்டிருக்கு. கிட்டத்தட்ட ராமநாதபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்கள்ல இருக்கிற பல தனியார் நிறுவனங்களுக்கு விளம்பரப் படங்கள் எடுத்த…
-
- 0 replies
- 261 views
-
-
சினிமா விமர்சனம்: இப்படை வெல்லும் தூங்கா நகரம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான கௌரவ் நாராயணன் இயக்கியிருக்கும் மூன்றாவது படம். விளம்பரம் ஐடி துறையில் வேலைபார்த்து, பிறகு பணியிழந்த மதுசூதனன் (உதயநிதி) பார்கவியைக் (மஞ்சிமா மோகன்) காதலித்து வருகிறான். இந்தக் காதலுக்கு காவல்துறை அதிகாரியான பார்கவியின் அண்ணன் (ஆர்.கே. சுரேஷ்) எதிர்ப்புத் தெரிவிக்கிறார். இதனால், பார்கவியும் மதுசூதனனும் பதிவுத் திருமணம் செய்ய முடிவெடுக்கிறார்கள். இதற்கிடையில் சிறையிலிருந்து தப்பிய சோட்டா (டேனியல் பாலாஜி) என்ற தீவிரவாதி சென்னையின் பல இடங்களில் குண்டுவெடிப்புகளை நடத்தத் திட்டமிடுகிறான். த…
-
- 1 reply
- 865 views
-
-
பொப் பாடகியாகும் ஸ்ருதி சூர்யா, தனுஷ் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்து வந்த ஸ்ருதி ஹாசன், கடந்த சில மாதங்களாக புதிய படங்கள் ஒப்புக்கொள்ளாமல் ஒதுங்கியிருக்கிறார். தந்தை கமல் இயக்கும் ‘சபாஷ் நாயுடு’ படப்பிடிப்புக்காக காத்திருக்கிறார். நடிப்பிலிருந்து சற்று விலகி நிற்கும் ஸ்ருதிஹாசன் விரைவில் பொப் பாடகியாக வலம் வரவிருக்கிறாராம். இசை, பாடல் பாடுவதில் ஏற்கனவே ஸ்ருதிஹாசன் திறமையை நிரூபித்திருக்கிறார். இதையடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் விதமாக இம்முயற்சியை அவர் மேற்கொண்டிருக்கிறார் என்று தெரிகிறது. மேற்கத்தேய பாடகர்கள் பலர் சொந்தம…
-
- 2 replies
- 336 views
-
-
உலக நாயகனுக்கு இன்று 63ஆவது பிறந்ததினம் உலக நாயகன் நடிகர் கமல்ஹாசனுக்கு இன்று 63 ஆவது பிறந்த தினமாகும். 1959 ஆம் ஆண்டு ‘களத்தூர் கண்ணம்மா’ படத்தில் குழந்தை நட்சத்திரமாகத் தொடங்கிய அவரது சினிமா பயணம் 57 ஆண்டுகளைத் தாண்டி தொடர்கிறது. 1975 ஆம் ஆண்டில் ‘பட்டாம் பூச்சி’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி அபூர்வ ராகங்கள், மூன்றாம் பிறை, 16 வயதினிலே, வறுமையின் நிறம் சிவப்பு, வாழ்வே மாயம், சலங்கை ஒலி, நாயகன், அபூர்வ சகோதரர்கள், இந்தியன், ஹேராம், அவ்வை சண்முகி, தேவர் மகன், விருமாண்டி, 10 வேடங்களில் வந்து திரையுலகை திரும்பிப் பார்க்கவைத்த தசாவதாராம் என 220 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து ஒவ்வொரு படத்திலும் தனி முத்திரை…
-
- 3 replies
- 2.2k views
-
-
ஹெச்.ராஜா சார் கவுத்துறாதீங்க: 'இப்படை வெல்லும்' இயக்குநர் கிண்டல் ஹெச்.ராஜாவின் ட்வீட்டைத் தொடர்ந்து "சார் கவுத்துறாதீங்க" என்று 'இப்படை வெல்லும்' இயக்குநர் கவுரவ் நாராயணன் தெரிவித்திருக்கிறார் நவம்பர் 9-ம் தேதி உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள 'இப்படை வெல்லும்' திரைப்படம் வெளியாகவுள்ளது. கவுரவ் இயக்கியுள்ள இப்படத்தில் மஞ்சிமா மோகன், சூரி, ஆர்.கே.சுரேஷ், ராதிகா உள்ளிட்ட பலரும் உதயநிதியுடன் நடித்திருக்கிறார்கள். லைகா நிறுவனம் தயாரித்திருக்கிறது. 'இப்படை வெல்லும்' படத்தை விளம்பரப்படுத்த அளித்த பேட்டியொன்றில் உதயநிதி ஸ்டாலின், "'மெர்சல்' படத்தின் முழு விளம்பரம் கொடுத்தத…
-
- 0 replies
- 320 views
-
-
திட்டிவாசல் திரைவிமர்சனம் நாசர், மகேந்திரன், தனு ஷெட்டி, வினோத் கின்னி, ஐஸ்வர்யா ஆகியோர் நடிப்பில் சீனிவாசப்பா ராவ் என்பவர் தயாரிப்பில், பிரதாப் முரளி என்பவர் இயக்கி இருக்கும் படம் திட்டிவாசல் . திட்டிவாசல் என்றால் சிறை வாயில் என்று பொருளாம் . சரி திட்டாமல் பார்க்க முடியுமா? பேசுவோம் தமிழ்நாடு கேரளா எல்லையில் குமுளி பகுதியில் உள்ள மலை கிராமம் முள்ளங்காடு . பழங்குடி மக்கள் வாழும் அந்த ஊரின் தலைவர் மூப்பன் (நாசர் ) முத்து (மகேந்திரன்) — செம்பருத்தி (தனு ஷெட்டி), குமரன்( வினோத் கின்னி) – மானசா (ஐஸ்வர்யா) என்று இரண்டு காதல் ஜோடிகள் . இதில் மானசா மலையாளப் பெண் . அந்தப் பகுதியைச் சேர்ந்த – …
-
- 0 replies
- 1k views
-
-
உறுதி கொள் திரைவிமர்சனம் APK பிலிம்ஸ் மற்றும் சிநேகம் பிலிம்ஸ் பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க, கோலி சோடா கிஷோர், மேக்னா , காளி வெங்கட், தென்னவன், மாஸ்டர் சிவசங்கர், கண்ணன் பொன்னையா, அகிலேஷ், சர்மிளா ஆகியோர் நடிக்க, அய்யனார் என்பவர் எழுதி இயக்கி இருக்கும் படம் ‘உறுதி கொள்’ பார்வை கொள்ளலாமா ? பேசுவோம் . செஞ்சிப் பகுதியைச் சேர்ந்த ஒரு கிராமம் . அரசு மேல் நிலைப் பள்ளிக் கூடம் . பிளஸ் 2 படிக்கும் மக்கு மாணவனுக்கும் (கிஷோர்) பத்தாவது படிக்கும் படிப்பாளி மாணவிக்கும் (மேக்னா) காதல் . மாணவனுக்கு ஒரு நண்பன் . மாணவனின் தங்கையும் மக்கு . அவளும் நன்றாக படிக்கும் ஒரு மாணவனும் விரும்புகிறார்கள் . அவனுக்கும்…
-
- 0 replies
- 687 views
-
-
அவள் திரைவிமர்சனம் பல கதைகள் படங்களில் எடுக்கப்பட்டாலும் பேய் படங்களுக்கு இன்னும் மக்கள் மத்தியில் ஒரு வரவேற்பு இருக்கத்தான் செய்கிறது. படப்போட்டிகள், விடாப்பிடி மழைக்கு நடுவே வந்துள்ள இந்த அவள் யார், பின்னணி என்ன, நம்மை விரட்டுமா இல்லை உட்காரவைத்து படம் காட்டுமா என திகிலுக்குள் செல்வோம். கதைக்களம் நடிகர் சித்தார்த் ஒரு கைதேர்ந்த மருத்துவர். மூளை குறித்த அறுவை சிகிச்சையில் ஸ்பெஷலிஸ்டாக இருக்கிறார். ஆண்ட்ரியாவை காதலித்து திருமணம் செய்கிறார். பின் மலைப்பகுதியில் உள்ள வீட்டில் குடியேறுகிறார்கள். நெருக்கம், அன்யோன்யம் என இவர்களின் வாழ்கை நன்றாக போய்க்கொண்டிருக்கிறது. இவர்களின் வீட்டிற்கு அருகே…
-
- 1 reply
- 901 views
-
-
படங்கள் வெளிவருவது கூட அதை எடுப்பவர்களுக்கு பிரசவ வலி போலத்தான். சில வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட படம் விழித்திரு. சினிமா போராட்டங்கள், பொருளாதார சிக்கல்கள் என விழி திறக்காமல் இருந்தோடு சில தடைகளை தாண்டி இந்த அடைமழை காலத்தில் விழித்திருக்கிறது இப்படம். விழித்திரு என்ன சொல்கிறது, விழிகளை மூடாமல் வைக்கும் என பார்க்கலாம். வாருங்கள் கதைக்குள் செல்வோம். கதைக்களம் ஒரு படம். நான்கு கதைகள். இதுதான் இதன் மையக்கரு. கிருஷ்ணா தன் தங்கைக்காக ஒரு செல்போனை வாங்க போகும் போது தன் பர்ஸை தவறவிடுகிறார். என்ன செய்வதென்று தெரியாமல் விழிபிதுங்கிய நேரத்தில் அவருக்கு ஒரு கார் ட்ரைவ் வருகிறது. இதன் மூலம் கிடைக்கும் பணத்தை கொண்டு ஊருக்கு சென்று தன் தங்கைய…
-
- 0 replies
- 431 views
-
-
ஒரு என்கவுன்டர், பின்னணி, விசாரணை, பாடம்! ‘களத்தூர் கிராமம்’ விமர்சனம் Chennai: மூவரின் தனிப்பட்ட விரோதத்திற்கு ஒரு கிராமமே பலிகடா ஆகி, அதிலிருந்து மீண்டு வரும் கதையே 'களத்தூர் கிராமம்'. போலீஸ் வெறுக்கும், போலீஸை ஊருக்குள் அனுமதிக்க மறுக்கும் கிராமம் களத்தூர். தமிழக எல்லையின் முடிவில், ஆந்திர எல்லையின் தொடக்கத்தில் அமைந்திருக்கிறது. வாழ்வாதாரத்திற்காக களவுத் தொழிலைச் செய்யும் அந்த கிராமத்து மக்களுக்கு கிஷோரும், அவரது நண்பர் சுலில் குமாரும்தான் எல்லாம். சுலில் குமாரின் சபலத்தால், நண்பர்கள் இருவருக்குள்ளும் பகை மூள்கிறது. துரோகத்திற்காக சுலீலைக் கொலை செய்கிறார் கிஷோர். பாவத்திற்குப் பரிகாரமாக சுலீலின் தாத்தா பாட்டியிடமே தன் குழந்…
-
- 0 replies
- 453 views
-
-
''நிறையக் காயங்கள்...அதான் யார்கூடவும் நெருங்கிப் பழகுறதில்லை!'' - கோவை சரளா பர்சனல் #VikatanExclusive நகைச்சுவை ராணி ஆச்சி மனோரமாவுக்குப் பிறகு, தமிழ் சினிமாவில் காமெடி இளவரசியாக ஜொலித்துக்கொண்டிருப்பவர், கோவை சரளா. தென்னிந்திய மொழிகளில் 800 படங்களுக்கும் மேல் நடித்துவிட்டவர். இன்றும் ஓர் இளம் நடிகையைப்போல உற்சாகம் குறையாமல் வலம்வருபவர். அது அவரது ஒவ்வொரு வார்த்தையிலும் வெளிப்படுகிறது. "சினிமா ஆர்வம் எப்போது ஏற்பட்டுச்சு?" "அஞ்சு வயசுலேயே, 'எப்படியாச்சும் என்னை சினிமாவில் சேர்த்துவிடுங்க'னு வீட்டில் அடம்பிடிப்பேன். எனக்கு நாலு அக்கா, ஓர் அண்ணன். வீட்டின் கடைக்குட்டி நான். அப்பா மிலிட்டரி ஆபீஸர். கா…
-
- 0 replies
- 4.4k views
-
-
படகுப் பயணம் சட்டத்தை மீறுவதாகாது என்றே நினைக்கிறேன்: கார் சர்ச்சைக் குறித்து அமலாபால் படகுப் பயணம் சட்டத்தை மீறுவதாகாது என்றே நினைக்கிறேன் என்று கார் சர்ச்சைக் குறித்து அமலாபால் தெரிவித்துள்ளார். வாகனங்களுக்கு அளிக்கப்படும் குறைந்த வரியைப் பெற புதுச்சேரியில் தங்கி இருப்பது போன்று ஆவணங்களைத் தயாரித்து திரை நட்சத்திரங்கள் தொடங்கி விஐபிக்கள் வரை பலரும் உயர் ரக கார்களைப் பதிவு செய்து வருவது உறுதியாகியுள்ளது. நடிகை அமலாபால், நடிகர் பகத் பாசில் என புதுச்சேரியில் கார் பதிவு செய்தோர் விவரங்களை போலீஸார் திரட்டி வருவதால் பலர் கலக்கமடைந்துள்ளனர். இந்த சர்ச்சைத் தொடர்பாக அமலாபால் தனது…
-
- 0 replies
- 228 views
-
-
’’அந்தப் பொண்ணுகிட்ட ஏதோ இருக்கு!’’ ஜூலியை காம்பியராக மாற்றிய கலா மாஸ்டர் #VikatanExclusive நாளை முதல் (செவ்வாய்க்கிழமை) ஒளிபரப்பாகவிருக்கும் 'ஓடி விளையாடு பாப்பா' நிகழ்ச்சியின் தொகுப்பாளினியாக புதிய அவதாரம் எடுக்கவிருக்கிறார், 'பிக் பாஸ்' ஜூலி. இதுபற்றி 'ஓடி விளையாடு பாப்பா' நிகழ்ச்சியின் இயக்குநர் கலா மாஸ்டரிடம் பேசினோம்... ''என்ன திடீர்னு ஜூலியைத் தொகுப்பாளராகக் கொண்டுவந்திருக்கீங்க?'' ''இவ்வளவு நாள் இருந்த சஞ்சீவுக்குக் கொஞ்சம் ஓய்வு தேவைப்பட்டது. அதனால், புதுமுகம் ஒருத்தருக்கு வாய்ப்பு கொடுக்கலாம்னு தோணுச்சு. அதில் என் முதல் சாய்ஸ், ஜூலியாக இருந்தாங்க. 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில்கூட 'ஆங்கராக ஆகணும்'னு அவ…
-
- 0 replies
- 2.5k views
-
-
இது சென்னையின் "சினிமா பாரடைஸோ" இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் Image captionசென்னையின் ''சினிமா பாரடைஸோ'' சென்னையின் ஜார்ஜ் டவுன் பகுதியில் இயங்கிவரும் நூறாண்டு பழமையான பாட்சா தியேட்டர், நகரில் ஃபிலிம் மூலம் திரையிடப்படும் ஒரே திரையரங்கமாகும். விளம்பரம் பிற்பகல் 2.15 மணி. அந்தத் திரையரங்கின் முன்பாக கூலித் தொழிலாளர்கள், சில குப்பை பொறுக்குபவர்கள், ரிக்ஷாக…
-
- 2 replies
- 1.2k views
-